அதிசய அரிசி மருத்துவம்! (Post No.8129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8129

Date uploaded in London – 8 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அரிசிச் சோற்றையே மருந்தாகக் கொடுக்கும் அபூர்வ மருத்துவ முறை கேரளத்தில் உள்ளது. ஆயுர்வேத மருத்துவசாலைகள் இதைப் பயன்படுத்துகின்றன. இது பற்றிய ஒரு சுவையான சம்பவத்தைக் கேளுங்கள்.

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி.ராய் (Dr P C Roy); அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கல்கத்தாவில் தனது வீட்டில் நோயாளிகளைப் பார்த்து மருந்து கொடுத்து வந்தார். ஒருவருடைய மகன் நோஞ்சானாகவும் வியாதிக்காரனாகவும் இருந்தான். அவருக்கும் ஒரு நாள் டாக்டர் ராய் அவர்களைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. பையனை ஒரு பார்வை பார்த்தார் ராய். கவலையே படாதீர்கள் தினமும் காலையில் 2 ரசகுல்லாக்கள் கொடுங்கள் அதுதான் இந்த நோய்க்கு நல்ல மருந்து என்று சொல்லி அனுப்பினார் ( ரசகுல்லா என்பது கிட்டத்தட்ட குளோப் ஜாமுனைப் போன்றது. பால் பொருட்களால் ஆன இனிப்பு) .

ஆயினும் நோயாளியின் அப்பா விளக்கம் கேட்க முற்பட்டபோது டாக்டர் டாக்டர் ராய் சொன்னார்- உங்கள் மகனுக்குத் தேவையான அளவு புரதச் சத்து (Protein)  உடலில் இல்லை. பாலிலும் சீஸ் (Cheese) போன்ற பாலாடைக் கட்டியிலும் கேசின் (casein) என்னும் புரதச் சத்து உள்ளது; அது உங்கள் புதல்வனுக்குத் தேவை என்று விளக்கினார்.

அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட மேற்கு வங்கத்தில் புரதச் சத்து குறைவு என்பதால் இந்த வைத்தியம் பொருத்தமானதே. ஆயினும் அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட கேரளத்தில் அந்த சோற்றையே மருந்தாகப் பயன்படுத்துவது விநோதமாகத் தோன்றும்.. ஆனால் அவர்கள் இப்படிப் பயன்படுத்தும் அரிசி விசேஷ வகை அரிசி ஆகும். நீவார என்னும் நெல் ‘வன நெல், குள நெல் அல்லது நீர் வாரம்’ என்று அழைக்கப்படும். இது பயிரிடாமலே காடுகளில் தானாக வளர்வதால் இதை பழங்காலத்தில் ரிஷி முனிவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதே போல ஷஷ்டிகா என்னும் அரிசி வகை 60 நாட்களில் பலன்தரும் நெல் வகையாகும் . இதையும் பயன்படுத்துவர் .

நீவார என்னும் அரிசியை யஜுர் வேதமும், பாணினியின் அஷ்டாத்யாயீயும் குறிப்பிடுகின்றன. ஆகையால் இவை 3000 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஷஷ்டிகா என்னும் 60 நாளில் வளரும் நெல் வகையையும் பாணினி குறிப்பிடுகிறார். ஆகையால் இவை அனைத்தும் குறைந்தது 2700 ஆண்டுகளாகத் தெரிந்தவையே.

ஷஷ்டிகா வகை அரிசியைக் கொண்டு ஆக்கப்படும் சோற்றை ஞவரகிழி என்ற பெயரில் மருந்தாக பயன்படுத்துவர் . இந்த வகை மருத்துவத்தை சரகர் , சுஸ்ருதர் போன்ற மருத்துவர்களும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மருத்துவ நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

இந்த நெல்லுக்கு காரரிசி, செந்தினை என்னும் பெயர்களும் உண்டு என்பதை அகராதி மூலம் அறியமுடிகிறது

குறிப்பிட்ட வகை அரிசியினால் ஆன சோற்றை கிழியாகக் கட்டி — மூட்டை முடிச்சு- போல கட்டி உடம்பு முழுதும் மசாஜ் செய்வார்கள்; சோற்றை வடிப்பதற்கு முன் அதில் வேறு சில மூலிகைகளையும் சேர்ப்பார்கள். அதே போல உடலில் மஸாஜ் செய்யும்போது மூலிகைத் தைலங்களையும் தடவுகின்றனர். இதை ‘ஷஷ்டிகா அன்ன லேப’ என்றும் அழைப்பர் . இது முக்கியமாக மூட்டு வலி, வாத நோய்களுக்கு நல்ல பலன் தருகிறது

கிழி என்றால் முடிச்சாகக் கட்டுதல் என்று பொருள்; பொற்கிழி என்று நாம் கேள்விப்படுகிறோம். அது போல சாதத்தை துணியில் முடிச்சாகக் கட்டி அதைக் கொண்டு  உடலில் ஒத்தடம் கொடுப்பர்.

நீவார கஞ்சியை உள்ளுக்கு சாப்பிடுவதும் ஒரு சிகிச்சை ஆகும்.  இது உடல் நோஞ்சாசனாக , எதைச் சாப்பிட்டாலும் உடல் தேராத ஆட்களுக்குத் தருவார்கள். பொதுவாகவே இதை கற்கட மாதத்தில் (ஆடி ) சாப்பிடுவதால் கார்கிட கஞ்சி, மருந்துக் கஞ்சி என்றும் குறிப்பிடுவர்

இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் மருத்துவ குணமுள்ள சுமார் 50 வகை நெல் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளையும் நாட்டு வைத்தியர்களும் பழங்குடி மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரிசா, உத்தர கன்னட பகுதிகளில் கூட மக்கள் பல வகை நெற்பயிர்களை தோல்  வியாதி சிகிச்சையில் உபயோகிக்கின்றனர்.

செலவே இல்லாமல் பயிரிட்டு, எதிர் விளைவு (side effects) எதுவும் இல்லாமல் சாப்பிட்டு குணம் அடையும் இந்த அரிய  வகைச் சிகிசசை முறை பரவ வேண்டும் ; மருத்துவ குணம் உள்ள நெல் வகைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

பல பெயர்கள் அந்தந்த மொழி பேசுவோர் வாய் வழி வந்தமையால் அவற்றின் ஆங்கில வடிவத்தைப் பட்டியல் இடுகிறேன்.

Shastika , Nivara or Njavara (in Malayalam) nirvara or Senthinai (In Tamil)—used for Rheumatism and Neural disorders

Aalcha in Chattisgarh area used for curing Pimples

Baissor – treatment for chronic Head ache and Epilepsy

Gathuhan, Karhani, Kalimooch varieties used respectively for treating Rheumatism, Paralysis and Skin Disorders

In Jeypore area of Orissa, tribal people use Mehar, Sariphul  in treatment for various ailments

In Uttara Kannada district of Karnataka, Atikaya variety as health tonic and Kari Bhatta to treat skin infections.

இவை அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புது டில்லியில்  நடந்த சர்வதேச அரிசி மகாநாட்டில் (International Rice Congress) சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் ஆகும். ஆர்கனைசர் (Organiser,5-11-2006) பத்திரிகையில் இதன் சுருக்கம் வெளியானது .

தொல்பொருட் துறை நிபுணர்களும் இது பற்றி சுவையான தகவல்களைத் தருகின்றனர். இயற்கையாக காட்டிலும், மேட்டிலும் வளரும் இந்த பல வகையான தானியங்களின் மாதிரிகள் 8000 ஆண்டுகளுக்கு முந்தைய வசிப்பிடங்களில் (Advanced Mesolithic  or Pre Neolithic Periods) ) இருந்து கிடைக்கின்றன என்பர் .

Tags — அரிசி மருத்துவம், ஷஷ்டிகா,  நீவார, ஞவரகிழி .

–subham–

ஹிந்தி படப் பாடல்கள் – 61 – இரு மணிகள்(Post No.8128)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8128

Date uploaded in London – – – 8 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 61 – இரு மணிகள் – ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர்!

R. Nanjappa

ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர்!

