Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Many women were regarded as Rishis or seers, i.e. composers of hymns and some of the hymns in the Rig Samhita were attributed to women. Twenty such hymn composing ladies are named in Sarvanukramanika ( List of poetesses and poets).
Lopaamudraa , Apaalaa, Vishwawaraa, Sikataa, Nivaavari, and Ghoshaa are some of the famous women whose names have been preserved in Vedic literature.
The grounds for such high literary attainments were prepared by education in childhood. The girls, like boys, underwent Upanayana ceremony ( sacred initiation) at an early age. That this was the usual practice, and continued even in later ages , is proved by many interesting evidences. We are told in the Atharva Samhita, 11-5-18, that ‘by Vedic studentship a girl wins a young husband’. This shows that high education was regarded as a necessary accomplishment for being well placed in life. Even in later Vedic age we hear of two classes of educated women,
1.Sadyowaahaas, who prosecuted their studies till their marriage,
2.Brahmavaadinis, who did not marry and pursued their studies throughout life.
It is interesting to note in this connection that the list of great Vedic teachers to whom tribute of respect had to be paid at the time of Brahmayajna, includes the names of some ladies, viz. Gaargi Vaachaknavi, Vadavaa Praatitheyi, Sulabhaa Maitreyi ( see Ashwalaayana Grihya Sutra 3-4-4). These evidences to which others may be added, show that the highest education, including Vedic studies was open equally to men and women, and many ladies distinguished themselves not only as Vedic scholars but also as great philosophers, debaters and teachers.
It may be stated without any hesitation that the general position and status of Indian women in the Vedic age was much higher than in any other ancient society that we know of, those of Greece and Rome not excluded. It is hardly necessary to point out that the picture is an ideal one, and cannot be regarded as universally true of all women.
But sons were preferred to daughters because of the funeral ceremony which could be done only by men.
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
வேதகாலம் என்பது புத்தருக்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் . இக்காலத்தில் பெண்களுக்கும் பூணுல் அணிவித்தனர். அதாவது முதல் மூன்று வருண மக்களுக்கு வேதம் கற்கும் உரிமை இருந்தது. பெண்களில் சிலர் திருமணம் செய்து இல்லறத்தில் நுழைந்தனர் . இன்னும் சிலர் ஆன்மீக நாட்டம் கொண்டு இறுதி வரை வேதக் கல்வி கற்று, வாதப் பிரதிவாதங்களில் பங்கு கொண்டனர்.
அக்காலத்தில் புகழ் பெற்ற யாக்ஞவால்கிய மகரிஷியை கேள்வி கேட்க யாரும் முன்வராதபோது , எல்லோரும் பயந்தபோது, கார்கி வாசக்னவி என்ற பெண் மட்டுமே கேள்வி கேட்டாள் . இது நடந்தது அகில இந்திய தத்துவ பேரறிஞர் மகாநாட்டில். 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீஹார் மாநிலத்தில் இப்படி ஒரு அனைத்திந்திய மாநாடு நடந்த செய்தியையும். அதில் பெண்களும் பங்கு கொண்ட செய்தியையும், அதில் வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் பசுமாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக் காசுகள் பரிசாகக் கிடைத்த செய்தியையும் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத் நமக்குத் தெரிவிக்கிறது.
Xxx
மேலும் சில வியப்பான செய்திகள் வேதகால இலக்கியத்தில் கிடைக்கிறது. யாக குண்டங்கள் அமைக்கும்போது முதல் செங்கலை வைத்து துவக்க விழா நடத்தும் உரிமை பெண்க ளுக்கே இருந்தது.
சீதா , ருத்ர என்னும் அறுவடை , நிலம் தொடர்பான யாக யக்ஞங்களை பெண்கள் மட்டுமே செய்தனர்.
‘சமான’ என்னும் விழாக்களில் பெண்களே அவர்களுடைய கணவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமும் இருந்தது. பிறகாலத்தில் வந்த எண்வகைத் திருமண முறையிலும் காதல் திருமணம் அனுமதிக்கப்பட்டதை மநு நீதி நூலும், தொல்காப்பியமும் செப்புகின்றன
1.கல்யாணம் ஆகும் வரை படித்துக்கொண்டிருந்த பெண்களை ‘சத்யோத்வாஹா’ என்று அழைத்தனர் ;
2.கல்யாணமே செய்துகொள்ளாமல் சாகும் வரை ‘சாகாக் கல்வி‘ கற்ற பெண்களை ‘பிரம்மவாதினி’ என்று அழைத்தனர்.
இங்கே இரண்டு சுவையான செய்திகளை சொல்லவேண்டும்.
1. படித்த பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைத்த செய்தி ; அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் வருகிறது 11-5-18,
‘வேதம் கற்கும் மாணவிகளுக்கு இளம் வயது ஆண்கள் கண வர்களாக வருவர்’ – என்கிறது அந்த மந்திரம். அதாவது பெண்கள் கற்றால், வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடையலாம் என்பது இங்கே தொனிக்கிறது. இரண்டாவது சுவையான செய்தி வணங்குதற்குரிய பெரியோரின் பெயர் வரிசையில் பெண்களின் பெயர்களும் இருக்கின்றன.
பிரம்ம யக்ஞத்தின்போது அஞ்சலி செலுத்தப்பட வேண்டியவர்களின் பெயர்களில் கார்கி வாசக்னவி, வடவா ப்ரா திதெயி, சுலபா மைத்ரேயி ஆகியோரின் பெயர்களும் உள்ளன. இதை ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்ரத்தில் காண்கிறோம் 3-4-4
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் , ஆசிரியர்களாகவும், தத்துவ வித்தகர்களாகவும் பட்டிமன்ற ராணிகளாகவும் வேத காலப் பெண்கள் திகழ்ந்தனர். ரோமானிய, கிரேக்க சாம்ராஜ்யப் பெண்களைவிட மிக உன்னத நிலையில் இருந்தனர் என்பதைத் தயக்கமின்றி முரசு கொட்டலாம்..
