இலங்கை அரக்கன் மீது  ஞான சம்பந்தர் கடும் தாக்கு (Post No.10,352)

WRITTEN BY LONDON SWAMINATHAN AND

Post No. 10,352

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


“கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே….”

புறம் 378  ஊன்பொதி பசுங்குடையார்

Purananuru , Sangam Literature, verse 378

Xxx

அரனுறை தருகயிலையை நிலைகுலைவது  செய்த தசமுகனது

கரமிருபது நெரி  தரவினி றுவிய கழலடியுடையவன்

–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை

xxx

மலையான் மகளஞ்சவ்  வரை எடுத்தவ் வலியரக்கன்

றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்

–திருவேணுபுரம்

xxx

இசைகயிலை யையெழுதரு வகையிருபது  கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி

இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER  (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்

–திருச்  சிவபுரம்

இலங்கையில் இராவணன்  விமானம் பற்றி ஆராய்ச்சி  நடப்பதாக ஒரு நல்ல செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. வரவேற்கத் தக்க ஆராய்ச்சி. அத்துடன் சில அசிங்கமான செய்தியும் வந்துள்ளது. இலங்கை ஒரு விண் கோளுக்கு ராவணன் பெயரை சூட்டி இருப்பதாகவும் அந்தப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால் இலங்கை  அரசு சொல்லும் செய்தி இதுதான் : “பொம்பளைப் பொறுக்கி இராவணன் வாழ்க ; எல்லோரும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வாங்க” . இது நல்லதல்ல. இதைத்தான் தமிழ் நாட்டு திராவிடங்கள் சொல்லுகின்றன. இதை இலங்கை அரசு பின்பற்றுவது ஆபத்தானது உடனே  மாற்ற வேண்டும்.

தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒவ்வொரு பதிக்கத்திலும் ராவணனை தாக்குவதும் ஆழ்வார்கள், இலங்கை அரக்கனைக் கண்டித்ததும் தமிழர்கள் நன்கு  அறிந்ததே. இதற்கு நேர் எதிரானது புத்த மத வெறியர்களின் போக்கு. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய வெறியை இலங்கை இன்றும் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது

மேலும் சில விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்:

இராவணன் விமானம் விட்டானா? இது என்னடா புதுக்கதை ?

உலகில் 3000 வகை ராமாயணங்கள் உண்டு (ராமன் பற்றிய பஜனைப் பாடலில் வரும் , கீர்த்தனைகளில் வரும் புதிய செய்திகளையும் சேர்த்து). புறநானூறு, அகநானூறு, ஆழ்வார் பாடல்களில் வரும் பல செய்திகள் கம்பன், வால்மீகி ராமாயணத்தில் இல்லை!) ஆனால் ராவணன் கொடியவன், ராமன் நல்லவன் என்ற அடிப்படை விஷயங்களில் மாற்றம் இராது.

உலகில் வால்மீகி எழுதிய ராமாயணம்தான் ORIGINAL ஒரிஜினல்; கம்பனும் தனக்கு கிடைத்த மூன்று ராமாயணங்களில், வால்மீகியையே தான் பின்பற்றுவதாகவும் சொல்கிறான். வால்மீகி ராமாயணத்தில் குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை இராவணன் பறித்துக்கொண்ட செய்தியும், பின்னர் அதை விபீஷணன் ராமணனுக்கு அயோத்தி செல்ல கொடுத்ததும் தெளிவாக உள்ளது. மேலும் அது அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகளை பிரமிக்க வைக்கும் விமானம். ஆட்கள் ஏற ஏற  விரிவடையும்; THOUGHT POWERED எண்ணத்தால் பறக்கும். ஐன்ஸ்டைன் தோற்றுப்போனார். அப்படிப்பட்ட விமானத்தை செய்தவன் இமயமலையில் வாழும் குபேரன். . இதை மறைக்கிறது இலங்கை அரசின் ராவண விண்கோள் செய்தி. !

சங்க இலக்கியத்தில் ராமன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

4 Jun 2014 — Tagged with சங்க இலக்கியத்தில் ராமன் … தமிழ் ராமாயணம் வால்மீகி, கம்பன் சொல்லாத …



பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர் …

https://tamilandvedas.com › பிரா…

13 Nov 2017 — அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் … ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

18ஆவது நூற்றாண்டில் ஏதோ சிங்களர்கள் எழுதிய சுவடியில் மயில் போன்ற வடிவில் விமானம் இருப்பதாகவும் அது பற்றி ஆராய்வதாகவும் ஒரு புதுக்கதை! அதுவும் ஒரிஜினல் அல்ல. படிக்காத மூடர்களுக்கு இதை மட்டும் காட்டினால் உண்மைகள் மறைக்கப்படும்; மறக்கவும்படும்.

அது என்ன மறக்கப்படும், மறைக்கப்படும் உண்மைகள்?

ரிக் வேதத்திலேயே மனிதர்கள் ஒளி வடிவில் பறக்கும் செய்திகள் உள்ளன. ராமாயணத்துக்குப்  பின்னர் வந்த மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனன் வெளி உலகிற்குச் சென்று வந்த செய்தி விரிவாகவே உள்ளது. எண்ணத்தின் மூலம் விமானம் பறக்க முடியும் என்ற செய்தியை உலகப் புகழ்பெற்ற நரம்பியல் பொறியியல் NEURAL ENGINEERING பத்திரிக்கை வெளியிட்டதை 2013ம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் வெளியிட்டுள்ளேன்.

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? – Tamil …

https://tamilandvedas.com › ராமர…

·

22 Jun 2013 — ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் …



விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் …

https://tamilandvedas.com › விம…

·

31 Jan 2019 — ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து … ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

How did Rama fly his Pushpaka Vimana/ Plane? – Tamil and …

https://tamilandvedas.com › 2013/06/22 › how-did-ram…

22 Jun 2013 — Ramayana wonders part -8. How did Rama fly his Pushpaka Vimana/ Plane? 1.This is the first time a flying robot has been controlled by human …

XXXX

LORD SHIVA IN PEACOCK PLANE, HOUSTON FINE ARTS MUSEUM, USA
XXXX

புத்த மதத்தினர் என்ன செய்தார்கள் ?

2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உலவி  வந்த எல்லா பஞ்ச தந்திரக் கதைகள், புராண இதிஹாஸக் கதைகளை, போதிசத்துவர் பெயரில் ஏற்றி, ஜாதகக்கதைகள் என்ற பெயரில் கொடுத்தனர். அதில் தசரத ஜாதகம், பாண்டவர் பற்றிய ஜாதக்கதைகளும் உண்டு. அதுமட்டுமல்லாமல் இந்து விக்ரகங்கள் வழிபட்ட இடங்களில் புத்தர் சிலையை வைத்து மாற்றினார்கள். இது அதிகம் நடந்ததும் இலங்கையில்தான் .

அசோகன் என்ற மாமன்னன் நல்ல எண்ணத்தின் பேரில் தனது மகன் மஹேந்திரனையும் மகள் சங்க மித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தான். ஆனால் அந்த நல்ல எண்ணம் புத்த  பிட்சுக்களின் மண்டையில் ஏறவில்லை. இன்றும் சீனாக்காரன் வாழ்க என்று சொல்லும் அளவுக்குப் போய்விட்டது!

XXX

மீண்டும் விஞ்ஞானச் செய்திக்கு வருவோம்

ராமாயண மஹாபாரத விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தால், போஜன் எழுதிய வைமானிக சாஸ்திரம் முதலியன உள்ளன. உதயணன் முதலியோர் மயில் வடிவ விமானத்தில் பறந்த செய்தி  உளது. அது சீவக சிந்தாமணியிலும்  உளது. ஆக மயில் வடிவ விமானம் என்பதும் சிங்கள ஒரிஜினல்  அல்ல. கள்ளக் காப்பி! யாரோ ஒருவர் சிங்கள மொழியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூலை வைத்து, உண்மையைத் திரித்து ,இராவணன் ஜிந்தாபாத்; பொம்பளைப் பொறுக்கி ஜிந்தாபாத்; என்று சொல்லும் இலங்கை ‘ மக்கு’-களுக்கு நல்ல புத்தி வர இராமபிரானை வேண்டுவோம் .

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை

https://tamilandvedas.com › ராவ…

24 Jun 2014 — Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் கட்டுரை …


ராவணன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ர…

· 

this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. வீணைக் கொடியுடைய வேந்தனே!

இராவணன் யார் ?

இராவணன் சிவ பக்தன் ; வீணை வாசிப்பதில் மன்னன்; உலகம் சுற்றும் வாலிபன்; அடிக்கடி கோதா வரிக் கரை க்குச் சென்று பெண்களிடம் சில்மிஷம் செய்தவன், கார்த்த வீர்ய அர்ஜுநன் என்பவானால் நை யப் புடைக்கப்பட்டவன் ; எங்கெங்கு அழகிகள் கிடைத்தார்களாளோ அவர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்தவன். அராஜகத்தின்  சின்னம்; அடக்கமின்மையின் மறு உரு ; சிவபெருமானின் கயிலை மலையை ஆட்டலாம் என்று நினைத்து முயன்று கை நசுங்கிக்  கதறியவன் ; 50 சதவிகித பிராஹ்மணன்; 50 சதவிகித அரக்கன்; அகஸ்தியருடன் வீணைப் போட்டியில் தோற்றவன். பாண்டிய மன்னனுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன்.

இவ்வளவு செய்திகளைச் சொல்லும் தமிழ் சம்ஸ்கிருத நூல்கள், நச்சினார்க்கினியர் உரைகள் எல்லாம் சிங்கள படைப்புக்கு முன்னர் வந்தவை. வால்மீகி ஒருவர்தான் அவன் விமானம் பற்றிய செய்தியையும், குபேரனிடமிருந்து அதை அவன் பறிமுதல் செய்ததையும் தெளிவாகக் கூறுகிறார்.

ஆகவே குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை அவன் பறித்து வந்ததை மறைக்கக்கூடாது ; மயில் வடிவ விமானம் முன்னரே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை மறைக்கக் கூடாது

அமெரிக்காவில் ஹூஸ்டன் நுண்கலை மியூசியத்தில் கூட சிவபிரான் மயில் வடிவ விமானத்தில் பறக்கும் ஓவியம் உளது 

எல்லாவற்றுக்கும் மேலாக இராவணனை வலியகை அரக்கன் என்று சங்க காலப் புலவர் சாடுவதை மறைக்கக் கூடாது. இராமனை 2000 ஆண்டுப் பழமை உடைய சங்க இலக்கியப்  பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய காவியங்கள்  பாராட்டுவதை மறைக்கக்கூடாது  ;  எல்லா தமிழ்ப் புலவர்களாலும் கண்டிக்கப்பட இராவணன் பெயரை விண் கோளில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா போல வேத, புராண இதிஹாச பெயர்களை சூட்ட வேண்டும்; தொலைந்து போகட்டும்; புத்தர் பெயரையாவது வைத்து மகிழட்டும்.

–subham–

NEWS PAPER REPORT FROM NOVEMBER 16,2021

ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், அந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. அந்த மாநாட்டில் ராவணன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளான் என்று முடிவுக்கு வந்தனர்.

அந்த மாநாட்டுக்குப் பிறகு, இதுதொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அப்போதைய அரசு ஒதுக்கியது. இதுகுறித்த பேசிய இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அதிகாரி ஷாஷி தனதுங்கே, ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக அந்த ஆய்வு அப்போது நிறுத்தப்பட்டது. தற்போதைய ராஜபக்ச தலைமையிலான அரசும் இந்த ஆய்வை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று கருதுகிறேன்’ தெரிவித்தார். ஷாஷி வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். ராவணன் காலத்துக்கு விமான நிலையம் குறித்து ஆய்வு செய்வதற்கு இலங்கை முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.


தொடர்ந்து இதுகுறித்து டனதுங்கே பேசும்போது, ‘ராவணன் புராணக் கால கதாப்பாத்திரம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். அவர் நிஜ அரசன். அவர் உண்மையில் விமானம் மற்றும் விமான நிலையம் வைத்திருந்தார். அது தற்போதைய காலத்து விமானம், விமான நிலையம் போன்றதல்ல. பழங்கால இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்துள்ளனர். இதுதொடர்பாக நாம் சிறப்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவும் பங்கற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார். இந்த ஆய்வுக்கு ஆதரவாக ஷாஷி மட்டும் பேசவில்லை. இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் கட்டிடக் கலைஞர் சுனிலா ஜெயவர்த்தனே எழுதிய த லைன் ஆஃப் லங்கா – தீவின் கட்டுக்கதைகள் மற்றும் நினைவுகள் என்ற புத்தகத்தில் ராவணனின் விமானச் சேவை குறித்து எழுதியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த சுனிலா, ‘தற்போதைய உலகில் ராவணனின் விமானம் என்பது கற்பனையானது. தற்போதுள்ள படித்த இளைஞர்கள் எல்லாருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டில் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்துள்ளது. பண்டைக் கால விமானம் குறித்த எழுத்துகள் மிகவும் விரிவானவையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. ஆனால், அது கட்டுக்கதை என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய மாமா இலங்கையின் நவீன விமானி மறைந்த ரே விஜிவர்த்தனேவும் ராவண கால விமானப் போக்குவரத்து என்ற கருதுகோளை நம்புவதாக தெரிவித்தார். சுனிலாவின் கூற்றுப்படி, தொட்டுபொலகந்தா, உசன்கோடா, வீஹீரங்கதோடா, ருமசல்லா, லகீகலா ஆகிய பகுதிகளில் விமானநிலையம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். ராவணன் மற்றும் அவனுடைய ஆட்சி குறித்து இலங்கையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராவணனை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய பெயரில் செயற்கைக்கோளை ஏவி ராவணனுக்கு பெருமை சேர்த்துள்ளது இலங்கை அரசு.

–SUBHAM—

TAGS- ராவணன் விமானம், ஆராய்ச்சி , விண்கோள் ,இலங்கை அரக்கன், சம்பந்தர் ,கடும் தாக்கு, 

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! (Post No.10,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,030

Date uploaded in London –  30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!

ச.நாகராஜன்

தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!

தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!

அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.

அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.

  1. வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

வாக்கிற்கு – அருணகிரி

கனிவிற்கு – மாணிக்கவாசகர்

தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்

நோக்கிற்கு – நக்கீர தேவர்

நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்

சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்

  • அடுத்த பாடல் இது

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி

ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்

ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி

கூழுக்கிங் கௌவையெனக் கூறு

காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்

கருணைக்கு – அருணகிரிநாதர்

தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்

உவக்கப் பாடுபவர் – புகழேந்தி

கூழுக்கோ – ஔவையார்

  • மூன்றாம் பாடல் இது:-

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

      செயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

   வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

   வசைபாடக் காளமேகம்

பண்பாக வுயர் சந்தம் படிக்காசு

   லாதொருவர் பகரொ ணாதே

 வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்

பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.

விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.

கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்

கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்

வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்

பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.

இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!

ஆதாரம் : பெருந்தொகை பாடல்கள் 1802, 1803, 1804

***

INDEX

அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், நக்கீரர், சுந்தரர், கம்பன், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, ஔவையார். ஜெயங்கொண்டான்,இரட்டையர்கள், படிக்காசுப் புலவர்

Tags – அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், சம்பந்தர், கம்பன், காளமேகப் புலவர்

ஆலயம் அறிவோம் – சம்பந்தர் அவதரித்த சீர்காழி(Post.9637)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9637

Date uploaded in London – – 23 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 23-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண்மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலமான பிரமபுரம் ஆகும். சீகாழி என்று இன்று அறியப்படும் தலம் இதுவே. தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மாயவரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தலத்திற்கு ஏராளமான பெயர்களும் அதையொட்டிய புராண வரலாறுகளும் உண்டு. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்

அம்பிகையின் திருநாமம் : பெரியநாயகி, திருநிலை நாயகி

தல விருக்ஷம் : பவளமல்லி எனப்படும் பாரிஜாதம்

தீர்த்தங்கள்: எல்லையற்ற மஹிமை கொண்ட 22 தீர்த்தங்கள் உண்டு. பிரமதீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், ராகு தீர்த்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.,

பிரம்மா, திருமால், சிபி  மஹராஜன், காளி, பராசர முனிவர், குரு, ராகு உள்ளிட்ட ஏராளமானோர் வழிபட்ட தலம் இது.

சீ என்றால் சீர் என்று பொருள்,காழி என்றால் உறுதி என பொருள்.

சிவபாத ஹ்ருதயர், பகவதி அம்மையாருக்குப் புதல்வராக இங்கு தான்  திருஞானசம்பந்தர் அவதரித்தார்.வைகாசி மூலம் அவரது குருபூஜை தினமாகும். இங்குள்ள கோவிலில் உள்ள பிரமதீர்த்தத்தில் தான், சிவபிரான் அம்பிகையிடம் கூற, அம்பிகை ஞானப்பாலைப் பொற்கிண்ணத்தில் தர ஞான சம்பந்தர் அதை அருந்தி தோடுடைய செவியன் என்று சிவபிரான், அம்பிகை தரிசனத்தைக் குறித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். 16 வயது வரை வாழ்ந்த அவர் உலக நன்மைக்காக பல்லாயிரக்கணக்கான பதிகங்களைப் பாடி அருளினார். நமக்கு இன்று கிடைத்திருப்பவை 385 பதிகங்களே. அவர் பிறந்த இல்லம் இங்கு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. காஞ்சி சங்கரமடத்தால் சிறப்புற நிர்வகிக்கப்படும் இந்த இல்லம் தேவாரப் பாடசாலையாக இப்போது இலங்குகிறது.

ஊழிக்காலத்தில் பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்கிய அளவில், மீண்டும் உலகைப் படைக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிரணவத்தைத் தோணியாக்கி உமாதேவியுடன் அதில் ஏறி வருகையில் இத்தலத்தை அடைந்தார். அப்போது அது பிரளய நீரில் மிதந்து நின்றது. இதுவே மூலாதார க்ஷேத்ரம் என நிர்ணயித்த பெருமான் இங்கு நிலையாக எழுந்தருளினார். ஆகவே இது தோணிபுரம் என்ற பெயரைப் பெற்றது. பிரமன் இங்கு சிவபிரானை வழிபட்டதால் இது பிரமபுரம் என்ற பெயரைப் பெற்றது. இறைவன் இங்கு மூங்கில் வடிவில் தோன்றியதால் வேணுபுரம் என்ற பெயரைப் பெற்றது.

சூரபன்மனுக்குப் பயந்த தேவர்கள் அனைவரும் இந்தத் தலத்தில் தஞ்சம் அடையப் புகுந்தனர். அதனால் இது புகலி என்ற பெயரைப் பெற்றது. குருபகவான வழிபட்ட தலமாதலால் இது வெங்குரு என்ற பெயரைப் பெற்றது. சிரசு அதாவது தலை கூறாக உள்ள ராகு பகவான் இங்கு பூஜித்ததால் இது சிரபுரம் என்ற பெயரைப் பெற்றது. புறா வடிவத்தில் வந்த அக்னி பகவான் சிபி சக்ரவர்த்திக்கு அருள் பாலித்த தலம் இதுவே. ஆகவே இது புறவம் என்ற பெயரைப் பெற்றது.

பூமியைப் பிளந்து சென்று இரண்யாக்ஷனை வதம் செய்த வராஹமூர்த்தியாக அவதரித்த திருமால் வழிபட்ட தலம் இது என்பதால் பூந்தராய் என்ற பெயரைப் பெற்றது. சண்பை என்று அழைக்கப்படும் கோரைப்புல்லால் தன் குலத்தோர் அழிந்ததால் ஏற்பட்ட பழி தீர கண்ணனாக அவதரித்த திருமால் வழிபட்ட இடம் என்பதால் இது சண்பை என்ற பெயரைப் பெற்றது. சிதம்பரத்தில் காளி தேவி நடராஜரோடு வாதாடிய குற்றம் நீங்க இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இது சீ காளி என்ற பெயரைப் பெற்றது. இதுவே மருவி சீகாழி ஆயிற்று என்று சொல்வர்.

மச்சகந்தியை மணம் செய்து கொண்ட குற்றத்தால் கொச்சைச் சொல்லுக்கு உள்ளான அவலம் நீங்க. பராசரர் இங்கு வழிபட்டதால் இது கொச்சைவயம் என்ற பெயரைப் பெற்றது. மலத்தொகுதி நீங்குமாறு ரோமச முனிவர் வழிபட்ட தலம் ஆதலால் இது கழுமலம் என்ற பெயரைப் பெற்றது. ஹிரண்யாக்ஷனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலை சுவாமி சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமிக்கு ஸ்ரீசட்டைநாதர் என்ற திருநாமம் உண்டு.இப்படி இன்னும் பல பெயர்களும் புராணவரலாறுகளும் உண்டு.

இந்த ஆலயம் நகரத்தில் நடுவில் நான்கு  கோபுரங்களும் சுற்று மதில்களும் கொண்டதாக விளங்குகிறது. கோவினுள்ளே ஸ்ரீ பிரமபுரீஸ்வரருக்கும், திருநிலைநாயகிக்கும், திருஞான சம்பந்தருக்கும் தனித் தனி ஆலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.சுவாமி கோவில் மஹா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெற்கு உட்பிரகாரத்தில் முத்து சட்டைநாதரும் அங்குள்ள திருமாளிகை பத்தியில் 63 நாயன்மார்களும் மூலவராக உள்ளனர். இந்த பத்தியில் ஒரு பலி பீடம் உள்ளது. அங்கிருந்து மேலே பார்த்தால் சட்டைநாதர் சந்நிதி தெரியும். மேலைப் பிரகாரத்திலும் வடக்குப் பிரகாரத்திலும் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.

இந்த ஆலயம் திருக்கயிலாய பரம்பரை தர்மபுர ஆதீனத்தால் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சீகாழியின் வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமல ஆறும் தெற்கே உப்பனாறும் அழகுறப் பாய்கின்றன. இது காவிரியின் வடகரைத் தலமாகும். இங்கு திருஞானசம்பந்தர் 67 பதிகங்கள், அப்பர் 3, சுந்தரர் 1 பதிகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். இன்னும் மாணிக்கவாசகர், சேக்கிழார், பட்டினத்தார்,ஒட்டக்கூத்தர், அருணாசலக்கவிராயர் உள்ளிட்டோர் இங்கு இறைவனைப்  பாடிப் பரவியுள்ளனர்.

ஊழிகாலத்திலிருந்து இன்றைய நாள் வரை லக்ஷோப லக்ஷம் மக்களுக்கு அருள்பாலித்து வரும் பீடுடைய பிரமபுரீஸ்வரரும் திருநிலைநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத் தத்துவனை,

கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,

முன் அடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவை வல்லார்,

பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே!

நன்றி, வணக்கம்!  

***

tags– ஆலயம் அறிவோம்  , சீர்காழி, சம்பந்தர் ,

நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும்- சம்பந்தர் (Post No.9394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9394

Date uploaded in London – –  18 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சம்பந்தரின் ‘ஆணை நமதே’ பாடல்கள் பற்றிய கட்டுரை ஏற்கனவே வெளி வந்துள்ளது. சம்பந்தர் தரும் ‘நலம்’ பற்றிய கட்டுரை வெளியான தேதி : 7-3-2021 கட்டுரை எண் :9349. இப்போது சம்பந்தர் கூறும் ‘திண்ணம்’ இதோ:-

நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும், சிவகதி சேரும், திண்ணம், திண்ணமே – சம்பந்தர் அருள் வாக்கு!

ச.நாகராஜன்

1

அருளாளர் திருஞானசம்பந்தர் முருகப் பெருமானின் திரு அவதாரமே தான். அத்தகைய மேலாம் நிலையில் அவர் பக்தர்களுக்கு ஆணையிட்டுப் பல நலங்களைத் தருகிறார். நல்லனவெல்லாம் சேரும் என்கிறார். இன்னும் பல பாடல்களில் பெரும் நலன்கள் சேருவது திண்ணம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

திண்ணம் என்றால் உறுதி, நிச்சயம் என்று பொருள். ‘திண்ணம் என்ற சொல்லை நான்கு இடங்களிலும் ‘திண்ணமா என்ற சொல்லை ஒரு இடத்திலும் ‘திண்ணமே என்று ஏகாரத்துடன் அறுதியிட்டு அவர் உறுதி கூறுவதை ஆறு இடங்களிலும் பார்க்கிறோம்.

நோய் தீரும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

இன்பம் சேரும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

வினை தேயும் – ஒரு இடத்தில் கூறுகிறார்.

சிவ கதி சேரும் – ஆறு இடங்களில் கூறுகிறார்

இன்னும் இரு இடங்களில் திண்ணம் என்பதை அவர் பயன்படுத்துகிறார்.

