HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058)

Written by London Swaminathan

Post No. 16,058

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted on 5-8-26

சந்தியா வந்தனம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலம் சந்திக்கும் நேரங்களில் — அதாவது இரவும் காலையும், காலையும் பகலும், பகலும் மாலையும் சந்திக்கும் மூன்று நேரங்களில் செய்யும் சூரிய வழிபாடு இது. காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது இதன் முக்கிய உபாசனை. முன் காலத்தில் ஏனைய  ஜாதியினரும், பெண்களும் சந்திரா வந்தனம் செய்ததை வாலமீகி ராமாயணம் முதலிய நூல்கள் செப்புகின்றன. ஒருவேளை அதிலுள்ள மந்திரங்கள் வேறு பட்டிருக்கலாம்.இந்த வழிபாட்டுக்கு தண்ணீர் வேண்டும். ஆரியர்கள் குளிர் பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு இந்து மதச்சடங்குகள் வேட்டு வைக்கின்றன .

***

சாந்திபனி

கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த குரு/ ஆசிரியரின் பெயர்.  மகரிஷி சாந்திபனியிடம் கிருஷ்ணர், பலராமன், குசேலர் என்னும் சுதாமா முதலியோர் சகல சாஸ்திரங்களையும் கற்றனர் . உஜ்ஜயினி நகரில் இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தது .

***

சங்கம்  /குழு , கூட்டம்

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழ் வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது ; தமிழ் மொழியை வளர்க்க பாண்டிய மன்னர்கள் மூன்று இதனங்களில் முதல், இதை, கட்டைச் சங்கங்களை நிறுவியதாக பிற்கால உரைநடை  நூல்கள்   கூறுகின்றன . அதில் கூறப்படும் பத்தாயிரம் ஆண்டுக்காலம் முதலியன நமப்புக்கொட்டியதாக இல்லை . தொல்காப்பியரின் விதிப்படி ச என்னும் எழுத்தில் சொற்கள் துவங்க முடியாது . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகளைப்பெற்ற இலக்கண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் சங்கம் என்னும் சொல் வருகிறது அவர் இதற்கான பல பொருள்களை இலக்கண விதிகளுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார் ; அதில் ஒரு பொருள் குழு, பலர் இருக்கும் அமைப்பு என்பதாகும் ; ஆயத்தங்களை விருப் பிழைக்கும் ஆயுதஜீவி சங்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ப்புத்தர் இறந்த பின்னர் , பிட்சுக்கள் சங்கங்களை ஏற்படுத்தினார் கள். அவர்களைப்போலவே சமணர்களும் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் ; அவை எல்லாம் சமய அமைப்புகள் ; மொழியுடன் தொடர்புடையவை அல்ல 

தமிழ்ச் சங்கப்புலவர்களிடையே நடந்த கோஷ்டி ஓதல்களைத் திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் காணலாம் .

சத்சங்கம் என்ற சொல்லை ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய திதிகளில் காணலாம்.

***

சனி- சனைச்சரன் — சனிக் கிரகம்

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –நீளா தேவி; இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “.

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி- இவள் மகன் “தரித்திரன்” .

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு; தானியம் – எள் – கறுப்பு; உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு; வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி; புஷ்பம் – கருங் குவளை. இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்; உத்யோகம் – அடிமை;  அதிதேவதை – யமன்;  பிரத்யதி தேவதை- பிரஜாபதி; ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்;

திசை – மேற்கு;  பூதம் – காற்று; தன்மை – ஆண் அலி;  மொழி – நீச பாஷை;  உடல் அதிபதி -நரம்புக்கு;

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்; சுவை – துவர்ப்பு; சமித்து – வன்னி; ரத்தினம் – நீலம்; சுபாபவம் – குரூரம்;

குணம் – பாவி; நாடி – வாத நாடி; ஆசனம் – வில்; தேசம் – சௌராஷ்டிரம்; கண்டம்- ஆப்ரிக்கா; கோத்திரம் – காஸ்யபம்;

ருது- வஸந்த ருது; காரகன்- ஆயுள் காரகன்;  உச்சம் – துலா ராசியில்; நீசம் – மேஷ ராசியில்;  சொந்த வீடுகள் – மகரம், கும்பம்;

பார்வை – 3, 7, 10;  நண்பர்கள் – புதன், சுக்கிரன்; எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்; சமமானவர் – குரு; ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி; தைலம் – நல்லெண்ணெய்; ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு;  ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்.

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர், மதுரை அருகில் உள்ள குச்சனூர், சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்.

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்;

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!! தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி வைக்கும் சூரர்!!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு, கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில் படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்.

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!! (From Gnanamayam Broadcast from London; Speaker Santanam Srinivasan)

XXXX

ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனி: ப்ரசோயதயாத்

XXXX

ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

****

சஞ்சயன் 

மஹாபாரதத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ; பெயரின் பொருள்- வெற்றி  ; திருதராஷ்டிரனின் ஆலோ சகர்; தேரோட்டி;  வியாசரின் சீடர்; அவர் கொடுத்த வரத்தால் இருந்த இடத்திலிருந்தே மஹாபாரதப் போர் முழுதையும் நேரடி ஒளிபரப்பு செய்தவர் ; இந்த பூர்வ சக்தி துரியோதனன் இறந்த நாளில் கதறிக்கொண்டு யுத்தகாலத்துக்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது ; பகவத் கீதையில் சஞ்சயர் சொன்னார் என்று அடி கடி வரும்; இவர் மூலமே நமக்கு பகவத் கீதை கிடைத்தது ; ஒரு காலத்தில் பாணடவர்களிடத்தில் சமாதானத் தூதும் சென்றார் ; நடுநிலைவாதி ; உள்ளதை உள்ளபடியே உரைத்தவர் .

***

சங்கரர் – ஆதிசங்கரர்

அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மிகப்பெரிய ஞானி. காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை;.ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம் என்று போதித்தார் . இந்தியா முழுதும் வலம் வந்து பல தத்துவ ஞானிகளை வாதத்தில் வென்று பெரும் பக்தர் கூட்டத்தை உருவாக்கினார் நாட்டின் நான்கு மூலைகளில் — ஜோஷிமத், பூரி, துவாரகா, சிருங்கேரி – மடங்களை நிறுவி காஞ்சீபுரத்தில் முக்தி அடைந்தார் ; சிலர் இவர் இமயமலையில் முக்தி அடைந்ததாகவும் சொல்வர் ; சென்ற இடமெல்லாம் சக்தி வாய்ந்த லிங்கங்களையும் யந்திரங்களையும் அமைத்து கோவில்களுக்கு சக்தி ஊட்டினார் . இவர் பெயரில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இன்றும் பல லட்சக் கணக்கானோரால் பாடப்படுகின்றன ; விவேக சூடாமணி, செளந்தர்ய லஹரி, பஜகோவிந்தம்,  கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஒவ்வொன்றின் பின்னாலும் கதைகளும் அற்புதங்களும் உள்ளன ;  இவர் பகவத் கீதைவிஷ்னு சஹஸ்ரநாமம் , முக்கிய உபநிஷதங்களுக்கு எழுதிய உரைகளே இவரது புலமைக்குச் சான்று பகரும் ; சிறுவயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றார் ; இவரது காலம் எடடாம் நூற்றாண்டு என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன ; இவரைப் போலவே பிற்காலத்தில் வாழ்ந்த அபிநவ சங்கரரின் வாழ்வும் ஆதி சங்கரர் வாழ்வும் அதிசயங்கள்  நிறைந்தவை; ஆகையால் காலத்தைத்  தெளிவாகச் சொல்லமுடியவில்லை . இவரது சீடர்கள் பரம்பரை, இன்றும் சங்கராசார்யார் என்ற பெயரில் இந்துமதத்தைப்  பரப்பிவருகின்றனர்.

***

சனத் குமாரர்

இந்து புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றிய முதல் நான்கு ஞானிகளில் (மானச புத்திரர்களில்) சனத்குமாரரும் ஒருவர். ஏனைய மூவர் சனகர், சனாதனர், சனந்தனர் ஆவர். எப்போதுமே ஐந்த வயதுடைய குழந்தைப் பருவத் தோற்றத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து மெய்ஞானம் பெற்ற ரிஷிகள் ஆவர்.

காஞ்சி  மஹாசுவாமிகள் (1894-1994) உரையில் சொல்வதாவது: ONLY SUMMARY IS GIVEN BELOW

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

………………………..

ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“……………………………..

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ………..

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

TO BE CONTINUED…………….

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 , சனத் குமாரர் , ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்

மரணத்தைக் கண்டு அஞ்சாதே – சத்ய சாயிபாபா அருளுரை! (Post.15,743)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,743

Date uploaded in London – 16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!

மரணத்தைக் கண்டு அஞ்சாதே –

புருஷனும் புருஷோத்தமனும் – ஶ்ரீ சத்ய சாயிபாபா

அருளுரை!

நாகராஜன்              

22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!

வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட 

தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது 

அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால் 

அதை அறிந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் உடனே ஒரு டாக்டரை 

அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப் 

புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர்.  தான் சம்பாதித்த பணைத்தை 

எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது 

பிள்ளைகள் அனுமானித்தனர்.  ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக 

அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு 

எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?

‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது  

கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா? 

விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது  அவன் தலையை 

அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க 

நேர்ந்தது!

அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது.  நீங்கள் பீஷ்மரைப் போல மரணம்    அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும்   போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க  அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார்.  மரணம் என்பது 

பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ 

அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே 

கிடையாது.  நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது. 

அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று. 

பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து 

விட்டது.  சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச் 

சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம்.  ஆனால் மனிதனோ மரணம் என்பது  தூரத்தில் இருக்கும் ஒரு     துயரம் என்று நினைத்து நடக்கிறான். 

அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது           கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம  கடன்களை உணரும் தருணம் அது       என்றும் கூறித் தேற்றுகிறோம்.  ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து 

தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள 

முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!

அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான்.  ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற   நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன் 

இருக்கிறான்.

 பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.     

ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும்    புருஷன் அல்ல.  புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை      உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும் 

மனதிலிருந்து அகற்றி மனதைச் சுத்தமாக்குகிறது.  உள்ளிருக்கும் பானம் 

மட்டுமல்ல, பாத்திரமும் சுத்தமாக்கப்பட வேண்டும்.  அப்படி இல்லையென்றால்  எவ்வளவு நேரம் ஸ்மரணமும் தியானமும் செய்தாலும் கூட  அவை பலனைத் 

தராது.  

ஆகவே தான் வேதங்கள் பிராமணர்களிடம்  மிகக் கடுமையான 

விதிகளுடனும் ஒழுக்கக்கட்டுப்பாடுடனும் ஒப்படைப்பட்டது. அப்படிப்பட்ட 

ஒழுக்கக் கட்டுப்பாடுடன் மனம் சுத்தமாக்கப்படவில்லை என்றால் வேதங்களைக் கற்றுப் பயனில்லை.

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,686)

Written by London Swaminathan

Post No. 15,686

Date uploaded in London –2 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்யதேசம்          திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்

மூலவர்-        ஸாரநாதன்    

உத்ஸவர் –     மாமதலைப்பிரான்   

தாயார்    –     ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி   

திருக்கோலம்-        நின்ற    

திசை –     கிழக்கு   

பாசுரங்கள் —    12   

மங்களாசாசனம்      திருமங்கையாழ்வார் 12

சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.

எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்

ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.

குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .

கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.

மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது

திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த

பெரியதிருமொழி

1578

கண்சோர வெங்குருதி வந்திழிய

        வெந்தழல்போல் கூந்தலாளை

மண்சேர முலையுண்ட மாமதலாய்

        வானவர்தம் கோவே என்று

விண்சேரும் இளந்திங்கள் அகடு உரிஞ்சு

        மணிமாட மல்கு

செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்

        என் தலைமேலாரே

கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.

 1579

அம் புருவ வரி நெடுங்கண்

        அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து

மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்

        இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்

வம்பலரும் தண்சோலை

        வண்சேறை வானுந்து கோயில் மேய

எம்பெருமான் தாள் தொழுவார்

        எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே

அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.

1580

மீதோடி வாளெயிறு மின்னிலக

         முன் விலகும் உருவினாளை

காதோடு கொடி மூக்கு அன்றுடன் அறுத்த

         கைத்தலத்தா என்று நின்று

தாதோடு வண்டலம்பும்

         தண்சைற எம்பெருமான் தாளை ஏத்தி

போதோடு புனல்தூவும் புண்ணியரே

         விண்ணவரின் பொலிகின்றாரே

மேலே ஓங்கிய கோரைப்பல் மின்னலாய் ஒளிவிட, எதிரில் நிற்போர் அஞ்சி ஓடும் உருவுடைய சூர்பணகையைச் செவியோடு மூக்கையும் அறுத்துவிட்ட கைகளையுடைய இராமனே ! பூந்தாது கிண்டும் வண்டுகள் ஒலிக்கும் திருச்சேறை எம்பெருமானது திருவடிகளைப் போற்றி, மலர்களையும் புனித நீரையும் பரிமாறும் நல்வினைப்பேறு வாய்ந்தவர்கள் விண்ணவராய் விளங்குகின்றனர்.

 1581

தேராளும் வாள அரக்கன்

        தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ

போராளும் சிலையதனால்

        பொருகணைகள் போக்குவித்தாய் என்று

நாளும் தாராளும் வரைமார்பன்

        தண்சேறை எம்பெருமான் உம்பராளும்

பேராளன் போ் ஓதும் பெரியோரை

        ஒருகாலும் பிரிகிலேன

தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.

 1582

வந்திக்கும் மற்றவர்க்கும்

        மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்

முந்திச் சென்று அரி உருவாய்

        இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்

சந்தப்பூ மலர்ச்சோலைத்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்

        தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே

இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.

 1583

பண்டேனமாய் உலகை அன்றிடந்த

        பண்பாளா என்று நின்று

தொண்டானேன் திருவடியே துணையல்லால்

        துணையிலேன் சொல்லுகின்றேன்

வண்டேந்தும் மலர்ப்புறவில்

        வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை

கண்டேனுக்கு இது காணீர்

        என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே

முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.

 1584

பைவிரியும் வரியரவில்

        படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்

மைவிரியும் மணிவரைபோல்

        மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்

        திருவடியைச் சிந்தித்தேற்கு

என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்

        என் அன்புதானே

திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.

 1585

உண்ணாது வெங்கூற்றம்

        ஓவாத பாவங்கள் சேரா

மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்

        மென் தளிர்போல் அடியினானை

பண்ணார வண்டு இயம்பும்

        பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை

கண்ணாரக் கண்டுருகிக்

        கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே

வானவரும் நானிலந்தோரும் கிட்டி வணங்கும் மெல்லிய தளிர் திருவடிகளை உடையவனை, வண்டுகள் பண் மலியப் பாடுகின்ற பசுஞ்சோலையுடைய திருச்சேறைப் பெருமானைக், கண்ணாரக் கண்டு வணங்கி, மனமுருகி கைகளைக் குவித்துத் தொழுபவர்களை நினைக்குமளவில், கொடிய செயலுடைய காலன் நம்மை வருத்தமாட்டான். நம்மை துன்புருத்தும் தீவினைகள் நம்மை அணுகமாட்டா.

 1586

கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்

        போதொருகால் கவலை என்னும்

வெள்ளத்தேற்கு என்கொலோ

        விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால் தள்ள

தேன் மணநாறும்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்

        என்னுள்ளம் உருகுமாறே

வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.

 1587

பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து

        வயல் நின்ற பேடையோடு

அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்

        தண்சேறை யம்மான் தன்னை

வாமான் தோ்ப் பரகாலன்

        கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்

தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்

        நும் துணைக்கையால் தொழுது நின்றே

பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.

–Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருச்சேறை , பஞ்சஸார க்ஷேத்திரம்