SWAMI’S CROSSWORD 81019 (Post No.7072)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-09
Post No. 7072

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

SIMPLE SANSKRIT WORDS. I HAVE LEFT THE FIRST LETTER TO MAKE IT EASIER FOR YOU.

ACROSS

1.– 6 letters –DIVINE SONG

6.- 8-– THAT IS TRUE ; THAT IS ULTIMATE TRUTH WITH PRANAVA MANTRA SAID AT THE END OF BOOK OR VEDA PARAYANA

7.—6—- BEND, BOW OR NAMELESS DEPENDING UPON THE WAY YOU PRONOUNCE IT.

8.—6–—LUXURY, AMUSEMENT, PLAY, SPORT

9. – 6–LEAF

DOWN

1. – 6–ANGER

2.–5 – GEM

3.–8– DEPARTING TIME

4. – 5–FATIGUE, STRUGGLE, LABOUR

5.—7– –ONE WHO IS AFFECTIONATE, TENDER, FEMININE NAME

–SUBHAM–

–SUBHAM–

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 1 (Post No7071)

blue diamond

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com
Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 11-17 am
Post No. 7071

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 5-10-2019 இதழில் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 1

ச.நாகராஜன்

உங்கள் கையிலோ அல்லது கழுத்திலோ காதிலோ, மூக்கிலோ வைர நகை அணிந்திருக்கிறீர்களா?
அப்படியானால் சுமார் நூறு கோடி அல்லது இருநூறு கோடி ஏன் முன்னூறு கோடி வருடம் பழமையான ஒரு அற்புதப் பொருளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை அறிவீர்களா?
ஆம், வைரங்கள் மிக மிகப் பழமையானவை. அதன் அற்புதங்கள் சொல்லி மாளாதவை.
பூமியின் அடியில் மிக மிக ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன.
வைரம் என்பது சுத்த கார்பன் தான். ஆம், உங்கள் கையில் நீங்கள் வைத்திருக்கும் பென்சிலின் முனையில் இருக்கிறதே லெட் பென்சில், அதில் இருக்கும் கிராபைட் போன்றது தான் அது!
ஆனால் அது வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் உருமாறி வைரம் ஆகிறது.பூமியின் ஆழத்திலிருந்து மேல்புறத்திற்கு அது வரும் சரித்திரம் மகத்தானது.
சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தான் வைரம் முதன் முதலாகத் தோண்டி எடுக்கப்பட்டது.
ஆனால் இப்போதோ உலகின் 80 சதவிகித வைரத்தை ஆஸ்திரேலியா,ஜைரே, போஸ்ட்வானா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகள் தான் வழங்குகின்றன.
தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. நமீபியா, அங்கோலா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்த இடங்களை வகிக்கின்றன.
ஒரு அதிசயமான உண்மை, இது வரை, இவ்வளவு காலத்தில் நாம் தோண்டி எடுத்த வைரம் சுமார் 350 டன்கள் தான்!
ஆனால் அதை விட அதிசயமான உண்மை சுமார் 250 டன் தாதுப் பொருளை எடுத்தால் தான் ஒரு காரட் பாலிஷான ஜெம் க்வாலிடி என்று சொல்லப்படும் தரம் வாய்ந்த நவரத்னங்களில் ஒன்றான வைரத்தைப் பெற முடியும்.
ஒரு காரட் என்பது 200 மில்லி கிராம். 250 டன் தாதுப் பொருளிலிருந்து வெறும் 200 மில்லி கிராம்!
உலகிலேயே கடினமானது வைரம். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.


