Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 11
(95 முதல் 104 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
95) கயிலை மலை
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்த கவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
பாடல் எண் 521 – ‘புமி அதனில் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இந்த பூமண்டலத்தில் தனிப்பெரும் தலைவரும், சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல. இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் தந்தருள்வாயாக!
96) திருவேங்கடம்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
பாடல் எண் 525 – ‘சரவணபவ நிதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (சரவணபவ நிதி அறுமுக குருபர என) பலமுறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற, பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக!
97) திருவேங்கடம்
துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழிய மெய்
வழிபட லொழிவனை யருள்வாயே
பாடல் எண் 526 – ‘நெச்சுப் பிச்சி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக!
98) திருவேங்கடம்
மலமாங்கடு மோகவி காரமு
மிவை நீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
பாடல் எண் 529 – ‘வரி சேர்ந்திடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் திருவடிகளைத் தந்த்ருள்வாயாக!
99) வள்ளிமலை
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க அருள்வாயே
பாடல் எண் 536 – ‘ககனமும் அநிலமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக!
100) வள்ளிமலை
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே
பாடல் எண் 539 – ‘சிரம் அங்கம் அம் கை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக!
101) மயிலம்
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ளருள்வாயே
பாடல் எண் 546 – ‘கொலை கொண்ட‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு ஆகியவற்றுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதர்கள் என் உயிரைக் கொண்டு போய்விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருள்வாயாக!
102) திருசிராப்பள்ளி
பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே
பாடல் எண் 547 – ‘அங்கை நீட்டி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக!
103) திருசிராப்பள்ளி
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் றருள்வாயே
பாடல் எண் 552 – ‘பகலவன் ஒக்கும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மூடன், கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? அருள்வாயாக!
104) இரத்னகிரி
பல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாத பத மருள்வாயே
பாடல் எண் 566 – ‘சுற்ற கபடோடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற (என்னுடைய) உடல் நைந்து போய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு உடனே திருப்பி அனுப்புங்கள் என்ற கோரிக்கை வலுத்தது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் டேவிட் காமெரோன் (2010 –2016 பிரிட்டிஷ் பிரதமர் ). அவர் சொன்னார் : நீங்கள் கோஹினூரை திருப்பி அனுப்பினால் பிரிட்டிஷ் மியூஸியம் காலியாகி விடும். இதைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை- என்பதாகும். ஏனெனில் பிரிட்டனிலுள்ள புகழ் பெற்ற மியூசியங்களில் உள்ள பெரும்பாலான காட்சிப் பொருட்கள் உலகம் முழுவதிலிருந்தும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களாகும் .
லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் எல்லோரும் விரும்பிப் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள்தான். இதனால் தான் டேவிட் காமெரோன் அப்படிச் சொன்னார். ஒரு பொருளை– அதுவும் மஹாராணியின் தலையிலுள்ள கிரீட (Kohinoor diamond) வைரத்தையே திருப்பிக் கொடுத்தால் என்ன ஆகும்? எல்லாம் போய்விடும். !
ஏற்கனவே கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான எல்ஜின் மார்பிள் (Elgin Marbles) என்ற சலவைக்கல் தூண்கள் நைஜீரியாவுக்குச் சொந்தமான பெனின் உலோக விக்ரகங்கள் (Benin Bronzes) ஆகியவற்றை அந்தந்த நாடுகள் திருப்பிக் கேட்டு வருகின்றன.
நான் கிரேக்க நாட்டின்(Athens) தலைநகருக்குச் சென்ற பொழுது ஒரு பெண் கைடு (Guide) புலம்பிய புலம்பலை ஏற்கனவே ஏதென்ஸ் விஜய கட்டுரையில் எழுதி இருக்கிறேன். ‘நாங்கள் அனைவரும் லண்டனிலிருந்து வந்திருக்கிறோம்’ என்று சொன்னவுடன் அவர் மிகவும் கோபத்துடன் பிரிட்டனைத் திட்டத் துவங்கினார் . என்ன இது! எல்ஜின் மார்பிள் என்ற போலியான, பொய்யான பெயரை நீங்கள் சொல்கிறீர்கள்? எல்ஜின் பிரபு கொள்ளை அடித்தவன் அல்லவா? அதை கிரீக் மார்பிள் Greek Marble என்றல்லவா உண்மை விளம்பிகள் சொல்லுவார்கள் : கொள்ளை அடித்ததை மறைப்பதற்காக நீங்கள் எல்ஜின் பெயரை அதற்குச் சூட்டினீர்களா? என்று பொறிந்து தள்ளினாள் அந்தப் பெண்மணி. நாங்கள் ஒரே வரியில் பதில் சொல்லி அவளை உற்சாகப் படுத்தினோம்.
“தாயே நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை ; நாங்களும் உங்கள் கட்சிதான். நாங்கள் கோஹினூர் வைரம் முதல், ஆயிரக்கணக்கான பொருள்களை இழந்துவிட்டோம்” என்றோம் . பின்னர் அவர் எக்ட்ஸ்ரா extra உற்சாகத்துடன் ஏதென்ஸை சுற்றிக் காண்பித்தார்.
வரலாற்று விஷயங்களைக் காட்டுவதற்காக, லண்டனில் இரண்டு புகழ்பெற்ற மியூசியங்கள் இருக்கின்றன ; ஒன்று உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் மியூசியம். மற்றொன்று விக்டோரியா (V&A) ஆல்பெர்ட் மியூசியம், இது தவிர ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு மியூஸியத்திலும் அதை ஒட்டியுள்ள லைப்ரரியிலும் (Bodleian Library) கொள்ளை அடித்த பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர் . இவை மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள் . பிரிட்டன் முழுதும் ஆயிரத்துக்கும் மேலான காட்சி சாலைகள் இருக்கலாம். எல்லாம் கொள்ளை அடித்த பொருட்களே .
வேல்ஸ் மாகாணத்தில் கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ் மியூசியம் உள்ளது ; அவன் கொள்ளை அடித்ததால் இறுதியில் தொண்டையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அவன்தான் இந்தியாவில் ஸ்தாபித்தான் என்று சொல்லி, அவனுக்கு லண்டன் உள்பட பல இடங்களில் சிலை வேறு வைத்த்துள்ளனர் . அவனைப் பற்றி பிரிட்டிஷாரே திட்டுவார்கள்; அவன் இந்தியாவுக்கு வரும் முன்னர், மஹா ரவுடி; அவன் இறந்த பின்னர் புகழ் பெற்ற ஆங்கிலே எழுத்தாளர் , ஆங்கில அகராதியின் தந்தை சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) சொன்னார் ; அவன் செய்த அக்கிரமங்களால் அவனுடைய மனச் சாட்சியே அவனைத் தற்கொலை செய்ய வைத்தது என்று . நீங்கள் , “எங்கள் பொருட்களைத் திருப்பித்தாருங்கள்” என்று எந்த மியூசியத்துக்கு கடிதம் எழுதினாலும் அவர்கள், போட்டோ காப்பி செய்த ஒரு கடிதம் வைத்துள்ளனர். 1963-ம் ஆண்டு பிரிட்டிஷ் சட்டப்படி திருப்பி அனுப்புதல் முடியாது என்று எழுதி விடுவார்கள்.
இந்த விஷயங்களை இப்பொழுது நான் எழுதக்காரணம் லண்டனிலுள்ள புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதும் சத்னம் சங்கேரா (Sathnam Sanghera) என்பவர் எம்பையர் லாண்ட் (Empireland) என்ற புஸ்தகத்தை 2012ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார் ; உலகம் முழுதும் பிரிட்டிஷார் செய்த படுகொலைகள், கற்பழிப்புகள் , கொள்ளைகள் பற்றி நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் இருக்கின்றன. ஆயினும் சத்னம் சங்கேரா புஸ்தகத்தின் சிறப்பு என்னவென்றால் 200 புஸ்தகங்களை ஆராய்ந்து பிரிட்டிஸ்காரர்களே கக்கிய உண்மைகளைத் தொகுத்து தந்துள்ளார்.
xxx
என்னிடம் தமிழ் படித்த ஒரு ஆங்கிலப் பெண்மணியிடமிருந்து நானும் ஒரு உண்மையை அறிந்தேன். அதாவது பிரபல ஏல நிறுவனங்கள் (famous Auction Houses in Western countries) பெரிய , அரிய விலை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கேட்டலாக் மூலமாக ஏலம் விட்டு விற்பனை செய்கின்றன. சிறிய, அதிக விலை மதிப்பில்லாத பொருட்களைத் திரைக்குப் பின்னால் சட்ட விரோதமாக (Underhand Dealing) கை மாற்றி விடுகின்றன. இதற்கு இந்தியாவிலுள்ள தேச விரோதிகளும் , பேராசை பிடித்தவர்களும் காரணம். ஒரு கோவிலில் இருந்து விக்ரகம் களவு போவதும் சரஸ்வதி மஹால் போன்ற நூலகங்களில் இருந்து அரிய நூல்கள், சுவடிகள் மறைவதும் உட்கைகளின் உதவி இல்லாமல் நடைபெறவில்லை.
நான் குறிப்பிட்ட அப்பெண்மணி, நிறைய நாணயங்களை கொள்முதல் செய்தார். எத்தனை சட்ட விரோத முறையில் வந்தனவோ, இறைவனுக்கே வெளிச்சம். இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிடும், இந்தியா மீது பற்று கொண்ட, வெள்ளையர்கள் வீடுகளில் நிறைய இந்தியக் கலைப் பொருட்கள் ஷோ கேஸ்களில் (Show Cases) இருக்கும். இவை எல்லாம் கலைப் பொருட்களை விற்கும் கடையிலிருந்து வாங்கியதாகச் சொல்லுவார்கள்; அது பாதி உண்மை; பாதிப் பொய் கலந்தது ; எல்லாம் நம்ம ஊர் லஞ்ச ஊழல் அதிகாரிகள் மூலம் கிடைத்தவையே. இப்போது தினமும் வரும் சிலைக் கடத்தல் செய்திகளைப் படித்து வருவோருக்கு நான் சொல்லுவது நன்கு விளங்கும்..
xxx
மைசூரிலும் திபெத்திலும் அடித்த கொள்ளை
அந்தக் காலத்தில் கலைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மியூசியங்களே பண உதவியும் செய்தன ; ஆராய்ச்சியாளர்கள் எப்படிக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டும் காணாதது போல இருந்துவிடுவார்கள். திபெத்தில் (Younghusband Expedition) யங் ஹஸ்பண்ட் என்பவர் நடத்திய படைஎடுப்பில் 3000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். அ வர் அடித்த கொள்ளைப் பொருட்கள் இப்பொழுது அடிக்கடி டெலிவிஷனில் காட்டப்படும் ஆன்ட்டிக் (Antique Shows) ஷோக்களில் வருகின்றன
எங்கிருந்து இந்த அரிய பொருள் உங்களுக்குக் கிடைத்த து? என்று கேட்டால், என் கொள்ளுத் தாத்தாபிரிட்டிஷ் ஆர்மியில் இந்தியாவில் பணியாற்றினார். அவர் இமய மலையில் பனிக்கட்டியில் கண்டு எடுத்த பொருள் என்பார். அல்லது வேறு ஒரு கலைப் பொருள் கடையில் வாங்கியது என்பார்.அதாவது உண்மை மறைக்கப்படும். பின்னர் அவை ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் இரண்டு லட்சம் பவுன்களுக்கு விற்கப்படும்.
சுருங்கச் சொன்னால், கொள்ளை அடித்த பொருட்களை அங்கீகாரம் பெற்ற ஏல நிறுவன சர்ட்டிபிகேட்டோடு விற்பார்கள். அதாவது நம்ம ஊர் பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளில் வெள்ளைப்பணமாக மாற்றுவது போல.
