குகனுடன் ஐவரானோம் ‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43
உத்தரபிரதேசம் ப்ரயாக்ராஜில் உள்ள 10 ஏக்கர் பூங்காவில் நிஷாத்ராஜைக் கட்டிப் பிடிக்கும் ராமரின் 51 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் ஸ்ரீ ராம்
LORD SRI RAMA HUGGING HEAD OF HUNTERS GUHA THE STATUE IN PRAYAGRAJ S 51 FEET HIGH. IT IS IN A BIG PARK.
SEE THE SATELLITE WITH YOUR OWN EYES
International Space Station to Be Visible Across India This Week
Skywatchers can spot the ISS with the naked eye from July 7–12 during twilight ஹௌர்ஸ்.
Stargazers in India are in for a treat this week as the International Space Station (ISS) will be visible across the country on several occasions from July 7 to July 12. The ISS, a marvel of global collaboration in space, will appear as a bright, fast-moving star streaking across the sky during early mornings and twilight hours.
POSTED BY LONDON SWAMINATHAN ON 8-7-2025;LIFTED FROM THE COMMUNE MAGAZINE.
On 30 June 2025, during a casual exploration on social media, as I came across this interesting post – the DMK Youth Wing had posted a picture of Chanakya with the caption “#DidYouKnow? The ‘Arthashastra’ written by Chanakya states that those who criticize religious superstitions should be labeled as ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”
The image said, “The ‘Arthashastra’ written by Chanakya states that ‘Kings should always keep the public stupid. For that, they should spread religious superstitions. Those who criticize this should be accused of being ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”
I was prompted to see if Acharya Chanakya really had said such a thing.
As I had not come across such strong statements against atheism in any traditional text in Sanskrit, I dug into the Arthashastra again.
What Is Arthashastra?
Arthashastra is a comprehensive traditional text authored by Chanakya. It deals with the subject of the monarch, their assembly, the subjects, wealth, and governance of the kingdom. Chanakya clearly cites earlier authors or schools of thought making the Arthashastra an important example of the legacy of intellectual heritage of ancient India. The Arthashastra and its contents were referred to by later texts and developed in their own way.
What Does The Text Actually Say?
Chanakya starts the text first describing the subjects that a monarch must be well acquainted with as part of the eternal discipline a Monarch must have – Anvikshiki (logical philosophy, metaphysics), Trayi (the three Vedas), Varta (agriculture, cattle breeding and trade), and Dandaniti (science of government). He mentions the differences in opinions too. Check out this table to understand it better.
Tabel 1: The accepted subjects for the monarch’s attention according to different schools of thought
Anvikshiki, according to Chanakya, comprises the subjects of Sankhya, Yoga, and Lokayata. The Sankhya philosophical tradition forms the philosophical basis of which the Yoga philosophical tradition is the practical implementation. However, Lokayata is the Nastika or the Charvaka philosophical tradition. This Lokayata tradition looked at only those which could be perceived by the sense organs as real and anything else as unreal. Direct perception is given importance. It also does not consider imperceptible concepts like God or Devas and processes such as accumulation and fructification of Punyakarmaphala (result of meritorious action) and Papa (result of unmeritorious action) as valid. Oftentimes, this tradition is called Atheism in English.
The Monarch learns Dharma (righteousness) and Adharma (non-righteousness) from Trayi, Artha (wealth) and Anartha (non-wealth) from Varta, and Naya (good governance) and Apanaya (bad governance) from Dandaniti (science of government). Thus, Chanakya’s stance is that only after learning all these four can a Monarch learn both Dharma and Artha properly so as to properly govern the kingdom.
In fact, Chanakya is all in praise of Anvikshiki because it keeps the mind steady and firm and bestows excellence of foresight, speech, and action. This is why the chapter right after introducing the contents of the Arthashastra is partly called “Anvikshikisthapana” (establishment of Anvikshiki) and the first word of this chapter is Anvikshiki.
Amongst the dozen or so existing commentaries to the Arthashastra, let us take just two.
In the Vaidikasiddhantasamrakshini, one of the commentaries to the Arthashastra, Anvikshiki, also called Hetuvidya (the science of causation, i.e. logic), helps to understand reality as it is, includes the proper analysis of means of valid knowledge, and comprises Nyaya, Vaisheshika, and Lokayata philosophical traditions.
The Jayamangalakrodapatra, another commentary to the Arthashastra, says that Anvikshiki helps in understanding oneself and also the wisdom associated with cause and effect.
Now there is a question that arises about this subject of study that has been praised as a fundamental academic eligibility for a Monarch according to a key text on governance in Sanathana Dharma – Why is the association of Nastika/Charvaka/Atheism considered against Dharma or the society?
Perhaps it is our own ignorance about the Arthashastra and associated literature that has pushed us to this state of consuming secondary information to sow doubts and malice within our minds about our heritage! Perhaps Chanakya’s own name can be used to dissuade the ignorant people of his country from studying his work!
Abhinav Rajaputra is an Indology researcher, educator, and a traditional student practitioner of Yoga.
Picture shows dead Malaiyadwaja Pandya returning to earh in Space Shuttle.மலையத்வஜனை அழைத்த படலம், அவர் விண்ணுலகத்திலிருந்து ஸ்பேஸிஷட்டிலில் ஸ் வந்து செல்லும் காட்சி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏழுவகை பருவ மங்கையர்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) பயன்படுத்தும் மேலும் சில உத்திகளைக் காண்போம்.
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது, அழகான பேதை- பெதும்பை-மங்கை- மடந்தை- அரிவை- தெரிவை- பேரிளம் என்னும் ஏழுவகை பருவ மங்கையர்களெல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு பத்து தினங்களுக்கு முன்னே வீடுகள் தோறும் போய் அழைத்துக் கொண்டு விடியற்காலத்திலே தீர்த்தத்தில் போய் ஸ்நானம் செய்வார்கள் . அவர்களைக்கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார்.
****
சிவன் தலையில் மூன்றாம் பிறை நிலவு
தெள்ளிய மூன்றாம் பிறையைத் தரித்த சடாபாரத்தையுடைய கடவுளானவர் அன்பில்லாதவர்களேயானாலும் தன்னைப் பாடினவர்களிடத்தில் இரக்கஞ்செய்வார் என்று நினைத்து எண்ணுதல் பெற,
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க — என்று — சிவபுராணம்– பாடினார் . இது மண்சுமந்த படலத்தில் வருகிறது .
*****
இவன்தான் வந்தி என்பவளுடைய கூலியாள் என்று காட்டிவிட பாண்டியன் கண்டு கோபித்துத் தன் கையிலே பொற்பிரம்பு(Golden Stick)கொண்டு அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்ட கடவுள் முதுகிலே ஓங்கி அடித்தான்.
இந்த அண்டம் என்ற சொல்லுக்கு முட்டை மற்றும் கோளமான என்ற பொருள் உண்டு. திருவாசகத்திலும் அதற்கு முந்தைய நூல்களிலும் இந்தச் சொற்பிரயோகத்தைக் காணலாம் ; பூமி மட்டுமல்ல ; அண்ட சராசரங்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்று இந்துக்கள் முதல் முதலில் கண்டுபிடித்ததை இது காட்டுகிறது..
****
கடற்கரையில் மீன்வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள் பற்றி வலை வீசின படலத்தில் பரஞ்சோதி எழுதுகிறார் ,
பின்னும் அந்த நுளைப் பெண்கள் விலை கூறி விற்கிற கெண்டை மீனுக்கு நேராக அவர்கள் கண்களே பிறழ்ந்து விலையுயர்த்தவும் , பேசுகிற வாய் வாசமும் கூந்தலில் முடித்த தாழம்பூ வாசமும் மீனின் நாற்றத்தை ஒழித்து நல்ல மணம் வீசவும்……….
****
நால்வகைக் சொற்கள் பற்றிய உரையில் தவறு
நாமகள்
பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.
(பொருள்- குற்றநீங்கிய, பெயர் –வினை –இடை –உரி என்னும் நான்கு
வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து, நிலல் பெற வைத்து, எல்லாத்
திக்குகளினுஞ் சென்று, கமழ்ந்து, கூசை ஒழுகப்பெற்று, அழகுபெற, அகன்ற
பெரிய அன்பாகிய நாரினால், பாமாலையாகச் செய்து, மூன்று கண்களையுடைய
நால்வகைச் சொற்கள் என்பதற்கு உரைகாரர்கள் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல் என்று உரை எழுதியுள்ளனர். இது தவறு என்று நான் கருதுகிறேன் ஏனெனில் தொல்காப்பியம் சொல்லும் நான் வகைச் சொற்கள் வேறு (அடியிற் காண்க).
உண்மையில் இது சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள நான்குவகைச் சொற்கள் ஆகும் . வாதாபி கணபதிம் பாடலில் முத்து சுவாமி தீட்சிதரும் இதைப்படியுள்ளார் பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்…….
அதாவது பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
கற்பகச் சோலையின் கிளிகளுக் கெல்லாம், குற்றம் நீங்கக் கற்பிக்கும் .
இது ஒரு நல்லகற்பனைச் சித்திரம் ; பிராமணச் சிறுவர்களிடம் கிளிகள் வேதம் கற்றன; அவைகளிடமிருந்து பூவைப் பறவைகள கற்றன ; அவைகள் தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள கிளிகளுக்கு வேதம் கற்பித்தன !
*****
பாண்டியன் திருநகரம் கண்ட படலம், (Madurai City)
நாத்தீகம் பேசுவோர்
மறையவர் வீதி
ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய்
முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.
ஆத்திகர்கள் உண்டு என்று சொல்லுகின்ற, அறம் தலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர்
இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின், நாவினை அறுக்கின்ற வாளாக, இறைவன் அருளிய மறையீன் முடிவை
உணர்ந்து, மனந் தெளிந்து தூய்மையுடையராய், மூன்று தீ வேள்வியை முடிக்கும், மறையவரின்
தேசீய கீதத்தைக் கேலி செய்தால் PARODY நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறுகிறதே ; அப்படியானால் சண கண மண என்று எழுதுவோர் மீது கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது ?
இது லண்டன் சுவாமிநாதன் கேள்வி .
என்னிடமுள்ள 2002ஆம் ஆண்டு பாட புஸ்தகத்தில் தேசீய கீதம் முறையாக எழுதப்பட்டுள்ளது.
I WAS GUEST OF HONOUR AT HENDON TAMIL SCHOOL IN LONDON ON 5TH JULY 2025 AND GAVE PRIZES TO CHILDREN AND TEENANGERS. I PRESENTED ALSO TEN OF MY BOOKS TO THE SCHOOL OUT OF 148 BOOKS WRITTEN BY ME.
MR SIVARAJA, CHAIRMN, THANKED ME SPECIALLY FOR SUPPORTING THE TAMIL SCHOOL FOR OVER TWENTY YEARS. IN THE LAST TWO DECADES THIS IS MY SECOND TIME SPEAKING AT THE ANNIVERSAY EVENTS.
HERE ARE SOME PICTURES,
–SUBHAM–
LONDON SWAMINATHAN, DISTRIBUTING PRIZES, TAMIL STUDENTS , HENDON TAMIL SCHOLL, GUEST OF HONOUR
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விளங்கும் பிறை சடைமேல் உடை விகிர்தன்வியலூரை,
தளம் கொண்டது ஓர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்குஇல் – தமிழ் பரவித்தொழும் அடியார் அவர்,என்றும்
விளங்கும் புகழ் அதனோடு,உயர்விண்ணும் (ம்) உடையாரே.
பல பாடல்களில் அவர் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் என்றும் தமிழ் விரகன் ன்றும் அழைத்துக்கொள்கிறார்.
****
தமிழுக்கு எத்தனை பெயர்கள் ? என்று பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது ஞானசம்பந்தரின் முதல் திருமுறையை மீண்டும் படிக்கத் துவங்கியபோது அவர் போடும் புதிர்களைக் கண்டேன் . நமது காலத்தில் தமிழையே மூச்சாகக்கொண்டு வாழ்ந்தவர் பாரதியார்; ஆனால் அவருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானசம்பந்தருக்கும் தமிழே மூச்சு என்று சுந்தரமூர்த்தி நாயனார் சொன்னதை நாம் அறிவோம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று அவர் புகழ்ந்தார் .
புதிர்கள் என்ன ?
தேவார முதல் திருமுறையில் ஞானசம்பந்தர் வண்டமிழ் , தேன் நேர் ஆர் தமிழ், இன்றமிழ் , ஞானத்தமிழ் , தமிழ் மாலை என்றெல்லாம் பல பதிகங்களில் சொல்லிவிட்டு கலை மலி தமிழ் , படமலி தமிழ் என்று இரண்டு பதிகங்களில் சொல்கிறார்
இவற்றில் தமிழ் மாலை என்பதை ஆண்டாளும் முப்பதாவது திருப்பாவையில் செப்பியதை எல்லோரும் அறிவார்கள் .
சம்பந்தருக்கு சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர் தண்ணார் தமிழ் (அளிக்கும் தென் பாண்டி நாட்டானே) என்று சொன்னார் .
சம்பந்தர் சொன்ன தேனுக்கு நிகரான தமிழ் என்றால் புரிகிறது; கலை மலி தமிழ் என்று அவர் என் சொன்னார் ? ஏனெனில் தமிழ் மொழியில் ஆடல் பாடல் சோதிடக்கலைகள் பற்றி நிறைய இருப்பது அவருக்குத் தெரியும் ; அவருக்குப்பின்னர் வந்த வரத்தருவா ர் போன்றோர் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொன்னதால் நமக்கு 64 கலைகள் பற்றித் தமிழர்களும் அறிந்திருந்தது தெரிகிறது. இந்த 64 கலைகளை பெண்கள் படிக்க வேண்டிய சிலபஸில் காம சூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கிறார் ; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கரிகாற் சோழன் அவைக்கள புலவர் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைப் பார்த்து எங்கள் கரிகாற்சோழனுக்கு 64 கலைகள் தெரியும்; உங்களுக்குத் பரதக் கலை தெரியுமா? என்று சவால் விட்டவுடன் அவர் இறைவனிடம் மன்றாடி வெள்ளியம்பலத்தில் மன்றாடியவனை, கால் மாறி ஆட வைத்ததாக பரஞ்சோதியார் எழுதுகிறார் ஆகவே கலை மலி தமிழ் என்பது பொருத்தமே.
தேவாரத்தில் முதல் திருமுறையில் சம்பந்தர் பயன்படுத்திய மேலும் சில சொற்கள்:-
பல ஓசைத் தமிழ் – வல்லோசை,மெல்லோசை,இடையோசை முதலிய வேறுபாடுகளை உடைய தமிழ்
குன்றாத் தமிழ்- அருள் அல்லது மதிப்பு என்றும் குறையாத மொழி.
அது என்ன படமலி தமிழ் ?
இதற்குப் பொருள் எழுதியோர், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசுகின்றனர்
திருவிடைமருதூர் பதிகத்தில் வரும் படம் மலி தமிழ் என்பதற்கு தருமபுரம் வெளியிட்ட பதிப்பில் படம் மலி தமிழ்= படமெடுத்தாற்போலச் சிறந்த தமிழ் என்று இருக்கிறது .
இன்று நான் ஒரு மாணவனிடம் சொன்னால் சார், எந்த சினிமாப்படம் போல என்று சொல்லுங்கள் சார்? என்பான். ஒரு பெரியவரிடம் சொன்னால் , பாம்பு படம் எடுத்தாற்போல அ ழகானதா , ஐயா? என்று கேட்பார். .பத்திரிகையாரிடம் சொன்னால் இந்தப் படம் எந்தப் போட்டோவைப் போல? என்று கேட்பார் ஒரு கவிஞரிடம் சொன்னால் சித்திரம் போல சொற்சித்திரங்கள் நிறைந்த மொழி தமிழ் என்பார்.
வர்த்தமானர் தேவாரப்பதிப்பில் இச்சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை. சொல் ஓவியமாக’ என்று சைவம் இணையதளத்தில் உள்ளது .With wordy pictures என்று ஆங்கிலத்தில் உள்ளது. ‘ அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
****
இசை மலி தமிழ் – இசை மலிந்தபாடல்கள் உள்ள மொழி
செந்தமிழ் – செம்மையான மொழி ; சிறந்த மொழி
வண்டமிழ் = வளமான சொற்களுடைய மொழி
ஒண்டமிழ் – ஒளி போல பிரகாசமான
தண்டமிழ் – குளிர்ச்சி மிக்க
தனித்தமிழ் – ஒப்பற்ற ,உவமை சொல்ல முடியாத
தெய்வத்தமிழ், ஞானத்தமிழ் – அருட்கவிகள் உடைய பாக்கள் நிறைந்த
இன்றமிழ் – இனிய , என்றுமுள்ள தமிழ்
கன்னித்தமிழ் – என்றும் புதுமை ,இளமையோடு திகழும்
****
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? My Old Article
எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.
தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?
தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.
ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!
இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே
திரு ஞான சம்பந்தர் 1-117-12
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் ௨௧௮௨
திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
முதல் திருமுறை
அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
முதல் திருமுறை, சம்பந்தர்
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)
செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல் உலகத்து
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
………….. ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)
பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்
செந்தமிழ்த்திறம் வல்லிரோ?
அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)தென் தமிழ்
பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.
—Subham—
Tags- தமிழுக்கு எத்தனை பெயர்கள் , தமிழ் மொழி , பெயர்கள், சம்பந்தர், புதிர், படமலி தமிழ்