பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? கீழே உள்ளவற்றைப்
படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் .
Woman = Light of Billion Galaxies
अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम्।
एकस्थं तदभून्नारी व्याप्तलोकत्रयं त्विषा॥
atulaṃ tatra tattejaḥ sarvadevaśarīrajam।
ekasthaṃ tadabhūnnārī vyāptalokatrayaṃ tviṣā॥
English Translation:
The incomparable radiance that was born from all gods and pervaded the 3 worlds,
came to one place and took the form of a woman.
அதுலம் தத்ர தத் தேஜஹ ஸர்வ தேவ சரீரஜம்
ஏகஸ்தம் தத பூந் நாரீ வ்யாப்த லோக த்ரயம் த்விஷா
–தேவி மஹாத்ம்யம் 2-13
மூவுலங்களில் உள்ள எல்லா கடவுளரின் ஈடு இணையற்ற , ஒப்பற்ற ஒளியும் ஒரு சேர ஒரே பெண்ணின் உருவெடுத்து வந்தது (தேவியானவள் வந்தாள் )
xxxx
ஒளதும்பராணி புஷ்பாணி ஸ்வேத வர்ணம் ச வாயஸம்
மத்ஸ்ய பாதம் ஜலேத் பச்யேத் ந நாரீ ஹ்ருத்யஸ்திதம்
அத்திப் பூவைக் கண்டாலும் காணலாம் ; வெள்ளைக் காக்கையைக் கண்டாலும் காணலாம் ; நீருக்குள் மீன் கால்களைக் கண்டாலும் காணலாம் ; பெண்களின் உள்ளத்தை மட்டும் அறிந்துகொள்ள முடியாது – மஹா பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது .
அறியமுடியாதது
இதை விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஒரு புலவரும் அழகாக மொழிபெயர்த்துள்ளார்
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி மரத்தில் மலரையும் வெள்ளை உடலை உடைய காக்கையும் பித்தர்களுடைய மனதையும் நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும் பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும் காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை.
Xxx
Gods reside where women are worshipped
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला क्रिया:॥
yatra nāryastu pūjyante ramante tatra devatāḥ।
yatraitāstu na pūjyante sarvāstatrāphalā: kriyā:॥
English Translation:
Where women are honoured, divinity blossoms there.
And where they are Dishonoured, all actions remain unfruitful.
Source:
Manusmriti 3.56
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமதே தத்ர தேவதாஹா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்த த்ராபலாஹா
மநு ஸ்ம்ருதி 3-56
எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே இறையுணர்வு பரிணமிக்கும் ;
எங்கே பெண்கள் மிதிக்கப்படுகிறார்களோ அங்கே செய்யப்படும் அனைத்து
ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு உணவு விஷயத்தில் இரு மடங்கு விருப்பமும்,
புத்தி/அறிவு விஷயத்தில் நான்கு மடங்கு அதிக திறமையும் ,
தைரியம், பிடிவாத விஷயத்தில் ஆறு மடங்கு அதிக ஈடுபாடும் ,
இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் எட்டு மடங்கு அதிக ஈடுபாடும்
இருப்பதாக நூல்கள் செப்புகின்றன / என்மனார் புலவர் .
Rough translation
Women are twice better in enjoying food, four times cleverer in learning, six times more involved in adventures/innovations and eight times more involved in enjoying sexual pleasures (in comparison with men).
பெண்களை இளம் பருவத்தில் தந்தையும் , திருமணம் ஆனவயதுக் காலத்தில் கணவனும் , முதிய பருவத்தில் புத்திரர்களும் காப்பாறுகிறார்கள் ஆகையால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாமல் இருக்கக்கூடாது .
This is a very important couplet and always misinterpreted by half bakedpeople. Nowhere in the world women get such a protection. Old parents are thrown into dust bins (what others call Old Age Homes) in the Western World. After teenage, no woman is protected by anyone in the West. The statistics on Rapes, Single Mothers, Divorces and Old Age Homes in the West, stand as biggest proof for my statement.
—subham—
tags- பெண்கள், புலவர்கள், நம்புவதா, மநு நூல், தேவி மஹாத்ம்யம்
This is the second part of Vishnu in Sangam Tamil Literature
Vishnu is praised as Mr Blue Colour நீல நிற வண்ணன் (Kali.104-38),and Mr Tall நெடியோன் (Madu.line 763, Perum.line 402, Pathitr.15-39, Kali.104-8).
Tamils and Sanskrit scholars always use blue and black as interchangeable colours. Even when Tamils described the bird cuckoo/Koel, they praised it as Blue or Black bird. When you see blue in dark or less lighted areas it looks black.
All gods are nothing but Vishnu says a poet.4-66/69
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்—பரிபாடல்
Six Paripatal poems praise him.
Mr Black God
Hinduism is the only religion in the world where BLACK is praised. All famous and worship worthy persons are BLACKS (Vyasa, Krishna, Draupadi, Kaali etc)
Other poets of 2000 year old Sangam Books described him as sapphire coloured person, Black as cloud, Black as Utter Darkness, As Blue as ocean, Shining Black Flower (Puram.56-5; 58-15; Perum. Lines 30 and 402; Pari.1-61/62; 2-52; 3-3; 4-67; 13-42; 15-50; Kali.119-3 and so called Maayon மாயோன் ( Mr Black and Mr Magic).
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
—புறநானூறு -56
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
—புறநானூறு -58
(Linguistic point: English word Magic is derived from Maaya, literaly that which disappears. If I say Maaynthaan in Tamil it means he is dead/ disppaered/Gone. Tiruvalluvar in his Kural also described Gopi Krishna as Pal Mayak Kalvan in Kural 1258).
Tamil references for
Sapphire coloured man- Pari. 4-6/7
Ocean coloured, Cloud coloured – Pari. 4-6/7
Dark man like darkness, as Dark flower Puuvai – Pari.1-6/7
You are as dark (blue or black) as the Five= Cloud, Puuvai flower, Ocean, Darkness, Sapphire gem stone- Pari.13-42/43
DRESS
Vishnu’s crown and his waist belt cloth look like shining sun in the background of Blue Mountain (Pari.13-42/43)
His body and his dress served as contrast- differently coloured- (Pari.4-8)
Dress Uniform
Hindus are the first ones in the world to use uniforms; now in the West , blue means boys, pink means girls.
