Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கண்ணபிரானை மடக்கிய கோபிகை!
ச. நாகராஜன்
கேரள நாட்டில் பரூருக்கு அருகில் பிறந்தவர் மாபெரும் மகானான லீலாசுகர். இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர்.
பெரும் கிருஷ்ண பக்தரான லீலா சுகர் கிருஷ்ணரது லீலைகளை வர்ணிப்பத்தில் மிகுந்த விருப்பமுள்ளவர். அதில் சிறந்தவர்.
அவர் இயற்றிய் அற்புதமான் நூல் ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்.
ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் நூலில் நமக்குக் கிடைத்துள்ள 109 பாடல்களும் மிக அருமையானவை.
அதில் ஒன்று தான் கோபியுடனான சிலேடை சம்பாஷணை!
கோபிகை கிருஷ்ணனுடன் நடத்தும் குறும்புத்தனமான கேலியின் கிண்டலும் நிறைந்த சம்பாஷணையை இந்த சிலேடை பாடல் வர்ணிக்கிறது.
கோபிகை: விரலால் (அங்குல்யா)
கா: – யார்
கவாடம் – கதவைத்
ப்ரஹாதி – தட்டுகிறது?
இதற்கு கிருஷ்ணர் பதில் அளிக்கிறார்:
குடிலே – வக்கிரப்பெண்னே
மாதவ: – மாதவன்
உடனே அதை வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டாற்போல கோபிகை கேட்கிறாள்:
கிம் வஸந்த: – என்ன வஸந்தருதுவா?
கிருஷ்ணர்: நோ சக்ரீ – இல்லை சக்ரபாணி
கோபிகை: கிம் குலால: – சக்கரம் சுற்றுகிறானே அந்தக் குயவன்.
(சக்ரபாணி என்பதை சக்கரம் சுற்றும் குயவன் என்று அர்த்தம் செய்து கொண்டு கோபிகை இப்படி கிண்டலாகக் கேட்கிறாள்!)
கிருஷ்ணர்: ந ஹி தரணீதர: – இல்லை இல்லை, பூமியைத் தாங்குபவன் நான்!
உடனே கோபிகை: கிம் த்விஜிஹ்வா பணீந்த்ர – இரண்டு நாக்கு படைத்த பாம்பா?(பூமியைத் தாங்குபவன் ஆதிசேஷன் அல்லவா, அப்படி அர்த்தத்தை எடுத்துக் கொண்டு கிண்டலடிக்கிறாள் கோபிகை!)
கிருஷ்ணர்: நாஹம் தாராஹிமர்த்தீ – இல்லை, இல்லை, நான் ஆற்றில் வசித்த பாம்பை அடக்கியவன்!
கோபிகை: கிமஸி ககபதி? – நீ பட்சிராஜனான கருடனா?
கிருஷ்ணர்: நோ ஹரி – இல்லை ஹரி!
கோபிகை – கிம் கபீந்த்ர: – என்ன குரங்கா? (ஹரி என்றால் குரங்கு என்று ஒரு அர்த்தம் உண்டு!)
Date uploaded in Sydney, Australia – 28 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festival Days- March 03 Tue Lunar Eclipse, Holi, Masi Magam, Full Moon Day; 08 Sun International Women’s Day; 14 Sa Karadaiyan Nonbu; 15 Sun Ekadasi Fasting; 19 Thu New Moon Day, Ugadi New Year Day; 21 Sat Ramadan; 27 Fri Rama Navami; 29 Sun Ekadasi; 31 Tue Mahavir Jayanthi
Auspicious Days March 5,6, 8, 15 16, 25
Kumaresa Satakam is an 18th-century Tamil literary work consisting of 100 poems (stanzas) praising Lord Muruga (Kumaresan), often attributed to the poet Gurupatha Dasar. It is a didactic text that offers profound insights into life, human nature, and morals through maxims and proverbs. Following is a rough translation of the Tamil verses.
March 1 Sunday
Benefits to mankind: The rain giving clouds, Generous/kind hearted king, The water from the lake in the country, The shade of the tree where people gather, The agriculture of the farmer.
***
March 2 Monday Benefits to mankind: The tree bearing lots of fruits that grow in a place beneficial for the people. Free Drinking Water distribution centres in public places. The spring that has water flowing like the river Kaveri.
***
March 3 Tuesday
The rays of the Sun and the Moon, The gentle breeze, the wealth in the hands of a wiseman, all of above-mentioned things will benefit many in the country.
***
March 4 Wednesday
Effects of Kaliyuga (Iron Age): Children not following the advice of their mother. They fight with their respectable father; their guru is being insulted. People don’t think about the real God.
***
March 5 Thursday Effects of Kaliyuga (Iron Age) : Ghost like people are hailed as Gods. People hear to the wife shouting and scolding them. Words of the wise people are neglected.
***
March 6 Friday Effects of Kaliyuga (Iron Age) : Great people are being denigrated and mean and useless people increase. Cowards are honoured as war heroes.
***
March 7 Saturday
Goddess of Wealth Lakshmi sticks to those who are truthful ; they will shine in life. They will be compassionate.
***
March 8 Sunday
Those who are devoted to God will be a terror to their enemies. They will be the source of compassion and justice.
***
March 9 Monday
Gods are those who provide food for the poor; teacher is god for the pupils; those who shelter to the refugees.
***
March 10 Tuesday
Husbands are Gods for wives; kings are gods for the people; fathers are gods for their sons.
***
March 11 Wednesday
Gods are their relatives for those who are born in high castes; devotees of Lord Siva are gods for the faithful; Lord Skanda is god for the people in the heaven; Brahmins are gods for the low-class people (This last line is found in old versions; but Dravidians has changed it now).
***
March 12 Thursday
Saints always think about liberation (Moksha); wise men think about Dharma/rules and regulations; ruler think about the welfare of the people.
***
March 13 Friday
Sex maniacs always think about women; frauds think about cheating the public; businessmen think about gains; farmers think about their fields; prostitutes target the wealthy; students think about their education; honourable people expect respect. I (author of the verse) always think about Lord Kumara/Skanda.
***
March 14 Saturday
Prostitutes lack truth; thieves have no relatives; poor never think about prostitutes; rude people lack love and affection.
***
March 15 Sunday
Rulers lack gratitude; mlechas/foreigners lack character. Lovers lack shyness; good hearted devotees don’t care about rules for worship; poets lack enemies (all are their friends).
