பகவத்கீதை சொற்கள் Index 14 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -14 (Post.10,269)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,269

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அவாப்யதே 12-5  அடையப்படுகின்றது

அவாப்ஸ்யத 3-11 அடைவீர்கள்

அவாப்ஸ்யஸி  2-33   அடைவாய்

அவி கம்பேந  10-7   அசைவற்ற

 அவி கார்ய: 2-25  மாற்றமுடியாதது

அவி க்ஞ்னேயம்  13-15   அறிதற்கு முடியாதது

அவித்வாம்ச: 3-25   பாமரர்கள்

அவிதி பூர்வகம் 9-23  அறியாமையால்

அவி நஸ்யந்தம் 13-27  அழியாமல் உள்ளவன்

அவி நாசி 2-17   அழிவற்றது 

அவி நாசினம் 2-21  அழிவற்றதாகவும்

அவ்யக்த நிதனானி 2-28  தோன்றாமையே முடிவையும் உடைய

அவ்யக்த மூர்த்தினா 9-4 புலப்படாத

அவ்யக்த சம்ஞகே  8-18 அவ்யக்தம் என்று சொல்லப்படும் தோன்றா  நிலையில்

அவ்யக்தம் 7-24 மாறுபாடில்லாதது

அவ்யக்த: 2-25  புலன்களுக்கு எட்டாதது

அவ்யக்தாத் 12-5    அவ்யக்தத்திலிருந்து

((அவ்யயம் என்பது கண்ணுக்கு எட்டாத, தோற்றத்திற்கு அப்பாற்பட்ட, நிர்குணப் பிரம்மம்))

அவ்யக்தாதினி 2-28  தோன்றாமை முதலாயும்

அவ்யக்த அசக்த சேதஸாம் 12-5  அவ்யக்தப் பொருளில் நாட்டங்கொண்ட

அவ்யபிசாரிணீ  13-10  முறை பிறழாத

அவ்யபிசாரிண்யா  18-33  முறை பிறழாத

அவ்யபிசாரேண 14-26 முறை பிறழாத

அவ்யஸ்ய 2-17  மாறுதல் இல்லாத  பொருளுக்கு

அவ்யயம் 2-21  மாறுபாடற்றதாக வும் 

அவ்யயா: 11-18 மாறுபாடில்லாதவன்

அவ்யயாத்மா 4-6  மாறுபாடற்றவனாகவும் 

XXX

அவ்யயாம் 2-34  மாறுபாடற்றதாகவும்

அவ்யவசாயிநாம் 2-41 நிச்சயமொன்றில்லாதவர்க்கு

அசக்த: 12-11 சக்தி இல்லை

அசம : 14-12  அமைதியின்மை

அசஸ்த்ரம்  1-46  ஆயுதமில்லாதவன்

அசாந்தஸ்ய  2-66   மன அமைதி இல்லாதவனுக்கு

அஸாஸ்வதம்  8-15  நிலையற்றது

அசாஸ்த்ரவிஹிதம் 17-5  சாஸ்திரத்தில் கூறப்படாத

அசுசி வ்ரதா: 16-10  அசுத்தமான விரதங்களை உடைய

அசுசி : 18-27 அசுத்தமானவன்

அசுசெள 16-16 அசுத்தமான

அசுபாத் 4-16  தீமையினின்று

அசுபான் 16-19 பாவிகள்

அசுஷ்ருஷவே 18-67  சேவை செய்யாதவன்

அசேஷத:: 6-24  மிச்சமின்றி

அசேஷேன 4-35  மிச்சமின்றி

அசோச்யான் 2-11  துக்கிக்கத் தகாதவர்களைக் குறித்து

அசோஷ்ய: 2-24 உலர்த்த முடியாதது

அஸ்னன் 5-8 உண்டாலும்

அச்னந்தி  9-20 அனுபவிக்கிறார்கள்

அஸ்னாமி  9-26  புசிக்கின்றேன்

அஸ்னாஸி  9-27  புசிக்கின்றாய்

அஸ்நுதே  3-4  அனுபவித்தல்

அஸ்ரத தான: 4-40 சிரத்தை இல்லாதவன்

அச்ரத்த தானா: 9-3 சிரத்தை இல்லாத

அஸ்ரத்தயா 17-28  சிரத்தையின்றி

அஸ்ருபூர்ணாகுலே க்ஷணம் 2-1 கண்ணீ ரால் மறைந்த பார்வையுடையவன்

 அஸ்ரெளஷம்  18-74  கேட்டேன்

அஸ்வத்த: 10-26 அரச மரம்

அஸ்வத்தாமா 1-8  துரோணரின் மகன்

61 words are added in this Bhagavad Gita Word Index part 14

—subham —-

tags – gita word index 14

காடுகள் பற்றி ரிக் வேத கவிதை – கொஞ்சம் என் சுய சரிதை (Post.10,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,268

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என் பெயர் சந்தானம் சுவாமிநாதன்; இப்போது எழுதும் பெயர் லண்டன் சுவாமிநாதன் ; ஆரம்பமே கோளாறு ; அதிலும் கடவுள் நன் மை செய்தான் என்றே சொல்ல வேண்டும். அப்ளிகேஷன் Passport Application நிரப்பி பழக்கமில்லை. நாகப்பட்டிணம் அருகிலுள்ள  கீழ்வளூரில் கந்த சக்ஷ்டி அன்று பிறந்ததால் பக்கத்திலுள்ள அறுபடை வீடான சுவாமிமலை சுவாமிநாதனின் பெயரை அம்மாவும் அப்பாவும் வைத்தார்கள். ஆகவே என் பெயர் சுவாமிநாதன். முதலில் சுவாமிநாதன் என்று எழுதி பின்னர் குடும்பப் பெயரான சந்தானம் (என் தந்தையின் பெயர் ) என்று நிரப்பியிருக்க வேண்டும் .

பிபிசி BBC WORLD SERVICE என்னை 1987-ல் லண்டனுக்கு தமிழோசை ஒலிபரப்பாளராக அழைத்து வந்த பின்னர் எல்லோரும் என்னை சந்தானம் என்று அழைக்கத் துவங்கினர். எனக்கு சொல்லவும் முடியவில்லை, மெள்ளவும் முடியவில்லை. திருடனுக்குத் தேள் கொட்டிய கதை ஆயிற்று. என்னை ‘சுவாமி’ என்று அழையுங்கள்; உங்களுக்கு ஈஸி easy யாக இருக்கும் என்றேன். வெள்ளக்காரப் பயல்களுக்கு ரொம்ப சந்தோஷம் ; அவர்களுக்கு எளிதில் நுழையும் பெயர்கள் — குரு , யோகா , சுவாமி, கறி , தோஸா  முதலியன .

எனக்கு சிறு வயது முதலே காடுகள், பறவைகள் என்றால் கொள்ளை ஆசை. இப்போது வயது 73. ஆயினும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தபால்தலைகளை சேகரிக்கத் துவங்கிய நான் இன்றும் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். 1961-ல் இந்திய காட்டிலாகா வெளியிட்ட நூற்றாண்டு விழா தபால் தலையையும் அதைத் தொடர்ந்து வெயிட்ட வனவிலங்கு  தபால் தலைகளையும், தூக்கம் வரும் வரை ரசித்து, ரசித்துப் பார்ப்பேன் .

ஆகையால் ரிக் வேதத்தில் வந்த அரண்யானி  (10-146) கவிதையையும் ரசித்து, ருசித்துப் படித்தேன். அதுவும் உலகிலேயே பழைய புஸ்தகமான, கவிதைத் தொகுப்பான ஒரு நூலில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவ முனி என்பவர் எழுதிய கவிதை என்றவுடன் மெய் சிலிர்த்தது.

ரிக் வேதம் கி.மு 4000 அல்லது அதற்கு முந்தியது என்பது ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் கண்ட உண்மை. முதலில் கி.மு 1200 என்று உளறிய மாக்ஸ்முல்லரை பேராசிரியர் வில்சன் போன்றோர் சொல்லால்  அடித்த அடியில், அவரும் “ஐயையோ , நான் அதற்குக் கீழாக யாரும் கொண்டுவரமுடியாது என்றுதான் சொன்னேன். ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும். யாராலும் காலத்தைக் கணிக்க முடியாது” என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

அப்பேற்பட்ட ரிக் வேதத்தில் வந்த கவிதை போல அந்தக் காலத்தில் எவரும் எழுதவில்லை. இயற்கை பற்றிய கவிதைகள் ரிக் வேதத்தில் ஏராளம். அதர்வ வேதத்தில் உள்ள பூமி சூக்தம் அதைவிடப் பிரமாதம்.

சுமார் 50 ஆண்டுகளாக ‘வேதத்தைப் பற்றி’ப் படித்து வந்தேன். அது சரி, ரிக் வேதத்தை, முடி முதல் அடி வரை, வேகமாகப் படித்து விடுவோம் என்று சொல்லி 28-4-2021ல் துவங்கினேன். தினமும் ஒரு மணி நேரம் படித்தேன் . ஆறு மாதத்தில் முடித்தேன் (24-10-21). ‘படித்தேன்’ என்றே சொல்ல வேண்டும். ‘கற்கக் கசடற’ என்று வள்ளுவன் சொன்ன வாசகம் பொருந்தாது. அப்படி “வெறுமனே படித்த பொழுது”  புஸ்தகம் முழுதும் பென்ஸிலால் என் கருத்துக்களைக் குறித்தேன். கட்டுரை எழுதுவதற்கான அதிசய விஷயங்களை பின் பக்கம் குறித்தேன்.

இது போல, இதற்கு முன் 40 ஆண்டுகளாக, கம்பராமாயணம், பன்னிரு திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம் , (திருமந்திரம், திருவாசகம் ) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சங்க இலக்கியத்தின் 18 மேல்கணக்கு நூல்கள் அனைத்தையும் படித்தேன் .அவ்வளவிலும் நான் படித்த தேதியும் பென்ஸில் கிறுக்கல்களும் இருக்கும் .