Hindus called their Gods as Yellow Dressed man (Krishna= Peetambhara Dhari), Blue Dressed Man (his brother Balarama= Neelaambhara Dhaari)
Miss Black= Goddess Kaali
(Linguistic point: R and L are interchangeable in Tamil, Sanskrit and other ancient languages. Kari/Kali/Kaali/Carbon are cognate words)
Tamil References:
Peetaambharam/yellow- Pari.8; Pari 1-9/10
Many Coloured Garland:
Hindus are the most Herbal, Botanical Men in the world. They have different herbs for different Gods. Different Flowers for different Gods and goddesses. This can be seen in South India even today. In North India they lost most of the traditions due to Greek, Huna and Muslim and Christian invasions and destruction. In the South, one can see one particular flower garland is sold for one particular temple God or Goddess. In North India they use a particular Yellow chrysanthemum which is banned in South Indian Temples (it is called Muslim/Tulukka Saamanthy).
In the South one can see Tulsi garlands for Vishnu, Bilva/ Vilva garlands for Shiva, Red Arali for Durga, White Lotus for Sarasvati, Red Lotus for Lakshmi, Jasmine for Goddesses etc.
Tamil References:
Hindus are the ones who studied the body features than any other community in the world; they described Goddesses with Three Lines in their necks, Eyes like Neelotpala flower or Fish, Gods with Broad Chest and Long Hands, Lotus Eyed etc.
Sangam Tamils praised Vishnu as a person with Mountainous Chest (strong and broad like hills)- Kali.108-55; Pari13-10/12
The garland (white pearls) on his neck looked like the water falls in the blue mountains- Pari.13-4
Many flower Garland on his neck looked like Rainbow/coloured – Akam.175- 13/16
Another poet compared his garland as the one made up of four different flowers on the seashore with bees buzzing around them-Kali.127-1/5
Tulasi/ Tulavam in Tamil; Tulsi in Hindi- Pathitr.31-7/9; Pari.13-59/60.
Pari. poets go one step forward by describing Vishnu with Tulsi on his head as well- Pari.4-59 and Pari.13-29.
Hindu Gods and Goddesses wear enormous jewelley which is very visible in sculptures. Greek Gods wear very little; Hindus and Hindu Gods wearj ewels from Head to Foot. No where in the world we see such types; if we see some of them on Mayan or Babylonian deities, it is a clear proof of Hindu influence .
Vishnu wears a particular medal with gems and it is known as Kaustuba Gem.Pari.1-8/9
His gem studded garland shined like rainbow (probably Nava Ratna Mala): Pari.1-31; 2-28/29
Hindus are the only one people in the world who describe men and women are equal. The word the other half for woman is found in the Vedas.
Siva is described as Ardhabnari (means Half Woman); Vishnu is described ‘Woman in Chest’ person= Sri Vatsan
Tamil Hindus who lived 2000 years ago never missed a single point described in Bhagavata and Vishnu Purana. Even Krishna- Gopi episode is described in Sangam Tamil literature.
Sri Vatsa in Tamil is Tiru Maru Maarba (Perum.line 29, Pari.1-38; Pathitr31-7; Pari.1-3/8; Pari-2-31; kali.104-9
In short, Tamil Sangam poems contain all the des -criptions about Vishnu found in Sanskrit scriptures.
In the next part let us look at his flag and special weapons.
xxxxxxxxxxxxxx
Tamil Poems mentioned above:
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-Pari 1-6/10
Xxx
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;Par.4-6/7
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 4
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
28) பழநி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே
பாடல் எண் 171 – நிகமமெனில் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் முகம் வெளுத்து மனம் குலைந்து போனவர்களுடைய வித்தை தான் இந்தக் கல்வி எல்லாம். இத்தகைய கல்வி போதும். இது முடிவதாக, இனியேனும் உன்னை மனம் ஒரு வழி நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வருமபடி அருள்வாயாக!
29) பழநி
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம தருள்வாயே
பாடல் எண் 178 – பெரியதோர் கரி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மனம் உருகி உடல் எல்லாம் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள்வாயாக!
30) பழநி
மாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை யருள்வாயே
பாடல் எண் 186 – முதிர வுழையை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழுப் பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து அருள்வாயாக!
31) பழநி
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர மருள்வாயே
பாடல் எண் 187 – முத்துக்கு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அதிகமான துன்பத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக!
32) பழநி
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே
பாடல் எண் 188 – மூலம் கிளர் ஓர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள்வாயாக!
33) பழநி
இசைபயில்ஷ டாக்ஷ ரமதாலே
இகபரசௌ பாகிய மருள்வாயே
பாடல் எண் 192 – வசனமிக ஏற்றி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரமமான சரவணபவ தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வைத் தந்து அருள்வாயாக!
34) பழநி
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே
பாடல் எண் 200 – வேய் இசைந்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரு தாமரைத் திருவடிகளை வணங்கிஏ சில பூஜைகளையும் செய்ய அருள்வாயாக!
35) சுவாமிமலை
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் றருள்வாயே
பாடல் எண் 201 – அவா மருவு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவாய என்ற திருமந்திரத்தை ஒரு போதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேன உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்று அழைத்து அருள்வாயாக!
36) சுவாமிமலை
ஓமெழுத் திலன்பு மிகவூறி
ஓவியத் திலந்த மருள்வாயே
பாடல் எண் 212 – காமியத் தழுந்தி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு யான் சித்திரம் போல மோன நிலை முடிவை அடைய அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 119/A
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 2
பொருளடக்கம்
நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் அடுத்த 26 அத்தியாயத் தலைப்புகள் :
26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
27. மாசிலா உண்மைக் காதலே!
28. ஆஹா! நம் ஆசை நிறைவேறுமா?
29. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று!
30. சம்மதமா – நான் உங்கள் கூட வர சம்மதமா?
31. ஆடி வா, ஆடி வா, ஆடி வா!
32. தேன் உண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு!
33. மலர்கள் நனைந்தன பனியாலே!
34. உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே!
35. ரோஜா மலரே ராஜகுமாரி!
36. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!
37. பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!
38. நான் ஒரு முட்டாளுங்க!
39. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா!
40. கல்லிலே கலை வண்ணம் கண்டான்!
41. பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை!
42. காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து..!
43. மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது!
44. அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு!
45. நான் என்றால் அது அவளும் நானும்!
46. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
47. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!
48. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே!
49. பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்!
50. உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும்
பார்த்தேனே!
51. ஆற்றின் கரைதனிலே, கண்ணன் என்னை கேலி செய்தானே!
52. சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே!
*
நூலுக்கு திரு P.வெங்கட்ராமன் அவர்கள் அளித்துள்ள
வாழ்த்துரை இது:
வாழ்த்துரை
லட்சக்கணக்கான ரசிகர்கள் கேட்டு பெரிதும் ரசிக்கும் காலத்தால் அழியாத பாடல்களை அழகுற நேர்த்தியாக படைத்துள்ள திரு ச.நாகராஜன் அவர்களின் சலியாத உழைப்பு போற்றுதற்குரியது. ‘காற்றிலே வரும் கீதமாய்’ – ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகமாய் – ‘சங்கீத சௌபாக்கியமாய்’ பாடல் தலைப்புகள் பரவசப்படுத்துகின்றன.