ஹேமந்த் குமார், இசைஞர், பாடகர். தன் இசையிலேயே பாடியதுடன் பிறருக்காகவும் பாடினார். 50களில் இவர் குரலில் ஒரு தனிக் கவர்ச்சி, கம்பீரம் இருந்தது. 50களில் இவர் பிற இசைஞர்களுக்காகப் பாடிய இரு பாட்டுக்களைப் பார்க்கலாம். இவற்றில் ஒரு விசேஷம். அதையும் கவனிக்கலாம். ஒரு தனிப்பாடல் :   பஹாரோ(ன்) கா ஸமா.   ye bahaaron kaa samaa, chaand taaron kaa samaa kho na jaaye aa bhi jaa ye bahaaron kaa samaa   இந்த இனிய வசந்த காலத்தின் சூழல், இனிய நிலவு, தாரகைகள் மலர்ந்த சூழல் இவை மறைந்து போவதற்குள் நீ வந்துவிடு!   zindagaani dard ban jaaye kahin aisaa na ho saans aahen sard ban jaaye kahin aisaa na ho dil tadap kar na jahaan so na jaaye aa bhi jaa ye bahaaron kaa samaa,   வாழ்க்கையில் துன்பம் வந்துவிடப் போகிறது அப்படி நேராமல் இருக்கட்டும் விடும் மூச்சும் பெருமூச்சாக மாறி துன்பம் தராமல் இருக்கட்டும் துடிக்கும் மனதுடன் உறக்கம் கொள்ளாது இந்த நல்ல சூழல் மறைவதற்குள் நீ இங்கு வா   kyaa huaa kyun is tarah toone nigaahein pher li meri raahon ki taraf se apni raahein pher li zindagi ka kaaravaan kho na jaaye aa bhi jaa   உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படி என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாய்? என் பாதையிலிருந்து உன் பாதையைத் திருப்பிக்கொண்டாய்? வாழ்க்கையின் நல்ல போக்கு மாறுவதற்குள் நீ இங்கு வா! இந்த அழகிய சூழல் மாறிவிடப் போகிறது!

Song: Ye Baharo(n) ka sama film: Milap 1955 Lyrics: Sahir Ludhianvi Music: N.Dutta Singers: Hemant Kumar. Lata separately, in tandem Here lyrics are given for Hemant Kumar version. YouTube link: https://www.youtube.com/watch?v=3TUtFWwlklw Hear Lata Mangeshkar’s version also here:  https://www.youtube.com/watch?v=-sGOg_MiSl8   எஸ்.டி.பர்மனுக்கு உதவியாளராக இருந்த தத்தா, முதலில் இசையமைத்த படம்மிலாப்‘. இவருக்கு ஸாஹிர் லுதியான்வியின் கவிதை மீது ஒரு மோகம்! பல முன்னணி இசைஞர்களுக்கு ஸாஹிரின் போக்கு பிடிக்கவில்லை. தத்தா பல படங்களில் ஸாஹிர் பாட்டுக்கு இசையமைத்தார்.. ஒரு டூயட் :   பீமார் மொஹப்பத் கா   बीमार मोहब्बत का इतना सा फ़साना है
मरता है कोई तुम पर जीने का बहाना है
साँसें तो हैं उलझी सी दिल है तो दीवाना है
मरता है कोई तुम पर  जीने का बहाना है बीमार मोहब्बत का 
सीखे हैं मेरे दिल ने अंदाज़ तेरे दिल के कुछ और भी दीवाने बेचैन हुए मिल के
पहलु में कसक सी है होंठों पे तराना है
मरता है कोई तुम पर जीने का बहाना है  बीमार मोहब्बत का     दिल मे तेरी सूरत ने एक शम्मा जलायी है ये रात मोहब्बत की तक़दीर से आई है
धड़कन की सदा सुन लो खामोश ज़माना है
मरता है कोई तुम पर जीने का बहाना है
बीमार मोहब्बत का   பீமார் மொஹப்பத் கா இத்னா ஸா ஃபஸானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனேகா பஹானா ஹை   காதல் என்னும் நோய்இதில் என்ன சிக்கல்? இவ்வளவுதான்வாழ்கிறேன் என்ற பெயரில் உனக்காக உயிரைவிடவும் யாரோ துணிந்து விட்டார்!   ஸான்ஸே தோ ஹை உல்ஜீ ஸீ தில் ஹை தோ தீவானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை பீமார் மொஹப்பத் கா   மனது பைத்தியமாகி விட்டது, மூச்சு முட்டுகிறது! வாழ்கிறேன் என்ற சாக்கில் யாரோ உன்மீது உயிர்விடவும் துணிந்தார்! இந்தக் காதல் என்னும் நோய்….   ஸீகே ஹை மேரே தில் நே அந்தாஃஜ் தேரே தில் கே குச் ஔர் பீ தீவானே பேசைன் ஹுயே மில் கே பஹலூ மே கஸக் ஸீ ஹை, ஹோடோ(ன்) பே தரானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை பீமார் முஹப்பத் கா   என் மனது உன் மனதின் போக்கை அறிய முற்படுகிறது பைத்தியம்! உன்னுடன் சேர்ந்ததில் நிம்மதியை இழந்து விட்டது! நடையில் ஒரு மிடுக்கு, உதட்டில் ஒரு பாட்டு வந்து விட்டது! வாழ்கிறேன் என்ற பெயரில் உன் மீது உயிரை விடவும் யாரோ துணிந்தார்!   தில் மே தேரீ ஸூரத் நே ஏக் ஷம்மா ஜலாயீ ஹை ராத் முஹப்பத் கீ தக்தீர் ஸே ஆயீ ஹை தட்கன் கீ ஸதா ஸுன்லோ காமோஷ் ஃஜ்மானா ஹை மர்தாஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை   என் மனதில் உன் முகம் ஒரு விளக்கை ஏற்றிவைத்து விட்டது இந்த அன்பான இரவு விதி வசத்தால் வந்ததாகும்! உலகமே நிசப்தமாக இருக்கிறதுஎன் இதயத்துடிப்பைக் கேள்! வாழ்கிறேன் என்ற பெயரில் யாரோ உன்மேல் மடியவும் துணிந்தார்!   Song: Beemar e mohabbat ka Film: Teesri Gali 1958 Lyrics: Majrooh Sultanpuri Music: Chitragupta Singers: Hemant Kumar & Lata Mangeshkar YouTube link: https://www.youtube.com/watch?v=E9-leS1krss https://www.youtube.com/watch?v=DqD2zrb806A     மஜ்ரூஹ் ஸுல்தான்புரியின் அருமையான காதல் கவிதை! சித்ரகுப்தாவின் அருமையான இசை! து ‘B grade’ படத்தில் மாட்டிக்கொண்டது! இந்தப் படத்தை எடுத்தவர் கோப் (Gope) என்ற பழைய காமெடி நடிகர். இந்தப் படத்தில் அவர் பேசுவதாக ஒரு வசனம் வரும்: “மை ஊபர் ஆதா ஹூ(ன்)” – இதோ, நான் மேலே வருகிறேன் என்று வரும். படப்பிடிப்பின்போது இந்த வசனத்தை அவர் பேசும்போதே இதயத் துடிப்பால் உயிர் நீத்தார்! பிறகு எப்படியோ படம் வெளிவந்தது. பிரபலமாகவில்லை. இந்த அருமையான பாடல் அதில் புதைந்துவிட்டது. இங்கே முதல் பாட்டு ஒரே மெட்டில் ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர் இருவரும் தனித்தனியாகப் பாடியது. இத்தகைய பாடல்களை Tandem Songs என்பர். இப்படிப் பல பாட்டுக்கள் இருக்கின்றன். ஆனால் ஆண் பாடகர் பாடிய எந்தப் பாட்டும் எந்தப் பெண் பாடகர் குரலிலும் எடுபடவில்லை! இங்கும் ஹேமந்த் குமார் குரலுக்கு லதா மங்கேஷ்கர் ஈடுகொடுக்க முடியவில்லை! ஆனால் அடுத்த டூயட்டில் இருவரும் இணைந்து பாடி பாட்டு பிரமாதமாக அமைந்து விட்டது! இத்தகைய டூயட் பாடல்கள் நம் திரை இசைக்கே உரித்தானவை! வேறு எங்கும் காணமுடியாது! ஹிந்தித் திரையிசையில் குறிப்பாக தலத்லதா, ஹேமந்த் குமார்லதா, ரஃபிகீதா தத், ஹேமந்த் குமார்கீதா தத் பாடிய டூயட் பாடல்கள் அனைத்தும் சிறந்தவை. இந்தக் குரல்களுக்கிடையே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது! தமிழிலும் அருமையான டூயட் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் குரல்கள் இப்படிக் குழைந்து வருவது அபூர்வம் தான் என்று தோன்றுகிறது! வணங்காமுடியில் இரு டூயட்கள் பிரமாதமானவை: இசை ஜி.ராமனாதன் மோகனப் புன்னகை செய்திடும் நிலவேடி.எம்.எஸ்சுசீலா வாழ்வினிலே இந்தாள் இனி வருமா.எம்.ராஜாசுசீலா நாடோடி மன்னனில்கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே‘- டி.எம்.எஸ்ஜிக்கி. இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு. தமிழ்த்திரையில் இத்தகைய இனிய பாடல்கள் வித்தியாசமானவை! [நடிகர்களைப் பிடிக்காதவர்கள் கண்களை மூடி பாட்டை மட்டும் கேட்கவும்!] Attachments area Preview YouTube video YE BAHARON KA SAMA MILAP HEMANT https://i.ytimg.com/vi/3TUtFWwlklw/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png YE BAHARON KA SAMA MILAP HEMANT Preview YouTube video ye baharon ka sama..lata-hemant kumar- sahir ludhianvi- n datta..a tribute https://i.ytimg.com/vi/-sGOg_MiSl8/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png ye baharon ka sama..lata-hemant kumar- sahir ludhianvi- n datta..a tribute Preview YouTube video beemar e mohabbat ka..Hemant Kumar_Lata_Majrooh_Chitragupt..a tribute https://i.ytimg.com/vi/E9-leS1krss/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png beemar e mohabbat ka..Hemant Kumar_Lata_Majrooh_Chitragupt..a tribute Preview YouTube video Beemar-e-Mohabbat Ka Itna Sa – Hemant Kumar & Lata Mangeshkar https://i.ytimg.com/vi/DqD2zrb806A/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Beemar-e-Mohabbat Ka Itna Sa – Hemant Kumar & Lata Mangeshkar                                                          *** Sat, May 16, 8:43 PM

கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibliomancy Oracle! -1(Post No.8127)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8127

Date uploaded in London – – – 8 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibliomancy Oracle! -1

ச.நாகராஜன்

குழப்பத்திலிருந்து மீண்டு முடிவெடுக்க வழிகள்!

