உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?

word_amazing

கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

amazing 2

காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

Amazing_Words

காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

Please read my earlier posts:

1.மாநுடப் பிறவி அரிது! அரிது!!
2.‘Jantunam Narajanma Durlabatha:’ -Human Birth is difficult to obtain

700 கட்டுரைகளின் பட்டியலுக்கு தொடர்புகொள்ள
Swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment