பூசையா? பூனையா ? ஓதையா? ஓசையா?, பாடையா? பாஷையா? (Post N0.9143)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9143

Date uploaded in London – –14 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணப் பாடல்களைக் கொண்டு சில சுவையான வி’ஷ’யங்களைக் காண்போம். இந்த வரியையே கொஞ்சம் மாற்றி வி’ட’யங்களைக் காண்போம் என்றும் எழுதலாம்.

வி’ஷ’யம் எப்படி வி’ட’யமாயிற்று?

அந்த வி’ட’யத்துக்கு முன்னர் பூனையைக் கவனிப்போம்.

2000 வரு’ஷ’த்துக்கு முன்னால் – வரு’ட’த்துக்கு — முன்னால் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு பூனை வேண்டும்; வீட்டில் எலித்தொல்லை அதிகமாகப் போய்விட்டது என்று சொன்னால்,

நக்கீரன், உங்கள் முன்னர் தோன்றி, ‘தமிழைத் தப்புத் தப்பாகப் பேசாதே பூனை இல்லை. பூசை என்று சொல்லி’ உங்களுக்கு வார்த்தைகளால் பூசை போடுவார்.

இப்போது யாரிடமாவது போய் எலித்தொல்லை அதிகமாகிவிட்டது பூசை வளர்க்கப் போகிறேன் என்றால், என்ன உளறுகிறாய்? குடித்துவிட்டு வந்து விட்டாயா? சனியனே, பூனை என்று சொல் என்பர்.

2000 ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?

இதே கதைதான் ‘வண்டி’ (cart) கதையும் !

சங்க காலத்துக்கு ‘டைம் மிஷினில்’ ‘ட்ராவல்’ (TRAVEL BY TIME MACHINE BACK IN TIME) செய்து நக்கீரனைச் சந்தித்து ‘ஐயா, இங்கு மாட்டு வண்டியாவது, குதிரை வண்டியாவது கிடைக்குமா? மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும்; கால் வலிக்கிறது; ஒரு வண்டி வேண்டும்’ என்று சொன்னால் நக்கீரனாருக்கு படா கோபம் வந்து விடும்.

நீவிர் ‘பாண்டில்’ அல்லது, ‘பண்டி’ என்று தூய தமிழில் பேசும்! என்பார்.

ஏனெனில் சங்க காலத்தில் ‘வண்டி’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ‘பாண்டில்’ அல்லது ‘பண்டி’-தான் வழக்கில் இருந்தது. இப்போது ‘பண்டி’ என்றால் பன்றியா ? அது சேரியில் இருக்கும் என்பர்.

எப்படி ‘பண்டி’ 2000 ஆண்டுக்குள் ‘வண்டி’ ஆயிற்று?

இன்று நாம் வங்கம் என்று சொன்னால் வங்காளிகள்- பெங்காலிகள் – பெங்கால் என்று சொல்லுவர்

 இன்று நாம் ‘பிரணவ’ குமார முகர்ஜி  என்று சொன்னால் வங்காளிகள்- BENGALESE பெங்காலிகள் –  ‘பிரணாப்’ என்று சொல்லுவர்

‘வ – ப’ இடம் மாற்றம் அவ்வளவுதான் .

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இப்படி ஏதேனும் ஒரு மாற்றத்தைப் பார்த்துவிட்டால் கால்ட்டுவெல் , மாக்ஸ்முல்லர் கும்பல்கள் அதில் ஆரிய – திராவிட வாதத்தைப் புகுத்துவர். ஆனால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட உலகின் முதல் இலக்கண நூலான பாணினியின் ‘அஷ்டாத்யாயி’ அதன் மீது எழுந்த ‘வார்த்திக’ , ‘மஹாபாஷ்ய’ உரைகளைப் படிப்போருக்கு இந்த மாற்றங்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்தது என்பது விளங்கும். அதுமட்டுமல்ல. நம்முடைய தமிழ் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்கியோர் இப்படி மாற்றிப் பேசி இருப்பதையும் அறிவர்.

பாணினி இலக்கணத்துக்கு முன்னர்  64 இலக்கண வித்தகர் இருந்தனர். அவர்கள் பெயர்ப் பட்டியல் இருக்கிறது. அதில் 3, 4 பேரைச் சொல்லி தனது கருத்து வேறுபாட்டையும் பாணினி விளக்குகிறார்.

வேதகால உச்சரிப்பு இலக்கணத்துக்கு ‘பிராதிசாக்யம்’ என்று பெயர். அதில் என்ன எழுத்து, எப்படி மாறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மாதங்கள் என்று நமது காலண்டரில் பொறிக்கப்படும் சித்திரை முதல்- பங்குனி வரையான 12 மாதங்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். இதை எப்படி தமிழ்ப் படுத்தினர் என்பதை இலக்கண வாயிலாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்குகிறார். அதைச் சொல்லிவிட்டு ஒரு அபூர்வமான விஷயத்தையும் சொல்கிறார். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரு மூல மொழி இருந்திருக்க வேண்டும் என்று!! அதையே நானும் இதுவரை 100 கட்டுரைகளில் குறிப்பிட்டுவிட்டேன். உலக மொழிகள் அனைத்தும் தமிழ், சம்ஸ்கிருதத்தில் இருந்து கிளை விட்டுப் பிரிந்த மொழிகளே என்றும் எழுதி வருகிறேன்.