‘பாடல்கள் பல விதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என துவக்கத்தில் கூறும் நூலாசிரியர் திரு ச.நாகராஜன் நேயர்கள் பெரிதும் விரும்பும் பாடல்களை தலைப்பாக்கி, பாடலாசிரியர் – இசையமைப்பாளர் – இயக்குநர் – பாடல் பிறந்த சூழ்நிலை – மலர்ந்த கதை – திரைப்படத்தின் சிறப்பு என பயணிக்கும் நூல் தமிழ் திரையுலக தமிழிசையின் தலை சிறந்த ஆவணமாக திகழ்கிறது. உள்ளம் மகிழ்கிறது.
திரு ச.நாகராஜனின் தந்தையார் தெய்வத்திரு வெ.சந்தானம் அவர்கள் பாரம்பரிய தேசபக்த குடும்பத்தில் பிறந்து – நாட்டின் விடுதலைக்காக சிறை சென்ற ‘மணிக்கொடி’ வீரர். ‘தினமணி’ மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்தவர். இதழியல் சூழ்நிலையில் வளர்ந்த என்னை தினமணி மதுரைப் பதிப்பின் பகுதி நேர செய்தியாளராக நியமித்து என்னை ஊக்குவித்தவர் பெருந்தகை வெ. சந்தானம் அவர்கள். அரை நூற்றாண்டு காலமாக அவரது குடும்பத்தாருடன் பழகிவரும் நல்வாய்ப்பு பெற்றவன்.
அமரர் சந்தானம் அவர்களின் குமாரன் திரு ச.நாகராஜன் ஒரு அற்புதப் படைப்பாளி. எழுத்தின் பல பரிமாணங்களிலும் தடம் பதித்து வரும் உழைப்பாளி. அறிவியலும் ஆன்மீகமும் இவருக்கு இரண்டு கண்கள்.
புகழ்பெற்ற டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகன கட்டுமானத் துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக இவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. அறுபதுக்கும் மேல் இவர் எழுதிய புத்தகங்கள் அற்புதமானவை. இவரது படைப்புகள் வலைதளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நேசிக்கும் – வாசிக்கும் உலகளாவிய அளவில் பல்லாயிரக் கணக்கில் நேயர்கள் உள்ளனர் என்பது இவருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பதாகும். சுயமுன்னேற்றம் – படைப்பாற்றல் திறன் – நிர்வாக இயல் படைப்புகள் – இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் என இவரது திருவினையாக்கும் முயற்சிகளுக்கு முக்கிய அடித்தளம் எனலாம்.
‘திரைப்பட பாடல்களின் ஒரு பயணம்’ எனும் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார் கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்.
தொழிலதிபராக – எழுத்தாளராக – பேச்சாளராக – கலாபிமானியாக பல் பரிமாணங்களைக் கொண்ட இயல் – இசை – நாடகம் என முத்தமிழைப் போற்றும் திருமகனார் நல்லியார் எனும் பெருமகனார்.
தாமறிந்த மிகப் பழைய தமிழ் திரைக்காவியங்கங்களை மிகவும் ரசித்து மகிழ்பவர் இந்த பழமை விரும்பி. ‘விண்டேஜ் ஹெரிடேஜ்’ எனும் பழைய திரைப்படங்களை தொடர்ந்து திரையிடும் அமைப்பிற்கு நல்லுதவி செய்பவர்.
தமிழ்த் திரையுலக கவிஞர்களைப் பற்றியும் இசையமைப்பாளர்கள் பற்றியும் தரமான வெளியீடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும், பதிப்பக மேலாளராகத் திகழும் இராம. குருமூர்த்தி அவர்களும் பெரிது நன்றிக்குரியவர்கள்.
பி.வெங்கட்ராமன்
சென்னை – 9
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Vishnu is worshipped from very early days in Tamil Nadu. Tamil’s oldest book Tolkappiam referred to him as Maayon (மாயோன் and Sangam books praised him as Maal. We find Him in scores of places. Many Sangam Tamil poets have his name as Kesavan, Kannan/Krishna, Vinnan/Vishnu, Damodaran etc
Tolkappiam depicted him as the God of Forest Lands (Mullai) Skanda/Murugan is also allocated the hilly forests. We see the temples of these two Gods in high or raised places. The most famous Hill temple of Balaji/Venkatachalapathy / Vishnu is the northern border of Tamil Nadu. Everyday thousands of people visit Tirupati/ Tirumalai to see Balaji, a form of Vishnu.
In English , Bible is called The Book. In Tamil if someone says The Temple it means Chidambaram Siva Tempe for Saivite Tamils and Sri Rangam Vishnu Temple for Vaishnavite Tamils. Tamils attach the epithet Tiru (Sri) for two stars only (out of 27 stars). They are Tiu Onam and Tiru Aathirai (Arudra) of Vishnu and Siva resectively. They are exactly six months apart in a year. The Tamils have divided the Hindu year equally into two parts and allocated them to Lord Vishnu and Lord Siva.
Maayon in a few places :Puram.57; 291-2; Kali.103-55;
Madu. Line 591; Pari.Thirattu 8-1
Kalittokai and Paripatal (paatal) have most of Vishnu references.
There are 17 verses in Kalittokai for Mullai (forest areas) where we see lot of festivals and dances in praise of Vishnu/Maal
(Linguistic Point: Maal means Black; words like Melanesia, Melancholy are derived from it. In Tamil also Tiru Maal is portrayed as Black)
Kuravai type of folk dance in praise Maal/Vishnu is found in many verses Kali.103 to 108. Vishnu’s attributes clearly show that Tamils were familiar with Bhagavata and Vishnu Purana.
Chest as wide as mountain or as strong as hill- – Kali.108-55
Mullai land was occupied by Yadavas (Aayar in Tamil). Their main work was raising cattle. They organised Bull Fighting occasionally or once a year. Now it is done during Makara Sankaranti which Tamils celebrate as Pongal on 14th January every year.