***
March 16 Monday
A ruler is the one who follows the Raja Dharma (established rules); a minister is the statesman who gives proper advice; a hero is the one who does not care about his life.
***
March 17 Tuesday
A poet is the person who knows the prosody and old literature; a doctor is the one who has learnt the medical books and the anatomy; a wiseman is the person who has full control over his five senses.
***
March 18 Wednesday
Better to have intercourse with your wife twice a month; and that woman should have black hair (don’t go to bed with her when she becomes grey haired) one should have oil bath twice a week.
***
March 19 Thursday
Take laxatives to clean your stomach twice a year.
Have curd, butter milk, ghee, hot milk and tender coconut water every day.
***
March 20 Friday
Murderers, and those who left their parents in a miserable state also go to hell. Cowards who let their kings down in the battlefield go to hell; so do students who violated teacher’s command.
***
March 21 Saturday
Those who have illegal intimacy with others’ wives, and those who show ingratitude to the people who provided them food fall in hell.
***
March 22 Sunday
Those who denigrate gods and saints fall into hell; so do who insult the devotees of Lord Siva.
Liars and the people who covet others’ properties fall into hell.
***
March 23 Monday
Qualities of Great men are like Gold which does not change even when it is melted; lie sandal wood which gives fragrance even when it is rubbed hard; they are like white conches which remains white even when it is burnt.
***
March 24 Tuesday
Qualities of Great men are like milk which tastes good even when it is heated and they are like iron weapons which shine even when they are put in grindstone.
***
March 25 Wednesday
Daytime shines because of sun; Night time becomes bright due to moon; land becomes fertile due to rain; in the same way husband becomes great because of his wife.
***
March 26 Thursday
A horse gets appreciated because of its speed; citizens are protected by the king; character makes one beauty; music becomes perfect with tuning box; human body becomes beautiful because of healthy food
***
March 27 Friday
Sweet words are the sign of compassion; giving makes one famous; flowers are liked because of its fragrance; happiness makes face bright; Yagas are made great by Vedic chanting; truth makes the words respectful.
***
March 28 Saturday
Place of birth is immaterial; it won’t make one great: even when crows are born in beautiful gardens, they could not become cuckoos; even when weeds are grown in flowerpots, they are not considered flowers.
***
March 29 Sunday
Place of birth is immaterial; it won’t make one great: when rabbits are born in forest, they are not equal to calves of elephants; even if snails have shells, they are not used as conches; even when dullards born in a wiseman’s family he is not considered wise. White salt produced by the vast sea does not become sugar
***
March 30 Monday
Best in each category: sandal among the trees; Ganges among the rivers; Kashmir among the regions; Chidambaram among the shrines; Vasishtha among Rishis; Narada among the Munis.
***
March 31 Tuesday
Best in each category: Ruby among Gems; Arundhati among women; Airavata among elephants; Kamadhenu among cows; Meru among the mountains; Agaththiyam in Tamil; Milky ocean among the seas; Pranava among the Mantras.
–Subham—
Tags- March 2026 Calendar, Golden Sayings, Kumaresa Satakam, Gurupada Dasar
Date uploaded in Sydney, Australia – 28 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பொன்மொழிகள்
காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590) Date uploaded in London – 4 June 2025 என்ற கட்டுரையில் முதல் 24 பாடல்களில் உள்ள விஷயங்களை கண்டோம். இதோ மேலும் 31 பொன்மொழிகள்.
பண்டிகைகள் :-
மார்ச் 03 Tue சந்திர கிரஹணம், ஹோலி,/மாசி மகம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி; 08 Sun உலக மகளிர் தினம்; 14 Sat காரடையான் நோன்பு; 15 Sun ஏகாதசி விரதம் , சபரிமலையில் நடை திறப்பு; 19 Thu அமாவாசை , யுகாதி, தெலுங்கு வருஷப் பிறப்பு; 21 Sat ரம்ஜான் ; 27 Fri ஸ்ரீராமநவமி; 29 Sun ஏகாதசி விரதம் ; 31 Tue மகாவீரர் ஜெயந்தி.
மார்ச் சுப முகூர்த்தம்- 5,6, 8, 15 16, 25
மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை
அந்தணர்க்கு பலம் தருவது வேதம் .க்ஷத்ரியர்க்கு பலம் வீரம்.
வைச்யர்களுக்கு பலம் தருவது நிதி/ செல்வம் ; வேளாளர்க்கு பலம் என்பது உழவுத் தொழில்
***
மார்ச் 2 திங்கட் கிழமை
மந்திரிக்கு பலம் தருவது சதுர் உபாயம், அதாவது சாம தான பேதா தண்டம்; நீதி மானுக்கு பலம் நாடு நிலைமை ஆகும்; சன்யாசிகளுக்குப் பலம் தவம் செய்வது ; பெண்களுக்குக் கற்பு பலம்.
***
மார்ச் 3 செவ்வாய்க் கிழமை
சான்றோர்க்கு பொறுமை பலம்; புலவர்க்கு நல்ல கலவி அறிவு பலம்
***
மார்ச் 4 புதன் கிழமை
தக்க தருணத்தில் உதவி செய்யாத நபர்கள் இருந்தும் பயனில்லை; தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
***
மார்ச் 5 வியாழக் கிழமை
ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
பெற்றென பெறாமலென்ன! அன்பிலாதவர் நட்பும் பயனற்றதே.
***
மார்ச் 6 வெள்ளிக் கிழமை
மானமற்ற பிழைப்பு பிழைப்பே அல்ல ; கொடு என்று கெஞ்சுவோருக்குக் கொடுக்காத செல்வம் இருந்தென்ன போயென்ன
***
மார்ச் 7 சனிக் கிழமை
இளமைப் பருவத்தில் திருமணம ம் செய்யாத பெண் பயனற்றவளே
***
Siva Linga, Lepakshi; picture by A Narayanan, Sydney.
மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை
கடல் நீரும், காட்டில் பூக்கும் மலரும் காட்டில் பெய்யும் மழையும் நாயின் பாலும், கருவேல மரத்தின் பழமும் பயனற்றவைதான்
***
மார்ச் 9 திங்கட் கிழமை
கழுதை லத்தி குவியல் குவியலாக கிடைத்தும் என்ன பயன்? அழகு இருந்து குணமில்லாத பெண்ணும் யாருக்கும் பயனில்லை; சபையில் பேச அஞ்சும் அறிஞனாலும் பயனில்லை.
