Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
July 1 National Doctors’day மருத்துவர் தினம்
1-7-2026 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள பொன்மொழிகள்!
புகழ் பெற்ற மருத்துவப் பொன்மொழிகள்!
ச. நாகராஜன்
மக்களிடம் டாக்டர்களின் முதல் கடமை எப்படி வியாதிக்கு உள்ளாகாமல் இருப்பது என்பதை போதிப்பது தான். டாக்டர் என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. இதன் அர்த்தம் போதிப்பவர் என்பது தான்!
– பிரபல அமெரிக்க டாக்டரான ஆண்ட்ரூ வெய்ல்
ஒரு மருத்துவராக ஒருவருடைய வேலை என்னவெனில் நல்ல உறுதிமொழியை அளிப்பது தான். அதை விட முக்கியம் தான் கொடுத்த உறுதிமொழியை அவர் காப்பாற்றுவது தான்.
– ஐரிஷ் பெண்மணியான டாக்டர் பிக்ஸி மக்கென்னா. டி.வி.
நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். டாகுமெண்டரி தயாரிப்பாளர்
எவ்வளவு வயதாகியிருந்தாலும் சரி, எவ்வளவு எடையைக் கொண்டிருந்தாலும் சரி, இப்பொழுதும் கூட நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கட்டுப்படுத்தலாம்.
– அமெரிக்க நியூரோ சர்ஜன் ஹார்வி குஷிங். மூளை அறுவை சிகிச்சையில் பெயர் பெற்றவர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அறிவு சரியாக வெளிப்படாது, பலத்தால் சண்டை போட முடியாது, நுண்ணறிவைப் பயன்படுத்த முடியாது, கலை உருவாகாது, பணம் பயனற்ற ஒன்றாக இருக்கும்.
– கிரேக்க மருத்துவரான ஹிரோபிலிஸ். பண்டைய நாட்களில் கிரேக்கத்தில் பிரபலமான மருத்துவர்.
மருத்துவத்தில் இறுதி நிலையாக நாம் அடைய வேண்டியது மன நல மருத்துவம் தான். ஏராளமானோர் தனிமையில் வாடுகிறார்கள். ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆதரவின்றி இருக்கிறார்கள். மீள முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
– பிரிட்டிஷ் டி.வி. டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸன் மனநல மருத்துவம் பற்றி எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் பெற்றவர்.
வியாதியைப் பரிசோதிக்கும் போது நாம் உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிரியல் பற்றி நல்ல அறிவைப் பெறுகிறோம். நோயாளியைப் பரிசோதிக்கும் போது வாழ்க்கையைப் பற்றிய அறிவைப் பெறுகிறோம்.
– ஆலிவர் சாக்ஸ் நியூரோ சர்ஜன்
ஒரு டாக்டராகட்டும் அல்லது எந்த மனிதராகட்டும் அவரது முதல் குறிக்கோள் நோயாளியின் மரணத்தைத் தள்ளிப் போடுவதாக மட்டும் இருக்கக் கூடாது, ஆனால் அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
– அமெரிக்க டாக்டரான பாட்ச் ஆடம்ஸ் (இவரது பெயரிலேயே இந்த வசனம் ராபின்ஸ் வில்லியம்ஸ் வாயிலாக திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது)
நல்ல டாக்டர் குறைந்த மருந்துகளையே அளிப்பார்.
– பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
எங்கே மருத்துவம் விரும்பப்படுகிறதோ அங்கே மனித குலத்தின் மீதான அன்பும் இருக்கிறது.
– ஹிப்போக்ரேடஸ்
ஒரு நல்ல மருத்துவர் வியாதியைக் குணப்படுத்துவார். ஆனால் ஆகப்பெரிய மருத்துவரோ வியாதியுள்ள நோயாளியைக் குணப்படுத்துவார்.