பழைய காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா அல்லது ஒரு விஷயத்தில் இப்படிப் போவதா அப்படிப் போவதா என்பது பற்றிய குழப்பமான மனநிலை இருக்கும் போது பூ போட்டுப் பார்த்தல் அல்லது கயிறு சார்த்திப் பார்த்தல் அல்லது திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் இது தொடர்கிறது.

அதாவது இதில் தெய்வம் தரும் வழி அல்லது முடிவு என்ன என்பதைப் பார்ப்பதற்காக ஒரு தெய்வீக நூலில் – தேவாரம் அல்லது திருவிளையாடல் புராணம் போன்ற நூலில் யதேச்சையாக ஒரு இடத்தில் கயிறைச் சார்த்தி அந்தப் பக்கத்தைத் திறந்து அங்கு என்ன செய்தி வந்திருக்கிறது என்பதைப் பார்த்து இறைவனின் திருவுள்ளத்தை அறிவது வழக்கம்.

அதே போல பூக்களை சுவாமி சந்நிதியில் குருக்கள் அல்லது பூசாரி அல்லது ஒரு சிறு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லி நினைத்த பூ எடுக்கப்படுகிறதா என்பது பார்ப்பதும் ஒரு வழக்கம். இரு துண்டுச் சீட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் செய்வதும் ஒரு நடைமுறை – பூவிற்குப் பதில் திருவுளச் சீட்டு.

சிலர் நாணயத்தைச் சுண்டி விட்டு தலையா அல்லது பூவா என்று பார்த்து தங்கள் நிலையை முடிவு செய்வர்.

கயிறு சார்த்திப் பார்த்தல்!

இது பற்றிய சுவையான சம்பவங்கள் நமது நாட்டில் ஏராளம் உள்ளன.

உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்:-

உ.வே.சாமிநாதையரின் என் சரிதை நூலில் 23ஆம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதி இது:-

ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறுசார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.



நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறுசார்த்தச் செய்து, புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி வருடம் பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன். “என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என் மனம் திக்குத்திக்கென்று அடித்துக்கொண்டது. நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.


“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது. மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால், என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சிசுந்தரக் கடவுள் முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.


என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

கயிறு சார்த்திப் பார்த்ததில் மீனாட்சி சுந்தரக் கடவுள் பெயருடைய ஒருவர் ஆசிரியராகக் கிடைப்பார் என்று உ.வே.சாமிநாதையருக்குச் செய்தி வந்தது.

அதன்படியே நடந்தது.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையா ஆசானாகக் கொள்ளும் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

குருவை ஒருநாளும் அவர் மறந்தாரில்லை.

அவரது சரித்திரத்தையே அழியாத இலக்கியமாக அவர் இயற்றி விட்டார்.

இதே போல மேலை நாட்டிலும் ஏன் உலகெங்குமே கிறிஸ்தவர்கள் சிலரிடமும் ஒரு பழக்கமுண்டு. அவர்கள் தெய்வீக நூலாகக் கருதும் பைபிளில் கயிறு சார்த்திப் பார்ப்பது அவர்களின் வழி.

இது Bibliomancy Oracle என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.

Old Articles from our blog



ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி …

tamilandvedas.com › 2020/04/22

  1.  

Translate this page

22 Apr 2020 – … ஒரு திருடன் என்று அர்த்தம்; சம்ஸ்க்ருதத்தில் ‘கயிறு நீளம்’ என்றால் ஆள் படு சோம்பேறி என்று அர்த்தம். … tamilandvedas.com › tag › கோழ…

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மணல…

  1.  

Translate this page

7 Oct 2017 – திருக்கோவையார். More ASTROLOGY Articles in my blog. ஜோதிடம்| Tamil and Vedas. tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது …

Astrology | Tamil and Vedas | Page 9

tamilandvedas.com › astrology-2 › p…

  1.  

Translate this page

7 Oct 2017 – tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR … வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas.



Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com › 2013/02/27 › t…

  1.  
  2.  

Translate this page

27 Feb 2013 – Tamil AstrologyRope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to …

ROLE OF PADDY PLANTS IN TAMIL ASTROLOGY (Post No …

tamilandvedas.com › 2018/04/05 › role-of-paddy-plant…

  1.  

5 Apr 2018 – tamilandvedas.com/tag/நாடி… Posts about நாடி ஜோதிடம் written byTamil and Vedas. Tamil AstrologyRope Trick for …



Tamil astrology | Tamil and Vedas

tamilandvedas.com › tag › tamil-astrology

  1.  

Posts about Tamil astrology written by Tamil and Vedas. … Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some answer by …



Astrology: Tamil’s Strange Prediction … – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com › 2017/10 › astrology-ta…

  1.  

7 Oct 2017 – Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some … https://tamilandvedas.com/tag/bird-predictions/. 1.

tag- கயிறு சார்த்திப் பார்த்தல்

SWAMI CROSSWORD 762020 (Post No.8126)

EMPEROR ASOKA
ASOKA’S INDIA

SWAMI CROSSWORD 762020 (Post No.8126)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8126

Date uploaded in London – 7 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

  1. – (6 letters) Busddhist temple  or monastery; state name Bihar is derived from this word.

4.—(6) – Sacred grass used in Vedic rituals

5. – (6) –violent, suddenly, rashness in Sanskrit

8—(4) –Unborn, Brahma

9—(5)—Wife of Lord Shiva; means White

10.—(6) – Necklace, neck.

DOWN

  1. – (6 letters) – town in Madhya Pradesh where from Emperor Asoka’s Chief queen came; se was the beautiful daughter of a banker.
  2. – (6)—author of Ratnavali drama; great emperor.
  3. — (9)- All India Radio’s name that comes in news bulletins

6. – (5) – unborn

7.—(5) – elixir, that came from the ocean according to Hindu scriptures

BRAHMA SENT BY LALGUDI VEDA

—SUBHAM–

கோபுரம் பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8125)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8125

Date uploaded in London – 7 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

picture sent by lalgudi veda

விடை

1.கோபுரத்தை பொம்மையா தாங்குகிறது?

2.கோபுரம் தாங்கி போல் நடக்கிறான்

3.கோபுரத்தில் விளக்கை வைத்துக் கொ ட்டுக் கூடையால் மூடுவானேன்?

4.கோபுர தரிசனம்  கோடி புண்யம்


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags– கோபுரம் , பழமொழிகள்,

–subham–

139 HOLY RIVERS AND 39 HOLY LAKES OF INDIA (Post No.8124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8124

Date uploaded in London – 7 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindus use holy water taken from sea, lakes and rivers for bathing kings, gods, and on special occasions, ordinary people.  During big Yagnas (Fire Sacrifices) and temple consecration (Kumbha Abishekam)  ceremonies water is brought from different holy places. Tamil and Sanskrit inscriptions praise certain kings bathing everyday in water brought from four different seas. This is to show that they control all the four directions, i.e. the countries in all four directions.

Someone has done a painstaking work by compiling names of the holy rivers and holy sarovars/lakes in different parts of India . This was published in a souvenir on the occasion of a Shivratri Yagna performed in London several years ago.

Please see the attached list

tags — Holy Rivers, Holy Lakes, Sarovar,, Punya Nadhi, Punya Tirtha, India


SRI TYAGARAJA-28, Tyagaraja’s Rama (Post No.8123)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8123

Date uploaded in London – – – 7 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

SRI TYAGARAJA-28,  Tyagaraja’s Rama

Brahman and Avatara

 Rama was the Ishtadevata, Upasana Murti of Sri Tyagaraja. How exactly did Tyagaraja regard Rama? Of course, He is the Avatara, born as the son of Dasaratha, ruled over ayodhya, etc. But the matter is not so simple-it is mysterious.

The English word God has  no clear  meaning. We have different words to indicate different concepts. The Absolute, Ultimate, Alpha and Omega, is beyond our mind, thought and speech. It (or He, or She) is designated Brahman. But the human mind is incapable of conceiving something like that. So for our sake, that Absolute, Unnamable, Formless Truth comes down , bearing a Form and Name. (There is the concept of Iswara also, which is not relevant here). Those who murmur should ponder: can they understand even a human concept like love in an absolute vacuum? Can they think of love in the absence of any person or object or relation? It is seen that those unfortunate persons not having any one to love or be loved by, at least attach themselves to a pet, an ideal or even a petty thing like a pen or a bike!

