Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FRANCOIS REBELAIS
(1494 – 1553)
பிரான்ஸ்வா ரெபெலே ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். அவர் எழுதிய THE HISTORIES OF GARGANTUA AND PANTAGRUEL மிகப்பெரிய, மிகச்சிறந்த புத்தகம். இது ஒரு நையாண்டி நூல். கர்காண்டுவா , பாண்டாக் ருவல் என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ரெபெலே நக்கலும் கேலியும் செய்கிறார்.
பிரான்ஸில் ஷினோன் நகருக்கு CHINON அருகில் தந்தையினுடைய எஸ்டேட்டில் அவர் பிறந்தார். இதுதவிர அவருடைய இளமைக்கால வாழ்க்கை குறித்து அதிகம் தெரியவில்லை.
அவருடைய தந்தை ஒரு வக்கீல். அந்தக் காலத்தில் சர்ச் அல்லது மத குருமா ருக்கான மட்டத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. எல்லோரும் கிரேக்க மொழியைக்கற்று பழங்கால விஷயாயங்களை அறிவதில் ஆர்வம் செலுத்தினர். ரெபெலேயும் 15 வயத்தில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார். அந்தக் காலத்தை மறுமலர்ச்சிக்கு காலம் என்று அழைப்பர்.
37ஆவது வயதில் ரெபெலே சொல்லாமலேயே கல்விக்கூடத்தை விட்டு வெளியேறினார்.அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் இருந்ததால் அது தொடர்பான கிரேக்க மொழி நுல்களைக் கற்றார்.
முப்பதாவது வயதில் அவர் பிரான்சிஸ்கன் FRANCISCANS என்னும் கடுமையான கட்டுதிட்டங்கள் உடைய சமயப் பிரிவில் சேர்ந்தார். பின்னர் சிறிது கட்டுதிட்டங்களை உடைய பெனெடிக்க்டின் பிரிவில் BENEDICTINE ORDER-இல் சேர்ந்தார். இறுதியாக எந்தப் பிரிவிலும் சேராத பாதிரியாராக (SECULAR PRIEST) மாறினார்.
1530-இல் மான்டிபேயே பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர்லியோன் நகரம் சென்று மருத்துவத் தொழில் புரிந்தார். அப்போது அவரது பெரிய புத்தகமான GARGANTUA AND PANTAGRUELஐ எழுதத் தொடங்கினார். அதை வெளியிட்டவிதமே நக்கல் மிக்கது. தன பெயரிலுள்ள எழுத்துக்களை புரட்டிப்போட்டு ஆல்கோப் ரிபாஸ் நாசியே என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பின்னர் மேலும் மூன்று தொகுப்புகளை எழுதினார்.
ஐந்து தொகுதிகளில் முதல் தொகுதி 1532-இல் வெளியானது. இது பிரான்ஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மறுஆண்டே தடை செய்யப்பட்டது. இதற்குள் REBELAIS மிகவும் செல்வாக்கு மிக்க பாரிஸ் பாதரியார் (BISHOP OF PARIS) ஜீன் டு பெல்லேவை (JEAN DU BELLAY) நண்பராக்கிக் கொண்டார். அவர் ரபலேயை தனது சொந்த உதவிக்கான டாக்டர் என்ற குடையில் ரோமுக்கு அழைத்துச் சென்றார்.
REBBELAIS பிரான்ஸ் திரும்பியவுடன் இரண்டாவது தொகுதியை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் தொகுதியைத் தடைசெய்த மக்களை இதில் நையாண்டி செய்தார்.
அவர்கள் சினமடைந்து தாக்கவே ரபலே ஓட நேரிட்டது. இப்போது கார்டினல் பொறுப்பிலிருந்த BELLAY இவரை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றார்.
பிரான்ஸில் முதல் இரண்டு தொகுதிகள் தடைசெய்யபட்டிருந்த நேரத்தில் இவர் புத்தகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகளையும் வெளியிட்டார். அவையும் தடை செய்யப்பட்டன. அப்போது அவருக்கு என்ன கதி நேர்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. அவர் நாட்டை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது சிறைப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு அடுத்த ஆண்டு அவர் இறந்தார்.
அவர் இறந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புத்தகத்தின் கடைசி தொகுதியான ஐந்தாவது தொகுதி வெளியிடப்பட்டது.
பிரான்சில் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளை அவர் கேலி செய்தார். ஒழுக்கமற்ற, ஊழல்மிக்க பாதிரிமார்களும், பேராசைபிடித்த பணக்காரர்களும் முட்டாள்களும் நிறைந்த உலகத்தில் இவர் படைத்த இரண்டு பேரும் உலாவருவதே கதையின் கருப்பொருள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
The news about the birth place of Anjaneya also known as Hanuman hit the headlines recently in newspapers. Tirupati Balaji temple authorities believe that the hill where the temple is located is the birth place of Hanuman. They gave the reasons for such belief and gave some evidence as well.
Hampi area in Karnataka was identified as the Kishkinda Kingdom where Hanuman served as a minister in the cabinet of Sugreeva, the King of the Apes or Vanaras. (Vanaras mean Vana+Nara= Forest man). So they may be a tribe who lived in the forest wearing monkey symbols or masks or tattoos.