ரிக்வேதத்திலேயே லோபாமுத்ரா, அபாலா , விஷ்வாவாரா , சிகதா, நிவாவரி , கோஷா ஆகியோர் யாத்த கவிதைகள் பெண்களின் அறிவுக்கு ‘ஆயிரம் வாட் பல்பு’ வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதம் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச் சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ் வரர் வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50.
தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6
யா தம்பதி சமனஸா சுனுதா அ ச
தாவள: தேவஸோ நியயாசிர்
Xxx
தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் ரிக்வேதத்தில் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது.கல்யாண மந்திரங்களில் நீயே வீட்டுக்கு ராணி என்று வருகிறது.
சங்க இலக்கியப்பாடல்களில் மனைவியை குடும்ப விளக்கு என்று அற்புதமாக வருணிக்கிறர்ர்கள் .
ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீ டு என்கிறது.
கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி என்றால் வீ ட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.
Xxx
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வே ண்டும் . வைத்து என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச் சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Xxx
தொழிற்சாலைகளில் பெண்கள்
துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பனா விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை இஷு கர்த்ரயாக என்ற சொல் காட்டுகிறது.
வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கம்டி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார் எழுதியதை சில தமிழ் அறி ஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி வருத்தப்படுவார்.
xxx
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார். அதில் அக்களப் பெண்கள் எப்பாடு நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை னைவரையும் வீரர்கள் பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம் என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள் வேற்று நாட்டு செல்வங்களை பகிர்ந்து வருவார்கள். அனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் அறிவோம்.
வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மக்கள் கல்யாணத்தையும் ஆங்கிலேயர் கஸின் மேரியேஜ் என்றே சொல்லுவர் அதாவது ஒன்றுவிட்ட சகோதர என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.
கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஈரி,,,,,,,,,,,,,,,,,,,,யத்தைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் இருந்தது.
பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா பெண்கள், கணவனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத கால பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிப்படப் பேசுகிறார்கள்
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
அருணாசலத்தைத் துதிக்க பெருமை வாய்ந்த ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலையை அருளியிருக்கிறார் பகவான் ரமணர்.
இது பிறந்த கதையே சுவையான ஒன்று.
ரமணர் விரூபாக்ஷ குகையில் தங்கி இருந்த காலத்தில் உடன் இருந்த பக்தர்கள் பிக்ஷை எடுக்கச் செல்லும் போது பாடிக் கொண்டு செல்வதற்காக ஏதாவது ஒரு துதியை இயற்றி அருளுமாறு அவரை வேண்டினர்.
ஆனால் பகவானோ ஏராளமான துதிகள் ஏற்கனவே உள்ளனவே. தேவாரம், திருவாசகம் போன்றவை இருக்கின்றனவே. புதிதாக ஒன்று எதற்கு என்று வாளாவிருந்தார்.
ரமண பக்தர்கள் என்ற அடையாளத்திற்காகவாவது ஒரு தனி துதி தேவை என்பது பல பக்தர்களுடைய ஆசையாக இருந்தது.
ஒரு நாள் பகவான் கிரி வலத்திற்காகக் கிளம்பினார். அப்போது கூட இருந்த அன்பர் ஒருவர் பகவான் திருவாய் மலர்ந்தருளினால் அதை எழுதிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காகிதத்தையும் பென்சிலையும் கையில் எடுத்துக் கொண்டார்.
SRI RAMANA MAHARISHI
அன்று அருணாசல மகிமையைச் சொல்லத் திருவுள்ளம் கொண்டார் போலும் ரமணர்.
அருணாசல என்ற நாமத்துடனேயே துதியை ஆரம்பித்தார்.
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !
அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தையே ரறுப்பா யருணாசலா
பொருள் :- அருணாசலம் என்று தனது உள்ளத்தில் தியானிக்கும் அன்பர்களின் ஜீவ போதமாகிய அகங்காரத்தை வேருடன் அறுத்து நாசமாக்கி விடு அருணாசலா!
இப்படி ஆரம்பிக்கப்பட்டு, பாடல்கள் மளமளவென்று கிரி பிரதக்ஷிணத்தில் வர ஆரம்பித்தன. ஆங்காங்கு அமர்ந்தபோது மலர்ந்த பாடல்கள் உடனுக்குடன் எழுதப்பட்டன.
நூற்றெட்டு மந்திரங்கள் அடங்கிய அருணாசல அக்ஷரமணமாலை உதயமாயிற்று.
மாலை யளித்தரு ணாசல ரமண வென்
மால யணிந்தரு ளருணாசலா
என 108ஆம் பாடல் முடிந்தது.
பக்தர்களால் இன்றும் ஓதப்படும் மந்திர நூல் ஆகியது அருணாசல அக்ஷரமண மாலை.
பாடல்களைக் கூறும் போது பக்திப் பரவசத்தால் ரமணரின் கண்களில் நீர் பெருக்கெடுத்து காகிதத்தை நனைத்தது. நன்றாகப் பார்த்து எழுத முடியாமல் பார்வையை கண்ணீர் மறைத்தது.
பாடலின் பொருளை விளக்குமாறு பக்தர்கள் அவரை வேண்டிய போது “அதற்கு அர்த்தம் அதைப் பாராயணம் செய்வது தான்” என்று ரமணர் கூறி அருளினார்.
அக்ஷரங்களின் கோர்வையினால் அர்த்தம் ஏற்படுகிறது. ஆழ்ந்த அர்த்தம் தரும் போது அக்ஷரங்களுக்கு மணம் ஏற்படுகிறது.
அருணாசலம் என்ற வார்த்தையாலேயே அக்ஷரங்களுக்கு மணமும் பொருளும் ஏற்பட்டு விடுவதால் மணம் மிகுந்த மாலையாக இன்றும் என்றும் விளங்கும் அக்ஷரமண மாலை.
நூல் மலர்ந்தது: இதற்குப் பின்னால் பாயிரம் பாடினார் முகவைக் கண்ண முருகனார்.