***
மார்ச் 10 செவ்வாய்க் கிழமை
பூதம் காத்திருக்கும் தங்கத்தால் பயன் உண்டா ? அடர்த்தியான கரடி மயிரினால் ஆடை நெய்ய முடியுமா?
***
மார்ச் 11 புதன் கிழமை
தற் பெருமை பேசி எப்போதும் தன்னைப் புகல்பவன் நெல்லில் உள்ள பதர் போன்றவனே; போர் என்றவுடன் பயந்து ஓடுபவனும், பெரி யோர்புத்தி கேளாதவானும் பதருக்குச் சமம்.
***
மார்ச் 12 வியாழக் கிழமை
பிறரைப் பற்றி அவர் போனவுடன் குறை கூ றுவோனும், பெற்றதாய் தந்தையரைத் துன்பத்தில் வாழ வைப்போனும், பெண்புத்தி கேட்டு நடப்போனும் பதர்.
***
மார்ச் 13 வெள்ளிக் கிழமை
பணம் இருந்தும் பிறரிடம் யாசகம் கேட்போனும் பொய்ச்சாட்சி சொல்லும் மனிதர்களும் பதர் போன்றவர்களே.
***
மார்ச் 14 சனிக் கிழமை
சூரிய ஒளியே புகாத இருந்த காடு , மழையே பேயாத இடத்தில் உள்ள பயிர், அன்புடன் போடப்படும் உணவு ஆகியன விரும்பத் தக்கதல்ல.
***
மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை
தாயைக் காணாத குழந்தை, பசுவினைக் காணாத கன்று சோலைகள் இல்லாத இடத்திலுள்ள வந்து முதலியன பரிதாபத்துக்குரியவை ஆகும்.
***
மார்ச் 16 திங்கட் கிழமை
பெரியோர் இல்லாத சபையும், கணவர் இல்லாத பெண்களும் மேகமே காணாத மயில்களும், குழந்தை பெறாத மலடிகளும் ; வசந்தம் காணாத குயில்களும் ஒரே நிலையில் உள்ளவைதான்
***
மார்ச் 17 செவ்வாய்க் கிழமை
வரவுக்கேற்ற செலவு செய்யாதவனும் இளமையில் நல்ல வாழ்வு அமையாதவனும் ஒரே நிலையில் உள்ளவர்களே.
***
மார்ச் 18 புதன் கிழமை
அதிக உணவு உண்ணுதலும், கவலையாலும், மலஜலத்தை அடக்குவதாலும் வியாதிகள் உண்டாகும்.
***
மார்ச் 19 வியாழக் கிழமை
சாப்பாட்டில் நெல்லும் உமியும் இருக்கக்கூடாது ; சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டும் ; தண்ணீரிலும் பனியிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடாது இவைகளை மீறுவது நோய்களுக்கு வழிவகுக்கும் .
***
மார்ச் 20 வெள்ளிக் கிழமை
அதிக உடலுறவு கொள்வதாலும் மலச் சிக்கலாலும் அதிக பாரத்தைச் சுமப்பதாலும் இளம் வெய்யிலில் உலவுவதாலும் உடல் நோக வேலை செய்வதாலும் நோய்கள் தோன்றும்.
***
மார்ச் 21 சனிக் கிழமை
இரவில் தயிர் சாப்பிடக்கூடாது ; ஜீரணமாகாத கடினமான பொருள்களைச் சாப்பிடக்கூடாது ; இவைகளை நோய்களை உண்டாக்கும்.
***
மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை
எல்லோருக்கும் உதவி செய்தவரும், பொதுமக்களுக்கான கிணறு வெட்டியோரும் ஆலயங்கள் கட்டியோரும் இறந்தாலும் என்றும் புகழோடு வாழ்பவர்களே.
***
மார்ச் 23 திங்கட் கிழமை
புகழ் பெற்ற புதல்வர்களைப் பெற்றவர்களும் போரில் வெற்றிபெற்ற வீரர்களும் , பூமியில் அழியாத தருமங்கள் செய்தொரும் இறந்தும் இறவாதவர்களே.
***
மார்ச் 24 செவ்வாய்க் கிழமை
பெரிய கொடையாளர், காவியம் செய்த கவிஞர்கள் , பத்தினிப் பெண்களை மணந்தோர் ஆகியோரும் இறந்தும் இறவாதவர்களே.
துளசியிலும் வில்வத்திலும் கடப்பமலர் தனிலும், இரதத்திலும், குணம் உடைய பெண்ணிடத்திலும் ,திருமகள் வாழ்கிறாள்.
***
மார்ச் 31 செவ்வாய்க் கிழமை
மனத்தில் கடும்பகை இருப்பதைக் கடுத்த முகத்தினால் அறியலாம்; மாநிலப் பூடுகளெலாம் மழையினால் அறியலாம்; நல்லார்பொல் லார்தமை அவர்கள் பெற்ற பிள்ளைகளால் அறியலாம்.
—subham—
Tags- மார்ச் 2026 காலண்டர், குமரேச சதகம், பொன்மொழிகள்
ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்தஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும்.
(இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்
பரி கந்து பாயும் … (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு
அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை,
பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் …
(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க,
சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும்
சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து
பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்
அதிக … ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,
விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட
சாந்தியதீதகலை – சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.
*3 – நீரின் நான்கு குணங்கள்:
சப்தம், பரிசம், உருவம், ரஸம்.
*4 – தீயின் முக்குணங்கள்:
சப்தம், பரிசம், உருவம்.
*5 – வாயுவின் இரண்டு குணங்கள்:
சப்தம், பரிசம்.
****
மாணிக்க வாசகர் பற்றி
குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள
வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு
அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்
முதல்வர் … குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி, அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான்.
“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.
தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:
மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)
மனம் ஒரு புலி
ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176) ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.
மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.
***
வினைகளைப் பொடியாக்கு!
தேன் உந்து முக்கனிகள் … நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,
பலா, வாழை)
பால்செங் கருப்பிளனிர் … பால், சிவந்த கரும்பு, இள நீர்
சீரும் … இவைகளின் இனிப்பின் சிறப்பையும்
பழித்த … (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)
தாழ்மைப்படுத்துகின்ற
சிவம் அருள் ஊற … மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்
பெருகவும்,
தீதும் பிடித்தவினை யேதும் … தீவினை, நல்வினை முழுவதும்
பொடித்துவிழு … தூள்பட்டு ஒழியவும்,
சீவன் சிவச்சொருபம் … இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
கிஷ்கிந்தாக் காண்டத் தொடக்கம் சர்கம் 1
कुन्देन्दीवरसुन्दरावतिबलौ विज्ञानधामावुभौ
शोभाढ्यौ वरधन्विनौ श्रुतिनुतौ गोविप्रवृन्दप्रियौ।
मायामानुषरूपिणौ रघुवरौ सद्धर्मवर्मौ हितौ
सीतान्वेषणतत्परौ पथिगतौ भक्तिप्रदौ तौ हि नः ॥1
இங்கு இராம இலக்ஷ்மணர்களை துளசிதாசர் வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே நமக்கு வேலை கொடுத்துவிட்டார் துளசிதாசர். ஸ்லோகத்தின் பொருள் என்ன?
இறைவன் இராமன் மல்லிகைப் பூ போலவும் தாமரை மலரைப் பூ போலவும் அழகானவர் வசீகரமானவர் விதிவிலக்காக வலிமையானவனவர் சக்திவாய்ந்தவர். உயர்ந்த ஞானம் . மற்றும் புலமையின் களஞ்சியம். மகத்துவம் மற்றும் கருணை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர். சிறந்த வில்லாளி. வேதங்களால் பாராட்டுப் பெற்றவர். பிராம்மணர்களால் (சமுகத்தின் முதியவர்கள் மற்றும் கற்றவர்களால்) நேசிக்கப்படுபவர் தனது உண்மை அடையாளத்தை மறைக்க மானுட வடிவம் எடுத்தவர, ரகு வம்சத்தின் மன்னர்களில் சிறந்தவர், உயர்ந்தவர், தர்மத்திற்கு ஒரே கேடயம் போன்றவர், அனைவரின் நலவிரும்பி, வனத்தில் பயணித்து விடாமுயற்சியுடன் சீதையைத் தேடி வருபவர், அந்த இறைவன் நமக்கு பக்தியின் வரத்தை வழங்குவானாக …………….ஒரு சில உரையாசிரியர்கள் இவ்வாறு இந்த காண்டத்தை ஆரம்பிக்கின்றனர்.
ஒரு சிலர் இவ்வாறு சொல்கின்றனர்…..முல்லை மலர் போலவும், நீல ஆம்பல் போலவும், மஞ்சள் நீல நிறமுடையவர்கள், மிக்க வலிமையானவர்கள், விஞ்ஞானத்தின் உறைவிடங்கள், பொலிவு உள்ளவர்கள், சிறந்த வில்லாளிகள், வேதங்களால் கொண்டாடப்படுபவர்கள், பசுக்கள் அந்தணர்கள் கூட்டத்திற்கு பிரியமானவர்கள், மாயையாக மனித வடிவெடுத்தவர்கள், அனைவருக்கும் நன்மை புரிபவர்கள். சீதையைத் தேடுவதில் முனைந்து வழிநடப்பவர்கள், அத்தகைய ரகுகுலத்தின் சிறந்த சகோதரர்களான இருவர் நமக்கு பக்தியை அளிக்கட்டும்.
முதல் சுலோகம் இராமனை மட்டும் குறிக்கிறது.
இரண்டாவது சுலோகம் இராம இலக்ஷ்மணர்களைக் குறிக்கிறது.
அதாவது சீதையைத் தேடி இராமனும் இலக்ஷ்மணனும் காட்டில் சென்றதால் இந்த சுலோகம் இருவரையும் குறிக்கும் என்று ஒரு சில அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஒரு சில அறிஞர்கள் ரகு குலத்தின் புகழ் பெற்றவர,
மூத்தவர் என்று பொருள்படும் रघुवरौ raghuvarau என்ற சொல் இருவரை அல்ல ஒரு தனி நபரைக் குறிக்கும் என்பதால் ஸ்லோகத்தை இராமன் மீதே மையப் படுத்த விரும்புகிறார் துளசிதாசர் என்று சொல்கின்றனர். இராம சரித மானஸில் இந்த வார்த்தை அல்லது அதன் வெவ்வேறு மாறுபாடுகள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் இராமனை மட்டும் குறிக்கின்றன. வேறு யாரையும் அல்ல. இலக்ஷ்மணன் உட்பட அவரது சொந்த சகோதரர்களைக் கூட அல்ல என்று ஒரு சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்!
ச. நாகராஜன்
ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை!
வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?
ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன.
உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள். அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.
யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.
அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.
அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.
அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக, “கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.
ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள். இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள்.
இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.
என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.
அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.
நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!
நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!
Date uploaded in Sydney, Australia – 27 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “K”. (Tamil Version is posted here)
காளிதாசன்
காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய 1250 உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.
காளிதாசனின் முக்கிய நூல்கள்:
மகா காவியங்கள்:
ரகுவம்சம் (Raghuvamsa)
குமாரசம்பவம் (Kumarasambhava)
கண்ட காவியங்கள்:
மேகதூதம் (Meghaduta)
ருதுசம்காரம் (Ritusamhara)
நாடகங்கள்:
அபிஞான சாகுந்தலம் (Abhijnanashakuntalam)
மாளவிகாக்கினிமித்திரம் (Malavikagnimitram)
விக்ரமோர்வசியம் (Vikramorvashiyam)
இவைதவிர ஏராளமான ஸ்லோககங்களும் சுபாஷிதங்களும் அவர் பெயரில் வெளியாகியுள்ளன.
காளிதாசன் எழுதிய மேகதூதம் உலகின் முதல் பயண நூல் ஆகும். டூரிஸ்ட் கைடு புஸ்தகம் போல மத்திய இந்தியா முதல் இமை யா மலை வரை வரிசையாக வருணிக்கிறார். மேலும் மேகதூதம் தான் தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கை வருணிக்கும் உலகத்தின் முதல் வானிலை இயல் நூலும் ஆகும் இதைப் பார்த்துதான் கபிலர் என்னும் உலகப் புகழ சங்கத் புலவன் குறிஞ்சிப்பாட்டினை எழுதினார் என்று தமிழ் அறிஞர் ரெவரென்ட் ஜி யு போப் குறிப்பிட்டுள்ளார்.
