3000 ஆண்டுகளுக்கு முன்னர் அஸீரிய மன்னன் அளித்த தடபுடல் விருந்து! (Post No.7298)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 4 DECEMBER 2019

 Time in London – 9-20 AM

Post No. 7298

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Tags அசீரியா , சுமேரிய , உணவு வகை , மன்னர் விருந்து

சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்! (Post No.3732)

Research Article Written by London swaminathan

 

Date: 17 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3732

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சுமேரிய நாகரீகத்தில் நீர் மற்றும் மலை பற்றிய தெய்வப் படங்களைப் பார்த்தாலோ, அவை பற்றி படித்தாலோ உடனே நினைவுக்கு வருவது கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்தான். ரிக் வேதத்தில் நீர் என்பதைக் குறிப்பதற்குள்ள சொற்களை இவர்கள் பயன்படுத்தியதும் தெரிகிறது! இதோ சில சுவையான விஷயங்கள்:–

 

சம்ஸ்கிருதத்தில் தண்ணீருக்கு ஆபஹ,  அபாம் (நபத்), தோயம் என்றெல்லாம் சொற்கள் உண்டு. கங்கை என்பதை அவர்கள் எங்கை (ENKI) என்று மாற்றி நீர் தேவதைக்குச் சூட்டினர். ஆபஹ என்பதை அப்சு(APSU) என்று மாற்றி கடல் தேவதைக்குச் சூட்டினர். தோயம் என்பதை இயா (EA) என்று மாற்றி நீர்த் தேவதைக்குச் சூட்டினர். கைலாஷ் என்பதை லகாஷ் (LAGASH) என்று மாற்றினர்.

தேவாரம் திருமந்திரம் முதலிய பக்தி இலக்கியத்தில் ஆபஹ என்ற சொல்லை அப்பு என்றுதான் தமிழ்ப் படுத்துவர். பிரெஞ்சு மொழியில் கூட தண்ணீருக்கு யூ (EAU) என்றுதான் பெயர். எழுதும்போது இயௌ என்று எழுதுவர்.

 

பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்ததும், சிவன் தலையிலிருந்து கங்கை பொங்கி வருவதும் நாம் அறிந்த கதைகள். இந்தக் காட்சிகளை அவர்கள் அப்படியே மெசபொடோமியாவின் (இராக் நாடு) டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்குப் பயன்படுத்தினர். நாம் எப்படி இந்தியாவிலுள்ள எல்லா நதிகளிலும், புனித நாட்களில்  கங்கை பாய்கிறது என்று சொல்கிறோமோ அதைப் போல அவர்களும் டைக்ரீஸ் யூப்ரடீஸ் நதிகளில் எங்கை (ENKI) என்னும் தெய்வம் இனிய நீரைக் கொட்டுகிறது என்று எழுதி வைத்துள்ளனர்.

புனித நாட்களில் எல்லா நதிகளிலும் கங்கை பாய்வதாக இந்துக்கள் நம்புகின்றனர். தீபாவளி நாளன்று எங்கு குளித்தாலும் அது கங்கைக் குளியலுக்குச் சமம். இதனால்தான் தீபாவளி நாளன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்கின்றனர்.

 

நாடு முழுதும்  நடக்கும் மினி (Mini Kumba Mela) கும்ப மேளவின்போது அந்த ஊரில் கங்கை பாய்வதாக ஐதீகம்.

 

கங்கை நீர் எல்லா வீடுகளிலும் ஒரு சொம்பில் இருக்கும் இதைப் புனிதப்படுத்தவும், தீட்டுக் கழிக்கவும், சுத்திகரிக்கவும் இந்துக்கள் பயன்படுத்துவர்.

 

சுமேரியாவில் கிடைத்த சிலிண்டர் முத்திரைகளில் கங்கை நீர் பூமிக்கு வரும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இதை கங்கை என்றோ அல்லது கங்கை வரும் காட்சியியைக் காப்பி அடித்து பயன்படுத்தியதாகவும் சொல்லலாம்.

எங்கை என்னும் நதி புனிதமானது என்றும் தூய்மையானது என்றும் களிமண் வடிவப் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது. கங்கையின் மகள் பெயர் நான்ஷி (NANSHE) என்று சொல்லி அவளுக்கு வருடம் தோறும் எரிப்டு (Eribdu) என்ற இடத்தில் விழா எடுக்கின்றனர்.  இது நாம் செய்யும் கங்கா ஆரத்தி, கங்கா மாதா விழா போன்றது. நதிகளின் தோற்றுவாயிலிருந்து படகுப் பேரணி புறப்படும்.

 

சிலிண்டர் முத்திரைகளில்,  சில படங்களில் ஒரு சொம்பு இருக்கும் அதிலிருந்து நீர் பாய்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். அகஸ்த்ய மகரிஷியின் கமண்டலத்திருந்து காவிரி நதி பாய்ந்ததாக நாம் கூறும் கதையை ஒத்திருக்கும் இது.