அந்தப் பாயிரம் இது:
தருணா குணமணி கிரணா வலிநிகர்
தரும க்ஷரமண மகிழ்மாலை
தெருணாடியதிரு வடியார் தெருமரல்
தெளியப் பரவுதல் பொருளாக
கருணா சுரமுனி ரமணா ரியனுவ
கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு
வாழ்வார் சிவனுல காள்வாரே
பொருள் : அப்போது தான் உதித்த இளம் சூரியனின் கிரணங்களின் வரிசையைப் போன்று ஒளி வீசும் அக்ஷரங்கள் என்னும் மலர்களால் தொடுக்கப்பட்ட மகிழ்மாலையானது மெய்யுணர்வை நாடி நிற்கும் அடியார்களின் மன மயக்கம் தெளிவதற்கு போற்றி வழிபடும் பொருட்டாக க்ருணைக் கடலான முனிவரனாகிய ரமண ஆசாரியன் தன் உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தினால் கூறியதையே கதியாக நம்பி அருணாசலமே எமக்கு உற்ற துணை என்று இதயத்தில் உணர்வோடு ஆழ்ந்து கொள்ளும் அன்பர் சிவபிரானின் அருளால் சிவானுபவம் பெறுவார்; சிவலோகம் ஆள்வார்!
மகிழ்மாலை என்று இதில் குறிப்பிடப்படும்போது இந்த க்ஷேத்திரத்தின் ஸ்தல விருட்சமாக மகிழ மரம் அமைந்திருப்பதையும் நினைவில் கொண்டால் அது மணம் பரப்பும் மகிழ மரத்தின் மலர்களால் அமைந்த மாலையாகவும் கொள்ள முடிகிறது.
நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
யந்தக நீயெனக் கருணாசலா என்கிறார் 62ஆம் பாடலில் ரமணர்.
பொருள் : நான் அரிய தவம் எதுவும் செய்யவில்லை. சரீரம் வருந்தவில்லை. உன்னை எனக்களித்து விட்டாய். அதற்கு மாற்றுப் பொருளாக என்னை நீ எடுத்துக் கொண்டாய். எனக்கு நீ ஒரு அந்தகனாக – கொடிய யமனாக ஆனாய் அருணாசலா.
அருணாசலம் மதிப்பில்லாத தன்னை ஏற்று விலை மதிக்கவே முடியாத தன்னைக் கொடுத்து விட்டதால் அவன் ஒரு குருடனோ என்று வியக்கிறார் ரமணர்.
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை; யார் கொலோ சதுரர் என்று மணிவாசகர் வியந்து கூறுவதை இங்கு ஒப்பு நோக்கத் தோன்றுகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
A RIG VEDIC HYMN WITH NUMBER SYMBOLISM
Rig Veda, the oldest religious book in the world, the oldest anthology in the world and the oldest document of Hinduism, throws many challenges to Hindu and western scholars. The eighth Mandala of the book is very interesting. We see a lot of foreign stuff here extending up to Iran including Dhana/gifts of camels to Brahmins. Number symbolism seen here is one of the challenges which allows commentators to interpret a verse differently. Tamil Siddhas ad Saivite poet Tirumular followed this style with great enthusiasm.
In all ancient religions, mythology came first and then the religious hymns. But in Hinduism the hymn book Rig Veda is placed at least two thousand years before the 18 Hindu Puranas (Hindu Mythology). Though linguistically speaking the prose Puranas can be placed after the Vedas, the stories in them go back several thousand years. For instance, if a Saivite Purana talks about the Blue throated Shiva and the story behind the blue throat (Neela kanda), the words (Neela Kanda) are already in the Veda. If a Vaishnavite Purana talks about Vishnu’s Three Steps, the reference can be found in the Rig Veda. So it is clear that Puranaic episodes came first and written later.
The story of Maruts (Rig Veda 8-28) is in the Bala Kanda of Valmiki Ramayana.
xxx
7X7 gods, 7X9 gods in Rig Veda 8-28
Here is a reference about the origin of Maruts. Briefly described as sons of Rudra and attendants of Indra. The storm god is found even in Sumerian (Babylonian) worship as God Martu.
In later days we have
Maruti – son of wind god is worshipped in nook and corner of India as Hanuman, Anjaneya
Maruti car is running in India everywhere.
Sanda maarutam (gale fore wind) and Mantha maarutham (breeze) are used in Tamil novels etc.
These Maruts are found in Rig Veda with interesting and puzzling Numbers!
Here is the hymn 8-28 from Rig Veda
1.The Thirty Gods and the Three besides, whose seat hath been the sacred grass,
From time of old have found and gained
2.Varuna, Mitra , Aryaman, Agni, with the
Consorts sending boons,
To whom our Vasat! is addressed
3.These are our guardians in the west and
northward here, and in the south
And on the east , with all the tribe.
4.Even as the gods desire so verily shall it
be. None minisheth this power of theirs,
No demon and no mortal man.
5.The Seven carry Seven spears; Seven are
the splendours they possess
And Seven glories they assume.
For our number symbolism and the origin of Maruts, let us take stanza/mantra 5 only. Griffith whose translation is given above, comments —
The seven
The Maruts, seven or seven times nine, or seven times seven in number. Saayana mentions the legend of their birth, which will be found in Ramayana book 1, cantos 46,47. The meaning is merely that the Maruts carry lances , that is their, lightnings, and are splendidly adorned.
We get 33 gods and then 49 and then 63.
Thirty three is expanded as thirty three crores of gods (330 million) in Puranas , just an exaggeration to boost their importance. Hindus always add a big decimal number for exaggeration.
They used to say
King Dasaratha has 60,000 wives (meaning is ‘several wives’, unusually high)
In Weddings priests announce ‘Uncle of the bride gifts ‘laksham katti varahan’ (one hundred thousands of gold bars consisting of Varahan gold coins) – meaning is his ‘Rs100 is worth billions’.
Hindus have 33 crore (330 million) gods (meaning is Hindus can worship God in every form, every object)
But later Puranas explained 33 gods as 8 Vasus+12 Adityas+ 11 Rudras + Indra+ Prajapaati (or Two Asvins).
xxx
Story of Maruts from Ramayana
When Diti’s sons were killed in the Churning of the Milky ocean incident, she requested her husband that she should have one son who will be the slayer of Indra ; her husband Kashyapa asked her to do a penance for 1000 years. She did so, but when ten years were remaining, Indra came and entered her when she was lying in the wrong posture. Indra cut the foetus into seven parts and she cried Indra said ‘Ma Ruda= Cry Not = Marut’.
