TWO NEW BOOKS ON ALVARS INTRODUCED (POST 8809-D)

‘HURTING NONE; BRINGING ALL HEARTS TOGETHER’- KANCHI SRI SHANKARACHARYA PRAISED THE SERVICE OF BHARATIYA VIDHYA BHAVAN IN STRENGTHENING UNITY

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)

Post No. 8809 -D

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HIGHLIGHTS OF 12-10-2020 ‘GNANAMAYAM’ BROADCAST

ENGLISH NEWS BULLETIN, TAMIL NEWS BULLETIN AND BANGALORE NEWS BULLETIN ARE GIVEN AS

8809- A, B, C

DR NANDAKUMARA OF B V BHAVAN, LONDON FELICITATED

READERS CAN GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO NEWS AND TALKS.

OTHER HIGHLIGHTS OF 12TH OCTOBER 2020 BROADCAST ON FACEBOOK.COM/GNANAMAYAM:–

DR N KANNAN, PROFESSOR OF CHEMISTRY AND FOUNDER OF TAMIL HERITAGE FOUNDATION , INTRODUCED HIS TWO TAMIL BOOKS ON ALVARS

KANCHI SHANKARACHARYA SRI VIJAYA INDRA SARASWATI FELICITATED DR NANDAKUMARA OF BHARATIYA VIDHYA BHAVAN, LONDON

SATHYARTHI CHANDRASEKARAN, JAPANESE LANGUAGE EXPERT, READ LISTENERS LETTERS

SATHYARTHI

A.GOVINDN, OUR SPECIAL REPORTER FROM MADURAI, SENT A REPORT ON SRI MEENAKSHI SUNDARESWARAR TEMPLE

MAYURAKIRI SHARMA OF JAFFNA, SRI LANKA SPOKE ABOUT HIS  132 YEAR OLD TAMIL MAGAZINE HINDUSATHANAM

EARLIER JAYASHRI UMASANKAR RENDERED A PRAYER ON LORD GANAPATHY

HARROW SRIDHAR OPERATED THE STUDIO AND BROADCAST

PICTURE OF HARROW SRIDHAR, OUR STUDIO ENGINEER

PICTURE OF SRI KALYANA SUNDARA SIVACHARIYAR 
PICTURE OF LONDON SWAMINATHAN, PRODUCER, NEWS EDITOR

SRI KALYANA SUNDRA SIVACHARYAROF VEDAGAMA ACADEMY AND WORLD HINDU ORGANISATION ORGANISING THE GNANAMAYAM BROADCAST EVERY MONDAY.

LONDON SWAMINATHAN, NEWS EDITOR AND PRODUCER, COORDINATED THE PROGRAMMES.

QUESTION AND ANSWERS PRESENTED BY S SRINIVASAN AND S NAGARAJAN ARE BLOGGED SEPARATELY.

NEWS BULLETINS READ BY SUJATHA RENGANATHAN, VAISHNAVI ANAND AND BRIHANNAYAKAI SATHYANARAYANAN ARE BLOGGED SEPARATELY.

PICTURE OF JAYASHRI UMASANKAR 
DR N KANNAN, AUTHOR OF TWO BOOKS.

PLEASE MEET AND JOIN  US EVERY MONDAY.

IF YOU WANT TO JOIN OUR TEAM AND BECOME A BROADCASTER, PLEASE CONTACT US. WE ARE STARTING WORLD TAMIL BROADCASTING CORPORATION FOR ONE HOUR NEW TAMIL BROADCAST.

PICTURE OF MAYURAKIRISHARAMA, EDITOR OF THE MAGAZINE

ஞானமயம் வழங்கும் மதுரை செய்தி மடல்

வழங்குவது மதுரையிலிருந்து ஏ.கோவிந்தன்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் செப்டம்பர் முதல் தேதி முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

சில வழிகாட்டுதல் நெறிகள் தரப்பட்டுள்ளன.

பழம்பெரும் ஆலயமான மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் செப்டம்பர் முதல் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரானா தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஆலயம் இப்போது திறக்கப்பட்டிருப்பதையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அன்னை மீனாட்சி, அருள்மிகு சுந்தரேஸ்வரரை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

காலை 6.30 மணி  முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலில் தரிசனம் செய்யலாம்.

இணையதளம் மூலமாகவும் நேரிலும் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்குவோர் தெற்கு கோபுரம் வாயில் வழியே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் கிழக்கு வாயில் அதாவது அம்மன் சந்நிதி வாயில் வழியே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள் கிருமிநாசினியைப் பயன்படுத்தல் வேண்டும். அத்தோடு முக கவசம் அணிந்து ஆலயத்திற்குள் வர அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

காவல்துறையினர் பரிசோதனையும் உண்டு. சமூக இடைவெளியையும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பத்து வயதுக்குக் கீழ்ப்பட்டோரும் முதியோர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வருகை புரிதலைத் தவிர்க்கலாம்.

அம்மனை தரிசித்து சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

சுவாமியை தரிசனம் செய்த பின்னர் அம்மன் சந்நிதி வழியே பக்தர்கள் வெளியே செல்லலாம்.

வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் சிறிது நேரத்தில் தரிசனம் செய்து பக்தர்கள் வெளியேறுகின்றனர்.

பொற்றாமரைக் குளத்தின் அருகே பக்தர்கள் அமர இப்போது அனுமதி இல்லை.

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக இருப்பதால் பக்தர்கள் திருப்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

நன்றி வணக்கம்.

 XXXX

Listeners Letters 12-10-2020

நிறைய நேயர்கள் டெலிபோன் மூலமும், FACE BOOK பேஸ் புக் வழியாகவும் நமது நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளனர்  செய்தி அறிக்கை முதல் இறுதிவரை ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளையும்  பாராட்டி எழுதியும் உள்ளனர் எல்லாவற்றுக்கும் மேலாக வாரம் தூறும் வரும் 5000 HITS ஹிட்ஸ் நமக்குத் பெரிய பாராட்டு ஆகும். இதோ சில கடிதங்கள் அல்லது E MAILS இ மெயில்கள் :

வாசிப்பது சத்யார்த்தி சந்திரசேகரன்……………………………………..

XXXXXXXXX

இன்றைய ஞானமயம் கண்டேன்

சென்ற வாரம் சொன்னபடி இந்த நிகழ்ச்சி வாரா வாரம் நல்ல முன்னேற்றம் காண்கிறது.

தங்கள் கேள்வி பதில் அருமை

மந்திர உச்சரிப்பு தவறாக சொன்னால் பாதிப்பு உண்டா என்று பலருக்கும் இன்னும் ஐயப்பாடு உண்டு . தங்களின் விளக்கம் அந்த ஐயத்தை தீர்த்து வைத்தது.

அதுபோல கோவில் கோயில் இரண்டும் ஒன்று என்ற விளக்கம் அருமை

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கேள்விக்கு தங்களின் விஞ்ஞானபூர்வமான பதில் சிறப்பு.

அடுத்து முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களின் உரை மிக மிக நன்று. விஷ்ணு சித்தரின் பத்து கட்டளைகளுக்கு கொடுத்த விளக்கம்  இன்றைய மக்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

ப்ரஹன்னாயகி யின் பெங்களூர் செய்தி மடல் அருமை. தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது

ஹரிணி ரகு மற்றும் ப்ரஹன் நாயகியின்  எஸ். பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி அருமை.

காணொளிகளின் ஒருங்கிணைப்பில் சற்று கவனம் தேவை. 

வாழ்த்துக்கள்

ஆர். சேஷாத்ரிநாதன் 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ருத்ராக்ஷம் பற்றி ய விளக்க உரை நன்றாக இருந்தது

ருத்ராக்ஷத்தை சோதனை செய்ய மற்றொரு முறையை நான் பார்த்திருக்கிறேன். ருத்ராக்ஷத்தை நூலில் கோர்த்து காய்கறிகளுக்கு சற்று மேலே தூக்கிப்பிடிக்கவேண்டும். தேங்காய், வாழைக்காய் ,வாழைத்தண்டு, அவரைக்காய்போன்ற [ பொதுவாக பிராமணர்கள் தெவசத்திற்குப் பயன்படுத்தும்] காய்களுக்குமேல் ருத்ராக்ஷம் வலமாகச் சுற்றும். பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய் போன்றவற்றின் மீது இடமாகச் சுற்றும்!. ( இதனால் சில யோகமுறைகளில் பூண்டு, வெங்காயம் போன்றவை நிராகரிக்கப் படுகின்றன- அவற்றில் பிராணசக்தி எதிர்மறையாகச் செயல்படுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.]
ஆனால் ஒரு விஷயம். சிலருக்கு உடலில் ஒருவித காந்த சக்தி இருக்கிறது. அதனால் அவர்கள் கையில் எதைப் பிடித்தாலும் ( உ.ம்: துளசிமாணி மாலை) அது சுற்றும்! அவர்கள் மூலம் இந்த ருத்ராக்ஷப் பரீக்ஷை சரிவராது!    —     R NANJAPPA

XXXXXXXXXXXXXX


இன்றைய ஞானமயம் நிகழ்ச்சி கண்டேன். வாராவாரம் நன்கு மெருகேறி வருகிறது. இதில் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும். ஆரம்பத்தில் ஆங்கிலம் தமிழ் செய்திகள் வாசிக்கபடுகின்றன. இந்த செய்திகள் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களை எடுத்துக் கொள்கின்றன. இதில் நிறைய செய்திகள் செய்தி தாள்களில் வந்துவிட்டன. எனவே செய்திகளுக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு  அறிஞர்களின் பேச்சுகளுக்கும் கேள்வி பதில் விளக்கங்களுக்கும் அதிக நேரம் ஒதுக்கலாம் என்பதே எனது கருத்து. 

நன்றி 

ஆர்.சேஷாத்ரிநாதன் 

XXXXXXXXXXXXXXX

ஐயா தங்களுக்கு சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் … உங்கள் மூலம் தமிழ் இலக்கியங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது . எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு அனந்த கோடி நன்றி . சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாகவும் , தெளிவானதாகவும் , தவறான கருத்தான திராவிட இயக்க சிந்தனைகளாகிய துர்வாடை கலக்காததாகவும் இருக்கும் ? அப்படிப்பட்ட இந்த நூல்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ? தயவுசெய்து முகவரி சொல்லுங்கள் ஐயா?

RAMA KRISHNAN, MANNACHA NALLUR

–SUBHAM–

TAGS– TWO NEW BOOKS, ALVARS

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

 

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 14-14

 

 

Post No. 4344

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.

இதோ ஓரிரு படல்கள் மட்டும்!

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

 

அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

 

பொருள்:-

இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்

 

இடர் ஆழி= துயரக் கடல்

 

ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.

உடம்பெனும் மனையகத்து  உள்ளமே தகளியாக

மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

–நாலாந் திருமுறை

 

பொருள்-

உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.

 

உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான   பொருளைக் காணலாம்.

கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை

 

திருமங்கை ஆழ்வார்

 

ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்

 

 

வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து

 

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி

 

 

ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து

 

நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்

என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.

சுபம்