Swami’s Crossword 29819 (Post No.6950)

 Written  by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 18-11

Post No. 6950

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Though all are Sanskrit words or place names, they are well known throughout India and used in most of the Indian languages. Spellings are slightly adjusted to fit into the grid.

Across

1.Bikshu – 6 letters–Buddhist monk

7.Kedarnath –9– Shiva Shrine in Himalaya with Cedar trees

8.Udyoka – 6–job, profession, work

9.Asasdhya –8– Impossible, difficult to do

10.Krama – 5–order, method, turn

11.Asirvadh- 8–Blessing

Down

1.Biksha – 6 letters–begging offering, alms

2.Indumati – 8–great Swayamvaram described by Kalidas; she chose Ajay

3.Surya -5– sun

4.Udaka – 5–water

5.Uttamam- 7–best, better than he middle and low positions

6.Rahasyam -8—secret

–subham–

–subham–

பாம்பும் வசம்பும் (Post No.6949)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-20 AM

Post No. 6949

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-

TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN

tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்! (Post No.6948)

This image has an empty alt attribute; its file name is ganesh-gold.jpg

WRITTEN  by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-45 AM

Post No. 6948

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

முக்கிய தினங்கள் : விநாயக சதுர்த்தி : 2-9-2019 ரிஷி பஞ்சமி 3-9-2019

மாலை மலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகெங்கும் விநாயகர்!

விநாயக சதுர்த்தி வழிபாடு மிகுந்த கோலாகலத்துடன் காஷ்மீரிலிருது கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகை.

நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7வது வெண்பா,

“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.

இதில் ‘ஒரு கை  முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.

இன்றோ தமிழ் நாட்டில் பிள்ளையார் பட்டியில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருக்கும் பிள்ளையாரது வழிபாடும் பெயர்களும் நமக்குப் பிரமிப்பை ஊட்டுகின்றன.

திபெத்தில் அவர் ட்ஸோக்ஸ்டாக். பர்மாவில் அவர் மஹா பியன். மங்கோலியாவில் அவர் பெயர் டாட்கரௌர் காக்ஹன். கம்போடியாவிலோ அவர் ப்ரஹ் கெனெஸ் என வழிபடப்படுகிறார். ஜப்பானியர் அவர் வினாயக்ஸா அல்லது ஷோடென் என்று வழிபடுகின்றனர்.

பசிபிக் மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் கோனா கடற்கரையில் ஒரு சிறிய விநாயகர் விக்ரஹத்தை பக்தர்கள் கும்பிட்டு வருகின்றனர்.

உலகெங்கும் எதை ஆரம்பிக்கும் முன்னரும் விநாயகர் வழிபாடு தான்!

விநாயகரை வழிபடக் காரணம்!

இப்படி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னர் உலகெங்கும் முதல் தெய்வமாக  விநாயகரை வழிபடக் காரணம் என்ன?

எல்லா தெய்வங்களின் சிறந்த அம்சங்களின் பகுதி விநாயகரிடம் இருக்கின்றன.

அவரைத் தொழும்போது எல்லா தெய்வங்களும் திருப்தியுடன் அருளாசியை- அனுக்ரஹத்தை- வழங்குவதால் தான் தடை போக்கும் விக்னேஸ்வரராக அவர் மிளிர்கிறார். இது ஒரு  முக்கியமான இரகசியம்.

இப்படி அனைத்து தெய்வங்களின் அபார வலிமைகளைக் கொண்ட அவரை கணபதியாக – கணங்களின் அதிபதியாக சிவபிரான் ஆக்கியருளினார்.

‘பிடிச்சு வச்சா பிள்ளையாரு’ என்ற மொழிப்படி மஞ்சள் பொடியில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அங்கே அவர் எழுந்தருளுகிறார்.    

  களிமண்ணில் கூட அவர் திருவுருவம் படைக்கப்பட்டால் ஏற்கிறார்; எளியவர் தெய்வம் ஆகிறார்.

   அருகம்புல், எருக்கம் மாலை, மோதகம், கொழுக்கட்டை என நைவேத்தியத்தில் கூட அனைவரும் மனமுவந்து எளிதில் அளிக்கக்கூடிய பொருள்களே அவர் உகக்கும் பொருள்கள்.