TION  = SION

கம்பன் பா’ஷை’ என்பதை பா’டை’ என்பான் . அதை ஒட்டியே நாமும் வி’ஷ’யம் என்பதை வி ‘ட’ய ம் , வரு’ஷ’ம் என்பதை வரு’ட’ம் என்று எழுதி வருகிறோம். கம்பன் ஓ’சை’/ ஒலி என்பதை ஓ’தை’ என்று பாடுகிறான்.

இப்படி ‘ஷ’ என்பது ‘த’ அல்லது ‘ட’ ஆக மாறுவது இன்று நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களில் உளது.  டியன் TION  என்று எழுதிவிட்டு SION ஷன் என்று படிக்கிறோம்.

ஆகையால் மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பல்களோ அதைப் பின்பற்றும் திரா விடக் கும்பல்களோ ஏதேனும் ஆரிய- திராவிட என்ற இன பேதத்தைப் புகுத்தினால் உடனே பழைய பாடல்களைப் படியுங்கள். அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும். உலகம் எங்கும் இப்படி சொற்கள், எழுத்துக்கள் பிறழ்வதற்கு நமது உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களே காரணம். சில மொழிகளில் சில எழுத்துக்கள் இராது. சில மொழிகளில் கூடுதலாக எழுத்துக்களைச் சேர்ப்பர்.

கம்பன், பூசை (CAT), பாடை (LANGUAGE) பற்றிப் பாடிய பாடல்கள்

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

                     மூவர் ஆனவர் தம்முளும் முந்திய

                     நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்

                     பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள். அம்மூவர் –வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆவர். ”அவர்களில் முதன்மையான நாவன்மை நிரம்பப்பெற்றவரான வால்மீகி உரைத்த முறையே நான் இக்காப்பியத்தைச் செய்த முறையாகும்.” என்று கம்பன் கூறுகிறான்.

 பூனையும் பாற்கடலும் 

வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொடங்குகிறான். எந்தப் புலவனும் நூல் தொடங்குமுன் அவையடக்கம் பாடுவது மரபு. கம்பனும் அவையடக்கம் பாடுகிறான்.

       ”ஓசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

       ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

       காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ”            [4]

[ஓசை= ஒலி; பூசை=பூனை; அறைதல்=சொல்லுதல்; காசு=குற்றம்]

xxxx

கருடன் – கலுழன் ஆன கதை R=L, D=L

இதைவிட சுவையான கதை ‘கருடன்’ ‘கலுழன்’ ஆன கதை. ஆழ்வார்களும் கம்பனும் கருடனை (FALCON/ EAGLE)  ‘கலுழன்’ என்பர்.

‘ட’ – ஒலி ‘ல /ழ’ – ஒலியாக மாறியது ஆரிய- திராவிட தொடர்பால் என்று மார்கசீய சிகாமணிகளும் மாக்ஸ்முல்லர் கும்பல்களும் எழுதி வைத்துள்ளன. ஆனால் இது அசோகர் கல்வெட்டிலும், பாணினீய வார்த்திக உரையிலும், சோழர் கல்வெட்டிலும் கூட உள்ளன. அதாவது 2000 ஆண்டுகளாக “சோழ – சோட- சோர” (CODA, COLA, COROMONDAL COAST) என்ற மூன்று வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் எவராவது ஆரிய- திராவிட என்று பேசப் புகுந்தால் ‘அரை வேக்காடுகள்’ என்று சொல்லி காதை பொத்திக்கொள்ளுங்கள். முடிந்தால் பேசுவோரின் வாயையும் பொத்திவிடுங்கள்.

–SUBHAM–

tags– பூசை, பூனை, ஓதை,  பாடை , கருடன், கலுழன்,  

வாங்க, வாங்க, நல்லா சிரிப்போம்! (Post.9142)

Compiled  BY KATTUKKUTY

Post No. 9142

Date uploaded in London – – 14 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாங்க , இன்னிக்கு  பொங்கல் பண்டிகை. நல்லா சிரிச்சு மகிழ்ந்து நாளைக் கொண்டாடுவோம். இதோ! சென்னை கற்றுக்குட்டி சீனிவாசன்,   50 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்த்து வைத்த ஜோக்குகள் – தமாஸ்கள் — நகைச் சுவை துணுக்குகள்.

–subha–

 வாங்க, நல்லா சிரிப்போம்

சூரியனைப் போற்றித் துதிப்போம்; புகழும் வளமும் பெறுவோம்!(Post.9141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9141

Date uploaded in London – –14 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

14-1-2021 பொங்கல் திருநாள்!

சூரியனைப் போற்றித் துதிப்போம்; புகழும் வளமும் பெறுவோம்!

ச.நாகராஜன்

1  

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க! தமிழ் மக்கள் வாழ்க!! தமிழ்நாட்டின் புகழ் ஓங்குக!

பாரதம் பாருக்குள்ளே சிறந்த நாடாகச் சிறந்து விளங்குக!!

2  

சூரியனைத் தொன்று தொட்டு இருந்த அனைத்து நாகரிகங்களும் தொழுது போற்றியுள்ளன.

வேத நாகரிகம் சூரியனுக்குத் தனி ஒரு இடத்தைத் தந்து சிறப்பிக்கிறது.

இதை ராமாயண மஹாபாரத இதிஹாஸங்கள்  மூலமாகவும் 18 புராணங்கள், 18 உப புராணங்கள் மற்றும் இதர தர்ம சாஸ்திரங்கள், ஆகமங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது.

நமது கோவில்களில் சூரியனுக்கு உரிய வழிபாடு சிறப்பாக உண்டு.