Our highest love is reserved for the Most High. And to honour our love, That comes down, descends to our level, to our midst, bearing a name and form. This we call the Avatara.

Avatara in the Gita

 Lord Krishna  explained this idea in the Gita.

Ajoapi sannavyayaatma

Bhutanaam Ishvaroapisan

Prakrutim swaam adhishtaaya

Sambhavaami aatma mayayaa.        4.6

Though I am unborn, of changeless nature and Lord of beings, yet subjugating My Prakriti, I come into being by MY own Maya.

(The words sambhavami and maya are untranslatable. The translation here is  approximate.)

Then does He become a mere human being?

Avyaktam vyaktimapannam

Manyante Mam abhuddhaya:

Param bhavam ajananto

Mam avyayam anuttamam.             7.24

The foolish regard Me, the Unmanifested, as come into manifestation, not knowing my Supreme State- immutable and transcendental.

Naaham prakaasa: sarvasya

Yoga maya samavruta:

Moodhoayam naabhi janati

Loko Mam ajam avyayam                7.25

I am veiled by My Yogamaya. So I am not perceived by every one. This humanity lacking intelligence does not understand Me as the Unborn and the Ultimate Immutable 

This maya belongs to Bhagavan. That is why we need His grace to go beyond it and understand and love Him. This is clarified by Bhagavan Himself.

Daivee hyesha gunamayi

Mama maya duratyayaa

Maameva ye prabatyante

Maya metaam taranti te              7.14

This maya of Mine, constituted of the three gunas is difficult to cross over. Only those who are devoted to Me cross over this maya.

Avajaananti Mam moodha

Maanusheem tanum aasritam

Param bhavamajaananto

Mama bhuta maheshvaram.               9.11

Unaware of My higher state, as the great Lord of beings , fools disregard Me, donning the human form.

Those who are able to transcend the maya are fortunate. They perceive Bhagavan in the Avatara.

Yo Mam ajam anaadim cha

Vetti loka Mahesvaram 

Asammoodha: sa martyeshu

Sarva papai: pramuchyate.             10.3

He who knows Me (as I am), birthless and beginningless (and therefore deathless and endless),the great Lord of the worlds – he among mortals is undeluded ; he is freed from all sins.

Avatara in Bhagavtam: Act of Compassion

 It is to bless  people that the Unmanifest Bhagavan comes down with a name and form, as clarified in the Bhagavatam.

Anugrahaya bhutaanaam

Maanusham deham aasthita:

Bhajate daatrusee: kreeda

Ya srutvaa tatparo bhavet.          

It is for the sake of conferring blessings on the Jivas that Bhagavan manifests Himself in the human form .

He then indulges in a variety of divine play(leela). At least by listening to them , their minds may turn towards Bhagavan- that is why.

So, the Avatara is a great act of compassion on the part of the Absolute for the benefit of humanity. But the devotee never forgets that the Avatara is also the Absolute.

AvataraV.Trimurti

A problem is faced by Hindus here. We also have the concept of Trimurti- the absolute Brahman being regarded as Brahma, Vishnu, Siva. So, how do we regard the Avatara vis a vis the Trimurtis?

It is generally held that all the Avataras are of Vishnu. Brahma is never known to have incarnated. Siva has manifested and performed leelas, but these are not regarded as Avatars.Only Vishnu has taken Avatar.

But in reality there is nothing like this. The Trimurti is a human concept, but the Avatara is a divine fact! The Bhagavan who gives us the Gita is not just one of the Trimurtis! If we study the Gita closely and carefully,we will see that Krishna, sitting in the chariot and speaking to Arjuna, easily transcends His human form and reveals Himself as the Absolute- beyond the Trinity.Arjuna becomes so frightened that he requests this Absolute to assume his normal human form! It is therefore my view that Avatara is superior to the Trinity.

Avatara: Preservation and Destruction

I will just point out one  incongruity in the popular idea that Vishnu has taken all the Avatars. Vishnu is supposed to be the Deity of preservation. But in all the Avatars, he has only destroyed something or somebody! In fact this destruction is part of preservation- it is indeed not destruction but transformation or fulfilment! So our idea of one murti for creation, one for preservation, one for samhara is itself imperfect. Sri Bhagavan makes it clear in the Gita:

Yada yada hi dharmasya 

glanir bhavati Bharata

Abhyutthanam adharmasya 

tadaatmanam srujamyaham             4.7

O descendant of Bharata! Whenever there is decline of Dharma, and rise of Adharma,  then I come forth in a body.

Paritranaya Sadhunam 

Vinasaya cha dushkrutaam

Dharma samstaapanaartaya 

Sambhavaami yuge yuge.                 4.8

For the protection of the good, for the destruction of the wicked, for the establishment of Dharma, I come into being in every age.

It is therefore clear that the  establishing dharma involves both protection (preservation) and destruction! It cannot be the role of just Vishnu, as popularly conceived! Often, adharma will not go unless those who indulge in it are got rid of!

For instance Duryodhana says:

Jaanaami dharmam na cha me pravritti:

Jaanaami adharmam na cha me nivritti:

Kenaapi devena hrudi stithi tena

Yatha niyuktoasmi tatha karomi      (Pandava Gita)

I know what is dharma; but I am not able to observe it. I know what is adharma but I am not able to refrain from it. There is some deva in my heart; as it prompts me, I act.

This is a very clear example of how adharma cannot be removed unless those responsible for it are also removed! Duryodhana is a prime example of one born with demonic tendencies, as explained in the Gita! Such figures are typal ie they cannot be reformed. Thus maintenance of dharma involves destruction too, conceived as the job of Rudra! Besides, we should also remember that the names Brahma, Vishnu and Siva are Vedic and in the Veda they have a significance far different from those given in a puranic context.  

It is therefore clear that Avatara is above the Trimurtis! 

Rama is more than Trimurtis

Tyagaraja  subscribes to this fully. His Rama is not just the son of Dasaratha. The name Rama, the Taraka Nama, existed prior to Ramavatara! Let us see how Tyagaraja regards Rama.

Adi madhya rahita           (Nee daya- Todi)

Adi madhyanta rahita       (Edari sancharintura)

Adi anta rahita                (Aela needaya radu)

Rama is one without beginning, middle and end. He is Brahman.

Oka rupamuna barosi oka rupamuna echi

oka rupamu joochuchuntivi             (Innallu- Ghata)

You create the universe assuming one form; assuming another, you preserve it; and in another form, you destroy it!

Vinu Saketaraju visvamaneratha munekki

Tana samarthyamuche daane nadiyinchenae

                                                                                (Manasa-vardhani)

Bhagavan as Ayodhyapati moves on the Earth as his chariot, and gets everything done by his own skill (or power)

Okatesinapadi noorai veiyai

Chakapakalaadi satuvula nanache nata 

Vikaluni kakini brova trimurtulu

venula teesi naarada 

Sakala nadipatikai  drumakulyula

samharinche nataa               (Evarichchirira)

 It seems when you sent an arrow, it multiplied into ten, hundred and thousand and controlled the enemies. Even the Trimurtis refrained from saving Kakasura (  when he was pursued by your weapon).For the sake of the king of the Seas, your arrow destroyed the place of residence of the Rakshasas called Drumakulya.

(Who gave you such bow and arrows?)

The Trimurtis represent the three gunas. But Rama is beyond the three gunas.

 Mooti kekkuvaina needu gunammulu

                                    (Talachi nantate)

Your characteristics which transcend the three gunas.

Tri saktiyu galigina devudu neevai   (Yuktamu gaadu)

You are the Divine who has all the three powers (of creation, preservation and destruction)

Tamasadi guna rahitudu        (Undaedi)

One who has transcended the gunas beginning with Tamas.

Besides transcending the three gunas, Bhagavan is also beyond the dualities. He does not have feelings of friend ,enemy, etc. He saves even the Rakshasas and Asuras.

Satrula mitrula samamuga jooche nee

                                        (Enduku nirdaya)

You regard enemies and friends alike. 

Here we remember the words of Gita:

Samoaham sarva bhuteshu

Na Mae dweshyoasti na priya:

Ye bhajanti tu Mam  Bhaktya

Mayi te teshu chapyaham                9.29

I am the same to all beings; to Me there is none hateful or dear. But those who worship Me are in Me and I too am in them.

Nirvikara guna nirmala         (Dinamani vamsa)

One with charactersistics which do not undergo change. The pure.

(Gunas are modifications of mind. Rama is beyond such modifications.)

Vaemako lokaabhi

Cheemalo Brahmalo Siva kesavaadulalo

prema meera melagu chunde birudu vahinchina

                                         (Rama nannu brova)

You are pervading all jivas- from the ant to Brahma, and also Siva and Vishnu with great love.

Srushti pushti nashti seyu panuluni

Nikrushta manuchutu Trimurtula koasagi

                                     (Manasa SriRamachandra)

Rama has felt the three activities of creation, preservation and destruction as of low order and so has left them to the Trimurtis.

