கல்லிவரின் யாத்திரை (Post No.7562)

WRITTEN BY London Swaminathan

Post No.7562

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய  கல்லிவரின் பயணங்கள் சிறுவர்களையும் முதியோரையும் மகிழ்விக்கும்.. நான் அந்த நூல் பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்னர் எழுகிய சிறு குறிப்பு தினமணி கதிரில் வெளியானது. படித்து  மகிழுங்கள்

பெண்கள் மனிதப் பிறவிகளா? கிறிஸ்தவர் காரசார விவாதம் (Post No.7561)

WRITTEN BY London Swaminathan

Post No.7561

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகப் புகழ் பெற்ற தத்துவ வித்தகரும் இந்தியாவின் ராஷ்டபதியுமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

‘இந்தியாவின் புகழ் பெற்ற பெண்மணிகள்’ (GREAT WOMEN OF INDIA) என்ற 1953-ம் ஆண்டுப் புஸ்தத்துக்கு றிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.சி . மஜூம்தார் (RAMESH CHANDRA MAJUMDHAR, VICE CHANCELLOR OF DACCA UNIVERSITY)  ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் . கட்டுரையில் பல அரிய சுவையான விஷயங்களைக் காணலாம். இதோ சில சுவையான செய்திகள் —

டாக்டர் ராதா கிருஷ்ணன் அப்போது உபராஷ்டிரபதி . அவர் எழுதியதாவது-

இந்தியப் பண்பாட்டில் பொதுவாக பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதை இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் எடுத்துரைக்கின்றன. ஆனால் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான குறிப்புகளையும் காணமுடிகிறது  கடவுளையே நாம் அரை ஆண்மகனாகவும் , அரை பெண்மணியாகவும் பார்க்கிறோம் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில். மநு சொல்கிறார் (3-56)- “எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே கடவுள் மகிழ்சசி அடைகிறான் ; எங்கே அவர்களை மதிக்கவில்லையோ அவ்விடத்தில் நடைபெறும் அத்தனையும் பயனற்றுப் போகும்” .

ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்கள் , செய்ய இயலாது. ஏனெனில் அவர்களின் உடல்வாகு அதற்கு இடம் தராது . இதன் காரணமாக அவர்களை மட்டம் தட்ட முடியாது . அவரவர்களுக்கு உரிய செயல்களைச் செவ்வனே செய்வதே சிறப்பாகும்.

பழங்காலத்தில் பெண்களும் கல்வி கற்றனர்; பூணுல் அணிந்து கிரியைகளைச் செய்தனர். பிரம்ம வித்யைக்கு அவர்க்களும் உரிமை கொண்டாடினர். ‘மஹாநிர்வாண தந்திரம்’ கூறுகிறது – “பெண்களையும் வளர்த்து ஆளாக்கி கவனத்துடனும் பெரு முயற்சியுடனும் கல்விப் பயிற்சி தர வேண்டும்”- 8-47

தேவி மஹாத்ம்யம் என்னும் நூல் இயம்புகிறது – “அறிவின் எல்லா துறைகளும் நீயே! உலகம் முழுதுமுள்ள பெண்கள் யாவரும், தேவி! உன் வடிவங்களே” – 11-6.

கல்விக்கான கடவுளே ஸரஸ்வதி ஆவார் .

நாமும் மைத்ரேயி, கார்கி , அருந்ததி, லீலாவதி  முதலிய புகழ் பெற்ற பெண்மணிகளின் பெயர்களைக் கேள்விப்பட்டுள்ளோம்.

வேத காலத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிட்டின. இதற்குப்பின்னர் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அறியாமையிலும் மூட  நம்பிக்கைகளிலும் உழன்றனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட பைரவி பிராஹ்மணி என்ற பெண்மணியைத் தன் குருவாக ஏற்றார் . அவருடைய மனைவியான சாரதாதேவிக்கு அவர் கொடுத்த மரியாதையும் குறிப்பிடற்பாலது .

வேத காலத்தில் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்ததை அறிகிறோம். இதற்காக ‘சமான’ என்ற விழாக்கள் நடந்தன. கல்யாணம் என்பது மதிப்பிற்குரிய ஒரு விஷயமாக போற்றப்பட்டது .

துர்கா சப்த சதியில் ஒரு சுவையா விஷயத்தைக் காண்கிறோம். அங்கே துர்க்கை கல்யாணம் ஆகாத குமாரி. அவளைத் திருமணம் செய்துகொள்ள அசுரர்கள் ஆசைப்படுகின்றனர். அப்போது துர்கா தேவி சொல்கிறாள் —

“போரில் என்னை எவர் ஒருவர் வெல்கிறாரோ, எவர் ஒருவர் என்னையும் விஞ்சும்  கர்வத்தைக் காட்டுகிறாரோ, எவர் ஒருவர் எனக்குச் சமமானவரோ அவரை நான் மணந்து கொள்வேன்” .

இதிலிருந்து பெண்கள் வெறும் இன்பத்தைத் தரும் அடிமைகள் அல்ல என்பது விளங்கும்.

மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் ஒரு ஸ்லோகம் உரைக்கிறது -1-3-9

“உன்னுடைய இருதயம்/ உள்ளம் என்னுடையதாகட்டும் ;

என்னுடைய இருதயம்/ உள்ளம் உன்னுடையதாகட்டும்”;

ஆகையால் காம சுக போகத்தை அவர்கள் வெறுக்கவில்லை

கல்வி கற்க வரும் சிறுவனுக்கு ‘தாயைச் சிறந்ததொரு கோயில் இல்லை’ என்பது தொனிக்கும் வகையில் முதலிலேயே மாத்ரு தேவோ பவ’  (தாயே கடவுள் என்று கருது) – என்று கற்றும் தருகிறோம். மனு இதை மிகவும் வலியுறுத்தி மொழிகிறார் –

“பத்து உபாத்யாயர்களை விட   ஒரு ஆச்சார்யர் பெரியவர் ;

ஒரு தந்தையானவர் 100 ஆச்சார்யர்களை  விடச் சிறந்தவர் ஆவார்;

ஒரு தாய் என்பவளோ 1000 தந்தையரையும் விடச்  சிறந்தவர் ஆவார்” – 2-145

xxx

இவ்வாறு டாக்டர் ராதா கிருஷ்ணன் எழுதியத்தைத் தொடர்ந்து டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் எழுதுகிறார் –

“நம்முடைய அதிர்ஷ்டம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டல 85 ஆவது துதி (Rik Veda 10-85) கல்யாண மந்திரத்தை அப்படியே இன்று வரை காப்பாற்றி வந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த ஒப்பற்ற கவிதை, இந்துக்கள் திருமணத்துக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர் என்பதைக் காட்டுகிறது ; ஒரு நாகரிகம் வாய்ந்த சமுதாயத்தில் நடக்கும் திருமணத்தின் மிகப்பழைய (oldest document on marriage) குறிப்பு இதுதான்”.

“இதற்குப்பின்னர் அவர் பெண்களுக்கு எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களை இந்து மத நூல்களில் இருந்த எழுதிவிட்டு நாம் பெரும்பாலும் கேள்விப்படாத முக்கிய விஷயத்தை எழுதுகிறார்).

“பெண்கள் இயல்பாகவே தீய குணங்களுடன் படைக்கப்பட்டவர்கள் என்று குறை கூறுகிறீர்களே. ஆண்களிடம் அத்தகைய தீய குணங்கள் இல்லையா? என்று வராஹ மிஹிரர் கேட்கிறார்.

உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான போக்கு காணப்பட்டது . கி.பி. 585ல் பிரான்சில் மேசன் நகரில் நடந்த கிறிஸ்தவ குருமார்கள் மகாநாட்டில்(Synod of Macon) பெண்கள் மனிதப் பிறவிகளா என்று காரசாரமாக விவாதித்தனர்.

கௌதம புத்தர் 2600 ஆண்டுகளுக்கு  முன்னரே பெண்களை கடுமையாக நடத்தினார் . பவுத்த சங்கத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என்று அடம்பிடித்தார்.

சிஷ்யர்கள் மிகவும் வற்புறுத்தவே பெண்களை புத்த சங்கத்தில் அனுமதித்துவிட்டு , நான் எவ்வளவு காலம் என் கொள்கைகள் இந்த பூமியில் நிலவும் என்று நினைத்தேனோ அதில் பாதிக் காலம்தான் என் மதம் இந்தப் பூமியில் நிலவும் என்று ஆருடம் கூறினார். நூறு வயது பிக்குணி கூட நேற்று வந்த 16 வயது பிட் சுவுக்கு  மரியாதை செய்ய வேண்டும். என்றார். மேற்கு நாடுகளில் இதையும் விட நிலைமை  மோசம். கிரேக்க, ஸீ ன தத்துவ  ஞானிகளான கன்பூசியஸ், அரிஸ்டாட்டில், பிரெஞ்சு அறிஞர் ரூஸோ ,  ஆங்கிலக் கவிஞன் மில்டன் ஆகியோரும் பெண்களுக்கு எதிராகப் பொழி ந்து தள்ளினர் ஆண்களை விட பெண்கள் மட்டம் என்றும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் எழுதினார்கள்.”

xxx

என் கருத்து

பாரதி போன்று பழங்கால உலகில் பெண்களுக்கு ஆதரவு கொடுத்த அறிஞர் வராஹமிஹிரர் ஒருவரே. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று வாதாடினார். இந்தியர்களைவிட மிகவும் மோசமானவர்கள் மேலை நாட் டார்தான். இந்திய பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னரே பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடைத்தது.

சங்கத் தமிழிலக்கியம் , திருக்குறளில் கூட ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று படிக்கிறோம். கம்பனும், பட்டினத்தாரும் பிறரும் பெண்களை  சாடுகின்றனர் . ஆனால் இதை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். இந்துக்கள் பெண்களை மூன்று கோணங்களில் அணுகினர்.

1.தாய் என்ற பார்வையில், அவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர் . எல்லா பெண்களும் யாரோ ஒருவருக்குத் தாய் என்பதும் அவர்களுக்குத் தெரியும் .

2. இரண்டாவது கோணம்- அவர்கள் யாரோ ஒருவருக்கு மனைவி. அப்போது அவர்கள் ‘சுகம் தரும், வீட்டு வேலை செய்யும் ஒரு ‘கருவி’, ‘வஸ்து’ என்று கருதப்பட்டனர்.