நமது அனைத்து மொழி இலக்கியங்களிலும் சூரியனைப் போற்றாத இலக்கியமே இல்லை.

3

மஹாகவி பாரதியார் ஞாயிறு – ஸூர்ய ஸ்துதி என்றும் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்றும் இரு கவிதைகள் புனைந்துள்ளார்.

“என்றன் உள்ளம் கடலினைப் போலே

எந்த நேரமும் நின்னடிக் கீழே

நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும்

நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி

நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா

ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா”

என்று இப்படி ஞாயிறு – ஸூர்ய ஸ்துதியில் வேண்டுகிறார்.

ஞானபானு பத்திரிகையை வாழ்த்தி அவர் புனைந்த செய்யுள் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்னும் கவிதையாகும்.

“அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் தெய்வம்

மனத்திலே சக்தி ஆக வளர்வது நெருப்புத் தெய்வம்

தினத்தொளி ஞானம் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்

இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று உரைக்கும் வேதம்”

என்று இப்படிக் கூறி வேத பிரமாணத்தைத் தன் கவிதையிலே சுட்டிக் காட்டுகிறார்.

அவரது வசன கவிதையிலே அவர் போற்றும் ‘ஞாயிறு’ போற்றிப் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான பகுதி!

4

மயூர கவி இயற்றிய சூர்ய சதகம் நூறு பாடல்களைக் கொண்டது. சூர்ய வழிபாடு அவரது தொழு நோயைத் தீர்த்தது. அது மந்த்ர பூர்வமானது. அனைவரும் படிக்க வேண்டியதாகும்.

5

சூர்ய அஷ்டோத்திரம் மஹாபாரதத்தில் இடம் பெறும் அற்புதமான 108 சூரிய ஸ்துதி ஆகும். பாண்டவர்கள் வன வாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர், யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்த ஸ்தோத்திரம் இது.

இதைத் துதித்ததன் பயனாக என்றும் உணவுக்கு குறை இல்லாமல் உணவை வழங்கும் அக்ஷயபாத்திரத்தை அவர் பெற்றார். அதன் பயனாக அவர்களும் உணவைப் பெற்றனர்; வந்த அதிதிகளையும் உபசரித்தனர்.

6

சூர்யோபநிஷத்து சூர்ய மந்திரங்களைத் தருகிறது; பீஜ அக்ஷரங்கள் கொண்டது.

‘ஆதித்யாய வித்மஹே சஹஸ்ர தீரணாய தீ மஹி; தந்ந: ஸூர்ய ப்ரசோதயாத்’ என்பது சூர்ய காயத்ரி ஆகும்.

7

சூர்யாஷ்டகம் சிவபிரான் கூறி அருளிய எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது.

தம் ஸூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞ்ஞான  மோக்ஷதம் |

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம் ||

என்பது எட்டாவது ஸ்லோகம்.

உலகின் தலைவரும் அறிவையும் அறிவின் சுய அனுபவத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவரும் எல்லாப் பாவங்களையும் போக்குபவருமான சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

8

ரிக் வேதம் சூரியனை ஸாவித்ரி, ஸவிதா என பலவாறாக அழைத்துப் போற்றுகிறது.

ஓ! ஜோதியே

சூரியனை, அழிவிலா அந்த நட்சத்திரத்தை

வானம் ஏற வைத்து மனித குலத்துக்கு

வெளிச்சத்தை அருளினாய்!

ஓ! தேவனே!!

மனித இனத்தின் ஒளிச் சின்னமே!!!

பூமியின் அன்பே, எழுந்திரு,

இந்தப் பாடலைப் பாடுகிறவனுக்குப் பலன் அளிப்பாய்!

என அருமையாக இப்படி வேதம் துதிக்கிறது.

9

சூரிய நமஸ்காரம் உடல் பயிற்சிகளில் எல்லாம் சிறந்த உடல் பயிற்சி.

மந்திர பூர்வமாக இதைச் சொல்லி இதில் உள்ள 12 ஆசனங்களைச் செய்யும் ஒருவன் ஆரோக்கியத்துடன் பூரண ஆயுள் வாழ்வதை இது உறுதிப் படுத்துகிறது.

10

சூரியனுக்கான தனிக் கோவில்கள் பல பாரத தேசத்தில் உண்டு.

தமிழகத்தில் உள்ள சூரியனார் கோவில் சூரியனுக்கான தனித் தலம் ஆகும்.உஷா தேவி, ப்ரத்யுஷா தேவியுடன் கூடிய சூரியன் இருக்க நின்ற கோலத்தில் குரு பகவான் எதிரில் இருக்கப் பெற்ற அற்புத ஆலயம் சூரியனார் கோவில்.

ஒரிஸாவில் கொனார்க்கில் உள்ள  சூரியனின் கோவில் வரலாற்றுப் புகழ் பெற்றது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மொதேராவில் உள்ள சூரியனின் கோவில் சூரியனின் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் தலமாக அமைந்துள்ளது.

11

ராவணனை வதம் செய்ய ராமருக்கு அகஸ்திய மா முனிவர் அருளியது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.

வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறுவது இது.

இதைச் சொல்வோர் அனைத்து நலங்களையும் பெறுவது உறுதி.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் |

ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் ||

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசனம் |

சிந்தா சோகப்ரசமநம்  ஆயுர்வர்த்தநமுத்தமம் ||

என்பதால் இதைச் சொல்வதால் புண்ணியம் சேரும்; அனைத்து எதிரிகளும் அழிந்து போவர்; எப்போதும் எதிலும் வெற்றியைப் பெறுவர்; தினமும் இதைச் சொல்லுதல் வேண்டும்; அழியாதது; பரம மங்களத்தைத் தருவது; சிந்தையில் ஏற்படும் சோகத்தைத் போக்குவது; ஆயுளைத் தருவது; சிறந்தது என்பது பெறப்படுகிறது.

12

எல்லையற்ற ஆதித்தனின் புகழ் சொற்களுக்கு அப்பாற்பட்டது.

மற்ற தெய்வங்களை பிரத்யக்ஷமாகக் காண்பது அரிது;

ஆனால் பிரத்யக்ஷமாக ஒவ்வொருவரும் காணக் கூடிய தெய்வம் ஸூர்யன்.

இவனை வணங்கி வழிபடுவோமாக!

அனைத்து நலமும் பெறுவோமாக!!

***

tags -சூரியன் , துதி, 

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 24 (Post 9140)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9140

Date uploaded in London – –13 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -24

3-2-54

KAPAATA – DOOR; KATHAVU IN TAMIL

KAPATAPURAM WAS THE SEAT OF SECOND TAMIL SANGAM/ TAMIL ACADEMY

MORE OVER PANDYA KAVATA PERAL IS MENTIONED IN ARTHASASHTRA OF KAUTILYA ; PANDYA KAVATA IS IN VALMIKI RAMAYANA AS WELL. VALMIKI RAMAYANA SAYS IT WAS DECORATED WITH GOLD AND PEARLS.

P= V

KAPATA IS ALSO WRITTEN AS KAVATA WHICH BECOMES KATAVA= KATAVU IN TAMIL (Inter change of words like Madurai becoming Maruthai, Kuthirai becoming Kuruthai)

கபாடபுரம் பாண்டியரின் இரண்டாவது தலை நகர். தென் மதுரையைக் கடல் கொண்ட பின்னர் இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்த இடம் . இதை வால்மீகி ராமாயணம் முத்தும் தங்கமும் நிறைந்த இடம் என்று வருணிக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் பாண்டிய கவா டம்  என்ற முத்தைக் குறிக்கிறது கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் .

இதில் ப- வ ஆனதைக் காண்கிறோம். கபட= கவட= கதவ = கதவு

கபாடம் என்னும் ஸம்ஸ்க்ருத்ச் சொல் கதவு என்று மாறுகிறது

மதுரை – மருதை, குதிரை- குருதை ஆவது போல !

XXXX

3-2-56

As- is

Asti – he is

Xxx

3-2-56

Karana is used by Panini as an instrument, a cause, that which makes

Tolkappiar used it in third part as Ritual, Rules

Marriage rules and rituals were created when cheating increased

Aiyar Yaththanar Karanam

No other Sangam poet used it.

கரணம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் சடங்கு, விதிமுறைகள் என்பதைக் குறிக்கிறது

திருமண ச் சடங்குகளை ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று சொல்கிறார் தொல்காப்பியர். இது பாணினியின் புஸ்தகத்தில்  ‘ஒரு கருவி’, ‘ஒரு காரணப் பொருள்’ என்று சொல்லப்பட்டுள்ளது. சுப கரண என்றால் மகிழ்ச் சி தரும்  என்று அர்த்தம்.

Xxx

3-2-57

Nagna – dress less = naked

xxxx

3-2- 59

Crunj – bend = cringe

Dik – direction

திக்குத் தெரியாத காட்டிலே

திசை அறியும் பறவை

Xxx

3-2-61

Yug, yuj = yoke

Yoga – mind and body working together

யுக -யோக – நுக

ஒன்று சேர்க்கும் = மனதையும் உடலையும் ஒன்றுபடுத்துவது – யோகா

Bit, chit = cut

B = v

Bit = vettu in tamil

Chit +bit = sinnaapinnamaana

சி ட் பிட் = சின்னாபின்னம்

சிட் = கட் = வெட்டு

பிட் – துண்டாக்கு – வெட்டு

Pravid = scholar= prodigy

கிராமணி – கிராமத்து தலைவர்.

சி ட் பிட் = சின்னாபின்னம்

சிட் = கட் = வெட்டு

பிட் – துண்டாக்கு – வெட்டு

Graamani – head of the village or group – used until very recently

Antarishad – sky living, space living

Inter – antar

அந்தர் இன்டெர் – அந்தர, மேல் உலகம்

–subham—

கொஞ்சமாவது சிரியுங்கப்பா! (Post No.9139)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9139

Date uploaded in London – – 13 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்னை கற்றுக்குட்டி நமக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோட்டு நோட்டாக பழங்கால ஜோக் jokes குகளை ஒட்டி வைத்து, சேகரித்து வைத்து இருக்கிறார். சில ஜோக்குகள் — தமாஷ்கள் –சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் . மொத்தத்தில் ‘ஜோக்’ குகள் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் . இதோ 50  ஆண்டு பழமையான JOKES ஜோக்குகள்.

இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துதான்!!

கூழ் ஆனாலும் குளித்துக் குடி ; கந்தையானாலும் கசக்கிக் கட்டு ; கார்க் ஆனாலும் ஹெலிகாப்டரிலிருந்து பிடுங்கு 

நகைச் சுவைத் துணுக்குகளைப் பார்த்தவர்கள் நல்லாவே சிரிச்சுருப்பாங்க

–subham—

Tags – தமாஷ் , ஜோக் ,நகைச்சுவை

இந்திரஜித்தின் பேய்க் கொடி! (Post No.9138)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9138

Date uploaded in London – –13 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தில் ராவணனின் வீணைக் கொடி பற்றி கம்பன் பாடிய இடங்களை முன்னொரு கட்டுரையில்  கண்டோம். மன்மதனின் மீன் கொடி பற்றியும், மேலும் பலரின்  சிங்கக் கொடி இந்திரஜித்தின் பேய்க்  கொடி பற்றியும் கம்பன் பாடுகிறான்.

சிங்கம், வீணை , மகரம், மீன் என்றால் உடனே நம் மனக்கண் முன் அந்த உருவங்கள் வந்து விடுகின்றன.  பேய்க் கொடி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் ? கற்பனை தான் செய்யவேண்டும்!

முதலில் யுத்த காண்ட  பாடலைப் படித்துவிட்டு சிறிது ஆராய்ச்சியும் செய்வோம் .

இந்திர ஜித் போர்க்களம் வந்த காட்சியை யுத்த காண்டத்தில்  வருணிக்கையில்

“பேய் ஆர்த்து எழுந்து அடு நெடுங்கொடி பெற்றது அம்மா”

— என்று வியப்புகுறியுடன் பாட்டை முடிக்கிறான் கம்பன்

பொருள்

இந்திரஜித் வந்து விட்டான், வந்துவிட்டான் என்று பேய்கள் ஆனந்தத்தால் கூத்தாடுகின்ற பெரிய கொடிகளைப் பெற்றது  இந்திர ஜித் ஏறிய  தேர்.

பேய்க் கொடியின் உருவம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தும் கப்பல்களில் கபாலம் என்னும் மண்டை ஓடுகள்  காட்சி தருகின்றன. அவைகளைப் போல பேய் உருவம் பொறித்த , அச்ச்சுறுத்தும் கொடிகளை இந்திரஜித் பயன்படுத்தி இருக்கிறான் . இங்கு ஒரு உள வியல்- மனவியல் குறிப்பும் கிடைக்கிறது

கொடிய குணம் படைத்த துரியோதனனுக்கு பாம்புக் கொடி . பேய்க் குணம் படைத்த இந்திரஜித்துக்கு பேய்தான் கொடி!  மனம் போல மாங்கல்யம் !

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

மனத்தின் அழகு கொடியில் தெரிகிறது.

கம்பராமாயண உரைகாரர்களும் இந்திரஜித்தின் கொடியில் பேய்கள் இருந்ததை தெளிவாகக் கூறுகிறார்கள்

Xxxx

கும்பகர்ணனின் சிங்கக் கொடி

கும்பகருணன் , ராவணன் தம்பி. அவன் போருக்கு வந்த காட்சியை கம்பன் யுத்த காண்டத்தில்  வருணிக்கிறான் மலை போன்ற தோள் , பரந்த மார்பு. ஆனால் அவன் தேரில் சிங்கக் கொடி பறக்கிறது. எல்லா வகையிலும் ராவணனை ஒத்து இருக்கிறான் ஆனால் வீணைக் கொடிக்குப் பதிலாக சிங்கக் கொடி பறக்கிறதே ! யாரப்பா இவன்? என்று விபீஷணனை வினவுகிறான் ராமன். அதற்குப் பதில் கூறிய விபீஷணன் அவன்தான் கும்ப கருணன் என்கிறான். இதோ சிங்கக்கொடி பாடல்…….

வீணை என்று உணரின் அஃ து அன்று விண்தொடும்

சேண் உயர் கொடியது  வய வெஞ்சீயமால்

காணினும் காலின் மேல் அரிய காட்சியன்

பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால்

பொருள்

வானை முட்டும் உயரத்துக்கு கொடி. அதில் வீணையைக் காணவில்லையே .

சிங்கக் கொடி பறக்கிறது . அவனையோ காற் று வேகத்தைக் கடந்து மனோவேகத்தில் பார்த்தாலும் காண முடிவதில்லை . அணிகள் அழகு செய்யும் மார்பை உடைய இவன் யார் ?

இது ராமனின் கேள்வி

xxx

மன்மதனின் மகர கேது

கம்பராமாயணம் பால காண்டத்தில் மன்மதனின் மகரக் கொடி பற்றி பாடினான்.

வள் உறை வயிர வாள் மகர கேதனன் – என்று உண்டாட்டுப் படலத்தில் மகர கேது பற்றிச் சொல்கிறான்.

இதன் பொருள் – வைரம் போன்ற உறுதியுடைய வாளை உடைய மன்மதனின் மீன் கொடி — என்று உரை கூறுகிறது  மகர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சுறா மீன் , முதலை என்ற சிறப்புப் பொருள்களும் உண்டு .

–subham—

tags — பேய்க் கொடி , மீன் கொடி , சிங்கக் கொடி , மகர கேது

‘ய’ என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? (Post No.9137)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9137

Date uploaded in London – –13 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 11-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி அவர்கள் கேட்டுள்ள கேள்வி ய என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? என்று.

திரு சுவாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜே – J மற்றும் ஒய் Y ஆகிய  இரு எழுத்துக்கள் மாறும் விதத்தைச் சுட்டிக் காட்டி ஜீஸஸ் எப்படி யேசுவாக ஆகிறது என்பதையும் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார்.

இதே போல வங்காள மொழியில் பாகபதம் என்பது தமிழில் பாகவதம் ஆகும். ஷிப் சாகர் என்பது தமிழில் சிவ சாகர் ஆகும். பெங்கால் என்பது வங்காளம் ஆகும்.