She requested Indra to allow them to live and Indra told her they will be the guardians of seven winds. They were divided into three parts (7+7+7)
Xxx
The Puranic dictionary by John Dowson summarises it in the following passage: –
“The storm gods who hold a very prominent place in the Vedas and are represented as friends and allies of Indra. Various origins are assigned to them. They are the sons of Rudra, sons and brothers of Indra, sons of the oceans, heaven and earth (7+7+7). They are armed with lightning and thunderbolts, and ride on the whirlwind and direct the storm.
The number of them is said in one place to be thrice sixty ( 3+60) and in another only twenty seven.
In the Ramayana they are represented to have their origin in an unborn son of Diti whom Indra dashed into 49 pieces with his thunderbolt (7X7), and in compassion converted into Maruts.
Another commentator on Vedas say , that after their Siva and Parvati beheld them in great affliction, and the latter asked Siva to transform the lumps on flesh into boys of like form, like age and similarly accounted, and gave them to Parvati as her sons and hence they are called the sons of Rudra.
The legend is invented to explain those passages of the Vedas which make Maruts the sons of Rudra.
MY COMMENTS
It is very simple. If you collect all the English poems on rain or thunder, you will see different interpretations, imageries, similes etc from different poets.
Vedic poets described thunder and rain of Indra assisted by storm and lightning of Marut.
What is the purpose?
The dialogue poems of Rig Veda show that after every sacrifice, there was an Entertainment Show in which two groups acted sitting opposite. Dialogue Hymn between Indra and Marut is the proof for it (RV 1-165).
Probably the Diti – Indra chapters in Ramayana (1-46, 47) are also acted on stages and Viswamitra recited this story to Rama and Lakshmana.
But on another plane, these poems have hidden meaning. In all Tamil Sangam Akam verses (Family/ sex verses) all the natural phenomena have hidden meanings as explained by the later commentators. Sangam Tamil Poems are from first few centuries of Common Era and the commentaries are from 13th century or later. We find the names of the poets and words in the verses are explained as fancifully as Ma Ruda- Don’t Cry- Maruta!
Since Rudra is also a storm god in the Vedas, Maruts/lightnings are described as sons of Rudra.
In short, a poem on lightning is explained/interpreted in different ways.
Why different numbers (21, 27, 49 and 63) are given?
You can count the lightning streaks in any number depending based on your imagination. But Hindus has a fascination for Number Seven. Anything holy or everything holy is divided into Seven. We see this Number Seven in Indus- Sarasvati Civilization seals more than other numbers. Another holy number 3 is also seen in it.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவண கவிராயர் எழுதிய 100 , அருமையான நூறு பாடல்களில் நல்ல பல அறிவுரைகளை வழங்குகிறார். அதில் சாப்பிடக்கூடாத உணவு வகை என்ன என்று சொல்கிறார். இப்பொழுது பிட்ஸா , பாஸ்தா (PIZZA AND PASTA) போன்ற உணவுகளில் காளான் எனப்படும் மஷ்ரும் (MUSHROOM) களைச் சேர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலை நாடுகளில் மேலும் பல அயிட்ட (ITEMS)ங்களில் மஷ்ரும் சேர்ப்பதோடு மஷ்ரும் சூப்பு வேறு விற்பார்கள் . இதில் ஏராளமான வகைகளும் உண்டு. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அறப்பளிச்சுர சாதகத்திலும் இது இருப்பது வியப்பானதே. கிராமப்புறங்களில் பயன்படுத்தி இருப்பர் போலும்!
சிவன் கோவில் நிர்மால்யம் பற்றியும் அம்பல வாணர் எச்ச ரிக்கிறார் ; அவரே சிவபக்தர் என்பதால் இது நன்கு தெரிந்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் பிரசாதம் வாங்கிச் சாப்பிடலாம். அதை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது. நிர்மாலியம் என்பது கோவிலில் மிஞ்சிப் போன பழைய பொருள்கள் ஆகும். இங்கே சிவன் கோவிலில் மிஞ்சிப் போன பிரசாதத்தை– சமைத்த உணவைக் குறிக்கிறது. பொதுவாகவே ‘சிவன் சொத்து குல நாசம்’ எனபது பழமொழி . அதாவது கோவிலில் உள்ள எதையும் வீட்டு உபயோகத்துக்கு, சுய நலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.
சாப்பிட்டக்கூடாத– அதாவது ஆன்மீக நாட்டம் உடையோர்– சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல்:–
ஆட்டுப் பால் , கடையில் விலைக்கு வாங்கும் பால், காராம் பசுவிலிருந்து கறக்கப்பட்ட பால், சுரைக்காய் , முருங்கைக் காய் ,காளான் , நீர் முலாம்பழம்,பழைய சோறு , பயனில்லாத கீரை வகைகள், பீர்க்கங்காய் , அத்திக் காய் ,தென்னை வெல்லம் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம்,பெருங்காயம் , வெள்ளை உப்பு, வெள்ளைக் கத்தரிக்காய் , சிவன் கோவிலில் மிஞ்சிய உணவுப் பிரசாதம் , இருளில் உள்ள உணவு ஆகியன ஆசாரம் உடைய மக்களுக்கு ஆகாது என்று பழைய நூல்கள் சொல்கின்றன என்று கவிராயர் செப்புகிறார் . இறுதியில் ஐம்புலன்களை வென்ற சிவ பெருமானை வாழ்த்தி வணங்குகிறார் கவிராயர்; இதில் ஆசாரம் உடையார்க்கு என்பது அடிக்கோடு இடவேண்டிய சொற்கள்.
