WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,455
Date uploaded in London – – 17 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் இலக்கியத்தில், அதர்வண வேதத்தில் புலிப்பல் தாலி
புலியை வீரத்தின் சின்னமாக இந்துக்கள் போற்றி வருகின்றனர். நாடு முழுதும் புலித் தோல், புலி நகம், புலிப் பல் பாரிய கதைகள் உள்ளன. மன்னர்களின் சீற்றத்தை புலியின் சீற்றத்துக்கு தமிழ்ப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அதர்வண வேதத்தில் ‘வையாக்ரோ மணி’ என்ற பெயரில் புலிப் பல் அல்லது புலி நகத் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதை சிலப்பதிகார, பெரிய புராணக் குறிப்புகளுடன் ஒப்பிடுவோம் .
பல லட்சம் மக்கள் வழிபடும் ஐயப்பன் புலிப் பால் (Tiger Milk) கொண்டு வந்தார்.
துர்க்கைகைக்கும் காளிக்கும் புலி வாகனம் ஆகும்.
ராமாயணத்தில் இராமபிரானை (நர சார்தூல’) மனிதர்களில் புலி’ என்று போற்றும் வால்மீகி மகரிஷியின் வரிகளை நாம் தினமும் வேங்கடேஸ்வ்ர சுப்ரபாதத்தில் பாடி வருகிறோம் (உத்திஷ்ட நர சார்தூல).
பதஞ்சலி , வியாக்ரபாதர் பெயரில் புலி நகம் வருவதை நாம் அறிவோம்.
அப்சல்கானை வீர சிவாஜி புலி நகத்தால் கீறிக் கொன்றதை நாம் அறிவோம் .
சிலப்பதிகாரத்திலும், அதர்வண வேதத்திலும் பெரிய புராணத்திலும் புலிப் பல் செய்தி உளது பலருக்கும் தெரியாது !!
தமிழில் பழமையான ‘புலிப்பல் தாலி’ குறிப்பு சிலப்பதிகாரத்தில் உளது. கண்ணகி- கோவலன் கதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் .நடந்ததை ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ குறிப்பாலும் ஏனைய குறிப்புகளாலும் நாம் அறிகிறோம் . அதற்கு ஆயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதர்வண வேதம் ‘வையாக்ர மணி’ பற்றிப் பேசுகிறது!
தள்ளிப்போன, கொள்ளைக்கார வெள்ளைக்காரனும் கூட அதர்வண வேதத்துக்கு கி.மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளான். மேலும் அதர்வண வேதத்தில் உள்ள பெரும்பாலான மந்திரங்களில் ரிக் வேதத்தின் தாக்கத்தைக் காண்கிறோம்.
டைகர் TIGER என்ற ஆங்கிலச் சொல் வையாக்ர் VAIYAGR என்ற சொல்லில் இருந்து பிறந்ததும் மொழி இயல் வல்லுனர்களுக்குத் தெரிந்ததே .
(எனது தந்தை வெ .சந்தானம் V .SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) ஒரு மான் தோலும். ஒரு புலித் தோலும் TIGER SKIN/HIDE ஜபம் , தியானம் செய்யப் பயன்படுத்தி வந்தார். கோபம் வந்தால் புலி போலச் சீறுவார் . பின்னர், சிலர் புலித் தோலைப் பயன்படுத்தக் கூடாது; அது சன்யாசிகள் போன்றோர் உக்கிரமான தவம் செய்வதற்கானது என்று சொன்னதன் பேரில் மான் தோலை மட்டும் பயன்படுத்தினார்.).
புலி பற்றிய வேதக் குறிப்பைக் காண்போம் .
அதர்வண வேதத்தில் இருபதுக்கும் மேலான அதிசய தாயத்துக்கள் உள்ளன . அதன் பட்டியல் ஆங்கிலக் (Please see my old English article) கட்டுரையில் உள்ளது . தாயத்துக்களை ‘மணி’ என்று வேத கால முனிவர்கள் அழைத்தனர்.
அதர்வண வேதம் , காண்டம் 8, துதி 7 (சூக்தம் 440)- தலைப்பு – ஒளஷதங்கள்
மந்திரம் 14
‘ஒளஷதங்களின் புலி மணியானது பாதுகாக்கட்டும் ; அதை அணிவோனை சாபத்திலிருந்து விடுவிக்கட்டும்; நீசர்களையும் நோய்களையும் வெகு தூரத்துக்கு துரத்தட்டும்’
இந்த மந்திரம் வையாக்ர மணியின் சக்தியைக் காட்டுகிறது
xxx
தமிழ் இலக்கியத்தில் புலிப்பல் தாலி
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், வேட்டுவ வரி, 27-28
“மறம் கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி”
பொருள்
வீரம் உடைய புலியின் வாயைப்பிளந்து பிடுங்கிய வெள்ளிய பற்களை மாலையாகக் கோர்த்து கழுத்தில் தாலியாக அணிவித்தனர் .