காளிதாசனின் காலம்
காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்
காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.
ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான்.
காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!
காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது .
அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.
;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது; சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.
***
கல்பம்
வேதப் படிப்பினைப் படிப்போருக்கு வேதங்களோடு ஆறு துணைப்பாடங்களையும் கற்க வேண்டும் என்று ஆயிரக்கண ஆண்டுகளுக்கு முன்னர் சிலபஸ் வகுத்துள்ளனர் . அவைகளில் ஒன்று கல்பம் . ஆறு பாடங்களை ஷட் அங்கம் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து சடங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டாக்கியது .
இன்னும் ஒரு பொருள் காலம் பற்றியது .
பிரம்மாவின் நூறு வயதில் ஒரு நாள் கல்பம் ஆகும்
இது 14 மன்வந்தரங்களைக் கொண்ட மிக நீண்ட கால அளவாகும்.
ஒரு கல்பம் என்பது 1,000 மகாயுகங்கள் அல்லது 14 மன்வந்தரங்கள், இது பிரம்மனுக்கு ஒரு நாள் (சுமார் 4.32 பில்லியன் மனித ஆண்டுகள்) ஆகும்.
வேதாங்கம்: வைதீகக் கர்மாக்கள், யாகம், திருமணம் போன்ற சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை (கல்ப சூத்திரங்கள்) விளக்கும் நூல்.
***
கற்பக விருட்சம்
இது தேவலோகத்தில் உள்ளது; கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் தெய்வீக மரம் கல்பதரு மரம் ஆகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய இது, செல்வத்தையும், நினைத்ததெல்லாவற்ரையும் தரும் இதன் இன்னுமொரு பெயர் கல்பதரு.
பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, காமதேனுவுடன் சேர்ந்து இந்த மரமும் தோன்றியது. இந்திரன் இந்த மரத்தைத் தனது தேவலோகத்திற்கு (சொர்க்கம்) எடுத்துச் சென்றான்
பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம், கற்பக விருட்சம் ஆகிய ஐந்தும் தேவலோக மரங்கள்.
***
காம
ஆசை, விருப்பம் என்பது பொதுவான அர்த்தம் ஆயினும் பிற்காலத்தில் உடல் தொடர்பான காம உணர்வு என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டது சங்க இலக்கியம், திருக்குறள் முழுவதிலும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம் அமோரஸ்AMOROUS என்ற ஆங்கிலச் சொல், இதிலிருந்து பிறந்தது .
***
காமசூத்திரம்
உலகின் முதல் உடலுறவு பற்றிய செக்ஸ் புஸ்தகம் இது . வாத்ஸ்யாயனர் என்ற ரிஷி சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலினை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார் இதில் உலகத்தில் முதல் முதலில் பெண்கள் கல்வி பற்றிய சிலபஸ் உள்ளது 64 கலைகளையும் பெண்கள் கற்க வேண்டும் என்று இவர் பட்டியலிட்டுள்ளார் அவை சரஸ்வதேவியிடமிருந்து தோன்றிய கலைகள் பிற்காலத்தில் எல்லாப் புலவர்களும் ஆய கலைகள்64 என்று எழுதினர் வெறும் உடலுறவுபற்றி மட்டும் சொல்லாமல் அழகு சாதனங்கள், காய கல்ப மூலிகைகள் பற்றியும் வாத்ஸ்யாயனர் எழுதியுள்ளார்.
***
காமன்
மன்மதனின் பெயர் .
***
காமதேனு
பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய தெய்வீகப் பசு காமதேனு . இது வசிஷ்ட மகரிஷியிடம் இருந்தது ; கற்பக விருட்சம் என்ற மரம் போலவே நினைத்தை எல்லாம் உண்டாக்கும். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு பெயர்களும் உண்டு. இதன் உடலில் தேவர்கள் அனைவரும் வசிப்பதாக ஐதீகம்; கோவில்களிலும் வீடுகளிலும் வாகனமாகவும் சிலையாகவும் விக்ரகமாகவியம் வழிபாட்டில் உள்ளது .
***
கர்மா, வினை
வினைப் பயனை கர்மா என்பார்கள் இந்துமதம், பெளத்த மதம், சமண மதம் ஆகியன கர்ம வினைப்பயனிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்துள்ளன
பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் எழுதிய திருக்குறள் உரை.
ஒருவர் செய்த நல்லதும் கெட்டதும் ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வரும் என்பது இந்த மூன்று மதங்களின் நம்பிக்கை
வினைகளை வெல்லலாம் என்று மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோர் பாடியுள்ளனர்
வினைகளை இந்துக்கள் மூன்றாக வகுத்துள்ளனர் அவை சஞ்சிதம், பிராரப்தம் ஆகாமியம் எனப்படும்.
சஞ்சிதம் (கடந்தகால சேமிப்பு), பிராரப்தம் (தற்போதைய அனுபவம்), மற்றும் ஆகாமியம் (எதிர்கால வினை)
ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை திருவள்ளுவர் அளித்தார்.
புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.
வள்ளுவர் சொன்னார்,
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)
பொருள்
தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.
ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.
புத்தர் சொன்னார்
ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.
ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2
வினை பற்றி சமணர்கள் -ஆயிரம் பசு உவமை !
இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச் சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப் பாட்டு வருகிறது :
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்
(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; இளைய ஆன்கன்று, தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.
(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.
***
கர்மேந்திரியங்கள்
கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என்பவை மனித உடல் செயல்களைச் செய்ய உதவும் ஐந்து முக்கிய உறுப்புகள் ஆகும். வாக்கு, கைகள், கால்கள், மலத்துழை, மற்றும் பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஆகும், அவை முறையே பேசுதல், கையாளுதல், நடத்தல், கழிவகற்றல் மற்றும் இன்புறுதல் ஆகிய செயல்களைச் செய்கின்றன
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்களின் மூலம் அறியப்படும் ஐந்து உணர்வுகளாகும். இவை முறையே நாவினால் சுவைத்தல், கண்ணால் பார்த்தல், உடலால் தொடுதல், காதால் கேட்டல், மூக்கால் முகர்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவற்றை ஆராய்ந்து கட்டுப்படுத்துபவன் அறிவில் உலகம் அடங்கும் என்பது திருவள்ளுவரின் குறள் (27) கருத்தாகும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு-27
***
கர்த்தா
கர்த்தா (Karta) என்பது ஒரு செயலைச் செய்பவர், படைப்பவர், அல்லது மூல காரணத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆன்மீகத்தில் இது கடவுள், இறைவன், அல்லது தலைவனைக் குறிக்கப் பயன்படுகிறது.