இப்படி ரிக் வேதத்தின் 10,552 மந்திரங்களையும் ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் தமிழிலும் அதற்கான ஆங்கில மூலமான கிரிப்பித்தின் (RALPH T H GRIFFITH ஆங்கில மொழி பெயர்ப்பையும் சேர்த்துப் ‘படித்தேன்’; நினைவிற் கொள்க ; ‘கற்கவில்லை’ ; ஏனெனில் வேதம் என்பது பசிபிக் சமுத்திரம். அதை யாரவது கற்றதாகச் சொன்னால் (TURN BACK AND LAUGH) அவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு வாய்விட்டுச் சிரியுங்கள்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்த 30 வெள்ளைக்காரப் பயல்களும் திரு திரு வென திருடன் முழி முழிக்கிறார்கள்; ‘எங்களுக்குப் புரியவில்லை’ என்று ALTERNATE PAGE ஒரு பக்கம் விட்டு, ஒரு பக்கத்தில் எழுதியும் விட்டார்கள்; புரிந்தது போல நடித்த மார்க்சீய வா (ந்)திகள் மட்டும் “தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று எழுதியுள்ளன ( ‘ன’ = அஃறிணைக் குறிப்பு)

அரண்யானி என்ற வன தேவதை, பற்றி தெரிந்து ரசிக்க கானகம் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். எங்கள் வீட்டில் எல்லோரும் புஸ்தகப் பைத்தியங்கள். என் தந்தை வெ சந்தானம் எங்களுக்கு வீடு, வாசல், நில, புலன்,சொத்து, பாங்கு பாலன்ஸ் BANK BALANCE எதையும் வைக்கவில்லை ; கடனும் வைக்கவில்லை. 6000 புஸ்தகங்களை காத்ரேஜ் Godrej பீரோவில் வைத்துச் சென்றார். வீட்டிற்கு வருவோர் ‘என்ன ஸார் , இது காத்ரேஜ் பீரோவில் எல்லோரும் பணம் நகை, நட்டு வைப்பார்கள்; நீங்கள்……………. “ இதற்கெல்லாம் என் அப்பாவின் புன்னகைதான் பதில் ; சொற்கள் எதுவும் வராது .

அவற்றில் நாங்கள் ரசித்துப் படித்த புஸ்தககங்கள் வங்காளி  மொழியில் விபூதி பூஷண வந்த்யோபாத்யாய எழுதிய ‘ஆரண்யக்’ என்ற புஸ்தகம் (தமிழில் த.நா. சேனாபதியின் அற்புதமான மொழி பெயர்ப்பில் வனவாசி என்று பெயர்), எம்.பி. சுப்ரமண்யம் எழுதிய ‘தேக்கடி ராஜா’, கென்னத் ஆண்டர்சன் எழுதிய ‘சிவனப்பள்ளியின் கருஞ் சிறுத்தை’ .

இவைகளைப்   பற்றி அண்ணன் தம்பிகள் மணிக்கணக்கில் விவாதிப்போம். இறுதியாக எங்கள் அம்மா சாப்பாட்டுக் கடைக்கு இறுதி மணி அடித்து எச்சரிக்கும் வரை பேசிக்கொண்டே இருப்போம்.

இதில் எங்களுக்கு EXTRA INTEREST ‘எக்ஸ்டரா’ ஆர்வம் ஊட்டியவர் ஜியாவுதீன் என்னும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் தேக்கடி- பெரியாறு அணைப்பகுதியில் காட்டிலாகா அதிகாரி; மாதத்துக்கு ஒரு முறையாவது என் தந்தையைக் கண்டு தினமணி சுடர் வார இதழில் பிரசுரிக்க கதையோ கவிதையோ தருவார். அப்போது மணிக்கணக்கில் பல கானக விஷயங்களை சொல்லுவார் . அவரை யானை விரட்டிய கதை, ஒரு ஊழியரை மலைப்பாம்பு சுற்றி வளைத்தவுடன் இவர்கள் கானக மக்களைக் கொண்டு அவரை விடுவித்த கதை, உடம்பு முழுதும் அட்டை Leehes ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உரிஞ்சும் கதை எல்லாம் சொல்லுவார். என் அப்பாவுக்கு புலித்தோல், மான் தோல் கொண்டு வந்ததாவும் நினைவு. அதை வைத்துக்கொண்டு அவர் ஜபம் செய்ததைப் பார்த்து இருக்கிறேன். என் அப்பாவுக்கு பசி வந்தால் பத்தும் பறந்து போகும். கோபத்தில் சீறுவார் .யாரோ ஒருவர் சொன்னார் ; புலித் தோலில் அமர்ந்து ஜபம் செய்தால் கோபம் அதிகமாகும் என்று ! பின்னர் மான் தோலை பயன்படுத்தி ஜபம் செய்வார். பிராமண பிரம்மச்சாரி பூணுலில் மான் தோல் இருக்கும்.

ஒருபுறம் காட்டின் வருணனை ‘வா வா’ என்று அழைத்தாலும் இரவு நேர கானக ஒலிகள், ‘சிரிக்கும் கழுதைப்புலி’ பற்றி அவர் கூறியது ஆகியன அசச்சுறுத்தும்;  இருந்த போதிலும் எங்களை காட்டுக்கு அழைத்தார். அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் தேக்கடி சென்ற போதும் தொலைவில்தான்  யானைக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. இது போல சென்னை அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் சீஸன் இல்லாதபோது போனதால் கொஞ்சம் பறவைகளைத்தான் பார்க்க முடிந்தது. இந்த ஆர்வத்தை எல்லாம் பயன்படுததி பி. எஸ் சி தாவரவியல் B Sc BOTANY படித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். வீட்டில் முருங்கைக் காய்  சாம்பார் வைத்தால் ‘மொரிங்கா ஆப்லங்கேட்டா’ போடு என்பேன். சாமிக்கு செம்பருத்தி வாங்கினால் ‘ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ்’ என்பேன். வெண்டைக்காய் கறி என்றால் ‘ஹைபிஸ்கஸ் எஸ்குலாண்ட்ஸ்’ என்பேன்.

Xxx

அரண்யானி

ஒரு வழியாக சப்ஜெக்டுக்குSUBJECT வருகிறேன். ரிக் வேத பத்தாவது மண்டலத்தில் 146 ஆவது துதியாக உள்ள அரண்யானி கவிதையை ரசிக்க ஒரு முறையாவது காட்டுக்குப் போயிருக்க வேண்டும் நான் BOTANY பாட்டனி மாணவர் என்ற முறையில் பல காடுகளுக்குச் சென்றுள்ளேன். கல்லூரிப் பேராசிரியர்கள் எங்களை பஸ்ஸில் குற்றாலம், தேன் அருவிக் காடுகள், கர்நாடக ஆகும்பே காடுகள், ஏற்காடு முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று தாவரங்களை சேகரிக்க உதவினார்கள் இது தவிர நான் மதுரைக்கு மிக அருகிலுள்ள அழகர் கோவில் மலைகள் , கொடைக்கானல், கோவை அருகிலுள்ள உதக மண்டலம்  ஆகியவற்றுக்கு பலமுறை சென்றுள்ளேன்.

‘கானகம்’ பற்றி ஜம்புநாதன் மொழிபெயர்த்ததன் சுருக்கத்தை சொல்லுகிறேன். பின்னர் இதை ஆங்கிலத்தில் இயற்கையை பற்றி எழுதிய வோர்ட்ஸ் வொர்த் WILLIAM WORDWORTH  கவிதைகளுடன் ஒப்பிடுவோம்

XXXX

ரிஷி தேவ முனி – இரம்மத புதல்வன் அரண்யானியை நோக்கிக் கூறுவது :–

1.அரண்யானியே ! காட்சியிலிருந்து மறைபவள் போலத் தோன்றும் அரண்யானியே , நீ ஏன் கிராமத்தை நாடுவதில்லை ? உன்னை அச்சம் அணுகுவதில்லையா?

2. கிறீச்சென்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கும்கால் தாளங்களைப் போல சுருதி தோன்றி அரண்யானி போற்றப்படுகிறாள்.

3. அங்கு பசுக்கள் மேயுங்கால் காடு , மனையைப் போலத் தோன்றுகிறது . மாலையிலே அரண் யானி, சகடங்களை இனி வேண்டாம் என்று நீக்கிவிட்டவள் போல் தோன்றுகிறாள்.

4.வனத்தின் தேவியே ! இங்கு ஒருவன் தன்  பசுவை அழைக்கிறான்; வேறு ஒருவன் மரத்தை வெட்டுகிறான். மாலையிலே வனத்தில் வசிப்பவன் , பறவைகளுடைய , மிருகங்களுடைய சப்தத்தைக் கேட்டு , ஏதோ திருடர்களுடைய  குரல் என்று நினைத்து பயந்து மனக் கலக்கம் அடைகிறான்

5. வனம் எவனையும் துன்புறுத்தாது . ஆனால் வேறு எதுவோ, எவனோ அவனை எதிர்க்கலாம் அங்கு வசிப்பவன் விருப்பம் போல் இனிய  பழத்தை  உண்டு அங்கே சுற்றுகிறான்.

