231) திரியம்பகம் 232) 108 233) சிதம்பரம் 234) திருவொற்றியூர் தலத்தில் 235) காரைக்கால் அம்மையார் 236) மாணிக்கவாசகர், திருப்பபெருந்துறையில் 237) 1.திருவாலவுடையார் 2.காரைக்காலம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4. சேரமான் பெருமாள் நாயனார் 5. நக்கீர தேவர் 6. கல்லாட தேவர் 7. கபில தேவர் 8. பரண தேவர் 9. இளம்பெருமானடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்துப் பிள்ளையார் 12. நம்பியாண்டார் நம்பி 238) சந்திரஹாஸம் 239) சிதம்பரம் 240) இறைவன் : சுந்தரேஸ்வரர் இறைவி :மீனாக்ஷி 241) நம்பியாண்டார் நம்பி 242) கங்கைகொண்ட சோழீசுரர், கங்கை கொண்ட சோழ புரம் 243) சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. 244)ஔவையார் 245) நமசிவாய 246) ருத்திரனின் கண் என்று அர்த்தம் 247) சிவபிரானது மூன்று கண்களிலிருந்து சிந்திய மணியே ருத்ராக்ஷம் 248) மஹாபாரதத்தில் அனுசாஸனபர்வத்தில் வருகிறது. லிங்க புராணத்திலும் காணலாம். 249) மங்களகரமானவன், முழுமையானவன், தூய்மையானவன் என இப்படிப் பல அர்த்தங்கள் உண்டு. 250) ரிஷபம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
some pictures are sent by lalgudi veda; thanks.
கோவில் கோபுரம் எதற்காக ?
தமிழ் நாட்டில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 40,000 கோவில்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டைப்போல ஆந்திரம் கர்நாடகம், கேரளம், ஒரிஸ்ஸா வரை உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கே செல்லச் செல்ல கோபுர உயரம் குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் படை எடுப்பாகும். அவர்கள் வேண்டுமென்றே இடித்தது பாதி; மீதிப்பாதி இந்துக்களுக்கு நேரமின்மை; வெளி நாட்டானை விரட்டுவதிலேயே முழு நேரமும் போய்விட்டது. தென்னகத்தில் இந்து மத விரோதிகளின் தாக்குதல் குறைவு. மாலிக்காபூர் என்ற வெறியன் படையெடுப்பைத் தவிர மற்ற பெரிய தாக்குதல் இல்லை. அவன் போகாத இடத்திலுள்ள பெரிய கோவில்கள் பிழைத்தன. அவன் அழித்த பல கோவில்களையும் தெலுங்கு தேச மன்னர்கள் புனரமைத்து புகழ்க்கொடி நாட்டிச் சென்றனர்.
உயர்ந்த கோபுரங்களுக்குப் பின்னால் உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.இதை ஆகம நூல்கள் விளக்குகின்றன. சில விளக்கங்களை இன்று காண்போம் .
கோபுரம்- ஸ்தூலலிங்கம்,
கொடிமரம் – நேர்மை,
பலிபீடம்-பாசம்,
நந்திதேவர்-பசு,
விநாயகர் – பிரணவம்,
திரைச் சீலை – மாயை,
சிவலிங்கம் – பதி,
பிரகாரங்கள் ஐந்து- பஞ்ச கோசங்கள்,
படிகள் – ஐந்தெழுத்து,
நடராஜர் – பஞ்ச்கருத்ய ஸ்வரூபி,
தக்ஷிணா மூர்த்தி- ஆனந்த ரூபி,
சோமாஸ்கந்தர் – சத், சித், ஆனந்தம்,
பார்வதி தேவி – சக்தி .
இது சிவன் கோவில் அமைப்பை நன்கு விளக்கும்.
இதைத் திருமூலரும் பாடி இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .
ஆய பதிதா னருட் சிவலிங்கமா
மாய பசுவுமடலே றென நிற்கு
மாய பலிபீட மாகுநற் பாசமா
மாய வரநிலை யாய்ந்துகொள்வார் கட்கே
–திருமூலரின் திருமந்திரப் பாடல்
சுவாமியும் அம்மனும் கர்ப்பக் கிருகத்தில் இருப்பர். இதற்கு மேல் விமானம் என்னும் அமைப்பு இருக்கும். நல்ல வருவாயுள்ள கோவில்களில் இந்த விமானம் தங்கக் கலசத்தால் மூடப்பட்டிருக்கும்.