3. மூன்றாவது கோணம் – விலைமகளிர் போல குணம் உடைய பெண்கள். அவர்களை பற்றி எச்சரிக்கவே பக்தி இலக்கிய பாடகர்கள் அவர்களை சாடினர் .

ஆக நிஜ வாழ்வைப் பார்க்கையில் பெண்களைப் போற்றியதையும் தூற்றியதையும் காண முடிகிறது .விக்டோரியன் கால (Victorian period Novels)  ஆங்கில நாவல்களில் ,பெண்களை புத்தியில்லாத , பொறாமை கொண்ட, அலர் தூற்றும் வம்புக்காரிகளாக (Dumb, Ignorant, Gossip mongers)  சித்தரிப்பதைக் காணலாம்.

வேத காலத்தில் இருந்த பெண்களின் உன்னத நிலை, காலப்போக்கில் சரி ந்து வந்ததை இந்து சமய நூற்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அக்காலத்தில் பாரதி போன்றோர் வராஹமிஹிரர் போன்றோர் மிகவும் குறைவு. அது மட்டுமல்லாது வெளிநாட்டோர் படை எடுப்புகளும் பெண்களின் நிலையைப் படு குழியில் தள்ளி ன பாரசீகர், கிரேக்கர், சகரர் , ஹுணர் , முஸ்லீம்கள் , கிறிஸ்தவர்கள் படை எடுப்பு காரணாமாக  பெண்கள் நிலைமை படிப்படியாக மோசமாகி வந்ததை வரலாறு காட்டுகிறது.

உலகிலுள்ள பழங்கால பெண் கவிஞர்கள் , அறிஞர்களைப்  பட்டியலிட்டால்  நாம் மிக உன்னத நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும்.

வாழ்க பாரதி, வாழ்க பெண்ணினம்

–subham—

விபூதியின் மஹிமை! – 3 (Post No.7560)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7560

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதி மஹிமை பற்றிய குறுந்தொடரில் கடைசிக் கட்டுரை இது

விபூதியின் மஹிமை! – 3

ச.நாகராஜன்

 மதுரையில் உள்ள திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 291-வது குருமகா சந்நிதானமாகப் புகழுடன் திகழ்ந்தவர் திருவருள் தவயோக               ஸ்ரீஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும் என்ற சிறிய நூலை எழுதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் 20 காசு விலையில் வெளியிட்டார். (இரண்டாம் பதிப்பு 1973 ஜூலையில் வெளி வந்தது – 28 பக்கங்கள்)

(இவருடனான நேரடி பரிசயம் எனக்கு மிகவும் உண்டு. என்னை ‘நாடி ஜோதிடம் பார்க்குமாறு பணித்து அதற்கு ஏற்பாடு செய்தவர் இவரே. இவரை அடிக்கடி சந்தித்து 1968ஆம் ஆண்டு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி சம்பந்தமாக பல அறிவுரைகளைப் பெறுவதுண்டு. சேலத்தில் நடந்த அந்த பெரிய மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கியவர்களுள் ஒருவர் இவர். இப்போதுள்ள ஆதீனகர்த்தர் இல்லை இவர். அதற்கு முந்தியவர்.)

அதில் அவர் கூறுவதன் சுருக்கம் இது:

‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்

  1. உடல் நாற்றத்தைப் போக்கும்
  2. தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்
  3. தீட்டுக் கழிக்கும்
  4. உடலைச் சுத்தம் செய்யும்
  5. வியாதிகளைப் போக்கும்
  6. பில்லி, சூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்
  7. முகத்திற்கு அழகைத் தரும்
  8. ஞாபகசக்தியை உண்டாக்கும்
  9. புத்திகூர்மையைத் தரும்
  10. ஞானத்தை உண்டாக்கும்
  11. பாவத்தைப் போக்கும்
  12. பரகதியைத் தரும்

மிகச் சுருக்கமாக வேதங்கள், புராண இதிஹாஸங்கள் தரும் நன்மைகளை இப்படிப் பட்டியலிட்டதோடு அவற்றின் விளக்கத்தையும் இந்த நூலில் ஆதீனகர்த்தர் தந்துள்ளார்.

திருநீறு தயாரிக்க மூலப்பொருளாக அமைவது பசுஞ்சாணம். சாணத்திற்குப் பிற நாற்றங்களைப் போக்க வல்ல சக்தி உள்ளதால் விபூதி உடல் நாற்றத்தைப் போக்கும்.

சாணியும் சாணியை பஸ்மம் செய்த சாம்பலும் சிறந்த கிருமி நாசினிகள். ஆகவே விபூதி தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்.

தீட்டு என்பது தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களிடமும் அல்லது தொற்று நோய் உண்டாகக் கூடிய இடங்களிலும் உள்ள அசுத்தமாகும். ஆக, விபூதி தொற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதால் தீட்டைப் போக்கும்.

 மேலே கண்ட மூன்று வழிகளில் திருநீறு நாற்றத்தைப் போக்கி தொற்றுநோயைப் போக்குவதால் விபூதி சுத்தம் செய்யும். ஆகவே தான் தேவாரத்தில், ‘துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு என்று சம்பந்தப் பெருமான் பாடியருளியிருக்கிறார்.

திருநீற்றைப் பூசி கூன்பாண்டியனின் கடும் சுரத்தைப் போக்கினார் ஞானசம்பந்தர். பல இடங்களிலும் பெரியோர் அளித்த விபூதி பல வியாதிகளைக் குணமாக்குவது கண்கூடு. ஆகவே விபூதி வியாதிகளைப் போக்கும்.

