கோவில் கோபுரம் எதற்காக ?(Post. 8704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8704

Date uploaded in London – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

some pictures are sent by lalgudi veda; thanks.

கோவில் கோபுரம்  எதற்காக ?

தமிழ் நாட்டில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 40,000 கோவில்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டைப்போல ஆந்திரம் கர்நாடகம், கேரளம், ஒரிஸ்ஸா வரை உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கே செல்லச் செல்ல கோபுர உயரம் குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் படை எடுப்பாகும். அவர்கள் வேண்டுமென்றே இடித்தது பாதி; மீதிப்பாதி  இந்துக்களுக்கு நேரமின்மை; வெளி நாட்டானை விரட்டுவதிலேயே முழு  நேரமும் போய்விட்டது. தென்னகத்தில் இந்து மத விரோதிகளின் தாக்குதல் குறைவு. மாலிக்காபூர் என்ற வெறியன் படையெடுப்பைத் தவிர மற்ற பெரிய தாக்குதல் இல்லை. அவன் போகாத இடத்திலுள்ள பெரிய கோவில்கள் பிழைத்தன. அவன் அழித்த பல கோவில்களையும் தெலுங்கு தேச மன்னர்கள் புனரமைத்து புகழ்க்கொடி நாட்டிச் சென்றனர்.

உயர்ந்த கோபுரங்களுக்குப் பின்னால் உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.இதை ஆகம நூல்கள் விளக்குகின்றன. சில விளக்கங்களை இன்று காண்போம் .

கோபுரம்- ஸ்தூலலிங்கம்,

கொடிமரம் – நேர்மை,

பலிபீடம்-பாசம்,

நந்திதேவர்-பசு,

விநாயகர் – பிரணவம்,

திரைச் சீலை – மாயை,

சிவலிங்கம் – பதி,

பிரகாரங்கள் ஐந்து- பஞ்ச கோசங்கள்,

படிகள் – ஐந்தெழுத்து,

நடராஜர் – பஞ்ச்கருத்ய ஸ்வரூபி,

தக்ஷிணா மூர்த்தி- ஆனந்த ரூபி,

சோமாஸ்கந்தர் – சத், சித், ஆனந்தம்,

பார்வதி தேவி – சக்தி .

இது சிவன் கோவில் அமைப்பை நன்கு  விளக்கும்.

இதைத் திருமூலரும் பாடி இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .

ஆய  பதிதா  னருட் சிவலிங்கமா

மாய பசுவுமடலே றென நிற்கு

மாய  பலிபீட மாகுநற் பாசமா

மாய வரநிலை யாய்ந்துகொள்வார் கட்கே

–திருமூலரின் திருமந்திரப் பாடல்

சுவாமியும் அம்மனும் கர்ப்பக் கிருகத்தில் இருப்பர். இதற்கு மேல் விமானம் என்னும் அமைப்பு இருக்கும். நல்ல வருவாயுள்ள கோவில்களில் இந்த விமானம் தங்கக் கலசத்தால் மூடப்பட்டிருக்கும்.

இந்த விமானத்தை சிவாகமங்கள் பினருமாறு விளக்குகின்றன :-

உபபீடம் – பாதம்

அதிஷ்டானம் – முழந்தாள்

கும்பம் – நாபி

பஞ்சரம் – வயிறு

பாதவர்க்கம் – கை

பிரஸ்தரம்- தோள் மூட்டு

கண்டம் – கழுத்து

சிகரம் – முகம்

உஷ்ணிசவகை – சிகை

மஹாநாஸி  மூக்கு

க்ஷுத்ர  நாஸி – கண்

—-விஸ்வ கர்மீய  வாஸ்து சாஸ்திரம்

****

ஸ்தபதி வை.கணபதி , மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலரில்  எழுதிய கட்டுரையில் சொல்கிறார் –

1.நமது கோவில் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் ‘UNIVERSE IN MINIATURE’  என்பர்.

2.பஞ்ச பிரகாரங்களை பஞ்ச பூதங்கள் என்பர்.; அதற்குள் நுண்ணிய உருவில் இறைவன் இருக்கிறான் .

.

3.கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதற்குள் உள்ள மூர்த்தியை  உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் விசுவகர்மீயம்  என்ற நூல் வருணிக்கிறது  .இதனால்தான் இதை கருவறை/ கர்ப்பக் கிருகம் என்று அழைக்கிறோம்.

4. இதை கோழி முட்டை வடிவிலும் — குக்குடாண்ட — வடிவிலும் அமைக்கலாம்; காஞ்சி புரத்திலுள்ள ‘ஜ்வர ஹரேஸ்வரம்’ இப்படி அமைக்கப்பட்டது. இது ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தெற்கு வீதியில் இருக்கிறது.

5.சிற்ப நூல்களில் கருவறை விமானத்தை ஸ்தூல லிங்கமென்றும் கருவறைக்குள் இருக்கும் நிஷ்கள வடிவத்தை சூக்ஷ்ம லிங்கம் என்றும் கூறப்படுகிறது.

6.மானுட உடல் உறுப்புகளை அங்கம், மஹாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்று நான்காகப் பிரித்துக் கூறுவது போல விமானத்தில்

அதிஷ்டானம்   என்பது மஹாங்கம்- BASEMENT

ஸ்தம்பம் அல்லது சுவர்ப்பகுதி – அங்கம் – SUPER STRUCTURE

பிரஸ்தரம் – உபாங்கம் – ENTABLATURE

சிகரம் – பிரத்யங்கம் – DOME OR ROOF ஆகும்.