The other claimants are in Maharashtra, Gujarat, Jharkand and Haryana. But all these people missed a reference in Patanjali ‘s Mahabhashya where Kishkinda is mentioned.
First, the very word KISHKINDA is strange word and not connected to any Sanskrit root. No Sanskrit root for this word is given in any book. The only related sound is Kish Kingdom in ancient Sumeria. So my view is that the name Kishkinda was used by several people because of Rama’s story and it spread up to Sumeria 4000 years ago. Though Valmiki was the first one to put it in writing in simple and beautiful Sanskrit the story was known to a lot of people in India and beyond 2000 years ago. Sangam Tamil literature which is at least 2000 years old has two anecdotes that were not found in original Ramayanas. Prakrit book Gatha Sapta Sati also has an anecdote about Ramayana painting.
Here is what Patanjali says about Kishkinda:-
Describing two types of Shudras, the fourth caste in the Vedic society, he gives the example of Kishkinda- Gabdhikam , Saka- Yavanam and Saurya- Krauncham. They were Foreign Shudras. The native Shudras also did not practise Vedic rituals, but they lived within our boundaries. Foreign Shudras like Greek, Scythians did not follow Vedic rituals. More over they lived outside the land of Cultured People i.e. Aryavarta. According to Manu, it is a region between the holy rivers in North India.
Talking about this M S Agrawala who wrote a doctoral thesis on Panini’s Ashtadhyayi, identified this Kishknda with Gorakhpur in Uttar Pradesh. He also says that the Pali literature called this place Khukhundo. If we agree with Agrawala , then we may have to consider this Kishkinda also as the birth place or the work place of Minister/Lord Hanuman.
To complicate the issue there is another mountain also with the name Anjanaagiri. Hanuman’s mother was Anjana which means as black as ink or collyrium/Kajal/kohl. Originally all the women’s Kajal/kohl came from Anjana Giri which is located in North West India. Modern maps show this as Sulaiman mountain. Panini called it Tri kakut (5-4-147) because of its Three Peaks. Atharva Veda also mentioned it. It was the source of salve (anjana). It supplied the salve to the whole of Punjab and Sind. This is antimony, a chemical element. So from Gorakhpur , Panini takes us to Sulaiman Range to complete the story of Anjaneya/Hanuman.
My Viewpoint
The word Kishkinda or Anjana giri is found in various parts of India. We may ignore Anjana= Black Giri=Mountain, because black mountains are in different parts of the world. But no one can ignore Kishkinda, which is a rare word and became popular because of Ramayana only. I think the popularity of Lord Rama and Hanuman made them to name different places as Kishkinda. Last but not the least, no one did a proper research about the geographical matter in the Vedic literature. After Vedic literature comes, Nirukta of Yaska and Ashtadhyayi of Panini. In 1953, the year of publication of V S Agrawala’s thesis on Ashtadhyayi (His book India as Known to Panini) we did not have google maps or this much information. Now that more resources are at our hand at the touch of a button in computer, proper research can be done.
Even Agrawala makes a passing remark about Anjanagiri (Sulaiman Range) , “probably same as Sauviranjana in Vedic Index (Part 1, page 329)”. We need to identify all the places to come to a proper conclusion.
Last week I wrote about Goddess Hingula Mystery which is mentioned in Panini’s book. Even in Orissa/Odisah we see this Goddess.
From Baluchistan in present Pakistan to South India we see Anjanaagiri, Goddess Hinghula, Kishkinda etc. We must establish the link between them.
xxx
Please see ANJANAGIRI at the bottom left hand corner
News item from Tirupati
The Tirumala Tirupati Devasthanams (TTD) announced that Japali Theertham near Akasha Ganga waterfall in Tirumala Hills was the birthplace of Lord Hanuman. The announcement came on April 21, that is National Sanskrit University vice-chancellor V Muralidhara Sharma, who was one of the experts on the committee constituted by the TTD to establish Anjanadri Hill of the Seven Hills (Tirumala Hills) as the birthplace of Hanuman, announced at a programme organised in Tirumala that this was established after four months of intense research and collecting various pieces of evidence.
“It has been established based on puranic anthologies, literary evidence, epigraphic evidence and geographic details,” he said and added that Venkatachalam is also known as Anjanadri and 19 other names. Hanuman was born on Anjanadri in Treta Yuga, he said.
He said they have collected evidence from 12 Puranas and as for literary evidence, they were found in verses of Kamba Ramayanam and Annamacharya Sankeerthanas. He said that epigraphic evidence includes inscriptions found in Tirumala temple that in 12th and 13th-century Venkatachala Mahtyam was recited in Tirumala temple, processional deity of Sri Rangajanaya was brought to Anajandri for protection during the attack of Turks and later taken from there to Srirangam, inscriptions at Varadaraja Swamy temple in Kanchipuram, Sawal-e-Jawab, a record of practices engaged in Tirumala by North Arcot First Collector G Stratton in 1801–2 and later translated by VN Srinivas Rao in 1950.
As for geographical details, Sharma said in Skanda Puranam, when Anjana Devi asked Sage Matanga where Venkatachalam is, he clearly explained that it is north of Swarnamukhi river and 12 yojanas from Ahobilam.