சிவபிரான் விபூதியைத் தரித்திருப்பதாலும் அது புருவ மத்தியை மூடிக் கொள்வதாலும் விபூதி பில்லி சூனியம் கண்ணேறு ஆகியவற்றிலிருந்து அணிபவரைப் பாதுகாக்கும்.

டால்கம் பவுடரை விட விபூதி உடல் நாற்றத்தைப் போக்கி அழகுக்கு மெருகூட்டுகிறது. நீறில்லா நெற்றி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று ஔவை பிராட்டியும் விபூதி அழகைத் தருவதைக் கூறி இருக்கிறார். சம்பந்தரோ, ‘காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார். (கவின் என்றால் அழகு)

நெற்றியில் ஞாபகசக்தி இருப்பதால் அங்கு விபூதி பூசுவது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

ஞாபகசக்தியோடு புத்திகூர்மையைத் தருவதும் விபூதியே. ஞானசம்பந்தர், ‘மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார்.

திருநீறைக் கையில் எடுக்கும் போதே ஆடி அடங்கிய  பின் பிடி சாம்பலாகப் போவோம் என்ற பேருண்மை புலப்பட்டுக் கொண்டே இருக்கும். ஞானசம்பந்தர், ‘பராவணம் ஆவது நீறு, பாவம் அறுப்பது நீறு என்று கூறியிருப்பதால் புண்ணியம் தந்து ஞானத்தையும் தருவது விபூதியாகும்.

திருமூலர்,

‘கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

என்று திருமந்திரத்தில் கூறி இருப்பதால் வினைகள் அனைத்தும் போய், சிவகதி வரை அனைத்துப் பேறும் தரவல்லது திருநீறே என்பது பெறப்படுகிறது.

கடைசியாக, திருநீற்றுப் பதிகத்தைத் திருநீறு பூசி தினமும் ஓதி அதன் நன்மைகளை மனதிலிருத்துவது பெரும் பேறாகும்.

திருநீற்றுப் பதிகம் கீழே தரப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்



மந்திர மாவது நீறு   வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு   துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு   சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்   திருஆல வாயான் திருநீறே.  1



வேதத்தி லுள்ளது நீறு   வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு   புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு   உண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  2



முத்தி தருவது நீறு   முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு   தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு   பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  3



காண இனியது நீறு   கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம்   பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு   மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  4



பூச இனியது நீறு   புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு   பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு   வந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு   திருஆல வாயான் திருநீறே.  5



அருத்தம தாவது நீறு   அவலம் அறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு   வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு   புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  6



எயிலது வட்டது நீறு   விருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு   பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு   சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்   தாலவா யான் திருநீறே.  7



இராவணன் மேலது நீறு   எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு   பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு   தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி   ஆலவா யான்திரு நீறே.  8



மாலொ டயனறி யாத   வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள்    மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும்   இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம்   மாலவா யான்திரு நீறே.  9



குண்டிகைக் கையர்க ளோடு   சாக்கியர் கூட்டமுங்கூட

கண்டிகைப் பிப்பது நீறு   கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார்   ஏத்துந் தகையது நீறு

அண்டத்த வர்பணிந் தேத்தும்   ஆலவா யான்திரு நீறே.  10



ஆற்றல் அடல்விடை யேறும்   ஆலவா யான்திரு

நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும்   பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னனுடலுற்ற   தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும்   வல்லவர் நல்லவர் தாமே.  11

  
திருநீறு பூசுவோம்; வல்லவர் ஆவோம்; நல்லவர் ஆவோம். வினைகள் ஒழிந்து, சிவகதி பேறைப் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

***

இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறுகிறது

நன்றி : திருஞானசம்பந்தர் மடம், மதுரை

tags- விபூதி, மஹிமை

Vedic Hindu women, Greek women and Parsi women (Post No.7559)

Compiled by London Swaminathan

Post No.7559

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Ramesh Chandra Majumdhar, Former Vice Chancellor of Dacca University compares the status of women in different countries in his article in the ‘Great Women of India’ volume , published in 1953 by the Advaita Ashrama . It is very interesting that Vedic Hindu women enjoyed more freedom whereas other women were under strict control. But we must remember Rig Vedic society existed before 1500 BCE, where as  Homer’s Greek , Avesta of Parsis belong to 8th century  BCE. But he shows how the status of women in Vedic society also deteriorated after the Upanishadic age.

Here is what he says,

“The high ideal of a married life— involving life long faith, devotion and love between the husband and wife — is nobly expressed in the marriage hymn 10-85 of the Rig Veda.  Casual references thorough out the Samhita, indicate that the society was really inspired by such an ideal, and we already see before us a picture of insoluble partnership, in life and death, which has ever characterised the relation between husband and wife in Hindu society, and has almost become proverbial.

Nevertheless, without distracting from this high ideal in the least, it must be confessed that, the weakness of human nature must have occasionally led to moral lapses even in those days, as also in later days. Indeed, there are ample references to such a state of things not only in the Rig Veda Samhita but also in later Vedic literature. It would be a miracle if it were not so. There are certain hymns which seem to look upon the existence of a paramour as nothing abnormal than a common occurrence or an ordinary event. But the hymns of the Rig Veda make it clear that moral lapses on the part of women were not treated so severely as in later days and more or less the same standard was applied in this respect to both men and women.