பாட்டின் பிற்பகுதியில் குமரியாக வேடம் சூட்டி கொற்றவையாக வணங்கிய குமரிப் பெண்ணுக்கு புலித் தோலை மேகலையாக அறிவித்த செய்தியும் வருகிறது !
கொற்றவைக்கு புலி வாகனம் என்பதை இன்றும் நாம் படங்களில் காண்கிறோம் !
xxx
பெரிய புராணத்தில்
பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் சரிதத்தில் கானக மக்கள் செய்த சடங்குகளின் விவரம் உள்ளது; வேட்டுவர் குல மக்கள் ஒரு குழந்தைக்கு என்ன என்ன செய்தனர் என்ற அரிய செய்திகளை சேக்கிழார் பெருமான் நமக்கு தொகுத்து அளிக்கிறார் :-
ஆண்டெதிர் அணைந்து செல்லவிடும் அடித்தளர்வு நீங்கிப்
பூண்டிதழ் சிறு புன்குஞ்சிப் புலியுதிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கினர் மார்பில் தூங்க
–பெரிய 10-20
பன்றியின் முள், புலியின் பல் ஆகியவற்றை கோத்து செய்த மாலையை கண்ணப்பன் சிறு குழந்தையாக இருந்த பொழுது மார்பில் தொங்க விட்டனர் என்று சேக்கிழார் பெருமான் செப்புகிறார்
குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் புலிப் பல் தாலி அணிந்ததையும் பெரிய புராணம் பேசுகிறது —
அரும்பெறல் மறவர் தாயத்தான்ற தொல்குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடையிடை மனைவி கோத்து
பெரும்புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழை யும் தட்டச்
சுரும் புறு புடலை மூச்சுக்குர் அரிப் பிளவு போல்வாள் –
— பெரிய 10-9
கண்ணப்பனின் தாய் பெயர் தத்தை ; அவள் புலிப் பல்லுடன் , சங்கு மணி கோத்து செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்தாள் என்பது சேக்கிழார் காட்டும் சித்திரம் ஆகும்.
xxx
MY OLD ARTICLES ON THE SAME THEME
தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து …https://tamilandvedas.com › தமிழ…· Translate this page18 Jun 2014 — கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்/–1114; தேதி— 18 June 2014. சங்கத் தமிழ் …You visited this page on 17/12/21.வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page7 May 2017 — சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் … கவிஞன் காளிதாசனும் புலி என்றும் மரம் …Talismans in Atharva Veda & Ancient Tamil Literaturehttps://tamilandvedas.com › 2014/06/17 › talismans-in-…17 Jun 2014 — Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth. That gave them courage …You visited this page on 17/12/21.
Talisman | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › talismanThough the Vedas speak about different herbs indifferent places, the most famous hymn is the ‘THE HEALING PLANTS’ hymn in Rig Veda (10-97). Western World is …
Amulets | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › am…· Translate this page3 Aug 2019 — 17 Jun 2014 – Talismans in Atharva Veda & Ancient Tamil Literature. AV1 … Havis Parnamani (K 19-22): Used for subduing enemies (Amulet of Palasa) …Tiger | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › tiger6 May 2017 — Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. The word ‘Venkai; means a Venaki tree and a tiger in Tamil. The …
Tiger Goddess of Indus Valley | Tamil and Vedashttps://tamilandvedas.com › 2012/08/22 › tiger-goddess…22 Aug 2012 — Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian? Scholars who study Indus valley civilization are struggling to identify the Indus Valley …
தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து …https://tamilandvedas.com › தமிழ…· Translate this page
18 Jun 2014 — குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் …
வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page
7 May 2017 — சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் … கவிஞன் காளிதாசனும் புலி என்றும் மரம் …
Tiger | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › tiger
6 May 2017 — The word ‘Venkai; means a Venaki tree and a tiger in Tamil. … We have got lot of this images in Sangam Literature.
Talismans in Atharva Veda & Ancient Tamil Literaturehttps://tamilandvedas.com › 2014/06/17 › talismans-in-…
17 Jun 2014 — Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth.
–subham–
tags– வையாக்ரோ மணி, புலிப் பல், புலி நகத் தாலி,
சிலப்பதிகாரம், பெரிய புராணம் ,அதர்வண வேதம்