ரிக் வேதத்தில் பகவத் கீதை! (Post.9833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9833

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை இந்து மதத்தின் பிரிவுகளான அறு சமயத்தாருக்கும் பொதுவானது. ஏனெனில் அதிலுள்ள கருத்துக்கள் உபநிஷத்தின் சாரம் . உபநிஷதங்களும் எல்லோருக்கும் பொதுவானது என்பதை சமய ஆச்சார்யார்கள்  உரை எழுதி ஒப்புக்கொண்டுள்ளனர். பகவத் கீதைக்கும் எல்லோரும் உரை எழுதியுள்ளனர்  உபநிஷதங்கள் வேதத்தின் சாரம். அதை வேதத்தின் முடிபு, துணிபு என்ற பொருளில் வேத + அந்தம்= வேதாந்தம்  என்பார்கள் .

வேதம்தான் தர்மத்தின் மூலம் ; வேதமே இந்துமதத்தின் ஆணிவேர் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.; அதற்கு ஆதாரம் காட்ட வேண்டாமா.? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்றெல்லாம் நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள்; இவை அவ்வளவும் உண்மையே என்பதை ரிக் வேதத்தை ஊன்றிப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும் . திருவாசகம், தேவாரத்திலுள்ள வரிகள் ரிக் வேதத்தின் எதிரொலியே ; விறகில் தீயினன் , பாலில் படுநெய் போலப் பரவியவன் என்ற தேவார வரிகள் அப்படியே உள்ளது. அக்கினி என்ற பகவான் பெயரை சிவன் என்று தலைப்பிட்டுவிட்டால் அப்படியே பொருந்துகிறது.

விஷ்ணு என்ற பெயர் பல இடங்களில் தெளிவாக வருகிறது. ஆயினும் சங்கத் தமிழ் இலக்கியம், தொல்காப்பியம் முதலியவற்றில் “சிவன்” என்ற சொல் இல்லாதது போலவே ரிக் வேதத்திலும் இல்லை. ஆனால் சிவனைக் குறிக்கும் வேறு அடை  மொழிகள் புற  நானூற்றில் உள்ளது போலவே ரிக் வேதத்திலும் உண்டு ஒரே ஒரு இடத்தில் சிவ என்ற சொல் வருவது உரிச்  சொல் (adjective) அல்ல, பெயர்ச் சொல்லே (proper noun) ; அது சிவ பெருமானையே குறிக்கும் என்று வில்சன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நான் வேறு ஒரு சுருக்கு வழி  வைத்துள்ளேன். அக்கினி தேவனைப் போற்றும் துதிகளை எல்லாம் சிவன் என்று கருதினால் போதும். நல்ல பொருத்தம் இருக்கிறது சிவனே நெற்றிக் கண்ணில் தீயை உடையவன்;. நடராஜர்  கையிலும் அனல் உண்டு.

சுருக்கமாகச் சொன்னால் வேத கால அக்கினியே சிவனாகவும் முருகனாகவும் வழிபடப்படுகின்றார்கள் .

xxx

இப்போது பகவத் கீதைக்கு மூலமான வேத மந்திரங்களைக் காண்போம்.

RV 1-24-7

மூலமில்லாத சுத்த வானிலே வசிக்கும் சுத்த வலிமையுள்ள அரசனான வருணன், மேலே மூலமுள்ளவையும், கீழே நோக்குபவையுமான கதிர்களிருக்கும் ஒளித் தூணை உச்சத்திலே ஏந்துகிறான் . அந்தக் கிரணங்கள்/ ஒளிக்  கற்றைகள் எங்களுக்குள் இறங்கி மறைவாக நிற்கட்டும் (சீவனுக்கு காரணமான ரசிமிகள் ராணங்களாக  எண்ணில் ஸ்தாபனமாகுக- Jambunathan) RV 1-24-7

Varuna, King, of hallowed might, sustaineth erect the Tree’s stem in the baseless region

Its rays, whose root is high above, stream downward. Deep may they sink within us, and be hidden RV 1-24-7

பகவத் கீதை

ஊர்த்வமுலமத:சாகமச்வத்தம் ப்ராஹு ரவ்யயம்

ச்சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத  ஸ வேத வித் 15-1

பொருள்

மேலே வேருள்ளதும், கீழே கிளையுள்ளதுமான  அசுவத்தமாக முடிவற்றதாய் தோன்றும் ஸம்ஸாரத்தை பேசுகிறார்கள்.எதற்கு இலைகள் வேதங்களோ அந்த மரத்தை எவன் அறிந்தவனோ  அவன் வேதத்தை அறிந்தவன் ஆவான்

இதில் மர உவமையும் அதன் மேல், கீழ்ப் பகுதி விளக்கங்களும் ஒப்பிடத் தக்கவை.

Xxx

RV 1-25-6

THIS, WITH JOY THEY BOTH ACCEPT IN COMMON; NEVER DO THEY FAIL

THE EVER FAITHFUL WORSHIPPER

மித்திரனும், வருணனும் மகிழ்ச்சியுடன் இதை ஏற்கிறார்கள் நம்பிக்கையுடன் தொழும் பக்தர்களை அவர்கள் எப்போதும் கைவிட்டதில்லை. RV 1-25-6

பகவத் கீதை 9-31

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சச்வச்  சாந்திம் நிகச்சதி

கௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த :ப்ரண ச்யதி  9-31

விரைவில் தரும சிந்தனையுடையவன் ஆகின்றான்.சாசுவதமான சாந்தியைப் பெறுகிறான் . குந்தீ புத்திரனே  என்னுடைய பக்தன் நாசம் அடையவே மாட்டான் . இந்த உண்மையை உணர்ந்து உலகுக்கு உரைப்பாயாகுக.

xxxx

1-31-3/4

இந்த இரண்டு மந்திரங்களில் அக்நியானது விவஸ்வா னுக்கும் மனுவுக்கும் முதலில் புலப்பட்டதாக ரிஷிகள் பாடுகின்றனர்.

இதே வரிசை பகவத் கீதையின் நாலாவது அத்தியாயம் முதல் ஸ்லோகத்திலும் உளது..அதற்குப்பின்னர் பாண்டவர்களின் முன்னோர்களா ன யயாதி, புரு முதலியோர் பெயர்களும் வருகின்றன .

பகவத் கீதை 4-1

நான் இந்த அழிவற்ற யோகத்தை முதலில் விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவசுவான் மநுவுக்கு உபதேசித்தார். மநு இக்ஷ்வாகுவுக்கு உரைத்தார். -பகவத் கீதை 4-1

நண்பன் என்ற சொல் நூற்றுக்கணக்கான ரிக்வேத மந்திரங்களில் வருகிறது. கடவுளரையும் சகா க்களையும் ரிஷிகள் நண்பர்களே என்றுதான் அழைக்கின்றனர். அர்ஜுனன் – கிருஷ்ணன் உறவும் நட்பின் அடிப்படையிலே அமைந்தது என்பது வெளிப்படை. விசுவ ரூப தரிசனம் காட்டிய பின்னரும் கூட கிருஷ்ணன் அர்ஜுனனைக் கட்டாயப்படுத்தாமல் , நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்; ஏற்பதும் ஏற்காததும் உனது ரிமை என்று சொல்லிவிடுகிறான்.

குரு  வம்சத்தின் மூதாதையர்களான யயாதி, நஹுஷன் பெயர்களும் இதே துதியில் வருவது குறிப்பிடத்தக்கது இது பகவத் கீதை, மஹாபாரத காலத்தை நிர்ணயிக்கவும் உதவும்..

–subham–

tags – Bhagavad Gita, Rig Veda, Gita in Veda,