சம்ஸ்க்ருத இலக்கணத்தில் (வ்யாகரணம்), கர்த்தா (Karta – कर्ता) என்பது ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்பவரை (Subject/Doer) குறிக்கும். இது காரகங்களில் (Karaka – வேற்றுமைப் பொருட்கள்) முதன்மையானது.
***
காவியம்
தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
இப்படி ஹேமசந்திர்ர் காவ்யானுசாஸனத்தில் ( I -3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.
ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார். இந்த உரைகல்லில் தேருகின்றவையே காவியம்.
***
கதிர மரம் / கருங்காலி
Khadira (खदिर) is a Sanskrit word referring to the “Catechu tree” tree from the Fabaceae family, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā.
சரக சம்ஹிதை முதலிய ஆயுர்வேத நூல்கள் கருங்காலி மரத்தின் மருத்துவப் பயன்களை எடுத்துரைக்கின்றன சம்ஸ்க்ருதத்தில் கதிர என்றும் தாவரவியலில் Acacia catechu அக்கேசியா கடேச்சு என்றும் சொல்லுவார்
திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. கருங்காலி மரம் (Ebony Tree) மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகள் கொண்ட, மிகவும் உறுதியான மரமாகும்.
***
கரகம் , காவடி
இவை இரண்டும் தமிழ்நாட்டின் கிராமீய நடனங்கள் ஆகும்
காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.
நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம்.
மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தைப் பூசம் முதலிய நாட்களில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர் மலேசியா பத்துமலை முருகனைத் தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதால் அன்று அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது
தமிழ் நாட்டில் முருகனுக்கு விசேஷமான தினங்களில் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர் ஏதேனும் வேண்டுதலை நிறைவேற்றவோ நேர்த்திக் கடனாகவோ காவடி எடுக்கிறார்கள் அப்போது பலரும் பரவச நிலையை அடைகின்றதனார் வெற்றி வேல் என்ற கோஷமும் அரோஹரா என்ற கோஷமும் விண்ணதிர முழங்கப்படும்.
காவடிகளில் பல வகை உண்டு அப்போது முதுகில் கொக்கியைக் குத்தி க்கொண்டும் வாயில் வேலைக்குத்திக்கொண்டும் காவடி எடுக்கிறார்கள்
***
கரகம்
தமிழ் நாட்டில் ஆண்களும் பெண்களும் கரகம் ஆடுகிறார்கள் ; அப்போது தலையில் குடம் அல்லது மார்க் கம்பத்தை வைத்துக்கொண்டு அதைக் கீ ழே விழாமல் ஆடுவர் இது தவிர கீழே உருளும் மரக்கட்டையிலும் ஆணிகளிலும் நின்றும் கூட ஆடுகின்றனர் கோவில் திருவிழாக்களில் மட்டுமின்றி பெரிய ஊர்வலங்களிலும் கரகாட்டத்தை ஏற்பாடு செய்கிறார்கள்.
–subham—
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 , காளிதாசன், காவியம், கரகம் காவடி, கர்மா, வினைகளின் வகைகள், pictures
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை ‘முதிய முநி’ எனக் குறிப்பிட்டார் – தில்லைப் புராணம்.
***
நித்திய கல்யாணி, சிவகாமி, அபிராமி- சொல் நயம்
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி
எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி
சிவகாமி உமை அருள் பாலா … சக்தி, தனித்து விளங்கும் ஜோதி,
அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே,
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி
விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள்
சிறை மீள நடம் இடுவோனே … சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த
பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே,
***
யோக ரகசியங்கள்
நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை … நாலு
சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்*
செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை
நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே … பிராணாயாம மந்திர
ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி,
விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக,
இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் … (அனாகதம் முதலிய மற்ற
நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும்சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய
கோலமும் உதிப்ப கண்டு … பல திருக் கோலங்களையும் பார்த்து,
உள நாலினை மறித்து … சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து,
இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி … இனிமையாகிய
கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு,
விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை
உண்டு … விந்து சம்பந்த (சிவ – சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,
ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் …
கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்?
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு ‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும்.சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்மன அமைதி ஏற்படும்.
***
ஞான சம்பந்தரின் ஞான வாள்!
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி
அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு
என மறை பாடி … இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்
கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த
(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே,
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ
னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்
ஆடும் ஆட்டமும் … தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாளவாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி
துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்
வியாக்ரனும் … சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து
ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகுபொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,
அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. …
நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.
பகவத் கீதையில்
பகவத் கீதையில் ஞானம் ( பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும்) பின்வருமாறு
பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு
புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன் … உண்மை அறிவை நன்கு
காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் … பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,
இனிமையான வார்த்தைகளைப் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். அப்படி இருக்க, எனது நண்பனே! ஏன் இனிமையாகப் பேசுவதில் கஞ்சத்தனத்தைக் காட்ட வேண்டும்?
திருவள்ளுவரின் குறளுடன் இதை ஒப்பிடலாம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் எண் 100)
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுவது இனிய பழம் இருக்கும் போது அதை உண்ணாமல் காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
பஹுனாம் அல்பசாராணாம் சம்ஹதி: கார்யசாதிகா |
த்ருணை விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: ||
ஏராளமான பலஹீனமான அல்ப பூச்சிகள் ஒன்றாக இணைந்து கடினமான காரியங்களைச் சாதிக்கின்றன. பலமான மதம் பிடித்த யானையைக் கட்டி இழுக்க மெல்லிய வைக்கோல் இழைகள் ஒன்று சேர்ந்து பலமான கயிறாகத் திரிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக!
கதே ஷோகோ ந கர்தவ்யோ, பவிஷ்யம் நைவ சிந்தயேத் |
வர்தமானேன காலேன, வர்தயந்தி விசக்ஷணா: ||
பழைய கால (கடந்து போன) நஷ்டங்களையோ எதிர்காலத்தையோ நினைத்து கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துபவர்களே புத்திசாலிகள்!