மைசூரில் திப்பு சுல்தானை வெள்ளையர்கள் தோற்கடித்த பின்னர் அந்த ஊர் முழுதும் கொள்ளை அடிக்கப்பட்டது. வெள்ளைக்கார சிப்பாய்கள் வீடு வீடாகச் சென்று கிடைத்ததை எல்லாம் சுருட்டினர். இதை வெள்ளைக்காரரே அவர் அம்மாவுக்கு எழுதிய கடித்தல் குறிப்பிடுகிறார்:
1782 முதல் 1799 வரை மைசூரை ஆண்ட திப்புவை கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தோற்கடித்தன; அவருடைய தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினம் கொள்ளை அடிக்கப்பட்டது அப்போது ராணுவ அதிகாரியாகவும் பின்னர் வெல்லிங்டன் பிரபுவாகவும் , இரு முறை பிரிட்டிஷ் பிரதமராகவும் இருந்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesley) அவருடைய அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறார் ” அம்மா, அன்று அந்த ஊரில் கொள்ளை அ டிக்கப்படாத வீடே இல்லை அம்மா. பின்னர் ஆர்மி/ ராணுவ பஜாரில் மிக விலை மதிப்புடைய நகைகளும், தங்கக் கட்டிகளும் விலைக்கு வந்தன.
இதன் பிறகு அரண்மனையில் மிஞ்சிய பொருட்களை அதிகார பூர்வமாகப் பட்டியலிட்டு கொள்முதல் செய்தனர். ஏராளமான தங்கக்கட்டிகள், தட்டுகள், ரத்தினக் கற்கள், பல்லக்குகள், பட்டாடைகள் என்று நீண்ட பட்டியல் அது. ஒரு வெள்ளைக்காரனைக் கொல்லும் செயற்கை புலி (Tippu’s Tiger) பொம்மையை மட்டும் இப்பொழுது விக்டோரியா ஆல்பெர்ட் மியூஸியத்தில் (V&A Museum in London) காட்சிக்கு வைத்துள்ளனர்.
பிபிசி BBC நடத்திய ஒரு சர்வேயில் 90 சதவிகித கலைப் பொருட்கள் கிடங்கில் இருப்பதாவதும், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் மிகவும் குறைவே என்ற செய்தியும் அம்பலமானது .
இன்னொரு ரகசிய கடிதமும் அம்பலத்துக்கு வந்தது. அண்மையில் பிரிட்டிஷ் கலாசார அமைச்சராக இருந்தவர் Oliver Dowden ஆலிவர் டவ்டன். மியூசியங்களுக்கு அவர் எழுதிய ரகசிய கடிதம் அது.
“நீங்கள் காட்சிக்கு வைத்த பொருட்களைத் திருப்பிக் கொடுத்தீர்களானால் உங்களுக்கு நாங்கள் வழங்கும் நிதி உதவியை நிறுத்தும் அபாயம் இருப்பதை அறிவீர்களாகுக”. என்ற கடிதம் பத்திரிகைகளுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது.
ஆக, அரசாங்க அல்லது பெரிய மியூசிய பண உதவியுடன்தான் இந்தக் கலைக் கொள்ளை நடைபெற்றுவருகிறது . தெரிந்தே செய்யப்படும் அக்கிரமம் இது. உலகில் நியாயமும் தர்மமும் நிலைபெற்றால் , பெரும்பாலான நாடுகளில் உள்ள — குறிப்பாக, அமெரிக்கா , பிரிட்டன், பிரான்ஸ் , ஆஸ்திரேலியா , ஜெர்மனி , ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளில் உள்ள மியூசியங்கள் காலியாகி, மூடப்பட்டுவிடும்.
–சுபம் —
Tags- ஆளுக்கு ஒரு மயிர், கோஹினூர் , வைரம், பிரிட்டிஷ் , கொள்ளை, மியூசியம்
புராணங்களில் பூகோளம் / புவியியல் GEOGRAPHY IN PURANAS
இந்துக்களின் விஞ்ஞான அறிவை விளங்கிக்கொள்ள கொஞ்சமாவது சம்ஸ்க்ருத அறிவு தேவை. கிரஹம் என்று விண்ணிலுள்ள சந்திரன் ,சூரியன், செவ்வாய், புதன், வியாழன் , வெள்ளி , சனி முதலியவற்றுக்குப் பெயர் சூட்டினர் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை GRAVITATIONAL FORCE உடையது என்று பொருள் ; இதிலிருந்துதான் GRIP கிரிப், GRAB க்ராப் , GRAVITY கிராவிடி என்ற சொற்கள் உதித்தன; கல்யாணத்தை ‘கை ப்பிடித்தல்’= ‘பாணி கிரஹணம்’ என்பர் ; பிடிப்பது= ஈர்ப்பு உடையது . தமிழர்களும் அதை அப்படியே மொழிபெயர்த்து ‘கோள்’ என்றனர் ; இதன் வினைச் சொல் – கொள் (கொள்முதல் செய்தல், கொள்ளை , கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக என்ற சொற்களில் இருந்து கொள் /கோள் முதலியவற்றின் பொருள் = கிரஹ= பிடி என்பதை அறியலாம் ).
அடுத்த மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்பு பிரபஞ்சத்திலுள்ள அத்தனை பொருட்களும் வட்ட வடிவமானவை CIRCULAR, GLOBULAR. சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, சம்ஸ்க்ருத நூல்களானாலும் சரி எல்லாவாற்றையும் மண்டலம், வட்டம், கோளம்/GLOBE என்றே சொல்லுவார்கள். கோளம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே க்ளோப் GLOBE என்று மருவியது .
இதே போல உலகில் உயரமான இடம் EVEREST என்று ஜார்ஜ் எவரெஸ்ட் கண்டுபிடிக்கவில்லை. மேரு என்னும் இமய சிகரம்தான் உலகில் உயர்ந்தது என்பது இந்துக்களுக்குத் தெரிந்து இருந்ததால் அதை மையமாக வைத்து உலக வரைபடத்தை வட்டத்துக்குள் வட்டமாக CONCENTRIC CIRCLES வரைந்தனர்.
புராணங்களில் சொல்லும் 7 த்வீபங்களை இப்படி நோக்கினால் 7 கண்டங்களும் 7 துவீபங்களாக வரையப்பட்டிருப்பதை மனக் கண் மூலம் காணலாம் இதைச் சொல்பவர் புவியியல் நிபுணரான பேராசிரியர் கே எஸ் வால்டியா GEOLOGIST PROFESSOR K S VALDIYA ஆவார்.