7.இதையே படுத்திருக்கும் நிலையில் – சயன கோலத்தில் — பார்த்தால் ,

கர்ப்பக்கிரம – சிரஸ் / தலை

அந்தராளம் – முகம்

சுகநாசி – கழுத்து

அர்த்த மண்டபம் – புஜம்/தோள்கள்

மகாமண்டபம் – வயிறு

பிரகாரம் – கால்கள்

கோபுரம் – பாதம்

இவ்வாறு பல நூல்கள் பல விளக்கங்களைக் கூறுவதற்கு காரணம் இந்தப்  பிரபஞ்சமும் , மனித உருவமும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்துவதற்கே .

பாமர மனிதனிடம் பெரிய தத்துவங்களை சொற்பொழிவாற்றினால் விளங்காது . ஆனால் கோவிலைச் சுற்றுகையில் விளக்கினால் மனதில் பதியும். கற்றோருக்கும் கூட இக்கருத்துக்களை மனதில் பதிக்கும் MODELS / REPLICAS மாதிரிகள் இவை.

பள்ளிக்கூட, கல்லூரி சோதனைச் சாலைகளில் பல மாதிரி வடிவங்களை வைத்து இரசாயன, பெளதிக , உடற்கூறு தத்துவங்களை விளக்குவார்கள். அது போல பெரிய தத்துவங்களை விளக்கும் வடிவங்களே கோவிலின் அமைப்புகள்.

உதவிய நூல்கள் —

நால்வர் நெறி , லண்டன், 2002

கவசக் கொத்து , காரைக்குடி, 1981

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பணி மலர், 1963

*****

முந்தைய கோவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கோவில் வகைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கோவ…

  1.  
  2.  

1 Apr 2015 – ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் …


தஞ்சாவூர் பெரிய கோவில் …

tamilandvedas.com › 2015/06/09

  1.  
  2.  

T

9 Jun 2015 – வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும்.


உள்ளம் பெருங் கோயில் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/04/06

6 Apr 2017 – மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில்கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் …


இடிதாங்கி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › இடித…

  1.  

30 Mar 2017 – கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் … நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் …


திரயம்பகேஸ்வரம் … – Tamil and Vedas

tamilandvedas.com › tag › திரய…

  1.  

10 Dec 2015 – அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 … திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது.

கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கர்ந…

  1.  

27 Aug 2017 – மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் …


புத்தர் கோவில் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › புத்…

6 Feb 2016 – ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514). IMG_3108 … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact. swami_48@yahoo.com).

—subham—

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8703

Date uploaded in London – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆண்டி பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆண்டி அடுத்த ஊரையே புகழ்வான்

2.ஆண்டி  குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்

3.ஆண்டி க்குப் பிச்சையா , அவன் குடுவைக்குப் பிச்சையா

4.ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்

5.ஆண்டியு ம் ஆண்டியு ம் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்

6.ஆண்டி  சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போயிற்று

7.ஆண்டிகள் மட ம் கட்டுவது போல

 tags–ஆண்டி ,பற்றி, பழமொழிகள்

–subham–

மர மண்டையும் மரத்தின் மகிமையும் (Post. 8702)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8702

Date uploaded in London – –18 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபமாக வந்தார் வைத்தி.

மர மண்டை , மர மண்டை என்ன சொன்னாலும் புரிய மாட்டேன்கிறது?????

நான் கேட்டேன் “உங்களுக்கு மரத்தைப் பற்றி ஏதாவது

தெரியுமா??? “

அதான்யா வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் கவர்ன்மென்ட்

சொல்லுது. நான் மரத்துக்கு பதிலாக பையனை வளர்க்கிறேன்

ஒரு பிரயோஜனமும் இல்லை…..

உங்கள் பையனை வேண்டுமானால் திட்டுங்கள் பிரயோஜனம்

ஒன்றும்இல்லை என்று…..மரத்தை எதுவும் சொல்லாதீர்கள்……

அப்படி என்னத்தையா கண்டீர் மரத்தைப்பற்றி????

அப்படி கேளுங்க சொல்கிறேன்

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அதனால்

மனித சமுதாயத்திற்கு என்னன்ன கிடைக்கும் தெரியுமா????

விஞ்ஞான பூர்வமாக ஒருவர D M தாஸ் எனபவர் ஆராய்ச்சி

செய்து கண்டு பிடித்திருக்கிறார் தெரியுமா????

மனித இனமே கண்டு வியந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவுகளைக்

கண்டு???

ஒரு ஏக்கரில் உள்ள மரங்களினால் உண்டாகும் பயன்கள்

பிராண வாயு உற்பத்தியின் மதிப்பு. 2 . 5 லட்சம்

காற்றினை சுத்தமாக்க 5 . 0 லட்சம்

பூமியின் மீது உள்ள மண் சத்து குறையாமல்

பாதுகாக்க. 2 . 5 லட்சம்

காற்றில் இருக்கும் ஈரப் பதம் குறையாமல்

பாது காக்க 3 .0 லட்சம்

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூடு கட்ட

நிழல் தர. 2 . 5லட்சம்

உணவு சத்து,(பழம், காய், முதலான வற்றால்). 0 . 2 லட்சம்

பூக்கள் மற்றும் விறகு சுள்ளி மூலமாக. 0 . 2 லட்சம்

மொ மதிப்பு 15. 90லட்சம் ஒரு வருஷத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் லாபம் சுமார் 16 லட்சம்!!!

