ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 1-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நமது அன்றாட வாழ்க்கையில்
பிளாஸ்டிக் புகுந்து விட்டது.
அன்றாடம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்வதற்கான பாக்ஸ்,
நாம் பருகும் நீரை வைத்திருக்கும் பாட்டில், அன்றாட தானியம் மற்றும் இதர பொருள்களை
பாக்கிங் செய்ய உபயோகப்படுத்தப்படும் பைகள், பழங்கள், பூ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை
வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என இப்படி பட்டியலிட்டால் பிளாஸ்டிக்
எப்படி நமது வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்.
இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில் மதம், நாடு, இனம், பால்,
அந்தஸ்து, வயது என்ற பேதமே இல்லை. எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். ஆனால் இதனால்
நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நமது உடல்நலம்
இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
டாக்டர் சௌம்யா பிரசாத் (Dr Soumya Prasad) என்னும்
Ecologist – சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் இப்போதே
கலந்து விட்டது என்று கூறுகிறார்.
எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் பிபிஏ- BPA, தாலேட் –
Phthalates போன்ற நச்சுப்பொருள்கள் அடங்கிய அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருள்களைக்
கொண்டுள்ளன. இந்தக் கூட்டுப்பொருள்கள் பல்வேறு வண்ணங்களுக்காகவும், மிருதுத் தன்மை
மற்றும் வலு அடையவும், transparency எனப்படும் ஒளிபுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் பளிச்சென்ற வண்ணத்துடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இருக்கிறது
என்றால் அதில் அதிக நச்சுடைய கூட்டுப்பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அது மட்டுமல்ல, பிஸ்கட், ஜூஸ், பருகும் நீர் ஆகியவை சிறிய அளவில் சிறிய பாக்கிங் வடிவத்தில்
வருகிறது எனில் அதில் அதிக நச்சுத்தன்மை அடங்கி இருக்கிறது என்று பொருள். தாலேட் என்னும்
இரசாயனப் பொருள் உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக்(testosterone levels) குறைக்கும்; இதன் விளவாக
விந்து எண்ணிக்கையும் (sperm count) குறையும்.
ஆகவே
பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம். கடைகளுக்குச் செல்லும் போது பேப்பரினால் ஆன அல்லது துணிகளினால் ஆன நமது பைகளைக்
கூடவே கொண்டு செல்வோம்.
உடல் நலம் காப்போம்; அத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் காப்போமாக!
மார்ச்
23, 2019
அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு
நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள்
இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு
விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?
30+ கோவில்கள்
செஞ்சி
கோட்டை
கல்லணை
சகுந்தலா
ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்
சித்தர்
, முனிவர் சமாதிகள்
புதிய
அதிசயங்கள்
இந்த
முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:
1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்
2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney
Stone
நோய் நீக்கும்
3.நமது விதியைத் திருத்தி (Fate
Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்
4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை
5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell
Door)
6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்
9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ
மகர யாழ்
10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை
500 புகைப்படங்கள்
இவை
ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.
டாக்டர்
நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!
லண்டனுக்கு
விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம்
செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத்
தகவலை (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு
ராகம் (திராவிடி), ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்(மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள் பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண
நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும்தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத
நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.
தி.
மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு
தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப்
பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில்
சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச்
செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று
மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.
டாக்டர்
நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில்
மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.
ஒவ்வொரு
கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்
கதவு
ஆராய்ச்சி
கோவில்களின்
கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி
முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான்
ஆண்டாளின் திருப்பாவை வரிகளின் முழுப்
பொருளும் விளங்கியது.
எல்லாக்
கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.
திருப்பாவைபாடல் 9
துாமணி
மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
துாபம்
கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான்
மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
பார்த்த
கோவில்களைப் பார்ப்பதில்லை
குலதெய்வம்
வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும்
ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய
விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.
படங்கள்
தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!
இந்த
முறை நான் சென்ற ஊர்கள்
1.சென்னை
2.திண்டிவனம்
3.மலைவையாவூர் கோவில்
4.உத்தரமேரூர் கோவில்
5.செஞ்சி கோட்டை
6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
7.சிறுவாச்சூர் காளி கோவில்
8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.
9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர்
கோவில்
எங்கெங்கு
வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள்
இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours
); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ
கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.
சிவன்
கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
சுருங்கச்சொல்லின்
திரை போடும் நேரம்,
கோவில்
திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்
எச்சரிக்கை
2
செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன
தொல்பொருட்துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை
பத்து மணிக்குத் திறப்பார்கள்;
மாலை
4 மணிக்கு மூடிவிடுவார்கள். .
ஆகையால்
முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.
I travelled
to Tamil Nadu (India) on 23rd March 2019 and spent 11 days there . I
was back in London this afternoon. I visited over 30 temples, Sidddhar Samadhis
and Museums in the following towns. Each temple gave me some interesting new
information. Some puzzles were solved during this visit. I will write about
each temple, samadhi, museum separately with pictures. Here are some bullet
points to kindle your interest.
During this
visit I made it a point to take pictures of huge temple doors. No one has done
research on temple doors.
Tamil saint
Andal sang in Thiruppavai about the bell door, i.e .door with bells. Only when I
saw bell doors in a few temples I understood the meaning and significance of
those words.
In Siruvachur
I saw ghost busing platform. Those who are possessed by evil spirits are cured
when they stand on it.
In Oottathur
I saw stone Nataraja. In other temples the Nataraja idol is made up of metals.
Though we have a huge beautiful and smiling Nataraja in Gangai konda chozapuram
it is only a decorative sculpture on the outer wall. Devotees believe this stone
Nataraja will cure kidney stones.
In Thiruppattur
I saw Brahma who will rewrite your fate giving you benefits. So devotees came
with the horoscopes of their near and near.
In Srirangam
I saw two golden lizards carved on the roof. There was no explanation. But when
I visited Kanchipuram I saw a big Queue for seeing golden lizards! I will give
you the full story.
At Nerur I
had the darshan of Sadashiva Brahmendra Samadhi, who did miracles.
In Chennai I
visited a Samadhi of a Siddhar (Tamil Mystic) who did meditation by splitting
his bodies into nine parts. The same story is told about Kuzandaiyananda Swami
of Madurai and Pandrimala Swami of Dindigul.
In
Kacnhipuram I visited Sakunthla Jagannatham Museum where I saw Makara yaz (Fish
shaped Lyre).
Last night I
met Dr R Nagaswamy, renowned archaeologist and historian. He gave me
interesting information about Tolkppaiam, Ragas from different Desas/states and
Why Carnatic music is called Karnatic music.
There are
more surprises ; please wait for the articles:
Following are
the places I visited in March, 2019:-
பாக்யா 15-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள
ஒன்பதாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை – அத்தியாயம் எண் 418
2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2
ச.நாகராஜன்
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான
விஞ்ஞான விநோதங்களை அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 2018இல் அவர்கள் கண்ட விநோதங்களின்
தொடர்ச்சி இது:
வெப்ப அலையால் வேக வைக்கப்பட்ட வௌவால்கள்!
ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே போகிறது. 2018, ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் வெப்பம் 111.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. அதாவது 44.2 டிகிரி செல்ஸியஸ்! பறந்து கொண்டே இருந்த 200 வௌவால்கள் இந்த வெப்பத்தால் ஆகாயத்திலேயே உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டு தொபேரென்று தரையில் இறந்து வீழ்ந்தன. கேட் ரையான் என்ற பெண் விஞ்ஞானி, “இவை உயிருடன் வறுக்கப்பட்டன. அவற்றின் மூளையை வெப்பம் தாக்கவே அவைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறந்து வீழ்ந்தன” என்கிறார்.
தீயைத் திருடும் ஆஸ்திரேலிய பறவைகள்!
ப்ரோமெதியஸ் என்னும் ஹீரோ
கடவுளரிடமிருந்து தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்தான் என்று கிரேக்க நாட்டில் பழம் பெரும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதையைப் போலவே
இப்போது ஆஸ்திரேலியப் பறவைகள் தீத் துண்டுகளை (தீ கங்குகள்) ஏற்கனவே காட்டுத் தீ பரவிய
இடத்திலிருந்து தூக்கிக் கொண்டு இதர இடங்களில் சென்று போட்டு அங்கும் தீயைப் பற்ற வைக்கின்றன.
ஃபயர்ஹாக் (firehawks) என்னும் பறவைகள் கூட்டாகவும் சில சமயம் தனியாகவும் இப்படி தீயைப்
பற்ற வைக்கின்றன. அவை ஏன் இப்படிச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராயப் புகுந்தனர்.
புல்வெளிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் அவற்றின் இரைகள், இப்படித் தீயைப் பற்ற வைப்பதால்
வெப்பம் தாங்காமல் வெளியிடங்களுக்கு ஓடும். அப்போது அவற்றை அந்தப் பறவைகள் பிடித்துத்
தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும்.
தும்மலைத் அடக்காதீர்கள்!
தும்மலை அடக்கவே அடக்காதீர்கள் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை.
இதற்கான சம்பவம் ஒன்றை அவர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் தன் தும்மலை அடக்கப் பார்த்து மூக்கைப் பிடித்துக்
கொண்டு வாயையும் மூடிக் கொண்டார். கழுத்தில் தோல் பகுதியில் குமுறுவது போன்ற உணர்வு
ஏற்படவே டாக்டரிடம் ஓடினார். கழுத்துப் பகுதியில் தோலின் கீழ் காற்றுக் குமிழிகளைக்
கண்ட அவர்கள் மேல் தொண்டைப் பகுதியில் அவை ஒரு ஓட்டையையும் போட்டு விட்டதைக் கவனித்தனர்.
நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் அவர் பிழைத்தார். இரண்டு மாதங்களில் அவர் பூரண
குணமடைந்தார். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தும்மலை அடக்காதீர்கள் என்ற அறிவுரையைப்
பத்திரிகை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
விசித்திரமாக ஸ்பூனை விழுங்கியவர்!
‘Born with a Silver Spoon’ என்று அதிர்ஷ்டசாலிகளைச் சொல்வது வழக்கம். ஸ்பூனை விழுங்கிய ஒருவரைப் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியத்தால் அயர்ந்து போன சம்பவம் ஒன்றும் அக்டோபர் 2018இல் நடந்திருக்கிறது. மிஸ்டர் ஜாங் என்று அவரை அழைக்கின்றனர். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு அவர் வந்தார். ஒரு ஸ்டீல் ஸ்பூனை தான் விழுங்கி விட்டதாகவும் ஒரு வருடமாக அது உள்ளே இருப்பதாகவும் இப்போது வலி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கவே மூன்று டாக்டர்கள் சேர்ந்து இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்து மார்புக்கூட்டின் நடுவில் உள்ளே போய் மாட்டிக் கொண்டிருந்த ஸ்பூனை எடுத்தார்கள். அதன் நீளம் எட்டு அங்குலம். இப்படி ஒரு நபரை இதுவரை தாங்கள் கண்டதே இல்லை என்று கூறிய டாக்டர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கராத்தே கிக் கரப்பான்கள்
ஒட்டுண்ணிக் குளவிகள் என்னும் ஒருவகை உயிரினம் கரப்பான்களைப்
பொறுத்த வரையில் அபாயகரமான உயிரினம் என பிஎம்சி ஈக்காலஜி (BMC Ecology)என்ற அறிவியல் இதழ் தெரிவிக்கிறது.
மரகதமணி குளவி (Emerald Jewel Wasp) என்ற இந்த உயிரினம் கரப்பான்களின் கால்களின் மீது
ஒருவகை திரவத்தைப் பாய்ச்சுகின்றன. அது கரப்பான்களின் ரத்த ஓட்டத்தைத் தடுத்து மூளையைத்
தாக்கவே அது செயலிழந்து உயிர் இருந்தும் ஜோம்பி போல அசையாமல் இருந்துஅந்தக் குளவிகளுக்கு இரையாகுமாம். ஆனால் இப்போது இதை ஆராய்ந்து
வரும் விஞ்ஞானிகள்,”இது வரை கரப்பான்கள் தப்பிக்கவே தப்பிக்காது என எண்ணி இருந்தோம்.ஆனால்
ஒரு கராத்தே கிக்கைக் கொடுத்து தங்கள் மூளை செயலிழந்து போவதைச் சில கரப்பான்கள் தடுப்பதைப்
பார்க்கிறோம். இந்த கராத்தே கிக் அவற்றின் நரம்புகள் செயல் இழப்பதைத் தடுக்கிறது” என்று
ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.
மேட் மைக்கின் சாகஸம்!
2018 மார்ச் மாதம் 61 வயதான ஒருவர் தானே செய்த ராக்கெட்டை விண்ணில்
ஏவினார். அவர் பெயர் மேட் மைக்(Mad Mike- பைத்தியக்கார மைக்).பூமி தட்டையானது தான் என்பதை நிரூபிப்பதற்காக இதை அவர்
ஏவினாராம். பூமி உருண்டை என்று சிறு குழந்தை கூடச் சொல்லும்! ஆனால் அதை நம்ப மறுக்கும்
பைத்திய மைக்கின் ராக்கெட் 1900 அடி உயரம்
வரை பறந்தது.’எனது அடுத்த ராக்கெட் இன்னும் அதிக உயரம் பறக்கும்’ என்கிறார் பைத்தியக்கார
மைக்!
இப்படி எண்ணற்ற விநோதச் செய்திகளை 2018இல் கண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாம்பிளுக்காகச் சில சுவையான செய்திகளை மட்டும் இங்கு பார்த்தோம்.
Marc and Fielding
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஹோவர்ட் ஃபீல்டிங் (Howard Fielding) ஐந்து வயது குழந்தையாக இருந்த போது அப்பா ஆல்ஃப்ரெட் (Alfred) கொண்டு வந்த பிளாஸ்டிக் பப்பிள் ஷீட்டை கைகளால் நோண்டி ஒவ்வொரு பப்பிளாக டப் டப் என்று உடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ பப்பிள் ராப் (Bubble Wrap) பாக்கிங் ஷீட்டைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் உலகளாவிய விதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆல்ப்ரெட் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை தற்செயலாகத் தான் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடிக்க முனைந்தது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டி பேப்பர்களில் விதவிதமான டிசைனைப் போட்டு டெக்ஸர்ட் வால்பேப்பரைத் (Textured Wallpaper) தயாரிக்க வேண்டும் என்பது தான். 1957இல் இரண்டு பிளாஸ்டிக் திரைச்சீலைகளை வெப்பத்தினால் ஒட்டிப் பார்த்த போது அவர் நினைத்தது வரவில்லை. மாறாக காற்றுக் குமிழிகள் ஆங்காங்கே அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட் தான் வந்தது. அதை என்ன செய்வது என்று முதலில் அவருக்கும் அவரது நண்பருக்கும் புரியவில்லை. என்றாலும் கூட அதற்குக் காப்புரிமை பெற்றனர். 1961இல் அது மிகப்பெரிய பாக்கிங் மெட்டீரியல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. முக்கியமாக கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம் அதை ஒரு வரபிரசாதமாகக் கருதியது.
bubble wrap
வெளிநாடுகளுக்குக் கம்ப்யூட்டர்களை அனுப்பும் போது அது உடையாமல் இருக்க நியூஸ்பேப்பர்களை உருண்டைகளாக்கி அவற்றைச் சுற்றி வைப்பது அதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் நியூஸ்பேப்பர்களின் மோசமான தரமற்ற மை பாக்கிங் செய்யப்பட்ட பொருள்களின் மீது பட்டு அவற்றின் தரத்தைக் கெடுத்தது. இந்த நிலையில் பப்பிள் ராப் வந்தவுடன் அதை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் ஒரு வித புகாரும் வரவில்லை. இதைப் பார்த்த சிறு நிறுவனங்கள் அனைத்தும் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்த ஆரம்பித்தன.இன்று உலகெங்கும் பப்பிள் ராப் ஷீட் சக்கை போடு போடுகிறது.
தற்செயல் கண்டுபிடிப்பு பாக்கிங் செய்யும் விதத்தில் பாதுகாப்பை
உறுதி செய்தது ஆச்சரியம் தானே!
Boyer, a French
dramatic author, had been fifty years writing without success. That he might
prove whether his condemnation was not on account of the prejudice of the
critics, he gave it to be understood that the new tragedy of Agamemnon was the
production of a young man lately arrived in Paris . The piece was received with
great applause even by Racine himself, who was the great scourge of Boyer. The
next night the tragedy was hissed, Boyer having made it known that he was the
author.
Xxx
ASK YOUR FIELD MARSHAL TO SING!
Catherine II was treating her court to concerts by Caterina Gabrielli, the celebrated Italian soprano. The Empress had asked the artist to come to St Peterborough without stating any definitive price. Gabrielli determined, however, that a royal patron should be royally charged; and when at the end of the season Catherine inquired of her entertainer what she was to be paid for her singing, she replied, ‘Five thousand ducats’ ‘Five thousand ducats!’ The Empress exclaimed. ‘Why not one of my field marshals is paid as much as that’. ‘Well, then’, retorted Gabrielli like a flash, ‘Your Majesty had better get one of your field marshals to sing for you’.
Caterina
Xxx
IF YOU MURDER,
IT WILL HAUNT YOU!
Samuel Foote once asked a man why he forever sang one tune. ‘Because it haunts me’, replied the other. ‘No wonder’, said Foote, ‘You continually murder it.’
Cobalt is an essential element for human beings. It is the heart of B12 vitamin. Lack of it will produce fewer red corpuscles and cause anaemia.
People are familiar with cobalt blue colour in glass and ceramic materials. But it is used in other ways as well. There are very interesting titbits about this element Cobalt name came from goblin. Sixteenth century Saxony miners tried to extract sliver from cobalt ores thinking that they were silver ores. But they were disappointed to find toxic fumes of arsenic were given off. It was indeed cobalt arsenide. They cursed the ores saying that it had been bewitched by goblins.
Egyptians, Sumerians and ancient Chinese used it. Cobalt blue is famous because of the glass and ceramic materials with cobalt blue colour. Cobalt requirement of human body comes from food. Clams, sardines, salmon herring, liver and eggs contain B12.
Magnetic Mines
Cobalt steel with highly magnetic properties was used by Nazi Germany in the making of magnetic mines. Those mines were triggered by the magnetic field of British ships and were sinking British ships. But Britain put degaussing coils around its ships and then Germany used them to make bombs which damaged British buildings.
Uses Georg Brandt of Stockholm discovered it. Magnetised cobalt has some advantages over iron magnets. They have magnetism even at higher temperatures. Stellite made with cobalt, tungsten and other elements is used to make cutting tools. Mainly used in colouring glass and ceramic materials. Cobalt 60 is a radioactive isotope. It is used in cobalt therapy and irradiating preserved food.
Chemical properties
Symbol Co Atomic number 27 Melting point 1495 degree C Boiling point 2870 C It is a lustrous silvery blue metal.
Invisible Inks
Cobalt was once used to make invisible ink. When cobalt chloride solution was used to write messages, it would become invisible. When it is heated the message would appear and can be read easily. Spies used it to send secret messages using this property. They would use cobalt chloride for writing secret messages. On top of it they use normal ink to write innocent messages. Only spies would know the secrets.
In the nineteenth century artificial flowers were coated with cobalt chloride. As the weather becomes hotter it would turn from pink to violet and then to blue. Indrajal (magic) was done with colour changes.
திருமதி
மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக மாத
இதழ் ஞான ஆலயம். அதில் மார்ச் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை:
ஸவ்யஸாசியே எழுந்திரு!
ச.நாகராஜன்
கீதோபதேசத்தில் ஒரு அற்புதமான கட்டம்!
மனித குலத்திற்கான செய்தியை கிருஷ்ணர் தரும் கட்டம் அது!
ஒவ்வொரு மனிதனுக்குமான தெய்வ செய்தி அது!
தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ
ஜித்வா சத்ருத் புங்க்ஷ்வ்
ராஜ்யம் ஸம்ருத்தம் |
மயைவைதே நிஹதா பூர்வமேவ
நிமித்த மாத்ரம்
பவ ஸவ்யஸாசிந் ||
ஹே, ஸவ்யஸாசியே! ஆகவே, நீ எழுந்திரு (தஸ்மாத் த்வம் உத்திஷ்ட)!
எதிரிகளை வென்று புகழை அடைவாயாக (யசோ லபஸ்வ)! செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி!இவர்கள்
எல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டார்கள். நீ நிமித்தம் என்ற ஒரு கருவியாக இரு.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 33)
மஹாவீரனான அர்ஜுனனுக்கு ஸாங்க்ய யோகம், கர்ம யோகம் உள்ளிட்ட
அனைத்தையும் உபதேசித்து முடித்து விட்ட பின்னர் கிருஷ்ணர் அர்ஜுனனை எழுந்து செயல் புரி
என்று உத்வேகம் ஊட்டுகின்ற காட்சி இது.
அவனை அவர் ஸவ்யஸாசி என இங்கு அழைக்கிறார்.
ஸவ்யஸாசி யார்? பொதுவாக ஒரு போரில் வீரர்கள் வில்லை இடது கையில்
பிடித்து பாணங்களை வலது கையால் விடுவார்கள். ஆனால் வில்வித்தையில் தேர்ந்த மஹாவீரர்களோ
இரு கைகளிலும் வில்லைப் பிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். எவர் ஒருவர் வில்லை வலது கையில்
பிடித்து இடது கையால் பாணத்தை விடுகிறாரோ அவரே ஸவ்யஸாசி. அர்ஜுனன் ஒரு ஸவ்யஸாசி. இதே
போல இன்னொரு ஸவ்யஸாசி மன்மதன் தான்!
இப்படிப்பட்ட மஹாவீரன் நீ என கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவுபடுத்தவே
இப்படி அழைக்கிறார்.
எதைப் பொறுத்தாலும் பொறுப்பான் அர்ஜுனன், ஆனால் அவனது காண்டீவத்தை
இகழ்ந்தவர்களைப் பொறுக்கவே மாட்டான்.
கர்ண பர்வத்தில் வரும் காட்சி இது (71,72, 73 அத்தியாயங்கள்).
தர்மர் கர்ணனை அர்ஜுனன் கொல்லவில்லை என்ற கோபத்தால் அவனை இகழ்கிறார்.
“ஸ்வர்ணத்தினால் விசித்திரமான கட்டுக்கள் உள்ளதும், பனை அளவு உள்ளதுமான காண்டீவம் என்ற
சிறந்த வில் உன்னிடமிருந்து பிரயோஜனம் என்ன? அதை கிருஷ்ணரிடம் கொடுத்து அவருக்கு சாரதியாக
ஆகி விடு. அப்போது அவர் கர்ணனை வதம் செய்வார்” என்ற தர்மரின் வார்த்தையைக் கேட்ட அர்ஜுனன்
தன் கத்தியை உருவி தர்மரைக் கொலை செய்யப் போகிறான். உடனே கிருஷ்ணர் அவனைத் தடுத்து
நிறுத்தி, ‘எதற்காக இந்தத் தகாத காரியத்தைச் செய்கிறாய்’ எனக் கேட்கிறார். ‘எவர் ஒருவர்
என் காண்டீவத்தை இகழ்ந்து அதை இன்னொருவரிடம் கொடு என்று சொல்கிறாரோ அவரைக் கொல்வேன்’
என்பது என் ரகசிய விரதம். ஆகவே அவரைக் கொல்லப் போகிறேன் என்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணர்,
‘குருவான தர்மரை நீ என்று சொல். அதுவே அவரைக் கொன்றதற்குச் சமம்’ என்கிறார். அதன்படி
‘நீ’ என்று பலமுறை இகழ்ந்து அர்ஜுனன் கூறித் தன் கோபம் தணிகிறான். ஆனால் அவன் மீண்டும்
கத்தியை உருவவே கிருஷ்ணர் ‘எதற்காகத் திருப்பியும் கத்தியை எடுக்கிறாய்’ எனக் கேட்கிறார்.
‘மஹா சிரேஷ்டரும் என் குருவுமான தர்மரை இப்படி நீ என இகழ்ந்த நான் உயிர் வாழத் தக்கவன்
அல்ல; என்னை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்’, என்கிறான் அர்ஜுனன். உடனே கிருஷ்ணர், ‘உன்
புகழை நீயே கொஞ்சம் சொல்; அப்போது உருவம் அழிந்தவனாகி விடுவாய்’ என்கிறார். அர்ஜுனன்.
‘சிவனை ஒத்தவன் நான்; என்னை வெல்வார் எவரும் இல்லை’ என்று ஆரம்பித்துத் தன் பெருமையைக்
கூறி நாணித் தலை குனிகிறான். (வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்)
ஆக காண்டீவத்தின் பெருமையையும் அதன் மீது ஸவ்யஸாசியான அர்ஜுனன்
கொண்டிருந்த மரியாதையையும் பேரன்பையும் இங்குக் காண்கிறோம்.
மஹாபாரதத்தில், விராட பர்வத்தில் வரும் இன்னொரு காட்சி காண்டீவத்தின்
பெருமையை விளக்குகிறது.(அத்தியாயம் 42). போர் செய்ய பயப்படும் உத்தரனை ஊக்குவிக்கும்
விதமாக அர்ஜுனன் பாண்டவரின் ஆயுதங்களைக் காட்டி அதன் பெருமைகளை விளக்கும் காட்சி இது.
இதில் அர்ஜுனன் தானே தனது காண்டீவத்தைப் பற்றி மூன்றாம் மனிதன்
சொல்வது போல அமைக்கப்பட்ட காட்சி இது. அதில் உத்தரனிடம் அர்ஜுனன் கூறுவது இது: “ எதிரி
சேனைகளின் அங்கங்களை அடிக்கின்றதும் தேவ சம்பந்தம் பெற்றதும் காண்டீவம் என்று பிரசித்தி
பெற்றதுமான இந்த வில் பார்த்தனுடையது. பிளக்க முடியாததும், அச்சமற்றதும், ஒளியுள்ளதும்,
ஆச்சர்யகரமானதும், முறிக்க முடியாததும், வெடிப்பில்லாததும்,எல்லா ஆயுதங்களுள்ளும் சிறந்ததும்
பொன்மயமானதும் நாடுகளைப் பெருகச் செய்கின்றதும் அநேக வருடகாலமாகத் தேவர்களாலும், அசுரர்களாலும்,
கந்தர்வர்களாலும் பூஜிக்கப்பட்டிருக்கின்றதுமான இந்த வில்லானது லட்சம் ஆயுதங்களுக்கு
ஒப்பானது.இதை முற்காலத்தில் பிரம்மதேவர் ஆயிரம் வருட காலம் வைத்திருந்தார்; உமாபதியானவர்
அறுபத்துநான்கு வருடம் வைத்திருந்தார். இந்திரன் எண்பத்தைந்து வருடம் தாங்கி இருந்தான். சந்திரன் ஐந்தாயிரம் வருடம்
தரித்திருந்தான். வருணன் நூறு வருடம் தரித்திருந்தான். வருணனிடமிருந்து அதைப் பெற்ற
அக்னி தான் தரித்து வந்தான். அதை பார்த்தனுக்குத் தந்தான். இதை அர்ஜுனன் அறுபத்தைந்து
வருடம் தரிக்கப் போகிறான்”.
ஆக இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த வில்லை இரு கைகளினாலும் இயக்க
வல்லவன் ஸவ்யசாசி.
அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட கண்ணன் அவனை அதிலிருந்து
விடுவிக்கிறான். எழுக; எதிரிகளை வெல்க; புகழை அடைக என உபதேசிக்கிறான்.
அர்ஜுனன் குழப்பத்தில் தவிப்பது போல பூவுலகில் ஒவ்வொருவனும்
அவ்வப்பொழுது குழப்பத்தில் தவிப்பது கண் கூடு.
அர்ஜுனன் போல அவ்வளவு வீரனாக இல்லாத சாமான்யர்கள் முதலில் அவன்
போல ஸவ்யஸாசி ஆக வேண்டும். பின்னர் குழப்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் கர்மம் செய்வதைத் தவிர்க்காதே; ஏற்கனவே மஹாசக்தியினால்
எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்ற போதிலும் “நீ கர்மத்தைச் செய்ய வேண்டும். தஸ்மாத்
உத்திஷ்ட! ஆகவே எழுந்திரு; யசோ லபஸ்வ; புகழை அடை.”
இது தான் கிருஷ்ணர் ஒவ்வொரு மனிதனுக்கும் தரும் செய்தி.
கிருஷ்ணர் அழைக்கும் ஸவ்ய ஸாசி என்ற ஒரு சொல்லே ஏராளமான அதிசயச்
செய்திகளை தந்து நமக்கு உத்வேகத்தையும் ஊட்டுகிறது.
ஸவ்யஸாசி ஆவோம்; இரு கரங்களாலும் பணி ஆற்றுவோம்; தர்ம வழியில்
கர்மம் புரிவோம்; கிருஷ்ணரின் கீதை காட்டும் பாதை வழி நின்று அவரது அனுக்ரஹம் பெறுவோம்.