இன்னொரு விளக்கமும் உண்டு. வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன அங்கிருந்து ஒருவர் எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் அவர் தென் திசையை நோக்கி நடப்பதாகவே அர்த்தம். அப்படியே 9000 மைல்கள் நடந்தால் தென் துருவத்துக்கு வந்து விடுவார். இவை எல்லாம் நமது ரிஷிகளுக்கு நன்கு தெரியும்; ஏனெனில் அவர்கள் யூரி ககாரினுக்கும்(RUSSIAN ASTRONAUT YURI GAGARIN) முன்னரே விண்வெளியில் பறந்தார்கள் . இந்தக் கண்ணோட்டத்தில் புராணங்களில் உள்ள , வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்ட வருணனைகளைப் படித்தால் அவர்கள் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.
XXX
ஏ என் சிவராமன் அட்வைஸ் A N Sivaraman’s Advice
நாங்கள் பத்து உதவி ஆசிரியர்கள் (DINAMANI SUB EDITORS) , மதுரை தினமணி டெஸ்கில் உட் கார்ந்து எழுதிக்கொண்டே இருப்போம்; ஆசிரியர் ஏ என் சிவராமன் யாராவது ஒருவர் பின்னால் நின்று கொண்டு உபன்யாசம் செய்யத் துவங்கி விடுவார்.
“ஏய் , இந்த தூரக்கிழக்கு FAR EAST , மையக் கிழக்கு MIDDLE EAST , NEAR EAST அருகிலுள்ள கிழக்கு நாடுகள் என்றெல்லாம் எழுதுகிறீர்களே; அதற்கு அர்த்தம் தெயுமா ? இதெல்லாம் வெள்ளைக்காரன், அவன் வாழும் இடத்தை மனதில் வைத்துக்கொண்டு, கற்பித்த சொற்கள் என்று விளக்கம் தருவார். நம் சிந்தனையையும் தூண்டி விடுவார்.
முதலில் புத்தாண்டு உதிப்பது ஜப்பான், கொரியா ஆஸ்திரேலியா , இந்தியா, இங்கிலாந்து என்பதெல்லாம் நாமாக கிழக்கு திசை என்று வைத்த புள்ளிதான். வட்டத்தில் எந்தப் புள்ளியையும் முதல் புள்ளி என்று சொல்ல சின்னக் குழந்தைக்கும் கூட உரிமை உண்டு. நாம் கற்பித்த அட்ச ரேகை தீர்க்க ரேகைப்படி நேரத்தையும் இடத்தையும் பெயரிடுகிறோம்
இந்தக் கொள்கையை புரிந்து கொண்டால், ஏன் நம்முடைய புராணங்கள் நாடுகளை, த்வீபங்களை வெவ்வேறு விதமாக வருணிக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். இந்தியர்களான நாம் கூட காலை 4 மணிக்கே சூரியன் உதிக்கும் அருணாசல பிரதேசத்துக்கு சூரிய மலை(அருணாசலம்) என்று பெயரிட்டுள்ளோம். ஏனெனில் பாரத வாசிகளுக்கு அதுதான் தூரக்கிழக்கு.
காளிதாசனும் சங்கப்புலவர்களும் உலகிலேயே உயர்ந்த மலை இமயம் என்று தெரிந்து கொண்டதால் மன்னர்களை இமயம் போல வாழ்க என்றுதான் வாழ்த்துகின்றனர்
2200 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்கப்புலவர்களுக்கு முன்னால் — வாழ்ந்த காளிதாசன், இமயத்தை பூமியின் அளவு கோல் என்று வருணிக்கிறான் . அவன் விண்வெளியிலிருந்து பார்த்தால்தான் இப்படிப் பாட முடியும்..
இதே போல கீழ்கண்ட பாடலில், அம்பலவாணர் பாற் கடல் , நெய்க்கடல், கரும்புச் சார் கடல் எ ன்று பாடுவ பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் தோற்றம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்.
2012-ல் புராண பூகோளம் பற்றி நூல் எழுதிய புவி இயல் நிபுணர் கே எஸ் வால்டியா ஒரு விஞ்ஞானி. புராண உபன்யாசகர் அல்ல. அவர் 18 புராணங்களிலிருந்தும், கிஷ்கிந்தா காண்டத்திலிருந்தும் நூற்றுக் கணக்கான ஸ்லோகங்களைக் கொடுத்து விளக்குகிறார். அதற்கு முன்னரும் புராண பூகோளம் பற்றிப் பலர் புஸ்தகங்கள் எழுதியுள்ளனர்
Geography Peoples and Geo Dynamics of India in Puranas and epics- A Geologit’s Interpretations, K S Valdiya, Aryan Books, International, New Delhi, 2012
xxxx
புராணங்களில் உள்ள தீவுகளின் வருணனையை அம்பலவாணர் அப்படியே தந்துள்ளார் .
நமக்குத் தெரிந்தவரை உலகில் எல்லா நாடுகளைச் சுற்றியுள்ள கடலும் உப்புக் கரிக்கும் கடல்தான் ; அதிலுள்ள உப்பின் சதவிகிதம் மட்டும் கடலுக்கு கடல் சிறிது மாறுபடும்.
கங்கை,சிந்து, அமேசான், நைல் போன்ற நதிகள் கலக்குமிடத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான மைல்களுக்கு உப்பு இருக்காது.
ஆயினும் புராணங்கள் இப்படிச் சொல்வதாற்கு கடல்களின் APPEARANCE தோற்றம் காரணமாக இருக்கலாம்.
எடுத்துக் காட்டாக துருவப் பகுதிகளுக்குச் சென்றால் வெள்ளை நிற ஐஸ் கட்டிப் பாறைகள் மிதக்கும் இடம் பாற்கடல் MILKY WHITE OCEAN போலத் தோன்றும். பனிக்கட்டி நீரும் உப்புக் கரிக்காது ; அம்பலவாணர் பட்டியல் இதோ:
நாவல், — கருங்கடல்,
இலவு, — கழைச்சாற்றுக் கடல்
குசம், — , கட்கடல் (மது – கள்),
கிரவுஞ்சம், —நெய்க்கடல்,
சாகம், — பாற்கடல்,
சான்மலி, – தயிர்க்கடல்
புட்கரம் : , நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்
அடுத்த பாடலில் மாணிக்கம் போன்ற மனிதர்கள் யார் யாரென விளக்குகிறார்
நெற்றியில் சுழிகளுடன்உள்ள குதிரை;
அறிவுடைய தலைவன்;
படித்த, அடக்கமான பாவலன்;
கற்புஉடைய பாவை;
செல்வம் படைத்த கொடையாளி;
மெய்ஞ்ஞானம் பெற்றவன் ஆகியோர் மனிதருள் மாணிக்கங்கள்.