மேலும் 10 ஏரகண்டிஷன்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஓடினால்

எவ்வளவு குளிர்ச்சி ஏற்படுமோ அவளவையும் ஒரே ஒரு மரம் தருகிறது.

18 பேருக்கு ஒரு ஆண்டிற்கு தேவையான பிராண வாயுவை ஓரு

ஏக்கரில் விளைந்த மரங்கள் தந்து விடுகின்றன…….

ஆல், அரசு, வேம்பு , பூவரசு,கல்யாண முருங்கை போன்ற மரங்களின்

கிளைகளை வெட்டு நட்டாலும் பயன் தரும்!!!!

ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் காற்றையும் ஒரு வேம்பும்

ஒரு அரசும் நூறு பேர் விடும் மூச்சுக காற்றையும் சுத்தப் படுத்தும்

என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!

மேலும் அரச மரம் “செராடோனின்” SERATONIN  என்னும்சக்தியை வெளிப்படுத்தி

ஞாபகசக்தியை வழங்குவதோடு அல்லாமல் குழந்தைப பேற்றை நல்கும் மரமாகவும் திகழ்கிறது!!!!

உணவுக்கத்தேவையன தென்னை, மா, பலா,வாழை, முருங்கை,

பப்பாளி இலவ மரம், கறிவேப்பிலை, நெல்லி, அரி நெல்லி,நாரத்தை,

எலுமிச்சை,புளி எனப்பல வகை மரங்களை வளரத்தாலே தமிழகம்

தலை நிமிர்நது நிற்கும்

இளநீர், தேங்காய் கொப்பரை, தே எண்ணெய் நார், கயிறு, சிரட்டைகள்,மாங்காய், மாம்பழம் ,மாம்பழக்கூழ்,நுங்கு பதனீர்

போன்றவைகளும் ஊறு காய்க்கு தேவையான நெல்லிக்காய், மாங்காய், மாவடு, கடாரங்காய், எலுமிச்சை முதலியவற்றை

ஏற்றுமதி செய்தாலேபோதும்அன்னிய செலாணி கிடைப்பதோடு ஏராளமான நபர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் .

தேக்கு, வேம்பு, கடம்பு, பலா, போன்ற மரங்கள் வீடு கட்டவும் உப

யோகப்படும்.

மேலும் மருந்து பொருளுக்கு தேவையான மரங்களான மருதாணி

எட்டி, வேம்பு , அஸ்வ கந்தா , மிளகு ,மூலம் நிறைய அன்னிய செலாவணியும் கிடைக்கும் .

மரத்தை மறந்தது மனித இனம்,தண்ணீரின்மையால அழுகிறது.

வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் நாட்டிற்கு வளம் சேர்ப்போம்.

நன்றி, வணக்கம்

tags—மரம், வளர்ப்போம், மர மண்டை, மகிமை

DO WE NEED RELIGION?- 3 (Post .8701)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8701

Date uploaded in London – – – –18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

DO WE NEED RELIGION?

RELIGION AS BASIS OF IDENTITY – 3

R. Nanjappa

Religion and National identity

In a way, we can see that the modern states are also coming round to such a view. In the wake of the phenomenon of Muslim immigrants / refugees going to the West, (and not to other Muslim countries) and the problems it poses, there is suddenly a realisation about the national identity of the local people. After the Second World War, these democracies adopted a liberal secular (non-religious) multicultural image. But the Muslim immigrants do not subscribe to this ideal and do not accept its implications. They enjoy the benefits of a liberal secular Western democracy, (which imposes financial and civic burden on the native societies)  but do not accept the secular civil laws. This is a problem because immigrants of today become ‘citizens’ tomorrow! This has forced some introspection on the Europeans.

 Some time ago, former British PM David Cameron reminded his countrymen that after all they were all Christians and it was those values which had shaped their character.

State multiculturalism has failed, says David Cameron- BBC, 5 Feb,2011


The Spectator, 24, December, 2015


Commentator Isabel Hardman noted:

David Cameron says Christian values make Britain successful

Now he seems to think it more important to talk about British identity not just in terms of culture but in terms of faith, which might seem rather intriguing given the general decline in church attendance. But he clearly thinks it’s a point worth making, even if stating that Britain is a Christian country inevitably attracts grumbles, even at Christmas.

Identity- determined by opponents!

It is a rather curious situation. Left to themselves, none bothers about an identity. But when the native people face external threats or are overwhelmed by immigrants who refuse to share their values, however secular they may be painted, the question of one’s own identity crops up. G.K. Chesterton once wrote that our identity is defined by our opponents or critics.As Aleks Krotoski pointed out in The Guardian 15 May 2011:

Historian Peter Furtado argues that the 17th century inspired the evolution of a national identity because Britain had to negotiate who she was within the global scene 


 When immigrants [mainlyMuslims] do not accept secular ideals, how can the British identify themselves- except as saying that they are Christians, ( i.e non-Muslims) after all! [ Even if they are not church-going ones !]

Who are the Americans?

This realisation came to the British rather late.  Writing in 2004, Samuel Huntington had said about the Americans that a mere political ideology would not serve as national identity.