குணம் வம்ச பரம்பரையாக வருமா?
ந வ்யாப்திரேஷா குணினோ குணவான் ஜாயதே த்ருவம் |
சந்தனோநளசந்தக்தோ ந பஸ்ம சுரபி க்வசித் ||
நல்ல குணமுள்ள புண்யசாலிகளுக்குப் பிறந்தவர்கள் அவர்களுடைய குணங்களை அப்படியே கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு உலக நியதியும் இல்லை. சந்தனக்கட்டைகளை எரித்து சாம்பலாக்கிய பிறகு அந்த சாம்பல் சந்தனத்தின் மணத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதைக் கவனியுங்கள்!
நிர்வாண தேசத்தில் வண்ணானுக்கு என்ன வேலை!
கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே |
நக்னக்ஷபணாகே தேஷே ரஜக: கிம் கரிஷ்யந்தி ||
கேட்க ஒருவரும் கூடியிருக்காத இடத்தில் ஒரு பேச்சாளர் என்ன செய்வார்? நிர்வாண தேசத்தில் அனைவரும் நிர்வாணமாக இருக்கும் போது அங்கு வண்ணானுக்கு என்ன வேலை?
Date uploaded in Sydney, Australia – 26 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
xxxx
ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “K”. (Tamil Version will be posted tomorrow)
Kalidasa (kaalidaasa)
Kalidasa is widely considered to be the greatest Indian poet and playwright of all time. He wrote in Sanskrit. There are seven works written by him-two epic poems, two shorter poems and three plays. They are 1.Raghu Vamsa (dynasty of Raghu),2.Kumara Sambhava (Birth of Kumara, 3.Megha Duta (Cloud Messenger),4.Ritu Samhara (Cluster of Sesons), 5.Malavikagnimitram (Malavika and Agnimitra),6.Abijnana Shakuntala (The recognition of Shakuntala) and 7.Vikramorvasiya (Urvasi won by valour).His master piece was Shakuntala.
The age of Kalidasa has been debated for long. He could have lived anytime between 2nd century BC and 4th Century AD. Though the western scholars have placed him in the period of Gupta dynasty, Indians believe that he lived in the time of the great Indian King Vikramaditya who started his own Vikrama era in 56 BCE. Kalidasa was one of the Nine Jewels (Navaratna) of Vikramaditya’s court.
My research into Tamil Cankam (also known as Sangam) literature shows that Kalidasa lived sometime before the birth of Christ. Tamil poets have used a lot of his similes. Kalidasa was most famous for his apt similes. The Sanskrit poets praised him as Upama Kalidasasya: ( Kalidasa owns similes).Tamil poets have used lot of common Indian/ Hindu beliefs. The source may be different ancient Indian works. But there are very clear indications to show that the poets have got them from Kalidasa’s works. There are over 200 similarities between the works of Kalidasa and the Sangam Tamil works. No one can reject them as coincidences or of pan Indian origin.
Seven Books—40,000 words—93 commentaries for three of his works—he beat Shakespeare in writing poetry+ dramas+ Epics+ stotras (Shyamaladandakam) and usage of similes. He covered the history of 29 kings in Raghuvamsam. He used 1250 similes! He gives a description of a vast geographical area from Iran to Indonesia! He called the Himalayas “the measuring rod of earth” even before George Everest told the world the height of Everest Peak!!! An amazing poet the world has ever produced. First poet to write a travelogue called Meghadutam in Sanskrit and first poet to report the progress o South West Monsoon from South India to Himalayas.
First poet to link Pandyas and Agastya, which is the foundation of Tamil History.
***
Kalpa
Kalpa (कल्प) refers to “one day in the life of Lord Brahmā. It is equivalent to one thousand catur-yugas. Each catur-yuga is one cycle of the four yugas: Satya, Dvāpara, Tretā and Kali, totalling 4,320,000,000 years.
It signifies a period of creation, duration, and destruction of the universe.
One of the six Vedāṅgas, i. e. that which lays down the ritual and prescribes rules for ceremonial and sacrificial acts; शिक्षा कल्पो व्याकरणम् (śikṣā kalpo vyākaraṇam) Muṇdtod; 1.1.5 see under वेदाङ्ग (vedāṅga).
The doctrine of poisons and antidotes.
One of the trees of paradise; cf. कल्पद्रुम (kalpadruma).
***
Kalpakavriksa- Wish fulfilling tree
Kalpavṛkṣa (कल्पवृक्ष).—A tree in Devaloka. It has the power of giving any object that one wishes to get. There are five Kalpavṛkṣas in Devaloka. Their names are: Mandāra, Pārijāta, Santāna, Kalpavṛkṣa and Haricandana.
***
Kama (kaama)
Wish, desire; this Sanskrit word is used throughout ancient Tamil literature.
Kāma means desire, wish, longing in Indian literature. Kāma often connotes sexual desire and longing in contemporary literature, but the concept more broadly refers to any desire, wish, passion, longing, pleasure of the senses, the aesthetic enjoyment of life, affection, or love, with or without sexual connotations.
Love or desire of sensual enjoyments, considered as one of the ends of life (puruṣārtha); cf. अर्थ (artha) and अर्थकाम (arthakāma).
Dharama, Artha, Kama, Moksha are the four values that Hindus should aim for.
***
Kama – God of Love
Kama is the God of Love and Lust. He is also referred to as Manamatha. He is the most handsome among both men and Gods. He is equivalent to the Greek/Roman Cupid. He uses a bow of sugarcane, and shoots flower tipped arrows at humans to make them fall in love. He is married to Rati, one of the daugters of Daksha.
***
Kāmaśāstra (कामशास्त्र) refers to the “science of erotics”.
Kamasutra
Kāmasūtra (कामसूत्र).—
Name of an erotic work by Vātsyāyana.
First book on sex in the world. Vatsyayana wrote it in Sanskrit. First book in the world which prescribed educational syllabus for women.
“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)
Vatsyayana, the Brahmin author of Kamasutra listed all the 64 arts that a woman should learn. Tamil and Sanskrit poets referred to this 64 arts in their poems. Goddess Sarasvati is the source of those 64 subjects.
Kāmasūtra (कामसूत्र) (lit. “principles of love”’) is an ancient Indian Sanskrit text on sexuality, eroticism and emotional fulfillment in life.—The Kāmasūtra is a Sūtra-genre text with terse aphoristic verses that have survived into the modern era with different bhāṣyas (exposition and commentaries). The Kāmasūtra acknowledges the Hindu concept of Puruṣārthas, and lists desire, sexuality, and emotional fulfilment as one of the proper goals of life. Its chapters discuss methods for courtship, training in the arts to be socially engaging, finding a partner, flirting, maintaining power in a married life, when and how to commit adultery, sexual positions, and other topics.
***
Kamadhenu- Wish fulfilling Cow
Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.
It refers to the “celestial cow” also known as Surabhi (सुरभि Surabhī).
Kamadhenu, the divine “cow of plenty” originating from the Churning of the Ocean, is revered as a symbol of abundance and divinity with the power to fulfil desires. According to tradition, she is depicted with various divine attributes, serves as a protective force for sages, and is worshipped for prosperity and to bring good luck to homes and businesses
Kāmadhenu (कामधेनु) was the mythical cow of Vasiṣṭha which satisfies all desires, cow of plenty (= surabhi).
***
Karma
“Karma” (Sanskrit: कर्म) primarily means action, work, or deed, acting as the fundamental spiritual principle of cause and effect in Hinduism, Buddhism, and Jainism. It governs the moral law of actions, shaping future destiny, rebirth, and experiences, often categorized into Sanchita (accumulated), Prarabdha (fruiting), and Agamya or Kriyamana (current).
Karma (कर्म) refers to “action”, “deed”.—1) any action or deed; 2) the principle of cause and effect; 3) a consequence or “fruit of action” (karmaphala) or “after effect” (uttaraphala), which sooner or later returns upon the doer. What we sow, we shall reap in this or future lives. Selfish, hateful acts (pāpakarma or kukarma) will bring suffering. Benevolent actions (puṇya-karma or sukarma) will bring loving reaction.
Karma is three fold:—sañcita,prārabda, kriyamāṇa (or āgāmi)
Also any religious act or rite (as sacrifice, oblation etc., [especially] as originating in the hope of future recompense.
Karman (कर्मन्).—[neuter] action, deed, work, [especially] holy work, sacrifice, rite; result, effect; organ of sense; the direct object ([grammar]); fate, destiny.
***
Karmendriya
Karmendriya (कर्मेन्द्रिय):—[from karma > karman] n. an organ of action (five in number like the five organs of sense, viz. hand, foot, larynx/ogan of voice, organ of generation, and excretion).
The Five Faculties of Action (Karmendriya):
vak-tattva: speech (voice)
pani-tattva: grasping (hands)
pada-tattva: walking (feet)
payu-tattva: excretion (anus)
upastha-tattva: procreation (genitals)
Speaking, Grasping, Moving About, Excreting and Sexual Activities are the Soul’s Powers of responding to and interacting with, the external World.
***
Karta
Karta (Sanskrit: कर्ता, kartā) primarily refers to the “doer,” “agent,” or “creator” of an action. It is a term deeply rooted in Indian philosophy, grammar, and traditional law, representing the individual responsible for bringing about change or taking initiative.
It is a foundational concept in Indian philosophy, grammar, and art, embodying initiative and responsibility.
Sanskrit Grammar (Vyakarana): Karta is the agent or subject of an action.
***
Khadira
Khadira (खदिर)—Sanskrit word for a plant (Acacia catechu).
Khadira (खदिर) is mentioned frequently from the Rigveda1 onwards as a tree with hard wood—the Acacia catechu. The Aśvattha is referred to as engrafting itself upon it in the Atharvaveda, and from it the climbing plant Arundhatī is said to have sprung.
***
Kavya (kaavya)
Kāvya (काव्य).
A poem; महाकाव्यम् (mahākāvyam); मेघदूतं नाम काव्यम् (meghadūtaṃ nāma kāvyam) . Poetics, poetry, a poetical composition
Mahākāvya (महाकाव्य):—the Raghu-vaṃśa, Kumārasambhava and Megha-dūta by Kālidāsa, the Śiśupāla-vadha by Māgha, the Kirātārjunīya by Bhāravi and the Naiṣadha-carita by Śrī-harṣa; [according to] to some the Bhaṭṭi-kāvya is also a Mahakavya.
In Tamil Five Great Epics (Tamil: Aimperumkāppiyaṅkaḷ) are:
Karakam, or Karagaattam, is a traditional, ancient folk dance from Tamil Nadu, India, performed to honour the rain goddess Mariamman. It features dancers balancing decorated pots (karakam) on their heads while performing intricate movements, acrobatics, and sometimes balancing on a rolling wooden block.
Though associated with religious festivals, nowadays they are part of cultural and political processions.
***
Kavadi (kaavadi)
This semi-circular decorated canopy supported with wooden cross-pieces is called a kavadi, meaning ‘burden’ or ‘load’.
A kavadi is a ceremonial, often ornate, wooden or metal arch decorated with peacock feathers, flowers, and photos of Hindu deities, carried by devotees of Lord Murugan as an act of penance, gratitude, or devotion, during the Thaipusam and other Murugan (Skanda/Kartikeya) festivals. It represents a “burden” or sacrifice, often involving fasting, rituals, and sometimes body piercings with hooks or skewers, particularly in Malaysia, Singapore, and Tamil Nadu.
Devotees carry the kavadi to fulfill vows, seek blessings for health or success, or express gratitude to Lord Murugan, the Hindu god of war and wisdom.
Types of Kavadi:
Paal Kavadi: A simple, less painful offering involving pots of milk (paal) carried on a wooden pole.
Alagu Kavadi: A more complex, heavy structure often attached to the body via hooks and spikes piercing the skin (alagu means small spears).
Sangili Kavadi: Involves dragging heavy chariot or metal structures via chains attached to the body.
During the procession, devotees often enter a trance-like state, facilitated by the rhythmic, loud, and intense drumming (urumi melam) and chanting of “Vel Vel” (referring to Lord Murugan’s spear).
In Malaysia, devotees often ascend 272 steps to the shrine in the Batu Caves during Thaipusam. Other famous Murugan temples are also on hills. They also climb the steps.
Gangajal taken in Kavadi poles
TO BE CONTINED……………….
–SUBHAM—
TAGS- Karakam, Kavadi, Kalpa, Kalidasa, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 39, இந்து மத கலைச்சொல் அகராதி-39