6.நான் கஸ்தூரி மணமுள்ளவளும் , சுகந்தமாயிருப்பவளும் , பல பழம் முதலியவை ஏந்துபவளும் பயிரிடப்படாதவளும் , மிருகங்களின் தாயுமான அரண்யானியைப் போற்றுகிறேன் .

xxx

இது பழைய கால செய்யுள் நடை; விளக்கினால்தான் மஹிமை புரியும்; அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்

இதோ சம்ஸ்க்ருதத்தில் அந்தக் கவிதை

10.146.01   (Mandala. Sukta. Rik)

अर॑ण्या॒न्यर॑ण्यान्य॒सौ या प्रेव॒ नश्य॑सि ।

क॒था ग्रामं॒ न पृ॑च्छसि॒ न त्वा॒ भीरि॑व विंदती३ँ ॥

araṇyāni ǀ araṇyāni ǀ asau ǀ yā ǀ pra-iva ǀ naśyasi ǀ

kathā ǀ grāmam ǀ na ǀ pṛcchasi ǀ na ǀ tvā ǀ bhīḥ-iva ǀ vindatīm̐ ǁ

10.146.02   (Mandala. Sukta. Rik)

वृ॒षा॒र॒वाय॒ वद॑ते॒ यदु॒पाव॑ति चिच्चि॒कः ।

आ॒घा॒टिभि॑रिव धा॒वय॑न्नरण्या॒निर्म॑हीयते ॥

vṛṣa-ravāya ǀ vadate ǀ yat ǀ upa-avati ǀ ciccikaḥ ǀ

āghāṭibhiḥ-iva ǀ dhāvayan ǀ araṇyāniḥ ǀ mahīyate ǁ

10.146.03   (Mandala. Sukta. Rik)

उ॒त गाव॑ इवादंत्यु॒त वेश्मे॑व दृश्यते ।

उ॒तो अ॑रण्या॒निः सा॒यं श॑क॒टीरि॑व सर्जति ॥

uta ǀ gāvaḥ-iva ǀ adanti ǀ uta ǀ veśma-iva ǀ dṛśyate ǀ

uto iti ǀ araṇyāniḥ ǀ sāyam ǀ śakaṭīḥ-iva ǀ sarjati ǁ

10.146.04   (Mandala. Sukta. Rik)

गामं॒गैष आ ह्व॑यति॒ दार्वं॒गैषो अपा॑वधीत् ।

वस॑न्नरण्या॒न्यां सा॒यमक्रु॑क्ष॒दिति॑ मन्यते ॥

gām ǀ aṅga ǀ eṣaḥ ǀ ā ǀ hvayati ǀ dāru ǀ aṅga ǀ eṣaḥ ǀ apa ǀ avadhīt ǀ

vasan ǀ araṇyānyām ǀ sāyam ǀ akrukṣat ǀ iti ǀ manyate ǁ

10.146.05   (Mandala. Sukta. Rik)

न वा अ॑रण्या॒निर्हं॑त्य॒न्यश्चेन्नाभि॒गच्छ॑ति ।

स्वा॒दोः फल॑स्य ज॒ग्ध्वाय॑ यथा॒कामं॒ नि प॑द्यते ॥

na ǀ vai ǀ araṇyāniḥ ǀ hanti ǀ anyaḥ ǀ ca ǀ it ǀ na ǀ abhi-gacchati ǀ

svādoḥ ǀ phalasya ǀ jagdhvāya ǀ yathā-kāmam ǀ ni ǀ padyate ǁ

10.146.06   (Mandala. Sukta. Rik)

आंज॑नगंधिं सुर॒भिं ब॑ह्व॒न्नामकृ॑षीवलां ।

प्राहं मृ॒गाणां॑ मा॒तर॑मरण्या॒निम॑शंसिषं ॥

āñjana-gandhim ǀ surabhim ǀ bahu-annām ǀ akṛṣi-valām ǀ

pra ǀ aham ǀ mṛgāṇām ǀ mātaram ǀ araṇyānim ǀ aśaṃsiṣam ǁ

தொடரும்……………………………….

tags-வனவாசி, தேக்கடி ராஜா, அரண்யானி , காடுகள், கானகம், வனம்

BEAUTIFUL POEM ON FOREST IN R.V -Part 2 (Post No.10,267)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,267

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The beauty of Hinduism lies in its four stages of life-

brahmaacharya/student life,

grahasthasrama/married life,

VAANAPRASTHA/FOREST LIFE and

sanyasa/ascetic life.

Nowhere in the world you find forest life! Other three stages are there in many cultures. True to its strictures we see Kunti, Pandu, Madri, Gandhari and Dhritarashtra went to forest and died there in forest fire. All the five Pandava brothers walked through the Himalayan forests and died. We see beautiful descriptions of forests in Panchatantra Fables, Nalopaakhyaana and Yakshaprasna  and Vana Parva in Mahabaharata. Valmiki, who himself was a forest dweller, describes forests in simple and beautiful Sanskrit. Rama and Sita lived in the forests for 14 years. Sita devi spent her later life also in the forests.

The high Himalayas and the tall trees with beautiful waterfalls and rivers inspired the seers/Rishis to write Upanishads. Kalidasa in his Kumarasambhava describes the Himalayas in the first ten slokas. All these happened several thousand years before others sang about the forests. We see William Wordsworth and Oscar Wilde singing the beauty of forests in English.

xxx

Now let us compare the Rig Vedic poem with them:-

Rig Vedic (10-146) Rishi Deva Muni is singing about the beauty of the forests. Hindus give feminine names to all that is beautiful. Hindus give feminine names to all that is good. If you translate the names of Hindu girls into your language you would know that.

Here the poet describes her as Goddess, Lady and Queen of the Forest. ‘Women Zindabad’ has always been the policy of the Hindus. The poet wonders how come she is not afraid of the darkness during night. Every other person who goes to forest during daytime rushes home before sunset. He asks her (Miss Aranyaani) why you don’t come back home like other villagers.

The word ‘Aaranya’ is very important for Hindus. Unlike any other cultures in the world, Hindus have SEVEN holy forests, holy rivers, holy mountains, holy cities etc. that is the reason we see Number Seven more in Harappan Civilization. Tamils have several towns named after Aarayam/ forest such as Vedaaranyam. Another word for forest is Vana which we saw in ‘VAANA’PRASTHA. Many towns in Tamil Nadu have this name as well (My hometown Madurai is called Kadamba vanam).

In the second Mantra, the poet describes the forest sounds. Those who went to the forests only can understand it. As a student of botany, I went for plant collection with my college students and professors to thick tropical forests in Kodaikanal, Yercaud, Kutraalam and Aagumbe (in Karnataka). We have Alagar koil forest near Madurai with semi tropical condition.

As soon as you enter the forests you will hear the buzzing noise of the little insects. It is the Sruti (drone or bourdon) of the forest for its singers. In every Hindu concert we see a woman with Tambura/Tanpura creating drone or bourdon. Amidst this continuous Sruti, we hear birds singing in their own tunes.  Other animal sounds are heard more during night time. When we travel through the Ghat Road (Hill Roads) in Kodaikanal also, we hear this forest drone. Hindu literature describes the ‘animal orchestra’ inside forest in minute details.

And in the third and fourth Mantras, poet describes the sounds and what you imagine when you hear them. You imagine someone is screaming, someone whistling to bring back his cattle, someone cutting the trees. Actually, all these happen in the fringes of the forest. But deep inside the shady forest, you think that is what happening. But, they are the sounds from the streams, cataracts, animals, monkeys and squirrels.

Except R T H Griffith, I don’t think, others have lived in the forests. Griffith was in Nilgris while he translated or commented on the Vedas. So foreign translators could not do full justification in their translations.

In the next Mantra, poet describes the grace and kindness of the forest queen. She never harms anyone wantonly. She is mother who gives food to everyone free. But there are murderous enemies like robbers and tigers. Even today we read about animal attacks in the villages surrounded by forests.

Hindu religious scriptures are full of attacks of crocodiles, snakes and pythons on human beings. Tamil poems, which are 2000-year-old, describe the attacks by tiger, elephant, crocodile, pythons and robbers. They described the elephant fights inside the forest and pythons devouring elephants. Unless the Tamil poets have seen such things, they would not have used them as similes in Sangam Poems.

The last mantra (sixth) is the most beautiful one. It says the Forest Queen with motherly attitude gives food to everyone. She grows food without tilling. She has sweet scent without artificial perfumes. She is ruling the forest like a Queen without anyone anointing her. Self made, born Queen! She has herbs to heal all your mental and physical sickness.

I made these comments with my background knowledge in forests and the knowledge in other hymns on Earth, Herbs and Forest Fires in the four Vedas.

Now I want to draw your attention on only four stanzas of Wordsworth:-

“She has a world of ready wealth,

Our minds and hearts to bless—

Spontaneous wisdom breathed by health,

Truth breathed by cheerfulness.

One impulse from a vernal wood

May teach you more of man,

Of moral evil and of good,

Than all the sages can.—Tables Turned Poem

Xxx

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought:

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.—Daffodils Poem

xxx

Please continue if you want to read the full poems…….

The Tables Turned

 WILLIAM WORDSWORTH

Up! up! my Friend, and quit your books;

Or surely you’ll grow double:

Up! up! my Friend, and clear your looks;

Why all this toil and trouble?

The sun above the mountain’s head,

A freshening lustre mellow

Through all the long green fields has spread,

His first sweet evening yellow.

Books! ’tis a dull and endless strife:

Come, hear the woodland linnet,

How sweet his music! on my life,

There’s more of wisdom in it.

And hark! how blithe the throstle sings!

He, too, is no mean preacher:

Come forth into the light of things,

Let Nature be your teacher.

She has a world of ready wealth,

Our minds and hearts to bless—

Spontaneous wisdom breathed by health,

Truth breathed by cheerfulness.

One impulse from a vernal wood

May teach you more of man,

Of moral evil and of good,

Than all the sages can.

Sweet is the lore which Nature brings;

Our meddling intellect

Mis-shapes the beauteous forms of things:—

We murder to dissect.

Enough of Science and of Art;

Close up those barren leaves;

Come forth, and bring with you a heart

That watches and receives.

XXXX

I Wandered Lonely as a Cloud 

 WILLIAM WORDSWORTH

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze.