இதே போல ஸ்தோத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் தமிழில் தோத்திரம் ஆகும்; ஸ்துதி துதி ஆகும் இப்படி மாறுவது பிரதேச ரீதியிலான இயற்கையாகும்.

இனி ஆதார எழுத்துக்கள் 51. இவற்றில் ‘ய’வும் ஒன்று. அதைப் பற்றிய கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே ஒரு தேவதை உண்டு. பல அர்த்தங்கள் உண்டு. இவற்றை தந்திர சாஸ்திரங்களில் காணலாம். பிரயோக முறையை சிறந்த தாந்த்ரீகர்களே சொல்ல முடியும்.

ய என்ற எழுத்திற்கு மந்த்ராபிதானம், ப்ரகாராந்தர மந்த்ராபிதானம், ஏகாக்ஷர கோச, பீஜ நிகண்டு, மாத்ருகா நிகண்டு, காமதேனு தந்த்ரம் உள்ளிட்ட ஏராளமான தந்திர சாஸ்திரங்களில் பல அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் என்ற தந்த்ர சாஸ்திரத்தில்

ய என்ற எழுத்திற்கு கீழ்க்கண்ட அர்த்தங்கள் தரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டலாம்.

Ya denotes : Vani, Vasudha, Vayu, Vikrti, Purusottama, Yuganta, Svasana, Sighra, Dhumra, Arci, Pranisevaka, Brahma, Jati, Lola இவை உள்ளிட்ட சுமார் 55 அர்த்தங்கள் உண்டு. இன்னும் பல்வேறு தந்திர சாஸ்திரங்கள் இன்னும் பல அர்த்தங்களைத் தருகின்றன.

ஸித்த சாபர தந்திரம், சேஷ சம்ஹிதா, பாத்ம சம்ஹிதா ஆகிய நூல்கள் ஒவ்வொரு எழுத்தின் தேவதை, நிறம், அந்த எழுத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் உள்ளிட்டவற்றைத் தருகின்றன.

‘ய’ பற்றி சித்த சாபர தந்திரமும், பாத்ம சம்ஹிதாவும் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்:

‘ய’ பற்றி சித்த சாபர தந்திரம் தரும் அபூர்வ உண்மைகள் :-

இந்த ‘ய’கார தேவியின் பெயர் தீபிநீ. வெண்மையான சரீரத்துடன் 8 கைகளோடு சிம்ம வாஹனம் ஏறி 1) சூலம் 2) வில் 3) பாணம் 4) பாசம் 5) கத்தி 6) கேடயம் 7) வாத ஹஸ்தம் 8) அபயம் என இப்படி 8 வகை ஆயுதத்துடன் பிரகாசிப்பவள் ஆகும்.

பாத்ம சம்ஹிதா தரும் விவரங்கள் :

இந்த ‘ய’காரத்திற்கு வாயு தேவதையாகும். தாம்ர வர்ணம். இரண்டு கைகளிலும் 1) அங்குசம் 2) த்வஜம் தரித்து ஸர்வாபரணங்களுடன் மான் மீது ஏறிக் கொண்டு கம்பீரமாக விளங்குவார்.

இது வாயு தேவதை ஆனதால் காற்று போல் எல்லாவற்றையும் பரிசுத்தமாக்கும் தன்மை உடையது. மேலும் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி உடையதாகும்.

அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற  பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

சைவ சித்தாந்த நூல்கள் ய என்ற எழுத்திற்கான சிறப்பு அர்த்தத்தை விரிவாக எடுத்துரைக்கின்றன. உமாபதி சிவாசாரியார் அருளியுள்ள கொடிக் கவியில் நான்காம் பாடல் நம சிவாய என்பதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் ரகசியத்தையும் தருகிறது.

சிவாய நம என்பதில் சிகாரத்தில் சிவமும், வகாரத்தில் அருளும், யகாரத்தில் உயிரும், நகாரத்தில் திரோதான சக்தியும் மகாரத்தில் மலமும் உள்ளன. சிகார வகாரங்களை முதலில் வைத்து உச்சரித்தால் அது வீடு பேற்றைத் தரும். இதை நல்லாசிரியர் அல்லது குருவிடமிருந்து உபதேசம் மூலம் பெறுதல் வேண்டும். அப்போது பலன்கள் தெரியும்.

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரத்தில் – ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி; தியோயன: ப்ரசோதயாத் என்பதில் வரும் 24 எழுத்துக்களும் 24 விதமான சக்தியைத் தருகின்றன.

இதில் வரும் ஸ்ய என்பது இடது மார்பைக் குறிக்கிறது. யாத் என்பது தலையைக் குறிக்கிறது. காயத்ரி என்பதில் வரும் மூன்று எழுத்துக்களில் க என்பது கங்கையையும் ய என்பது யமுனையைய்ம் த்ரி என்பது த்ரிவேணி சங்கமத்தையும் குறிக்கிறது.

காயத்ரி என்பதில் வரும் ய என்பது விஷ்ணுவைக் குறிப்பதாக அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுகிறார்.

காயத்ரி மந்திரத்தில் வரும் எழுத்துக்களின் பயன் குறித்து காயத்ரி வர்ணமாலா ஸ்தோத்ரம் என்று ஒரு ஸ்தோத்ரம் உள்ளது. ஒவ்வொரு அக்ஷரத்தையும் பற்றிய ரகசியத்தை அருளும் ஸ்தோத்ரம் இது.

அதில் ஸ்ய எழுத்து பற்றி வரும் ஸ்லோகம் இது:-

ஸ்யகாரம் தாம்ரவர்ண ச தரண்யா ச சதார்ச்சிதம் |

பசு ஹத்யாக்ருதம் பாபம் ஷகாரோ தஹதே க்ஷணாத் ||

The Syllable ‘Sya’ is of the colour of copper and always worshipped by Dharani (mother earth). The Sins accrued on account of killing or slaying animals will get washed away.

ஸ்ய’ என்ற எழுத்து தாமிரத்தின் நிறத்தைக் கொண்டது. அது பூமாதேவியால் சதா வணங்கப்படுகிறது. மிருகங்களை வதை செய்த பாவம் மொத்தமாக ஒரு க்ஷணத்தில் நீங்கி விடும்.

இப்படிப் பல ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது நமது எழுத்துக்கள்.

இவற்றையெல்லாம் நல்ல முறையில் தொகுத்து அமைத்து செய்யப்பட்டவைகளே நமது அஷ்டோத்திரங்கள், சஹஸ்ரநாமங்கள். அதிலிருந்தே நமது பெயர்களையும் நம் முன்னோர்கள் நமக்குச் சூட்டுகின்றனர்.

இவ்வளவு நன்மைகளையும் தெரிந்து கொண்டு நமசிவாய என்று சொல்லலாம். காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம். ஓம் நமோ நாராயணாய என்று சொல்லலாம்.

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

பல்லக விளக்கு அது பலரும் காண்பது

நல்லக விளக்கு அது நமசிவாயவே

அன்பர்கள் ராம் குமார் ராய் தொகுத்துள்ள Dictionaries  of

tantra Sastra (prachya prakashan, Varansi 221002) என்ற ஆங்கில புத்தகத்தையும், ஊரன் அடிகள் எழுதியுள்ள இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலையும், வீராசாமி பத்தர் எழுதிய Gyatri Mantra என்ற ஆங்கில புத்தகத்தையும் படித்துத் தெளிவு பெறலாம். ஆங்கிலத்தில் உள்ள இன்னொரு நூல் The Glories of Gayatri. இதை எழுதியவர் பாண்டுரங்காசார்யா சீனிவாசாரிய வாக்கர் என்பவர். குருக்ருபா பரகாஸனா. 606, 14வது குறுக்குத் தெரு, Magadi chord Road, Bangalore 560040 வெளியீடாக இது வந்துள்ளது.

நன்றி, வணக்கம்.

அபிசாரம் பற்றி ஒரு அன்பர் கேள்வி கேட்டிருக்கிறார். ஆபிசாரம் என்னும் செய்வினை என்பதை யாரும் செய்யக் கூடாது. அது செய்தவரையே திருப்பித் தாக்கும். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆசார்யர்களை அணுகி தக்க நிவாரணத்தை அடையும் உபாயத்தைப் பெறலாம்.

Insects – பூச்சி பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் – அவரது ஆராய்ச்சி நூலுக்காக. அவருக்குத் தனியே பதில் அனுப்பப்படும். அனைவரும் பயன்பெறத் தக்க விதத்தில் கேட்கப்படும் கேள்விகளே இந்தப் பகுதியில் இடம் பெறும். நன்றி, வணக்கம்.

***

tags – ‘ய’ , குறில் எழுத்து, 

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 23 (Post 9136)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9136

Date uploaded in London – –12 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -23

3-2-28

Vatamajah – going with wind

Vaata for wind is used in medical literature

வாதாத்மஜ – காற்றோடு பறக்கும்

வா த, பித்த, கப என்பது தமிழ் மருத்துவ நூல்களிலும் உளது

வாத = வாயு

Xxx

3-2-29

Naasikaa- nose

நாசிகா = மூக்கு, நோஸ் /ஆங்கிலம்

Xxx

3-2-30

Naadi , naala – pipe

நாடி, நாளம் = குழாய்

இரத்த நாளம் , நாடித் துடிப்பு

முஷ்டி – பிஸ்ட் /ஆங்கிலம்

மூட்டு

Mushti – fist

M = F

ம = ப

Xxx

3-2-33

Sthaali = thaazi

ஸ்தாலி = தாழி

Xxx

3-2-34

Mitham- kuraivaaka

மிதம் = குறைவாக

xxx

3-2-35

Arunthutha-ariththu thinna

அருந்துத =  அரித்து எடுக்கவேண்டிய

Xxx

3-2-37

Paani = hand

பாணி – கை

P = M

Manual = paani

Irammatha- one who enjoys drinking

இரம் மத = ரம் ???? Rum???

Xxx

3-2-38

Vatha speak

வத= பேசு

வதந்தி 

Vaartha =  word

வார்த்த = வார்த்தை =

வசம் – கீழ்ப்படிதல் உள்ள

Vasam obliging, obeying

Mithangam = methuvaaka

மிதங்கம் = மெதுவாக

Xxx

3-2-38

Vihanga =flying

விஹங்க = பறவை

Vihanga =  Wing

Vihaka, Vihanga, Vihangama – bird

Xxxx

3-2-43

Bhaya- fear

பயம் – இந்திய மொழிகள் அனைத்திலும் உண்டு

Bhaya — Used in all Indian languages

Xxx

3-2-44

Madrakara – giving happiness

Merry

Xxxx

3-2-46

Bru – bear – bhaaram

Kutumba bhaaram – family burden

Bhaaram – one who carries/ bears –  weight

பாரம் = எடை , தாங்குவது குடும்ப பாரம்

Xxx

3-2-48

Antha = end

அந்த = முடிவு

வேதாந்தம் = வேதத்தின் முடிபு = உபநிஷத்

Vedanta – end of vedas – Upanishads – Gist of vedas

Anantha – un ending = endless

Xxxx

Anantha – un ending = endless

அன ந்த = முடிவில்லாத

Xxxx

3—2- 49

Vaarttika adds

Charu – beautiful = charming, charm

வாத்திகத்தில் உள்ள வார்த்தை

சாரு / மதி/ லதா

சாரு = அழகான = சார்மிங்/ ஆங்கிலம்

–சுபம் —

tags – Tamil words in Panini 23

LONDON CALLING (HINDUS) 11-1-21 (Post.9135)


Dr N Kannan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9135

Date uploaded in London – –12 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

AGENDA OF GNANAMAYAM BROADCAST ON 11 JANUARY 2021-

11TH JANUARY 2021

PRAYER- MRS ANNAPURANI PANCHANATHAN

WORLD HINDU NEWS ROUND UP –

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

SONG BY Mrs LAKSHMI Ramaswamy’s disciple MISS Maitreyi-

LONDON SWAMINATHAN’S ARTICLE -READ BY VAISHNAVI ANAND-

(Sambandar in Thruppugaz)

RANJANI DASARATHY’S SONG – EZAIKKU IRANGA ….

BENGALURU MR. S NAGARAJAN’S Q AD A ON LETTER “YA”–

Sri Lanka Sisters Sowmya and Akshaya song –

DR N .Kannan’s Talk on Alwars –

APPRX 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

YOUTUBE/ GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS – Gnanamayam11121

LONDON CALLING (TAMILS) 10-1-21 (Post No.9134)

DIRECTOR MR AMSHAN KUMAR
MR R.PATHMANABHA IYER

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9134

Date uploaded in London – –12 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

JANUARY 10, 2021 SUNDAY—THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER BROADCAST- PART OF GNANAMAYAM

PRAYER  BY MISS SWASTIKA PUJARAJA SHARMA FROM GERMANY

UJJAINI TEMPLE REPORT BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN FROM BENGALURU

Tiruppugaz -BY MRS JAYANTHI SUNDAR AND MRS SRILATHA SAIRAM

FILM DIRECTOR FROM CHENNAI MR AMSHAN KUMAR’S TALK FOLLOWED BY QUESTION AND ANSWER SESSION

INTRODUCED BY LONDON Mr. R.PATHMANABHAN IYER

LONDON Mr.BALA SUBRAHMANYAN’S –  RASAM PAATTU

SONG WRITTEN BY BHAVANANDA

Bharati Episode – No.4 BY SRI VIDHYA FROM DUBAI (8)

APPR. 70 MINUTES

DIRECTOR AMSHAN KUMAR, AUTHOR OF SIX BOOKS,AWARD WINNING DIRECTOR FROM CHENNAI

Mr Amshan Kumar  how he was attracted towards documentary production. He resigned a remunerative job in a bank to produce a documentary on Bharatiyar. He explained that very few archives were available from Bharatiyar’s real life and he had to travel to places where Bharai lived or worked.

He also told that his next book is coming out very soon. While answering questions from listeners he told that there are lot of things to be done in this field. Still we have no site where we can get links for all the documentaries.

Amshankumar who visited London three times showed his documentaries and one full length feature film in the past.

Gnanamayam told him that it is interested in showing his documentaries in its channel after getting his permission .

His talk was well received by the lsiteners.

Earlier Mr Pathmanathan Iyer told that Amshankumar is in this field of documentary production for over 25 years and authoring several books.

From Wikipedia:–

Amshan Kumar is an Indian filmmaker and writer. He has won a National Film Award for his documentary film Yazhpanan Thedchanamoorthy – Music beyond boundaries in the year 2015.[1][2][3] This is a lone Tamil non-fiction film to win a National Award in the past 17 years prior to this award [4] He is also a writer on films, his book Cinema Rasanai on film appreciation is being used as a textbook in many universities.[5] His debut feature film Oruththi was selected for the 2003 International Film Festival of India and was screened in the Indian Panorama section.[6][7][8] His second feature film Manusangada was screened in the 39th Cairo International Film Festival and also in the 48th International Film Festival of India (2017) in the Indian Panorama section.[9][10] He lives in Chennai.

Career

Amshan Kumar has made more than twenty five documentaries including Badal Sircar`s Third Theatre, Modern Art in Tamil Nadu,[11] Mangrove Forests, Nobel Laureate C.V.Raman, U.Ve.Saminatha Iyer, Tamil Poet Subramania Bharati[12] and Manakkal S.Rangarajan. His first directorial feature film in Tamil Oruththi selected for was shown in Indian Panorama based on a short novel by the renowned writer Ki. Rajanarayanan . It won the best film awards from Government of Pondicherry and Tamil Association of New Jersey.[13] His documentary on the Tavil Maestro Yazhpanam Thedchanmoorthy won the national award for the best arts/ cultural film in 2015.[3] It is the first Tamil non-feature film to win a National Award in 17 years.[14]

His second feature film Manusangada was selected in the Indian Panorama section of International Film Festival of India , Goa and was the only Tamil film to be selected that year.[15] The film had its world priemere in Jio MAMI Mumbai Film Festival[16] and its International Premiere at the Cairo International Film Festival.[17][18]

Xxx

What is Gnanamayam Channel?

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT  ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

YOUTUBE/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

tags — Thamiz muzakkam10121