He said in his book “Who Are We ?”:

“adherence to the American Creed is by itself not enough to sustain an American identity. An example of a state that attempted to use ideology alone was the Soviet Union, which attempted to impose communism on different cultures and nationalities, and eventually collapsed. A similar fate could lie in store for the United States unless Americans “participate in American life, learn America’s language [English], history, and customs, absorb America’s Anglo-Protestant culture, and identify primarily with America rather than with their country of birth”.

 In particular, Huntington suggests that Americans turn to Protestantism, and recognize that what distinguishes America from other countries is that it is an extremely religious Western country, founded on the principles of the Enlightenment and Protestant Reformation. [Wikipedia ]

So, after all the looney talk we have heard on secularism, multiculturalism, etc, all these years, we now realise how valuable it is , how indispensable, for  a people to have a national identity based on religion!

Will Hindus learn any lessons from this ?

After all, Muslims and Christians in India have their identities firmly and formally established as Religious Minorities. So, where do Hindus stand? This has to be explored separately

                               ***                         Concluded

tags-  need, religion- 3

காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை! (Post 8700)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8700

Date uploaded in London – – 18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை!

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு!

facebook.com/gnanamayam நிகழ்ச்சியில் 14-9-2020 அன்று ஆற்றிய உரையில் நேரத்தைக் கருதி சில கருத்துக்கள் விடப்பட்டிருந்தன. அவற்றை இங்கு காணலாம்.

குற்றாலத்தில் ஒரு சம்பவம்!

காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க இன்னும் ஒரு சம்பவம்.

இது சமீப காலத்தில் நிகழ்ந்த ஒன்று. இதை 2-8-1998 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.

குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றார். குறுகிய பாதை ஒன்றைக் கடக்க அவர்கள் முயன்ற போது திடீரென்று அவரைக் காணோம். நண்பர்கள் அலறினர். கீழே விழுந்து வெள்ளமெனை விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். முத்துக் குளிப்பவர்களை அழைத்துத் தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தைக் காண்கிறேன் என்றார். உடனே அந்தப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டித் தடுத்து நிறுத்தினார் அவர்.

குகையின் நடுவில் ஒரு ஓட்டை போடப்பட்டது. யார் அங்கே இருப்பது என்ற கேள்விக்கு அந்த இளைஞர் பதில் தரவே ஓட்டை பெரிதாகப் போடப்பட்டு பிஸ்கட், குடி நீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் பெரிய துவாரம் ஒன்றைப் போட்டு உள்ளிறங்கி அவரை மீட்டனர்.

“எப்படி மூன்று நாட்கள் கழித்தாய்?” என்று கேட்ட போது இடைவிடாது காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்” என்றார் அவர்.

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.

தத் என்பது பிரம்ம ஞானத்தையும்

‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,

‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,

‘து’ என்பது தைரியத்தையும்,

‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,

’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,

‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,

‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,

‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,

தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,

‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,

‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,

‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,

‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்

‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,

‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,

‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,

‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்

‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,

’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,

‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்

‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்

‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்

‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம்,  கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

மஹா பாபங்களைப் போக்கடிப்பதாகவும், பரம சிரேஷ்டமாகவும் உள்ள இந்த இருபத்துநான்கும் தெய்வங்களாகச் சொல்லப்படுகின்றன.

இவைகளைக் கேட்ட மாத்திரத்தில் சாங்கமாகக் காயத்ரியை ஜபம் செய்தால் எந்தப் பயனுண்டாகுமோ அந்தப் பயன் உண்டாகும்.

மேலே கூறிய  24 காயத்ரி மந்திர தேவதைகள் தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில்  முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

**

tags– காயத்ரி,  24 அக்ஷர மஹிமை, 

INDEX 25 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8699)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8699

Date uploaded in London – –17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

INDEX 25 FOR LONDON SWAMINATHAN’S  ENGLISH & TAMIL ARTICLES 

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8500 PLUS POSTS.

DECEMBER 2014

1534.THE WONDER THAT IS TAMIL – PART  3; 31 DECEMBER 2014

1533. நமது உடலுக்கு ஒன்பது வாசல்! நவத்வார புரி!31/12

1532. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1531. CITY OF NINE GATES, 30/12

1530.அதர்வ வேத மூலிகை மர்மம்! ஜங்கிடா மூலிகை! 30/12

1529. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1528. Jangida Mystery in Atharva Veda! 29/12

1527.S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1526.Kalidasa’s Women and Tamil Women 28/12

1525. மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் 27/12

1524. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1523.31 Indian Quotations on Mind!27/12

1522. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1521. தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் மோதிரங்கள்! 27/1

1520.Four Gold Rings in Ramayana and Kalidasa’s Works

1519: வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று

1518. தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2,, 27/12

1517. 16 Virtues of Great Kings; 25-12

1516. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1515. பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?  25/12

1514 Who discovered Five Elements/Pancha Bhuta? 24/12

1513. தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24/12

1512. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1511. Tamil’s ban on Ca, Nja, Ra, La!, 23/12

1510. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1509. ‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?,23/12

1508. Tamil Talent beyond Belief!, THE WONDER THAT IS TAMIL-PART 1, 22/12

1507. அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ், 22/12

1506. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1505. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1504. Amazing Tamil-Sanskrit Similarities! Helps to decipher Indus Script! 21/12