     சிவனுக்கும் உமைக்கும் செல்லப் பிள்ளையானதால் பிள்ளையார் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவபிரான் ஒவ்வொரு சமயத்தில் அடியார் நிமித்தம் ஒவ்வொரு பெயரைக் கொண்டது போலவே, தன்னுடைய அடியார் நிமித்தம் வக்கிரதுண்ட விநாயகர், சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்கினராஜர், மயூரேசர், அபரமயூரேசர்,பாலசந்திரர், தூமகேது, கணபதி, மகோற்கடர், உந்தி விநாயகர், வல்லப விநாயகர் என இப்படி பன்னிரெண்டு மூர்த்தங்களைக் கொண்டிருக்கிறார். இப்பெயர்கள் விளக்கும் வரலாறுகள் அற்புதமானவை.

  விநாயகன் என்ற சொல்லின் சப்தார்த்தம் மூன்று 1) துட்டர்களை அடக்குபவன் 2) இடையூறுகளை நீக்குபவன் 3) சுந்தரமுள்ளவன்.

   வடலூர் வள்ளலார் பெருமான் கணபதி பூஜை செய்யும் விதத்தை நன்கு விளக்கி, கணபதியைத் துதி செய்பவன் அடையும் சிறந்த பேறுகள் இரண்டு என விளக்குகிறார் : 1) கணபதியை பூஜிப்பதால் பரமாசாரியர் கிடைப்பார் 2) சிவானுபவம் சித்திக்கும். நல்ல குரு வந்து வழிகாட்டி பேரின்பம் அடையச் செய்வார் என்பது அவரது அருள் வாக்கு.

கபிலர் கூறும் இரகசியங்கள்!

   சங்க கால மகானாக விளங்கிய கபில தேவ நாயனார் திரு இரட்டை மணி மாலை என்ற தனது அற்புதமான நூலில் பிரமிக்க வைக்கும் இரகசியங்களை விண்டுரைக்கிறார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரு செய்யுளை மட்டும் இங்கு பார்க்கலாம்:

திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால்  வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை

இந்தப் பாடல் சாதாரணப் பாடல் அல்ல.

“நுட்பம் என்பது நுழைபொருள் யாவும்

திட்ப மாகத் தெளியக் கூறல்” என்ற விதியின் படி ஏராளமான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள பாடல்.

 ஐஸ்வரியத்தைப் பெருக்கும்.

தொடங்கிய தொழில்களைத் தடையின்றி நிறைவேறச் செய்யும்.

நல்ல செல்வாக்கைப் பரவச் செய்யும்.பெருமையை அபிவிருத்தி அடையச் செய்யும்.

சாரூப பதவியை அளிக்கும்.

இப்படி தன்னை வணங்கியோருக்கு அனைத்தையும் அளிப்பதனால் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மிகுந்த விருப்பத்துடன், கணபதியைத் தங்கள் தங்கள் கைகளை கூப்பி வணங்குவர் என்பது பாடலின் பொருள்.

    ஆனால் திரு என்ற மங்கலச் சொல்லை முதலில் வைத்து கை கூட்டும் என்பதால் செல்வம் வந்தாலும் கூட, செய்ய முனையும் தொழில் சீருடன் வெற்றி பெற வேண்டும் என்பதையும், செஞ்சொல் என்பதால் செல்வாக்கும் அத்துடன் சேர வேண்டும் என்பதையும் பீடு என்பதால் அதில் பெருமையும் கூடவே சேர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, இந்த நான்கின் பயனை உருவாக்கும் தெய்வம் விநாயகரே என்பதையும் வலியுறுத்துகிறார் கபிலர்!

    சிறிது காலம் வாழ்ந்து மறையும் மானுடர் ஒரு புறம் இருக்க தேவர்களும் கூட காதலுடன் கை கூப்பித் தொழும் தெய்வம் விநாயகர் என்பதையும் சொல்லி அவர் வியக்கிறார்.

     அத்துடன் திரு ஆக்கும் என்பதை திரு, வாக்கு என்று பிரித்தால் மேலும் ஒரு பொருள் வரும்; அதே போல கூட்டும் பெருக்கும் என்ற சொற்களை மற்ற சொற்களுடன் சேர்த்துப் பார்த்து பல்வேறு சிறப்பு அர்த்தங்களையும் காணலாம்.