As all this might be quite shocking to our moral sensibilities and ideas of female virtues, it is necessary to point out the prevalence of a similar state of things in the Hellenistic world of Homeric days. The compulsory infidelity of a wife as a prisoner of war was openly recognised, and in no way reprehended. The noblest and fairest women, whether married or not, of a captured town normally became the concubines of the victors, but such a fate was in no sense a dishonour to the Greek lady of which she need afterwards be ashamed. This callous attitude might have been reflected its influence upon cases of voluntary sin, and so they came to be regarded with much indulgence. So also the open concubines allowed to married men often allowed a plea for retaliation and a justification in the case of crime.

The same reasons might also have operated in ancient India. In any case, ideas in ancient India, as in ancient Greece, were very different from those of modern times, when we rate personal purity of a woman so highly that the loss of it by misfortune is hardly less excused by society than its abandonment through passion.

A widow marrying husband‘s brother is also in the Vedas. The remarriage of a widow to husband’s brother was a very common practice among the Jews and other ancient nations .

The Vedic word ‘Dampati’ used to denote jointly the husband and wife, etymologically means the joint owners of the house. The same idea is also contained in the Avesta (Of Parsis), but whereas the Avesta enjoins upon the wife strict obedience to her husband, the marriage ritual in the Rig Veda , and also in its fully developed form in the Grihya sutras, does not enjoin obedience upon the wife. This position of dignity was upheld by her participation in religious practices and sacrifices, which was regarded as the highest right and privilege in the society of those days.

The Samhita of the Rig Veda has fortunately preserved one particular hymn 10-85 which proves that not only the institution of  marriage but also the ideals which characterised it in India in later days were deeply rooted in the minds of men. Its interest, however, transcends the narrow bounds of India, as it is perhaps the oldest written document in the world which gives an ideal picture of the marriage system with all that it involves in a civilized society.

மேலும் ஒரு புதையல் செய்தி (Post No.7558)

Written by London Swaminathan

Post No.7558

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நான் 11-10-1992ல் எழுதிய மேலும் ஒரு புதையல் செய்தி. இது தினமணி கதிரில் வெளியானது.

தலைப்பு – ‘போலீஸ்காரர் கண்டுபிடித்த புதையல்’ இணைப்பில் காணுங்கள்.

xxx subham xxxx

தமிழா , சோதிடத்தை நம்படா! ப்ளிஸ் PLEASE வாகடத்தை நம்படா!! (Post No.7557)

Written by London Swaminathan

Post No.7557

Date uploaded in London – 10 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஜோதிடத்தை நம்பு. உனக்கு அது சரியா? தப்பா? என்று சந்தேகம் வருகிறதா? சந்தேகமே படாதே . அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதற்கு கிரகணங்களே (Eclipses) சான்று . அவர்கள் போடும் கணக்கு, சரியானதே என்பதை பஞ்சாங்கத்தில் மிகவும் முன்கூட்டி அறிவிக்கும் கிரகண விஷயங்களே காட்டிவிடுகின்றன என்கிறார் அம்பலவாண கவிராயர்.


சித்த மருத்துவர் (வாகடம்) கொடுக்கும் மருந்துகளுக்கு பலன் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வருகிறதா? வேண்டவே வேண்டாமப்பா! அவர்கள் கொடுக்கும் பேதி மருந்தைச் சாப்பிட்டு பார் ; உண்மை தெரிந்து விடும்.


ஒருவன் செய்த தவப்பயனுக்கு சாட்சி வேண்டுமா? உன் ஆபீஸ்ல ஏன் ஒருவன் முதலாளி, மற்றவன் ஒருவன் ஏன் பியூன் ஆக கைகட்டி சேவகம் செய்கிறான் என்று பார். ஒருவன் ஆள் கிறான், மற்றுமொருவன் அடிமை ஆக இருக்கிறான். (இதை குறள் 25, 28-லும் காணலாம்).


எந்தக் கடவுள் முதல்வன் என்று சந்தேகம் வருகிறதா? வேண்டாமப்பா ஐயப்பாடு!


எழுதும் எழுத்துக்கு அரிச் சுவடி (ஹரி- விஷ்ணு) என்றல்லவா பெயர் வைத்திருக்கிறோம். உடனே சிவ பெருமான் பற்றி சந்தேகப்பட்டு விடாதே. யஜுர் வே தத்தில் நமச் சிவாய (நம: + சிவாய) என்ற பஞ்சாட்சரம் – ஐந்தெழுத்து –மந்திரம் வரக்கூடிய ருத்ரம், சமகம் இரண்டையும் படி. அவனே தலைவன் என்பது விளங்கும்..


நாய் போன்ற நான் கூட எப்படி நன்றாக இருக்கிறேன் என்பதற்கு சாட்சி? இறைவனின் திருப்பாதங்களை நான் வணங்குவதே. யார் அந்த இறைவன்? அவன் சதுரகிரியில் உள்ள ஆதி நாயகன், வேத முதல்வன் என்னும் சிவபெருமான். அவன் யார்? விஷ்ணுவும் பிரம்மாவும் வந்து தினமும் வணங்கும் கொல்லி மலை சதுரகிரி அரசன்! அவன் என்னைக் காத்து ரட்சிப்பானாக !