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance.

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought:

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.

Xxx

RIG VEDA

If you have missed the First Part of my article here is what Rig Veda says on Forests:-

Rig Veda Forest Poem (RV 10-146 Aranyani)

Ode to Forest Goddess

1. GODDESS of wild and forest who seemest to vanish from the sight.

     How is it that thou seekest not the village? Art thou not afraid?

2. What time the grasshopper replies and swells the shrill cicala’s voice,

     Seeming to sound with tinkling bells, the Lady of the Wood exults.

3. And, yonder, cattle seem to graze, what seems a dwelling-place appears:

     Or else at eve the Lady of the Forest seems to free the wains.

4. Here one is calling to his cow, another there hath felled a tree:

     At eve the dweller in the wood fancies that somebody hath screamed.

5. The Goddess never slays, unless some murderous enemy approach.

     Man eats of savoury fruit and then takes, even as he wills, his rest.

6. Now have I praised the Forest Queen, sweet-scented, redolent of balm,

     The Mother of all sylvan things, who tills not but hath stores of food.

xxx subham xxxx

tags — forest, vanaprastha, aranya, vana, wordsworth, rigveda, RV 10-146

ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 3 (Post No.10,266)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,266

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 3

ஜோதிடர், மருத்துவர், கவிஞர், மனைவியின் பிறந்தக உறவினர் என்று அனைவருமே இவரது பாடல்களுக்குத் தப்பவில்லை.
இன்னும் சில நையாண்டிப் பாடல்கள் இதோ:-
 
आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।
जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६ ॥
 

ஜோதிடர் ஒருவரிடம் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி ஜோதிடம் கேட்டால், அவர் நீண்ட நாள் வாழ்வார் என்று சொல்ல வேண்டும். அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஜோதிடரைப் பற்றி உயர்வாக நினைப்பார். அவர் செத்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் உயிருடன் இருந்தால் தானே! (பாடல் 16)

भैषज्यं तु यथाकामं पथ्यं तु कठिनं वदेत् ।
आरोग्यं वैद्यमाहात्म्यादन्यथात्वमपथ्यतस् ॥ २५ ॥

ஒரு மருத்துவர் தனது இஷ்டம் போல தனது நோயாளிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் கூடவே சொல்லி விட வேண்டும். நோயாளி ஒரு வேளை குணமாகி விட்டால் அதற்கான புகழை மருத்துவரின் திறமையே காரணம் என்று சொல்லிப் பெற முடியும். ஒருவேளை நோயாளி குணமடையாவிட்டால் அவர் தான் சொன்னபடி பத்தியமாக இருக்க வில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்!   (பாடல் 25)

लिप्समानेषु वैद्येषु चिरादासाद्य रोगिणम् ।
दायादाः संप्ररोहन्ति दैवज्ञा मान्त्रिका अपि ॥ २९ ॥
 

ஒரு மருத்துவர் தொடர்ந்து தன்னிடம் சிகிச்சை பெறும் நீடித்த நோயுடைய ஒருவரிடமிருந்து பணம் பெற நினைக்கும் போது அவர் இன்னும் இரண்டு பேரை நோயாளியிடமிருந்து பண வசூல்  செய்வதைப் பார்ப்பார். ஒருவர் ஜோதிடர். இன்னொருவர் மந்திரவாதி!   (பாடல் 29)

स्तुतं स्तुवन्ति कवयो न स्वतो गुणदर्शिनस् ।
कीतः कश्चिदलिर्नाम कियती तत्र वर्णना ॥ ३५ ॥

ஒரு கவிஞர் தனது சொந்த கவித்வம் இல்லாமல், பல விஷயங்களைப் பற்றி தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களால் வர்ணிக்கப்பட்டவற்றையே வர்ணிப்பார். தேனீ என்ற ஒரு பூச்சி வகை இருக்கிறதல்லவா! அதைப் பற்றித் தான் எவ்வளவு பிரம்மாண்டமான விவரங்களைப் பார்க்க முடிகிறது!   (பாடல் 35)

गृहिणी भगिनी तस्याः श्वशुरौ श्याल इत्यपि ।
प्राणिनां कलिना सृष्टाः पञ्च प्राणा इमेऽपरे ॥ ४१ ॥

      இந்தக் கலியுகத்தில் வாழ்வை நீட்டிக்கும் ஐந்து பிராண சக்திகள் – மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் சகோதரர், அவளது பெற்றோர் ஆவர்     (பாடல் 41)

ज्ञातेयं ज्ञानहीनत्वं पिशुनत्वं दरिद्रता ।
मिलन्ति यदि चत्वारि तद्दिशेऽपि नमो नमस् ॥ ९७ ॥
 
உறவினர்கள், ஞானஹீனர்கள், வம்பு பேசுபவர்கள், தரித்திர நிலையில் உள்ளவர்கள், ஆகிய இந்த நால்வரின் கூட்டு இருக்கும் திசைக்கே நமஸ்காரம் நமஸ்காரம். (பாடல் 97)
அடுத்து நவரஸங்களையும் கொண்ட மஹாகாவியம் சிவலீலார்ணவத்திலிருந்து ஓரிரு துளிகளைப் பார்ப்போம். 
சிவபிரானின் அருள் திரு விளையாடல்களைக் கூற வந்த இவருக்கு ஸ்காந்த புராணத்தில் வரும் ஹாலாஸ்ய மாஹாத்மியம் ஆதாரமாக உள்ளது. 22 காண்டங்கள் கொண்டது இந்த நூல். முதல் 11 காண்டங்களில் 999 செய்யுள்களையும் அடுத்த 11 காண்டங்களில் இன்னொரு 999 செய்யுள்களையும் ஆக இரண்டாயிரத்திற்கு இரண்டு செய்யுள்கள் குறைவாக 1998 அரும் செய்யுள்களைக் கொண்டுள்ளது இந்த அற்புத காவியம்.
முக்கியமாக சாந்த ரஸத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த நூலில் சப்தாலங்காரம், அனுப்ராஸம், உவமை, யமகம், ரூபகம், சிலேடை உள்ளிட்ட ஏராளமான யாப்பிலக்கணச் சிறப்புக்கள் உள்ளன.
 
 
தக்ஷிண ஜாஹ்னவீ - தென் கங்கை - எனக் கூறப்படும் தாமிரவர்ணியின் சிறப்பைக் கூறும் போது எப்படி கங்கையில் நீராடுபவர்கள் முக்தா என்ற வீடு பேற்று நிலையை அடைகிறார்களோ அதே போல தாம்ரவர்ணியை அடைந்தவர்களும் முக்தா - முத்துக்களாகி- விடுவதால் இதுவும்  முக்தாவைத் தருகிறது என்கிறார்.
 
 
கடகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு நண்டு என்ற பொருளும் நகர் என்ற பொருளும் உண்டு. பஞ்சத்தில் இருந்த ராஜேந்திர பாண்டியனின் நகரை சூரியன் கடகராசியில் புகுந்த போது, சோழ மன்னன் முற்றுகையிட்டான் என்கிறார். கடகம் என்ற சொல்லை கடக ராசி என்றும் பாண்டியனது நகர் என்றும் இரு பொருள் படக் கூறுகிறார். இப்படி ஏராளமான நயங்கள் இவரது காவியத்தில் உள்ளன. 
 
 
இவரது நூல்களைப் படிப்போர்க்கு இவர் சகுன சாஸ்திரம், ஜோதிடம், வானவியல், வாஸ்து சாஸ்திரம், ஆயுர்வேதம், நடனம், இசை உள்ளிட்ட அனைத்துக் கலைகள், ரத்ன சாஸ்திரம், நீரியல் (Hydrology), யுத்தக் கலை, அரசியல் ராஜதந்திரம் சமையல் கலை எனப்படும் பாக சாஸ்திரம், வேத, புராண, இதிஹாஸ ஞானம் உள்ளிட்டவற்றில் இவர் பெரும் வல்லுநர் என்பது உடனே புரிந்து விடும். 
 
 
நீலகண்ட தீக்ஷிதரின் நூல்கள் பெருமளவில் பாரத மக்களைச் சென்றடையவில்லை என்றே கூற வேண்டும். இவற்றின் சிறப்புக்களை வெகுஜன அளவில் கொண்டு சேர்ப்பதை ஒவ்வொருவரும் தனது கடமையாகக் கொண்டால் இவரது ஆழ்ந்த ஞானத்தால் நமது தேசம் இன்னும் மேலே உயரும் என்பதில் ஐயமில்லை.
  வாழ்க நீலகண்டதீக்ஷிதர் திரு நாமம்.
தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவக்கும் இறைவா போற்றி.
நன்றி வணக்கம்!
*** 


முற்றும் 
TAGS- நீலகண்ட  தீட்சிதர், விஜய சம்பு , கங்காவதரணம்
 

பகவத்கீதை சொற்கள் Index 13 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -13 (Post No.10,265)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,265

Date uploaded in London – 27 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அயோகத: 5-6 (அ யோகதஹ)- யோகத்தாலன்றி ; யோகம் இல்லாத

அரதி : (அரதிஹி) 13-10 விரும்பாமை, வெறுப்பு

அரோக த்வேஷத: 18-23 விருப்பு, வெறுப்பு இல்லாமை

அரிசூதன – 2-4 கிருஷ்ணனின் பெயர்; பகைவரை ஒழிப்போன்

அர்ச்சிதும் 7-21 வழிபடுவதற்கு ,பூஜிப்பதற்கு

அர்ஜுன : 1-47 பாண்டவர்களில் மூன்றாமவன்

அர்த்தகாமான் 2-5 செல்வத்துக்கு ஆசைப்படுவோன்; பொருளையும் இன்பத்தையும் விரும்பும்

அர்த்த வ்யபாஸ்ரய: 3-18 பயனைக் கருதி நாடத்தக்கது; எந்த ஒரு பொருளிலும் பற்று வைத்தல்