– வில்லியம் ஆஸ்லர்
ஒருவர் உயிரைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு ஹீரோ. நூறு பேர்களைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு நர்ஸ்
– யாரோ
மருத்துவ உலகின் இதயம் நர்ஸ்களே
– டோனா வில்க் கார்டில்லோ
நன்கு உற்று கவனிப்பது, பகுத்தறிவால் ஆராய்வது, மனிதத்தன்மையைப் புரிந்து கொள்வது, தைரியம் – இவையே ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும்.
– மார்டின் ஹெச். பிஷர்
மருத்துவத்தின் நோக்கம் வியாதியைக் குணப்படுத்தி நீடித்த வாழ்வைத் தருவது தான். ஆனால் மருத்துவத்தின் இறுதி லட்சியம் ஒரு மருத்துவரின் தேவையை இல்லாமல் செய்வது தான்!
– வில்லியம் ஜே. மாயோ
மருத்துவ உலகில் ஒரு டாக்டருக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு நோயாளியின் நன்றியும் அவரது புன்சிரிப்பும் தான் \
– யாரோ
பச்யேம சரத சதம் – (சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம்)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாதங்க
ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:
இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன் ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.
***
மேதாதிதி
காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும் இருக்கிறது.
***
மேதாவி
பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது. பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.
***
மேனகா
தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்; பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.
***
மேனா
ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)
****
மேரு
பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன; மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .
***
மிதிலை
ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில் விதேஹம் என்ற பெயர் இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.
***
மிலேச்சர்
மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.
பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS (காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர், அநாகரிகர்,பண்பற்றவர்) என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய(காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமைபோன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.
சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.
***
மேகநாதன்
ராவணனின் மூத்த மகன்.
ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால் ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.
***
மேக தூதம்
காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை அளிக்கிறான்
மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.
காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.
காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில் 75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.
அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .
ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை.தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems) உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.
***
மித்ரன்
சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.
மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.
சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.
பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .
TO BE CONTINUED……………………….
TAGS-மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்
திருமாலிருஞ்சோலை என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது ; இந்த இடத்தின் தற்போதைய பெயர் அழகர் கோவில் ; மலை அடிவாரத்தில் பெருமாள் கோயில்இருக்கிறது; மலையில் ஏறிச் சென்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமானின் பழமுதிர்ச் சோலையைத் தரிசிக்கலாம் ; அதற்கும் மேலே மலையேறிச் சென்றால் நூபுர கங்கை என்னும் சின்ன அருவி; இதிலிருந்து ஒடிய சிலம்பாறு ஒருகாலத்தில் பெரிய நதியாக இருந்திருக்க வேண்டும் .
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் கோயில் உள்ளது; அங்கு அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமால் கோயிலை திருமாலிருஞ்சோலை என்றும் மாவிருங்குன்றம் என்றும் சோலை மலை என்றும் வைணவர்கள் அழைத்தார்கள்; இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி .
உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜப் பெருமாள்
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி
மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி
மண்டலம் : பாண்டியநாடு
கடவுளர்கள்: கள்ளழகர் கல்யாணசுந்தரவல்லி
***
சித்திரைத் திருவிழா
இந்த விழாவை தற்போதைய வடிவில் அமைத்த மன்னர் திருமலை நாயக்கர் ஆவார் .மீனாட்சி திருக்கல்யாணம் (திருமணம்) விழாவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் ஒரே திருவிழாவாக இணைத்தார்..
1. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 💍
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்-ல்
மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.
2. தேர் திருவிழா
பெரிய தேரில் தெய்வங்கள் நகரை சுற்றி வருவது பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.
3. அழகர் வருகை :அழகர் கோவிலிலிருந்து
கள்ளழகர் மதுரைக்கு வந்து, வைகை நதியில் இறங்குவது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகும் ; வரும்போதும் அழகர் திரும்பிப்போகும் போதும் பல லட்சம் மக்கள் கூடிக் கொண்டாடுவர்; முக்கியமாக கள்ளர் மரபினர் பழங்கால வேடம் அணிந்து தண்ணீர் பைகளிலிருந்து தண்ணீரைப்பீச்சி அடித்த வண்ணம் வருவார்கள் ;அதைக் காணக் கண்கோடி வேண்டும்
அழகர் தனது சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு வருகிறார். ஆனால் அவர் தாமதமாக வந்து, திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்தில் வைகை ஆற்றில் இறங்குவதாக நம்பப்படுகிறது.
இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது
வைகை ஆற்றின் கரையோரமுள்ள நூற்றுக் கணக்கான மண்டகப்படிகளில் மக்களுக்கு இலவச உணவுப் பிராசதம் கிடைக்கும்.
***
கோயில் கலைச் சிறப்புகள் :
முழுமை அடையாத இராஜ கோபுரம்
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
***
மதுரையில் வியாழன் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய சந்தையொன்று, திலகர் திடலில் கூடும்; அப்போது நூற்றுக்கணக்கான மூலிகைகளும் கீரைவகைகளும் ஒரு பகுதியில் இருக்கும்; மாவடு விற்போர் அந்தந்த சீசனில் வருவார்கள்; இன்னுமொரு பக்கம் மாகாளிக்கிழங்கு குவிந்து கிடக்கும்; அத்தனையும் அழகர் மலையிலிருந்தது வந்தவை ; பிற்காலத்தில் ஆண்ட அரசியலவாதிகள் அந்த வாராந்திர மார்க்கெட்டை அடியோடு அழித்தார்கள். ஒரு காலத்தில் காடுகளும் ஆறுகளும் நிறைந்த இந்தப் பகுதி இப்போது நூற்றில் ஒரு சதவிகிதம் மிஞ்சி இருக்கிறது என்று சொல்லலாம்.
****
நாலாயிர திவ்ய பிரபந்தம்
முதல் ஆயிரம்—ஆண்டாள்–நாச்சியார் திருமொழி
586 சிந்துரச் செம்பொடிப் போல்
திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
சுழலையினின்று உய்துங் கொலோ? (1)
587 போர்க்களிறு பொரும்
மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
அவன் தார் செய்த பூசலையே (2)
588 கருவிளை ஒண்மலர்காள்
காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
589 பைம்பொழில் வாழ் குயில்காள்
மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
நிறம் உங்களுக்கு என் செய்வதே? (4)
590 துங்க மலர்ப் பொழில் சூழ்
திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
591 நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
592 இன்று வந்து இத்தனையும்
அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
மனத்தே வந்து நேர்படிலே (7)
593 காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
594 கோங்கு அலரும் பொழில்
மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
595 சந்தொடு காரகிலும்
சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
திருமாலடி சேர்வர்களே (10)
****
திருவாய்மொழி–பத்தாம் பத்து
மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.
அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.
அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.
***
3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சேலை,
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து,என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம்,என்
நெஞ்சு முயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே.
திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்
3734. தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்,
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து,எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமா லிருஞ்சோலை,
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே..
ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!
3755. என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு,
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான்சேர்,
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,
இன்னம் போவே னேகொலோ!
என்கொல் அம்மான் திருவருளே?
எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்
3736. நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த,
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப,
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி,
தென்னா வென்னும் என்னம்மான்
திருமா லிருஞ்சோ லையானே.
திருமால் என்னை ஆள்கின்றான்
3738. திருமா லிருஞ்சோ லையானே
ஆகிச் செழுமூ வுலகும்,தன்
ஒருமா வயிற்றி னள்ளேவைத்
தூழி யூழி தலையளிக்கும்,
திருமா லென்னை யாளுமால்
சிவனும் லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே.
எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்
3739. ‘அருளை ஈயென் அம்மானே!’
என்னும் முக்கண் அம்மானம்,
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை
திருமா லிருஞ்சோ லைமலையே.
என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்
3740. திருமா லிருஞ்சோ லைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால் வைகுந் தமேதண்
திருவேங் கடமே எனதுடலே,
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே,
ஒருமா நொடியும் பிரியானென்
ஊழி முதல்வன் ஒருவனே.