 

சுமேரியர்கள், இந்துக்களைப் போலவே நதிகளைக் கடவுளராகவே கருதினர்

 

இவையெல்லாம் மற்றொரு பெரிய வரலாற்று உண்மையையும் தெரிவிக்கிறது. அதாவது, அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதும் அதுவும் சரஸ்வதி நதி, நிலத்துக்கடியில் மறைந்த பின்னர் (அந்தர்வாஹினி) இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் என்றும் தெரிகிறது. அது எப்படி?

 

 

இந்தியாவின் நடுவிலுள்ள மத்தியப் பிரதேச காடு மலை குகைகளில் பிம்பேட்கா (Bhimbetka Cave Paintings) முதலிய இடங்களில் 40,000 ஆண்டுகள் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைவிடப் பழமையான 50,000 ஆண்டுக்கு முந்தைய ஓவியங்கள் கிடைத்திருப்பதையும் அண்மைக்காலத்தில் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆகவே இந்திய நாகரீகம் இங்கே தோன்றி இங்கேயே  வளர்ந்து உலகம் முழுதும் சென்றது உறுதியாகிறது.

 

இந்துக்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள நதிகளுக்குக் கங்கை என்று பெயர் சூட்டிவிடுவர். இலங்கையில் ஏராளமான நதிகளுக்கு கங்கை என்று பெயர். அசோக மாமன்னன், கப்பலில் கங்கை நீரை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மீகாங் (மா கங்கா = கங்கை அன்னை), மத்திய ஆப்பிரிக்காவின் காடுகளுக்கிடையே ஓடும் காங்கோ (கங்கா) முதலிய பல நதிகள் கங்கையின் பெயரைத் தாங்கி இன்றும் ஓடுகின்றன.

 

சுமார் கி.மு.2000 ஆண்டு வாக்கில் பெரிய பூகம்பம், நிலச்சரிவு ஏற்பட்டு சரஸ்வதி நதி மறைந்தது. அத்துடன் அந்த நதிக்கரையில் தோன்றிய ஹரப்பா நாகரீகமும் மறைந்தது. அதையடுத்து ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் காரணமாக மக்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லத் துவங்கினர்.

அண்மைக் காலத்தில் நடந்த மரபியல் ஆராய்ச்சி, சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் ஐரோப்பாவில் குடியேறியதையும் காட்டுகிறது. சரஸ்வதி நதியை ரிக்   வேதம் போற்றுகிறது. இது மறைந்த பின்னரே கங்கை நதி அந்த இடத்தைப் பிடித்தது. ரிக் வேதத்தின் காலம், சிந்து வெளிக்கு (ஹரப்பா நாகரீகம்) முந்தையது என்பதை அண்மைக் காலத்தில் கிரேக்க மொழி இயல் அறிஞர் நிகலஸ் கஜானாஸ் நிரூபித்துள்ளார். அவரது மொழி இயல் ஆய்வின்படி ரிக் வேதம் கி.மு.3300க்கு முந்தையது. அதற்கு முன் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என்பதை வானியல் குறிப்புகளை வைத்து முடிவு செய்தனர்.

 

ஆக சுமேரியர்கள் கங்கை நதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத் திருப்பதால் இவர்கள் புராண கால இஞ்சினீயர் பகீரதனுக்கு பிற்பாடு இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் என்றும் கொள்ளலாம். இமய மலை பூகம்பத்தால் அடைபட்டு திசை மாறி வீணான கங்கை நீரை திசைதிருப்பும் மாபெரும் எஞ்சினீயரிங்/ பொறி இயல் அற்புதத்தைச் செய்தவர் பகீரதன். உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்.

 

சுமேரியாவிலும், எகிப்திலும் கி.மு 3000 முதல் முறையான அரசுகள் இருப்பதைக் காண்கிறோம். பல வருடங்களில் அலை அலையாக இந்துக்கள் குடியேறி இருக்கலாம். ஆனால் பெருமளவு குடியேற்றம் சரஸ்வதி நதி மறைந்து,  கங்கை அந்த இடத்தைப் பிடித்த காலத்தில்தான் நடந்தது என்றும் கருதலாம்.

 

இனி கங்கை- எங்கை (GANGA=ENKI) பற்றி மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.

 

மெசபொடோமிய புராணக் கதைகளில் படைப்புத் தெய்வம் என்றும் மனித இனத்தைக் காக்கும் தெய்வம் என்றும் எழுதியுள்ளனர். காலப்போக்கில் பல உள்ளூர் தெய்வங்களுடன் பல கதைகள் கலக்கும்போது எல்லாவற்றையும் ஒரே தெய்வத்தின்பேரில் ஏற்றி விடுவர். இதை இப்போதைய இந்து மதத்திலும் காணலாம். வட      இந்தியர்களுக்கு முருகனுக்கு வள்ளி என்ற ஒரு பெண்ணும் மனைவி என்பது தெரியாது. தென்னிந்தியர்களுக்கு ஆஞ்சநேயரின் மனைவி பற்றி தெரியாது;  வட இந்தியாவில் அவர் பிரம்மசாரி அல்ல!