அளவு லட்சம் யோசனை – நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின் பரப்பு இலட்சம் யோசனை, இதனையே நாள்தொறும் சூழ்வது இலவம்தீவு – இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதைச் சூழ்தல் நல்கழைச் சாற்றின் கடல் – அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக்
கடல், மேவும் இது சூழ்வது குசத்தீவு – பொருந்திய இதனைச் சூழ இருப்பது
குசத்தீவு, அதைச் சூழ்தல் மிகும் மதுக்கடல் – குசத்தீவைச் சூழ்வது மிகுந்த மதுவின் கடல், அதனை விழைவுடன் சூழ்தல் கிரவுஞ்ச தீவம் – மதுக்கடலை
நெய்க்கடலது ஆம் – கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல் ஆகும், பூவில்இது சூழ்தல் சாகத்தீவம் – உலகில் இதனைச் சூழ்வது சாகத்தீவு, இங்கு இதைப் போர்ப்பது திருப்பாற் கடல் – இவ்வுலகில் சாகத்தீவை வளைவது திருப்பாற் கடல், போத அதுசூழ்தல் சான்மலி
தீவம்ஆம் – நன்றாக அதனைச் சூழ்வது சான்மலித் தீவு, அப்பாலும்
தயிர்ப்புணரி – அதற்கப்புறம் (சூழ்வது) தயிர்க்கடல், அப்பால் ஆவல்உறு
புட்கரத்தீவு ஆம் – அதற்கப்புறம் (சூழ்வது) விருப்பம் ஊட்டும் புட்கரத்தீவு, இதைச் சூழ்வது அரும்புனற்று – இதனைச் சூழ்வது அரிய நன்னீர்க்கடல்.
(வி-ரை.) நாவல்அம் தீவு – நாவல் மரங்கள் நிறைந்த தீவு. இலவுஅம்
தீவு – இலவ மரங்கள் நிறைவான தீவு. குசம் – தர்ப்பை; தர்ப்பைத் தீவு.
கிரவுஞ்சம் – அன்றில் (ஒருவகைப் பறவை) : கிரவுஞ்சப் பறவையையுடைய தீவு. சாகம் – தேக்கு : தேக்குமரத் தீவு. சான்மலி என்பதும் இலவமரமே. புட்கரம் – பருந்து. நாவல், இலவு, குசம், கிரவுஞ்சம், சாகம், சான்மலி, புட்கரம் : இவற்றை மிகுதியாகவோ சிறப்பாகவோ உடைய ஏழுதீவுகள்.அவ்வாறே கருங்கடல், கழைச்சாற்றுக் கடல், கட்கடல் (மது – கள்),நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்
– கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,
அருமை ……. தேவனே!, சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன
துரகம் ஓர் மாணிக்கம் ஆம் – தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது, சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உளதுரையும் ஓர் மாணிக்கம் ஆம் – சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், பழுதுஅற்ற அதிரூப வதியுமாய்க் கற்புஉடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் – குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள், பல
கலைகள் கற்றுஅறி அடக்கம்உள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம்
– பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன், ஒழிவுஅற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் – அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்,
உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம்
ஆம் – நல்ல குடியிற் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு
இது எப்படி நடைபெறுகிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள இன்னும் பல நூற்றாண்டுகள் பிடித்தன. கடைசி கடைசியாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஹங்கேரியைச் சேர்ந்த இரசாயன இயல் வல்லுநரான ஆல்பர்ட் ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi) புறாக்களின் மார்பு தசைகளை ஆராய்ந்த போது வெற்றி கிடைத்தது.
அந்த தசையானது பறவைகளைப் பறக்கும் போது மிக வலிமையாக இருக்கும்படி அமைந்திருந்தது; அது தூள்தூளாக்கப்பட்ட பின்னரும் கூட வளர்சிதைமாற்றதில் அதிக இயக்கத்தைக் கொண்டிருந்தது. ஜெண்ட் கையோர்கி சில திசுக்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டார். பின்னர் மிகுந்த கவனத்துடன் வெவ்வேறு இரசாயனங்களை அதில் போடும் போது வெளிப்படும் வெப்பம் மற்றும் வாயுவின் அளவுகளைக் குறித்தார். சில அமிலங்கள் தசை வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதை அவர் கண்டார். அதிசயிக்கத்தக்க வகையில், இந்த அமிலங்கள் எதிர் வினைகளில் தாமாக உட்கொள்ளப்படவில்லை. ஜெண்ட் கையோர்கி சிறிய பாத்திரத்தில் எவ்வளவு போட்டாரோ அந்த அளவை வெளியே எடுக்க முடிந்தது. அமிலங்கள் ஒரு விதமான ரசாயன விளைவில் வேகமாகவோ அல்லது ஊக்குவிகளாக இருந்தோ வளர்சிதை மாற்றத்தைச் செய்து நிலையாக உடைபடுவதும் பிறகு மறுபடி திரும்பி உருப்பெறுவதுமாக இருந்ததை அவர் உணர்ந்தார்.
சில வருடங்கள் கழிந்த பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் இரசாயன நிபுணரான ஹான்ஸ் க்ரெப்ஸ் ழ் ( Hans Krebs) இந்த இரசாயன சுழற்சியை இன்னும் அதிகமாக விவரித்தார். அது தான் நம்மால் இன்று அறியப்படும் க்ரெப்ஸ் சுழற்சியாகும். (Krebs cycle)
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உயிரியல் வகுப்பில் க்ரெப்ஸ் சுழற்சி பற்றிப் படித்தது உங்களுக்கு சிறிது ஞாபகத்தில் இருக்கலாம் அல்லது ஒருவேளை பரிட்சை முடிந்த பிறகு அதை மறந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலம் பள்ளியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் க்ரெப்ஸ் சுழற்சி தான். அது எனக்கு ஒரு போராகவும் திகைப்பைத் தரும் ஒன்றாகவும் அப்போது இருந்தது.