“Claims that Hampi is the birthplace of Hanuman are not true. Hampi is Kishkinda while Venakatchalam is Anjanadri. It is clearly evident from the conversation between Sugreeva and Hanuman when the former asks the latter to bring Vanaras from Anajandri. If it was in Kishkinda, he would not have asked that way,” he said. He also dismissed the claims of other places like in Bhoomla district of Jharkhand, Gujarat and Kaikal in Haryana.
Tamil Nadu governor Banwarilal Purohit, TTD Executive Officer Dr KS Jawahar Reddy, who constituted the committee to determine the birthplace of Lord Hanuman, additional EO Dharma Reddy and others were present.
Other Claims
However, there is doubt among some historians over Anjaneya’s birthplace. The five other places which claim Hanuman originated from include:
1. There is a hillock near Anjanadri at Hampi in Karnataka. But scholars of Kannada University at Hampi affirmed that there is no material evidence to prove that.
2. Anjan village, 21 km from Gumla district headquarter in Jharkhand.
3. Anjan mountain in Navsari region of Gujarat.
4. Kaithal region in Haryana
5. Anjaneri, 7 km from Triambakeswar in Nashik district of Maharashtra
Historians contend that the Hampi region was popularly known as Kishkinda in legends and Puranas. Hence, Anjaneya could have gone to Hampi from Tirumala, which was just 363 km away. They also scientifically say that Hampi was 1,240 km from Gumla in Jharkhand, 1,626 km from Kaithal of Haryana, 616 km from Maharashtra, and ruled them all out and suggested that migration to Hampi is feasible.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 17-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்,
ஹிந்துக்கள் வாழ்வில் தீபம் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது.
கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம், வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுக என்பது தான்!
வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம்.அப்படிதீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.
மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர், ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா’ என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.
ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.புராண் இதிஹாசங்கள் அனைத்தும் தீப மஹிமையை விரிவாக விளக்குகின்றன.
விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம் பயப்பவை தான்.
விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம்.
இதன் அரிய பலன்கள்:
துன்பம் விலகும்.கடன் தொல்லை போகும்மங்களம் உண்டாகும்திருமணத் தடை நீங்கும்பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.
குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!
திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.
ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை செய்யும் ஒரு அரிய சாதனம் அது!
இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.
தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!
திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.
திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது. முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)
சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார்.அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே! இரவில் விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என வள்ளலார் வலியுறுத்துகிறார்.
மாணிக்க வாசகர் ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே என்றும், தேசுடைய விளக்கே என்றும், தூண்டா விளக்கின் சுடர் அணையாய் என்றும் சிவபிரானைப் போற்றுகிறார்.
ஞானசம்பந்தர் விண்களார் தொழும் விளக்கு என்று சிவபிரானைத் தொழுது பஞ்சாக்ஷர பதிகத்தில் ஞான விளக்கினை ஏற்றுவோம் என்கிறார்.
அப்பர் பிரான் 4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளில் 22 இடங்களில் விளக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அதன் விளக்கத்தை உணரும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.
நமச்சிவாய பதிகத்தில்
இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே
என்று கூறி நல் அக விளக்காக விளங்குவது நமச்சிவாயவே – பஞ்சாக்ஷரமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
திருக்கயிலாய பதிகத்தில் நால் திசைக்கும் விளக்காய நாதா போற்றி என கயிலைமலையானைப் போற்றுகிறார்.
பழமொழிகளின் வாயிலாகக் கூட சிவ வழியைக் காட்டும் அப்பர் பிரான் திருஆரூர்ப் பூங்கோயிலில் பாடிய பழமொழி பதிகத்தில் விளக்கு இருக்க மின்மினியிடம் எவனாவது தீக் காய்வானா என்கிறார்! ‘மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய் மடுத்துப் பருகி உய்யும் விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே’ என்கிறார். அருமையான விளக்கான நமச்சிவாய என்னும் பஞ்சாக்ஷரம் நம்மிடம் இருக்க, மின்மினியில் தீக் காய்ந்தது போன்ற விதி உடையவனாக, புத்தியின்றி இருந்தேனே என உருகுகிறார்.
இன்னொரு சுவையான ஈசனின் விளக்குத் திருவிளையாடல் பற்றி திரு ஆரூர்ப் பூங்கோயில் பதிகத்தில் அவர் குறிப்பிடுகிறார்:
நீரால் திருவிளக்கு இட்டால், எண்ணெய்க்குப் பதிலாக நீரை ஊற்றினால், அது எரியுமா?