Xxx

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com
அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு


Xxxx subham xxxx

திருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் பட்டியல்! (Post No.7556)

Yoga in Sarasvati- Indus Valley Civilization 

Written by S Nagarajan

Post No.7556

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

திருமூலர் தரும் ரகசியம் : ஆசனங்கள் 134 : அவை யாவை? இதோ பட்டியல்! (Post No.7556)

ச.நாகராஜன்

ஹிந்து தர்மம் உள்ளத்தையும் உடலையும் பண்படுத்தத் தரும் அருமையான ஒரு வழி ஆசனம்.

ஆசனம், தியானம் என்பதெல்லாம் உலகில் இன்று ஏராளமான நாடுகளில் சகஜமாகி விட்டன.

ஆசனம் என்றால் என்ன? (இதை ஆதனம் என்றும் சொல்வதுண்டு)

ஆசனேன ரஜோ ஹந்தி என்று யோக சூடாமணி  விளக்கம் தருகிறது. ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி,

யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு

அலட்சியம்

வைராக்கியம் இல்லாமை

திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல்

கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பாதஞ்சல யோக சூத்திரம் கூறுகிறது.

ஆசனங்கள் எண்ணற்றவை. அனைத்தும் பயன் தருபவை.

அவற்றில் தலையாய ஆசனங்கள் எட்டு. அதைத் தொடர்ந்து சிறப்பாகக் கூறப்படும் ஆசனங்கள் மொத்தம் 126.

A B C D ………………….. X Y Z IN YOGA ASANAS

ஆக மொத்தம் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 134.

இவற்றில் தலையாய ஆசனங்களாவன:

சுவத்திகம்

பத்திரம்

கோமுகம்

பங்கயம்

கேசரி

சொத்திரம் (சோத்திரம், சோத்திகம் என்றும் சொல்லப்படுவதுண்டு)

வீரம்

சுகாசனம் ஆக முக்கியமான ஆசனங்கள் மொத்தம் 8

திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் நான்காம் அத்தியாயமான ஆதனம் என்னும் அத்தியாயத்தில் ஆசனம் பற்றிய அற்புதமான ரகசிய விளக்கங்களைக் கூறி அருளுகிறார்.

3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரால் அருளப்பட்ட அதி ரகசிய நூல்.

இதில் பாடல் 563 இது:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம்.

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. மொத்த ஆசனங்கள் 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை? இதோ இருக்கிறது பட்டியல்:

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  11. சவாசனம்
  12. மச்சேந்திர சித்தாசனம்
  13. சித்தாசனம்
  14. வச்சிராசனம்
  15. பதுமாசனம்
  16. மச்சேந்திர பதுமாசனம்
  17. முக்த பதுமாசனம்
  18. சிம்மாசனம்
  19. பத்திராசனம்
  20. வல்லரியாசனம்
  21. விருச்சிகாசனம்
  22. குப்சிகாசனம்
  23. பாரிசுவோபாதாசனம்
  24. யோகாசனம்
  25. கபாலாசனம்
  26. டிட்டிபாசனம்
  27. பூர்வதானாசனம்
  28. அர்ப்பககாசனம்
  29. காமதகனாசனம்
  30. கேசரியாசனம்
  31. சோபகிரியாசனம்
  32. பரியங்காசனம்
  33. பத்தாசனம்
  34. லௌல்யாசனம்
  35. பத்தயோனியாசனம்
  36. பேகனாசனம்
  37. மகாபேகனாசனம்
  38. பிராணாசனம்
  39. அபானாசனம்
  40. சமானாசனம்
  41. பைரவாசனம்
  42. மண்டூகாசனம்
  43. மர்க்கடாசனம்
  44. ஏகபாதவாசனம்
  45. பணீ ந்திராசனம்
  46. யோகநித்திராசனம்
  47. சுகாசனம்
  48. தண்டாசனம்
  49. சக்கிராசனம்
  50. வர்த்துலாசனம்
  51. அர்த்தாசனம்
  52. பர்வதாசனம்
  53. யோனீமுத்திராசனம்
  54. திருடாசனம்
  55. பவனமுக்தாசனம்
  56. வாமபாத பவனமுக்தாசனம்
  57. தட்சிணபாத முக்தாசனம்
  58. தீராசனம்
  59. சுவாசகமனாசனம்
  60. வாதாயனாயனாசனம்
  61. அர்த்தபாதாசனம்
  62. ஊர்த்துவபத்மாசனம்
  63. பூர்ணாபாதாசனம்
  64. தட்சிணாசனம்
  65. அத்துவாசனம்
  66. வாமதட்சிண பாதாசனம்
  67. திவிபாதசிராசனம்
  68. விருட்சாசனம்
  69. வாமபாதசிரசாசனம்
  70. தட்சிணபாதசிரசாசனம்
  71. தாடாசனம்
  72. ஊர்த்துவதனுராசனம்
  73. வாமசித்தாசனம்
  74. விவேகாசனம்
  75. தர்க்காசனம்
  76. நிசுவாசாசனம்
  77. அர்த்தகூர்மாசனம்
  78. கருடாசனம்
  79. திரிகோணாசனம்
  80. பிரார்த்தனாசனம்
  81. பாதத்திரிகோணாசனம்
  82. புஜாசனம்
  83. அஸ்தபயங்கராசனம்
  84. அங்குஷ்டாசனம்
  85. உத்தகடாசனம்
  86. அர்த்தபாதாசனம்
  87. அஸ்தபுஜாசனம்
  88. வாமவக்கிராசனம்
  89. ஜாந்வாசனம்
  90. சாகாசனம்
  91. திரிஸ்தம்பாசனம்
  92. பாத அபான கமனாசனம்
  93. அசதசதுஷ்கோணாசனம்
  94. கூர்மாசனம்
  95. கர்ப்பாசனம்
  96. ஏகபாதவிருட்சாசனம்
  97. முத்த அஸ்த விருட்சாசனம்
  98. துவிபாதபாரிசுவாசனம்
  99. கந்தபீடாசனம்
  100. பிரௌடபாதாசனம்
  101. உபாதானாசனம்
  102. ஊர்த்துவ சம்யுக்த பாதாசனம்
  103. அர்த்தசவாசனம்
  104. வேறு அபானாசனம்
  105. யோனியாசனம்
  106. வேறு பர்வதாசனம்
  107. பர்வதாசனம்
  108. சலபாசனம்
  109. கோகிலாசனம்
  110. லோலாசனம்
  111. உத்தமாங்காசனம்
  112. உட்டிராசனம்
  113. அம்சாசனம்
  114. வேறு பிராணாசனம்
  115. கார்முகாசனம்
  116. ஆனந்தமந்திராசனம்
  117. கம்புநாசனம்
  118. கிரந்திபேதனாசனம்
  119. சமாசனம்
  120. புஜங்காசனம்
  121. பவனாசனம்
  122. மச்சாசனம்
  123. மகராசனம்
  124. விருஷாசனம்
  125. சங்கடாசனம்
  126. சர்வாங்காசனம்  