1503. அற்புத ஒற்றுமைகள்! தமிழும் சம்ஸ்ருதமும் ஒன்றே!! 21/12

1502. Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory, 20/12

1501. Vedas and the Scientist, 20/12

1500. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!, 20-12

1499. Sanskrit and Tamil have Common Ancestry!, 19/12

1498. சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!, 19/12

1497. The Richness of Vedic Language! 18/12

1496. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1495. புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள், 18/12

1494. Humour in Sanskrit Literature, 17-12

1493. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1492. Interesting similes in Mahabharata, 16/12

1491. வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்! 16/12

1490. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1489. Similes in Sanskrit Literature, 15/12

1488. Amaru Satakam : Sanskrit Love Poems, 15/12

1487. மிதிலையில் ராமன் கண்ட பரத நாட்டியம்!! 15/12

1486. Strange Names for Unknown Poets of Rig Veda and Tamil Literature!,14/12

1485. Saivism in Cambodia, 14/12

1484. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1483. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1482. சங்க காலத்தில் வரதட்சணை!, 13/12

1481. ஐரோப்பாவில் ஓம் சின்னம்! 4000 ஆண்டுக்கு முந்தையது!, 13/12

1480. OM symbol in Europe (2000 BCE)!, 12/12

1479. சங்க காலத்தில் கோவில்கள் இருந்ததா?,12/12

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 3

1478. Why did Shah Jahans son translate Upanishads?, 11/12

1477. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1476. பிரிட்டனில் பாண்டியர் சின்னம்; கீதையில் ஏசு!!, 11/12

1475. 100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!,11/12 ,

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி-2

1474. தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்,11/12

1473. Jesus name in Bhagavad Gita! Tamil Fish symbol in Britain!!,10/12

1472. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1471. List of 121 Upanishads, 9/12

1470. ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1,9-12

1469. அகநானூறு அதிசயங்கள்– பகுதி 2, 9/12

1468. Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka, 8/12,

Rajatarangini Wonders – Part 2

1467. . S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1466.அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1, 8/12

1465.Nehru on Rajatarangini, 7/12

1464.. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1463. Origin of Drama in Ancient India and Egypt, 6/12

1462. கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?,6/12

1461. Hindu Dwarfs in Egypt?, 5/12

1460. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1459. வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக!,5/12

1458. Science behind Hindu’s Four Ages (Chatur Yugas): Magnetogeddon may destroy the World!, 4/12

1457. சிரியா நாட்டில் இந்துக் கோவில்!, 4/12

1456. Hindu Eye Goddess Temple in Syria?,3/12

1455. Vyasa deserves Nobel Peace Prize and Literature Prize!,3/12,

1454. பத்து கட்டளைகள்! பகவத் கீதையிலிருந்து!!, 3/12

1453. S NAGARAJAN POST; LISTED SEPARATELY

1452. Ten Commandments from the Bhagavad Gita,2/12

1451. கொங்கர் உள்ளி, ஹோலி, சுமேரிய புருள்ளி விழாக்கள் ஒன்றா?2/12

1450. Holi, Ulli, Purulli: 3 Interesting Festivals in India and Sumer, 1 DECEMBER, 2014

1449. குறுந்தொகை அதிசயங்கள், 1 DECEMBER, 2014

2014 POSTS FINITO

XXXX

 index 25, London Swaminathan, articles, posts, year 2014 December

ரசாயன மூலகம் டெல்லூரியத்தின் கதை (Post No.8698)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8698

Date uploaded in London – –17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரபஞ்சத்தில் 118 மூலகங்கள் (Elements) இருக்கின்றன. இவற்றில் 27 மூலகங்களின் சுவை யான கதைகளைச் சொன்னேன். கட்டிடம் கட்ட செங்கற்கள் தேவை. இந்தப் பிரபஞ்சம் செயல்பட 118 மூலகங்கள் /தனிமங்கள் தேவை .

இதோ டெல்லூரியம் (Tellurium)  பற்றிய சுவையான கதை.

மூலக (Periodic Table) அட்டவணை பற்றி அறியாத ரசாயன மாணவன் இல்லை. எல்லா தனிமங்களையும் அவற்றின் குணங்களுக்கு ஏற்ப, அணு எண் வரிசையில் அமைத்துக் கொடுத்தவர் டிமிட்ரி மெண்டலீவ். அவரைப் படாதபாடு படுத்திவிட்டது இந்த டெல்லூரியம் .

1869-ல் அவர் முதல் மூலக /தனிம அட்டவணையை வரைந்தார். டெல்லூரியத்தை வரிசையின் முதலில் வைப்பதா அல்லது அயொடின் என்னும் மூலகத்தை முதலில் வைப்பதா என்று தெரியாமல் திணறினார். இதற்குக் காரணம் அவற்றின் அணு எடைகளாகும். டெல்லூரியம் அணு எடை 128, அயோடின் 127. சில சோதனைகளில் இரண்டும் ஒன்றை ஒன்று மிக நெருங்கி வந்தது அவரைக் குழப்பியது . விடை தெரியாதபோதும் அயோடினுக்கு  அடுத்தபடியாக டெல்லுரியத்தை வைத்து — சரியான முறையில் — கணக்கை முடித்தார். அவருக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஐசடோப்புகள் எனப்படும் மூலகங்களின் அவதாரங்கள் பற்றித் தெரிந்தது. அப்போதுதான் துப்புத் துலங்கியது

ஐசடோப்புகள் பற்றி முன்னரே விளக்கியுள்ளேன் .