நாங்கள் இத்தாலிக்கு இருமுறை சென்றபோது தினமும் சாப்பிட்ட ‘வெஜிட்டேரியன்’ உணவில் மஷ்ரூம், வெங்கயம், பூண்டு இருந்தன. வேறு எதுவும் கிடைக்கவில்லை.ஆகையால் உணவு விதிகளும் கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்ததே. மனு நீதி நூலும் பகவத் கீதையும் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை முன்னரே எழுதிவிட்டேன்.
ஆபத்துக் காலத்திலும், நோய்களைத் தீர்ப்பதற்காகவும் எதையும் சாப்பிடலாம்.
இந்தக் காலத்தில் வெங்காயம், உள்ளிப் பூண்டு சாப்பிடா தோரைப் பார்ப்பது அரிது.அனால் இவை இரண்டும் இல்லாமலேயே சுவையான உணவு ஆக்க முடியும் என்பதற்கு பிராமணர் வீட்டு உணவு வகைகளும் மலையாள சமையலும் சான்று பகரும் .
இன்றும்கூட, ஹரே கிருஷ்ண இயக்கத்தினரும், சுவாமி நாராயண சம்பிரதாய குஜராத்திகளும் மேற்கண்ட விலக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதே இல்லை.
tags- ஆட்டுப் பால் , மஷ்ரும் , பூண்டு , வெங்காயம், சாப்பிடாதே
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கோகுலம்கதிர் மாத பத்திரிகையில் பிப்ரவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
மாறப் போகும் உலகம்!
ச.நாகராஜன்
உலகில் மாறாதது மாற்றம் ஒன்று தான்! ஆம், நாளுக்கு நாள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் மாயாஜால சாதனங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி விடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். செல்போன், ஜி.பி.எஸ்., கணிணி, வித விதமான் ஆப்ஸ், வீடியோ கேம் என்று இப்படி நூற்றுக் கணக்கில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்தும் சாதனங்கள் எத்தனை எத்தனையோ வந்து கொண்டே இருக்கின்றன; வாழ்க்கைப்போக்கை மாற்றிக் கொண்டே இருக்கின்றன!
இதோ இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் சாதனங்களில் சில :
சோலார் கார்கள்!
பெட்ரோல், டீஸல் ஆகிய படிம எரிபொருள்களின் விலை விண் அளவிற்கு உயர்ந்து கொண்டே போவதால் கறிகாய் விலை முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிக் கொண்டே போகிறது. ஏன்?
இவை அனைத்தையும் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு அதிகமாகவே சந்தையில் விற்பனை விலையும் அதிகமாகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்கனவே உலகின் தலை சிறந்த கார் கட்டுமான நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்னவெனில் இதிலுள்ள பேட்டரிகளை அவ்வப்பொழுது சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு முடிவு கட்ட லைட் இயர் (LightYear) என்ற புதிய எலக்ட்ரிக் கார்களை நெதர்லாந்து நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பேட்டரிக்குப் பதிலாக காரின் மேல் சோலார் பேனல்கள் – சூரியத் தகடுகள் – பொருத்தப்பட்டிருக்கும். முதல் தடவையில் சார்ஜ் செய்தால் 450 மைல்கள் இது ஓடும். பின்னர் ஓடும் போது சூரிய ஒளியினால் மணிக்கு ஏழரை மைல் ஓடும் படி சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும். ஆக இனி எதிர்கால சோலார் கார் இது போலத் தான் இருக்கும்.
பறக்கும் கார்கள்!
சாலையில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு அலுவலகத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ, விமான நிலையத்திற்கோ இன்னும் அவசரமான காரியங்களுக்கோ செல்ல முடியாமல் அவஸ்தைப் படும் நிலை இனி மாறி விடும். ஊபர் (Uber) நிறுவனம் பறக்கும் காரைத் தயார் செய்து சென்ற வருடம் லாஸ்வேகாஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவிலும் பின்னர் படிப்படியாக இதர நாடுகளிலும் இந்த பறக்கும் கார்கள் ஓட – இல்லை இல்லை – பறக்க ஆரம்பிக்கும். டிராபிக் ஜாமிற்கு குட் பை!
வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்!
இன்றைய உலகில் உணவுப் பற்றாக்குறை அதிகமாகி இருப்பதால் பல கோடி மனிதர்கள் உணவின்றித் தவிக்கின்றனர். உலக வெப்பமயமாதலால் இந்தத் தொகை இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஏரோஃபார்ம்ஸ் (Aerofarms)என்ற நிறுவனம் வீட்டிற்குள்ளேயே விவசாயம் செய்யும் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளது. இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவைப்படும் நீரில் 95 சதவிகிதம் குறைவாகவே இந்த வீட்டு விவசாயத்திற்குத் தேவைப்படும் என்பது தான். பயிர்கள் நீர் பாய்ச்சி வளராமல் இந்த வீட்டு விவசாயத்தில் பயிர்கள் மீது இலேசான பனித்துகள்கள் படியும். இந்த உத்தி மூலம் கீரை போன்றவற்றை வளர்த்து அவற்றைப் பெரிய அளவில் பல்வேறு உணவு விடுதிகளுக்கு இந்த நிறுவனம் விமானம் மூலமாகக் கூட சப்ளை செய்து வருகிறது! இது போன்று விவசாயம் செய்யும் நிறுவனம் உலகில் எங்கள் நிறுவனம் ஒன்று தான் என்கிறது ஏரோஃபார்ம்ஸ். நாளைய விவசாயத்திற்கு வழிகாட்டும் இந்த உத்தி மூலம் இனி வீட்டிலேயே விவசாயம் தொடங்கலாம்.
சூட் கேஸ் போய் பேக்-பேக் வருகிறது டும் டும் டும்!