6900 டிகிரி பாரன்ஹீட் என்ற வெப்ப நிலையில் தான் அது உருகும். அதாவது இரும்பை உருக்கக்கூடிய உஷ்ண நிலையைப் போல இரண்டரை மடங்கு அதிகம் இது.
வைரத்தை அணிவதால் என்ன பயன்?
சுருக்கமான விடை என்ன பயன் தான் இல்லை?
சகல சௌபாக்கியமும் கை கூடும்.
செல்வ வளம் பெருகும்.
ஆரோக்கியம் மேம்படும். தாம்பத்ய உறவிற்கான சக்தி கூடும் (செக்ஸ் பவர் கூடும்)
காதலின் சின்னம் வைரம்.
அந்தஸ்தின் சின்னம் வைரம். பெருமிதத்தைக் கூட்டும்.
மதிப்பைக் கூட்டும்.
எதிரிகள் ஒழிவர். வெற்றியே கிடைக்கும்.
துர்தேவதைகள் அண்டா. செய்வினையைப் போக்கும்.
கண் திருஷ்டி நீங்கும். இன்ன பிற நன்மைகள் ஏற்படும்.
அதனால் தான் மாமன்னர்கள் தவறாது வைரத்தை அணிந்திருப்பது வழக்கமாக இருந்தது. வலிமை, தைரியம், வெல்ல முடியாத் தன்மை ஆகியவற்றின் ஆதாரம் வைரம் என அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
கிரேக்கர்கள் வானிலிருந்து விழுந்த நட்சத்திரத்தின் துளிகள் வைரத் துகள்கள் என நம்பினர்.
டயமண்ட் என்ற வார்த்தையே கிரேக்க மொழியில் உள்ள அடாமஸ் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது. வெல்ல முடியாத, என்றும் நிலைத்திருக்கும் காதலைக் குறிக்கும் வார்த்தை இது.
மன்னர்கள் இதை அணிந்து வந்த போதிலும் எங்கேஜ்மெண்ட் ரிங் என்பது 1477இல் தான் தோன்றியது.
ஆஸ்திரியாவின் மன்னன் ஆர்ச்ட்யூக் மாக்ஸ்மிலியன் பர்கண்டியைச் சேர்ந்த மேரியை மணம் செய்ய நிச்சயித்த போது நிச்சயதார்த்தப் பரிசாக ஒரு வைர மோதிரத்தைத் தந்தான். அன்றிலிருந்து தான் இந்த வைர மோதிரத்தை மணமகளுக்கு அணிவிக்கும் வழக்கம் தோன்றியது.
ஒரு பெண்ணின் இடது கையின் மூன்றாவது விரலில் இது அணிவிக்கப்படுவதற்கான காரணம் மிகப் பழைய கால எகிப்திய கலாசாரத்தை வைத்துத் தான்.
காதலின் நரம்பு இந்த விரலிலிருந்து நேரடியாக இதயத்திற்குச் செல்கிறது என அவர்கள் நம்பினர்.
ஆகவே காதலும் அன்பும் நிலைத்திக்க இந்த விரலில் மோதிரத்தை அணிவிப்பது பழக்கமானது.


மன்மதனின் (அம்பு அல்லது) பாணங்களின் நுனியில் வைரம் பதிந்திருப்பதாகப் பழைய நாகரிகத்தினர் நம்பினர்.
ஒரு வைரம் நம் கையிலே வந்து சேர நான்கு கண்டங்களை அது கடக்க வேண்டி இருக்கிறது. அது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான நிபுணர்கள் அதைச் சரியாக உருவாக்கிய பின்னரே அணியத்தக்க விதத்தில் அது நம்மை வந்து அடைகிறது.
ஆண்களும் பெண்களும் அணிவதற்கான தரமுடைய வைரம் வேறு; தொழிலகத்தில் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப் படும் வைரம் வேறு.
பழைய காலத்தில் வைரம் செயற்கையாக ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது என்ற கருத்து நிலவியது.
ஆனால் அறிவியல் வளர வளர செயற்கையாக வைரத்தை உருவாக்க முடியும் என்ற நிலை உருவானது. 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிந்தடிக் டயமண்ட் எனப்படும் செயற்கை வைரம் உருவாக்கப்பட்டதை அதிகாரபூர்வ அறிவிப்பால் உலகம் உணர்ந்தது.
இந்த நிலையில் நிஜ வைரம் எது, செயற்கை வைரம் எது என்பதை நன்கு அறிந்த பின்னரே அதை வாங்க வேண்டும்.
பழைய செய்யுள் ஒன்று கூறுவது இது : உலகில் ஏராளமான எலுமிச்சை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் சந்தன மரத்தை அரிதாகவே பார்க்க முடியும். அது போல பூமியில் ஏராளமான கற்களைப் பார்க்கிறோம். ஆனால் நல்ல வைரம் கிடைப்பது அரிது. (வஜ்ர மணி துர்லபம்)
சாஸ்திரங்கள் கூறும் பலன்களும் நன்மைகளும் நிஜ வைரத்திற்குத் தான்; போலிக்கு இல்லை.


இந்திய நூல்களுள் அக்னி புராணம், கருட புராணம், ரஸ ஜல நிதி போன்றவை அற்புதமாக நவரத்தினங்களைப் பற்றியும் அதை அணிவதால் ஏற்படும் பலன்களையும் விரித்துரைக்கின்றன.
நல்ல தரமான வைரத்தை அணியும் போது நல்ல பலன்கள் ஏற்படுவது போல தோஷமான வைரத்தை அணிவதால் சொல்லொணாத் துன்பங்கள் ஏற்படுகின்றன.
பழைய காலத்தில் வைர வியாபாரியிடமிருந்து வைரத்தை வாங்கும் போது அதை ஓரிரு நாட்கள் வீட்டில் வைத்திருந்து பார்க்க வியாபாரி அனுமதிப்பது வழக்கம். பூஜை அறையிலோ அல்லது தலையணையின் அடியிலோ வைப்பது வழக்கம். ஓரிரு நாட்களுக்குள் நன்மை வரும் அல்லது தீமை தோன்றும்.
அதைப் பொறுத்து வைரத்தை வாங்குவர். இன்றோ கையில் பணம் . பின்னரே வைரத்தை வெளியில் எடுத்துத் தருவர். (பணத்தைப் பெற்றவர் போலி வைரத்தைத் தந்து விட்டுப் போய்விடக் கூடாது; அதே சமயம் வைரத்தை வாங்கி வீட்டில் வைத்திருப்பவர் அது சரியில்லை என்று சொல்லி அவர் தந்த நிஜ வைரத்தை வைத்துக் கொண்டு போலி வைரம் ஒன்றை விற்பவரிடம் தந்து விடக் கூடாது.)
நல்ல வைரம் என்ன செய்யும் என்பதற்கு வெற்றி பெற்ற மாமன்னர்களின் சரித்திரமே சான்று. தோஷமுள்ள வைரங்கள் என்ன செய்யும் என்பதற்கு துயரமான வரலாறே சான்று.
உலகின் தலையாய வைரங்கள் பத்தைப் பட்டியலிடலாம்.


1) கோஹினூர் வைரம்
2) கலினன் ( The Cullinan)
3) தி ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா (The Star of Africa)
4) தி எக்ஸெல்சியர் (The Excelsior)
5) தி க்ரேட் முகல் (The Great Mogul)
6) தி ஆர்லாஃப் (The Orloff)
7) தி ஐடல்’ஸ் ஐ (The Idol’s Eye)
8) தி ரீஜெண்ட் (The Regent)
9) தி ப்ளூ ஹோப் (The Blue Hope)
10) தி சான்ஸி (The Sancy)
ஒரு நல்ல வைரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கு விடை 4 ‘C’க்களின் அடிப்படையில் தேர்ந்தெடுங்கள் என்பது தான்.
1) கேரட் எடை (Carat Weight)
2) தெளிவு (Clarity)
3) நிறம்(Colour)
4) வெட்டு (Cut)
இந்த நான்கையும் விட முக்கியமான C ஒன்று உண்டு. அது தான் வைரத்தை விற்பனை செய்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் இடையே இருக்கும் நம்பிக்கை – Confidence.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நேருக்கு நேர் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டுச் சரியான பதில்களை நீங்கள் பெற்றால் வைரத்தை வாங்குவது சுலபமான ஒரு விஷயம் ஆகி விடும்.
கேரட் எடை : ஒரு கேரட் என்பது ஒரு கிராமில் ஐந்தில் ஒரு பங்கு. அதாவது 200 மில்லிகிராம். இது இன்னும் 100 பாயிண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. 25 பாயிண்டுகள் கால் கேரட் எனக் குறிப்பிடப்படுகிறது.