டெல்லூரியத்தின் ஐசடோப்புகளில் அதிகமாகக் காணப்படுவது டெல்லூரியம்- 130, 128 என்ற இரண்டு ஐசடோப்புகள் ஆகும். அவற்றின் சராசரி அணு எடை- 127.6

ஒரு அயோடின் ஐசடோப்பின் எடை 127. ஆனால் அதன் அணு எடை 126.9

ஆக ஐசடோப்புகள் செய்த குழப்பம் அவர் காலத்தில் தெரியாது. அப்போது அவை கண்டு பிடிக்கப்படவில்லை.

இனி மற்ற விஷயங்களைக் காண்போம்

லத்தின் மொழியில் ‘டெல்லஸ்’ என்றால் பூமி. நாம் பூதலம் , தளம் , தரை , தரணி என்று சொல்வதுடன் தொட்புடைய சொல்.

உயிர் வாழும் பிராணிகளுக்கு டெல்லூரியம் தேவையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பான தொழிலில் உள்ளோருக்கு வாய் நாற்றமும், உடல் நாற்றமும் அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்களைக் கூடுதல் வைட்டமின் சி எடுக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை வழங்குவர்.

இந்த தனிமம் உடலுக்குள் சென்றால் மரணம் சம்பவிக்கும் என்பது மூன்று  போர்வீரர்கள் இறந்த போது தெரிந்தது. அவர்களுக்கு , தவறுதலாக கொடுத்த மருந்து பாட்டிலில் டெல்லூரியம் இருந்ததால் 6 மணி நேரத்துக்குள் இறந்தார்கள்

டெல்லூரியத்தை ருமேனியாவில், பிரான்ஸ் ஜோசெப் முல்லர் 1783ல் கண்டுபிடித்தார்.. அவருக்கு முதலில் இது என்ன உலோகம் என்று தெரியாததால் ‘பிரச்சினை உலோகம்’ என்று பெயர்  வைத்தார். பின்னர் அவர் அனுப்பிய மாதிரியைப் பரிசோதித்த பிரபல ஜெர்மன் விஞ் ஞானி அது ஒரு புதிய தனிமம் என்பதை உறுதி செய்தார்

பொருளாதார உபயோகம்

மருத்துவத்திலோ உடல் ஆரோக்கிய விஷயத்திலோ அதிக முக்கியத்துவம் இல்லாத டெல்லூரியம் , சில தொழில்களில் பயன்படுகிறது .

தாமிரம் கலந்த , எவர்சில்வர் முதலியவற்றில் அவற்றின் வலுவை அதிகரிக்கப் பயன்படுகிறது.

பீங்கான் தொழில், கண்ணாடித் தொழில், எண்ணெய்  சுத்திகரிக்கும் தொழில், ரப்பர் டயர் தொழிலில் உபயோகமாகிறது

மின்னணுக் கருவிகளிலும் இதை உபயோகிக்கிறார்கள்

கிடைக்குமிடம்

டெல்லுரியத்தைத் தோண்டி எடுக்க எவரும் சுரங்கம் தோண்டுவதில்லை . தாமிரத்தைச் சுத்திகரிக்கையில் பெரும்பாலும் இது எடுக்கப்படுகிறது . அமெரிக்கா பெரு, கனடா , ஜப்பான் ஆகியன இதை அதிகம் கோபத்தில் செய்கிறது

புறச்ச சூழலில் டெல்லூரியம்

நிலக்கரியில் இது கலந்திருப்பதால் அதைப் பயன்படுத்தும் ஆலை அருகிலும் டெல்லூரியம், தாமிரச் சுத்திகரிப்பு இடங்களிலும் டெல்லூரியம்,காற்று மண்டலத்தில் கலக்கிறது  .

ரசாயன குணங்கள்

இது முழு உலோகம் அல்ல semi-metal . 50% உலோகம். வெள்ளி போல மினுமினுத்து ஒளிர்ந்தாலும், இது பொடியாகவும்/ பவுடராகவும் கிடைக்கிறது. பிரியாடிக் டேபிள் எனப்படும் மூலக அட்டவணையில் இதை உலோகம்- அலோக எல்லையில் வைத்துள்ளனர். . இதற்கு இரண்டின் குணங்களும் உண்டு. தண்ணீரும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் இதைத் தொடாது ; நைட்ரிக் அமிலம் கரைத்துவிடும்.

இதற்கு 8 ஐசடோப்புகள் இருக்கின்றன. ஜெனான் Xenon மூலகத்துக்கு 9, தகரத்துக்கு (Tin) 10 ஐசடோப்புகள் உள்ளதால் இது மூன்றாமிடம் வகிக்கிறது.

டெல்லூரியம்-130-தான் அதிகம் கிடைக்கிறது. இதற்குக் கொஞ்சம் கதிரியக்கம் உண்டு.

ரசாயனக் குறியீடு —  Te

அணு எண் – 52

கொதி நிலை – 450 C

உ ருகு நிலை- 990 C

tags–    டெல்லூரியம், ரசாயன மூலகம்

—சுபம்—

1000 பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post No.8697)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8697

Date uploaded in London – –17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 1000 பற்றி 7 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப் பூச்சி போதும்

2.ஆயிரம் காலத்துப் பயிர் ஆச்சுதே

3.ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்

4.ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்

5.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணம் செய்துவை

6.ஆயிரம் மாகாணி அறுபத்திரெண்டரை

7.ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

  TAGS — ஆயிரம், 1000

–SUBHAM—

கோ கர்ணம், கஜ கர்ணம், அஜ கர்ண வித்தைகள்!(Post.8696)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8696

Date uploaded in London – –17 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோ கர்ணம், கஜ கர்ணம், அஜ கர்ண வித்தைகள்!