The Bull Fighting was done only by Yadava caste (Aayar) for the Yadava youths. Yadava women raised strong and powerful bulls and let them into Bull Rings. Yadava youths tackled them. These scenes are described elaborately in Kalittokai.
xxx
Here is One interesting Scene Kali.107-22
Tamils are famous for wearing flowers in their heads. Men also did wear In the Sangam period, one lady sent her bull into the Bull ring. One of the bulls was tackled by a youth and his flower was entangled in the horn of that bull. When it jumped violently the flower fell into the lady who raised the bull. Immediately she and her friends and relatives felt that God Maal/Vishnu himself shown him as her future husband; her brothers and father praised the incident as தெய்வ மால் காட்டிற்று (Divine Vishnu himself showed it to us)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 3
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
19) பழநி
மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட – அருள்வாயே
பாடல் எண் 113 – ‘ஆலகாலம் என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு, உனது இரு திருவடிகளைத் தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக!
20) பழநி
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத – மருள்வாயே
பாடல் எண் 124 – ஒருவரை ஒருவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருந்திய பரம ஞானமாகிய சிவ கதியை பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக!
21) பழநி
பொருட் பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் தருள்வாயே
பாடல் எண் 131 – கரியிணைக் கோடென எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக!
22) பழநி
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே
பாடல் எண் 146 – குருதி மலசலம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக!
23) பழநி
மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் பங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே
பாடல் எண் 150 – குன்றுங் குன்றும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும் மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் உனது திருக்கோயிலுக்குச் சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும், நற்பண்ப்டும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள்வாயாக!
இங்கு மூன்று இடங்களில் அருள் என்ற வார்த்தை வருவதைக் கவனித்து மகிழலாம்.
நின் அருள் பெற, மிக அருள் பெற, அருள்வாயே!
24) பழநி
பாவிகள் பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே
பாடல் எண் 151 – கொந்துத் தரு குழல் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாவிகளாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி, திருவருளைப் பாலிக்கும் உனது இரு திருவடிகளைத் தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக!
25) பழநி
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே
பாடல் எண் 155 – சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முன்புறத்தில் உள்ள வாசல் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருள்வாயாக!
26) பழநி
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனிய மொழி செப்பிச் சிவத்தபத மருள்வாயே
பாடல் எண் 157 – சிறு பறையும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்கம் மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயாக!
27) பழநி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த அருள்வாயே
பாடல் எண் 161 – சுருளளக பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 119
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 1
பொருளடக்கம்
நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் முதல் 26 அத்தியாயத் தலைப்புகள் :
1. பாடல்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
2. சின்னப் பெண்ணான போதிலே!
3. மன்மத லீலையை வென்றார் உண்டோ?
4. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்!
19. வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே!
20. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!
21. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா!
22. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!
23. நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்!
24. பாலும் பழமும் கைகளில் ஏந்தி!
25. ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!
26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
(அடுத்த 26 அத்தியாயங்கள் தொடரும்)
*நூலுக்கு பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நல்கியுள்ள அணிந்துரை இது:
அணிந்துரை
பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்
அந்தக் காலத்து நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியப் படைப்புகள் என்றால் சென்ற நூற்றாண்டின் திரைப்படப் பாடல்களும் இலக்கியமே. அந்தத் திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டி அவற்றின் நயத்தைச் சொல்லும் ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற இந்தப் புத்தகம் ஒரு விதத்தில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகிறது; மறு பக்கம் பார்த்தால் இது ஒரு ஆராய்ச்சி நூல்.
பாடல்களை பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், இசையின் பெருமை பேசும் பாடல்கள், சடங்குப் பாடல்கள் என்று விதம் விதமாக இனம் பிரித்திருக்கிறார் நூலாசிரியர். பல பாடல்களின் கர்நாடக இசை ராகங்களையும் பதிவு செய்திருக்கிறார். பிரபலமான திரைப்படப் பாடல்கள் மூலம் கர்நாடக இசையின் ராகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது அருமையான வழிகாட்டி நூல்.
காலத்தால் அழியாத பாடல்கள் என்று சில பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை யாவும் கர்நாடக இசையின் சாயல் கொண்டவையே.
ஶ்ரீமதி எம்.எஸ். அவர்கள் தமிழ்த்திரை உலகுக்காக 30 பாடல்கள் பாடியிருக்கிறார். ஐந்தரை நிமிடங்கள் மட்டுமே திரைப்படத்தில் நாம் காணும் பாடல் காட்சியைப் படம் பிடிக்க பத்து நாட்கள் தேவைப்படன. நடனப் பாடல்களின் சந்தம், கண்ணதாசனின் கவிதை நயம், கே.வி.மகாதேவனின் இசையமைப்புத் திறமை போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பல இடங்களில் முழுப் பாடல்களையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். பழங்காலப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஹம்மிங் செய்து பார்க்கலாம். அப்படி வாசகர்களையே ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் எல்லாத் துறை வாசகர்களுக்கும் சுவையான புத்தகம். திரைத்துறைக்கு ஒரு ஆவணம். நூலாசிரியர் ச.நாகராஜன் அவர்களை வாழ்த்துகிறேன்.
***
The collection of articles about melodies of Tamil Cinema that were published in Nilacharal E-Magazine in 52 weekly segments now takes a new form as a book! This book contains a lot of interesting details about the songs in the early period of Tamil Cinema, wonderful songs of the golden sixties, and information about lyricists, including Marudhakasi, Kannadhasan, Vali, and several others. Details about famous music directors are also included. Some significant songs are fully keyed as well in the book.
நிலாச்சாரல் மின்னிதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளியான, தமிழ்த் திரைப்படங்களின் மெல்லிசை பற்றிய தொடர் இப்பொழுது நூலாக! தொடக்க காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள், தமிழ்த் திரையுலகின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளில் வெளியான அற்புதப் பாடல்கள், கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், வாலி எனப் பாடலாசிரியர்கள் பலரைப் பற்றிய விவரங்கள், இசை அமைப்பாளர்கள் பற்றிய சுவையான விவரங்கள் என ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. முக்கியமான பல பாடல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ள இந்த நூல் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
மகாபாரதத்தை ஒரு காடு என்று கருதினால் அதில் இரண்டு பெரிய மரங்கள் உள்ளன. ஒன்று நல்ல மரம்; மற்றொன்று தீய (விஷ) மரம்; ஆதாவது முள் மரம். இந்தியாவின் பிரபல ஆங்கில எழுத்தாளரும், ஆந்திர பல்கழகத் துணைவேந்தருமான கே ஆர் ஸ்ரீனிவாச ஐயங்கார் (1908-1999) மஹாபாரத மரங்களைக் கீழ்கண்டவாறு வருணிக்கிறார்:-
யுதிஷ்டிரன்-மரம்,
அர்ஜுனன்- பெரிய கிளை,
பீமன்- வலுவான மரக் கிளைகள்
நகுல, சகாதேவர்கள் – பூக்களும், பழங்களும்
கிருஷ்ணன், முனிவர்கள் – வேர்
இதே போல எதிர் தரப்பிலுள்ள துர்யோதனாதிகளையும் அவர் ஒரு கெட்ட மரமாக வருணிக்கிறார்
துரியோதனன் -மரம்,
கர்ணன் – பெரிய கிளை,
சகுனி – வலுவான மரக் கிளைகள்
துஷ்சாசனன் – பூக்களும், பழங்களும்
திருதராஷ்டிரன் – வேர்
Jealous Duryodhana is the foul tree,
Karna is its trunk, Sakuni
Its branches, Dushasana its flowers
And fruits; and Dhrutarastra
With his unbridled mind and impulses
Sustains the underground roots.