கணினி நிறுவனங்கள் பெருமளவில் வரத் தொடங்கிய நிலையில் முதுகில் சுமந்து செல்லும் பேக்-பேக் (BackPack)அனைவராலும் விரும்பி முதுகில் மாட்டி, கொண்டு செல்லும் பையாக மாறி விட்டது. அவே (Away)என்ற நிறுவனம் புதிய பேக்-பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீர் புகாத நைலானால் ஆன இதன் விலை 195 டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) இதில் மூன்று பெரிய பைகள் பிரதானமாக உள்ளன. அது தவிர பல்வேறு உள் பைகளும் உள்ளன. தண்ணீர் பாட்டில் உட்பட்ட எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அதை வைக்க இதில் இடம் இருக்கும். நான்காவது பை ஒன்றில் 15 அங்குல லேப்-டாப் கணிணியை வைத்துக் கொள்ளலாம். விமான நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இதை எளிதாக எடுத்துச் செல்ல இதன் பின்னால் இருக்கும் சுருள் பை ஒன்றைத் திறந்தால் போதும் அதிலிருந்து இதை உருட்டிச் செல்வதற்கான உருளைகள் வரும். இதை இழுத்துச் செல்ல வேண்டியது தான். இனி உலகெங்கும் சூட் கேஸுக்குப் பதிலாக உருண்டோடும் பேக்-பேக் தான் வலம் வரப் போகிறது.
கணிணியை நீங்களே தயார் செய்யலாம்!
இனி உங்களுக்குத் தேவையான கணிணியை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். கேனோ (Kano)என்ற நிறுவனம் Do It Yourself – நீங்களே தயார் செய்யும் சின்னப் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணிணியின் பல பாகங்களை அசெம்பிள் செய்து விண்டோஸ் 10ஐ நீங்களே நிறுவிக் கொள்ளலாம் இதில்.
பிரசித்தி பெற்ற கணிணி தயாரிப்பு நிறுவனமான லெனோவோ தனது பிரபலமான திங்க் பேட் மாடலில் (Lenova ThinkPad X1 Foldable Model)இரண்டாக மடித்துக் கொண்டு சுலபமாகக் கொண்டு செல்லும் மடிக் கணிணியை மடித்து வைத்துக் கொள்ளும் அமைப்பையும் சேர்த்து சந்தையில் உலவ விடுகிறது. சின்ன புத்தகம் போல உள்ள இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம்; இதில் புதிதாகப் பல விசேஷ அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆக ‘பைக்குள் கம்ப்யூட்டர்’ என்பது நிஜமாகும் காலம் வந்து விட்டது.
புதிய டி.வி.
தொல்லைக் காட்சிகள் தந்தாலும் கூட தொலைக்காட்சி இல்லாத வீடு ஒரு வீடா? இந்த டிவி பெட்டியிலும் எல்ஜி நிறுவனம் புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. 88 இஞ்ச் மாடல் என்று பெயர் பெற்ற இதன் கனம் 1.96 அங்குலம் தான். இருக்கின்ற சினிமாக்களை இதுவே புதிய 8K தொழில்நுட்பத்திற்கு மாயாஜாலமாக உயர்த்தி சினிமா பார்ப்பதை ஒரு சுகமான அனுபவமாக மாற்றி விடும். சிறிய அறையாக இருக்கும் போது அங்கு மிக அருகிலிருந்து பார்த்தாலும் பிரமாதமான பார்வை கிடைக்கும், கண்ணும் கெடாது என்கிறது இந்த நிறுவனம்.
கொஞ்சம் பெரிய விஷயங்கள்!
இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்; கொஞ்சம் ‘பெரிசாகச்’ சொல்லுங்கள் என்று கேட்போருக்கு இதோ பெரிய விஷயங்கள்;
விண்கலத்தில் சாமானியரும் ஏறி சந்திரனுக்குச் செல்லலாம்.
உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்தே பார்க்கலாம். அட நம்ம குழந்தை விளையாடுது என்று சந்தோஷப் படலாம்.
ஜெனிடிக் உத்தி மூலமாக நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செய்யப்போகும் மாயாஜாலங்கள் கோடிக் கோடியாக அமையப் போகிறது. புதிய நகர்களையே இந்த செயற்கை அறிவு தானே உருவாக்கப் போகிறது.
‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று இந்த நகரிலிருந்து பாடினால் அது முற்றிலும் உண்மையாக இருக்கும்.
இப்படி நூற்றுக் கணக்கில் கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாறப் போகுது உலகம்! மகிழ இருக்குது மனித குலம்!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
There is a story how Eyre, the surveyor ,called upon his friend and neighbour, Lord Lyndhurst, the Chancellor of England
“I find, said he, “your lordship has changed your politics “.
“Yes, said Lord Lyndhurst, and is ready to change them again if you will make it worth his while”.
Xxx
President Wilson has been asked to receive a group of Irish American leaders who wished to present a paper. He had consented to do so, with the proviso that Daniel F Cohalan should not accompany them. During the war he had been a great disturber. Nevertheless, the committee had shown up, headed by Cohalan. Tumulty was urging the President to relent,
“Oh governor, he pleaded, this will make a terrible impression on his followers”.
Cohalan was an influential political leader.
The President took out his watch. That is just what I wanted it to do , Tumulty; but I think it will make a good impression on decent people.
Xxx
Capitalist and Politician
The following is a statement attributed to late G K Chesterton,
“The mere proposal to set the politician to watch the capitalist has been disturbed by the rather disconcerting discovery that they are both the same man. We are past the point where being a capitalist is the only way of becoming a politician, and we are dangerously near the point where being a politician is much the quickest way of becoming a capitalist.
Xxx
Hotel episode!
In Washington, during the career of the notorious Huey Long, a political follower of the Louisiana senator was pleading with him to procure him the nomination, which would be equivalent to election, for representative from a certain Louisiana district.
“I can’t do that”, said Long
“It is all your own fault. Even I couldn’t get you elected. Not after that story about the Hotel Episode in New Orleans.
“That story is a damned lie! “ cried the aspiring politician
“Why there isn’t even any Hotel Episode in New Orleans
Xxx
When Oliver Cromwell first coined his money, an old cavalier looking on one of the new pieces, read this inscription on one side
‘God is with u’s — on the other ‘Common wealth of England’.
“I see, said he, that god and the commonwealth are on different sides”.