2

நோய் தீரும்! (ஒரு பாடல்)

தலம்: கோயில் அதாவது சிதம்பரம்

தேவாரத் தல எண் : 1

இறைவன் நாமம்: திருமூல நாயகர் இறைவி நாமம் : உமையம்மை

கூர் வாள் அரக்கன்தன் வலியை குறைவித்துச்

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே

சிதம்பர நாதனை நித்தம் ஏத்தித் தொழுவாரின் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

3

இன்பம் சேரும்! (ஒரு பாடல்)

தலம்: மதுரை

தேவாரத் தல எண் : 193

இறைவன் நாமம்:  சொக்கலிங்கம் (சுந்தரேஸ்வரர்) இறைவி நாமம் : மீனாக்ஷி

அண்ணல் ஆலவாய் நண்ணினான்தனை

எண்ணியே தொழ திண்ணம் இன்பமே

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை எண்ணித் தொழ இன்பம் சேரும்.

4

வினை தேயும்! (ஒரு பாடல்)

தலம்: திருச்சிக்கல்

தேவாரத் தல எண் : 146

இறைவன் நாமம்: நவநீதநாதர் (வெண்ணெய்ப் பிரான்) இறைவி நாமம் : வேல் நெடுங்கண்ணி

கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்

செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்

வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரை ஆர் கழல் சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே

5

சிவகதி சேரும்! (ஆறு பாடல்கள்)

தலம்: வடகுரங்காடுதுறை இன்றைய பெயர் : ஆடுதுறைப் பெருமாள் கோயில்

தேவாரத் தல எண் : 49

இறைவன் நாமம்: அழகு சடைமுடி நாதர் (குலைவணங்குநாதர்) இறைவி நாமம் : அழகு சடைமுடியாள்

முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி

எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை

மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்தம் மேல்

சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே

கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லாப் பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி

எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்

சிட்டனார் அடி தொழச் சிவகதி பெறுவது திண்ணம் ஆமே

 தலம்: திருவேற்காடு

தேவாரத் தல எண் : 259

இறைவன் நாமம்: வேற்காட்டு நாதர் இறைவி நாமம் : வேற்கண்ணி

மூரல் வெண் மதி சூடும் முடி உடை

வீரன் மேவிய வேற்காடு

வாரமாய் வழிபாடு நினைந்தவர்

சேர்வர் செய் கழல் திண்ணமே

தலம்: திருதிலதைப்பதி (திலதர்ப்பணபுரி)

தேவாரத் தல எண் : 121

இறைவன் நாமம்: முத்த நாதர் (மதி முத்தர்) இறைவி நாமம் : பொற்கொடி நாயகி

மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல்

கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்

பந்தன் மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய்

சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே

தலம் : திருப்பூந்தராய்

புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்ப்

பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை

பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்

சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே

தலம் : திருவிசயமங்கை

தேவாரத் தல எண் : 47

இறைவன் நாமம் : விசயநாதர் இறைவி நாமம் : மங்கை நாயகி

விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை

நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்

பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்

புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே

6

இரு பாடல்கள்

திருச்சிரபுரம்

கண்ணு மூன்றும் உடையது அன்றிக் கையினில் வெண் மழுவும்

பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியர் ஆய்த

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே

தலம் : திருவையாறு

தேவாரத் தல எண் : 51

இறைவன் நாமம் : ஐயாறப்பர், பஞ்சநதேசுவரர்,செம்பொற் சோதி இறைவி பெயர் : அறம் வளர்த்த நாயகி

மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா

இருள் உடை இணை துவர் போர்வையினார்களும்

தெருள் உடை மனத்தவர் தேறுமின் திண்ணமா

அருள் உடை அடிகள்தம் அம் தண் ஐயாறே

7

குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட பயனை அவர் கூறியருளுவது பொருள் பொதிந்த ஒன்று. அன்பர்கள் அந்தந்த ஆலய இறைவன் திருநாமத்தைக் கூறி அந்தந்த பதிகங்களை ஓதினால் குறிப்பிட்ட பயனை அடைவது திண்ணம், திண்ணமே!

***

tags — நோய் தீரும், இன்பம் சேரும், சம்பந்தர், 

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

sambadar

ஞான சம்பந்தர் சிலை

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

Research Article Written by London swaminathan

Date: 4 November 2015

Post No:2299

 Time uploaded in London :–  9-32 AM

(Thanks  for the pictures) 

ஞான சம்பந்தர் 16 வயதில் இறைவனடி சேர்ந்தார். அதற்குள் அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்து சைவ வரலாற்றில் அழியா இடம் பெற்றார். அவர் செய்த அற்புதங்களில் ஒன்று ஆண் பனை மரத்தைக் காய்க்க வைத்ததாகும். அதாவது ஆண்மரத்தின் ‘செக்ஸை’ மாற்றியதாகும்! இன்று காலையில் லண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் இதே போன்ற ஒரு அதிசயச் செய்தியை வெளியிட்டுள்ளன.

5000 year old yew tree

படம்:– யூ மரம்

பெர்த்ஷைர் வட்டத்தில் போர்டிங்கல் கிராமத்தில் ஒரு சர்ச்சில் ஒரு யூ மரம் இருக்கிறது. அது ஆண் மரம்; அது திடீரெனப் பழுக்கத் தொடங்கியது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர தாவரவியல் வல்லுநர்கள், அந்த மரத்தில் காய்த்த பழங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர்

5000 ஆண்டுகளாக உயிரோடு வளர்ந்து வரும் புகழ் பெற்ற யூ மரம் ஆண் மரம் என்பது தாவரவியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே. இவ்வாண்டு அதில் பழங்கள் தோன்றின. அதாவது ஆண் மரம், பெண் மரமாக மாறிவிட்டது! இது எப்படி என்பது தாவரவியல் அறிஞர்களுக்குப் புலப்படவில்லை. மிகவும் கீழ்நிலையிலுள்ள சில உயிரினங்களில் ஆண்—பெண் மாற்றம் ஏற்படுவதுண்டு. 5000 வயதுடைய மரம் இப்படி ‘செக்ஸ்’ மாற்றம் அடைந்தது அதிசயத்திலும் அதிசயமே என்று தாவரவியல் அறிஞர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளனர்.

ஞான சம்பந்தர் செய்த அற்புதத்தை சந்தேகித்தவர்களுக்கு இப்பொழுது பித்தம் தெளிந்துவிடும்.

palmyra-palm-fruit

சம்பந்தர் செய்த அற்புதம்!

சம்பந்தர் ஊர் ஊராக ஆலய தரிசனம் செய்துகொண்டு போகையில் திருவோத்தூர் கோவிலுக்கும் போனார். அங்கே ஒரு சிவனடியார் வருத்ததுடன் இருக்கக்கண்டார். காரணத்தை வினவிய போது அந்த பக்தர் சொன்னார்:–

“நான் நிறைய பனை மரங்களை வளர்த்தேன். அதன் காய்களை விற்று வரும் வருவாயில் கோவில் பணிகளைச் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் எல்லாப் பனை மரங்களும் ஆண் மரங்களாக இருப்பதால் காயே காய்க்கவில்லை. இந்த ஊரிலுள்ள நாத்தீகர்கள் என்னை எள்ளி நகையாடி வருகின்றனர். உன்னுடைய சிவனிடம் போய்க்கேள்; எல்லாவற்றையும் பெண் மரங்களாக்கி காய்க வைத்துவிடுவார் – என்று கிண்டல் செய்கின்றனர்” என்று சொல்லி அழுதார். உடனே சம்பந்தர் பத்து பாடல்கள் அடங்கிய ஒரு பதிகத்தைப் பாடினார். அடுத கணமே பனை மரம் காய்த்துக் குலுங்கியது!!

இப்படி ஆண் மரங்கள், பெண் மரங்களாக மாற முடியுமா? என்பதற்கு இப்பொழுது மேற்கூறிய யூ மரச் செய்தி பதில் கொடுத்துவிட்டது. ஒரே வித்தியாசம். சம்பந்தர் அதை நொடிப் பொழுதில் செய்தார். பிரிட்டனில் அது சில ஆயிரம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

தமிழ் முனிவர்கள் காலத்தை வென்றவர்கள்; காலம் கடந்தவர்கள்; த்ரி கால ஞானிகள். அவர்கள் நினைத்தால் காலத்தை மாற்றவும் முடியும், நிறுத்தவும் முடியும்; காலத்தைக் கடந்து வெளியே நின்று முக்காலத்தையும் காணவும் முடியும். இவைகளை சுந்தரர், அப்பர், சம்பந்தர் செய்த அற்புதங்களில் காணலாம்.

முன்னரே, இரண்டு தமிழ் முனிவர்களின் காலப் பயணம் குறித்துக் கட்டுரை எழுதி  இருக்கிறேன். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறிய சம்பவங்களையும் கொடுத்து இருக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டும் விஸ்வரூப தரிசனம், இப்பொழுது விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் கருந்துளை ( BLACK HOLE பிளாக் ஹோல்) போன்றதாகும். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவில் விஸ்வரூப தரிசனம் என்ன என்பது நமக்கு மேலும் தெள்ளிதின்  விளங்கும்!!!

-சுபம்-

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

Written by S NAGARAJAN

Post No.2216

Date: 5   October 2015

Time uploaded in London: 16-21

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

தமிழாகரனின் அருட்செயல்கள்!

.நாகராஜன்

தமிழாகரன்

தமிழக வரலாற்றில் பொன்னேட்டினால் பொறிக்க வேண்டிய ஏடுகள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாழ்ந்த காலம்!

அறம் தலை நிறுத்த, மறத்தை நீக்க அவதாரங்கள் தோன்றுவது இந்து மத கொள்கையின் படி இடைவிடாத சுழற்சி கொண்ட ஒரு தத்துவமாகும்.

இப்படிப்பட்ட அவதாரங்களுள் முருகனே தோன்றியது போல வந்த இளம் பாலகன் திருஞானசம்பந்தர்.

முருகனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் ‘எண்ணி’ மாளா. எண்ணி, நினைக்கவும் அதிசயம், எண்ணிக்கையிலும் அதிசயம். (இரண்டு ‘எண்ணி’ போட்டுக் கொள்ளலாம். எண்ணி எண்ணி மாளா!)

இளமை, தேவியிடம் பால் அருந்தியது, துடிப்பு, ஆற்றல், எதிலும் வெற்றி, சூர சம்ஹாரம் (சமண சம்ஹாரம் என அர்த்தம் கொள்க), பக்தர்களுக்கு அருள் பாலிப்பு, இப்படிப் பல ஒற்றுமைகளுள் தலையாய ஒன்று தமிழை உடலாகத் தரித்தது.

பல சந்த வகைகளையும், புதுப் பாணிகளையும், உவமான உவமேயங்களையும், பல்வேறு தோஷ நிவர்த்திக்கான பதிகங்களையும், இறைவனின் பெருமையைச் சொல்லும் பாடல்களையும் தம் பாக்களில் தந்தவர் ஞான சம்பந்தர். பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள் + பதிக பலனைச் சொல்லும் பாடல் ஒன்று, ஆக மொத்தம் பதினொன்று) என்பதைக் கணக்கிட்டால் வருவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் பாடல்கள். அடேயப்பா என்று சொல்ல வைக்கும் பெரிய தொகை. அந்தப் பாடல்களை மூன்றாம் வயது தொடங்கி பதினாறாம் வயதுக்குள் பாடி இருக்கிறார். அதாவது 4748 நாட்களுக்குள் (365 x 13 + லீப் வருட நாட்கள் 3 = 4748) அப்படியென்றால் ஒரு நாளைக்கு 37.06 பாடல்கள், அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு பாடல்; ஒரு நாழிகை = 20 நிமிடம் ) இப்படிப் பொருள் பொதிந்த இறைவன் துதிகளை இவ்வளவு சிறப்புடனும் வனப்புடனும் உலக சரித்திரத்தில் பாடியதாக கற்பனைபயாகக் கூட கதை ஒன்று இல்லை!

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

 

அவரது அருட்செயல்களோ ஏராளம். அவற்றுள் முக்கியமான பத்தை மனதிற்குள் என்றும் நிறுத்தும் அளவு ஒரு சிறிய பாட்டில் அடக்கினார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்ய வந்த தேவனார் என்னும் பக்தர்.

ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்                                              

பாடல், பனை, தாளம், பாலை நெய்தல், – ஏடு எதிர், வெப்பு,                                  

என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்                           

தென்புகலி வேந்தன் செயல்

 

 

என்ன அருமையான பாடல்! இன்று நமக்குக் கிடைத்துள்ள திருஞானசம்பந்தரின் பாடல்கள் சுமார் 4287இல் 1256 பாடல்களில் அவரது வரலாறு (அவர் மூலமாகவே) விளக்கப்படுவதால் அகச்சான்று நிலை பெறுகிறது. இது பொய், புனைகதை என்ற வாதம் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது! இது நாம் செய்த தவப்பயனே!

 

 

அருள் செயல்கள்

அருட்செயல்களின் பதிகங்களாவன:-

ஓடம் திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (‘கொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம்)

சிவிகைநெல்வாயில் அரத்துறைப் பதிகம் (‘எந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம்)

உலவாக் கிழிதிருவாவடுதுறைப் பதிகம் (‘இடரினும் தளரினும்என்று தொடங்கும் பதிகம்)

அடைக்கப் பாடல்மறைக்காட்டுச்சதுரம் மறைப் பதிகம்

பனைதிரு ஓத்தூர்ப் பதிகம் (‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகம்)

தாளம்திருக்கோலக்காப் பதிகம் (‘மடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகம்)

பாலை நெய்தல்திருநனிபள்ளிப் பதிகம் (‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகம்)

ஏடு எதிர்திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம்)

வெப்புதிருநீற்றுப் பதிகம் (மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகம்)

என்புக்கு உயிர் கொடுத்தல்திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் பதிகம்)

ஆக பத்துப் பதிகங்கள் இந்தப் பாடல் கூறும் முக்கியப் பதிகங்கள்!

 

 

அருள் செயல்களின் வரலாறுகள்

 

இந்த அருள் செயல்களின் விவரங்கள் சுருக்கமாக இதோ:-

ஓடம்பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாடு சென்று பல தலங்களைத் தரிசித்த தமிழாகரர் காவிரியை அடைந்து ஓடமேறிகொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம் பாட ஓடம், படகோட்டி இன்றி தானாகவே திருக்கொள்ளம்புதூரை அடைந்தது!

 

சிவிகை: திருவடி நோக ஒவ்வொரு தலமாகத் தரிசித்து வந்த ஞானசம்பந்தர் மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார். அவரது துன்பம் கண்ட சிவபிரான் அரத்துறை என்ற தலத்தில் வாழும் அந்தணர் கனவில் தோன்றி, ‘ஞானசம்பந்தன் எம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்தில் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியவற்றை வைத்துள்ளோம். அதைக் கொடுத்து அழைத்து வருக என ஆணையிட்டான். அதே போல சம்பந்தர் கனவிலும் தோன்றி, ‘யாம் தரும் பொருள்களை ஏற்று வருகஎனக் கட்டளையிட்டான்.

அரத்துறை வாழ் அந்தணர்கள் வியந்து எழுந்து அனைத்தையும் ஞானசம்பந்தருக்குத் தந்து சிவிகையில் அமர்ந்து வர வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் சிவிகையை மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தை ஓதி அதில் ஆரோகணித்தார். அப்போதுஎந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார்.

 

 

உலவாக் கிழி:- திருப்பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறையை அடைந்த சம்பந்தர் தனது தந்தையாரான சிவபாத இருதயரைச் சந்தித்த போது அவர், தான் வேள்வி செய்வதற்குப் பொருள் வேண்டுமெனக் கேட்டார். தன்னிடம் பொருள் இல்லாததைக் கண்டு சம்பந்தர் வருந்தினார். உடனேஇடரினும் தளரினும்என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விண்ணப்பித்தார். உடன் சிவ கணங்களுள் ஒன்று பொற்கிழி ஒன்றை மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து, ‘இது எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி. இறைவன் உம்மிடம் அளிக்கப் பணித்துள்ளார்என்று கூறி மறைந்தது. அந்தப் பொன்னை சம்பந்தர் தந்தையிடம் கொடுக்க யாகம் நடந்தேறியது.

 

 

அடைக்கப் பாடல்:- அப்பரும் ஞானசம்பந்தரும் திருமறைக்காடு அடைந்த போது ஆலய வாயிலை அணுகினர். வேதங்களால் பூஜிக்கப்பட்ட கோவிலின் திருக் கதவுகள் திறக்கவே இல்லை. மக்களோ இன்னொரு வாயில் அமைத்து உள்ளே சென்று வழிபட்டு வருதலையும் அவர்கள் கண்டனர். அப்பர்பண்ணினேர் மொழியாள்என்ற பதிகத்தைப் பாடினார். பாடலின் சுவையால் மகிழ்ந்த சிவபெருமான் கதவுகள் திறக்கும்படி அருளினார். இருவரும் உள்ளே சென்று வணங்கினர். அப்பர் சம்பந்தரை நோக்கி, இனி இக்கதவுகள் திறக்கவும் அடைக்கவும் இருக்கும்படி இருத்தல் வேண்டும். நீங்கள் இப்போது இக்கதவுகள் மூடுவதற்கு பாடல் பாடி அருளுகஎன்றார். அது கேட்டு சம்பந்தரும், ‘சதுரம் மறைஎனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். கதவுகள் மூடின.

 

 

பனை:- ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக் கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என வேண்டினர். சம்பந்தர் உடனேபூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள் பெண்பனைகளாயின!

 

 

தாளம் :- சம்பந்தர் திருக்கோலக்கா இறைவனைத் துதிக்கும் போதுமடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகத்தைத் தம் கைகளால் தாளம் இட்டுப் பாடினார். அவர் கைகள் சிவந்தன. இதைக் கண்ட இறைவன் அவருக்கு திரு ஐந்தெழுத்து எழுதப்பட்ட பொன்னாலாகிய பொற்றாளத்தை அருளிக் கொடுத்தார். அத்தாளத்தைப் பெற்ற சம்பந்தர் பதிகத்தைப் பொற்றாளமிட்டுப் பாடினார்.

 

 

பாலை நெய்தல் :- சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதரித்த திருத்தலம் திரு நனிபள்ளி. அங்கு அவர் செல்லும் போது அவர் பாதம் நோவதைக் காணச் சகியாத அவரது தந்தையார் அவரைத் தம் தோள் மீது அமர்த்தி நடக்க ஆரம்பித்தார். நனி பள்ளி அடைந்த ஞானசம்பந்தர், ‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகத்தை அருளினார். அதுவரை வளம் குன்றி பாலையாக இருந்த நனிபள்ளி, சம்பந்தரின் வரவால் நெய்தலாக மாறிப் பின்னர் மருதமாயிற்று.

 

 

ஏடு எதிர் :- அனல் வாதத்தில் தோற்ற சமணர் சம்பந்தரை புனல் வாதத்திற்கு அழைத்தனர். தம் தம் கொள்கைகளை எழுதி ஆற்றில் விட எது ஆற்றினை எதிர்த்துச் செல்கிறதோ அந்தக் கொள்கை வென்றதாகக் கொள்ளப்படும் என்ற அவர்களது வாதத்தை ஏற்றுவாழ்க அந்தணர்என்ற பதிகத்தை எழுதி ஆற்றில் விடவே அது எதிர்த்துச் சென்றது. சமணர் தம் ஏடு ஆற்றோடு சென்றது. பின்னர்வன்னியும் மத்தமும்என்ற பதிகத்தை அருள அது வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோவிலின் அருகில் சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் திரு ஏடகம் என வழங்கப்படலாயிற்று.

வெப்பு :- பாண்டிய மன்னன் வெப்பு நோயால் துன்பப் பட சம்பந்தர், ‘மந்திரமாவது நீறுஎன்ற திருநீற்றுப் பதிகத்தை அருளினார். அவர், திருநீற்றைத் தடவிய அளவில் பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தணிந்தது.

 

என்புக்கு உயிர் கொடுத்தல் :- திரு மயிலையில் சிவ நேசச் செல்வரின் மகளான பூம்பாவை பாம்பு கடித்து இறக்கவே, அந்த பூம்பாவையின் எலும்பினை வைத்து. [மட்டிட்ட புன்னைஎன்ற பதிகம் பாடி அவளைச் சம்பந்தர் உயிர்ப்பித்தார்.

இவை தவிர இன்னும் பல அருட்செயல்கள் அவர் வாழ்வில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளன.

தமிழ்நேசர்கள் அவற்றையெல்லாம் படிக்கப் படிக்கத் தமிழாகரனின் தமிழ் எப்படிப்பட்ட தெய்வத் தமிழ் என்பதை உணரலாம்.

 

தெய்வத் தமிழால் அனைத்தும் முடியும் என்பதைச் சொல்லத் தான் அவர் தன்னைத் தமிழ் ஆகரன் (தமிழை உடலாகக் கொண்டவன்) என்று கூறிக் கொண்டாரோ!

திருநெறிய தமிழ் வாழ்க! திருஞானசம்பந்தர் நாமம் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 

*********

முருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!

murugan, fb

Post No 1937; Date: 17th June 2015

Compiled by S NAGARAJAN

Uploaded from London at 6-14 am

By ச.நாகராஜன்

திருப்புகழின் பலன்

“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு”

ஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.

அரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.

முருகனே சம்பந்தர்

அவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.

சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.

அருணகிரிநாதர், இதை.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி திருநீறிடவே

புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்

புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்

கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்

பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே

என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)

பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!

nalavar with siva

சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை

கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்

திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ

திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ

திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா

திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே

என்று பாடுகிறார்.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.

முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.

முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!

****************

அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

For picture of Sambandar click on this
sambandar1

Post No.889 Dated 6th March 2014
By ச.நாகராஜன்

தமிழ் அறிந்தோர் பாக்கியசாலிகள்

தமிழராகப் பிறந்தவர்களும் தமிழைப் பயின்றவர்களும் பாக்கியசாலிகள். ஏனெனில் பெறுதற்கு அரிய சுவர்க்கத்தைப் பெற பக்தியுடன் உள்ளமுருக, தான் பாடிய பாடல்களைப் பாடினாலே போதும் என்று சொல்லக் கூடிய அற்புத பாலகரான சம்பந்தரின் பாடல்கள் தமிழ் மொழியில் தானே அமைந்திருக்கிறது.
நாளும் கோளும் நமக்கில்லை; எந்நாளும் நன்னாளே என்பதை ஆணித்தரமாக பிரகடனப்படுத்தும் திருஞான சம்பந்தரைப் போன்ற மாபெரும் கவிஞரையோ யோகியையோ பக்தரையோ பதினாறு வயதில் தன்னைச் சார்ந்தவர்களுடன் இறைஜோதியில் ஐக்கியமான இன்னொரு அவதாரத்தையோ மனித குல வரலாற்றிலேயே பார்க்க முடியாது!

அஷ்ட கிரஹ சேர்க்கையால் என்ன ஆகுமோ என்று நல்லோர்கள் உளம் பதை பதைக்க காஞ்சி பரமாசார்யாளை அணுகிய போது அவர் மென்மையாக ஞானசம்பந்தரின் கோளறு பதிகம் இருக்கிறதே அதை உள்ளமுருக எங்கும் இசைத்தாலே போதுமே என்றார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளில் எல்லாம் சம்பந்தரின் பதிகம் முழங்கியது. ஒரு வித தீங்கும் நம்மை அணுக வில்லை.

கோளறு பதிகம்

திருமறைக்காட்டில் அப்பரைக் கண்டு ஆனந்தம் கொண்ட சம்பந்தர் மதுரைக்கு கிளம்ப இருந்த தருணத்தில் அப்பர் தயங்கியவாறே நாள் சரியாக இல்லையே என்று கூற சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய பாடல்களே கோளறு பதிகம்.

சாதாரணமாக ஒருவர் ஒரு காரியத்தை உத்தேசித்து வெளியிடங்களுக்குச் செல்லக் கிளம்புகையில் பெரியோரோ அல்லது மனைவியோ மங்களாசாஸனம் செய்து வழி அனுப்புவது நமது பாரம்பரிய வழக்கம்.

பன்னிரெண்டு வருடங்கள் சிவபெருமானை ஆராதித்து ருக்மிணிக்கு புத்திரர்களைப் பெற்றதைச் சுட்டிக் காட்டி ஜாம்பவதி தனக்கும் புத்திரனை வேண்டி கிருஷ்ணரை வேண்டும் போது அவர் “சரி, விடை கொடு நான் கிளம்புகிறேன்” என்று இமயமலைக்குத் தவம் செய்யக் கிளம்பியபோது ஜாம்பவதி கூறிய மங்களாசாஸனம் இது:

“யாதவரே!க்ஷேமமுண்டாகவும் ஜெயமுண்டாகவும் செல்லக் கடவீர்! ப்ரம்மா, சிவன், காஸ்யபர்,நதிகள்,தேவர்கள் புண்யக்ஷேத்திரங்கள், ஓஷதிகள், த்ரேதாக்னிகள், வேதங்கள், ரிஷிக்கூட்டங்கள், யாகங்கள், கடல்கள்,தக்ஷிணைகள்,ஸாமங்கள்,நக்ஷத்ரங்கள்,பித்ரு தேவதைகள், நவக்ரஹங்கள்,தேவபத்தினிகள், தேவகன்னிகைகள், தேவமாதர்கள், மன்வந்தரங்கள், பசுக்கள், சந்திரன், சூர்யன், விஷ்ணு, காயத்ரி, ப்ரம்மவித்தை, ருதுக்கள், ஆண்டுகள், க்ஷணம், லவம், முகூர்த்தம்,நிமிஷம், யுகம் இவையெல்லாம் உமது மனத்திற்கு அனுகூலமாக நீர் செல்லுமிடமெல்லாம் சுகமாக உம்மைக் காப்பாற்றக் கடவன. குற்றமற்றவரே! நீர் ஜாக்கிரதையோடு க்ஷேமமாக வழியில் செல்லும்” (அனுசாஸனபர்வம் 45ஆம் அத்தியாயம், மஹாபாரதம்).

ஒரு காரியத்தை வெற்றிகரமாக ஆக்க எத்தனை தெய்வ சக்திகளும் இயற்கை சக்திகளும் நமக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதை இதைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஆக சூதிலும் வாதிலும் வல்ல புத்த மற்றும் சமணர்களின் இருப்பிடத்திற்கே செல்லும் சிறு குழந்தையான சம்பந்தரை (தந்தை நிகர்த்த!) அப்பர் கவலையுடன் பார்த்துக் கூறியவை சரி தானே! அவரது கவலையால் சம்பந்தர் கோளறு பதிகம் அருள, தமிழ் அறிந்த அனைவருக்கும் சாசுவதமாக வானில் அரசாளும் வரம் உத்தரவாதமாகக் கிடைத்தது (அப்பருக்கு இப்போது வாழும் இனி வரவிருக்கும் தமிழர்களின் நன்றி!)

சம்பந்தர் மிக வேகமாக வேயுறு தோளிபங்கன் என்று தொடங்கி கோளறு பதிகத்தை அருளினார்.

(பாடல் 1இல்)ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 2இல்)ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாட்கள் அவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்ல
(பாடல் 3இல்)திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும் அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 4இல்)கொதி உறு காலன் அங்கி நமனொடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 5இல்)வெஞ்சிண அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல

(பாடல் 6இல்) கோளரி உழுவையோடு கொலை யானை கேழல்
கொடு நாகமொடு கரடி ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 7இல்) வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பத்தும்
வினை ஆன வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 8இல்) ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 9இல்) மலர்மிசையோனும் மாலும் மறையோடும் தேவர்
வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 10இல்) புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல
என்று பாடி மனிதனுக்குத் தேவையான சகல சக்திகளின் அனுக்ரஹத்தையும் தரும் திருநீறு செம்மை திடமே என பிரகடனப்படுத்திக் கிளம்பி விடுகிறார்.

ஆனால் பதிகம் தொறும் இறுதியான பதினோராம் பாட்டிலே பதிகப் பயனைச் சொல்லும் பழக்கமுடைய “நம் பந்தம் போக்க வந்த” சம்பந்தர் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறார் :-
“ஞான முனிவன் தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே” என்ற அவரது கம்பீரமான அருளுரைக்கு இணையாகத் தமிழ் மொழியில் இன்னொரு ஆணையும் இல்லை; அதை அதிகாரத்துடன் (AUTHORITY) சொல்ல இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.

சம்பந்தர் பதினாறே வயதிற்குள் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம். நமக்குக் கிடைத்தவையோ வெறும் 384. ஒரு பதிகம் எனப்படுவது பத்துப் பாடல்களைக் கொண்டது. பதினோறாவது பாடல் பதிகம் பாடினால் ஏற்படும் பயனைச் சொல்வது. ஆக பதினாறாயிரம் பதிகங்கள் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் பாடல்களைக் கொண்டிருக்கும். இன்று நம்மிடம் உள்ள பாடல்களோ எண்ணிக்கையில் சுமார் 4147 தான்!
இந்தப் பாடல்களில் இதே போல இன்னும் மூன்று இடங்களில் ஆணை நமதே என்று ஆணையிடுகிறார்.

sambandar2
Please click here for the picture of Sambandar

ஆணை நமதே பதிகங்கள்

திருநனிபள்ளி தலத்தில், ‘காரைகள் கூகை முல்லை’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”நனி பள்ளி உள்க; வினை கெடுதல் ஆணை நமதே!” என்றும் திருவேதிகுடி தலத்தில், ‘நீறு வரி ஆடு அரவோடு’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப்பாடலில்,”இமையோர் அந்த உலகு எய்தி அரசாளும் அதுவே சரதம்; ஆணை நமதே!” என்றும்
திருக்கழுமலம் தலத்தில், ‘மடல் மலி கொன்றை” என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”வான் இடை வாழ்வர்,மண்மிசைப் பிறவார்,மற்று இதற்கு ஆணையும் நமதே” என்றும் கூறி தன் முத்திரையுடன் கூடிய ஆணையை மொத்தம் நான்கு முறை பிறப்பிக்கிறார்.

இந்த நான்கு பதிகங்களையும் உளம் உருக ஓதுவார்க்கு துயரம் இல்லை; மண்மிசைப் பிறக்க மாட்டார், வானில் அரசாள்வர் என்பது உறுதி!

இதே போல திருவெண்காடு தலத்தில் ‘மந்திரம்’ எனத் தொடங்கும் பதிகத்தில் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே என்றும், திருப்பூந்தராய் தலத்தில் ‘மின் அன எயிறு’ எனத் தொடங்கும் பதிகத்தில் சிவகதி சேர்தல் திண்ணமே என்றும் சீர்காழி தலத்தில் ‘நம் பொருள் நம் மக்கள்’ எனத் தொடங்கும் பதிகத்தில் மிக்க இன்பம் எய்தி வீற்று இருந்து வாழ்தல் மெய்ம்மையே என்றும் (போனஸாக) பக்தர்களுக்குத் தனது ஆணைப் பரிசுகளை வழங்குகிறார்.

ஆணை நமதென்னவலான்!

இப்படி இவர் ஆணையிட்ட திறத்தையும் அதிகாரத்தையும் கண்டு வியந்த நம்பியாண்டார் நம்பி தனது ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் (65 அடிகள் கொண்ட பாடலில் 45ஆம் அடியில்) ‘திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் ஆணை நமதென்னவலான்” என்று பாடுகிறார்.

ஆணை நமதே என்று சொல்லக்கூடிய வல்லவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என திடமுடன் உரைத்த அருணகிரிநாதர், கந்தர் அந்தாதியில் (29ஆம் பாடலில்) “திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே” என்று கூறி சம்பந்தப் பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை என்று கூறுகிறார். இதே பாடலில் சம்பந்தர் பதிகம் ஓதும் பயனைக் கூறுவதையும் வியந்து போற்றுகிறார்.

வள்ளலாரோ சம்பந்தரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டு உத்தம சுத்த சற்குருவே என்றும் இன்னும் பல பாடல்களில் சிவ குருவே, என் உயிர் எனும் குருவே என்றும் அவரை பக்தியுடன் வியந்து ஓதுகிறார்.ஆதி சங்கரரோ சௌந்தர்யலஹரியில் 75ஆம் ஸ்லோகத்தில் தேவியின் பாலை அருந்தி கவிதை மழை பொழிந்த திராவிட சிசு என்று அவரைப் போற்றுகிறார்.

சம்பந்தரின் அருள் செயல்கள்

ஏராளமான தெய்வீக அற்புதங்களைக் காட்டி அனைவரையும் ஆட்கொண்டவர் சம்பந்தர். அந்த அற்புதங்களில் முக்கியமானவற்றை 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தான் பாடிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் இப்படிப் போற்றுகிறார்:

ஓடம், சிவிகை,உலவாக்கிழி, அடைக்கப்
பாடல்,பனை, தாளம், பாலை நெய்தல் – ஏடு எதிர், வெய்யு
என்புக்கு உயிர் கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
ஓடம் – திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (கொட்டமே எனத் தொடங்கும்)
சிவிகை – நெல்வாயில் அரத்துறைப் பதிகம்
உலவாக்கிழி – திருவாவடுதுறைப்பதிகம்
அடைக்கப்பாடல் – மறைக்காட்டுச் ‘சதுரம் மறை’ப் பதிகம்
பனை –திரு ஓத்தூர்ப் பதிகம்
தாளம் – திருக்கோலக்காப் பதிகம்
பாலை நெய்தல் – திருநனிப்பள்ளிப் பதிகம் (காரைகள் எனத் தொடங்கும்)
ஏடு எதிர் – திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் எனத் தொடங்கும்)
வெப்பு – திருநீலகண்டப்பதிகம் (அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும்)
என்புக்கு உயிர் கொடுத்தல் – திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டு இட்ட எனத் தொடங்கும்).

ஆணையிடும் அதிகார ரகசியம்!

சம்பந்தரின் புகழ் எழுத்துக்கும் மனிதப் புலன் உணர்வுக்கும் அப்பாற்பட்டது. அவரால் எப்படி இப்படி அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்று ஆணையிட முடிந்தது என்று அதிசயித்து வியப்போருக்கு அவரே தன் பாடலில் பதிலைத் தந்து விடுகிறார்.
திருஇலம்பையங்கோட்டூர் தலத்தில் ( சென்னைக்கு அருகே திருவிற்கோல தலத்திற்கு அருகில் கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ளது இத்தலம்) பத்துப் பாடல்களிலும் ஒவ்வொரு பாடலின் இரண்டாம் அடியிலும் “எனதுரை தனதுரையாக” என்று அருளுகிறார்.
அதாவது முருகனாக வந்த சம்பந்தரின் உரை சிவபிரானது உரையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சிவனது உரை என்னும் போதே ஆணை நமதே என்று திருஞானசம்பந்தர் சொல்வதற்கான (அதாரிடி எனப்படும்) அதிகாரத்தின் காரணமும் நமக்குத் தெளிவுபடுகிறது.
சம்பந்தர் அருளியதெல்லாம் முருகன் அருளியது; அது சிவபிரானின் உரை என்ற முத்திரையையும் பெற்றது!

சிவப்பிரகாசரின் புகழ்மாலை

சிவப்பிரகாச சுவாமிகள் தனது நால்வர் நான்மணி மாலையில் பாடிய பாடலை மனத்தில் இருத்தி ஞானசம்பந்தரை வணங்கி அவர் இட்ட ஆணையைப் பயன்படுத்தி அடியாரான எல்லோரும் வானில் அரசாளலாம்!

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலம் கல்வி
நல்லாதரவு இன்ப ஞானங்கள் – எல்லாம்
திருஞான சம்பந்தன் சேவடியே என்னும்
ஒரு ஞான சம்பந்தமுற்று!

சின்ன உண்மை:
சோழ நாட்டில் சீர்காழி திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த திருஞானசம்பந்தரின் குரு பூஜை வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.தெய்வத் தமிழ் தினம் இது!

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2013இல் வெளியாகியுள்ள கட்டுரை.

*************************************

Contact swami_48@yahoo.com

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

Pictures are taken from other sites vaimanika.com and Bharat Gyan.Thanks.

 

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

(This article is posted in English as well)

இந்து மத நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் விமானம் பற்றிய குறிப்புகள் உள்ளன. உண்மையிலேயே காற்றடைத்த பலூன் விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத நூல்களும் (வைமானிக சாஸ்திரம்) இருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் வரும் விமானங்கள், —-தேவலோக விமானங்கள்!

புறநானூற்றில் உள்ள செய்தியும் திருஞான சம்பந்தர் தேவாரப் படலில் உள்ள செய்தியும் சுவையான செய்திகள். சிவ பக்தர்களை தேவலோக விமானங்கள் ஏற்றிச் செல்லும் என்றும் அங்கு சென்றபின் அவர்கள் அரசர் போல ஆட்சி செலுத்தலாமென்றும் பாடுகிறார். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு; பக்தி சிரத்தையுடன் ஆடல் பாடலுடன் மனம் உருகிப் பாடுவோருக்கே இந்த விமானம் வரும். இதோ அவருடைய பாடல்:

 

“விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்

வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை

நண்ணிய நூலன் ஞான சம்பந்தன்

நவின்ற இவ்வாய்மொழி நலமிகு பத்தும்

பண்ணியல்பாகப் பத்திமையாலே

பாடியும் ஆடியும் பயில வல்லோர்கள்

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி

வியனுலகாண்டு வீற்றிருப்பாரே” (முதல் திருமுறை/ சம்பந்தர்)

வெங்குருவில் (சீர்காழியில்) பாடிய தேவாரம் இது.

சிலப்பதிகார காவியம் தோன்றுவதற்கு காரணம் கானக மாக்கள் கண்ட ஒரு அதிசய நிகழ்ச்சியாகும். மரத்துக்கு அடியில் ஒருமுலை இழந்த நிலையில் நின்றிருந்த கண்ணகியை அவர் கணவன் கோவலன் வந்து அழைத்துச் சென்ற காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அசந்து போய்விட்டனர். அப்போழுது காட்டுப் பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்த செங்குட்டுவனிடம் இதைக் கூறியபோது அவருக்கும் வியப்பு மேலிடுகிறது. அருகே இருந்த தண் தமிழ்ப் புலவன் சாத்தனார் ஆதியோடு அந்தமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக கூறுகிறார். பின்னர் இளங்கோ அடிகளின் அழியாச் சொற்களில் அற்புதமாக உருவெடுத்தது சிலம்பு. இதோ மலர்மாரி பொழிய கண்ணகி விண்ணுலகம் சென்றதை இளங்கோவின் சொற்களில் படியுங்கள்:

 

“ என்றலும் இறைஞ்சி, அஞ்சி,

இணை வளைக்கை எதிர்கூப்பி,

நின்ற எல்லையுள் வானவரும்

நெடுமாரி மலர் பொழிந்து,

குன்றவரும் கண்டு நிற்பக்,

கொழுநனொடு கொண்டுபோயினார்;

இவள் போலும் நங்குலக்கோர்

இருந்தெய்வம் இல்லை;

(பெரிய தெய்வம், குன்றக் குறவை, சிலப்பதிகாரம்)

புறநானூறு கூறும் புதுச் செய்தி

சங்க இலக்கியத்தில் பழமையான நூல் புறநானூறு. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி (புறம்.27, மு.க.சாத்தனார்)

சோழன் நலங் கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் நல்வினை செய்வோரை வான ஊர்தி ஏற்றி செல்லும் என்றும் அந்த விமானம் விமானி இல்லாமல் தானாக ஓடும் விமானம் என்றும் கூறுகிறார். வலவன் ஏவா என்று அடைமொழி கொடுத்ததில் இருந்து வலவன் ஓட்டிய விமானங்களும் அக்காலத்தில் இருந்தது சொல்லாமல் விளங்கும். இது போன்ற விமானத்தில் செல்லும் பேறு பெற்றோர் புலவர் பாடும் புகழ்மிகும் செயல்களைச் செய்தவர்கள் என்றும் சாத்தனார் பாடுகிறார்.

ராமர்—ராவணன்- குபேர விமானம்

ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் முதலில் குபேரனிடம் இருந்தது. அதை ராவனன் அபகரித்தான். ராமர், இலங்கையை வென்றவுடன் அது அவர் கைக்கு வந்தது. அதில் இலங்கையில் இருந்து அவர் அயோத்தி வரை விரைவாகச் சென்ரறதை நாம் அறிவோம்.

வால்மீகி ராமாயண யுத்த காண்டத்தில் (அத்தியாய 121) தசரத மன்னன் ராமருக்குக் காட்சி கொடுத்த சம்பவத்திலும் தசரதர் விமானத்தில் வந்ததைப் படிக்கிறோம். ஆனால் 5000 ஆண்டுக் கால நூல்களில் மொத்தம் மூன்று நான்கு இடங்களில் மட்டுமே வருவதால் இது உண்மை என்றும் அபூர்வமானது என்றும் அறிகிறோம். சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் பறக்கும் வாகனங்கள் வந்தாலும் அவை கதைக்குச் சுவையூட்ட எழுந்த கற்பனையா உண்மையா என்று அறிய முடிவதில்லை.

(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.)

contact swami_48@yahoo.com