நமிநந்தி அடிகள் நாயனாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதத்தை இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. நமிநந்தி அடிகள் நாயனார் ஒரு முறை அரனெறி என்னும் கோவிலில் புகுந்து விளக்கு ஏற்றி வழிபட எண்ணினார். ஆனால் விளக்கிலோ எண்ணெய் இல்லை. அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று எண்ணெய் கேட்டார். அது ஒரு சமணர் வீடு. அவர்கள் அவரை எள்ளி நகையாடி நீரை விட்டு விளக்கை எரித்துக் கொள் என்றனர். செய்வதறியாது திகைத்த நமிநந்தி அடிகள் ஈசன் முன் வந்து வணங்கினார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. “கவலையை விடுக. அருகிலிருக்கும் குளத்திலிருந்து நீரைக் கொணர்க; விளக்கை ஏற்றுக” என்ற ஒலியைக் கேட்ட நமிநந்தி அடிகள் மனம் மிக மகிழ்ந்து கமலாலயக் குளத்திலிருந்து நீரை மொண்டு வந்து விளக்கிலே ஊற்றினார். என்ன ஆச்சரியம்! விளக்கு எரிய ஆரம்பித்தது! 32 பாடல்களில் நமிநந்தி அடிகள் நாயனார் புராணத்தை பெரிய புராணத்தில் கூறும் சேக்கிழார் பிரான் இந்தச் சம்பவத்தை அழகுற இப்படிக் கூறுகிறார்:
அசரீரி வாக்கின் படியே நீரை முகந்து அவர், கோயில் அடைந்து முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்குந் திரிமேல் நீர் வார்த்தார். ‘ஜோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு’ எழுந்தது.
பொள்ளத்த காயமாயப் பொருளினை, போகமாதர் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் வழி என்ன? இதற்கு திருக்கடவூர் வீரட்டத்தில் ஒரு ரகசிய வழியைக் கூறுகிறார் அப்பர். விரும்புமின் விளக்கை என்கிறார் அவர். என்ன விளக்கு அது? விளக்கை எப்படி ஏற்ற வேண்டும். பதில் இதோ:
விளக்கை, உள்ளத் திரி கொண்டு ஏற்றுக என்பது அவர் காட்டும் வழி. இன்னொரு பாடலில் மிகத் தெளிவாக அவர் விளக்கு ஏற்றுவதைக் கூறுகிறார். உள்ளமே தகளி ஆக வேண்டும் என்கிறார் அவர். தகளி என்றால் அகல் விளக்கு.
உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே
துவாரங்கள் பல உடைய மாயப் பிண்டமாகிய இந்த உடலினை சிற்றின்பத்தில் ஆழ்த்தி, பெண் பால் உள்ள ஆசையை அறவே நீக்க, விரும்புவீர் ஆனால், உள்ளத்தைத் தீபமாக மாற்றி உங்களது உயிர் என்னும் திரியை அதில் ஏற்றிச் சிவபிரானை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டு ஞானம் என்னும் தீபத்தின் உதவியைக் கொண்டு சிவபெருமானை உணரவல்லவர்களின் தீங்குகள் அனைத்தையும் கடவூர் வீரட்டத்து இறைவன் போக்குவார்; அவர் அருள் பெறலாம்.
இப்படி அப்பர் மட்டும் விளக்கை ஏற்றவில்லை; நாலாயிர திவ்ய பிரபந்தம் அருளிய ஆழ்வார்களும் கூட விளக்கைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். ஆழ்வார்கள் உலகம் முழுவதுற்குமான நன்மைக்காக, விளக்கை எப்படி ஏற்றுகின்றனர் என்று பார்ப்போம்:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு இப்படிப் பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக்
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்தங்களைப் பாடி வழிபடுவோர், “கோவிந்தன் தன் அடியார்களாகி எண்திசைக்கும் விளக்காகி நிற்பார்” என அவரே உறுதி கூறுகிறார்.
ஆக நாம் அன்றாடம் ஏற்றும் விளக்கு என்பது புற இருளை அகற்றும் ஒன்று; அது வாழ்க்கையை நடத்த மிக்க அவசியமானது. அக இருளைப் போக்கவோ இறைவன் திருநாமம் என்னும் விளக்கு தேவை. எண்திசைக்கும் விளக்காய் விளங்கும் நமசிவாய நாமம் அல்லது நாராயணன் நாமம் நமக்கு உற்ற துணையாய் இருக்கும். இதையே நாயன்மார்களும், ஆழ்வார்களும் நமக்கு உற்ற ஒரே வழியாகக் காட்டி அருள் பாலிக்கின்றனர்.
இறுதியாக திருமூலர் திருமந்திரத்தைக் கூறி என் உரையை முடிக்கிறேன்:
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்!
விளக்கின் முன்னே வேதனை மாறும்!!
பொருள் செல்வமும் அருள் செல்வமும் அருளும் தீபத்தை வெளியிலும் உள்ளத்திலும் ஏற்றுவோம்; நல்வாழ்வு பெறுவோமாக! நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பூமியிலுள்ள 118 மூலகங்களில் இதுவரை 32 பற்றி எழுதினேன். இன்று 33-ஆவதாக குளோரின் (CHLORINE) என்னும் வாயு பற்றி சுவையான செய்திகளைச் சொல்கிறேன். நாம் தினமும் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவது உப்பு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது தமிழ்ப் பழமொழி. அது மட்டுமல்ல. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது ஆன்றோர்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 16-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய ஜோதி ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மதுரைக்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,
இந்தத் தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தேவர்களின் துயர் தீர்க்க, சூரபத்மனை வதம் செய்தார் ஸ்ரீ சுப்ரமண்யர். அதனால் மனம் மிக மகிழ்ந்த தேவேந்திரன் தனது மகளான தெய்வயானையை முருகனுக்கு மணம் முடித்துத் தர எண்ணினான். தெய்வயானையை முருகன் திருமணம் செய்து கொண்ட தலம் இதுவே ஆகும். வடக்குப் பார்த்து முருகபிரான் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்.