Xxx
Weighty Politicians
A New Jersey Congress man once brought two citizens of that state to visit the president seeking to impress Lincoln, he introduced them as being
‘Among the weightiest men in southern New Jersey’
Upon their departure, Lincoln said to one of his aides who was standing by
“I wonder that end of the state didn’t tie up when they got off it”
Xxx
Dancing Anecdote
There is a legend of doubtful authenticity about Tommy Hitch cock , who, at a certain dance, was paired off for one number with a young woman with whom he had not been formally introduced.
Slightly apologetic he said,
“I am afraid I am not dancing very well this evening; I am a little stiff from Polo”.
His partner answered coldly,
“It doesn’t make any difference to me where you come from!”
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய கல்லிவரின் பயணங்கள் சிறுவர்களையும் முதியோரையும் மகிழ்விக்கும்.. நான் அந்த நூல் பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்னர் எழுகிய சிறு குறிப்பு தினமணி கதிரில் வெளியானது. படித்து மகிழுங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகப் புகழ் பெற்ற தத்துவ வித்தகரும் இந்தியாவின் ராஷ்டபதியுமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்
‘இந்தியாவின் புகழ் பெற்ற பெண்மணிகள்’ (GREAT WOMEN OF INDIA) என்ற 1953-ம் ஆண்டுப் புஸ்தத்துக்கு அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.சி . மஜூம்தார் (RAMESH CHANDRA MAJUMDHAR, VICE CHANCELLOR OF DACCA UNIVERSITY) ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் . கட்டுரையில் பல அரிய சுவையான விஷயங்களைக் காணலாம். இதோ சில சுவையான செய்திகள் —
டாக்டர் ராதா கிருஷ்ணன் அப்போது உபராஷ்டிரபதி . அவர் எழுதியதாவது-
இந்தியப் பண்பாட்டில் பொதுவாக பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதை இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் எடுத்துரைக்கின்றன. ஆனால் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான குறிப்புகளையும் காணமுடிகிறது கடவுளையே நாம் அரை ஆண்மகனாகவும் , அரை பெண்மணியாகவும் பார்க்கிறோம் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில். மநு சொல்கிறார் (3-56)- “எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே கடவுள் மகிழ்சசி அடைகிறான் ; எங்கே அவர்களை மதிக்கவில்லையோ அவ்விடத்தில் நடைபெறும் அத்தனையும் பயனற்றுப் போகும்” .
ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்கள் , செய்ய இயலாது. ஏனெனில் அவர்களின் உடல்வாகு அதற்கு இடம் தராது . இதன் காரணமாக அவர்களை மட்டம் தட்ட முடியாது . அவரவர்களுக்கு உரிய செயல்களைச் செவ்வனே செய்வதே சிறப்பாகும்.
பழங்காலத்தில் பெண்களும் கல்வி கற்றனர்; பூணுல் அணிந்து கிரியைகளைச் செய்தனர். பிரம்ம வித்யைக்கு அவர்க்களும் உரிமை கொண்டாடினர். ‘மஹாநிர்வாண தந்திரம்’ கூறுகிறது – “பெண்களையும் வளர்த்து ஆளாக்கி கவனத்துடனும் பெரு முயற்சியுடனும் கல்விப் பயிற்சி தர வேண்டும்”- 8-47
தேவி மஹாத்ம்யம் என்னும் நூல் இயம்புகிறது – “அறிவின் எல்லா துறைகளும் நீயே! உலகம் முழுதுமுள்ள பெண்கள் யாவரும், தேவி! உன் வடிவங்களே” – 11-6.
கல்விக்கான கடவுளே ஸரஸ்வதி ஆவார் .
நாமும் மைத்ரேயி, கார்கி , அருந்ததி, லீலாவதி முதலிய புகழ் பெற்ற பெண்மணிகளின் பெயர்களைக் கேள்விப்பட்டுள்ளோம்.
வேத காலத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிட்டின. இதற்குப்பின்னர் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றனர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட பைரவி பிராஹ்மணி என்ற பெண்மணியைத் தன் குருவாக ஏற்றார் . அவருடைய மனைவியான சாரதாதேவிக்கு அவர் கொடுத்த மரியாதையும் குறிப்பிடற்பாலது .
வேத காலத்தில் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்ததை அறிகிறோம். இதற்காக ‘சமான’ என்ற விழாக்கள் நடந்தன. கல்யாணம் என்பது மதிப்பிற்குரிய ஒரு விஷயமாக போற்றப்பட்டது .
துர்கா சப்த சதியில் ஒரு சுவையா விஷயத்தைக் காண்கிறோம். அங்கே துர்க்கை கல்யாணம் ஆகாத குமாரி. அவளைத் திருமணம் செய்துகொள்ள அசுரர்கள் ஆசைப்படுகின்றனர். அப்போது துர்கா தேவி சொல்கிறாள் —
“போரில் என்னை எவர் ஒருவர் வெல்கிறாரோ, எவர் ஒருவர் என்னையும் விஞ்சும் கர்வத்தைக் காட்டுகிறாரோ, எவர் ஒருவர் எனக்குச் சமமானவரோ அவரை நான் மணந்து கொள்வேன்” .
இதிலிருந்து பெண்கள் வெறும் இன்பத்தைத் தரும் அடிமைகள் அல்ல என்பது விளங்கும்.
மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் ஒரு ஸ்லோகம் உரைக்கிறது -1-3-9
“உன்னுடைய இருதயம்/ உள்ளம் என்னுடையதாகட்டும் ;
என்னுடைய இருதயம்/ உள்ளம் உன்னுடையதாகட்டும்”;
ஆகையால் காம சுக போகத்தை அவர்கள் வெறுக்கவில்லை
கல்வி கற்க வரும் சிறுவனுக்கு ‘தாயைச் சிறந்ததொரு கோயில் இல்லை’ என்பது தொனிக்கும் வகையில் முதலிலேயே ‘மாத்ரு தேவோ பவ’ (தாயே கடவுள் என்று கருது) – என்று கற்றும் தருகிறோம். மனு இதை மிகவும் வலியுறுத்தி மொழிகிறார் –
“பத்து உபாத்யாயர்களை விட ஒரு ஆச்சார்யர் பெரியவர் ;
ஒரு தந்தையானவர் 100 ஆச்சார்யர்களை விடச் சிறந்தவர் ஆவார்;
ஒரு தாய் என்பவளோ 1000 தந்தையரையும் விடச் சிறந்தவர் ஆவார்” – 2-145
xxx
இவ்வாறு டாக்டர் ராதா கிருஷ்ணன் எழுதியத்தைத் தொடர்ந்து டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் எழுதுகிறார் –
“நம்முடைய அதிர்ஷ்டம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டல 85 ஆவது துதி (Rik Veda 10-85) கல்யாண மந்திரத்தை அப்படியே இன்று வரை காப்பாற்றி வந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த ஒப்பற்ற கவிதை, இந்துக்கள் திருமணத்துக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர் என்பதைக் காட்டுகிறது ; ஒரு நாகரிகம் வாய்ந்த சமுதாயத்தில் நடக்கும் திருமணத்தின் மிகப்பழைய (oldest document on marriage) குறிப்பு இதுதான்”.
