பெண் குழந்தை பெற்ற மனைவி கொலை! “பெண்களைக் காக்க”!

beti image

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமினாதன்

கட்டுரை எண்- 1609; தேதி 29 ஜனவரி 2015

 

துருக்கி நாட்டில் இருந்து ஒரு துயரச் செய்தி! இரண்டாவது முறையும் பெண் குழந்தை பெற்ற மனைவியை மின்சார அதிர்ச்சி கொடுத்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் ஹரியானா மாநில பானிபட் நகரில் பெண் குழந்தைகளைப் பாது காக்கும் — “பேட்டி பசாவோ” — இயக்கத்தைத் துவக்கி வைத்தார். அந்தச் செய்தியும் துருக்கி செய்தியும் சில யோசனைகளை முன் வைக்கத் தூண்டுகிறது.

துருக்கியில் டியாபகீர் என்னும் ஊரில் வசிப்பவர் வெய்சி துரன். வயது 29..இவர் முபாரக் என்னும் 33 வயதுப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். முதல் குழந்தை பெண் குழந்தை. சென்ற ஆண்டில் பிறந்த இரண்டாவதும் பெண் குழந்தை. கணவருக்கு மஹா கோபம். இந்தியாவைப் போல துருக்கியிலும் பெண் ‘கரு’ — க்களைக் கலைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது

 

துருக்கி நாட்டுக் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கோபத்தில் மனைவியைக் கொன்றதாக வெய்சிக் சொன்னாலும் அது  நம்பும்படியாக இல்லை. ஏனெனில் அவர் திட்டமிட்டு கடைக்குச் சென்று பிளக், கேபிள் முதலியன வாங்கி, மனைவி தூங்கும்போது அவர் காலில் பொருத்தி சுவிட்சை இயக்கியதை வாதிகள் நிரூபித்தனர்.


electrocution

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஐயா! நீவீர் கோபத்தில் கொல்லவில்லை; திட்டமிட்டுக் கொன்றுவிட்டீர். இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாய் இல்லை. உமக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறோம். இப்போது அக்குழந்தைகளுக்குத் தந்தையும் இல்லை. உமது கல் மனமே காரணம்” என்று சொல்லி தீர்ப்பு வழங்கினர்.

 

துருக்கியில் 2002 முதல் 2009 ஆம் ஆண்டுக்குள் பெண்  (கரு)கொலைகள் 1400 சதவிகிதம் அதிகரித்ததாகவும் சென்ற ஆண்டு மட்டும் 253 பெண்கள் கொலை செய்யப்பட்டதாகவும் ‘’பியானெட்’’ என்ற தகவல் அமைப்பு செய்தி

வெளியிட்டது.

 

மோடி அரசு என்ன செய்யலாம்?

 

சென்ற வாரம் ஹரியானா மாநில பானிபட்டில் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் பெண் கருக்களைக் கலைப்பது மன நோயின் அறிகுறி என்று கடுமையாகத் தாக்கிப் பேசி பெண்குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தைத் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மா நிலங்களும் பெண் கருக்களைக் கலைப்பதைத் தடுக்க பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தன. ஆயினும் நிலைமை கட்டுக்கடங்காது சென்று விட்டது. பல இடங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 775 பெண்கள்தான் என்ற பயங்கர நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன?

beti 3

1.பெண்கள்– ஆண்கள் விகிதாசாரம் குறைவாக இருந்தால் ஒழுக்கச் சிதைவு ஏற்படும். பெண்கள், பழைய கணவன்மார்களை விட்டு புதிய ஆண்களைத் தேடும் அபாய நிலை தோன்றும். விவாக ரத்துக்கள் அதிகரிக்கும்.

2.”அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. பெண்கள், வேலைக்குப் போகத்துவங்கி,  லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கத் துவங்கியவுடன் அவர்கள் தலை  விரித்தாடத் துவங்க்கிவிட்டனர். பொருந்தாத நிபந்தனைகளை விதித்து திருமணத்தை ஒத்திப் போடுகின்றனர். அப்பா அம்மாக்களுக்கு  ஏக சந்தோஷம்! பெண்களின் சம்பாத்தியத்தில் கூத்தடிக்கின்றனர். உலகச் சுற்றுலா போகின்றனர்.

3.இதற்குப் பெண்களைக் குறைகூறுவதில் நியாயமே இல்லை. முன்னர் ஆண்களைப் பெற்ற பெற்றோர்களும் மாப்பிள்ளைகளும் எப்படி தலை விரித்தாடினர்களோ அப்படி இப்போது பெண்கள் ஆடுகின்றனர். ஆண்- பெண் ரேஷியோ– விகிதாசாரம்– ஏறத்தாழ சமமாக இருந்தால் இப்படிக் கொடுமைகள் நடக்காது.

4.அந்தக் காலத்தில் போர்கள் நடந்தால் ஆண்கள் தொகை குறையும். சமூகத்தில் குல தர்மம் அழியும். பகவத் கீதையில், —- சண்டை போட மாட்டேன் என்று அடம் பிடித்த அர்ஜுனன் —- இதை ஒரு வாதமாக முன் வைக்கிறான். போரினால் குல தர்மம் அழியுமே (1- 39 முதல் 43 வரையான ஸ்லோகங்கள்) என்கிறான். ஆனால் போரின் முடிவை அறிந்த கள்ளக் கிருஷ்ணன், பரவாயில்லையப்பா! சண்டை போடு என்று எதிர் வாதம்வைக்கிறான். இலங்கையிலும் உள் நாட்டுப் போரினால் ஏற்பட்ட அவல நிலையைக் கண்டோம்.

  1. இப்போது பெண்கள் தொகை குறைந்தாலும் இப்படி குல தர்மம் மாறும்.

“பெண்கள் சுதந்திரம் பெறுவது நல்லது — கணவன் வீட்டு வர தட்சிணைக் கொடுமைகள் அழியும்” — என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் புதிய பிரச்சினைகள் உருவாகும். மேலை நாடுகளில் கணவன்- மனைவி “ம்யூசிகல் சேர்” — விளையாட்டினால் குழந்தைகள்  வளர்ச்சி பாதிக்கப் படுகிறது என்பதை எல்லோரும் அறிந்துள்ளனர். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குழந்தைகள் எல்லாம் இப்படிப்  “பல” அம்மா– அப்பா உடையவர்களே.


beti2

என்ன செய்யலாம்?

 

பிரச்சினை என்று ஒன்று வந்தால்தான் தீர்வு என்பதும் தோன்றும். ஆக மோடி அரசு என்ன செய்யலாம்?

 

1.வெளி நாடுகளில் எல்லாக் குழந்தைகளுக்கும்  ஒரு குறிப்பிட்ட வயது வரை நிதி உதவி (சைல்ட் பெனிபிட்) தரப் படுகிறது. அது போல பெண் குழந்தை பெற்றால் அக் குழந்தையின் பெயரில் ஒரு குறிப்பிட்ட வயது வரை நிதி உதவி தரலாம்.

2.இரண்டாவது பெண் குழந்தைக்கு இரு மடங்கு நிதி உதவி தரலாம். மூன்றாவது பெண் குழந்தைக்கு — முதல் குழந்தை போல சாதாரண உதவி தரலாம்.

3.மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எல்லா உதவிகளையும் ரத்து செய்ய வேண்டும் ஏன் எனில்  ஜனத்தொகை பெருக்கத்தினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தினர் வேண்டும் என்றே தங்கள் தொகையைப் பெருக்குவதாலோ புதிய பிரச்சினைகள் ஏற்படும்

 

4.பெண் குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில் பெரிய அளவு இட ஒதுக்கீடு செய்யலாம்.

 

  1. இந்த திட்டம் 25 ஆண்டுகள் வரையோ அல்லது ஆண்–பெண் விகிதாசாரம் சம நிலை அடையும் வரையோ மட்டுமே நீடிக்க வேண்டும். அல்லது அம்பேத்கர் சொன்னதையும் மீறி இன்று  பின் தங்கிய வகுப்பினருக்கு எப்போதும் சலுகை

என்று அரசியல்வாதிகள் வோட்டு பெற வைத்திருப்பது போல ஆகி விடும்.

 

எப்படிப்  பின் தங்கிய வகுப்பினர் தன் சுய மரியாதை, மானம் எல்லாவற்றையும் இழந்து நாஙகள் என்றும் பின் தங்கியோர்– நாங்கள் என்றும் பிச்சைக்காரர்கள் என்று பறை சாற்றிக் கொள்கின்றனரோ அததகைய இழி நிலை பெண்கள் விஷயத்திலும் வந்து விடும்.

6.எந்த ஒரு சமூகப் பிரச்சினையையும் அரசாங்கம் மட்டுமே தீர்க்க முடியாது. மக்களின் மன நிலை மாற வேண்டும். பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் மன நிலை இயல்பாக வர வேண்டும் . இதற்கு நல்ல பரப்புரை- விழிப்புணர்ச்சி அவசியம்.

7.ரிக் வேதத்திலும் சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் உள்ள புகழ் பெற்ற பெண் கவிஞர்கள் குறித்து பாட புத்தகங்களில் பாடங்கள் இருக்க வேண்டும். ஜான்ஸி ராணி, சித்தூர் ராணி சென்னம்மா போன்ற வீராங்கனைகள் பற்றி போதிக்க வேண்டும். அவ்வையார், கார்கி, மைத்ரேயி, லீலாவதி போன்ற  மஹா மேதைகள் பற்றிக் கற்பிக்க வேண்டும். காஷ்மீர் மஹாராணி தித்தா, மதுரை ராணி மங்கம்மாள் போன்ற நாடாண்ட நாயகிகள் பற்றியும் சொல்லித் தந்தால் மன நிலையில் மாற்றம் வரலாம். பெண்கள் பற்றி பாரதியார் எழுதிய பாடல்களே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். (பெண்கள் ஊதியத்தில் வாழும் அப்பா- அம்மாக்களை சமூகம் எள்ளி நகையாட வேண்டும்).

8.எல்லாவற்றுக்கும் மேலாக கருக்கலைப்பை — மனு முதலான ஸ்மிருதிகள் — ப்ரூனுஹத்தி — கொலை என்று கண்டிப்பதை மடாதிபதிகள் மூலம் கற்பிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் குடும்பக் கட்டுபாட்டுக்குப் பொறுப்பான நடுவண் அரசு அமைச்சர் காஞ்சி மஹா ஸ்வாமிகளைச் சந்தித்தபோது அவர் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிக்க மறுத்து விட்டார்.  விளக்கம் கேட்ட போது இது  “புதிய பிரச்சினைகளை உருவாக்கும்” என்றார். ஆனால் இயற்கையான புலன் கட்டுப்பாட்டை அவர் ஆதரித்தார்.

இதற்கும் பெண்கள் தொகை குறைந்ததற்கும் என்ன தொடர்பு என்று உங்களில் சிலர் வியக்கலாம். எடுத்துக் காட்டாக ஒருவர் குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்கள் முழுக்க முழுக்க குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களைப் பயன்படுத்தினால் பெண்கள் என்பதே இராதே!! இது தவிர இத்தகைய சாதநங்கள் ஒழுக்கக் குறைவுக்கும் உதவும் என்பதை விளக்கத் தேவை இல்லை. அது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்ட விசயம்.

(இருந்தாலும் இதை விளக்க, ஒரு சுவையான, சோகமான கதை சொல்லுகிறேன். என் லண்டன் நண்பர் ஒருவர், என்னை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், “ஸார்! அடுத்த முறை நீங்கள் சென்னைக்குச் செல்லும்போது —XXX கடற்கரைச் சாலையில் நிறைய விடுதிகள் கட்டிப்போட்டுள்ளோம். நீங்கள் அவசியம் குடும்பத்தோடு தங்க வேண்டும் என்பார். அண்மையில் அவரரைச் சந்தித்தபோது, என்னப்பா! பிஸினஸ் எப்படிப் போகிறது; ஸாரி, நீங்களும் ஒவ்வொரு முறையும் சொல்லுவீர்கள். அடுத்தமுறை நான் இந்தியாவுக்குப் போகையில் கட்டாயம் ………….. என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் ஒரு வெடி குண்டு போட்டார். அதை ஏன் கேட்கிறீர்கள்!   இப்போதெல்லாம் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் ஆண்கள் பெண்கள் அங்கே வந்து கும்மாளம் அடிக்கின்றனர். “கான்பெரன்ஸ்”, கூட்டம் என்ற பெயரில் மிக  மோஸமான செயல்கள் நடக்கின்றன. காலையில் அந்த இடங்களைச் சுத்தம் செய்வோர் டன் கணக்கில் ஆண் உறைகளை எடுக்கின்றனர் என்றார். எனக்குப் பெரும் அதிர்ச்சி! ஏமாற்றம். இனி மேல் அங்கு தங்க முடியாதே என்று!

 

“அடடா! அப்படியா! உடனே அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கலாமே” என்றேன் அப்பாவி போல! போட்டாரே போட்டார்.இன்னும் ஒரு வெடி குண்டை! அந்தப் பகுதி XXX அதிகாரி என் மச்சான் தானே என்று.

 

“நான் நினைத்தேன் , முதலுக்கே  மோசமாக இருக்கிறதே” என்று.)

 

contact swami_48@yahoo.com