இன்னொரு முக்கிய புராண வரலாறும் உண்டு. சிவபிரான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும் போது அதை முருகன் பார்வதி தேவியின் மடிமீது அமர்ந்து கேட்டார். முருகப்பிரான், பிரம்மனுக்கு பிரணவத்தை உபதேசம் செய்தாலும் கூட, அவர் சாஸ்திரப்படி குருவிடமிருந்து பிரணவத்தை முறையாக உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லை. இது சாஸ்திரத்திற்கு முரணானது. ஆகவே பரிகாரமாக முருகன் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். இதனால் மகிழ்ந்த அம்பிகையும் சிவபிரானும் இங்கு தோன்றி முருகனின் தவத்தைப் பாராட்டினர். சிவன் பரங்கிநாதர் என்றும் அம்பிகை ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இங்கு சென்று இவர்களை வழிபடுதல் ஐதீகமாகும்.
சுமார் 170 மீட்டர் உயரம் கொண்ட திருப்பரங்குன்றம் சிறிய மலையாகும். இந்த மலையே சிவலிங்கம் போல அமைந்திருப்பதால் மலையைத் தொழுவதே சிவபிரான் வழிபாடாக ஆகிறது.
இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. வேலுக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவிலின் நுழைவாயிலில் இடதுபுறம் உள்ள கருப்பணசாமியை தரிசனம் செய்து விட்டுப் பின்னர் முருக தரிசனம் செய்வது மரபாகும். சரவணபொய்கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பின்னர் கோவிலில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியே கர்பக்ருஹத்தை அடைய வேண்டும். இது ஒரு குகைக் கோவில் அதாவது மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் இது. ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி, துர்க்கை, கற்பக விநாயகர், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
கோவிலின் நுழைவாயிலில் பத்து பெரிய கல் தூண்கள் உள்ளன. இங்கு அன்னபூரணி குகைக் கோவிலும் ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. ஏராளமான அற்புத சிற்பங்களும் இங்கு உள்ளன. மலையின் மீது ஜாக்கிரதையாக ஏறிச் சென்றால் அங்குள்ள காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.
இங்குள்ள வைத்தியன் கிணறு என்னும் தீர்த்தம் சிறப்பான புராண வரலாற்றைக் கொண்டதாகும். சுடுகாட்டில் வேலை செய்ததால் ஏற்பட்ட வெண்குஷ்டத்தை நீக்க வேண்டி அரிச்சந்திர மஹாராஜன் சிவனை நோக்கி வழிபட, திருப்பரங்குன்றத்தில் உள்ள பஞ்சாக்ஷர பாறையில் தவம் செய்யும் பராசர மஹரிஷியை தரிசிக்கும் படி, சிவன் கூறி அருள் பாலிக்கிறார். அதன்படியே பராசர மஹரிஷியை தரிசித்த அரிச்சந்திரன் அவரது சொல்படி இங்குள்ள வைத்தியன்கிணற்றில் நீராட தனது வெண்குஷ்டம் மறைந்து மகிழ்ச்சி அடைந்தார். இன்றும் கிரிவலம் வருவோர் இதில் நீராடி வருகின்றனர்.
திருவிளையாடல் புராணமும் திருப்பரங்குன்ற புராணமும் விவரிக்கும் சுவையான வரலாறு ஒன்று உண்டு. சங்கப் புலவர்களுள் தலையாய புலவரான நக்கீரர் சிவனையன்றி வேறு ஒருவரையும் பாடமாட்டேன் என்ற விரதம் கொண்டவர். அவருக்கு அருள் பாலிக்க நினைத்த முருகப்பிரான் தனது பூதகணங்களான உக்கிரன் மற்றும் அண்டாபரணன் ஆகியோரை அழைத்து, “நக்கீரர் தினமும் மதுரையிலிருந்து வந்து இங்கு சரவணப் பொய்கையில் நீராடி நம்மை தரிசிக்காமல் செல்கிறார். அவரை மலையின் முன்புறம் உள்ள குகையில் வைத்து கதவை மூடி விடுங்கள்” என்று உத்தரவிட்டார். ஒருநாள், நக்கீரர், சரவணப்பொய்கையில் நீராடி தீர்த்தக் கரையில் வழக்கம் போல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். நக்கீரரின் தபோ பலத்திற்கு அஞ்சிய பூதகணங்கள் ஒரு சிறிய உபாயத்தைக் கையாண்டனர். அங்கிருந்த அரசரமரத்தின் இலை ஒன்றைப் பாதி தண்ணீரிலும் பாதி கரையிலும் இருக்கும்படி அவர்கள் விடுத்தனர். அந்த இலையோ தண்ணீரில் விழுந்த பக்கம் மீனாகவும் தரையில் விழுந்த பக்கம் பக்ஷியாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த நக்கீரர், ‘இது என்ன அதிசயம்’ என்று எண்ணி,சிவபூஜையைப் பாதியில் விட்டு விட்டு