இந்த விமானத்தை சிவாகமங்கள் பினருமாறு விளக்குகின்றன :-
உபபீடம் – பாதம்
அதிஷ்டானம் – முழந்தாள்
கும்பம் – நாபி
பஞ்சரம் – வயிறு
பாதவர்க்கம் – கை
பிரஸ்தரம்- தோள் மூட்டு
கண்டம் – கழுத்து
சிகரம் – முகம்
உஷ்ணிசவகை – சிகை
மஹாநாஸி மூக்கு
க்ஷுத்ர நாஸி – கண்
—-விஸ்வ கர்மீய வாஸ்து சாஸ்திரம்
****
ஸ்தபதி வை.கணபதி , மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையில் சொல்கிறார் –
1.நமது கோவில் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் ‘UNIVERSE IN MINIATURE’ என்பர்.
2.பஞ்ச பிரகாரங்களை பஞ்ச பூதங்கள் என்பர்.; அதற்குள் நுண்ணிய உருவில் இறைவன் இருக்கிறான் .
.
3.கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதற்குள் உள்ள மூர்த்தியை உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் விசுவகர்மீயம் என்ற நூல் வருணிக்கிறது .இதனால்தான் இதை கருவறை/ கர்ப்பக் கிருகம் என்று அழைக்கிறோம்.
4. இதை கோழி முட்டை வடிவிலும் — குக்குடாண்ட — வடிவிலும் அமைக்கலாம்; காஞ்சி புரத்திலுள்ள ‘ஜ்வர ஹரேஸ்வரம்’ இப்படி அமைக்கப்பட்டது. இது ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தெற்கு வீதியில் இருக்கிறது.
5.சிற்ப நூல்களில் கருவறை விமானத்தை ஸ்தூல லிங்கமென்றும் கருவறைக்குள் இருக்கும் நிஷ்கள வடிவத்தை சூக்ஷ்ம லிங்கம் என்றும் கூறப்படுகிறது.
6.மானுட உடல் உறுப்புகளை அங்கம், மஹாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்று நான்காகப் பிரித்துக் கூறுவது போல விமானத்தில்
அதிஷ்டானம் என்பது மஹாங்கம்- BASEMENT
ஸ்தம்பம் அல்லது சுவர்ப்பகுதி – அங்கம் – SUPER STRUCTURE
பிரஸ்தரம் – உபாங்கம் – ENTABLATURE
சிகரம் – பிரத்யங்கம் – DOME OR ROOF ஆகும்.
7.இதையே படுத்திருக்கும் நிலையில் – சயன கோலத்தில் — பார்த்தால் ,
கர்ப்பக்கிரம – சிரஸ் / தலை
அந்தராளம் – முகம்
சுகநாசி – கழுத்து
அர்த்த மண்டபம் – புஜம்/தோள்கள்
மகாமண்டபம் – வயிறு
பிரகாரம் – கால்கள்
கோபுரம் – பாதம்
இவ்வாறு பல நூல்கள் பல விளக்கங்களைக் கூறுவதற்கு காரணம் இந்தப் பிரபஞ்சமும் , மனித உருவமும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்துவதற்கே .
பாமர மனிதனிடம் பெரிய தத்துவங்களை சொற்பொழிவாற்றினால் விளங்காது . ஆனால் கோவிலைச் சுற்றுகையில் விளக்கினால் மனதில் பதியும். கற்றோருக்கும் கூட இக்கருத்துக்களை மனதில் பதிக்கும் MODELS / REPLICAS மாதிரிகள் இவை.
பள்ளிக்கூட, கல்லூரி சோதனைச் சாலைகளில் பல மாதிரி வடிவங்களை வைத்து இரசாயன, பெளதிக , உடற்கூறு தத்துவங்களை விளக்குவார்கள். அது போல பெரிய தத்துவங்களை விளக்கும் வடிவங்களே கோவிலின் அமைப்புகள்.