மனமே!திருமாலை விடாமல் பிடி
3741. ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்,
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.
ஆழி வண்ணன் என்னம்மான்
வாழி!மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
நானேயாகி என்னை அளித்தவன் திருமால்
3742. மங்க வொட்டுன் மாமாயை
திருமா லிருஞ்சோ லைமேய,
நங்கள் கோனே!யானே c
யாகி யென்னை யளித்தானே,
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந் திரியும் ஐம்பூதம்,
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி
மானாங் கார மனங்களே.
3743. மானாங் கார மனங்கெட
ஐவர் வன்கை யர்மங்க,
தானாங் கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை,
தேனாங் காரப பொழில்குருகூர்ச்
சடகோ பன்சொல் லாயிரத்துள்,
மானாங் காரத் திவைபத்தும்
திருமா லிருஞ்சோ லைமலைக்கே.
****
திவ்யதேச பாசுரங்கள்
71.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மைத்ரேயி
Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.
பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .
***
மலையத்வஜ பாண்டியன் / மீனாக்ஷி
மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன; மீனாட்சி பற்றி பண்டேயா அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்
மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்
****
மாளவிகாக்னிமித்ரம்
காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம் முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழியில் அந்தக் காலத்திலேயே 640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார் அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக் கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப் பாராட்டுகிறது.
***
மனஸ்/ மனம்
சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம் என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.
***
மண்டிலம்/ மண்டலம்
Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை மண்டலம் என்பார்கள்.
தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப் போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.
யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில் இருந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.
தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும் ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.
***
மங்கலதேவி/ கண்ணகி
வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/ கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி கோவில்கள் உள்ளன . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில், கோவல னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .
***
மங்கள சூத்ரம்
இது ஹிந்துப் பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்
***
மாங்கல்யதாரணம்
தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .
***
மணிபல்லவம்
மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.
மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.
***
மனிஷா பஞ்சகம்
மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, எதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.
***
மன்மதன் / மதன/ மாரன்/காம தேவன்
காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி; அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.
****
மந்திரம்
மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள்
Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் 28
பொருள்: நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி) எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .
நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .
அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .
ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.
(Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).
மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்
மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும். மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.
வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .
****
மனு / மன்வந்தரம்
மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.
மன்வந்தரம்
இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..
கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .
14 மனுக்கள் பெயர்கள்
சுவாயம்புவ மனு,
சுவாரோசிஷ மனு,
உத்தம மனு,
தாமச மனு,
ரைவத மனு,
சாக்ஷுஷ மனு,
வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),
சாவர்ணி மனு,
தக்ஷ சாவர்ணி மனு,
பிரம்ம சாவர்ணி மனு,
தர்ம சாவர்ணி மனு,
ருத்ர சாவர்ணி மனு,
தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,
இந்திர சாவர்ணி மனு
***
மனு ஸ்ம்ருதி
முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
To be continued……………………………….
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!
மரணத்தைக்கண்டுஅஞ்சாதே –
புருஷனும்புருஷோத்தமனும் – ஶ்ரீசத்யசாயிபாபா
அருளுரை!
ச. நாகராஜன்
22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!
வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட
தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது
அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால்
அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு டாக்டரை
அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப்
புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர். தான் சம்பாதித்த பணைத்தை
எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது
பிள்ளைகள் அனுமானித்தனர். ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக
அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு
எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?
‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது
கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா?
விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது அவன் தலையை
அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க
நேர்ந்தது!
அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது. நீங்கள் பீஷ்மரைப் போல மரணம் அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார். மரணம் என்பது
பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ
அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே
கிடையாது. நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று.
பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து
விட்டது. சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச்
சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம். ஆனால் மனிதனோ மரணம் என்பது தூரத்தில் இருக்கும் ஒரு துயரம் என்று நினைத்து நடக்கிறான்.
அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம கடன்களை உணரும் தருணம் அது என்றும் கூறித் தேற்றுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து
தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள
முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!
அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான். ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன்
இருக்கிறான்.
பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல. புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மந்தபால
மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .
***
மாண்டவ்ய ரிஷி / ஆணி மாண்டவ்ய
பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.
ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர் ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் வருகிறது மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்; திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
***
மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
***
மஹா கால
சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்; அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.
***
மகரிஷி / மஹரிஷி
தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.
நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.
ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.
இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.
தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.
தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.
ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.
இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–
முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:
ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.
பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:
மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.
மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:
கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்
ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.
யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்
சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்
உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.
சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.
( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
****
மஹா வாக்கியங்கள்
மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:
1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )
உணர்வு / பிரக்ஞை பிரம்மம்
ஐதரேய உபநிஷத் (3.3) ரிக் வேதம்,
**
2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா ப்ரஹ்ம )
உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்
: மாண்டூக்ய உபநிஷத் (2) அதர்வ வேதம்
**
3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )
நீயே அதுவாக இருக்கிறாய்
சாந்தோக்கிய உபநிஷத் (6.8.7) சாம வேதம்
**
4. अहम् ब्रह्म अस्मि அஹம் ப்ரஹ்மாஸ்மி
நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்
பிருஹதாரண்யக உபநிஷத் (1.4.10) of the யஜுர் வேதம் .
**
வேறு சிலமஹா வாக்கியங்கள்
सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்
इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது
***
மஹேந்திர வர்மன்
Music Inscription
Pallava Period Hero Stone for a Dog.
உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்
டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.
“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்
“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,
என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;
“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.
செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.
டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .
Mamamdur Caves of Mahendra Pallava
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)
சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.
பட்டங்கள்
இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.
புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.
மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.
சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.
***
பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி
Queen Magaiyarkarasi
மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின;
இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.
சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே
என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு
ஆலவாயன் திருநீறே’
பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .
பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.
***
மங்கம்மாள் , ராணி மங்கம்மாள்
திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு. எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்; பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.
. மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.
மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.
அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
***
மாணிக்கவாசகர்
Manikkavasagar
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக் கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர் மூவர் குறிப்பிடவில்லை. திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம் அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள்
அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.
மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!
–subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய
விசேஷங்கள் – பெருமாளுக்கெதிரே நதிதேவதைகள் வணங்குகின்றனர். இங்கேதான், ஸ்ரீமந்நாதமுனிகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழிகளைக் கேட்டு, திவ்யப்ரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார். ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு, ஸ்ரீ மந்நாத முனிகள், “ஆராவமுதாழ்வான்” என்ற திருநாமம் சாற்றியருளினார்.
ஹேமரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீஹம்.
பெருமாளின், அழகிய, பெரிய சித்திரைத்தேர் ப்ரஸித்தி பெற்றது. பெருமாள் ஸந்நிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. ஆயிரம் இதழ் கொண்ட பெற்றாமரை குளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டதால் கோமலவல்லி என்று பெயர் சூட்டினர். திருமால், ஆராவமுதன் என்ற திருநாமத்துடன் யானைகள், குதிரைகள் பூட்டிய தேரில் வைகுண்டத்தில் இருந்து வந்து தாயாரைத் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
ராமஸ்வாமி கோவிலும் சக்ரபாணி கோவிலும் இவ்வூரில் உள்ளன. சக்கரபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும் சாரங்க பாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன.
சக்ரபாணி மற்றும் சாரங்கபாணி ஆகிய இரு கோவில்களும் அருகருகே அமைந்து, குடந்தையின் (கும்பகோணம்) புகழைப் பாடுகின்றன.
பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
கையில் சாரங்கம் என்னும் வில்லினை ஏந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி (சாரங்கம்- விஷ்ணுவின் வில்; பாணி- கை) என்ற பெயர் உண்டாயிற்று.
மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது.
கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு சாரங்கபாணி தலையைத் தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சிணாயன வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்குத் திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்ததாகும். கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள், ராஜ கோபுரங்கள், சோழர்களால் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் ராஜகோபுரம் 11 நிலைகளுடன், 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. மேலும் 5 சிறிய கோபுரங்கள் உள்ளன. பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்: லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார்.
தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.
மறைந்து போயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஸ்ரீ நாதமுனிகள் இந்தத் தலத்தின் பெருமாளை வேண்டி, அவரது அருளால் பிரபந்தங்களை மீட்டெடுத்தார்.
.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்! என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா! என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ****.
பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசர் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
English version was posted yesterday.
****
லாஸ்யம்
பெண்கள் ஆடும் நடனம் லாஸ்யம் ;ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய லாஸ்யமும் கூறப்படும். ஒரு போட்டியில் தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார்; லாஸ்யத்தை உமா தேவியார் ஆடினார் அந்தப் போட்டியில் தேவியார் தோற்றுப்போனார் என்றும் கூறுவர்; ஏனெனில் பெண்கள் கால்களை உயர்த்தி தூக்கி ஆடக்கூடாது என்பது நடைமுறை.
***
லவங்கம்
CLOVE கிராம்பு (லவங்கம் Syzygium aromaticum). பூஜையில் பயன்படுத்தப்படும் வாசனைப்பொருள். சமஸ்கிருதத்தில் லவங் என்று அழைக்கப்படுகிறது, ஆயுர்வேத மூலிகை ஆகும். காரமான சுவையும் வாசனையும் உள்ளது சமையலில் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளில் பிரபலமாக உள்ளது. பல் வலி மருந்தாகவும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மூலிகையாகவும் பயன்படும் இது ஒரு தாவரத்தின் மலர் மொட்டு ஆகும்.
***
லலித விஸ்தார
புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் சம்ஸ்க்ருத நூல் ; இதில் அக்கால பண்பாட்டு விஷயங்கள் இருப்பதால் அடிக்கடி மேற்கோள்களில் பயன்படுகிறது
***
லக்ஷணம்
லக்ஷணம் (இலக்கணம்/லட்சணம்) என்பது பொதுவாக அழகு, தன்மை, அடையாளம் அல்லது ஒரு பொருளின் சிறப்பியல்பு ஆகியவற்றைக் குறிக்கும். சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற நூல்களில் இது அங்க அழகு என்றும், ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுகிறது. சில சூழல்களில், இது சாசனப்பத்திரம் (Deed) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
***
லக்ஷியம்
ஒருவருடைய குறிக்கோள் லக்ஷியம் எனப்படும்; ஒருவர் தான் அடைய வேண்டியதை தனது லக்ஷியம் ஆக வைத்துக்கொள்வார் . கீழே காஞ்சி சுவாமிகளின் உரையில் இந்தச் சொல் வருகிறது: “புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்”.
***
லெமூரியா
இது ஒரு கற்பனைக் கண்டம் . இந்தச் சொல்லை முதலில் ஒரு ஆங்கிலேயர் (English zoologist Philip L. Sclater (1829-1913) உருவாக்கி அதை கிரேக்கர்கள் சொல்லும் இன்னொரு மறைந்த அட்லாண்டிஸ் கண்டத்துடன் சேர்த்து புஸ்தகம் எழுதினார்.
இந்தச் சொல் இப்பொழுது மடகாஸ்கர் என்னும் பிரம்மாண்டமான தீவு நாட்டில் (இப்போதைய பெயர் மலகாசி) காணப்படும் லெமூர் LEMUR என்னும் பிராணிகளிடத்திலிருந்து அவராக கற்பனையில் உருவாக்கிய சொல்; அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை; இதே பிராணிகளின் பழைய பாசில் FOSSIL சுவடுகள் இந்தியாவிலும் கிடைப்பதால் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ; அப்போது மனித இனமோ நாகரீகமோ தோன்றவில்லை!