Ajagaja rakshaka gajasarmaamba-

raadi daivabhedamulanu leela 

kalga jesina                 (Nijamarmamulanu)

Sri Rama established the differentiation  among Brahma, Vishnu and Siva as if in play.

(The kriti goes on to say that those who know this secret cannot be subject to any difficulties.)

Muggurilo maelaina Rama      (Siggumali)

Rama, who is above  the Trimurtis!

Parvati ramanaarchita pada

Ramaapati vandya paratpara       (Sarva bhauma)

Your Feet are worshipped by Siva

You are worshipped by Vishnu.

You are the Paratpara.

Paripurnaavatara                     (Raghupate Rama)

You have assumed the perfect, most complete Avatara.

Paraesa 

 (Para Isha)  Paramatma

Eeraedu lokamula

Kaadharudagu                           (Vaerevvarae)

You are the foundation for the fourteen worlds.

Saatvika bhakti bichcha meeyavae….

Trimurtula gati melmi Rama         (Bhakti bichcha)

Rama! Please give me as alms bhakti for you which is of an auspicious nature. That alone is superior to even the Trimurtis.

Mummurtulu gumigoodi pogade

muchchata vinukorae 

Just listen to this- how the Trimurtis have come together to praise Rama!

Geetad yakhilo upanishad sara  Sitavara    (Sitavara)

Rama! You shine as the essence of Gita and other Upanishads.

Srushti sthityantakara…..

Onkara panjara keera 

purahara sarojabhava kesavaadi

rupa…………………………(Jagadanandakaraka)

One performing the three functions of creation, preservation and destruction.

Has taken the form of Siva (who destroyed the three puras) , Brahma of the lotus, and Vishnu.

Nara kinnara kimpurusha sura 

nirjara raja sivaadi ramaapatula

taru bhudharaa naekanda mula….

Leelaganu jooche                       (Leelaganu)

Humans kinnaras kimpurushas, asuras Devendra,Siva, Vishnu, the lord of Lakshmi, trees, the different worlds – all these should be seen as your play. (Please grant me the association of such holy men who have this vision.)

Sivuniki tamasa gunamichchi kamala-
Bhavuniki rajasa guna mosagi sachi-
dhavuniki garva hrudayuniga jesina
Emani pogadudura                    (Emani pogadudura)

You gave tamasa guna to Siva, rajasa guna to Brahma, indordinate pride to Indra.

There are at least three kritis where Tyagaraja deals with this subject extensively.

  • Evarani nirnayinchirira
  • Etavunara
  • Endundi vedalitivo.

We have seen the first two in previous postings. So now, we will look at the other one.

Where does Rama hail from?

Sri Rama nee 

Endundi vedalitivo Aeyooro ne deliyya

ipudaina delupavayya                  (Endundi)

Sri Rama!Where do you hail from? Which is your place? I do not know.Lord, at least now reveal them to me.

Anda chandamu verai  nadatalella 

trigunaateetamai yunnade gaani 

Your appearance ( of a prince) is something; but your conduct is different- beyond the three gunas! 

Chitukante naparadha chayamula dagilinche

Sivalokamu gadu

Vaturupudai balini vanchinchi yanchuvani

Vaikunthamu gadu

Vitavachamulaadi chiramu drumpabadda

Vidhilokamu gadu

Your place cannot be Sivaloka- where even a small lapse constitutes a big offence.

It cannot be Vaikunta, the place of Vishnu, who after all tricked Mahabali and subjugated him. 

It cannot be the world of Brahma who lost one of his five heads for resorting to lustful words.

Didavu dharmamu satyamu mrudubhashalu kalgu

divyarupa Tyagaraja vinuta

Your divine form is full of firmness, dharma, satya, pleasing speech, etc. So where exactly do you come from? (Who indeed are you, because you are so different from the Trimurtis!)

What a splendid way Tyagaraja portrays the nature of Rama, as beyond the Trimurtis! Our Puranas are full of incidents revealing the ‘other side’ of the Trimurtis! (It is almost like the gods in Greek mythology!) Compared to them, Rama is ideal and perfect in all respects! No wonder Tyagaraja has seen the secret behind Him ( nija marmamu telisina vaani) and realised Him as the Brahman, beyond the Trinity!

That is why, we can never get good buddhi without instructions from Satguru : buddhi radu, buddi radu, peddala suddulu vinaka)

 
Bhagavan Himself declares in the Gita:

Brahmano hi pratistaaham
Amrutasya avyayasya cha
Sasvatasya cha dharmasya
Sukhasya aikaantikasya cha                 14.27


For I am the abode of Brahman- the Immortal and Immutable, of everlasting Dharma and the Absolute, Unchanging Bliss.
Can we now dare to say that the Avatara is just an aspect of any Deity?

As the Sadguru, Tyagaraja has revealed the Truth of Avatara.

    Note:

That a true devotee should not differentiate among Upasana Murtis ( that is, whatever may be one’s own Upasana Murti, he should not denigrate or decry others, and advocate the idea that one is superior to another) is emphasised in the Bhagavata.
After Daksha’s Yajna was destroyed by Rudra, the Devas request Rudra to give up his anger and help in the proper completion of the Yajna. Rudra too shows compassion and  visits the Yajnashala. Then Lord Narayana also appears there and instructs them about the non-difference among the Murtis (Murti-Samasrayam). Bhagavatam, Skanda 4, Chapter 7.

Bhagavan says:


Aham Brahma cha sarvascha 
jagata: karanam param
Atmeswara upadrishta
 swayam druga viseshana:

I am Brahma, responsible for creation of the World. I am Siva too. I am the Atma of every one, their master and also the witness for their acts. I am self-effulgent and unconnected with anything.
Atma mayam samavisya

 soaham gunamayeem dwija
Srujan rakshan haran visvam 
 dadhrae samjnam kriyochitaam.
O Brahmins! Though I am such, I assume the Maya consisting of the three gunas and engage in projection,maintenance and  laya of the world. Accordingly, I assume the names of Brahma, Vishnu and Siva.
Tasmin brahmanyadvideeye

 kevalae paramatmani
Brahmarudrau cha bhutani 
bhedenaajnonupasyati. 

It is the one lacking intelligence who perceives differences in this One without a second, such as Brahma, Siva and others.


Yatha pumaanna swaangeshu 

sira:paanyadishu kwachit
Paarakya buddhim kurutae 
aevam bhuteshu matpara.


Will any man think of the various parts of his body that some are his, while some belong to others? Likewise my true devotee does not distinguish between Me and other forms of life.


Tryaanaam eka bhaavaanaam

Yo na pasyati vai bhidaam.
Sarva bhutatmanaam Brahman 

Sa santim adhigachchati.

O brahmajnanis!

We three are One. We also appear as all forms of life. One who does not perceive any differences among us attains Peace.
                               -Slokas 50-54.
Devotees should ponder how this matches what is said in the Gita!

To be continued…………………..

சிலந்தியின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் ? (Post No.8122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8122

Date uploaded in London – 7 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிலந்தியின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் ?

2006ம் ஆண்டில் லண்டன் டெய்லி மெயில் பத்திரிகையில் சிலந்திப் பூச்சி பற்றிய ஒரு கேள்வி பதில் வெளியானது. இதோ அதன் மொழி பெயர்ப்பு.

பொதுவாக சிலந்திகள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள்  வரை வாழ்கின் றன

சிலந்திகளில் 80, 000வகை இருக்கி ன்றன

ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியுடன்  கூடிய வுடன் இறந்து விடும். பெண் சிலந்திகள் முட்டையிட்டவுடன் இறந்து விடும்.

வீட்டி ல்  காணப்படும் சிலந்திப் பூச்சிகள் ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை உயிர் வாழும்.

தோட்டத்தில் வாழும் ,,,,,,, ஒன்றரை  ஆண்டுமுதல் இரண்டு ஆண்டுகள் வரை வாழும்.

பபூன் சிலந்திகள் பிடித்து வைக்கப்பட்ட கூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்ததும் உண் டு .

சிலந்தியின் அளவுக்கும் வாழ்நாளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெரிய போன் வலைச் சிலந்தி ஓராண்டு மட்டுமே வாழ்கிறது  சிறிய வயலின் சிலந்தியோ மூன்று ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கின்றன.

Common house spiders –

Tegenaria gigantea

Tegenaria domestica

Tegenaria atricia

Tegenaria  parietina

(in Britain)

Garden spider

Araneus  diademalus

Other spider species mentioned in the answer—

Violin spider, baboon spider,

Golden orb web


tags- சிலந்தி, ஆயுள் ,

–subham–

ஹிந்தி படப் பாடல்கள் – 60 – சித்ரகுப்தா! (Post No8121)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8121

Date uploaded in London – – – 7 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 60 – சித்ரகுப்தா!

R. Nanjappa

சித்ரகுப்தா!