மீனும் பக்ஷியும் படும் வேதனையைத் தீர்க்கக் கருதி, அவ்விரண்டையும் பிரிப்பதற்காக அவற்றை இணைத்திருந்த நரம்பைக் கிள்ளினார். ஆனால் அவையோ துடிதுடித்து இறந்து விட்டன. உடனே பூதகணங்கள் அவரைப் பிடித்துக் குகையில் அடைத்தனர். செய்வதறியாது திகைத்த நக்கீரர் சிந்தித்தார். முருகப்பெருமானை பாடாததே இதற்கான காரணம் என்பதை அறிந்து கொண்டார். உடனே ‘உலகம்’ என்று ஆரம்பித்துக் ‘கிழவோனே’ என்று முடித்து திருமுருகாற்றுப்படையை இயற்றினார். இதனால் மகிழ்ந்த முருகன் தனது வேலால் அவர் இருந்த பாறையைக் கீறி அவரை விடுவித்தான். இந்தப் பாறைக்கு வேலெறி பாறை என்று பெயர். வைகாசி விசாகம் முருகன் அவதரித்த நன்னாள். இங்கு வைகாசி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் 10 நாள் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள மலையின் பின்புறம் சென்றால் வேறெங்குமே எளிதில் காண முடியாத வெள்ளை நிற மயில்களைக் காணலாம். காலையும் மாலையும் முருக பக்தர்கள் அவற்றிற்கு உணவு அளிக்கும் காட்சியும் மயில்கள் நடம் புரியும் காட்சியும் இன்றும் பார்க்க முடியும் கண்கொள்ளாக் காட்சியாகும். திருஞானசம்பந்த்ரும் சுந்தரரும் இங்கு வந்து முருகனை தரிசித்து ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். இங்கு அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி முருகனைத் துதித்து மகிழ்கிறார். காலம் காலமாக லக்ஷக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! நன்றி, வணக்கம்!
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பு உலகமறிந்த ஒன்று. தன் கையில் இருந்த அனைத்தையும் வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியதால் அவர் செல்வ வளம் குறைந்தது. யாருக்கும் இல்லை என்று சொல்லாத அவர் தனக்கு அந்த நிலை வந்தது கண்டு மனம் வருந்தினார். ஆகவே தனது மனைவியாருடன் அயலூர் சென்று விடலாம் என்று புறப்பட்டார். செல்லும் வழியில் ஓரிடத்தில் தூக்கம் வராமல் படுத்திருந்தார். அப்போது இரட்டையர் என்று புகழப்படும் புலவர்களும் அவருடன் இதர புலவர்களும் அதே இடத்தில் தங்கி இருந்தனர். அவர்கள் தமக்குள் பசி மிகுதியாக இருப்பதையும் சடையப்ப வள்ளலிடம் சென்றால் பசி போகும் என்பதையும் பேசிக் கொண்டனர். எப்போது விடியப் போகிறதோ என்று பேசியவாறே அவர்கள் இருப்பதைப் பார்த்த சடையப்பர் தனது பெயரைச் சொல்லி அவர்கள், ‘பசி தீர எப்போது பொழுது விடியும்’ என்று சொல்வதைக் கேட்டு வருந்தினார். ஆனால் உடனே தன் மனைவியோடு தன் கழனிக்குச் சென்றார். அங்கு விதைத்திருந்த நெல் முளையை அப்படியே வாரி அலம்பி வீட்டிற்குக் கொண்டுவந்தனர் இருவரும்.
அடுப்பில் தீமூட்டி, பதப்படுத்தி குத்தி அரிசியாக்கி அன்னம் முதலியவற்றை அருமையாகச் செய்தார் மனைவியார். புலவர் கூட்டம் அவர் இல்லத்திற்கு வர அனைவருக்கும் அமுது படைத்தார் சடையப்பர். இப்படிப்பட்ட புண்ணியச் செயல் உடைய சடையப்பர் வாழ்ந்தது தொண்டைமண்டலமே என்று புகழ்ந்து கூறுகிறது தொண்டைமண்டல சதகம் தனது 53ஆம் பாடலில்
பாடல் வருமாறு:-
மீனவனாட்டினுஞ் செம்பியனாட்டினும் வில்லவர்கோ
னானவனாட்டினு மிக்கதென்பார்க ளதிசயமோ
கோனவனாட்டின் முளையதமுதாகிற் குலவமுதார்
வானவர்நாட்டினு மிக்கதன்றோ தொண்டை மண்டலமே
பாடலின் பொருள்:-
மீன் கொடியை உடைய பாண்டியனது நாட்டைக் காட்டிலும், சோழனது பொன்னி நாட்டைப் பார்க்கிலும் வில் கொடியை உடைய சேரனது நாட்டைப் பார்க்கிலும் இந்த தொண்டை மண்டலம் சிறந்தது என்று ஆன்றோர் கூறுகின்றனர். இது ஒரு புதுமை அல்ல; ஏனெனில் நள்ளிரவில் வந்த அரிய விருந்தினர்களுக்குக் கழனியில் முளைத்த நெல் முளை அமுதமாகுமானால் பாற்கடல் அமிர்தத்தைக் கொள்கின்ற தேவரது சுவர்க்க நாட்டினும் சிறந்தது அல்லவோ இந்த தொண்டை மண்டலம்!
இந்த சடையப்ப முதலியார் மரபில் அவதரித்தவரே மெய்கண்ட தேவர் ஆவார். அவருக்கு பரஞ்சோதி முனிவர் உபதேசித்து அருளினார். அது முதலாக மெய்கண்ட தேவர் மடம் திருவாவடுதுறை மடாதீனம் கொண்ட பரம்பரை ஆனது.