 

முடிவுரை:

கங்கை, கைலாஷ் போன்ற சொற்கள், கங்கை இறங்கிவரும் காட்சி கொண்ட சிலிண்டர் முத்திரைகள், நதிகளின் தெய்வீகதன்மை, புனிதத் தன்மை, தூய்மை பற்றிய சுமேரிய நம்பிக்கைகள் ஆகியன,  சுமேரியர்களும் இந்தியாவிலிருந்து போனவர்களே என்பதை உறிதிப்படுத்தும்.

 

–subham–

 

 

.

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

God heiroglyph

Indra Dwaja symbol meant GOD in Egypt!

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.

This article was already published in English.

உலகம் முழுதும் இந்திரன் வழிபடப்படுவது பாரத மக்களுக்கு பெருமைதரும் விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” செய்யும் பிராமணர்களின் வீடுகளில் நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும்.

அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் தெள்ளிதின் விளங்கும்.
Vientine, Laos
Indra in Vientine, Laos (South East Asia)

இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பிராமணப் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர்.

தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே.

இந்திர அதிசயம் 1
எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!
indra saci nepal
Indra in wooden sculpture , Nepal

இந்திர அதிசயம் 2
சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது.
பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும்.

இந்திர அதிசயம் 3
இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது.

Indra-Jatra-14-,nepal

Indra Festival in Nepal

இந்திர அதிசயம் 4
கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்!

இந்திர அதிசயம் 5
ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார்.

1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோகம் போவார் (இ) அவர் பெயரில் அண்டிரன் / இந்திரன் இருப்பதால் புலவர் இப்படிப் பாடினார். இந்தக் கடைசி பொருளே சரி என்பது என் முடிவு. மற்ற எல்லா இடங்களிலும் மேல் உலகம் என்று புலவர்கள் பாடுவர். இங்கோ ‘வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்’ — என்று இந்திரன் பெயரை நீட்டி முழக்குகிறார் புலவர். இதே வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.

2. இரண்டாவது செய்தி என்னவென்றால் அவனது உரிமை மகளிர் (மனைவியர்) அவனுடன் (சிதைத்தீயில்) எரிந்தனர். ‘சதி’ என்னும் இவ்வழக்கம் வட நாட்டில் அதிகம் உண்டு. இன்னொரு புறப்பாடலில் பூதப்பாண்டியன் பெருந்தேவியாரும் கணவனுடன் சிதைத் தீயில் ஏறி மாண்டதைக் காண்கிறோம். ஆய் அண்டிரன் வடக்கே இருந்து வந்த வேளிர் மரபைச் சேர்ந்தவன். கபிலரின் புறநானூறு 201 ஆம் எண் பாடலின் உரையில் வேளிர் என்போர் அகத்தியர் தலைமையில் துவாரகா புரியில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிகிறோம். இவை அனைத்தையும் ஒரு சேரவைத்துப் பார்த்தால் ஆய் அண்டிரன் — இந்திரன் என்ற பெயரைக் கொண்டதில் வியப்பில்லை.

indra nepal 3
Indra Festival

இந்திர அதிசயம் 6
இந்திரனை அடிக்கடி காளைமாடு என்று ரிக்வேதம் வருணிக்கிறது. சிந்து சமவெளியிலும் முத்திரைகளில் காளைகளே அதிகம். அதுமட்டுமல்ல. உலகின் பழைய நாகரீகங்களில் யானைச் சின்னம் உள்ளது சிந்து சமவெளியில் மட்டுமே. இந்திரனுடைய வாகனம் யானை வாகனம் என்பதோடு அத்தகைய சின்னம் ஒன்றும் சிந்துவெளியில் கிடைதிருக்கிறது. ஒரு யானையின் மேல் ஒரு உருவம் நிற்க அதன் மேல் சக்ர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆக இந்திரன் எனபவர் மத்திய ஆசியாவில் அல்லது சைபீரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெய்வம் என்ற கூற்று எல்லாம் பொய்யாய்ப் ப்ழங்கதையாய்ப் போயிற்று!!

இந்திர அதிசயம் 7
இந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட திசை கிழக்கு என்பதாலும் அவர் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியானவர் இல்லை என்பது புலப்படும். இந்திய இந்திரனே குதிரையிலும், காளையிலும், யானையிலும் ஏறி உலக வலம் வந்தான் என்று கொள்வதே சாலப் பொருத்தம்!!
antares_m4_stargazerbob_600

Red Colour Jyeshta (kettai in Tamil) Antares Star in Scorpio constellation.

தொல்காப்பியம் புகழும் இந்திரன் வாழ்க !!
தமிழ் தெய்வம் இந்திரன் வெல்க !!!

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” – பாரதியார்.
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” — பாரதியார்.

contact swami_48@yahoo.com