“இதற்குப்பின்னர் அவர் பெண்களுக்கு எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களை இந்து மத நூல்களில் இருந்த எழுதிவிட்டு நாம் பெரும்பாலும் கேள்விப்படாத முக்கிய விஷயத்தை எழுதுகிறார்).
“பெண்கள் இயல்பாகவே தீய குணங்களுடன் படைக்கப்பட்டவர்கள் என்று குறை கூறுகிறீர்களே. ஆண்களிடம் அத்தகைய தீய குணங்கள் இல்லையா? என்று வராஹ மிஹிரர் கேட்கிறார்.
உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான போக்கு காணப்பட்டது . கி.பி. 585ல் பிரான்சில் மேசன் நகரில் நடந்த கிறிஸ்தவ குருமார்கள் மகாநாட்டில்(Synod of Macon) பெண்கள் மனிதப் பிறவிகளா என்று காரசாரமாக விவாதித்தனர்.
கௌதம புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களை கடுமையாக நடத்தினார் . பவுத்த சங்கத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என்று அடம்பிடித்தார்.
சிஷ்யர்கள் மிகவும் வற்புறுத்தவே பெண்களை புத்த சங்கத்தில் அனுமதித்துவிட்டு , நான் எவ்வளவு காலம் என் கொள்கைகள் இந்த பூமியில் நிலவும் என்று நினைத்தேனோ அதில் பாதிக் காலம்தான் என் மதம் இந்தப் பூமியில் நிலவும் என்று ஆருடம் கூறினார். நூறு வயது பிக்குணி கூட நேற்று வந்த 16 வயது பிட் சுவுக்கு மரியாதை செய்ய வேண்டும். என்றார். மேற்கு நாடுகளில் இதையும் விட நிலைமை மோசம். கிரேக்க, ஸீ ன தத்துவ ஞானிகளான கன்பூசியஸ், அரிஸ்டாட்டில், பிரெஞ்சு அறிஞர் ரூஸோ , ஆங்கிலக் கவிஞன் மில்டன் ஆகியோரும் பெண்களுக்கு எதிராகப் பொழி ந்து தள்ளினர் ஆண்களை விட பெண்கள் மட்டம் என்றும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் எழுதினார்கள்.”
xxx
என் கருத்து
பாரதி போன்று பழங்கால உலகில் பெண்களுக்கு ஆதரவு கொடுத்த அறிஞர் வராஹமிஹிரர் ஒருவரே. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று வாதாடினார். இந்தியர்களைவிட மிகவும் மோசமானவர்கள் மேலை நாட்டார்தான். இந்திய பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னரே பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடைத்தது.
சங்கத் தமிழிலக்கியம் , திருக்குறளில் கூட ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று படிக்கிறோம். கம்பனும், பட்டினத்தாரும் பிறரும் பெண்களை சாடுகின்றனர் . ஆனால் இதை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். இந்துக்கள் பெண்களை மூன்று கோணங்களில் அணுகினர்.
1.தாய் என்ற பார்வையில், அவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர் . எல்லா பெண்களும் யாரோ ஒருவருக்குத் தாய் என்பதும் அவர்களுக்குத் தெரியும் .
2. இரண்டாவது கோணம்- அவர்கள் யாரோ ஒருவருக்கு மனைவி. அப்போது அவர்கள் ‘சுகம் தரும், வீட்டு வேலை செய்யும் ஒரு ‘கருவி’, ‘வஸ்து’ என்று கருதப்பட்டனர்.
3. மூன்றாவது கோணம் – விலைமகளிர் போல குணம் உடைய பெண்கள். அவர்களை பற்றி எச்சரிக்கவே பக்தி இலக்கிய பாடகர்கள் அவர்களை சாடினர் .
ஆக நிஜ வாழ்வைப் பார்க்கையில் பெண்களைப் போற்றியதையும் தூற்றியதையும் காண முடிகிறது .விக்டோரியன் கால (Victorian period Novels) ஆங்கில நாவல்களில் ,பெண்களை புத்தியில்லாத , பொறாமை கொண்ட, அலர் தூற்றும் வம்புக்காரிகளாக (Dumb, Ignorant, Gossip mongers) சித்தரிப்பதைக் காணலாம்.
வேத காலத்தில் இருந்த பெண்களின் உன்னத நிலை, காலப்போக்கில் சரி ந்து வந்ததை இந்து சமய நூற்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அக்காலத்தில் பாரதி போன்றோர் வராஹமிஹிரர் போன்றோர் மிகவும் குறைவு. அது மட்டுமல்லாது வெளிநாட்டோர் படை எடுப்புகளும் பெண்களின் நிலையைப் படு குழியில் தள்ளி ன பாரசீகர், கிரேக்கர், சகரர் , ஹுணர் , முஸ்லீம்கள் , கிறிஸ்தவர்கள் படை எடுப்பு காரணாமாக பெண்கள் நிலைமை படிப்படியாக மோசமாகி வந்ததை வரலாறு காட்டுகிறது.
உலகிலுள்ள பழங்கால பெண் கவிஞர்கள் , அறிஞர்களைப் பட்டியலிட்டால் நாம் மிக உன்னத நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும்.