உதவிய நூல்கள் —
நால்வர் நெறி , லண்டன், 2002
கவசக் கொத்து , காரைக்குடி, 1981
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பணி மலர், 1963
*****
முந்தைய கோவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
கோவில் வகைகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கோவ…
1 Apr 2015 – ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் …
9 Jun 2015 – வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும்.
உள்ளம் பெருங் கோயில் … – Tamil and Vedas
tamilandvedas.com › 2017/04/06
6 Apr 2017 – மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் …
இடிதாங்கி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › இடித…
30 Mar 2017 – கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் … நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் …
திரயம்பகேஸ்வரம் … – Tamil and Vedas
tamilandvedas.com › tag › திரய…
10 Dec 2015 – அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 … திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது.
கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கர்ந…
27 Aug 2017 – மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் …
புத்தர் கோவில் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புத்…
6 Feb 2016 – ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514). IMG_3108 … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact. swami_48@yahoo.com).
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
DO WE NEED RELIGION?
RELIGION AS BASIS OF IDENTITY – 3
R. Nanjappa
Religion and National identity
In a way, we can see that the modern states are also coming round to such a view. In the wake of the phenomenon of Muslim immigrants / refugees going to the West, (and not to other Muslim countries) and the problems it poses, there is suddenly a realisation about the national identity of the local people. After the Second World War, these democracies adopted a liberal secular (non-religious) multicultural image. But the Muslim immigrants do not subscribe to this ideal and do not accept its implications. They enjoy the benefits of a liberal secular Western democracy, (which imposes financial and civic burden on the native societies) but do not accept the secular civil laws. This is a problem because immigrants of today become ‘citizens’ tomorrow! This has forced some introspection on the Europeans.
Some time ago, former British PM David Cameron reminded his countrymen that after all they were all Christians and it was those values which had shaped their character.
State multiculturalism has failed, says David Cameron- BBC, 5 Feb,2011
The Spectator, 24, December, 2015
Commentator Isabel Hardman noted:
David Cameron says Christian values make Britain successful
Now he seems to think it more important to talk about British identity not just in terms of culture but in terms of faith, which might seem rather intriguing given the general decline in church attendance. But he clearly thinks it’s a point worth making, even if stating that Britain is a Christian country inevitably attracts grumbles, even at Christmas.
Identity- determined by opponents!
It is a rather curious situation. Left to themselves, none bothers about an identity. But when the native people face external threats or are overwhelmed by immigrants who refuse to share their values, however secular they may be painted, the question of one’s own identity crops up. G.K. Chesterton once wrote that our identity is defined by our opponents or critics.As Aleks Krotoski pointed out in The Guardian 15 May 2011:
Historian Peter Furtado argues that the 17th century inspired the evolution of a national identity because Britain had to negotiate who she was within the global scene
When immigrants [mainlyMuslims] do not accept secular ideals, how can the British identify themselves- except as saying that they are Christians, ( i.e non-Muslims) after all! [ Even if they are not church-going ones !]
Who are the Americans?
This realisation came to the British rather late. Writing in 2004, Samuel Huntington had said about the Americans that a mere political ideology would not serve as national identity.
He said in his book “Who Are We ?”:
“adherence to the American Creed is by itself not enough to sustain an American identity. An example of a state that attempted to use ideology alone was the Soviet Union, which attempted to impose communism on different cultures and nationalities, and eventually collapsed. A similar fate could lie in store for the United States unless Americans “participate in American life, learn America’s language [English], history, and customs, absorb America’s Anglo-Protestant culture, and identify primarily with America rather than with their country of birth”.
In particular, Huntington suggests that Americans turn to Protestantism, and recognize that what distinguishes America from other countries is that it is an extremely religious Western country, founded on the principles of the Enlightenment and Protestant Reformation. [Wikipedia ]
So, after all the looney talk we have heard on secularism, multiculturalism, etc, all these years, we now realise how valuable it is , how indispensable, for a people to have a national identity based on religion!
Will Hindus learn any lessons from this ?
After all, Muslims and Christians in India have their identities firmly and formally established as Religious Minorities. So, where do Hindus stand? This has to be explored separately
facebook.com/gnanamayam நிகழ்ச்சியில் 14-9-2020 அன்று ஆற்றிய உரையில் நேரத்தைக் கருதி சில கருத்துக்கள் விடப்பட்டிருந்தன. அவற்றை இங்கு காணலாம்.