Yudhisthira , incarnate Righteousness,
Is the fair tree, Arjuna
Its trunk, Bhima its branches; Nakula
Sahadeva its flowers , fruits;
And Krishna , Veda and the wise, the roots
Of the great Bharata tree.
–K.R.Srinivasa Iyengar
இந்த மர உருவகம் மஹாபாரதம் குறித்து ஆழமாக அறிய நமக்கு உதவி புரிகிறது.
மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம் ; பழங்கால உலகின் மிகப்பெரிய புஸ்தகம்; இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டின் என்சைக்ளோபீடியா (கலைக்களஞ்சியம் ) என்பதையெல்லாம் நாம் அறிவோம்.
உலகில் ஒரே ஒரு நூல் மட்டும்தான் தன்னைப்பற்றிப் பெருமை பேசுகிறது :
உலகிலுள்ள எல்லா விஷயங்களும் இதில் உள ;
இதில் இல்லாத விஷயங்கள் உலகில் இல
என்பது எல்லோரும் அறிந்த வாசகமே.
பராசரருக்கும் சத்யவதிக்கும் புதல்வராக அவதரித்த வேத வியாஸர் இதை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்தார். அதற்கு விநாயகப் பெருமான் எழுத்தராக இருந்து உதவி புரிந்தார். ‘மஹா’ என்றால் ‘பெரிய’. ஆங்கிலத்திலுள்ள மெகா MEGA என்ற சொல் இந்த ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்ததே ! பாரத என்றால் பாரத வம்சத்தின் கதை.
வியாசரின் அம்மா பெயர் சத்யவதி; அதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம். நிறைய பெண்களின் பெயர்கள் ‘வதி’ அல்லது ‘மதி’ என்றே முடிவடையும். சைவ இலக்கியத்தில் வரும் புனிதவதி, திலகவதி முதல் நம்ம ஊர் அடுத்த தெருவில் வசிக்கும் பார்வதி, பிரபாவதி வரை பல பெயர்களில் காணலாம். பாரதீய கலாசாரத்திற்கு வித்திட்டது மஹாபாரதம் .
மஹாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பர். ஏனெனில் ரிக், யஜுர் , சாம,அ தர்வண வேதங்களைப் பிராமணர்கள் மட்டுமே பயில முடியும்; மேலும் அதற்கு ஐந்து வயது முதல் சுமார் 25 வயது வரை மனம், மொழி, மெய் மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, வேத பாட சாலையிலேயே தங்கி,குருவுக்கு துணிமணி துவைத்துப் போட்டு சேவை செய்து பட்டம் வாங்க வேண்டும். இன்று பிராமண ஜாதிக்காரர்களே இதற்குத் தயாராக இல்லாதபோது மற்ற ஜாதிக்காரர்களை மேளதாளம் கொட்டி, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் வரமாட்டார்கள். ஏனெனில் , பெண்களை நினைத்தால் ஞாபக சக்தி வளராது; வேதங்களோ வாயமொழியாகக் கேட்டு நினைவில் வைக்கவேண்டிய தெய்வீக வாசகங்கள் !
இப்படி இருந்தால் கலியுகத்தில் வேதம் அழிந்துவிடாதா என்று கவலைப்
படாத வியாசர் நாலு சீடர்களை அழைத்து நீங்கள் 4 வேதங்களைப் பார்ப்பனர்களுக்கு கற்பியுங்கள்; அதன் ஜுஸை JUICE (ரசம்) 700 பாக்களில் வடித்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்துக்குள் நுழைத்து விடுகிறேன். அதை எல்லோரும் அறிய சுவையான கதையை எழுதி சர்க்கரைப் பூச்சு தடவிய மாத்திரையாக (sweet coated capsules) கொடுத்துவிடுகிறேன் என்று செய்யப்பட்டதே மஹாபாரதம். சுருங்கச் சொன்னால் வேதம் என்ன சொல்கிறாதோ அதையே இந்த இதிஹாசமும் சொல்கிறது.
இதிகாசம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வரலாறு என்று பொருள்; புராணமும் வரலாறுதான். உண்மையில் அவை அவ்வப்பொழுது Constantly Updated |History ‘அப்டேட்’ செய்யப்படும் வரலாறு.. ஆகையால் என்றும் பு’துமையுடன் இருக்கும் பழமை’ என்று சம்ஸ்க்ருதத்தில் செப்பினர்- புரா அபி நவம்= புராணம்= OLDER THAN THE OLDEST, BUT NEWER THAN THE NEWEST
மாணிக்கவாசகர் இதையே சிவபெருமான் வருணனையில் சேர்த்துக்கொண்டார்
இந்த நான் கிற்கும் மஹாபாரதத்தில் ஏராளமான கதைகளும் எடுத்துக் காட்டுகளும் உள .
xxxx
கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து விளையாடுவோர் அந்தப் பந்துகளை வெறுமனே தட்டுவதில்லை. பாயிண்டுகள் எடுத்துவெல்ல ஒரு குறிக்கோளை (Goal) நோக்கிச் செல்லுகின்றனர். அது போலவே இந்துக்களுக்கு 4 புருஷார்த்தங்களை வேதம் முன்வைக்கிறது . அவை தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்காகும்.
இதையே திருவள்ளுவரும் பின்பற்றி அறம், பொருள் இன்பம் — முப்பால் – என்று தனது நூலுக்கு பெயர் சூட்டினார். நாம் அதற்குத் திருக்குறள் என்று புது நாமகரணம் செய்தோம் . தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் இவை வருகின்றன – அறம் , பொருள், இன்பம்.
வீடு என்பதைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை என்ற மரபு தமிழில் பின்பற்றப்படுகிறது
xxx
புருஷ + அர்த்தம் என்றால் என்ன ?
புருஷஷ்ய அர்த்தஹ புருஷார்த்தஹ என்பது சம்ஸ்க்ருத விளக்கம்.