ஹிந்தித் திரை இசையில் சித்ரகுப்தா (1917-1991) தனி இடம் பெற்றவர். 1946 முதல் (எஸ்.டி.பர்மன் காலம்) 80கள் வரை (பர்மனுக்கும் பின்னும்) துறையில் இருந்தவர். சுமார் 150 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல படங்கள் நல்ல இசையைக் கொண்டிருந்தும் திரையில் வெற்றிபெறவில்லை. பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆனாலும் இவரை முதல் வரிசையில் வைத்து எண்ணுவதில்லை. இன்று இவரை பலருக்கும் தெரியாது. இசையமைப்பாளர்கள் ஆனந்த்-மிலிந்த் அப்பா என்றால் தெரியுமோ என்னவோ!

புராணப் படங்கள், ராஜா-ராணி கதை, ஸ்டண்டு படம், சமூகப் படம் என எல்லாவித படங்களுக்கும் இசை அமைத்ததால் இவர் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவர் இனிமையை என்றும் கைவிட்டதில்லை. இவர் இசையில் உருவான பல அருமையான பாட்டுக்கள் இருக்கின்றன, இரண்டை இங்கு பார்ப்போம்.

சல் உட் ஜா ரே பஞ்சீ

चल उड़ जा रे पछि
चल उड़ जा रे पछि
की अब ये देश हुआ बेगाना
चल उड़ जा रे पछि

ख़तम हुए दिन उस डाली के जिस पर तेरा बसेरा था
आज यहाँ और कल हो  वह ये जोगी वाला फेरा था
सदा रहा है इस दुनिया में किस का ाबू दाना

चल उड़ जा रे पछि 

तूने तिनका तिनका  चुन कर नगरी एक बसाई
बारिश में तेरी भिगी काय  धुप में गरमी छै
गम ना कर जो तेरी मेहनत  तेरे काम ना आई

अच्छा है कुछ ले  जाने से देकर ही कुछ जाना

चल उड़ जा रे पछि

भूल जा अब वो मस्त हवा वो उडाना डाली डाली
जब आँख की कान्ता  बन गई चाल तेरी मतवाली

कौन भला उस बाग़ को पूछे हो ना जिसका मालि
तेरी क़िस्मत में लिखा  है जीते जी मर जाना

चल उड़ जा रे पछि

रोते है वो पंख पखेरू  साथ तेरे जो खेले

जिन के साथ लगाए तूने अरमानो के मेले
भीगी आँखों से ही  उनकी आज दुआए ले ले
किसको पता अब इस नगरी में कब हो तेरा आना

चल उड़ जा रे पछि

சல் உட் ஜா ரே பஞ்சீ கே அப் யே தேஷ் ஹுவா பேகானா

சல் உட் ஜா ரே பஞ்சீ.

பறவையே, நீ இப்பொது பறந்து போய்விடு

இப்போது இந்த இடம் உனக்கு அந்நியமாகிவிட்டது.

கதம் ஹுவே தின் உஸ் டாலி  கே ஜிஸ் பர் தேரா பஸேரா தா..

ஆஜ் யஹா(ன்) ஔர்  கல் ஹோ வஹா(ன்) யே ஜோகீவாலா ஃபேரா தா

ஸதா ரஹா ஹை இஸ் துனியா மே கிஸ்  கா ஆபூ தானா

சல் உட் ஜா ரே பஞ்சீ..

அந்தக் கிளையில் அமர்ந்திருந்தாயேஅந்த நாட்கள் கழிந்துவிட்டன

இன்று இங்கே, நாளை வேறு எங்கோ என்று பரதேசிபோல் நீ அலைந்துவிட்டாய்

இந்த உலகில் எவருக்காவது சதாகாலமும்  நல்ல உணவும் பானமும் கிடைத்தது என்பது உண்டா?

பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!.

தூனே டின்கா டின்கா..சுன்கர் நகரீ ஏக் பஸாயீ

பாரிஷ் மே தேரீ பீகீ ஆங்கே(ன்தூப் மே கர்மீ சை

கம் கர் ஜோ தேரீ மேஹ்னத் தேரே காம் ஆயே 

அச்சா ஹை குச் லேஜானே ஸே  தேகர் ஹீ குச் ஜானா

சல் உட் ஜா ரே பஞ்சீ

நீ சின்னச் சின்ன சுள்ளியாகப் பொறுக்கி எடுத்து உன் வீட்டைக் கட்டினாய்

(அப்படியும்) மழையில் உன் கண்கள் நனைந்தன, வெய்யிலில் சூடானது

உன் உழைப்பு உனக்குப்  பலன் தரவில்லையே என்று வருத்தப்படாதே!

ஏதாவது எடுத்துச் செல்வதை விட, சிறிதாவது கொடுத்து விட்டுச் செல்வது நல்லது தானே!

பறவையே, நீ பறந்து சென்று விடு!

பூல் ஜா அப் வோ மஸ்த் ஹவா வோ உடனா டாலீ டாலீ

ஜப் ஆங்க் கீ கா(ன்)டா பன்கயீ. சால் தேரீ மத்வாலீ.

கௌன் பலா உஸ் பாக் கோ பூசே ஹோ நா ஜிஸ்கா மாலீ

தேரீ கிஸ்மத் மே லிக்கா ஹை ஜீதே ஜீ மர் ஜானா

சல் உட் ஜா ரே பஞ்சீ

அந்த இனிமையாக வீசிய காற்று, கிளைக்குக் கிளை தாவி மகிழ்ந்தது ஆகியவற்றை மறந்துவிடு

உன்னுடைய அழகிய நடையும் களிப்பும் இந்த உலகத்திற்கு முள்போல ஆகிவிட்டது

தோட்டக்காரன் இருந்து பராமரிக்காத சோலையைப் பற்றி யார் கேட்பார்கள்?

சுரத்தில்லாமல் வாழவேண்டுமென்றுதான் உன் தலையில் எழுதியிருக்கிறதோ, என்னவோ!

பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!

ரோதே ஹை பங்க் பகேரூ ஸாத் தேரே ஜோ கேலே

ஜின் கே ஸாத் லகாயே தூ நே அர்மானோ(ன்) கே மேலே

பீகீ ஆங்கே ஸே ஹீ உன்கீ ஆஜ் துவாயே லேலே

கிஸ் கோ பதா அப் இஸ் நகரீமே கப் ஹோ தேரா ஆனா

சல் உட் ஜா ரே பஞ்சீ

உன்னுடன் கூட விளையாடிக் களித்த அத்தனை பறவைகளும் இன்று கண்ணிர் சிந்துகின்றன

அவர்களிடன் சேர்ந்து நீ எத்தனை ஆசைக் கனவுகள் கண்டாய்!

கண்ணீர் மல்கும் கண்களுடன் இன்று அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்

நீ இந்த இடத்திற்கு மீண்டும் எப்போது வருவாயோ, யாருக்குத் தெரியும்

பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!

Song: Chal Ud ja re panchi Film: Bhabhi 1957 Lyrics: Rajendra Krishan

Music: Chitraguta  Singer: Mohammad Rafi

YouTube link:  https://www.youtube.com/watch?v=TIWvwNty3yE

The same song was recorded by HMV in Talat Mehmood’s voice also (version song -not in the film)

Link   https://www.youtube.com/watch?v=gO5HAdQ34oM

This is a great composition, with sublime lyrics, No one can listen to this song without tears welling up in the eyes!

ராஜேந்த்ர க்ருஷ்ணனின் அருமையான கவிதை, ரஃபியின் குரலில் ஒலிக்கும் பாட்டு! மனதை உருக்கும் படியான கவிதை, உருக்கமாகப் பாடியிருக்கிறார் ரஃபி. மிக அருமையான இசை.கண்கள் பனிக்காமல் இப்பாட்டைக் கேட்க இயலாது.  இந்த மாதிரி மனதைத் தொடும் பாடல்களை தற்காலத்தவரால் தரவே இயலாது! Their songs come from the computer, not from the heart! 

இது கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய ஏவிஎம் படம்- குலதெய்வத்தின் ஹிந்தி வடிவம் என்று நினைக்கிறேன்.

முஃப்த் ஹுவே பத்நாம்

मुफ्त हुए बदनाम किसी पे  हाय दिल को लगा के
जीना हुआ इलज़ाम किसी पे हाय दिल को लगा के

गये अरमान ले के लुटे लुटे आते है
लोग जहाँ में कैसे दिल को लगते है
दिल को लगाते है अपना बनाते है
हम तो फिरे नाकाम हम तो फिरे नाकाम
किसी से हाय दिल को लगा के मुफ्त हुए
बदनाम ….

समझे थे साथ देगा किसी का सुहाना गम
खुली जो नजर तो देखा तन्हा खड़े है हम
तन्हा खड़े है हम दिन भी रहा है कम
रस्ते में हो गयी शाम रस्ते में हो गयी शाम
किसी पे हाय दिल को लगा के मुफ्त हुए
बदनाम ..