வரிசையாக உள்ள டெஸ்குகளில் அமர்ந்து இவற்றின் ராக்ஷஸ பாகங்களை – சசினேட், பைருவேட், அசிடில் சிஓஏ, சைடோக்ரோம் சி (succinate, pyruvate, Acetyl-CoA, cytochrome c) என்று சொல்லக் கேட்டோம். கரும்பலகையில் எழுதப்படுவதைப் பார்த்தோம். நாங்கள் என் ஏ டி மற்றும் எஃப் ஏ ஹெச்2எச் (NAD+s and FADH2s) ஆகியவற்றை எண்ணினோம். பின்னர் ரிடாக்ஸ் எதிர்வினைகளை அவை ஆக்ஸிடைஸ் ஆகி குறைந்த மூலகங்களாக ஆவது பற்றிக் கேட்டோம்.( “redox” reactions as they “oxidized” or “reduced” elements.)
பாடபுத்தகத்தில் இருந்த படங்களை நான் மனப்பாடமாக நினைவில் வைத்துக் கொண்டேன். அம்புக் குறிகள், சிறிய எழுத்துக்கள், ப்ளஸ் மற்றும் மைனஸ் குறிகள் – ஆகிய இவை அனைத்தையும் எதற்காக இந்த சுழற்சி இருக்கிறது என்பதை அறியாமலேயே நினைவில் வைத்துக் கொண்டேன். இதை உணராமலேயே அனைவரும் இருந்தோம். 38 வருட காலம் ஓடிய பெரிய நவீன இடர்ப்பாடில் இது பற்றி ஆறே ஆறு முறை தான் இது பற்றிக் கேட்கப்பட்டது. மூன்று பேரை இது மேடையில் திணற அடித்தது!
கரிம வேதியலில் ஏராளமான அழகிய விஷயங்கள் இருக்கும் போது, இப்படிப்பட்ட திடுக்கிடும் தொடர்புகள் இருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம். உயிரியல் வேதியல் நிபுணரான நிக் லேன் (Nick Lane) தனது புத்தகமான ‘ட்ரான்ஸ்ஃபார்மர் : தி டீப் கெமிஸ்ட்ரி ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ (Transformer: The Deep Chemistry of Life and Death) என்ற புத்தகத்தில் எழுதுகையில் க்ரெப்ஸ் சுழற்சி குறிப்பாக மாயாஜாலமான ஒன்று – அது வளர்சிதை மாற்றத்தின் அஸ்திவாரம் மட்டுமல்ல பூமியில் உள்ள சிக்கலான வாழ்க்கையின் அனைத்திற்குமே ஆதாரமானது என்று எழுதுகிறார். மேலும் அது ஒன்றும் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு சிரமமான ஒரு விஷயம் அல்ல!
இன்றைய நாட்களில், ஏ.பி. உயிரியலை (A.P. Bio) படிக்காமல் விட்டவர்கள் கூட மரபணுக்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். பெருந்தொற்று நோய் வந்தாலும் வந்தது, அதற்கு நன்றி தான் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் பேசும் போது புரோடீன், எம் ஆர் என் ஏ (mRNA) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே பேசுகிறோம். லேன் இது பற்றி விவாதிக்கும் போது டி என் ஏ அறிவானது ஒருவகையிலான மரபணு பாரபட்ச நோக்கு தான் என்கிறார்.
வாழ்க்கையின் ரகசியம் முழுவதுமாக முற்றிலும் நமது மரபணுக்களில் எழுதப்படவில்லை. அது நாம் உலகில் எப்படி ஆற்றலை இழுத்துக் கொள்கிறோம் – எப்படி வாழ்க்கை முழுவதும் நடக்கும் போது மெதுவாக எரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பொறுத்தே இருக்கிறது. க்ரெப்ஸ் சுழற்சியைப் புரிந்து கொள்வதானது பயன் தரக்கூடிய ஒன்று. ஏனெனில் அது உயிருடன் இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
The treasures looted by the British expedition were shown in Antiques show in Britain. Some of them were sold for £140,000. Many of them are displayed in museums in Britain. What they did not tell the listeners and watchers of TV show is that the British killed 3000 Tibetans during Younghusband Expedition. One person described it as “the Tibetans being knocked over like skittles by the British Maxim guns”, and that a monk who tried to avenge the killing of a brother was hanged, his body left strung up for 24 hours as a warning to others.
Xxx
Sir Robert Napier, a veteran of key empire events such as the surrender of the Sikh army during the Anglo Sikh wars and the entry into Peking in 1860 led an expedition to Ethiopia. His invasion involved 13,000 soldiers, both British and Indian, along with 26,000 camp followers and 40,000 animals, including 44 trained Indian elephants to carry the artillery.. it took three months to traverse 400 miles of treacherous mountain ranges to reach the Emperor’s terrain. With such a force they crushed their enemies who fought only with spears. In one ninety minute skirmish 800 Ethiopian fighters were killed; when Napier’s troops reached the fortress town of Makdala, they swiftly defeated the last 9000 of Tewodros men, losing only two British soldiers
Historian Harold Marcus observed in 1995,
“For a total cost of £ nine million, Napier set out to defeat a man who could muster only a few thousand troops and had long ago ceased to be Ethiopia’s leader in anything but title. Even so, Tewodros did not surrender, instead releasing European
Hostages one by one over the course of several days. When the British eventually reached the Emperor, they found him dead, having committed suicide with a pistol that had originally been a gift from Queen Victoria .
Xxxx
Sathnam Sanghera, author of book Empireland writes,
And when I think of everything that was taken by the British from Maharajah Ranjit Singh’s treasury, it is not the heaps of gold, jewellery, antiques, textiles, paintings and sculptures- even the Kohinoor diamond— that sting, but the rare religious artefacts, which were said to include Guru Gobind Singhs Kalgi, a jewel worn on the front of a turban, and relics of the Prophet Muhammad.
Xxx
DAVID CAMERON , PRIME MINISTER OF BRITAIN BETWEEN 2010 AND 2016
In September 2020, Oliver Dowden, the culture minister/ secretary, was revealed, in a leaked letter, to have warned museums and galleries to cease removing controversial artefacts or risk losing funding.