காஞ்சிபுராணத்தில் வரும் பாடல் இது.
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்
குயிலாரும் பொழிற்றிரு வாவடுதுறை வாழ் குருநமச்சிவாய தேவன்
சயிலாதி மரபுடையோம் திருமரபு நீடூழி தழைக மாதோ
பொருள் : திருக்கைலாய மலையிலே அருள் வடிவாகிய கல்லால மரத்தின் நீழலிலே தக்ஷிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ள சிவபிரானிடம் ஆகமங்களை எல்லாம் கேட்டருளிய நந்திப் பெருமான், அவரை வணங்கி காமிக முதலிய சைவ ஆகமங்களின் ஞான பாதப் பொருளின் உண்மையைப் போதித்தருள வேண்டுமென்று வேண்ட, ரௌரவாகமத்து பன்னிரென்று சூத்திரத்துள் சிவஞான போதம் என்ற ஒரு படலத்தை நந்திப் பெருமானுக்கு சிவபிரான் அருளிச் செய்தார். நந்தி தம் மாணாக்கரான சனத் குமார முனிவருக்கு அருள, அவரும் அவரது சத்திய ஞான தரிசிகளுக்கு அருளினார். அவர் மூலம் பரஞ்சோதி முனிவருக்கும் அது அருளப் பெற்றது.
பரஞ்சோதி முனிவர் திருக்கைலாய மலையிலிருந்து இறங்கி தமிழ் நாட்டில் திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப முதலியார் மரபிலே வந்து அவதரித்தார். இரண்டு வயதிலேயே மெய்யுணர்வு பெற்ற சுவேதனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்ட மெய்கண்ட தேவர் பால் வந்து சிவஞான போதத்தை, தான் சத்தியஞான தரிசிகள் பால் கேட்டவாறே வகுத்து அருளிச் செய்தார். மெய்கண்ட தேவர் சகலாகம பண்டிதர் அருள் நந்தி சிவாசாரியாருக்கும் அவர் பெண்ணாகடத்தில் அந்தணர் மறைஞான சம்பந்த சிவாசாரியருக்கும், அவர் திருக்கொற்றங்குடியில் வசித்து, சம்ஸ்கிருதத்தில் இருந்த பௌஷ்கராகமத்துக்கு வியாக்யானம் முதலிய எட்டு சைவ சித்தாந்தம், கோயிற்புராணம், திருத்தொண்டர் புராண சாரம், சேக்கிழார் நாயனார் புராணம், திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை உள்ளிட்ட பல நூல்களை இயற்றிய உமாபதி சிவாசாரியருக்கு அருளினார். உமாபதி சிவாசாரியர், நமச்சிவாய தேவருக்கு உபதேசித்து அருளினார். அவர் நவகோடி நித்தவாசபுரம் என்னும் திருநாமத்தை உடைய திருவாவடுதுறையில் சித்த மூர்த்திகளாக எழுந்தருளியிருந்த சித்தர் சிவப்பிரகாச தேசிகருக்கு உபதேசித்து அருளினார். அவரோ திருமூலனூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே பிறந்து பிரமசாரி ஆசிரமத்திலேயே துறவறத்தை மேற்கொண்ட நமச்சிவாய மூர்த்திகளுக்கு உபதேசித்து அருளினார். அது முதல் திருவாவடுதுறை மடாதீனம் கைலாய பரம்பரை என்ற பெயர் கொண்டு புகழடைந்து விளங்கி வருகின்றது.
இப்படி திருவெண்ணெய்நல்லூரில் சடையப்ப முதலியார் மரபிலே தொடங்கி, வந்தது இந்த சைவாதீனம். இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் சடையப்ப முதலியார் வசித்த திருமாளிகை சடையப்பர் மடம் என்றும் மெய்கண்ட தேவர் மடம் என்றும் பிரசித்தமாக வழங்கி வரப்படுகின்றது.
***
tags- சடையப்ப முதலியார் , விருந்தோம்பும் பண்பு, திருவாவடுதுறை , மடம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
compiled from popular newspapers of Tamil Nadu
உலக இந்து சமய செய்தி மடல் 16-5-2021
இன்று May 16 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல்
2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
கங்கோத்ரி கோவில் திறப்பு
உத்தரகண்ட் மாநிலத்தலுள்ள பிரசித்தி பெற்ற கங்கோத்திரி கோவில் நேற்று திறக்கப்பட்டது. வைரஸ் நோய் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
‘சார் தாம்’ என்று அழைக்கப்படும் கோவில்களில் யமுனோத்ரி நேற்று முன்தினம், திறக்கப்பட்டது.
கேதார்நாத் கோவில் நாளை மே 17-ஆம் தேதியும்,
பத்ரிநாத் கோவில் மே 18-ம் தேதியும் திறக்கப்படுகிறது. பனிக்காலத்தில் இந்த 4 கோவில்களும் மூடப்படுவது வழக்கம்.