புருஷ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து PERSON பெர்ஸன் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது இதற்கு சம்ஸ்க்ருதத்தில் இரு பொருள் உண்டு; முதல் அர்த்தம் மனிதன் MAN ; மற்றோரு அர்த்தம் இறைவன் SUPREME BEING ; ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள, இறைவனைப் பிரபஞ்ச வடிவாக வருணிக்கும் , புருஷ ஸூக்தம் மிகவும் பிரசித்தம் . இங்கு இறைவனைக் குறிக்காது மனிதனையே குறிக்கும். அதாவது புருஷஸ்ய அர்த்தஹ புருஷார்த்தம் ; அப்படியானால் என்ன பொருள்:? மனிதர்கள் விரும்பக்கூடிய அர்த்தம்/செல்வம் என்று பொருள்.
புருஷன் என்பது எப்படி வந்தது என்பதையும் காண்போம்
பகவத் கீதையும் தமிழ் பக்திப் பாடல்களும், சித்தர் பாடல்களும் நமது உடலை ஒன்பது வாசல் வீடு navadwara puri என்று பாடுகிறது . அதை சம்ஸ்க்ருதத்தில் புரி சேதே இதி புருஷஹ என்று அர்த்தம் செய்வார்கள். இதற்கு உடல் என்னும் புரியில் வசிப்பவன் என்று பொருள்.
மஹாபாரதம் ஒரு ஒப்பற்ற இலக்கியப் படைப்பு என்று ஸ் லோகத்திலும் வருகிறது.
தரமே அர்த்தே ச காமே ச மோக்ஷே ச பரதர்ஷப
யதிஹஸ்தி ததன்யத்ர யன்னே ஹஸ்தி ந தத் க்வசித்
–மஹா பாரதம்
இந்த நூலில் காணப்படும் அறம் , பொருள், இன்பம், வீடு என்பன வேறு இடங்களிலும் கிடைக்கக்கூடியதே. ஆனால் இந்த புஸ்தகத்திலுள்ள எல்லா விஷயங்களையும் வேறு எங்கும் காண இயலாது .
தர்ம என்ற சொல்லை உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்க முடியாது. அறம் என்று தமிழில் சொன்னாலும் அது முழு வீச்சைத் தராது வீட்டு வாசலிலும் ரயில் நிலையங்களிலும் , கோவில் வாசல்களிலும் நிற்கும் பிச்சைக்காரர்கள் சாமி கொஞ்சம் தருமம் போடுங்க , சாமி என்று சொல்லுவதை பார்க்கிறோம். இதை ‘அறம் போடுங்க’ என்று மொழிபெயர்க்கமாட்டோம்.
தர்ம என்றால் என்ன ?
சம்ஸ்க்ருத மொழி வல்லுநர்கள் இதை ‘த்ர்’ என்ற சம்ஸ்க்ருத வேர்ச்ச்சொல்லில் இருந்து பிறந்தது என்கின்றனர். தாங்கு / ஆதரி என்று தமிழில் சொல்லலாம். இந்த உலகத்தையே தாங்கி நிறுத்துவது தர்மம்தான். அது அழிந்தால்- அதாவது அறநெறி அழிந்தால் –உலகம் அழிந்து போகும். இதை பகவத் கீதையிலும் (FOURTH CHAPTER OF BHAGAVAD GITA) காண்கிறோம் .
தர்மம் என்பது நான்கு ஜாதிகளுக்கும் பொது. அந்தக் கட்டுக்கோப்பு இல்லாவிடின் எல்லோரும் அழிவர்.
மஹாபாரதம் போகும் போக்கில் தர்மத்தை ஆங்காங்கு விளக்கிக் கொண்டே போகிறது
நான்கு புருஷார்த்தங்களில் — வாழ்க்கையின் குறிக்கோள்களில் /லட்சியங்களில் —எது முக்கியமானது என்று பீஷ்ம பிதாமஹரை தர்மமே வடிவான யதிஷ்டிரன் கேட்கிறான். அப்போது பீஷ்மர் உரைப்பது யாதெனில்,
தர்மத்தின் மூலமே முனிவர்கள் அக்கரையை அடைந்துள்ளனர் (பிறவிப் பெருங்கடலைக் கடந்து); உலகத்தையே தர்மம்தான் நிலை நிறுத்துகிறது. கடவுளரும் தர்மத்தினால்தான் சொர்க்கத்தில் வாழ்கின்றனர் ; தர்மத்தின் வழியில்தான் நாம் பொருளையும் தேடுகிறாம்.
அவர் சொன்னதில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ நாலும் வந்துவிட்டதைக் காணலாம்.
சம்சாரம் என்னும் கடல் அல்லது நதியைக் கடந்து அக்கரை சேர/ சொர்க்கத்துக்குச் செல்ல தர்மம் என்னும் படகு தேவை என்று சாந்தி பர்வம் இயம்பும்
தர்ம ஏவ ப்லவோ நான்யஹ ஸ்வர்கம் கச்சதம் 3-31-24
பகவத் கீதையில் படகு
பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். வள்ளுவரும் பத்தாவது குறளில் இதை எதிரொலிக்கிறார்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10
xxx
தர்மத்தைக் கடைப்பிடிக்க யாரும் துணைக்கு வரவேண்டியது இல்லை. நீயே நியாயவானாக இரு. அது போதும் என்றும் விளக்குகிறது :
ஏக ஏவ சரேத் தர்ம நாஸித் தர்மே ஸஹாயதா 12-193-32
தர்மம் பற்றி ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறது . மஹாபாரதத்திலேயே நிறைய சம்பவங்கள் தர்ம நியாயப்படி நடந்தனாவா என்று இன்றுவரை விவாதித்து வருகிறோம். ஆன்றோர் என்ன செய்கிறார்களோ, சொல்கிறார்களோ அதுவே தருமம். ஆகையால் பாம்பின் அடிச்சசுவட்டை அறிவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது தர்மத்தின் முழு இலக்கணத்தை அறிவது என்கிறது
அஹிரிவ தர்மஸ்ய பதம் துக்கம் கவேசிதம் – 12-132- 20
இறுதியாக ஒரு சில சொற்களால் முத்தாய்ப்பும் வைக்கிறது ,
யதா தர்மஸ் ததோ ஜயஹ — எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி நிச்சயம்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியும் மஹா பாரதக் கருத்தை — நோக்கத்தை, அழகாக இயம்புவான்:
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன்பேர்” என்றான்.
-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்
–subham—tags– யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை, கிருஷ்ணன்- வேர் ,
பாடல் எண் 73 – நிறுக்குஞ் சூதன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அழிவில்லாத சரவணபவ என்னும் ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள் தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள்வாயாக!