In short, things have moved on little since the days when, in response to claims made by Greece for the Elgin Marbles and by Nigeria for the Benin Bronzes, museums will simply state that repatriation was illegal under the 1963 British museum act or when David Cameron remarked in 2010 about India’s demand for the return of the Kohinoor diamond,
“If you say yes to one, you suddenly find the British museum would be empty. It is going to be stay put”.
A BBC investigation has found 99 percent of British museum collection was in storage in 2010. All museums are displaying only a small portion of their artefacts or paintings.
(Most the treasures looted by the British around the world are displayed in the British museum, Victoria and Albert Museum in London and Oxford museum/Bodleian library. And there are hundreds of museums around displaying millions of objects plundered by the British explorers and soldiers. Private collectors have another million artefacts. Auction houses help them openly and covertly.)
Xxx Subham xxxx
tags- Kohinoor, diamond, return, David Cameron, British Museum
இரண்டு பாடல்களில் கவிராயர் Adults Only ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயம் பற்றிக் கதைக்கிறார். இது பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் படித்த நினைவு இல்லை; ஒருவேளை தமிழர்கள் மட்டுமே Specialise ‘ஸ்பெஷலைஸ்’ செய்த விஷயமாக இது இருக்கலாம்.
பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல்
தீமை; மற்றக் கிழமைகள் நலம்.
பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,
மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.
இப்படி அவர் சொன்னாலும் யாரும் இது சரியா, தவறா என்று ஆராய்ந்து புள்ளிவிவரம் சமர்ப்பிக்கவில்லை. அப்படி விவரம் கிடைக்கும் வரை இதை அதிகமாகப் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பது என் சொந்தக்கருத்து.
பிராமணரல்லாத ஜாதிகளில் பெண் (daughter) பிறந்த நேரத்தைவிட பூ ப்படையும் நேரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்து மதத்தில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரு சுறுக்கு வழி கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதாவது தவறான நேரத்தில் ஒன்று நடந்தால் அதன் தீய விளைவுகளைத் தவிர்க்க பரிகாரம் (atonement) என்று ஒன்று இருக்கிறது.
இப்படி ஐயருக்கு தட்சிணையோ அல்லது பொருள் தானமோ கொடுப்பதில் தெய்வீக பலன்கள் இருக்கிறதோ இல்லையோ, Psychological சைக்கலாஜிக்கல் — உள்ள இயல் ரீதியாக- பலன் உண்டு. கெட்ட கிழமைகள் என்று சொல்லப்பட்ட நாட்களில் பருவம் எய்திய பெண்களும் பயப்படமாட்டார்கள் அவர்கள் கவலை கொஞ்சமாவது அகலும்.
எடுத்துக் காட்டாக நான் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் BOOK ‘புக்’ செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்படும் நேரமோ, அல்லது நான் வீட்டிலிருந்து டாக்சியில் ஏறும் நேரமோ, அல்லது ஒரு மணி நேரம் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குள் நுழையும் நேரமோ அல்லது முதல் முதலில் ஒரு மாதத்துக்கு முன்னர் டிக்கெட் ‘புக்’ செய்த நேரமோ ஏதாவது ஒன்று ராகு காலம், எம கண்டம் நேரமாக இருக்கலாம். அல்லது புறப்படும் நாள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் , எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டால் , பழைய கால கிராமீய வாழ்வு வாழ வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்குப்போக அந்தக் காலத்தில் இப்படி பார்த்திருப்பார்கள் போலும்.
Xxx
அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்
69. பூப்பு வாரம்
அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே –
அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு
களபமுலை மாதர் புட்பவதிஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் –
கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற
வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.
Xxxxxx
பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,
மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்என்பது அடுத்த பாடலின் கருத்து அதாவது 12 லக்னப்படி பலன்.. மேலேயுள்ள பாடலுக்கு நான் சொன்ன கருத்து இதற்கும் பொருந்தும்
70. பூப்பு இலக்கினம்
வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசா ரிஆம்;
வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
சீர்பெறுவள் கன்னி யென்னில்;
செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மான மிலளாம்;
நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடியபே ரறிவு டையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ……. தேவனே!, மேடத்தில் வறுமை தப்பாது வரும்
– மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபத்தில் மாறாது விபசாரி ஆம் – இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள்,
மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் – மிதுனத்தில் வாழ்வும்
திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்து வந்த சடையப்ப முதலியார் பெரும் செல்வர். வந்தோருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வேண்டுவதைக் கொடுத்து வந்த வள்ளல். அவர் புகழ் சோழ நாடெங்கும் பரவி இருந்தது.
அப்போது புதிதாகப் பட்டம் ஏறிய சோழ ராஜன் சடையப்ப வள்ளலின் புகழைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். தன்னை ஏன் அவர் வந்து காணவில்லை என்று அவன் எண்ணினான். தனது அதிகாரத்தை வைத்து அவரது பொருளையெல்லாம் சோழன் கவர்ந்து கொண்டான்.
என்றாலும் கூட சடையப்பர் அவனை வந்து காணவில்லை.
அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வர்த்தகன் ஒருவன் சோழ தேசம் வந்தான். அவன் தன்னுடன் இழை ஆயிரம் பொன் பெற்ற விசேஷ பட்டாடை ஒன்றைக் கொண்டு வந்திருந்தான்.
அந்தப் பட்டாடையை சோழ மன்னனிடம் அவன் காட்டவே, அதைப் பார்த்து பிரமித்த சோழ மன்னன் அதன் விலையைக் கேட்டான்.
சீன வணிகனும் அதன் விலையைச் சொன்னான்.
விலையைக் கேட்ட சோழன் திகைத்து விட்டான்.
தன்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்று எண்ணிய அவன் வணிகனிடம் அது வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
வணிகன் நேராக வெண்ணெய்நல்லூர் வந்தான். சடையப்பரிடம் பட்டாடையைக் காட்டினான்.
அதன் நேர்த்தியைக் கண்டு மகிழ்ந்த சடையப்பர் அந்தப் பட்டாடையை வாங்கிக் கொண்டார். தரித்துக் கொண்டார்.
இப்படி, தன்னால் வாங்க முடியாத பட்டாடையை சடையப்பர் வாங்கி அணிந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட சோழ மன்னன் பொறாமையால் மனம் புழுங்கினான். அவரைக் கூப்பிட்டனுப்பினான். ஆனால் அவரோ வரவில்லை.