இதே போல குமரிக்கண்டம் என்பதும் உண்மையே ; இரண்டு பெரிய சுனாமி தாக்குதல்களில் கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு கடலில் சென்றது; இதற்கும் லெமூரியாயாவுக்கும் தொடர்பு இல்லை. நமது காலத்திலேயே சுனாமி வந்து தனுஷ்கோடி முதலிய இடங்கள் கடலுக்குள் மூழ்கியதையும் குஜராத்தில் கிருஷ்ணரின் துவாரகை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கியதையும் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால் இவை எல்லாம் சிறு நிலப்பரப்பே . பெரிய கண்டமல்ல ; மேலும் சோழர் கல்வெட்டில் வரும் இலமூரி தேசமும் சுமத்ரா தீவில் உள்ள இடம் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் வெளியிட்ட இந்துமஹாசமுத்திரப் படம், கடலில் மூழ்கிய மலைகளுடன் என்னிடம் உள்ளது; அதிலும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியதற்கான் தடயங்கள் காணப்படவில்லை ; ஆக நாகரீகமுள்ள லெமூரியா என்பது கற்பனையே .
கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு முதலியன மூழ்கியது பற்றி குறிப்பிடுகின்றன .
SEE THE PICTURE
இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம்ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது , சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
Lemuria, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.
Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May.
***
லிங்கம்/ சிவலிங்கம்
‘லிங்கம்’ என்றால் குறி MARK என்று பொருள்; பால் GENDER என்ற பொருளிலும் இலக்கணத்தில் வரும். சம்ஸ்க்ருத வகுப்பில் அகாரந்தப் புல்லிங்க: ராம சப்த: இகாரந்த ஸ்த்ரீலிங்க: என்று சொல்வதிலிருந்து இது ஆணையோ பெண்ணையோ அலியையோ குறிக்கப் பயன்படும் என்பதை அறியலாம். இறைவனுக்கு உருவம் உண்டு/ இல்லை என்பதை சிவபெருமானின் அடி முடியைத் தேடுவதற்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற கதை காட்டுகிறது ;12 லிங்கம் உள்ள ஸ்தலங்களை இந்துக்கள் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று வழிபடுகின்றனர்.
நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், லிங்க வடிவிலுள்ள மலையை இமயத்திலுள்ள புனித கயிலாய மாகவும், காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கத்தை ஜஸ் லிங்கமாகவும் இந்துக்கள் வழிபடுகிறார்கள் .
இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்;.சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வலைகளால் இப்படி நடக்கிறதென்று ஜியாலஜிகல் மேகசினில் GEOLOGICAL MAGAZINE கட்டுரை வெளியாகியுள்ளது.
சிந்து சமவெளியில் மொஹஞ்சசத்தாரோ, ஹரப்பாவில் கிடைத்தவை லிங்கங்கள் அல்ல; தாயக் கட்டத்தில் வைத்தாடும் காய்கள் அல்லது எடைக் கற்கள் என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
காஞ்சி மஹா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1894-1994) லிங்க வழிபாடு மற்றும் சிவலிங்கத்தின் தத்துவம் குறித்துப் பேசியுள்ளார் .
அருவுருவ நிலை: சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் லிங்கம் ஆகும். இது உருவமும் (ரூபம்) அல்ல, உருவமற்றதும் (அரூபம்) அல்ல. உருவமும் அருவமுமாக இணைந்த அருவுருவம் என்று காஞ்சி சுவாமிகள் லிங்க வடிவத்தை விளக்குகிறார்.
பஞ்ச பூத லிங்கங்கள் என்பன ஐந்து கோயில்களில் உள்ளன ;காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சந்திரமௌலீஸ்வரர் (ஸ்படிக லிங்கம்) உள்ளது . லிங்கம் என்பது பரம்பொருளை மனதளவில் உணர்வதற்கான மிக உயர்ந்த குறியீடு .