அர்த்த சஞ்சயான் 16-12 செல்வத்தைக் குவிக்க

அர்த்த : 2-46 உபயோகம்

அர்த்தார்த்தி 7-16 செல்வத்தில் நாட்டமுடைய 

அர்த்தே  1-33 பொருட்டு

அர்ப்பணம் 4-24 அர்ப்பணமாக கொடுத்தல்

london swaminathan sanskrit certificate

அர்ப்பித மனோபுத்தி: 8-7 மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்து

அர்யமா 10-29  நீத்தார் தேவதை; பித்ருக்கள் தலைவர்

அர்ஹதி  2-17 அருகதை, தகுதி உடைய

அர்ஹஸி  2-25  உரியவன்

அர்ஹா : (அர்ஹாஹா ) 1-37 தகுதி உடையவர்கள்

அலசஹ  18-28  சோம்பேறி

ஆலோலுப் த்வம்  16-2 பிறர்பொருள் நயவாமை

அல்ப புத்தய : 16-9  சின்ன புத்தி உடையவர்கள்

அல்ப மேதஸாம்  7-23 அல்ப மதியுடைய; அதிக ஞானம் இல்லாத

அல்பம் 18-22 சின்ன, சிறுமை , அற்பத்தனமான

அவகச்ச  10-41 அறி , தெரிந்து கொள்

அவ ஜானந்தி 9-11 புறக்கணி , அவமதிக்கிறார்கள்

அவஞாதம்  17-22  , அவமானப்படுத்தி, அவமதிப்புடன்

அதிஷ்டதி  14-23 நிலைபெயராது நிற்றல்

அவதிஷ்டதே  6-18 ஊன்றி நிற்கிறதோ

அவத்ய : 2-30 கொல்லப்பட முடியாது; மரணமில்லாதவன்

அவனிபால சங்கை: (சங்கைஹி) – 11-26 உலகாளும் அரசர்கள் குழு

london swaminathan Bhavad Gita Certificate

அ வரம் 2-49 கீழான, கீழ்த்தரமான

அவசம்  9-8 தன் வசமில்லாது

அவச: 3-5 தம்மை அறியாமல் ; நிர்பந்தத்தின் கீழ்

அவசிஷ்யதே 7 -2 மிஞ்சியிருத்தல்

அ வஷ்டப்ய 9-8  வசப்படுத்திக்கொண்டு, அடக்கி ஆளுதல்

அவ்சாதயேத்  6-5 தாழ்த்திக்  கொள்ளுதல்

அவஸ்தாதும் 1-30  நிற்பதற்கும்

அவஸ்திதம்  15-11 உறைந்திருப்பவனாய்

அவஸ்தித: 9-4 இருப்புடையவன்

அவஹாஸார்த்தம் 11-42 வேடிக்கையாக

அவச்யவாதான் 2-36 தகாத சொற்களால்

அவாப்தவ்யம் 3-22 அடைவதற்கு உரிய

அவாப்தும் 6-36 அடைவதற்கு

அவாப்னோதி 15-8 அடைகிறான்

அவாப்ய  2-8 அடைந்தும்

45 WORDS ARE ADDED IN THIS 13TH PART

TO BE CONTINUED………………………………………………….

tags –  gita word index 13, london swaminathan, Bhavad Gita Certificate

BEAUTIFUL POEM ON FOREST IN THE OLDEST BOOK IN THE WORLD (RV 10-146) – Post No.10,264

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,264

Date uploaded in London – 27 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Partly Autobiography of London Swaminathan)

RIG VEDA is the oldest anthology in the world, oldest religious scripture in the world. Though I have been reading ‘about’ it for 60 years, I ‘read’ it fully in 2021.  I started ‘reading’ it on 28-4-2021 and finished it on 24-10-21. It took me nearly six months to ‘read’ it in Tamil (M R Jambunathan’s Translation). It contains over 1020 hymns and 10,552 mantras. Even the people who have ‘translated’ them added ‘we don’t understand, it is obscure, the meaning is not clear, probably it mans, perhaps the seer says. I only read it; not studied it or fully understood it. But it makes very interesting reading. I read it only one hour every day scribbling with pencil all through the pages.

I would tell all my friends to read it at least once. Please start with Asvins or Viswedevas; full of miracles and full of history. Reading is easy; for studying it or understanding it you need Hindu mindset. You need to be a Hindu in spirit, not necessary  religiously Hindu. Above all you must believe what Hindus believed at least 6000 years ago. That is the date given to the Rig Veda by Herman Jacobi and Bala Gangadhara Tilak. Max Muller gave it any date over 1500 BCE. Prof. Wilson and others dated it around 2000 BCE.

It has ten books. As you reach the final book (No.10), it becomes more interesting. A lot of subjects are discussed there. From Big Bang Theory to birds and animals in the forest. THE RV ends with a beautiful Nationaal Anthem for the UNO (united nations organisation)

xxx

BEAUTIFUL FOREST (RV 10-146 Aranyani)

As a nature lover, I have been reading books on Nature for the past 50 years. I started collecting stamps from very early age. Now at the age of 73, still I collect stamps. I was fascinated by the forest stamp issued in India in 1961. I used to look at it for hours along with the wild life stamps issued by India immediately after that in 1963.

xxxx

Aranyak or Vanavasi by Bibhutibhushan Bandhyopadhyay

All our brothers used to read Vanavasi/Aranyak by Bibhutibhushan Bandhyopadhyay, Thekkadi Raja by M.P.Subhrahmanyan, Blackpanther of Sivanipalli by Kenneth Anderson etc and discuss them for hours and hours.

Then came Ziaudeen or Jiyawodeen into our life . He was a Forest Ranger in Thekkadi area and used to come to see my father V Santanam, News Editor, Dinamani, Madurai, to give his poems or stories to be published in Dinamani Sudar Weekly Supplement. He used to tell us all the adventures he did in the Periyar Dam area; we would listen to him for hours with open mouth in amazement. He used to tell how he escaped from a chasing elephant, how they saved a person from the python that tightened its grip on him, the leeches that stuck to his body sucking blood etc. In spite of this scary things, he encouraged us to visit him in the forest.

Unfortunately when I went to Thekkadi on my own several years after this I could only see some elephants at a distance, nothing else. To do RSS propaganda, I went to Kambam, from there to Kumuli and Thekkadi. When I visited Vedanthangal bird Sanctuary near Chennai, I could see only a few hundred birds, because I went there out of season. All due to over enthusiasm.

Malgudi Days of R K Narayan (in India) and BBC documentaries (in UK from 1987) also made me to stick to TV like a leech.

So the stamps and books on Nature hooked me to forests and plants. This made me to take Botany as major subject in my B.Sc course in Madurai University.

Then came the poems of William Wordsworth Daffodils and The Tables Turned. I memorised them and recited them so many times. When I recited it in my dream, my family listened to it and laughed and gave me the nick name ‘Daffodils’! I knew only about it when I woke up in the morning.

xxx

Now to Rig Veda Forest Poem (RV 10-146 Aranyani)

With this background, I read the poem on Aranyani in the Rig Veda a few days back.

Here is the poem:- Ode to Forest Goddess

1. GODDESS of wild and forest who seemest to vanish from the sight.

     How is it that thou seekest not the village? Art thou not afraid?

2. What time the grasshopper replies and swells the shrill cicala’s voice,

     Seeming to sound with tinkling bells, the Lady of the Wood exults.

3. And, yonder, cattle seem to graze, what seems a dwelling-place appears:

     Or else at eve the Lady of the Forest seems to free the wains.

4. Here one is calling to his cow, another there hath felled a tree:

     At eve the dweller in the wood fancies that somebody hath screamed.

5. The Goddess never slays, unless some murderous enemy approach.

     Man eats of savoury fruit and then takes, even as he wills, his rest.

6. Now have I praised the Forest Queen, sweet-scented, redolent of balm,

     The Mother of all sylvan things, who tills not but hath stores of food.

I will compare it with Daffodils, The Tables Turned- both by William Wordsworth and a few other poms on Forest by Oscar Wilde and others in the next part. This is not the only poem on Nature in the RV. The whole world knows the humorous poem on Frogs. A lot of poems on Forest Fire and Dawn (Lady Usha) re there for Nature lovers.

xxx

Same Poem in Sanskrit……………………….