16) திருச்செந்தூர்
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனை
தந்துநீ யன்புவைத் தருள்வாயே
பாடல் எண் 74 – பங்கம் மேவும் பிறப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக!
17) திருச்செந்தூர்
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
பாடல் எண் 74 – பரிமள களப எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும் மயங்கித் திரிகின்ற அடியேனை இன்பத்துடனும் அன்புடனும் ஆட்கொண்டு அருள்வாயாக!
18) திருச்செந்தூர்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே
பாடல் எண் 82 – பூரண வார கும்ப எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை
நினைந்து காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும் படி அருள் புரிவாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 118
பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்ளில் பலவற்றின் தலைப்புகள் :
1. ஈட், ப்ரே, லவ்
2. புன்முறுவல் ரிஷி!
3. ஃபாரஸ்ட் கம்ப்
4. ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -1
ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -2
5. ஹோம் அலோன்!
6. சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 1
சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 2
7. ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்
8. காஞ்சி பரமாசார்யாள் அருள கட்டுரை: “வாழ்க்கை எனக்குப்
போதித்தது என்ன?”
9. ‘தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123’
10. வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய
ஸ்வாமிகள் – 1
வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய
People rarely find time to find great books to read and fine pictures to identify and enjoy. Here the popular writer S Nagarajan has selected the books from those he has read and useful and interesting information from the pictures for you in an informative and inspiring manner. One can read the essence of the autobiography of U V Swaminatha Iyer, “In search of God” by the Kanhangad Mahaswami Saint Ramadas, Vedic mathematics and “Loving Lord” on Sri sathya Sai Baba. One can enjoy the essence of heart rending Hollywood films EAT PRAY LOVE, FOREST CAMP” in the “PARTHATHIL RASITHTHATHU” portion of the book. A great book that helps us to improve our literary taste!
சிறந்த நூல்களைத் தேடித் தேடிப் படிக்கவோ, நல்ல படங்களை அடையாளம் கண்டு ரசிக்கவோ அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே உங்களுக்காக, தான் படித்துத் தேர்ந்தெடுத்த நூல்களிலிருந்தும் படங்களிலிருந்தும் சுவாரசியமான, பயனுள்ள பல விஷயங்களை இந்த நூலில் இனிய நடையில் தருகிறார் பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் அவர்கள். உ.வே.சுவாமிநாதையரின் என் சரித்திரம், கன்ஹன்காட் மஹான் சுவாமி ராமதாஸ் அவர்களின் கடவுளைத் தேடி, வேதக் கணிதம், ஸ்ரீ சத்யசாயிபாபாவைப் பற்றிய அன்புக் கடவுள் ஆகிய புத்தகங்களின் சாரத்தைச் சுருக்கமாக இதில் படிக்கலாம். மேலும் ஈட் ப்ரே லவ், ஃபாரஸ்ட் கம்ப் முதலான உள்ளத்தைத் தொடும் சிறந்த ஹாலிவுட் படங்களைப் பற்றிய விவரங்களையும் இந்நூலின் ‘பார்த்ததில் ரசித்தது’ பகுதியில் காணலாம். உங்கள் ரசனையை வளர்த்துக்கொள்ளப் படிக்க வேண்டிய படைப்பு!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
இமயம் முதல் குமரி வரை, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பழு மர உவமைகளைக் (Fruit Tree similes) கையாளுகின்றன. வேறு எந்த நாட்டு பழங்கால இலக்கி யத்திலும் இதைக் காண முடியாது
Xxxx
“तडागकृत् वृक्षरोपी इष्टयज्ञश्च यो द्विजः ।
एते स्वर्गे महीयन्ते ये चान्ये सत्यवादिनः ॥”
Taḍāgakr̥t Vr̥kṣaropī Iṣṭayajñaścha Yo Dvijaḥ.
Ete Svarge Mahīyante Ye Chānye Satyavādinaḥ.
தடாக க்ருத் வ்ருக்ஷரோபி இஷ்ட யக்ஞஸ்ச யோ த்விஜஹ
ஏதே ஸ்வர்க மஹீயந்தே யே சாந்யே ஸத்ய வாதினஹ
யாருக்கு சுவர்க்கம் கிடைக்கும்? உண்மை பேசுவோருக்கும், மரங்களை நடும் , குளங்களை வெட்டும், வேள்விகளைச் செய்யும் இரு பிறப்பாளருக்கு சுவர்க்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கும்..
தனக்கு நன்மை கிடைக்க வேண்டுமாயின், ஒருவர் செய்யவேண்டிய சிறந்த செயல், குளங்களுக்கு அருகில் மரங்களை நட்டு அவைகளைச் சொந்த மகன்கள் போல போற்றி வளர்க்கவேண்டும் . ஏனெனில் மரங்கள், ஒருவரின் மகன்களுக்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் செப்புகின்றன.
புராணத்தில் எவ்வளவு பயனுள்ள விஷயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டு . ஒரு மரம் பத்து மகன்களுக்குச் சமம் என்ற மத்ஸ்ய புராண ஸ்லோகத்தை முந்திய கட்டுரையில் கண்டோம். இங்கு 14 வகை மரங்களைப் பற்றி பேசப்படுகிறது. பிராமணர்களுக்கு இவை மட்டுமின்றி வேறு பல தாவரங்களை பற்றியும் தெரிந்து இருந்தது எடுத்துக்காட்டாக பிள்ளையாருக்குப் பயன்படுத்தும் 21 இலைகள்/ பத்திரங்கள் ஆகும்.
இப்போது பெரும்பாலோருக்கு மரம் எது, கொடி எது என்று கூடத் தெரியாது தாவரவியல் (Botany) தெரிந்து இருந்ததால் இந்த மரங்கள்தான் யாக, யக்ஞங்களுக்குச் சிறந்தவை என்பதை அவர்களால் சொல்ல முடிந்தது. 2000, 3000ஆண்டுகளுக்கு முன்னர் வேறு எந்த மத நூல்களிலும் இவ்வளவு விஷயங்கள் இராது. புராணங்களை ஒதுக்காமல் பாதுகாப்பது நம் கடமை.
XXX
மனுவின் “மர மண்டை”!! Green Headed Manu !
விவசாயிகளிடையே அடிக்கடி வரும் தகராறு, என்னுடைய நிலத்தின் எல்லையை மீறி நீ பயிரிட்டாய் அல்லது மாடுகளை மேயவிட்டாய் என்பதாகும். இதற்கு மனு (Manu) ஒரு அழகான யோஜனையைச் சொல்கிறார்.