வேதங்களிலோ , சங்க இலக்கியத்திலோ , காளிதாசன் மாணிக்கவாசகரின் படைப்புகளிலோ லிங்கம் என்ற சொல்லினைக் காண முடியாது; மிகவும் பிற்கால தமிழ் பக்தி இலக்கியங்களிலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் மட்டுமே லிங்கம் என்ற சொல் வருகிறது; ஆனால் அதற்கு முன்னர் வழிபாடு இருந்ததற்குத் தொல்பொருட் துறைச் சான்றுகள் உள்ளன .
Tallest Lingam in Kerala.
***
லீலாவதி
லீலாவதி ( Līlāvatī ) இரண்டாம் பாஸ்கரரால் சமஸ்கிருதத்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.இந்தப் பகுதியின் பெயர் பாஸ்கரரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. பீ ஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் என்ற தலைப்புகளில் இந்துக்களின் கணித அறிவு விளக்கப்பட்டுள்ளது ; மேலை நாட்டினாருக்கும் முன்னதாகவே ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா ஆகி யவற்றினை சுவைபட விளக்கும் சம்ஸ்க்ருத நூல்
Srirangam Temple Tower.
To be continued……………..
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 ,லீலாவதி,லிங்கம், சிவலிங்கம், லெமூரியா, லாஸ்யம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (53) மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது!
ச. நாகராஜன்
‘மால்யவான் முதலியவர்களுடைய உற்பத்தி ‘ என்ற உத்தரகாண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கத்தில் மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்த செய்தியைக் காண்கிறோம்.
விசுவாவஸு என்ற ராக்ஷஸனின் இரண்டாவது புதல்வியான தேவவதீ என்பவளை ஸுகேசன் என்ற ராக்ஷஸன் மணந்தான்.
அந்த தம்பதியர்க்கு மால்யவந்தன், சுமாலி, மாலி ஆகிய குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் திரேதாக்கினிகளான கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி போல தேஜோவான்களாக மிளிர்ந்தார்கள்.
தங்கள் தந்தை பரமேஸ்வரரை தியானித்து புரிந்த தவத்தால் வரபாக்கியம் பெற்றதை அறிந்த அவர்கள், அவரைப் போலவே தாங்களும் தவம் செய்ய மன உறுதி கொண்டு மேருமலைக்கு வந்தனர். கடுமையான தவத்தைப் புரிந்தனர்.
இதனால் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, “வரமளிக்கிறவனாகத் தோன்றி இருக்கின்றேன்” என்று கூறினார்.
பிரம்மாவிடம் சுகேசனது புதல்வர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்க பிரம்மா அதைத் தந்தருளினார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mantras are taken from wisdomlib.org; Thanks.
ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.
இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;
“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்” ரிக் வேதம் (1.164.46 ) .
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்’
‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’
என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.
வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :
1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;
2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;
3.ஆரண்யகங்கள் – கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;
4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .
நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :
நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் –ரிக் வேதம் 8-43-31
இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;
We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,
இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.
****
மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம் செல்வதும் அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!
ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம்,
“ஓ பவமான சோமனே
எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.
விவஸ்வானுடைய மகன் அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;
சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,
புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”
–RV 9-113-7/8
7. O Pavarnana, place me in that deathless, undecaying world
Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.
8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,
Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.
இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்
ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது
ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.
அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,
எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்; பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19
yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||
English translation:
“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19
சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்
இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.
“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8
अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥Rig Veda 10.53.8
aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8
English translation:
“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8
***
கர்மவினைக் கொள்கை
சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,
முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .
according as he acts and according as he behaves, so will he be;
a man of good acts will become good, a man of bad acts, bad;
he becomes pure by pure deeds, bad by bad deeds;
And here they say that a person consists of desires,
and as is his desire, so is his will;
and as is his will, so is his deed;
and whatever deed he does, that he will reap.
— Brihadaranyaka Upanishad,
ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக கூறுகிறார் ,
“ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”
இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,
பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?
இதற்கு ரிஷி கொடுத்த பதில்,
இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .
இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்; அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத் தருகின்றன .
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .
—subham—
Tags- உலகு இன்பக் கேணி, பாரதியார் கூற்றுக்கு, ஆதாரம் எங்கே?, Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு