Written by S.NAGARAJAN
Date: 23 October 2017
Time uploaded in London- 8–06 am
Post No. 4327
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 – இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 5
ச.நாகராஜன்
8
1845ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அவரது நாட்குறிப்பில் ஒரு கப் சாக்லட்டிற்கு 2 பிராங்க் செலவழித்ததைக் குறிப்பிட்ட அவர் இனி ஒரு போதும் அதை வாங்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்ததை இப்படிக் குறிப்பிடுகிறார். 1823இல் பிறந்த மாக்ஸ்முல்லருக்கு இந்த கடிதம் எழுதும் போது வயது 22 தான்!
FROM THE DIARY OF MAX MÜLLER. PARIS. April 10, 1845.
“I get up early, have breakfast, i.e. bread and butter, no coffee. I stay at home and work till seven, go out and have dinner, come back in an hour and stay at home and work till I go to bed. I must live most economically and avoid every expense not actually necessary. The free lodging is an immense help, for unless one lives in a perfect hole… I have not been to any theatre, except one evening, when I had to pay 2 francs for a cup of chocolate, I thought ‘Never again’.”
சாக்லட் வாங்கி சாப்பிடக்கூட முடியாத அளவுக்குக் கையில் பணமில்லாத மாக்ஸ்முல்லரின் நிலையை இந்த டயரிக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த நிலையில் தான் அவர் லண்டன் வந்தார்.
லண்டன் வந்த மாக்ஸ்முல்லருக்கு ஒரு நல்ல ‘வேலை’ கிடைத்தது. ஜான் வில்லியம் ஆடம்ஸன் எழுதியுள்ள நூலில் உள்ள விவரத்தின் படி ஒரு ஆண் வாத்தியாருக்கு வருடம் ஒன்றுக்கு சம்பளம் 90 பவுண்டுகள். பெண் உபாத்தியாயினிக்கு வருட சம்பளம் 60 பவுண்டுகள். 1999இல் லண்டனில் ஒரு ஆசிரியருக்கு வருட சம்பளம் சுமார் 14000 பவுண்டுகளிலிருநது சுமார் 36000 பவுண்டுகள் வரை அளிக்கப்படுகிறது. அதாவது 1853இலிருந்து 146 வருடங்கள் கழித்து 1999இல் 200 மடங்கு சம்பளம் அதிகரித்துள்ளது. மாக்ஸ்முல்லருக்கு ஒரு தாளுக்கு 4 பவுண்டு ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டது. அதன் 1999ம் ஆண்டு மதிப்பு 800 பவுண்டுகள்! பிரிட்டிஷாருக்குத் தங்கள் வேலையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த நபருக்கு இவ்வளவு பணம் கொடுக்க முன் வந்தனர்! அதாவது மாக்ஸ்முல்லர் எவ்வளவு பணம் கேட்டாலும் தாங்கள் சொன்னபடி செய்தால் அந்த அளவு பணம் தர அவர்கள் முன் வந்தனர்.
He was highly paid for this job. According to the statistical information given on page 214 of the “English Education, 1798-1902” by John William Adamson, printed by Cambridge University Press in 1930, the revised scale of a male teacher was £90 per year and for a woman, £60 in 1853. The present salary of a teacher in London is £14,000 to £36,000 per year, which averages a minimum of at least 200 times increase in the last 146 years. Max Müller was paid £4 per sheet of his writing which comes to £800 of today (1999). This is an incredibly high price for only one sheet of writing. But it’s the general law of business, that the price of a commodity increases with its demand. The British were in such an imperative need to get someone to do this job and Max Müller was the right person, so they paid whatever Max Müller asked for.
மாக்ஸ்முல்லர் தனது தாயாருக்கு 1847ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி எழுதிய கடிதம் இந்த உண்மையை விளக்குகிறது. அவர் ஆண்டுக்கு 200 பவுண்டுகளைப் பெற 50 தாள்களை எழுத விழைந்ததை இப்படிக் கூறுகிறார்: (இதை எழுதும் போது அவருக்கு வயது 24!)
His enthusiastic letter to his mother dated April 15, 1847 reveals this fact
His letter:
“I can yet hardly believe that I have at last got what I have struggled for so long… I am to hand over to the Company, ready for press, fifty sheets each year; for this I have asked £200 a year, £4 a sheet. They have been considering the matter since December, and it was only yesterday that it was officially settled.”
“…In fact, I spent a delightful time, and when I reached London yesterday I found all settled, and I could say and feel, Thank God! Now I must at once send my thanks, and set to work to earn the first £100.”
லண்டனுக்கு வந்த அவர் முதல் நூறு பவுண்டுகளைப் பெற வேலையை இப்படியாக ஆரம்பித்தார்.
மிகுந்த பணத்தேவை கொண்டிருந்த இளைஞரான மாக்ஸ்முல்லர் பிரிட்டிஷார் சொன்ன வேலையைச் செய்ய முன் வந்தார் – தான் கேட்ட பணத்தை அவர்கள் கொடுக்க முன் வந்தால்!
***
தொடரும்
You must be logged in to post a comment.