லண்டனில் என் தோட்டத்துக்கு இரண்டு புறங்களில் மர பலகைகளினால் வெளி போட நான் இரண்டாயிரம் பவுன்களுக்கு மேல் செலவிட்டேன் (2020-ம் ஆண்டில்). என்னுடைய தோட்டத்தைப் பார்த்து நிற்கும்போது வலது புற முள்ள வேலி எனக்குச் சொந்தம். இடது புறமுள்ள வேலி அடுத்த வீட்டுக்காரருக்குச் சொந்தம் (in semi-detached houses or row type houses). ஆகையால் அவற்றைச் செப்பனிடுவது, பராமரிப்பது அவரவர் கடமை. பின்புறமுள்ள வேலியும் என்னுடையதே.ஒட்டியுள்ள வீடுகளில் இந்த விதி பொருந்தும். தனித்தனி வீடுகளாக (Detached Hoses) இருந்தால் முழுச் செலவும் நம்முடையதே.
அந்தக் காலத்தில் ஏதேனும் மரங்கள் அல்லது செடிகள்தான் வேலி . ஒரு செலவும் கிடையாது. இப்பொழுது அடுத்தவீட்டு, நாய், பூனை, சிறுவர் சிறுமியர் வந்து பிரச்சனை செய்யக்கூடாது என்பதற்காக தண்டச் செலவு.
விவசாய வேலி தொடர்பான சண்டைகளைத் தவிர்க்க அரசாங்கமே மரங்களையும், குளங்களையும் வேலிகளாகச் செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்ம்ருதி. மநு சொல்லாத விஷயமே இல்லை.
மன்னரானவன் ஆல மரம், அரச மரம் முள் முருங்கை , இலவம் , சால மரம், பனை மரம் ஆகியவற்றால் வேலிகளை அமைக்கலாம் என்கிறார் மநு.
8-246. Let him mark the boundaries (by) trees, (e.g.) Nyagrodhas, Asvatthas, Kimsukas, cotton-trees, Salas, Palmyra palms, and trees with milky juice- MANU SMRITI
அந்தப் பணியை ஆனி ( ஜேஷ்ட) மாதத்தில் செய்ய வேண்டும் என்றும் மநு விளம்புகிறார். ஏனெனில் அப்பொழுது நல்ல வெளிச்சம் உடைய நீண்ட பகற்பொழுது இருக்கும். எவ்வளவு பிராக்டிகலாக (Practical approach) மனு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார் என்பற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
Xxx
புறச்சூழல் வாழ்க ; அசுத்தம் செய்யாதே
नाप्सु मूत्रं पुरीष वाष्ठीवनं वा समुत्सृजेत्।
अमेध्यमलिप्तमन्यद्वा लोहतं वा विषाणि वा।”
Nāpsu Mūtraṁ Purīṣa Vāṣṭhīvanaṁ Vā Samutsr̥jet.
Amedhyamaliptamanyadvālohataṁ Vā Viṣāṇi Vā.
நாப்ஸு மூத்ரம் புரீஷ வாஷ்டிவனம் வா ஸமுத்ஸ்ருஜேத்
அமேத்யமலிப்த மன்யத்வா லோஹதம் வா விஷாணி வா
மலம், மூத்திரம் குப்பை, ரத்தம், விஷம் முதலியவற்றை நீர்நிலையில் கலக்கக்கூடாது. அவை புறச்சூழலை மாசு படுத்துவதோடு மனிதர்களின் நலனுக்கும் கேடு செய்யும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 1
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
1) விநாயகர்
இன்பரசத் தே பருகிப் – பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே
பாடல் எண் 3 – உம்பர் தரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இன்பச் சாற்றை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
2) விநாயகர்
கலவிதனில் மூழ்கி – வறிதா
கயவறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர – அருள்வாயே
பாடல் எண் 5 – விட மடைசு வேலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சுக போகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும் அறிவில்லாதவனும் ஆகிய அடியே உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளை சேர அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
3) திருப்பரங்குன்றம்
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற – அருள்வாயே
பாடல் எண் 10 – கறுக்கும் அஞ்சன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமுகுமு குமுவென்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்வாயாக!
4) திருப்பரங்குன்றம்
பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
பாடல் எண் 15 – தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
5) திருப்பரங்குன்றம்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே
பாடல் எண் 16 – பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!
6) திருப்பரங்குன்றம்
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே
பாடல் எண் 20 – வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
7) திருச்செந்தூர்
திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா – தருள்வாயே
பாடல் எண் 21 – அங்கை மென்குழலாய்வார் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நான் இங்கு நிற்கும் இந்த வீடு என்னுடையது தான், உள்ளே வாருங்கள் என்று மனப் பொருத்தம் பேசும் விலைமாதரின் மாயா லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள்வாயாக!
8) திருச்செந்தூர்
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர – மருள்வாயே
பாடல் எண் 28 – அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!
9) திருச்செந்தூர்
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட – அருள்வாயே
பாடல் எண் 32 – இரு குழையெறிந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முழுநிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
** (தொடரும்)
புத்தக அறிமுகம் – 117
ஜோதிடம் உண்மையா?
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. ஜோதிடத்தை நம்பாதே – விஞ்ஞானிகளின் அறிக்கை!
2. ஆரூட ராணி லெனார்மனா!
3. ஜீன் டிக்ஸனின் பிரசித்தி பெற்ற ஜோதிடக் கணிப்புகள்!
4. ஜங்கும் சிக்மண்ட் ப்ராய்டும்
5. ஜோதிடம் பொய்யே என்று நிரூபிக்கத் துடித்தவர்
6. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!
7. வானில் உள்ள கிரகங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
8. வியாழ கிரக ஈர்ப்பும் நர்ஸ் குழந்தை மீது ஏற்படுத்தும் ஈர்ப்பும்!
16. ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்
17. இரும்புத் திரை நாட்டில் மெடிகல் அஸ்ட்ராலஜி!
18. நியூட்டனின் பதில்!
19. உயிர்காக்கும் கலையே ஜோதிடம்!
முடிவுரை
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Everyone knows that Scientists have always been disagreed with the concept of Astrology. But this book analyses the astrology in a scientific manner. Jeane Dixon, who was a famous American astrologer was initially claimed to be fake by Michale Conklin, later accepted and astonished by her ability to predict precise astrology. He proved this by comparing the various phenomenons like the impact of The Moon in human mentality and accurate calculation of rain by Almanac and so on! A must read book, not for the believers but who would disagree with Astrology.
விஞ்ஞானிகளால் மறுக்கப்படும் கலை ஜோதிடம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஜோதிடத்தை அதே அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல் இது. அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞான பூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் என ஏராளமான தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல்! ஜோதிட ஆர்வலர்களை விட ஜோதிடத்தை நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஜோதிடம் உண்மையா?’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.