முஃப்த் ஹுவே பத்நாம் கிஸீ பே ஹாயே தில் கோ லகா கே

ஜீனா ஹுவா இல்ஃஜாம் கிஸீ பே ஹாயே தில் கோ லகா கே

யாரிடமோ மனதைப் பறிகொடுத்து, வீணில் அவப்பெயர் வந்தது

வாழ்க்கையே ஒரு குற்றச் சுமையாகிவிட்டது

யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது

கயே அர்மான் லேகே லுடே லுடே ஆதே ஹை

லோக் ஜஹா(ன்) மே கைஸே தில் கோ லகாதே ஹை

தில் கோ லகாதே ஹை, அப்னா பனாதே ஹை

ஹம் தோ ஃபிரே நாகாம்

கிஸீ பே ஹாயே, தில் கோ லகா கே

முஃப்த் ஹுவே பத்நாம்….

ஆசைகள் நிறைந்த மனதுடன் சென்றேன், எல்லாம் இழந்து திரும்புகிறேன்

உலகில் மக்கள் எப்படித்தான் ஒருவரிடம் அன்பு செலுத்துகிறார்களோ, தெரியவில்லை!

அன்பு செலுத்துகிறார்கள், தன்னைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்தெரியவில்லை!

நான் என்னவோ வெட்டியாக அலைகிறேன்

யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது

ஸம்ஜே தே ஸாத் தேகா கிஸீ கா ஸுஹானா கம்.

குலீ ஜோ நஃஜர் தோ தேகா தன்ஹா கடே ஹை ஹம்

தன்ஹா கடே ஹை ஹம், தின் பீ ரஹா ஹை கம்

ரஸ்தே மே ஹோ கயீ ஷாம்

கிஸீ பே ஹாயே தில் கோ லகாகே….

முஃப்த் ஹுவே பத்நாம்..

யாரோ நம் இன்பதுன்பத்தில் நம்முடன் இருப்பார்கள் என்று நினைத்தேன்

கண்ணைத் திறந்து பார்த்தால்தனியாக நிற்கிறேன் என்று விளங்குகிறது!

தனியாகிவிட்டேன்நாளும் கழிந்துவிட்டது

போகும் வழியிலேயே இருட்டிவிட்டது

யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது.

Song: Muft huve badnaam film: Baraat 1960 Lyrics: Majrooh Sultnpuri

Music: Chitragupta  Singer: Mukesh

Youtube link:  https://www.youtube.com/watch?v=JtYiroPAOSg

[I am including the audio track because often the original audio tracks have better recording]

இது படம் தொடர்பான பாடல்தான், ஆனாலும் மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை சிறப்பானது. இசையும் அருமை. முகேஷின் குரலில் இயல்பாக இருக்கும் உருக்கம் இத்தகைய பாடல்களை உணர்ச்சிக் காவியமாகச் செய்கிறது!

இத்தகைய பல ‘B Grade’ படங்கள் வெற்றிபெறவில்லை, பலருக்கும் தெரிவதில்லை ஆனால் பலவற்றில் அரிய இசை பொதிந்திருக்கிறது. சித்ரகுப்தா இசையமைத்த பல பாடல்கள் இத்தகைய படங்களிலேயே புதைந்து கிடக்கின்றன!

60 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாட்டுகள்!

Attachments area

Preview YouTube video Lyrics Video of Song Chal Ud Jaa Re Panchhi Ki Ab Ye Desh Huaa Begaanaa

Lyrics Video of Song Chal Ud Jaa Re Panchhi Ki Ab Ye Desh Huaa Begaanaa

Preview YouTube video Muft Huye Badnaam Kisi Se Haye

Muft Huye Badnaam Kisi Se Haye

அற்புத சித்தர் பூமி தமிழகம்! (Post No.8120)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8120

Date uploaded in London – – – 7 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாலைமலர் 30-5-2020 தேதியிட்ட இதழில் வெளி வந்துள்ள கட்டுரை!

அற்புத சித்தர் பூமி தமிழகம்!

ச.நாகராஜன்

வடலூர் வள்ளலார் பெருமான்

அற்புத சித்தர்கள் தோன்றி அருள் தரும் அற்புத பூமியாகத் தமிழகம் தொன்று தொட்டு விளங்கி வருவதை நமது அறநூல்களும் இலக்கியங்களும் தெளிவாக விளக்குகின்றன.

தன் நலம் கருதாமல் உலக நலம் ஒன்றையே கருதி வாழும் இவர்கள் பஞ்ச பூதங்களையும் மனித குல மேம்பாட்டிற்காக எப்படியெல்லாம் இயங்க வைக்க முடியுமோ அப்படியெல்லாம் இயங்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.

சமீப காலத்தில் வாழ்ந்து வரலாற்றுக் குறிப்புகள் மூலமாகவும் உரிய ஆவணங்கள் மூலமாகவும் நாம் பல சித்தர்களைக் காண முடிகிறது.

உலகையே வியக்க வைத்து இறைவனுடன் வெளியில் கலந்த பெருமையைக் கொண்டவர் வடலூர் வள்ளலார் பெருமான் அவர்கள்.

சாகாப் பெருநிலையை மனித குலத்திற்கு கற்பிக்க வந்த பெருமானின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பல.

அற்புதங்களை நடத்துவது என்பது அப்படி அற்புதங்களைக் காண்பிக்க வேண்டும் என்பது எந்தக் காலத்திலும் எந்த ஒரு சித்தரும் மனதால் நினைத்துச் செய்வதில்லை.

ஆனால் இயல்பாகவே இறையருளால் அவை நிகழும் போது மனித குலம் வியக்கிறது; பிரமிக்கிறது; குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, வரும் சந்ததியினருக்குத் தருகிறது.

சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றி வந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர்.

அவர் வள்ளலார் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை உள்ளது உள்ளவாறே எழுதி வைத்துள்ளார்.

Seshadri Swamikal of Tiruvannamalai

அங்கங்கள் தனித்தனியே இருந்த காட்சி!

வள்ளலாரின் தொண்டர்களுள் ஒருவர் வேலூரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவர். ஒரு நாள் வெளியே சென்ற ஐயா அவர்கள் வரவில்லையே என்று எண்ணிய அவர் வள்ளலாரை வெளியே போய்த் தேட ஆரம்பித்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்க வைத்தது. வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம்  தனித்தனியாகக் கிடந்தன. அதைக் கண்ட அவர் நடுநடுங்கி, “ஐயோ! இவர் இப்படி ஆகி விட்டாரே” என்று அலறி ஓவென அழலானார்.

ஆனால் திடீரென்று அவர் முன் முழு உருவமாகத் தோன்றிய வள்ளலார் பெருமான், ”நீர், இனிமேல் இது போல வந்து பார்க்காதீர்” என்று அருளுரை புகன்று அகன்றார். வள்ளலார் முன்னே நடக்க அவர் பின்னே தொடர இருவரும் சத்திய தருமச் சாலையை அடைந்தனர்.

இப்படி உடலைப் பிரிப்பது, பின்னர் பூட்டுவது என்பது சித்தர்கள் பலரின் வாழ்விலும் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாக அமைந்திருக்கிறது.

பல இடங்களில் காட்சி தரல்

திருவதிகைக்கு வருகை புரிந்த வள்ளலார் பகலில் இறை வழிபாட்டிற்காகச் சென்றார். அவரைக் காணக் கூட்டமோ கூட்டம். ஏராளமான பக்தர்கள் தம்மைக் காண விரும்புவதை உணர்ந்த அவரது அருளுள்ளம் உடனே தனது உருவை ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் தோன்ற வைக்க அன்பர்கள் அந்தக் காட்சியைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தனர்.

சித்தர் கொடுத்த லட்டு!

ஒரு சமயம் வள்ளலார் கூடலூர் சென்றிருந்தார். அங்கு தமது சீடரான அப்பாசாமி செட்டியார் இல்லத்தில் ஒரு அறையில் தனித்திருந்தார். அபோது அங்கு ஒரு பெரியவர் வேகமாக வந்தார். யாருடைய அனுமதியும் பெறாமல் அவர் வள்ளலார் இருந்த அறையினுள் சென்றார். உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. பக்தர்கள் திகைத்தனர். ஒருவாறாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவர்கள் வள்ளலார் இருந்த அறையின் கதவைத் தட்டி உள்ளே சென்று நடந்ததைக் கூறினர். வள்ளலார் சிரித்தார். நம்மைக் காண வந்த சித்தர் அவர் என்று கூறிய அவர், ‘இந்நேரம் அவர் காசியில் இருப்பார்’ என்று கூறினார். அவர் தனக்குக் கொடுத்த லட்டையும் காண்பித்தார்.

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்கு நினைத்த சமயத்தில் காலமும் இடமும் கடந்து வருவர் என்பதை பக்தர்கள் உணர்ந்து வியந்தனர்.

இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வள்ளலார் பெருமானின் வாழ்க்கையில் உள்ளன. இவை இறையருளால் ஏற்பட்டனவே தவிர விளம்பரத்திற்காகவோ அல்லது தன் பெருமையை உலகிற்குக் காட்டவோ அவர் செய்ததில்லை. அனைவருக்கும் இறையருளைத் தன் மூலம் வாரி வழங்கிய வள்ளலார் தமிழகம் கண்ட அற்புதமான மகான்;

பிராட்லி கட்டளை

மதுரையை அடுத்த சமயநல்லூரில் நாயக்க மன்னர்களின் ஆரம்ப காலத்தில் அவதரித்து சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து மதுரையில் சமாதி எய்தியவர் குழந்தையானந்த சுவாமிகள். இவரது சமாதி அரசரடியில் உள்ளது. பக்தர்கள் வழிபாட்டுக்கென இங்கு தினமும் குழுமுவது இன்றும் நடைபெறுகிறது. சமாதியில் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை பிரபல தேசபக்தர் சுப்ரமணியம் சிவா அவர்களின் நெருங்கிய உறவினரும் காசியில் வாழ்ந்து வந்தவருமான கேதாரநாத் சிவம் அவர்கள் கூறிய சம்பவம் இது.

குழந்தையானந்தர் வடநாட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் அவர் காசி சென்றார். அப்போது காசியில் சப்-கலெக்டராக இருந்தவர் பிராம்லி துரை என்பவர். ஒரு நாள் அவர் ஓரிடத்தில் தன் மனைவியுடன் உல்லாசமாக வீற்றிருந்தார். அப்போது சுவாமிகள் அவதூத கோலத்தில் ஆடையின்றி  அவ்வழியே சென்றார்.  இதைக் கண்ட அவருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே தன் கையிலிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். அது சுவாமிகள் மீது விழாமல் அவர் மனைவி மீது விழுந்தது. மனைவி ஓவென்று அலறினாள். துரைக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.எதிரில் இருப்பவர் ஒரு மாயாஜால மந்திரவாதி என அவர் நினைத்தார். சேவகர்களை அழைத்து அவரை தன் வீட்டிற்கு இழுத்து வர உத்தரவிட்டார்.

வீட்டிற்குச் சென்ற போது அவர் அடித்த அடி அங்கிருந்த அனைவர் மீதும் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் ஆத்திரம் இன்னும் அதிகமானது.

“இந்த ஆள் ஒரு மாயாவி. இவனை இருட்டறையில் அடையுங்கள்” என உத்தரவிட்டார்.

அதன்படியே உடனடியாக குழந்தையானந்தர் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டார். அறையின் கதவைத் தானே மூடிய துரை அதை நன்கு பூட்டி விட்டுச் சாவியைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பிறகு தனது கோச்சில் ஏறிச் சென்றார்.

என்ன ஆச்சரியம். அவர் வண்டி செல்ல, அதன் முன்னே குழந்தையானந்தர் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த துரை பிரமித்தார். அவருக்குக் கோபம் போய், இப்போது பயம் வந்து விட்டது. அங்குள்ளவர்களிடம், ‘இவர் யார்’ என விசாரித்தார்.

அனைவரும் அவரது மகிமை பற்றி எடுத்துரைத்தனர். அத்தோடு அவர்கள், “நீங்கள் செய்தது பெரும் குற்றம்; அவரிடமே போய் மன்னிப்புக் கேளுங்கள். இது தவிர இந்தக் குற்றத்திற்குப் பிராயசித்தம் கிடையாது’ என்று கூறினர்.

பிராம்லி துரை நேரடியாக குழந்தையானந்தரிடம் சென்று சுவாமிகளைப் பணிந்து தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார்.

சுவாமிகளின் அருள் உள்ளம் இரங்கியது; அவரை ஆசீர்வதித்தார்.

அன்று முதல் சுவாமிகளின் அணுக்க பக்தனாகி விட்ட பிராம்லி துரை தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த நாளையே தனது வாழ்வின் புனித நாளாகக் கருதினார். அந்த தினத்தில் ஆராதனை நடத்தக் கட்டளையிட்டார். வருடந்தோறும் அந்த ஆராதனை நடக்க ஆரம்பித்தது. இன்றளவும் காசியில்  நடந்து வரும் அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

நகராத ரயில்!

குழந்தையானந்தர் மதுரை ரயில் நிலையத்திற்கு ஒரு முறை சென்றார்.  சென்னைக்குச் செல்லவிருந்த மெயிலில் ஏறிய குழந்தையானந்தர் ஆங்கிலேய துரை ஒருவருக்கு ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்தார்.

தனது இருக்கைக்கு வந்த துரை அதிர்ந்து போனார். சுவாமிகளை உடனடியாகக் கீழே இறங்கச் சொன்னார். ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர் கல்யாணராமையர் என்பவர். சுவாமிகளிடம் டிக்கட் இல்லை என்பதால் அவரை இறங்குமாறு அவரும் வேண்டினார். பின்னர் பெரும் கூட்டம் கூடவே, வலுக்கட்டாயமாக சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார்.

சுவாமிகள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அமர்ந்த வண்ணம் இருக்க கார்டு விசிலை ஊதினார்; டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் ரயில் நகராததால் அனைவரும் அயர்ந்தனர். பின்னர் அனைவரும் ஸ்டேஷன்மாஸ்டரிடம் சுவாமிகளிடம் சென்று வேண்டுமாறு வற்புறுத்தினர். ஸ்டேஷன்மாஸ்டரும் அவரிடம் சென்று அவர் முதலில் அமர்ந்த சீட்டையே அவருக்குத் தருவதாகக் கூறி துரைக்கு வேறு ஒரு சீட் ஏற்பாடு செய்தார். சுவாமிகள் இருக்கையில் ஏறி அமர்ந்தார். சந்தோஷத்துடன், ‘இனி ரயில் போகும்டா’ என்றார். ரயில் நகர்ந்தது. அன்றிலிருந்து ஸ்டேஷன்மாஸ்டர் அவரது அணுக்க பக்தராக ஆனார்; அவர் பணி ஓய்வு பெற்ற பின்  அடுத்தபடி ஸ்டேஷன்மாஸ்டராக வந்த மெரிட் துரையும் சுவாமிகளின் பரமபக்தரானார். சுவாமிகள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் ஓடிச் சென்று அவரைத் தூக்கி வந்து தனது ஆசனத்தில் அமர்த்தி விடுவார் அவர்.

சுவாமிகள் மெரிட் துரையிடம் அலாதி அன்பு செலுத்தி அவரை விசேஷமாக ஆசீர்வதிப்பது வழக்கம். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளால் பலரையும் தனது அன்பு வட்டத்தில் இழுத்து ஆசீர்வதித்து அனுக்ரஹிப்பது குழந்தையானந்தரின் இயல்பு.

சுவாமிகள் 1932ஆம் ஆண்டு சமாதி எய்தினார்.

கிரிவலப் பாதையில் புலி உருவில் வந்த சித்தர்கள்!

பகவான் ரமணர் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து வந்த காலத்தில் அவரை தரிசிக்க ஏராளமான சித்தர்கள் வருகை புரிவதுண்டு.

இப்படி சித்தர்கள் வருவதை பகிரங்கமாக அவர் ஒரு போதும் சொல்வதில்லை. ஆனால் ஒரு சமயம் சாம வேதத்தை ஓதிக் கொண்டே திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சிலர் ஓடோடி வந்து ரமண மஹரிஷியிடம் தாங்கள் சென்ற வழியில் ஐந்து பெரிய புலிகள் சாலையின் நடுவில் அமர்ந்திருந்ததாகவும் 15 நிமிடங்கள் அவை நகராமல் அங்கேயே இருக்கவே அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவதாகவும் பயத்துடன் தெரிவித்தனர்.

ரமணரோ மெதுவாக, “எதற்காக சாம வேதத்தை நிறுத்தினீர்கள்? அவர்கள் சித்த புருஷர்கள். உங்கள் வேத கானத்தைக் கேட்பதற்காக அல்லவா அவர்கள் அங்கு வந்துள்ளனர்,  ஓடி வந்து விட்டீர்களே” என்று கூறினார்.

பக்தர்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர்.

நினைத்த இடத்தில் நினைத்த உரு எடுத்து வருவது சித்தர்கள் இயல்பு என்பதையும் பகவான் ரமணர் இருக்கும் இடத்தில் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பும அருளும் உண்டு என்பதையும் அறிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரமணரின் வாழ்வில் நூற்றுக் கணக்கில் அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது போல அவை அமையவே எல்லையற்ற இறையருள் ரமணரின் அருளாசி மூலமாகத் தம்மைக் காக்கிறது என்பதை ரமண பக்தர்கள் உணர்ந்து அந்த அனுபவங்களை மற்ற அனைவருடனும் பங்கிட்டு ஆனந்தித்தனர். அவர்களது பொக்கிஷமான குறிப்புகளை  பல்வேறு நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது

பொதுவாக தமிழகம் சித்தர் பூமி என்பதை சங்க காலம் முதற் கொண்டு நவீன மயமான இந்த அறிவியல் யுகம் வரை நடக்கும் பல சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.

வித்தக சித்தர் கணம் போற்றுவோம்; அருளாசியை அனைவரும் அடைவோம்!

tags- அற்புத , சித்தர் பூமி , தமிழகம்,

***