ஆசனங்களின் பெயர்களை மட்டும் இங்கு பார்த்தோம். இவை பற்றிய விளக்கங்களை யோக நூலில் காணலாம்.

ஒவ்வொரு ஆசனமும் உள்ளத்தையும் உடலையும் பல்வேறு விதத்தில் பண்படுத்துபவை.

அனைத்து வியாதிகளையும் இந்த ஆசனங்களின் மூலமாகத் தீர்க்க முடியும்.

பண்டைய காலத்தில் இந்த ஆசனங்களைக் கற்றுத் தரும் குருமார்கள் ஆங்காங்கே இருந்தனர்.

அவர்கள் சிஷ்யர்களை வழி நடத்தி ஆசனங்களை உரிய முறையில் செய்கிறார்களா என்று சோதனை செய்து உயர்த்துவர்.

இன்றோ இப்படி ஆசனங்கள் பல உள்ளன என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டதோடு அவரவர் புதுப்புது யோகாவை ‘சிருஷ்டித்து பணம் சம்பாதிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுவிட்டது.

யோக சாஸ்திரத்தில் வல்லார் இந்த நிலையை மாற்றி பாரதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்!

நன்றி : திருமந்திரம் புகழ் பரப்பும் திருவாவடுதுறை ஆதீனத்தைப் பாராட்டி நன்றி கூறாமல் இருக்க முடியாது. தமிழகம் செய்த தவப்பயனாக திருவாவடுதுறை ஆதீனம் தொடர்ந்து திருமந்திர மாநாடுகளை அவ்வப்பொழுது நடத்துவது வழக்கம்.

இதில் என் தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் அவர்களும் கலந்து உரையாற்றுவதுண்டு.

அவர் கூடவே செல்லும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டதால் மாநாட்டு நடவடிக்கைகளையும் பேரறிஞர்கள் ஆற்றும் உரைகளையும் வியப்புடன் கவனிப்பேன்.

திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரம் சம்பந்தமாக ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது; மூன்றாம் தந்திரம் விளக்கத்தை பஞ்சாக்ஷரதீபம் என்னும் உரையுடன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள 126 ஆசனங்களின் பட்டியலே மேலே தரப்படுள்ளது.

திருமந்திரம் வளர்க்கும், திருமந்திர ரகசியம் விளக்கும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போற்றி வணங்கி எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

Tags யோகம் , ஆசனம், திருமூலர், திருவாவடுதுறை ஆதீனம்,

ஆசனங்கள் , பட்டியல்

***

ARE WOMEN HUMAN BEINGS? CHRISTIAN DISCUSSION!!! (Post No.7555)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7555

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Great philosopher and former President of India Dr S Radhakrishnan gives very interesting information about the attitude towards women in ancient India. Then in the same volume R C Majumdhar, former Vice Chancellor of Dacca University adds that anti women attitude was common among the Hindu Smrti writers, Greek philosophers, Gautama Buddha and the Christian poets and monks . Christians maintained anti women attitude until very recent times.

“Indian tradition has generally respected womanhood, as the essays in this book indicate, though occasionally we find derogatory references to women ( in his introduction to Great Women of India book). Even god is regarded as half man and half woman, ‘ardha-naariiswara’. Manu declares that where women are honoured, there gods are pleased; where they are not honoured, all works become fruitless (Manu 3-56).