   அத்தோடு அனைவருக்கும் எப்பொழுதும் உற்சாகத்தைத் தருவதால் அவன் ‘களியான்’. அதிசயிக்கத் தக்க பிரகாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் ‘ செம்பொன் ஒளியான்’. பூவுலகில் வாழும் அனைவருக்கும் வித்தியாசமின்றி அருள் பாலித்து அனைத்தையும் வழங்குவதால் அவன் ‘பாரோர்க்கு உதவும் அளியான்’!

    இப்படிப்பட்டவனின் அடியைப் பற்றுவது நல்லார் கடமை எனக் கூறி மனிதர்களின் தலையாய கடமையை கபில தேவ நாயனார் விண்டுரைக்கிறார்.

பிரபஞ்சமே ஆற்றல், அதிர்வு, அலைஎண் மயம் தான்!

    ஆனைமுகத்தோன் என்று கூறி ஓங்காரத்தை நினைவு படுத்தி அவன் ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன் என்று முன்னோர்கள் கூறும் போது அதில் அதிசயமான பேருண்மையை வைத்திருக்கின்றனர். அவனை வணங்கினால் ஓம்கார சக்தியைப் பெறலாம் என்பதே அந்த உண்மை!

    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நிகோலா டெஸ்லா (தோற்றம் 10-7-1856 மறைவு 7-1-1943) என்ற பெரிய  விஞ்ஞானி, “பிரபஞ்சத்தின் ரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் ஆற்றல் அலைஎண், அதிர்வு என்ற அடிப்படையில் பாருங்கள்” (If you want to find the secrets of the Universe, think in terms of energy, frequency and vibration – Nikola Tesla) என்று வியக்கத்தக்க விதத்தில் ஒரு வரையறுப்பை நிர்ணயிக்கிறார்.

பெரும் ஆற்றலை உருவாக்கி ஒரு நொடிப் பொழுதில் பெரும் கட்டிடத்தை அழித்த, வல்லமை மிக்க விஞ்ஞானியான இவர் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பின் ரகசியத்தைக் கூறினால் தீயோர் அதை உலக அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடும் என எண்ணி அதைக் கூற மறுத்து விட்டார்.

   உலகத்தின் ஆதி நாதமாக அமைவது ஓம் என நம் முன்னோர்கள் உள்ளுணர்வால் கண்டு அதற்கு உரிய தெய்வமாக விநாயகனை ‘ஓம்’கார நாயகன் எனப் போற்றுகின்றனர்.

 அறிவியல் விளைவித்த அற்புதமாக விண்ணில் பறந்த நாஸா ஏவிய சாடலைட் விண்ணில் இடையறாது ஒலிக்கும் ஒலியைப் பதிவு செய்துள்ளது. அது ஓம்கார நாதமாகவும், கூட்டிசை (தேவாலயத்தில் இசைக்கப்படும் கூட்டிசை அல்லது பஜனையின் போது அனைவரும் சேர்ந்து பாடும் இசையொலி) போலவும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிசயத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஓங்காரம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விதங்களில் ஓதப்படுவதை எடுத்துரைக்கும்   அன்னிபெஸண்ட் அம்மையார் ஒவ்வொன்றிற்கும் அபூர்வப் பலன்கள் உண்டு என அதிசயித்துக் கூறுகிறார்.

வானில் விநாயகர் தோற்றம்!

  இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளின் உருவம் பெரு வயிறுடனும் தும்பிக்கையுடனும் இருக்க அவரது வாகனமாக மூஞ்சூறு அமைகிறது.  இவர் பிறந்த நாளை ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாம் கொண்டாடுகிறோம். இதன் காரணம் என்ன? இதில் பொதிந்துள்ள வானவியல் இரகசியம் பிரம்மாண்டமானது.

   செப்டம்பர் துவக்கத்தில் தொடு வானத்தில் வட திசையில் ஊர்ஸா மேஜர் (Ursa Major) எனப்படும் சப்தரிஷி மண்டலம்  எழுகிறது. காஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர்,ஜமதக்னி, பாரத்வாஜர் என்ற ஏழு  பிரகாசமான நட்சத்திரங்கள் பூமியின் சுழற்சியால் தொடுவானில் காணப்படுகின்றன. ஆண்டில் முதன் முதலாகத் தோன்றப்படும் இந்த நாளை வானவியலார் ஹெலிகல் ரைஸிங் (Helical Rising) அல்லது வான்பொருள் எழுச்சி என்று கூறுகின்றனர். இதை ரிஷி பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். அன்று ஆண்களும் பெண்களும் புனித நீராடி சப்த ரிஷிகளைத் துதித்து தூய்மை பெறுகின்றனர்.