தெளிவு : வைரத்தில் உள்ள தோஷங்களை இனம் காண்பது அரிது. தக்க நிபுணர் மட்டுமே அதைக் காண முடியும். வைரத்தில் உள்ள கீறல்கள், கோடுகள், வடுக்கள், கொப்புளங்கள் ஆகியவை இருந்தால் அது நன்மை பயக்காது. குற்றமற்ற தோஷமில்லாத வைரத்தின் கிரேடு GIA எனப்படுகிறது. ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்காவினால் தரச் சான்றிதழ் தரப்பட்டது என்பதையே இது குறிக்கிறது.
நிறம் : வைரம் பலதரப்பட்ட நிறங்களில் கிடைக்கிறது. நிச்சயதார்த்த மோதிரங்களில் மணப்பெண் விரும்பும் டிசைன் மற்றும் நிறம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மஞ்சள், பழுப்பு, நீலம், சாம்பல் போன்ற வண்ணங்களில் வைரம் கிடைக்கிறது.
வெட்டு : பட்டை தீட்டிய வைரத்தின் ஜொலிஜொலிப்பே தனி தான். வெட்டு என்பது நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் வெட்டப்பட்டு பட்டை தீட்டப்படுகிறது. பொதுவாக ஒரு வைரத்தில் 58 வெட்டுக்கள் இருக்கும்.


மேலே கண்ட இந்த நான்கு ‘C’க்கள் பற்றி நம்பிக்கை வாய்ந்த நிபுணரின் கருத்தே இறுதியானது.
அவர் வைரம் பற்றிக் கணிப்பதில் வல்லவராக இருந்தாலும் கூட நமது நலனில் அக்கறையுள்ள நல்லவராகவும் இருப்பது அவசியம்.
ஜோதிட சாஸ்திரத்தில் வைரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. சுக்ரனுக்குரியது வைரம். எண் கணிதத்தில் சுக்ரனின் எண் 6. ஆகவே ஆறுக்கும் வைரத்திற்கும் சம்பந்தம் உண்டு.
ஒரு கேரட் வைரத்தின் விலை என்ன? இதற்கு பதில் சொல்வது கஷ்டம். தரத்தையும் அதன் ஜொலிஜொலிப்பு, வெட்டுக்கள், தோஷமற்ற தன்மை, நிறம் போன்ற அனைத்தையும் வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.


ஒரு கேரட் இயற்கையான வைரம் இரண்டு லட்சத்திலிருந்து இருபது லட்சம் வரை ரூபாய் வரை இருக்கலாம் என்று சொன்னால் பிரமிப்பையே அடைகிறோம்.
அமெரிக்கர்கள் நிச்சயதார்த்த மோதிரம் வாங்க சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள்.
இரண்டு மாத சம்பள விதி என்று ஒன்று இருக்கிறது. அதன் படி தனது வருவாயில் இரண்டு மாத சம்பளத் தொகைக்கு ஈடான விலையில் நிச்சயதார்த்த மோதிரத்தை ஒரு அமெரிக்கர் வாங்குகிறார்.


இப்படி உலகின் பல நாடுகளிலும் அவரவர் வசதிக்குத் தக வைரத்தை பல்வேறு ஆபரணங்களில் பல்வேறு வடிவமைப்பில் செய்து அணிகின்றனர்.
காதலின் பரிசாக ஒரு வைர நகையை மனைவிக்கோ அல்லது காதலிக்கோ வாங்கிக் கொடுத்து விட்டால் அதில் தோன்றும் மகிச்சியே தனி தானே!


அடுத்து வைரங்களின் வரலாற்றைத் தொடர்வோம்.


சோம லதையின் அபூர்வ மருத்துவ குணங்கள்! (Post No.7070)

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-33 am
Post No. 7070

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Jambunathan’s Translation
Griffith’s Tanslation

MYSTERIOUS MEDICINAL PROPERTIES OF THE SOMA PLANT IN RIG VEDA (Post No.7069)

WRITTEN by London swaminathan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-19
Post No. 7069

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்! (Post No.7068)

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am
Post No. 7068

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

7-10-2019 சரஸ்வதி பூஜை. இதையொட்டி 6-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

ச.நாகராஜன்

கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் யார்?

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,

      தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்,

உய்வம் என்ற கருத்துடையோர்கள்

     உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்

செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர்

      செம்மை நாடிப் பணிந்திடும் தெய்வம்

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்

     கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – சரஸ்வதியே தான்.

‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்ற கவிதையில் இப்படிக் கூறும் மஹாகவி பாரதியார் கலைமகளைக் கொண்டாடிப் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.

‘ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாளைத்’ தொழுதால் என்னென்ன பெறலாம் என்று அவரே பட்டியலிட்டுத் தருகிறார்.

தான் என்னும் பேய் கெடும்.

பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படும்.

வான் என்னும் ஒளி பெறலாம்.

நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடும்.

ஊனங்கள் போக்கிடலாம்.

நல்ல ஊக்கமும் பெருமையும் பெறலாம்.

இதை விட வேறு என்ன வேண்டும், ஒரு மனித வாழ்க்கையில்?

அவ்ள் எங்கிருப்பாள் என்பதையும் அவரே அருமையாக விளக்கி விடுகிறார்:

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.

கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்,

வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்.

முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின் உள் பொருளில் இருப்பாள்.

சாஸ்த்ர புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம் என  இலக்கியங்களில் சஞ்சரிக்கும் அவளைப் புகழ்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம்.

கவிஞர் தெய்வம் என்று பாரதியார் கூறியதை அப்படியே பலர் வாழ்க்கையிலும் கண் கூடாகக் காணலாம்.

காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

ஸ்ரீ வைகுண்டத்திலே பிறந்த குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. திருச்செந்தூர் முருகனைத் தொழ அவர் நாவிலிருந்து கவி மழை அருவியெனப் பொழியத் தொடங்கியது. கந்தர் கலி வெண்பாவைப் பாடினார்.

பின்னர் தல யாத்திரை மேற்கொண்டு வட தேசம் சென்று காசியை அடைந்தார். அங்கு ஒரு மடத்தை நிறுவி இறைப்பணி செய்ய நினைத்தார். அதற்கென காசியை ஆண்ட பாதுஷாவைச் சந்திக்க விரும்பினார்.

பாதுஷாவிற்கோ ஹிந்துஸ்தானி மொழி மட்டுமே தான் தெரியும்.

குமரகுருபரர் கலைமகளை வேண்டி மனமுருகிப் பாடினார். பத்துப் பாடல்களைக் கொண்ட சகலகலாவல்லி மாலை மலர்ந்தது.

சகலகலாவல்லி ஆயிற்றே, அவள் அருளால், ஒரு கணத்தில் ஹிந்துஸ்தானி பாஷையில் வல்லவரானார் குமரகுருபரர்.

பாதுஷாவின் அவையில் நுழைந்தார். அரியாசனத்தில் அமரிந்திருந்த பாதுஷா அவரை நிற்க வைத்துப் பேசுவதைக் கண்ட குமரகுருபரர் அரியாசனத்திற்கு நிகரான சரியாசனமாக ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் மேலேறி அமர்ந்தார்.

பாதுஷா திகைத்தார்; பிரமித்தார். அவரது பல சந்தேகங்களைத் தீர்த்த குமரகுருபரர் அவருக்கும் அருள் பாலித்தார்.

பாதுஷா அவரது இறைப்பணிக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். காசித் திருத்தலத்தில் காசி மடம் உதித்தது.

 தென்னாடு வந்த அவர் திருப்பனந்தாளில் மடத்தை நிறுவினார்; அது இப்போதும் செய்யும் இறைத்தொண்டை அனைவரும் அறிவர்.

திருமலை நாயக்கரின் அரசவையிலே குமரகுருபரர் ஆற்றிய அற்புதங்கள் பல.

‘பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே’

என்று அவர் சகல கலாவல்லியைத் தொழுத பாடல் உள்ளிட்ட சகல கலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் தினமும் ஓதினால் அன்னை கலைமகள் அருளைப் பெறலாம் என்பது திண்ணம்.

சரஸ்வதி தேவியைத் துதித்தால் அவள் அருளால் ‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகும்’ என்பது அவரது சத்திய வாக்கு..

கம்பரோ ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’யைத் துதித்தால் ‘கல்லும் சொல்லாதோ கவி’ என்று கேட்கிறார்.

30 பாடல்கள் கொண்ட சரஸ்வதி அந்தாதியைப் பாடிய கம்பர் கலைமகளைத் துதித்தால் எதையும் ‘துணிந்து சாதிக்கலாம்’ என்ற பெரிய ரகசியத்தைப் பாடலிலேயே கூறுகிறார்.

அவர் பத்தாயிரம் பாடல்களால் இராமாயணம் பாடித் துணிந்து சாதித்தது சரஸ்வதி அருளாலேயே என்பது இதனால் பெறப்படுகிறது.

தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் உள்ளது.

ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் தமிழ்ப் புலவர் இங்கு வழிபட்டு அன்னையின் அருளைப் பெற்று பெரும் கவிஞராகி ‘கவி ராட்சதன்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார். அவரே பூந்தோட்டம் என்னும் ஊரில் சரஸ்வதிக்குக் கோவில் அமைத்தார்; அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வெண்ணிற ஆடையுடன் வெண்தாமரையில் பத்மாசனத்தில் சரஸ்வதி தேவி வீற்றிருக்க அவர் வலது கீழ் கையில் சின் முத்திரை உள்ளது. இடது கையில் புத்தகமுள்ளது. வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது மேல் கையில் அமிர்தகலசமும் உள்ளது.

பழம் பெரும் புனித நூலான ரிக் வேதத்தில் சரஸ்வதியைப் பற்றிய் பல குறிப்புகளைக் காணலாம்.

யாக்ஞவல்க்யர் என்ற பெரும் முனிவர் சரஸ்வதியைத் துதிக்க அவர் முன் தோன்றி ஓம் என்பதைச் சொல்லி அனைத்து அட்சரங்களையும் சரஸ்வதி அருளினாள் என மஹாபாரதம் சாந்தி பர்வம் தெரிவிக்கிறது.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

சரஸ் என்றால் நீர். ஆக சரஸ்வதி என்பது தெய்வீக நதியான சரஸ்வதி நதியைக் குறிக்கிறது. அத்துடன் மட்டுமன்றி பெரும் நீர்நிலைகளையும் குறிக்கிறது.

இன்னொரு பொருள் சரஸ் என்றால் வாக்கு அல்லது பேச்சு;

வதி என்றால் தரித்திருப்பவள். ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு வாக்தேவி அல்லது வாணி என்ற பொருளும் ஏற்படுகிறது.

ஸ்வாமி சின்மயாநந்தர், ‘ஸ்வ’ என்றால் ஒருவரின் ஆன்மா என்றும் ‘சார’ என்றால் சாரம் என்றும் அர்த்தம் கூறி சரஸ்வதி என்றால் ஒருவரின் ஆன்மாவின் சாரத்தைத் தருபவள் (She who gives the essence (Saara) of our own Self (Sva)) என்று விளக்குகிறார்.

சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம். சரஸ்வதியின் பூஜைக்கு உகந்த மலர்கள் வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்கள்.

சில்ப சாஸ்திரம் 12 விதமான சரஸ்வதி சிற்பங்களை விளக்குகிறது; 1) வாக் சரஸ்வதி 2) வித்யா சரஸ்வதி 3) கமலா 4) ஜயா 5) விஜயா 6) சாரங்கி 7) தம்புரி  8) நாரதி 9) சர்வ மங்களா 10)  வித்யா தாரி 11) சர்வ வித்யா 12) சாரதா

சரஸ்வதி தேவியின் கீழ்க்கண்ட 12 பெயர்களை புராணங்கள் விவரிக்கின்றன.

  1. பாரதி 2) சரஸ்வதி 3) சாரதா தேவி 4) ஹம்ஸவாஹினி 5) ஜகதி க்யாதா 6) வாகீஸ்வரி 7) குமுதி 8) ப்ரஹ்மசாரிணி 9) புத்திதாத்ரி 10 ) வரதாயினி 11) சந்த்ரகாந்தி 12) புவனேஸ்வரி

தேவியின் ஆயிரம் திரு நாமங்களை சரஸ்வதி சஹஸ்ரநாமமும் சரஸ்வதி அஷ்டோத்திரம் தேவியின் 108 திருநாமங்களையும் தருகின்றன.

சரஸ்வதிக்கு ஸ்ரீ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதனால் அனைத்தும் அருள்பவள் சரஸ்வதி என்பது பெறப்படுகிறது.

 சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டகம், சரஸ்வதி சூக்தம், சரஸ்வதி கவசம் மற்றும் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் ஏராளம் உள்ளன. இவற்றால் சரஸ்வதி தேவியை வழிபடலாம்; சுடர் விடும் அறிவைப் பெறலாம்.

பாரத நாடெங்கும் சரஸ்வதி தேவிக்கான ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பித் தகுந்த சிலவற்றைப் பார்க்கலாம்.

பெஹோவா : ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இதன் பழைய காலப் பெயர் ப்ரூதக்.

மன்னன் ப்ருது, தான் இறக்கும் சமயம் சரஸ்வதி நதிக் கரையில் இறக்க விரும்பியதால் அவனது மகன் அவரை அங்கு அழைத்துச் சென்றான். அவர் இறந்தவுடன் அவரது சிரார்த்ததையும் அங்கேயே செய்தான்.

விஸ்வாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். இங்குள்ள சரஸ்வதி தேவியின் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

மஹாபாரத காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த நகர் இது.

 பிலானியில் உள்ள சரஸ்வதி ஆலயம் : 1959ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஜி.டி. பிர்லாவினால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயம் 70 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரா : உத்தரபிரதேசத்தில் மதுரா நகருக்கு மேற்கே ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது. மஹாவித்யா தேவி ஆலயம் என அழைக்கப்படும் இதன் அருகில் சரஸ்வதி குண்ட் என்ற குளமும் உள்ளது.

சிருங்கேரியில் உள்ள பெருமை மிக்க சாரதா பீடம் விளக்க முடியா மஹிமை கொண்ட சரஸ்வதியின் பீடம்.

இன்னும் குஜராத், மஹராஷ்டிரம், பீஹார், காஷ்மீர், கர்நாடகம், மத்ய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கெனவே பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.

சரஸ்வதி தேவியை வசந்த ருதுவில் மாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் பஞ்சமியில் நாடெங்கும் கோலகலமாகக் கொண்டாடுகின்றனர். இது சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக கருதப்படுகிறது.

ஒரிஸாவில் இந்த தினம் சரஸ்வதி பூஜை தினமாகவும் ஆந்திர பிரதேச்த்தில் ஸ்ரீ பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி தேவியின் சிறப்பு வழிபாடு நவராத்ரியில் அமைகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் பண்டிகை நவராத்ரி.

புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆக மூன்று தெய்வங்களும் மூன்று நாட்கள் வீதம் முறையே வழிபடப்பட்டு ஒன்பதாம் நாளான நவமி அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

துர்க்கா தேவி மகிஷாசுரனை எட்டு நாட்கள் போரிட்டு ஒன்பதாம் நாளன்று நவமியில் வதம் செய்தாள்.

அடுத்த நாள் வெற்றிக்கான விஜய தசமி நாளாக அமைகிறது

இசை, நாடகம் உள்ளிட்ட 64 கலையைப் பயில்பவர்களும் தமக்கு உரிய சாதனங்களுடன் ஆய கலைகள் அறுபத்திநான்கினுக்கும் அதி தேவதையான சரஸ்வதியை வழிபடுகின்றனர்.

 விஜய தசமித் திருநாளை, அடுத்த மேல் நிலையை அடைவதற்கான துவக்க நாளாகக் கொள்கின்றனர்.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே என வாக் தேவியைத் துதித்து வளம் பெறுவோமாக!    

***

சூரியகாந்திச் செடிகளும் வள்ளுவர் குறளும் (Post No.7067)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-23 am
Post No. 7067

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கழுதை வைத்தியம்! (Post No.7066)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-56 am
Post No. 7066

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Egyptian Beauty Cleopatra

CHEMISTRY IN THE VEDAS (Post No.7065)

 WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 6 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 19-38
Post No. 7065

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

உள்ளம் உருகுதையா, முருகையா; துருவமும் உருகுதையா! (Post No.7064)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 6 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 17-31
Post No. 7064

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

subham

இராமாயணங்களின் பட்டியல்! (Post No7063)

RAMAYANA IN ONE STONE, ELLORA CAVES


 WRITTEN by S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 6 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-55
Post No. 7063

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

த்விபத ராமாயணம் – தெலுங்கில் உள்ளது.

இந்த ராமாயணப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

தொகுப்பின் இன்னும் பெருகும்!

RAMAYANA SCENE IN THAILAND