Kattukutty

ஒரு கிழவரும் கிருஷ்ண தேவராயரும்!

ராஜா கிருஷ்ண தேவராயர் சிம்மாசனத்தில் புடை சூழ

அமர்ந்திருக்கிறார். ஒரு வயதான முதியவன் அரண்மனை வாசலில்

வம்பு செய்து கொண்டிருக்கிறான் தான் அரசரைப்பார்த்தே

ஆக வேண்டுமென்று.

உடனே காவலாளிகள் விஷயத்தை ராயரிடம் சொல்ல, அவர்

வரவழைத்தார் அந்தக் கிழவனை…..

மிகவும் வயதானவர்.

மேலே ஓர் போர்வை ஆடு மாடு மேய்ப்பவனைப் போல் கையில்

ஒருதடி…..

மகா ராஜா என்னிடம் சில திறமைகள் உள்ளன. என்னை சோதனை

செய்யும் அளவுக்கு திறமையானவர் உண்டா உங்கள் அரசவையில்??

அனைவருக்கும் இடி விழுந்தார் போலாயிற்று. என்ன தைரியம்???

அரசனுக்கே சவால் விடுகிறானே???

படைத்தலைவன் முதல் காவலாளி வரை ஒருவர்ஒருவராக தொட்டு இழுத்து கீழே தள்ளி , அடித்து எல்லா உபத்திரவங்களும் செய்து பார்த்தனர்.

கிழவன் அசரவே இல்லை…..எல்லோரும் இவன் பொய்

சொல்கிறான் அரசே, இவனுக்கு தக்க தண்டனை கொடுங்கள்.

அரசருக்கு ஒரு ச்நதேகம். இன்னும் இவன் சிரித்துக்கொண்டே

நிற்பதைப் பார்த்தால் ஏதோ திறமை இருக்கிறது ஆனால் நம்

ஆட்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

தெனாலி! இவரைச் சோதி திறமை இருந்தால் தக்க பரிசு ,

இல்லையேல் 50 சவுக்கடி…..

தெனாலி ராமன் அவரைச் சுற்றி வந்தான். தொட்டுப் பார்த்தான்

மேல் துண்டை இழுத்துப் பார்த்தான். அரசரைப் பார்த்து சொன்னான்

அரசே இவர் மிகவும் திறமை மிக்கவர். ஆயிரம் பொன்னுக்கு

அருகதை ஆனவர்……

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஆயிரம் பொன் பரிசு கொண்டு வரப்பட்டது. அரசரை அவன் அருகில் அழைத்தார். அவரை தொடச்

சொன்னார்.மாட்டைத்தொட்டால் எப்படிசுழிக்குமோ அப்படி

சுழித்தது. அதே மாதிரி யானை, அதே மாதிரி ஆடு …..

தெனாலி ராமன் சொன்னதை அரசர் புரிந்து கொண்டார். அந்தக் கிழவர் கஜகர்ண, கோகர்ண, அஜகர்ண வித்தையில் தேர்ந்தவர் என்று. தெனாலி ராமன் கூறிய படியே அவருக்குப் பரிசைக்

கொடுத்து பல்லக்கில் அனுப்பினார் அரசர்.

கோ கர்ணம், கஜ கர்ணம், அஜ கர்ணம் பற்றிய விளக்கங்களை தேடினேன்.

பழைய பத்திரிகை ஒன்றில் விளக்கம் கிடைத்தது. அதைக் கீழே தந்துள்ளேன்.

கோ கர்ணம்

கோ என்றல் பசு என்று பொருள். ஒரு பசு மாட்டின் உடலில்

ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டுப் பாருங்கள்,உடனே உங்கள்

விரல் பட்ட இடத்தை சிலிர்த்துக் கொள்ளும்.

அதே போல் அறிவாளிகளிடம் ஏதேனும் தவறு இருந்தால்

அதை யாரேனும் சுட்டிக் காட்டினால் கூறியவர் யார் என்றோ,

சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றோ ஆராய மாட்டார்கள்.

அது உண்மை தானா என்று தங்களிடம் தேடுவார்கள். அது உண்மை

என்றால் அதைப் புரிந்து கொண்டு அதனைத திருத்திக் கொள்வதுடன் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்வார்கள்.

இவர்களையே கோ கர்ணம் போடுபவர்கள் என று சொல்கின்றனர்.

கஜ கர்ணம்

கஜம் என்றால் யானை. யானையானது நிற்கும் போது தன்னுடைய

நான்கு கால்களையும் சரியான முறையில் ஊன்றி நிற்காது. இது

யானையிடம் உள்ள ஒரு குறை.

இதைப் போலவே சில மனிதர்களும் இருக்கின்றார்கள்.

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்ட வஷயத்தில் அவர்கள் தங்கள்

கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள்.

பற் பல விஷயங்களில் தங்கள் கவனத்தை திருப்புவார்கள்.

தேவையில்லாத விஷயங்களில் தங்கள் மூக்கை நுழைப்பார்கள்.