இதற்கு முந்தைய நாள் விநாயக சதுர்த்தியாக (அதாவது பஞ்சமிக்கு முதல் நாளாக அமையும் சதுர்த்தி நாளன்று) கொண்டாடப்படுகிறது.

அன்று வானில் தோன்றும் ‘கணேச நட்சத்திரங்களைக்’ கற்பனைக் கோடுகளால் இணைத்தால் தோன்றுவது பெரு வயிறும் தும்பிக்கையும் கொண்ட விநாயகர் திரு உருவம். அவர் அமர்ந்திருப்பது மூஞ்சூறு போன்ற உருவத்தின் மேல்! இதையே விநாயகர் பிறப்பாக நாம் கொண்டாடுகிறோம்.

அந்த ஒளியிலும் அதிர்விலும் (Vibration) ஆற்றலிலும் (Energy) அலைஎண்ணிலும் (Frequency) நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதன் சக்தியைப் பெறுகின்ற நாளாக அது அமைகிறது. ஓம் எனும் மந்திர ஒலி தரும் ஆற்றலையும் அன்று நாம் பெறுகிறோம்.

வானில் அமையும் ராசி, நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுத் தொகுத்தவர் வானியல் அறிஞரான ஏ.பி.கிரிமால்டி (A.B. Grimaldi) என்பவர். (A Catalogue of Zodiacs and Planisheres published by M/s Gall and Inglis of London). இவர் தனது நட்சத்திரத் தொகுப்பில் விருச்சிகம், துலாம் (தராசு) போன்ற பல்வேறு ராசிகளின் உருவ அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதில் யானை உருவமும் அதன் கீழ் இருக்கும் எலி உருவமும் விநாயகரையும் மூஞ்சூறையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது வியப்புற்குரியது.

இதைக் கற்பனைக் கோடுகளால் நட்சத்திரங்களை இணக்கும் போது தோன்றும் உருவத்தைப் படத்தில் காணலாம். வானியல் நிபுணருடன் இணைந்து அவர் உதவியுடன் வானத்திலும் பார்க்கலாம்!

தோப்புக்கரணம் போடுவதன் பயன்!

அடுத்து விநாயகரை வணங்கும்போதெல்லாம் இரு கைகளையும் மாற்றி வலது இடது காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதோடு நெற்றிப் பொட்டுகளையும் குட்டிக் கொள்கிறோம்.

இந்தப் பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சொல்லி வந்தவர் வியக்கும்படி அறிவியல் ஆய்வுகள் இதன் நன்மைகளை இப்போது எடுத்து வைக்கின்றன.

யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளைத் தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

இந்தப் பயிற்சியைச் செய்து  முடித்த பின்னர் எடுக்கப்பட்ட இசிஜி (எலக்ட்ரோ என்செபலோக்ராஃபி) முடிவுகளை டாக்டர் ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கிணையச் செய்கிறது.

இந்தப் பயிற்சியைப் புகழ்ந்து அவர் மேலும் கூறுகையில் மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது.

இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இதை இந்த காது மடல் பிடிக்கும் எளிய் பயிற்சி உறுதிப்படுத்துகிறது என்று கூறிப் புகழ்கிறார்.

    லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), “பாதங்களை நேராக வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொண்டு வலது காதை இடது கைக்கட்டை விரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும்.இதேபோல இடது காதை வலது கைக் கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி உட்கார்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் தொடர்ந்து திருப்பித் திருப்பிச் செய்தால் கூரிய மூளை ஆற்றலைப் பெறலாம்” என்கிறார்.

    நமது தோப்புக்கரணத்தை அப்படியே விவரிக்கும் இந்த அறிவியல் ஆய்வு நமது முன்னோர்களின் கூரிய அறிவுத் திறனையும் பிள்ளையார் வழிபாட்டையும் எண்ணி வியக்க வைக்கிறது.