10.146.01   (Mandala. Sukta. Rik)

अर॑ण्या॒न्यर॑ण्यान्य॒सौ या प्रेव॒ नश्य॑सि ।

क॒था ग्रामं॒ न पृ॑च्छसि॒ न त्वा॒ भीरि॑व विंदती३ँ ॥

araṇyāni ǀ araṇyāni ǀ asau ǀ yā ǀ pra-iva ǀ naśyasi ǀ

kathā ǀ grāmam ǀ na ǀ pṛcchasi ǀ na ǀ tvā ǀ bhīḥ-iva ǀ vindatīm̐ ǁ

10.146.02   (Mandala. Sukta. Rik)

वृ॒षा॒र॒वाय॒ वद॑ते॒ यदु॒पाव॑ति चिच्चि॒कः ।

आ॒घा॒टिभि॑रिव धा॒वय॑न्नरण्या॒निर्म॑हीयते ॥

vṛṣa-ravāya ǀ vadate ǀ yat ǀ upa-avati ǀ ciccikaḥ ǀ

āghāṭibhiḥ-iva ǀ dhāvayan ǀ araṇyāniḥ ǀ mahīyate ǁ

10.146.03   (Mandala. Sukta. Rik)

उ॒त गाव॑ इवादंत्यु॒त वेश्मे॑व दृश्यते ।

उ॒तो अ॑रण्या॒निः सा॒यं श॑क॒टीरि॑व सर्जति ॥

uta ǀ gāvaḥ-iva ǀ adanti ǀ uta ǀ veśma-iva ǀ dṛśyate ǀ

uto iti ǀ araṇyāniḥ ǀ sāyam ǀ śakaṭīḥ-iva ǀ sarjati ǁ

10.146.04   (Mandala. Sukta. Rik)

गामं॒गैष आ ह्व॑यति॒ दार्वं॒गैषो अपा॑वधीत् ।

वस॑न्नरण्या॒न्यां सा॒यमक्रु॑क्ष॒दिति॑ मन्यते ॥

gām ǀ aṅga ǀ eṣaḥ ǀ ā ǀ hvayati ǀ dāru ǀ aṅga ǀ eṣaḥ ǀ apa ǀ avadhīt ǀ

vasan ǀ araṇyānyām ǀ sāyam ǀ akrukṣat ǀ iti ǀ manyate ǁ

10.146.05   (Mandala. Sukta. Rik)

न वा अ॑रण्या॒निर्हं॑त्य॒न्यश्चेन्नाभि॒गच्छ॑ति ।

स्वा॒दोः फल॑स्य ज॒ग्ध्वाय॑ यथा॒कामं॒ नि प॑द्यते ॥

na ǀ vai ǀ araṇyāniḥ ǀ hanti ǀ anyaḥ ǀ ca ǀ it ǀ na ǀ abhi-gacchati ǀ

svādoḥ ǀ phalasya ǀ jagdhvāya ǀ yathā-kāmam ǀ ni ǀ padyate ǁ

10.146.06   (Mandala. Sukta. Rik)

आंज॑नगंधिं सुर॒भिं ब॑ह्व॒न्नामकृ॑षीवलां ।

प्राहं मृ॒गाणां॑ मा॒तर॑मरण्या॒निम॑शंसिषं ॥

āñjana-gandhim ǀ surabhim ǀ bahu-annām ǀ akṛṣi-valām ǀ

pra ǀ aham ǀ mṛgāṇām ǀ mātaram ǀ araṇyānim ǀ aśaṃsiṣam ǁ

To be continued………………….

This image has an empty alt attribute; its file name is AVvXsEiiTfywm1AgLHJcigF_GGt2xsiuPAJP4fFQMfK3OVGjPGunFzdeUfVsqToqBivTKxNYcOOVcvP5euCLMZv8JwoZPVljIWwtdG0uiuAyCcLcOJhqjNp4bnhuvlfT5_f1GotN-ZpNYIbqPYTLQQWDXvjYSIiHGtWXRh5eWobCInZZOrTIBHXbvwQj1CBmyQ=w464-h718

tags- Forest, Aranyani, Rig Veda, My autobiography, London swaminathan

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 2 (Post No.10,263)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,263

Date uploaded in London – 27 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 2

தீக்ஷிதர் கண்களை இழந்த நிலையில் தேவியை அற்புத ஸ்லோகங்களால் துதி செய்ய ஆரம்பித்தார். “தேவியே! உனது கருணையால் உனது பாதாரவிந்தங்களைக் காண்பித்தாலும் அதை எந்தக் கண்களால் பார்ப்பேன்” என்று பாடி உருகினார். எல்லையற்ற கருணை கொண்ட தேவி உடனே அவருக்குப் பார்வையைத் தர உலகமே இந்த அற்புதத்தால் வியந்தது. மன்னரும் அவரது தவ வலிமையை முற்றிலுமாக உணர்ந்து கொண்டார்.

அவர் பாடிய இந்த அற்புத நூலே ஆனந்தஸாகரஸ்தவம் என்னும் நூலாகும். இதில் அனைத்தையும் விட்டு விட்டு தன்னை தேவியிடம் ஒப்படைத்து விட்டு சரணாகதி அடைகிறார் அவர்.

மன்னர் சேவை போதும் என்ற முடிவுக்கு வந்த அவர் திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில்  தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள பாலாமடை என்ற ஊருக்கு வந்து அங்கேயே தங்கலானார். மன்னர் திருமலை நாயக்கர் இந்த கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும அவருக்கு மானியமாக அளித்தார். அரசு ஆவணங்களில் இந்த ஊருக்கு நீலகண்ட சமுத்திரம் என்ற பெயர் இருக்கிறது.(See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).

இந்த கிராமத்தில் தனது இறுதிக்காலத்தைக் கழித்த போது சந்நியாச ஆஸ்ரமத்தை மேற்கொண்ட அவர் ஒரு மார்கழி மாத சுக்ல அஷ்டமியில் ஜீவ சமாதி அடைந்தார். இவரது சமாதியின் மேல் தீக்ஷிதரே காசியில் இருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் காசி விசாலாட்சியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் திருநெல்வேலிப் பக்கம் விஜயம் செய்யும் போது பாலாமடை சமாதிக்கு வருகை புரிவதை ஒரு நியதியாகக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ தீக்ஷிதரின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீ  நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் சார்பில் ஜென்ம தினம், நினைவு தினம் கொண்டாடப்படல், அவரது நூல்களை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு நித்ய பூஜையும் நடைபெற்று வருகிறது.

இவரது பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், கற்பனை நயம், நையாண்டி, அறிவியல் நோக்கில் விளக்கம், ஆழ்ந்த தெய்வ பக்தி, தனது சொந்த அனுபவங்களின் தொகுப்பு, மகான்களின் பெருமை உள்ளிட்ட ஏராளமானவற்றை உணர்ந்து ரஸிக்கலாம். நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியதாக 18 நூல்கள் உள்ளன. மஹாகாவியம் என்ற வகையில் சிவலீலார்ணவா, கங்காவதரணம், முகுந்தவிலாஸம் ஆகிய மூன்று நூல்களும், நாடகம் என்ற துறையில் நளசரித்ரமும் சம்பு நூல் வரிசையில் நீலகண்ட விஜய சம்பு என்ற நூலும், கவிதை நூல்களில் அன்யாபதேச சதகம், கலிவிடம்பனம், சபாரஞ்ஜன சதகம், சிவோக்தகர்ஷ மஞ்சரி,  சிவதத்வ ரஹஸ்யம், ஆனந்தஸாகரஸ்தவம், சண்டிரஹஸ்யம், ரகுவீரஸ்தவம், குருதத்வமாலிகா, வைராக்ய சதகம், சாந்தி விலாஸம் ஆகிய பத்து நூல்களும், சமய சம்பந்தமான நூல்களுள் சௌபாக்ய சந்த்ராதபா என்ற நூலும் பாஷ்ய நூல்களுள் கையடரின் மஹாபாஷ்யப்ரதீபத்திற்கான ப்ரகாஸா என்ற நூலும் ஆக இப்படி 18 நூல்கள் அவரால் இயற்றப்பட்டவையாகும். இவரது நூல்களின் பெருமையை ஒரு சிறு உரைக்குள் அடக்கி விட முடியாது. எனினும் ஓரிரு துளிகளை மட்டும் இங்கு பார்த்து ரஸிப்போம்.

பாடல்களில் நையாண்டிப் பாடல்கள் தனி ரகம். அதைப் பாட தனித் திறமை வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அபரிமிதமாக இருக்கும் போது இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவது சுலபமான விஷயம்.
ஆனால் பழைய கால மன்னர் ஆட்சியில் நீலகண்ட தீக்ஷிதர் இப்படிப்பட்ட கவிதைகளைக் கொண்ட அற்புதமான கலி விடம்பனா என்ற நூலை இயற்றியுள்ளார். நூறு பாடல்களைக் கொண்ட இதில் நையாண்டிக்குப் பஞ்சமே இல்லை. கலியுகத்தில் நடக்கும் கூத்துக்களை நையாண்டி செய்யும் அவரது பாக்கள் இன்றைய நிலைக்கு அப்படியே பொருந்துவது மிகவும் வியப்பூட்டும் ஒரு உண்மை! இதில் நூறு பாக்கள் உள்ளன.
  கலிவிடம்பனாவில் 76வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது.

   பணக்கார பிரபுவிடம் ஒரு ஏழை பிச்சைக்காரன் யாசகத்திற்கு வருகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறார் கவிஞர். அவன் முகத்தில் ஒரே கவலை தெரிகிறது. அவன் கவலை அவருக்குப் புரிகிறது. யாசகம் கேட்கிறோமே, பிரபு என்ன தருவான், எவ்வளவு தருவான், தருவானா என்றெல்லாம் அவனுக்குக் கவலை. அது புரிகிறது கவிஞருக்கு. 

 ஆனால் பணக்காரனைப் பார்த்தால் அவன் முகத்திலும் கவலை. அவனுக்கு என்ன கவலை? கவிஞர் வியக்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். கலியுகத்தின் அவலத்தை நினைத்து ஒரு பாடலைப் பாடுகிறார். பாடல் இது தான்:-

கிம் வக்ஷ்யதீதி தனிகோ யாவதுத்விஜதே மன: |

கிம் ப்ரக்ஷ்யதீதி லுப்தோ(அ)பி தாவதுத்விஜதே தத: ||

(தனிகன் – பணக்காரன்)                                                                                                                                                பிச்சை கேட்க வந்தவன் என்ன கேட்கப் போகிறானோ என்று பணக்காரனுக்குக் கவலை; அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று கேட்க வந்தவனுக்கும் கவலை!

ஆக இருவருக்கும் கவலை! இது தானோ கலியுகம் என்பது?!

                       *                  தொடரும்

tags- நீலகண்ட தீக்ஷிதர் – 2

பகவத்கீதை சொற்கள் Index 12 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -12 (Post 10,262)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,262

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அமானித்வம் 13-7 தற்பெருமையின்மை ,அடக்கம், பணிவு

அமித விக்ரம: 11-40 எல்லையில்லாத/ அளவிலாத துணிவு

அமீ  11-21 இவைகள்

அமுத்ர 6-40 மறுமையில் , இனிமேல்

அமூடா : 15-5 புத்திசாலிகள், அஞ்ஞானம் ஒழிந்தவர்கள்

அம்ருதத்வாய 2-15 மரணமிலா பெருநிலை அடைய

அம்ருதஸ்ய  14-27 அழிக்க முடியாத

அம்ருதம் 9-19  இறவாத நிலை , சாகாமை

அம்ருத உத்பவம்  10-27 அமிர்தத்திலிருந்து தோன்றும்

அம்ருதோபமம்  18-37  அம்ருதத்துக்கு ஒப்பான

அமேத்யம் 17-10 யாகத்திற்கு ஒவ்வாத, ஏற்றதல்லாத

அம்புவேகா: 11-28 விரைந்ததோடும்

அம்பஸா 5-10 தண்ணீரில் உள்ள

அம்பஸி  2-67 தண்ணீர் மீது

அ யஜஸ்ய 4-31 யாகம் செய்யாத

அ யதி : 6-37 முயற்சியில்லாத , உற்சாகமில்லாத

அயதாவத் 18-31 உள்ளபடி  இல்லாத , தவறாக

அயனேஷு 1-11 படைப் பிரிவில்

அயச : 10-5 புகழின்மை , அபகீர்த்தி

அயம் 2-19 இந்த ஆத்மா

அயுக்தஸ்ய – 2-66 நிலையற்ற , ஒருமுக மனதில்லாத,

அயுக்த: 5-12  கர்ம யோகம் செய்யாத

22 words are added here in Bhagavad Gita Word Index

tags – Gita word index 12

பேயை விரட்ட ஈயம்! நோயை ஒழிக்க ஈயம்! அதர்வ வேதம் சிபாரிசு! (10,261)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,261

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் மிகப் பழமையானது; யஜுர் வேதம் ,சாம வேதம் அதைத் தொடர்ந்து வந்தன. கடைசியாக அதர்வண வேதம் வந்தது என்பது வெள்ளைக்காரன் கணக்கு. ஆனால் இந்துக்களோ , வேதங்கள் நான்கையும் நமக்கு வகுத்து, தொகுத்துத் தந்தவர் வேத வியாசர் என்பதில் ஒருமித்த கருத்துக்  கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல அந்த வேத வியாஸருக்குப் பின்னர்தான் கலியுகம் உதித்தது என்று சொல்லி பஞ்சாங்கமும் வெளியிட்டு அதில் கி.மு 3102-ல் கலியுகம் தோன்றியதையும் வருஷம் தோறும் எழுதி வருகின்றனர். இதை மாயன்  நாகரீகம், சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம் ஆகியனவும் முக்கியமாகக் கருதுகின்றன. மாயா நாகரீக காலண்டரும் அப்போதே துவங்குகிறது. மற்ற இரண்டு  நாகரீகங்களில் முதல் மன்னன் மனு அப்போது ஆண்டதாக எழுதுகின்றன. மனு என்பதைக் கொஞ்சம திரித்து மெனஸ் (Menes)  என்றெல்லாம் எழுதுவார்கள். ஆகவே நான்கு வேதங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதுதான் இந்துக்களுடைய கருத்து.

வெள்ளைக்காரர்கள் இந்து மத விரோதிகள்; இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள். அதை நம்பாதவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுவோம்.

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியம் முழுதும் நான்மறைகள் – ‘4 வேதங்கள்’ – என்றே பகரும்; ஏனெனில் அவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுந்த படைப்புகள். அவற்றுக்கும் முந்திய உப நிஷத்துக்கள் புத்தருக்கும் முந்தியவை. அவற்றில் மூன்று வேதங்கள் என்ற சொற் றொடர் பெரும்பாலும் வரும். காரணம் என்னவெனில் யாக யக்ஞங்களில் அதர்வண வேதத்துக்கு அதிகம் வேலை இல்லை. ஆயினும் அதில்தான் ஏராளமான ரகசியங்கள், மருத்துவ விஷயங்ககள் , எதிரிகளை மாய மந்திரத்தால் ஒடுக்கும் விஷயங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல; ஆன்மீக விஷயங்களைக் கூறும் முண்டக , மாண்டூக்ய உப நிஷதங்களும் அதர்வண வேதகக்காரர்களால் உருவாக்கப்பட்டனவே.

ஈயத்தின் (Lead) மஹத்துவம்

 அதர்வண வேதத்தின் இரண்டு துதிகளில் ஈ யம் பற்றிய அதிசயக் குறிப்புகள் வருகின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு எனது விமர்சனத்தையும் தருகிறேன்.

xxx

முதல் காண்டம்  16ஆவது துதியின் தலைப்பே ஈயம் (Lead) !

“1.சக்தி வாய்ந்த அக்னீ , ஓங்கி வளர்ந்து அமாவாசையில் யாதுதானர்களையும் எங் களைத் தின்பவர்களையும் அழிக்கிறான் அவன் எங்களுக்கு பாதுகாப்பு தருவான்

2.வருணன் ஈயத்தைப் புகழ்கிறான். அக்கினி அதை பலப்படுத்துகிறான். இந்திரன் எனக்கு ஈயத்தை அளித்தான் ; அது பேய்களை விரட்டும்.

3.இது விஷ்கந்தத்தை ஜெயிக்கும்.; இது பகைவர்களைப் பாழாக்கும் இதைவைத்து நான் பிசாசுகளையும் அவற்றின் இனத்தையும் அழிப்பேன்.”

இங்கே யாதுதானர்கள் என்போர் அரக்கர்கள். அத்தோடு மனிதர்களை உண்ணும் காட்டுமிராண்டிகள். அமாவாசையன்று நள்ளிரவில் வரும் பேய்களைப் பற்றியும் மந்திரம் பேசுகிறது 

சம்ஸ்க்ருதத்தில் ஸீசம் என்று ஈயத் க்கு பெயர். லத்தீன் மொழியில் ப்ளம்பம் Plumbum  என்று பெயர். சம்ஸ்க்ருதத்தில் இருந்து ஈயம் என்ற சொல் வந்திருப்பதை ஒலிக்குறிப்பு மூலம் நாம் அறிய முடிகிறது . ஆங்கிலத்தில் LEAD (லெட்).

இது பற்றி அடிக்குறிப்பு எழுதிய கிரிப்பித் (Ralph T H Griffith)  என்ற வெள்ளைக்காரர் இதை குதிரை லாடத்துடன் (Horse shoe) தொடர்பு படுத்துக்கிறார் . இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில், குறிப்பாக ஐ ரிஸ்காரர்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் குதிரை லாடம் ஆங்கில எழுத்து U போல மேல் நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். சில இடங்களில் ஆணி அடித்தும் சில இடங்களில் தொங்கவிட்டும் இருப்பர். இது ஈயமோ  இரும்போ  ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் இதற்குப் பேயை விரட்டுமாற்றல் உண்டு; மேலும் சூன்யம், மாயாஜாலம் ஆகியன எவரையும் பாதிக்காமல் தடுக்கும். ஆரோக்கியத்தைத் தரும் என்பது அவர்களுடைய மத நம்பிக்கை . அந்த வகையில் மேற்சொன்ன அதர்வண வேத மந்திரத்துடன் ஒத்துப் போகிறது

விஷக்கந்தை என்பது பற்றி எங்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இந்த வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதன் விளக்கத்தை பார்க்கையில் இது கீல் வாதம், மூட்டு வலி என்று உரைகாரர்கள் கூறுவார்கள்..

இந்திய இலக்கியங்களில் குதிரை லாடம் பற்றிய  மாயாஜால  மந்திர நம்பிக்கை எதுவும் இல்லை.

Xxxx

தமிழ் இலக்கியத்தில் பேய், பிசாசு

கடைசியாக, பிசாசுகள் பற்றிப் பார்ப்போம். பிசாசு, பைசாசம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் கலித்தொகை முதலிய சங்கஇலக்கிய நூலிலும் உளது. பேய் என்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களிலும் வருகிறது இது தவிர பேய் என்பதற்குத் தமிழில் உள்ள அலகை , கூளி , கழுது முதலியனவும் ஆங்கிலம் உளபட பல மொழிகளில் இருக்கிறது. திருக்குறளில் வரும் அலகை – ஒளி மாறும் ஆல்கால்  (Algol- Double Star System) நட்சத்திரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

XXX

இதோ இன்னும் ஒரு மந்திரம்

12 ஆவது காண்டத்தில் 21-33 (எண் .475) மிருத்யு தேவதைக்கானது . முதல் மந்திரத்தில் ‘இந்த ஈயம் உன்னுடையது வா’ என்று அழைக்கிறார் ரிஷி.

20, 21, 53 மந்திரங்களுக்கு அந்தக் காலத்தில் உரை எழுதியோர் இது தலைவலியை நீக்கும் டி.பி (TB= Tuberculosis) என்னும் காச நோயைப் போக்கும் மந்திரம் என்று எழுதியுள்ளனர்

“ஈயத்திலே மாசைத் துடைத்து விடுங்கள்” என்று மந்திரம் சொல்கிறது (மாசு = அழுக்கு). 53 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத விஷயங்கள் வருவதாக வெளிநாட்டார் எழுதிகியுள்ளனர்.

xxx

என் கருத்து

பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இதை படிப்பதால் பொருத்தம் இல்லாதது போலத் தோன்றுகிறது

அந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்தியோருக்கு இதில் சொல்லாமல் விடுபட்ட விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

U letter in Indus Valley Script

நான் லண்டனில் என் வீட்டிலிருந்து தினமும் ரயிலைப் பிடிக்க, ஸ்டேஷனுக்கு நடக்கும்போது, பல வீடுகளில் ‘u’ வடிவ லாடம் அடித்திருப்பதைப் பார்த்து வியப்பேன் . இப்போதும் லாட நம்பிக்கை இருக்கிறது.

குதிரை லாட தாயத்து அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொணரும் என்றும் நம்புகின்றனர். குதிரை லாயத்திலும் இதைக் கதவில் அடித்து வைத்திருப்பார்கள்.

இறுதியாக ஒரு விஷயம். சிந்து சமவெளி எழுத்துக்களில் ‘U’ வடிவ எழுத்துக்களே அதிகம். அவைகளுக்கும் வெளி நாடுகளில் கதவில் பொருத்தப்படும் குதிரை லாடங்களுக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் ஆராய்ச்சிக்குரியது

ஆக,  ஈயம் பற்றிய துதியில் நோய் விரட்டலும்,  பேய் விரட்டலும் வருகிறது .

நோய்க்கிருமிகளையே இவர்கள் பேய் பிசாசு என்று சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன். கிரஹணம் என்பது விண்வெளில் உலவிவரும் சூரியன், சந்திரன்,  பூமி தொடர்பான நிழலே என்று தெரிந்தபோதும் பாமர மக்களுக்காக  சூரியனையோ சந்திரனையோ பாம்பு விழுங்குகிறது என்று சொன்னார்கள். அது போலநோய்க் கிருமிகள் என்று சொல்லாமல் இப்படி பேய் பிசாசு என்று சொல்லியிருக்கலாம். எங்கெல்லாம் பேய், பிசாசு என்ற சொல் வருகிறதோ அங்கெல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா என்ற சொல்லை பிரயோகித்தான் போதும் ! அப் போது நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு பளிச்சென விளங்கும்

–Subham —

tags- குதிரை லாடம், ஈயம், பேய், பிசாசு நோய், விரட்டும்

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 1 (Post No.10,260)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,260

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

மாபெரும் தீக்ஷிதர் பரம்பரையில் வந்துதித்த ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தவரும் சிறந்த சிவ பக்தரும் அற்புதமான பல நூல்களை இயற்றியவரும், திருமலை நாயகரின் அமைச்சராக இருந்து சிறப்புற அவருக்கு ஆலோசனை தந்தவருமான பெரும் மகான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆவார். இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார். நாராயணத்வாரிக்கு ஐந்து மகன்கள்; அவர்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் நீலகண்ட தீக்ஷிதர். இளவயதிலேயே பெற்றோரையும் பாட்டனாரையும் இழந்த காரணத்தால் இவரை அப்பைய தீக்ஷிதரே வளர்த்து வந்தார். 1582ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் நீலகண்ட தீக்ஷிதர் அவதரித்தார். திருமலை நாயக்க மன்னர் திருச்சியிலிருந்து மதுரையைத் தன் தலைநகரமாக அமைத்துக் கொண்டது 1640இலிருந்து 1644க்குள் என்று நிர்ணயிக்கப்படுவதால் 1644க்குப் பின்னரே நீலகண்ட தீக்ஷிதர் மறைந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. ஆகவே, அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் என்பது பெறப்படுகிறது. அவரது இறுதிக் காலம் பற்றிய தகவல்கள் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அப்பைய தீக்ஷிதர் தனது கடைசி காலத்தில் சிதம்பரம் சென்று வசித்தார். அப்போது குடும்பத்தில் சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது நீலகண்ட தீக்ஷிதர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் அப்பைய தீக்ஷிதரின் அன்பும் ஆசியும் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். 12 வயதான நீலகண்டரின் இந்த உரையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அப்பைய தீக்ஷிதர் அவருக்கு தான் பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களையும் தந்ததோடு தன்னிடம் இருந்த தேவி மாஹாத்மியத்தையும் ரகுவம்ச நூலையும் தந்து ஆசீர்வதித்தார்.

கல்வி கேள்விகளில் வல்லவரான நீலகண்டர் அப்பைய தீக்ஷிதரின் மறைவுக்குப் பின்னர் தஞ்சை சென்றார். அங்கு ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரின் மகனான ஸ்ரீ வேங்கடேஸ்வரமகீ என்னும் மகானிடம் சீடனாகச் சேர்ந்தார். பின்னர், கீர்வாணேந்திரர் என்பவரிட்ம ஸ்ரீ வித்யா உபதெசம் பெற்றார்.

இவரது புத்திகூர்மையை அறிந்த மன்னர் திருமலை நாயக்க மன்னர் இவரைத் தனது அமைச்சராக்கிக் கொண்டு அவ்வப்பொழுது ஆலோசனைகள் பெற்றுத் திறம்பட மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டு வந்தார். ஏராளமான அறப்பணிகளை மேற்கொண்டவர் திருமலை நாயக்க மன்னர். அவர் மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணம் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரத்திற்கு எதிர்த்தாற் போல அந்த மண்டபத்திற்கான வேலையை ஆரம்பித்தார். 1626ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மணபம் புது மண்டபம் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வரும் அற்புதமான மண்டபம். இது 1633ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இத்துடன் இணைந்து மீனாக்ஷி அம்மன் கோவில் திருப்பணியும் சேர்ந்து நடைபெற்றது. இந்த மண்டபத்தை அழகுற அமைத்தவர் சுமந்திர மூர்த்தி ஆசாரி என்னும் சிறந்த சிற்பி ஆவார். இவர் ஏகபாத மூர்த்தியின் சிலை ஒன்றைச் செதுக்கிய கல்தூணை முடித்து அதை நிறுவ ஒரு நல்ல நாளையும் பார்த்து வைத்தார். இந்த சிலை நிறுவுவதற்கு நீலகண்ட தீக்ஷிதர் பெரிதளவும் ஆலோசனை தந்திருந்தார். ஆனால் இந்த சிலை பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடமிருந்து உண்டாயினர் என்பதைச் சித்தரிக்கும் மூர்த்தி என்பதால் இந்தத் தூண் நிறுவப்படுவதை வைஷ்ணவர்கள் விரும்பவில்லை. அவர்கள் திருமலை நாயக்கரை அணுகி இது நிறுவப்படக்கூடாதென்று தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தனர். மன்னரோ எப்போதும் நடுநிலை வகிப்பவர். ஆகவே இது பற்றி விசாரிக்க ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இரு தரப்பினரும் விவாதத்திற்குத் தயாராயினர். ஆறுமாத காலம் இந்த விவாதம் நீடித்தது. சைவர்களுக்கு நீலகண்ட தீக்ஷிதரும் வைணவ்ர்களுக்கு அப்பா தீக்ஷிதர் என்பவரும் தலைமை வகித்து வாதத்தை நடத்தினர். விவாதத்தின் முடிவில் சிவனின் மேன்மை நிறுவப்பட்டது. ஏகபாதமூர்த்தியின் ஸ்தம்பமும் ஸ்தாபிக்கப்பட்டது, இன்றைக்கும் ஏகபாதமூர்த்தியை புதுமண்டபத்தின் வாயிலில் நாம் பார்க்கலாம்.

அந்த மண்டபத்தின் நடு வரிசைத் தூண்களில் மதுரை நாயக்கர்களின் சிலைகள் அமைக்கப்படலாயின. திருமலை நாயக்கருக்கு ஏழு பத்தினிகள். சிற்பி பட்டத்து மகிஷியின் சிலையை வடிக்கும் போது இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்பி என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நிற்க, அப்போது அங்கு சிற்ப வேலையை மேற்பார்வை இட வந்த நீலகண்ட தீக்ஷிதர் நடந்ததை அறிந்தார். தனது தவ வலிமையால் உண்மையை உணர்ந்த அவர், சிற்பியிடம், “வேறு ஒரு சிலையைச் செய்ய வேண்டாம். எத்தனை முறை செய்தாலும் இது வந்தே தீரும். மஹாராணி உத்தம ஸ்திரீ. ஆகவே அந்த சாமுத்திரிகா லக்ஷண தர்மத்திற்கு ஏற்ப அவருக்கு இடது தொடையில் அந்த இடத்தில் ஒரு மச்சம் இருக்க வேண்டும். அதை உனது சிலை ஈசன் அருளால் பிரதிபலிக்கிறது” என்றார். தூண்களின் வேலையைப் பார்க்க வந்த திருமலை நாயக்கருக்கு ராணியின் சிலையில் உள்ள பின்ன விவரமும் சிற்பியிடம் தீக்ஷிதர் அதை அப்படியே விடுமாறும் கூறியதும் தெரிய வந்தது. இதனால் வருத்தமும் கோபமும் உற்ற மன்னர் மறுநாள் காலை தீக்ஷிதரை உடனே அழைத்து வருமாறு உத்தரவிட்டார். தீக்ஷிதர் பூஜை செய்து கொண்டிருந்த சமயம் படை வீரர்கள் வந்தனர். அவர் தனது தவ வலிமையால் நடந்ததை ஒரு கணத்தில் உணர்ந்தார். அரசன் தன் மீது சந்தேகப்படுவதை அறிந்த அவர் கற்பூர ஆரத்திக் காட்டும் சமயத்தில் அதை தன் கண்களில் வைத்து கண்களின் பார்வையை இழக்கச் செய்தார். வீரர்களிடம் “அரசர் கொடுக்க நினைத்திருந்த தண்டனையைத் தானே தீக்ஷிதர் நிறைவேற்றிக் கொண்டார்” என்று சொல்லுங்கள் என்றார். திகைத்துப் போன வீர்ர்கள் அரசரிடம் நடந்ததைச் சொல்ல திருமலை நாயக்கர் தனது தவறையும் தீக்ஷிதரின் மேன்மையையும் உணர்ந்து அவரைச் சந்திக்க ஓடோடி வந்தார். அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார்.

                               *                    தொடரும்

tags– நீலகண்ட தீக்ஷிதர் – 1, ஏகபாதமூர்த்தி, , திருமலை நாயக்கர்,