கோபமுற்ற அவன், உடனடியாக சடையப்பரை தன்னை வந்து காணுமாறு ஆணையிட்டான்.
அவரும் வந்தார்.
“நாம் முன்பு கூப்பிட்ட போது நீர் ஏன் வரவில்லை” என்று கோபத்துடன் கேட்டான் சோழ மன்னன்.
“துடையில் சிலந்தி. ஆகவே தான் வர முடியவில்லை” என்று பதிலளித்தார் சடையப்பர். ஆனால் அதை அரசன் நம்பவில்லை.
இதைப் புரிந்து கொண்டார் சடையப்பர்.
உடனே, தான் அணிந்திருந்த பட்டாடையைக் கீறிக் கிழித்து தன் துடைப்பக்கத்த்தில் சிலந்தியைக் காட்டிய சடையப்பர், “இதனால் தான் வர முடியவில்லை” என்றார்.
செல்வத்தையெல்லாம் சிறுகச் சிறுகப் பறித்து சடையப்பரை வறுமை நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போதிலும், அவர் விலை உயர்ந்த இந்தப் பட்டாடையை வாங்கியதை எண்ணிய சோழன் அதையும் கூட கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கிழித்து விட்டு தனக்கு துடைப் புண்ணைக் காட்டியதைக் கண்டு வியந்து போனான்.
இப்படிப்பட்ட செய்கையை ஒரு தெய்வீகப் பிரபுவினால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணிய அவன் சடையப்பரை வெகுவாக மதித்து, அவரைத் தானே சென்று காண்பது தான் முறை என்று தேறினான்.
அவரை நன்கு உபசரித்து அனுப்பினான்.
இந்த வரலாறு பெரிதும் பேசப்பட்டது. இதை தொண்டைமண்டல சதகம் தனது 51வது பாடலில் புகழ்ந்து கூறுகிறது.
பாடல் இதோ:
தெள்ளந்தெளிந்தவர் செய்தக்கதோர்முறை செய்யிலையா
எள்ளத்தனை மலையத்தனையாமென்ப தின்றறிந்தோ
முள்ளற்கரிய துடையாடைகீறிய தொன்றுமொரு
வள்ளற்றகைமையோ டொத்துளதாற்றொண்டை மண்டலமே
பொருள் : நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையோர் தாம் செய்யத் தகுந்த செயல்களில் ஒன்றை அவ்வளவாக நிரம்பச் செய்யாமல் ஒரு வகையாகச் சிறிது செய்தாலும் கூட, அது எள்ளத்தனை சிறியதாக இருந்தாலும் கூட, பிறருக்கு அது மலையத்தனை அளவு பெரிதாகும் என்று சொல்வதற்கு உதாரணமாக வெண்ணெய்நல்லூர் சடையப்ப முதலியார் அரசன் சமூகத்தின் முன் தனது துடை ஆடையைக் கிழித்த சிறு செயலினாலேயே கண்டோம். எவ்வாறெனில் அவர் செய்த அந்த சிறு செயலானது அரசனுக்கு பிரமிக்கத் தக்க பெரும் செயலாக இருந்தது. இத்தகைய வேளாண் குடிமையரைக் கொண்டது தொண்டை மண்டலமே.
மனு நீதி நூலை எரிக்கலாமா? புதைக்கலாமா ? என்று ஒரு பட்டிமன் றம் நடந்தது. அதற்கு நான்தான் நடுவர். எல்லோரும் காரசாரமாக விவாதித்தனர். எல்லோரும் பெண்களைப் பாராட்டும் 4 ஸ்லோககங்களில் ஒற்றை மட்டும் காட்டிவிட்டு மற்ற மூன்றையும் மறைத்துப் பேசினார்கள் . பிராமணாள், சூத்திராள் என்ற 40 ஸ்லோகங்களைக் கதைத்து விட்டு இப்போதே எரிப்போம் ; புதைப்போம் என்றனர் . மனு நீதியில் எவ்வளவு ஸ்லோகங்கள் என்று நான் கேட்டேன் விடை தெரியாமல் எல்லோரும் பேந்தப் பேந்த முழித்தனர் . அவர் சூத்திராள் , பிராமணாள் தவிர வேறு என்ன விஷ்யங்களைக் கதைக்கிறார் என்றேன். அதற்கும் பதில் இல்லை. பிராமணர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்ன சொல்கிறார் என்றேன் அதுவும் தெரியவில்லை.
ஏதேனும் அவர் நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரா என்றேன் அவர் அப்படிச் சொல்லக்கூடியவர் இல்லை; ஆகையால் இருக்கவே முடியாது என்றனர்.
நான் சொன்னேன் 40 ஸ்லோககங்களைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை . மேலும் அதைப் பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்ல ப்பட்டார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஆகையால் படித்துவிட்டு மனு நீதியைப்பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரத்தோடு வாருங்கள் என்றேன் . ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்கள் . ((இது எல்லாம் என்னுடைய கனவில் நடந்தது. உடனே நானும் மனு நீதி நூலை முழுக்கப் படித்துவிட்டு இரண்டு புஸ்தகங்கள் எழுதினேன்)).
கீழேயுள்ள இரண்டு புஸ்தகங்களைப் படித்துவிட்டு நீங்களும் அடுத்த பட்டிமன்றத்துக்கு வாருங்கள். மனு ஸ்ம்ருதியை எரிக்கலாமா புதைக்கலாமா என்று முடிவு செய்வோம். எனக்குத் தெரிந்து, மனு நீதி நூலைப் பின்பற்றிய ஒரே ஆள் மனு நீதிச் சோழன்தான். அவருக்கோ நாம் சென்னை ஹை கோர்ட்டிலும் திருவாரூரிலும் சிலை வைத்து ‘ஜே’ போட்டுக்கொண்டு இருக்கிறோம்..
இதோ என்னுடைய இரண்டு தமிழ் நூல்கள்; இவை விரைவில் ஆங்கிலத்திலும் வரும். மனு நீதி வேண்டும் என்று நான் எழுதவில்லை. அதில் என்ன இருக்கிறது என்று விமர்சனம் மட்டுமே செய்துள்ளேன்.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.