Whenever I travel
on airplanes I never watch movies; I spend most of my time watching the flight path
amazing at the height of flight — 36,000 feet at an average speed of 550 miles
per hour. I also watch the temperature of minus -45-degree F etc. Other times I
sleep or read something. But during my trip to India on July 2019 I came across
the issue of The Week (issue date 29 June). There were lot of news items that
grabbed my attention. One of them is the Wit and Wisdom page. Here are some interesting
quotations: –
“If a
cluttered desk is a sign of a cluttered mind, of what then is an empty desk a
sign?” – Albert Einstein
(My
comments- Thanks, Einstein; I was worried about my cluttered desk! Family members
always complain about my cluttered desk and cluttered desk top screen on my PC.
Now I know I am as intelligent as Einstein!)
Xxx
“Everybody
was so gaga about Steve Jobs, but I picture him in hell running from demons,
who want a selfie” – Jim Carrey blames the Apple founder for the popularity of
selfies, quoted in the I newspaper.
(My comment- It is not fair to blame Steve for this; Selfies help us to reduce the population of idiots. Those who are idiots die at mountain cliffs, railway lines, water sources, top floors of the skyscrapers by taking selfies. Like knife, it can be used for both good and bad tasks. Narendra Modi, Prime Minister of India, used it for popularising good things. He took selfies with baby girls (Indians favour boys). When printing machine was invented by Gutenberg , Christian church warned him of bringing Satan into the world. When computers were introduced into banksin India, Marxist idiots cried of job loses and closed banks every month to stage demos. Popes of olden days banned printed Bibles. Now we laugh at them. So don’t blame Steve for selfies. It will get rid of the idiots from the earth and send them to hell. Long Live Steve Jobs!)
xxx
“Slow is the
fastest way to get where you want to go”- Actor Andre De Shields quoted in The Hollywood
Reporter.
(My comment-
Thanks Andre. Now I know I am on the fastest track. This morning, the total number
of hits for both my blogs crossed 11,000 hits per day mark; but I wanted to get
100,000 hits a day; I will reach my goal,
slowly, slowly)
Xxx
“People do
not change, they are merely revealed” – Writer Anne Enright quoted in the
Independent.
Xxx
“Time is an
illusion. Lunch time doubly so”- Douglas Adams, quoted in The Guardian
(My comment-
Very true! I worked for 43 years till my retirement in 2014. Lunch time was a
luxury, unobtainable!
Xxx
“It is
impossible that a man who is false to his friends and neighbours should be true
to the public”- Bishop Berkeley quoted
in The Guardian.
(My comment –
I am reminded of politicians, particularly, Indian politicians. Most of them
are not honest. Their friends expose them when they leave such unscrupulous
people and go to another group or political party)
Xxx
“I wear my enemies like medals”- Norman Stone quoted in The Sunday Times.
(My
comments- Hindu gods did this! The demon under the statue of Nataraja (Dancing
Shiva), the flags in the hand of Lord Skanda/ Kartikeya, and the Vahanas/
Mounts of several gods and goddesses are their enemies (demons)!
3.Sarvasambhavaabhaavah
– Non -existence of a particular effect in all things;
4.Saktasyasakaranam-
Potentiality of capable things;
5.Kaaranabhaavaahaa
– Intrinsic similarity of cause and effect
–Sankhyakarika
-9
If you need
the original slokas in Devanagari script, please go to Encyclopaedia of Numerals
, Volume 1, The Kuppuswami Sastri Research Institute, Chennai- 600 004, Year
2011
உயர்தோளா!
செயல்களின் முடிவு நிலையைக் காட்டும் ஸாங்கியத்தில் எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் கூறப்பட்டுள்ள
இந்த 5 காரணங்களையும் என்னிடமிருந்து
உணர்வாய் (18-13)
அதிஷ்டானம்
ததா கர்த்தா காரணஞ்ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச
ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்
பகவத்
கீதை – 18-14
இருப்பிடமாகிய
உடலும், அவ்வாறே செயலைச் செய்பவனும், வெவ்வேறாண கருமேந்திரியங்களும்
ஞானேந்திரியங்களும் செய்யும் செயல்களும் ஐந்தாவதாக தெய்வமும்
சரீர
வாங்மனோபிர் யத் கர்மப்ர்ராரபதே நரஹ
ந்யாய்யம்
வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவஹ
—பகவத் கீதை 18-15
சரீரத்தாலும்
வாக்காலும் மனத்தாலும் நியாயமாகவோ, அநியாயமாகவோ எந்தச் செயல் செய்தாலும் அவை கரும பலனுக்கு
காரணங்களாகும்.
ஐந்து
காரணங்களில் ஒன்றான தெய்வம் எப்படிச் செயலாற்றும் என்பதற்கு ராமகிருஷ்ண மடம்
வெளியிட்ட பகவத் கீதை உரையில் அண்ணா சொல்லும் கதை:–
ஒரு பெண் புறா தன் நாயகனைப் பார்த்து
“நமது முடிவு காலம் வந்துவிட்டது; வேடன்
ஒருவன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கீழே நிற்கிறான்; மேலே வல்லூறு வட்டமிடுகிறது” என்று பயந்து
கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு அவ்வேடனைக் கடித்தது; அவன் விட்ட அம்பு குறி தவறி வல்லூறைக் கொன்றது; புறா தப்பிப் பிழைத்தது. விதியின் போக்கு வெகு அதிசயம்.
ஹிந்து பண்பாட்டின் சிகரமாக விளங்குபவை நமது ஆலயங்கள். அற்புதமான
அமைப்பைக் கொண்டிருக்கும் ஆலயங்களில் ஒரு அதிசயமாக விளங்குபவை சூரிய பூஜை ஸ்தலங்கள்.
சிவன் கோவில்களில் சூரியனுக்குத் தனி இடம் ஒன்று உண்டு. சிவ
பூஜையில் சூரிய பூஜைக்குத் தனியான இடம் உண்டு.
சூரியனுக்கென்றே தனியாகக் கோவில்களும் உண்டு; சில சிவன் கோவில்களில் தனி இடமும் உண்டு.
SUN TEMPLE AT MODHERASUN LIGHT DOING WONDERS AT PONDY VARADARAJA PERUMAL TEMPLE
சூரியனைத் தொழுவதால் பாவம் தொலையும்; புண்ணியம் சேரும்; ஆக இது
இனி வரும் பிறவிகளுக்கான நல்ல ஒரு அஸ்திவாரமாக அமையும்.
சூரிய வழிபாடு உடல் நலத்தை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கச்
செய்து பூரண ஆயுளை நல்கும். சூரிய நமஸ்காரம் நல்ல பல உடற்பயிற்சிகளை முறையாகத் தொகுத்து
நம்மை மேம்பட வைக்கும் ஒரு யோகா பயிற்சி.
அடுத்து சூரிய வழிபாடு எதிரிகளை அழிக்கும். புற எதிரிகளையும்
அழிக்கும், அகத்திலே தோன்றுகின்ற காம, க்ரோதம் போன்றவற்றையும் அகற்றும்.
அது ஜயத்தைத் தரக் கூடியதும் கூட. இராமரே அகஸ்தியரால் ஆதித்ய
ஹ்ருதயம் உபதேசிக்கப்பட்ட பின்னரே இராவணனை அழிக்கிறார்.
பரம மங்களகரமானது. ஐஸ்வர்யத்தையும், பல சித்திகளையும் நல்க வல்லது.
ஒரிஸாவில் புவனேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ள கொனார்க் சூரிய
கோவில் கற்களினால் அமைந்தது. அற்புத சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது.
குஜராத்தில் உள்ள மெசேனா மாவட்டத்தில் புஷ்பவதி நதி தீரத்தில்
மொதிராவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சூரியன் கோவில் ஒரு உலக அதிசயம்.
இரவும் பகலும் சம கால நேரங்களாக வரும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர்
21 ஆகிய நாட்களில் (Spring and Autumnal Equinoxes) சூரிய ஒளி நேராக
மூலக் கோயிலில் விழுகிறது. அதாவது சூரிய பூஜை நிகழ்கிறது.
இப்படி சூரிய ஒளி நேராக கர்பக்ருஹத்தில் விழுந்து சூரியன் இறைவனை
பூஜிக்கும் ஸ்தலங்கள் பாரதம் நெடுக ஏராளம் உண்டு.
தொகுப்பின் ஒரு பெரிய கலைக்களஞ்சியமாகி விடும்.
சூரியன் பூஜித்த தலங்கள் 12.
1.கேதாரம்
2. திருக்கோலக்கா – சூரிய புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
3. திருவெண்காடு – சூரிய புட்கரிணி; ஆவணி ஞாயிறு விசேஷம்
இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள இடங்கள் – மீயச்சூர்,
திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் ஆகியவை.
சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்களில் குறிப்பிடத்தகுந்தவை
– இன்னம்பர் ( இனன் என்றால் சூரியன்), திருவையாறு, திருத்தானமுடையார் கோயில், திருக்கழுக்குன்றம்,
பருத்திநியமம், ஆடானை
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலக் கோயிலில் விழும் கோயில்கள் பல. மாதவாரியாக அப்படி அதிசய நிகழ்வு ஏற்படும் ஸ்தலங்களின் பட்டியல் வருமாறு :
சித்திரை
1,2,3 தேதி கூடலை ஆற்றூர்
1 முதல் 7 தேதி புறவார் பனங்காட்டூர்
5,6,7 தேதி ஆடுதுறை
7 முதல் 18 முடிய 12 நாட்கள் செம்பொன்பள்ளி
11,12,13 தேதி குடந்தைக் கீழ்க்கோட்டம் – நாகேஸ்வர ஸ்வாமி
புரட்டாசி
7,8,9 தேதி பைஞ்ஞீலி
19,20,21 தேதி புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
19,20,21 கடவூர் (மாலையில்)
ஐப்பசி
9 முதல் 15 முடிய (7 நாட்கள்) எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
14ஆம் தேய்பிறை நாள் முதல் 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
மாசி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
13,14,15 கண்டியூர்
(மாலையில்)
17 முதல் 21 முடிய 5 நாட்கள் குன்றத்தூர் (சேக்கிழார்)
18 முதல் 24 முடிய 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
19,20,21 புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
21 முதல் 25 முடிய 5 நாட்கள் பூந்தமல்லி வைத்தியநாதர்
23,24,25 அழுந்தூர்
பங்குனி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் மாயூரம் வள்ளலார் கோவில் (மாலையில்)
7,8,9 பைஞ்ஞீலி
12,13,14 சித்தூர் மாவட்டம் நாகலாபுரம்
13 முதல் 22 முடிய 10 நாட்கள் தெளிச்சேரி (மாலையில்)
13,14,15 வேதிகுடி, திருத்தணி ஆறுமுகசாமி
23 முதல் 27 முடிய 5 நாட்கள் நாவலூர்
25 முதல் 29 முடிய 5 நாட்கள் மாயூர வட்டம் பொன்னூர்
மேற்குறித்த தேதிகளுக்கு ஆதாரமாக இருப்பவை சிவத்தல மஞ்சரியும்
பஞ்சாங்கங்களும் ஆகும்.
இன்னும் மதுரை, லால்குடி, காவிரி தென்கரையில் உள்ள கண்ணம்பாடி
அருகில் உள்ள இடத்துறை என்பன போன்ற இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
திருப்பனந்தாளில் சூரிய தீர்த்தம் புழுதிகுடி மடத்திற்குப் பின்னால்
உள்ளது.இங்கு பைரவர் காவலாக இருக்கிறார். சூரியன் பூஜித்தது பாஸ்கர லிங்கம்.
மதுரை மாரியம்மன் கோவிலின் அருகில் அமைந்துள்ள முக்தீஸ்வரர்
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய, செப்டம்பர்
மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய சூரிய ஒளிகிரணம் மூலவர் மீது விழுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த நாட்களில் கூடுவது வழக்கமாகி விட்டது!
இன்னும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சூரியனார் கோவில்
உள்ளிட்ட புகழ் பெற்ற தலங்களின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால்
முடிவே இருக்காது. சூரிய என்சைக்ளோபீடியா தான் தயாரிக்க வேண்டும்!
இப்படிப்பட்ட கோவில்களின் சிற்ப அமைப்பை யாராலும் வியக்காமல்
இருக்க முடியாது.
சூரியனின் ஒளிக்கிரணங்கள் நேராக மூலவர் மேல் விழும்படி எப்படி
சிற்பிகள் கோவிலை நிர்மாணித்தனர், கிழக்கு நோக்கிய கோவில்களில் காலையிலும் மேற்கு நோக்கிய
கோவில்களில் மாலையிலும் காலம் காலமாக இன்று வரை சூரிய கிரணங்கள் எப்படி விழுகின்றன
என்பதை நினைத்துப் பார்த்தால் பாரதத்தின் சிற்பக் கலையின் மேன்மையையும், நமது பக்தியின்
உச்ச நிலையையும் உணர்ந்து மகிழலாம்.
இப்படி சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச்
சிறப்பிக்கப்பட்டு அந்த நாட்களில் அந்த வேளையில்
சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.
இந்த நாட்கள் பெரும்பாலான இடங்களில் சௌரமான கணக்குப்படி அமைந்திருப்பதும்
ஒரு அதிசயமே.
சூரிய பூஜை நிகழும்
அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் சென்று நாமும் வணங்கி வழிபட்டு மேன்மை அடையலாம்!