குற்றாலத்தில் ஒரு சம்பவம்!
காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க இன்னும் ஒரு சம்பவம்.
இது சமீப காலத்தில் நிகழ்ந்த ஒன்று. இதை 2-8-1998 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.
குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றார். குறுகிய பாதை ஒன்றைக் கடக்க அவர்கள் முயன்ற போது திடீரென்று அவரைக் காணோம். நண்பர்கள் அலறினர். கீழே விழுந்து வெள்ளமெனை விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். முத்துக் குளிப்பவர்களை அழைத்துத் தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தைக் காண்கிறேன் என்றார். உடனே அந்தப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டித் தடுத்து நிறுத்தினார் அவர்.
குகையின் நடுவில் ஒரு ஓட்டை போடப்பட்டது. யார் அங்கே இருப்பது என்ற கேள்விக்கு அந்த இளைஞர் பதில் தரவே ஓட்டை பெரிதாகப் போடப்பட்டு பிஸ்கட், குடி நீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் பெரிய துவாரம் ஒன்றைப் போட்டு உள்ளிறங்கி அவரை மீட்டனர்.
“எப்படி மூன்று நாட்கள் கழித்தாய்?” என்று கேட்ட போது இடைவிடாது காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்” என்றார் அவர்.
அக்ஷரங்களின் பயன்!
ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது பிரம்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரபஞ்சத்தில் 118 மூலகங்கள் (Elements) இருக்கின்றன. இவற்றில் 27 மூலகங்களின் சுவை யான கதைகளைச் சொன்னேன். கட்டிடம் கட்ட செங்கற்கள் தேவை. இந்தப் பிரபஞ்சம் செயல்பட 118 மூலகங்கள் /தனிமங்கள் தேவை .
இதோ டெல்லூரியம் (Tellurium) பற்றிய சுவையான கதை.
மூலக (Periodic Table) அட்டவணை பற்றி அறியாத ரசாயன மாணவன் இல்லை. எல்லா தனிமங்களையும் அவற்றின் குணங்களுக்கு ஏற்ப, அணு எண் வரிசையில் அமைத்துக் கொடுத்தவர் டிமிட்ரி மெண்டலீவ். அவரைப் படாதபாடு படுத்திவிட்டது இந்த டெல்லூரியம் .
1869-ல் அவர் முதல் மூலக /தனிம அட்டவணையை வரைந்தார். டெல்லூரியத்தை வரிசையின் முதலில் வைப்பதா அல்லது அயொடின் என்னும் மூலகத்தை முதலில் வைப்பதா என்று தெரியாமல் திணறினார். இதற்குக் காரணம் அவற்றின் அணு எடைகளாகும். டெல்லூரியம் அணு எடை 128, அயோடின் 127. சில சோதனைகளில் இரண்டும் ஒன்றை ஒன்று மிக நெருங்கி வந்தது அவரைக் குழப்பியது . விடை தெரியாதபோதும் அயோடினுக்கு அடுத்தபடியாக டெல்லுரியத்தை வைத்து — சரியான முறையில் — கணக்கை முடித்தார். அவருக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஐசடோப்புகள் எனப்படும் மூலகங்களின் அவதாரங்கள் பற்றித் தெரிந்தது. அப்போதுதான் துப்புத் துலங்கியது
ஐசடோப்புகள் பற்றி முன்னரே விளக்கியுள்ளேன் .
டெல்லூரியத்தின் ஐசடோப்புகளில் அதிகமாகக் காணப்படுவது டெல்லூரியம்- 130, 128 என்ற இரண்டு ஐசடோப்புகள் ஆகும். அவற்றின் சராசரி அணு எடை- 127.6
ஒரு அயோடின் ஐசடோப்பின் எடை 127. ஆனால் அதன் அணு எடை 126.9
ஆக ஐசடோப்புகள் செய்த குழப்பம் அவர் காலத்தில் தெரியாது. அப்போது அவை கண்டு பிடிக்கப்படவில்லை.
இனி மற்ற விஷயங்களைக் காண்போம்
லத்தின் மொழியில் ‘டெல்லஸ்’ என்றால் பூமி. நாம் பூதலம் , தளம் , தரை , தரணி என்று சொல்வதுடன் தொட்புடைய சொல்.
உயிர் வாழும் பிராணிகளுக்கு டெல்லூரியம் தேவையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பான தொழிலில் உள்ளோருக்கு வாய் நாற்றமும், உடல் நாற்றமும் அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்களைக் கூடுதல் வைட்டமின் சி எடுக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை வழங்குவர்.
இந்த தனிமம் உடலுக்குள் சென்றால் மரணம் சம்பவிக்கும் என்பது மூன்று போர்வீரர்கள் இறந்த போது தெரிந்தது. அவர்களுக்கு , தவறுதலாக கொடுத்த மருந்து பாட்டிலில் டெல்லூரியம் இருந்ததால் 6 மணி நேரத்துக்குள் இறந்தார்கள்
டெல்லூரியத்தை ருமேனியாவில், பிரான்ஸ் ஜோசெப் முல்லர் 1783ல் கண்டுபிடித்தார்.. அவருக்கு முதலில் இது என்ன உலோகம் என்று தெரியாததால் ‘பிரச்சினை உலோகம்’ என்று பெயர் வைத்தார். பின்னர் அவர் அனுப்பிய மாதிரியைப் பரிசோதித்த பிரபல ஜெர்மன் விஞ் ஞானி அது ஒரு புதிய தனிமம் என்பதை உறுதி செய்தார்
பொருளாதார உபயோகம்
மருத்துவத்திலோ உடல் ஆரோக்கிய விஷயத்திலோ அதிக முக்கியத்துவம் இல்லாத டெல்லூரியம் , சில தொழில்களில் பயன்படுகிறது .
தாமிரம் கலந்த , எவர்சில்வர் முதலியவற்றில் அவற்றின் வலுவை அதிகரிக்கப் பயன்படுகிறது.
பீங்கான் தொழில், கண்ணாடித் தொழில், எண்ணெய் சுத்திகரிக்கும் தொழில், ரப்பர் டயர் தொழிலில் உபயோகமாகிறது
மின்னணுக் கருவிகளிலும் இதை உபயோகிக்கிறார்கள்
கிடைக்குமிடம்
டெல்லுரியத்தைத் தோண்டி எடுக்க எவரும் சுரங்கம் தோண்டுவதில்லை . தாமிரத்தைச் சுத்திகரிக்கையில் பெரும்பாலும் இது எடுக்கப்படுகிறது . அமெரிக்கா பெரு, கனடா , ஜப்பான் ஆகியன இதை அதிகம் கோபத்தில் செய்கிறது
புறச்ச சூழலில் டெல்லூரியம்
நிலக்கரியில் இது கலந்திருப்பதால் அதைப் பயன்படுத்தும் ஆலை அருகிலும் டெல்லூரியம், தாமிரச் சுத்திகரிப்பு இடங்களிலும் டெல்லூரியம்,காற்று மண்டலத்தில் கலக்கிறது .
ரசாயன குணங்கள்
இது முழு உலோகம் அல்ல semi-metal . 50% உலோகம். வெள்ளி போல மினுமினுத்து ஒளிர்ந்தாலும், இது பொடியாகவும்/ பவுடராகவும் கிடைக்கிறது. பிரியாடிக் டேபிள் எனப்படும் மூலக அட்டவணையில் இதை உலோகம்- அலோக எல்லையில் வைத்துள்ளனர். . இதற்கு இரண்டின் குணங்களும் உண்டு. தண்ணீரும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் இதைத் தொடாது ; நைட்ரிக் அமிலம் கரைத்துவிடும்.
இதற்கு 8 ஐசடோப்புகள் இருக்கின்றன. ஜெனான் Xenon மூலகத்துக்கு 9, தகரத்துக்கு (Tin) 10 ஐசடோப்புகள் உள்ளதால் இது மூன்றாமிடம் வகிக்கிறது.
டெல்லூரியம்-130-தான் அதிகம் கிடைக்கிறது. இதற்குக் கொஞ்சம் கதிரியக்கம் உண்டு.