    பிரபஞ்ச ஆற்றலையும் உடல் மற்றும் உள்ள ஆற்றலையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விநாயக சதுர்த்தி பூஜை எளியவரும் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆம், “பிடிச்சு வச்சா பிள்ளையாரு” தான்!

  அதிசய ஆற்றலைத் தரும் விநாயகரை வழிபடுவோம். வானத்து இரகசியங்களை வசமாக்குவோம்!

குறிப்பு : நாஸா பதிவு செய்த ஓம் பற்றிய பதிவை https://www.youtube.com/watch?v=hFdWxnPCvSs

என்ற தொடுப்பில் கேட்கலாம்.

–subham–

மன்னர் வருகிறார்! கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு; மதுரையில் 3 நாள் தங்கல் (Post 6947)

WRITTEN  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-50

Post No. 6947

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

List of ‘Sexy’ Plants (Post No.6946)

Compiled  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 19-24

Post No. 6946

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

I have already given a list of 255 plants. Here is a list of sexy plants, I mean, listed in the book  about aphrodisiacs (drugs, herbs, chemicals stimulating sexual feelings).

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://tamilandvedas.com › 2015/02/23 › 255-indian-tr…

23 Feb 2015 – (Sapta parna, Ezilai Palai in Tamil). Compiled by London swaminathan. Post No.1670; Dated 23 February 2015. In the first part posted on 21st …

Trees | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › trees

  1.  
  2.  

If a Brahmin cuts the fruit treesshrubs, vines, , creepers or flowering plants , a … 255 Indian treesherbs and flowers mentioned in Brhat Samhita Part1, posted …

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://swamiindology.blogspot.com › 2015/02 › 255-indian-trees-herbs-and…

21 Feb 2015 – 255 Indian TreesHerbs and Shrubs mentioned in Brhat Samhita– Part-1 ….. ஜப்பானியர் அட்டூழியம்- part 1 (Post No.6723).

Plants in Mahavamsa | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2014/10/03 › plants-in-mahavamsa

  1.  

3 Oct 2014 – Studying about the plants mentioned in ancient literature helps us to … We have Pippaladan and other names in Upanishads meaning Mr Pipal …

Plants list 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › plants-list-2

  1.  

23 Feb 2015 – In the first part posted on 21st February I gave the names of 130 trees. Here is the second part: 131.Patra =Laurus cassia, Cinnamomum …

தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா 5800 கிலோ!! (Post No.6945)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6945

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Dasara Elephants

–subham–

பாரதியார் பற்றிய நூல்கள் – 60 – பகுதி 2(Post No.6944)

Written by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-49 am

Post No. 6944

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 60 – பகுதி 2

டி.என்.இராமச்சந்திரன் எழுதியுள்ள ‘வழி வழி பாரதி’

ஐந்தாவது அத்தியாயமான ‘அரியதில் அரிய பாரதி’யில் ‘ நாம் அறிந்த பாரதியை விட நாம் அறியாத, அறிய முடியாத பாரதியைப்’ பற்றி ஆராயப் புகுகிறார் நூலாசிரியர் சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன். ஆய்வின் முடிவில் அரிய பாரதியைக் காண்கிறோம்.

பாரதியார் கையாண்ட சொற்கள் 82 சதவிகிதம் Classical Tamil Diction (செவ்விய தமிழ்ச் சொற்கள்) என்ற அரிய தான் கேட்ட தகவலைத் தரும் நூலாசிரியர் பாரதியாரின் வார்த்தைகளுக்குத் தவறான பொருள் கொள்ளுதலைச் சுட்டிக் காட்டி எப்படி சரியாகப் பொருளைக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

இரு எடுத்துக் காட்டுகள்:

பாரத மாது தானே பணித்தன்று (வேல்ஸ் இளவரசரை வரவேற்று இயற்றிய பாடல்) என்றால் பணித்தது அன்று என்று பொருள் கொண்டு பக்கம் பக்கமாக அடுக்கிச் செல்லும் பாரதி அன்பரைப் பற்றி என்ன சொல்ல?

பணித்தன்று என்றால் பணித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.

காணி நிலம் என்றால் 8 மனை;மனை ஒன்றுக்கு 2400 சதுர அடி என்று பொருள் கொண்டு சிலர் கணக்கிடுவது தவறு; காணி என்றால் உரிமை என்று பொருள். எனக்கென்று சிறிய நிலம் வேண்டும்; அது உரிமை நிலமாக இருத்தல் வேண்டும் என்கிறார் பாரதியார்.