Women cannot do some things that men can. Their physiology prevents this. That does not prove any inferiority on their part. We must do the things for which we are made and do them well.

In early times education of women was engaged. The Goddess of Learning is Saraswati.

The Mahanirvana Tantra says

‘A girl also should be brought up and educated with great care and effort’ -8-47

The Devi Mahatmya declares,

‘All forms of knowledge are aspects of Thee; and all women throughout the world are Thy forms- 11-6. We hear of great women like Maitreyi, Gargi, Arundhati, Lilavati etc.

In the Vedic age women enjoyed equal opportunities for education and work. They were eligible for ‘upanayana’ (Sacred thread)  or initiation and Study of Brahma Knowledge.

There is an interesting passage in the Durga Saptasati, where Durga who is Kumari/ virgin tells the Asuras who  aspired to marry her- ‘He who conquers me in battle , he who humbles my pride ,he who is my equal in this world, he shall be my husband’. Women were not the bond slaves of pleasure. The end of marriage is spiritual comradeship. The Mahabharata says ‘ let this heart of yours be mine , and let this heart of mine be yours’- 1-3-9. Yet sex life was not despised. Its importance for human development was recognised.

Matri Devp Bhava – Treat your Mother as a Goddess – is the advice given to the young. Again Manu says,

‘One acharya excels ten Upadhyayas in glory; a father excels a hundred Acharyas in glory; but a mother excels even a thousand fathers in glory’- 2-145

Marriage without motherhood is incomplete.

Xxx

R c majumdhar says after quoting anti women references from the Smrtis (HINDU LAW BOOKS), and the following about other religions-

Varahamihira’s Brihat Samhita of sixth century CE gives all out support for women-

“Tell me truly, what faults attributed to women have not   been also practised by men? Men in their audacity treat women with contempt, but they really possess more virtues than men….. men owe their birth to women: O ungrateful wretches, how can happiness be your lot when you condemn them?”

The ascetic and puritanical ideas which came into prominence about the sixth century BCE laid stress on the temptations offered by women and regarded them as the chief obstacles to salvation. Women came to be looked upon as the source of all evils and as potent instruments of destroying the souls of men. Hence the denunciation of women as a class reached a degree which is not unknown in other countries. It is well known how Christian monks gathered at the Synod of Macon in 585 CE seriously discussed whether women were human beings at all.

Even Gautama Buddha was not wholly above this spirit. For a long time, he refused to admit women to his religious order, and when he did so, he prophesied that that the purity of his religion would not endure for more than half the period that it would have otherwise done. He also imposed a far more rigorous test and placed the nuns as a class in a position of inferiority to the monks. It was laid down, for example, that a nun though hundred years old, must stand in reverence even before a young monk just initiated into the church.  Such a sentiment was shared by other religious sects, and naturally reacted on the people at large, thereby creating an unfavourable view against women.  These and other reasons must have produced the feeling that women were wicked  and sensuous by nature and must be constantly  held in check by women.

It should be remembered, however, that such a feeling was almost universally held  throughout the world down to down to very recent times. Confucius, Aristotle, Milton, and even Rousseau preached that women, being inherently inferior to men, should always be in a subordinate position to men”.

Source book – Great Women of India, Advaita Ashrama, 1953.

My Comments

Tamil devotional literature and Kamba Ramayana also have lot of anti women remarks. They looked at women from three angles:

As mothers they were worshipped as Goddess.

As wives they were appreciated for the work they did;

As courtesans they were criticised. The writers who criticised women knew that every woman was a mother to someone. So only when the women acted against the norms of the day they were condemned.

The strange thing is that the Hindus were the only one race who gave them full rights in the Vedic days.

But Britain and other countries paid less wages to women than men who did the same job. While I am typing this, several women sued the BBC against lesser pay they are getting right now and winning their cases slowly.

Britain gave voting rights to British women only after India gave voting rights.

In almost all Western countries women are paid less than men while I am finishing typing this article.

Victorian novels have lot of anti -women remarks. Women were treated as dumb, arrogant, gossip mongers. They were projected as jealous anti women (one woman wont help another woman of same age or status).

Long Live Women!

Long live Bharati, Tamil poet, who fought for women’s’ rights as early as in 1900s.

–subham–

சாப்பிடக் கூடாத இலைகள் எவை? (Post No.7554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7554

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

சதகம்  என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப்  பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர  சதகம்சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து  செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப்  பாருங்கள் .

(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் ந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள்  மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )

மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர்  இலைகளிலும் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?

ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –

அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட  சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

Singapermal Kovil Temple

—subham—

விபூதியின் மஹிமை! – 2 (Post No.7553)

paramam pavithram Baba Vibhuutim

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7553

Date uploaded in London – – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதியின் மஹிமை! – 2

ச.நாகராஜன்

தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.

சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –

(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,

சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,

சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச்  சுடு,

சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.

பிரம்மா சிருஷ்டியினாலும் திரிபுண்டரதாரணத்தைக் காண்பித்திருக்கிறார்!

எப்படியெனில்,  அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!

விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!

மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!

அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!

எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.

திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.

முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.

ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.

சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.

பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.

ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு  வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.

இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும், மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,

நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,

பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,

பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.

பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.

ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.

அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.

துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!

காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.

விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.

“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.

அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.

இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

    அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து,  திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்