கங்கோத்திரி கோவில் திறப்பட்டவுடன் முதல் அர்ச்சனை நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பெயரில் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது
XXX
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு உத்தரவின்பேரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
xxxx
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமன
தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். அதே போன்று திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
xxxx
கடும் எதிர்ப்பு எதிரொலி: ஸ்ரீரங்கம் ஜீயர் பதவி நியமன அறிவிப்பு ரத்து
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51-வது பட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு விடுத்த நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் 50வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் 2018 ஜூலை 11ம் தேதி ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்.
அதன்பின் ஜீயர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி,
‘திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டம் காலியாவுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, இந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராகவும், கோவிலின் பழக்க வழக்கங்களையும் அனைத்துவித பூஜைகளையும் ஆகமம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களையும் அறிந்தவராகவும், திருவிழா மரபுகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வேதபாராயணம் மற்றும் திருவாராதன கிரமங்கள் தெரிந்தவர்கள் தகுதிவாய்ந்தவர்கள்.
இவர்கள், ஜூன் 8ம் தேதி மாலை 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்’ என, இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சியினரும், சமயத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜீயர் நியமனம் என்பது அரசுப் பணி அல்ல. ஜீயர் நியமனத்தை அந்த மடத்தின் சீடர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அரசுத்துறை தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பினை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
xxxxx
ஸ்ரீ சத்யசாய் அமுதம்‘ திட்டத்தில் இலவச உணவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்
சார்பில், ‘ஸ்ரீசத்ய சாய் அமுதம்’ என்ற திட்டத்தில், வீடு தேடிச் சென்று, ஏழு நாட்கள் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
‘உலகில் வாழும் அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழுங்கள். அன்பை மட்டும் தவறாமல் செலுத்துங்கள். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, இறைவன் உங்களிடத்தில் அதைவிட பல மடங்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார். தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்’ என்பது, பகவான் ஸ்ரீ சாய்பாபா அறிவுரை
xxx
திருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத
சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
xxx
ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார்., திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில்
வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.
Xxxx
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி ரத்து
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே14-ந் தேதி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து.வைத்தார் .19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
xxxx
ஆர்.எஸ்.எஸ்.சொற்பொழிவு நிகழ்ச்சி
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும் மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.,ன், கொரோனா எதிர்ப்புக் குழு அமைப்பாளரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறியதாவது:
மக்களிடம், கொரோனா பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கையற்ற மனோபாவத்தையும் உருவாக்கியுள்ளது.இவற்றை போக்கி மக்களிடம் தன்னம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்த, ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, ஆர்.எஸ்.எஸ்.,ன் அங்கமான விஷா சம்வாத் கேந்திராவின் ‘பேஸ்புக், யுடியூப்‘ ஆகியவற்றுடன், நுாற்றுக்கும் மேற்பட்ட வலைதளங்களில் உலகம் முழுதும் ஒளிபரப்பாகும்., ‘விப்ரோ‘ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘வாழும் கலை‘ ரவிசங்கர் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இரண்டாவது அலை பரவல் ஏன்? மோகன் பாகவத் விளக்கம்!
”கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசு நிர்வாகமும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற தலைப்பில், ‘ஆன்லைனில்‘ தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.
மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம்.இவ்வாறு அவர் பேசினா
XXXXX
தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்
தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான
ஓங்காரநந்த ஸ்வாமி சென்ற திங்கட்கிழமை மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவருக்கு வயது 62.
கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில்
அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய ‛தர்ம ரஷண சமிதி’யின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.
ஓங்காரநந்த ஸ்வாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மகா ஸித்தி அடைந்தார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் அர்த்தங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
ஜாதி, மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கடந்து அனைத்து மக்களிடம் அன்பாக பழகினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய பூஜ்ய ஸ்ரீ பரமார்த்தானந்தாவிடம் சன்னியாசம் பெற்றார். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி, வேதாந்தா சாஸ்திர பிரசார அறக்கட்டளை மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டார்.
இரவில், தேனி ஆஸ்ரமத்திற்கு, சுவாமிகளின் புனித உடல் வந்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில், தேனி குரு தட்சிணாமூர்த்தி கோவிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின், உடல் சப்பரத்தில் ஏற்றப்பட்டு, ஆஸ்ரமத்தை சுற்றி, குருதட்சிணாமூர்த்தி கோவில் எதிரே, நித்ய ஆன்ம சாந்திக்கான சமாதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்ரம நிர்வாகி பரசுராமன் இறுதி சடங்குகள் செய்ய, சுவாமிகளின் சீடர்கள், வேத விற்பன்னர்கள், ஆஸ்ரம நிர்வாகிகள் வேத மந்திரங்கள் முழங்க, ஆன்ம நித்ய சாந்தி பூஜைகள் நடந்தன.
‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைத்து, வீட்டிலிருந்தே வழிபட்டு கொள்ளலாம். ஸித்தி அடைந்த சுவாமிகளுக்கு, தொடர்ந்து, 16 நாட்கள் பூஜைகள் நடக்கும்’ என, ஆஸ்ரம நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ,
ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவர் (தென்தமிழகம்) ஆடலரசன் ஆகியோர் இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்
லண்டனிலிருந்து நேற்று சனிக்கிழமை ஒரு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது ; சுவாமிகளின் பக்தர்கள் புகழஞ்சலி செலுத்தினர்
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………