ஆறாவது அத்தியாயம் “ ‘பாரதி நாமம் வாழ்க’.

தவம், முக்தி, யோகி, நல்ல தொழில் போன்ற பல சொற்களுக்கான விளக்கங்களை பாரதி குறைந்த சொற்களில் விளக்கும் பான்மையை வியந்து போற்றி  இதில் விளக்கம் தரப்படுகிறது.

ஏழாவது அத்தியாயம் : மகாகவி பாரதியின் சிரிப்பும் சீற்றமும். இதில் பாரதியாரின் ஆன்மீக புத்திரரான திருலோக சீதாராமின் பாரதி பற்றிய பல கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

எட்டாவது அத்தியாயம் : பாட பேத பூதங்கள்

ஏராளமான பாட பேதங்கள் பாரதியாரின் பாடல்களில் உள்ளன. சில வலிந்து புகுத்தப்பட்டன (விஷம நோக்குடன்); சில அச்சுப் பிழைகளாக வந்துள்ளன.

சாரு மானுடமாயினும் என்பது சாகு மானுடமாயினும் ஆகி இருக்கிறது.

நல்ல ஒளியின் வகைபல கண்டுளன் வெண்ணிலாவே என்பதை நல்ல ஒளியின் வகைபல கண்டிலன் வெண்ணிலாவே என்று மாற்றி விட்டனர்!

இது போல ஒரு நீண்ட பட்டியலைக் காணலாம்.

ஒன்பதாம் அத்தியாயமான மகாகவி பாரதியாரும் ஷெல்லியும் இரு பெருங் கவிஞர்களை ஒப்பிட்டு மகிழ்கிறது; நம்மை மகிழ்விக்கிறது!

பத்தாம் அத்தியாயம் பாரதியாரையும் புஷ்கினையும் ஒப்பிடுகிறது.

பதினொன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ரூமியையும் ஒப்பிடுகிறது.

பனிரெண்டாம் அத்தியாயம் பாரதியாரையும்  மில்டனையும் ஒப்பிடுகிறது.

பதிமூன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ப்ரௌனிங்கையும் ஒப்பிடுகிறது.

பதினான்காம் அத்தியாயம் பாரதியாரையும் ஃபிரான்ஸிஸ் தாம்ஸனையும் ஒப்பிடுகிறது.

சில கருத்துக்களை மட்டும் இங்கு பார்க்கலாம்:

ஷெல்லி : This habitable earth is full of bliss

பாரதியார் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!

புஷ்கின் : எழுக கவிதை! எழுக அறிவு!

          ஏற்றுவோம் இவற்றை இனிய பாடலில்

          ஞான ஞாயிறே, ஒளிர்க, ஒளிர்கவே!

             உண்மை அறிவின் தேயா ஒளியில்

                 உன் ஒளி அதனின் ஒரு சிறு கீற்றில்

              ஓய்ந்தொழிந்ததே பொய்மை எலாம்

            வாழ்க நீ, ஒளியாய், பகலே!   

             வீழ்க, வீழ்கவே, இருளும், இரவும்!

பாரதியார் : பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

                    புன்மை யிருட் கணம் போயின யாவும்

            எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி

                    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

ரூமி : உள்ளதும் நான், அல்லதும் நான்

          நீர் அறிகின்ற ஜலாலுதீன் நான்

       ஆஹா! கேளீர் நான் சொலு வார்த்தை

          நான் தான் அனைத்தின் ஆன்மா காண்

பாரதியார் : வானிலே பறக்கின்ற புள்ளெலாம் நான்…

           ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்

               அறிவாய், விளங்கு முதற் சோதி நான்

மில்டன் : அகத்தே ஒளிர்க

பாரதியார் : தீயினை நிறுத்திடுவீர்!

            நல்ல தீரமும் தெளிவும் இங்கருள் புரிவீர்!

ப்ரௌனிங் : A tincture

                            Of force to flush old age with youth

பாரதியார் : I will age into youth

ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் : Till Time, the hidden root of change, updries

பாரதியார் : காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும்

பாரதியை ஆழ்ந்து பயில இந்தப் புத்தகத்தை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும். பரந்து பட்ட உலகப் பார்வையில் பாரதி உயர்கிறான்; அதை ஓர்ந்து நாமும் உயர்கிறோம்.