இவர்களை கஜ கர்ணம் போடுபவர்கள் என கூறுவார்கள்

அஜ கர்ணம்

கோ கர்ணம், கஜ கர்ணம் போல அஜ கர்ணம் என்ற ஒன்று உண்டு.

அஜ என்றால் ஆடு. இந்த ஆட்டுக்கு ஒரு சுபாவம் உண்டு. நன்றாக

இருக்கும் ஒரு ஆட்டின் வாலைப் பிடித்து யாராவது இழுத்து விட்டால் போதும், உடனே அது தன் தலையை தொங்கப் போட்டுக்

கொள்ளும்.

இது போன்ற மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

நம்மில் யாராவது அம்மாதிரியான நபர்களிடம் சென்று குற்றம்

குறைகளைச் சுட்டிக் காட்டினால் போதும் அவர்கள் நம்மை வெறுத்து தள்ளி விடுவார்கள். ஏன், திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்

இப்பேர் பட் டவர்களைத்தான் அஜ கர்ணம் போடுபவர்கள் என

கூறுகிறோம்

***

tags– கோ கர்ணம், கஜ கர்ணம், அஜ கர்ணம், வித்தைகள்,

DO WE NEED RELIGION?-2 (Post No.8695)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8695

Date uploaded in London – – – –17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

DO WE NEED RELIGION?

RELIGION AS BASIS OF IDENTITY – 2

R. Nanjappa

Hinduism – is it a religion at all?

All religions other than Hinduism [and other ancient religions] owe their origin to a person. All religions other than Hinduism are based on faith in doctrines /dogma interpreted and enforced by a hierarchy. Hinduism alone is free from all doctrines! Not that there are no doctrines- but belief in them is not binding on everyone.. There is no one version, authorised by a Pope or a mulla. Thus one may believe in a God, any number of Gods, any kind of God or no God at all, and yet be a Hindu! There is no Pope or other authority to enforce anything or punish the deviants.

Hinduism alone says in the end that all that one holds with the mind- doctrines, beliefs, philosophies- are unreal and merely mental phantoms= matam i.e. held with mati or mind. Anything held by the mind is not real. Reality has to be experienced in the here and now, not believed.

Does anyone have to ‘believe ‘ himself to be a man or woman? He or she simply knows that he or she is a man or woman. Likewise, one has to realise one’s Reality- not simply believe that he or she is something. What does one achieve by thinking that one is Brahman instead of man or woman? This is just a game. That is why ultimately, even so-called meditation is useless, because it forces you to visualise an image or think of an idea- an exercise of the mind..It is a mind game. Reality  is that when the mind itself ceases to function. Usually we say ” the mind does not reach there ” or the mind  returns unable to reach there: yato vacho nivartante aprapya manasa saha 


त्व्यतो वाचो निवर्तन्ते। अप्राप्य मनसा सह



Religion and Morality: Dos and Don’ts

We can immediately see that not everyone is capable of reaching this level of understanding immediately. Most people need graded steps to discipline the mind and emotions, before they can think of ‘higher’ things. This is the real purpose of religion- the area of ethics and morality. It can be seen by any one who is not a bigot and who is not blind and mentally closed that every religion insists on basic /common ethics and morality among its adherents. The best example known in the West is the famed Ten Commandments. The first four are specific to the community to whom they were given, while the other six are universal moral prescriptions:

Ten Commandments 


  1. You shall have no other gods before Me.
  2. You shall make no idols.
  3. You shall not take the name of the Lord your God in vain.
  4. Keep the Sabbath day holy.
  5. Honor your father and mother.
  6. You shall not murder.
  7. You shall not commit adultery.
  8. You shall not steal.
  9. You shall not bear false witness against your neighbour.
  10. You shall not covet.(your neighbour’s house, property, etc.]

1768 Parchment at Amsterdam Synagogue.

Just Dos and Don’ts! We can easily see that unless these Commandments are kept, civilised social life is not possible. The first four may entitle one to heaven, but life on earth requires the other six. Yet these same Christians went round the world killing [millions of people [Spaniards and Portuguese especially in Latin America] and stealing their property [the Europeans in America, Africa and India ]. Of course, Marxists who denied God and denounced religion killed more people in history than many religions.

Reason and Christianity

As the Age of Science dawned, Christianity became the prime target as its doctrines were shown to be false: God created the world in 6 days, that it was created in 4004 BC, that the universe was earth-centred, that the earth was flat, etc. However, one cannot jump from this to the conclusion that religion in general is against reason or science! 

 The French Enlightenment philosophers in the 18th century taught that Reason made religion irrelevant or unnecessary. But some of them found a practical use for it. Since the common man was not endowed with enough reason, religion served to discipline him and prevent mischief! Thus Voltaire said that religion “must be destroyed among respectable people and left to the canaille large and small for whom it was made.”

“I want my lawyer, my tailor, my servants, even my wife to believe in God, because it means that I shall be cheated and robbed and cuckolded less often… If God did not exist, it would be necessary to invent him.”

[ Quoted in Gertrude Himmelfarb : The Roads to Modernity, Vintage Books, 2008. page 155]



That is, the idea of God was ‘useful’ in practice, whether God really existed or not! This is an echo of what Edward Gibbon wrote about the value of religion in the Roman Empire:

The various modes of worship which prevailed in the Roman world were all considered by the people as equally true; by the philosopher as equally false; and by the magistrate as equally useful.” 

― The Decline and Fall of the Roman Empire

             *    to be continued

 tags- need, religion-2