பாரதி இயல் பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இது!

***

—subham—

மாமன்னன் கிருஷ்ண தேவராயரின் 4 மனைவி மர்மம்! (Post No.6943)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 27 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-18

Post No. 6943

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27819 (Post No.6942)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 27 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 19-44

Post No. 6942

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே-

1  – (3)– கர்நாடகத்தில் மஹா ரா ஜா ஊர்வலமாக வரும் பண்டிகை; விஜயதசமி அன்று நடைபெறும்

3.–(3)- அந்த மஹாராஜா இந்த ஊரைச் சேர்ந்தவர். அங்கே பிருந்தாவனம் மிகவும் பிரசித்தம்

5.—(3)– பயிர்க ளைப் பிடுங்கி நடுவர். அந்த இளம் பயிரின் பெயர்

6. – -(3)–வலமிருந்து இடம் செல்க.//ராமன் பிறந்த திதி

7.—(2)– அதுவே அடைக்கலம்

8. — / –3–வலமிருந்து இடம் செல்க/ மிகவும் என்று பொருள்

9.—3—ஒவ்வொரு தலத்துக்கும் இது உண்டு

10. 2– ஒருவர் மற்றொருவருக்கு அல்லது நாட்டுக்கு எதிராகச் செய்யும் வேலை

11.—5– மன்னர் வசிக்கும் இடம்

14. — / –5–வலமிருந்து இடம் செல்க.- கொடுமையான பாவச்செயல்

கீழே

1.(5)–அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பின்னர் பத்தாவது நாள்

2.(7)– ஆண்டு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

3.—(5)–அனுமனைத் தடுத்த கடல் மலை

4. –5– பாணீனியத்திலும் உண்டு; தொல்காப்பியத்திலும் உண்டு

8.5— அம்மா பெயரிலுள்ள வியப்புக்குறி

11.  —3– கீழிருந்து மேலே செல்க- விருந்தாளி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

12. -/ —2–கீழிருந்து மேலே செல்க/ முகத்திலுள்ள மிக முக்கிய உறுப்பு

13. –/ –2–கீழிருந்து மேலே செல்க./ கோடை காலத்தில் இதில் தண்ணீர் வைத்துக் குடித்தால் சுகம், சுகம்

—subham—

NOTTING HILL CARNIVAL IN LONDON (Post No.6940)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 27 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 8- 46 am

Post No. 6940

Pictures are taken BY ME; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

NOTTINGHILL CARNIVAL IS HELD IN NOTTINGHILL AREA OF LONDON EVERY YEAR FROM 1966.

It is the largest street festival held in the world.It is held on summer bank holiday Monday. Previous day, Sunday, is for children. I attended children’s day last year. This year I went yesterday to cover the adult’s day. But I could see only 25 percent of the carnival because of one million people crowd. In addition to Afro Caribbean countries Brazilians also participated.

My news summary—

You have to swim through the crowd; you may be crushed and squeezed.

Probably I was the only Indian in the crowd; last year I saw some Indians in the crowd, because that was for the children (first day of two day festival in August every year).

No women came in full dress. No one can blame them; it is their culture.

Everyone must inhale drugs; because most people smoke narcotic drugs in the crowd.

Non veg. smell from 300 food shops may suffocate vegetarians like me. Matted hair black Rastafarians are vegetarians. They had their veggy food stall, but I couldn’t find it.

No one walked except me. They danced while walking or they walked while dancing!!

I saw three people fainting and taken out from the crowd. There may be hundreds of cases like this.

This morning news papers reported 257 people were arrested for minor offences.

12,500 police, 1000 stewards, one million people- amazing indeed!!

Scores of bands on buses and trucks waded through the streets. Four underground stations were closed and people have to walk miles and miles.

 I managed to wade through the crowd for three hours and when I felt I am dehydrated I came out. 33 degree C took all the water in the body.

This morning I saw close up pictures of dancing girls in the Sun newspaper. Because journalists get pre- view they ask the women to pose for them and take 50 snaps for each. My pictures here are taken by me in the crowd. Enjoy them if you can; if you want juicy pictures go to newspapers, particularly The Sun.

–subham–