பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்! (Post No.5644)

 

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –13-29
Post No. 5644

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பிரிட்டனில் பிரபுக்கள் சபை உறுப்பினருடன் ஒரு தத்துவ அறிஞரும் உணவு உண்ண அமர்ந்தார். அவர் ஒவ்வொரு தின்பண்டத்தையும் உற்று நோக்கி ருசித்து எடுத்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஒரு பிரபுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வாயைத் திறந்தார்; சொற்களை உதிர்த்தார்:-

“என்ன இது விநோதமாக இருக்கிறதே! உங்களைப் போன்ற தத்துவ அறிஞர் கூட இப்படி விருப்பப்பட்ட உணவைத் தேடி எடுத்து உண்பீர்களா?

உடனே அந்த தத்துவ அறிஞர் சொன்னார்:

அட, ருசியான பண்டங்களை எல்லாம், கடவுள் முட்டாள்பய ல்களுக்கு மட்டும் படைத்தாரோ?

xxxx

 

கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?

பிரிட்டிஷ் பிரதமர் தாமஸ் பெலாம் ஹோல்ஸ் (நியூகாஸ்ல் பிரபு DUKE OF NECASTLE) பிரதமராக இருந்த போது லாரன்ஸ் ஸ்டேர்ன் (LAWRENCE STERN) என்ற பிரபல கதாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பிரதமர் சொன்னார்,

உங்களைப் போன்ற அறிஞர்கள் எல்லாம் வேலைக்கு லாயக்கு அற்றவர்கள். உங்களுக்கு எழுதத் தெரியுமே தவிர வேலை செய்யத் தெரியாது.

உடனே எழுத்தாளர் ஸ்டேர்ன் சொன்னார்,

ஐயா, பிரதமர் அவர்களே. குதிரையும் சேனத்தை சுமக்கும்.

கழுதை அதைவிட பெரிய பாரத்தை சுமக்கும்.

கழுதையும் குதிரையும் ஒன்றாமோ!!

xxxx


பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

நல்ல மூக்கொடை

ஜான் மேனார்ட் (JOHN MAYNARD) என்பவர் பிரிட்டனின் பெரிய சட்ட நிபுணர்.

அவருக்கு மிகவும் வயதானபோது, ஒருவர் அவரை வசை பாடினார்.

ஓய், கிழவரே! உமக்கு வயதாகிவிட்டது. சட்டம் எல்லாம் மறந்து போச்சு.

அந்த வயதிலும் அறிவு மழுங்காத அந்த மேதை உடனே பதிலடி கொடுத்தார்:-

அன்பரே! உண்மைதான்! நீர் படிக்காத அளவை விட  அதிக அளவு சட்டம் மறந்து போச்சு!

(அவர் எந்த அளவுக்கு நூல் அறிவற்றவரோ அந்த அளவைவிட….. என்று சொன்னதன் மூலம் அவர் பெரிய முட்டாள் என்பதை இடித்துக் காட்டி மூக்கை உடைத்தார்).

Tags:– மூக்கொடை, பிளாட்டோ, எமர்சன்

XXXX SUBHAM XXX

MEN OF WIT ARE NOT FIT FOR JOBS (Post No.5643)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –7-27 am
Post No. 5643

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Learned Men Anecdotes

Someone once rudely taunted John Maynard, Lord Commissioner of the Great Seal of England, with having grown so old as to forget his law.
“True Sir”, he replied,
“I have forgotten more law than you ever learned” .

Xxxx

PHILOSOPHERS ALSO NEED FOOD

A noble man observing a person eminent for his philosophical talents, intent on choosing delicacies at table said to him,
What! Do you philosophers love dainties?
Why not — do you think my Lord, that the good things of the world were only made for blockheads?

Xxx

 

MEN OF WIT ARE NOT FIT FOR JOBS
The Duke of Newcastle, when prime minister, once told the author of Tristan Shandy, that men of wit were not fit to be employed, being incapable of business.

“They are not incapable of business, my Lord, but above it, replied Sterne. A sprightly generous horse is able to carry a pack saddle as well as an ass, but he is too good to be put to the drudgery”.

Xxxx

 

WORDS WORTH AND COLERIDGE COULD NOT DO IT

Cottle, the Bath bookseller, recorded,

I removed the harness…..but…… could not get off the collar. In despair I called for assistance. Mr Wordsworth first brought his ingenuity into exercise, but, after several unsuccessful efforts, he relinquished the achievement as altogether impracticable. Mr Coleridge now tried his hand, but….after twisting the poor horse’s neck, almost to strangulation, and the great danger of his eyes, he gave up the useless task, pronouncing that the horse head must have grown (gout or dropsy) since the collar was put on! for it was a downright impossibility for such a huge os frontis to pass through narrow a collar! At about this juncture the servant girl appeared, turned the collar upside down, and removed it.

Xxx


PLATO HAS MY IDEAS!
One of Emerson’s rural neighbor s at Concord borrowed from him a copy of Plato
Did you enjoy the book?, asked Emerson, when it was returned.
I did that, replied his neighbour.
This Plato has a lot of my ideas

Xxx

QUEEN CHRISTINA
Queen Christina of Sweden complimented the celebrated Vossius by saying that he was so well learned as not only to know whence all the words came but whither they were going.

Tags: Plato, Men of wit, Coleridge, law, philosophers

XXX  SUBHAM XXX

இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 November 2018

Time uploaded in London – 6-56 AM (GMT)

Post No. 5642

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

தடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல?

விநாயகரை வணங்கு.

அனைத்திலும் வெற்றி பெற?

முருகா, துணை

படைப்பாற்றலுக்கு?

பிரம்மா

காத்து வளர்ச்சியுறச் செய்ய?

விஷ்ணு

நலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க

சிவமே துணை

அஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற?

மஹாலக்ஷ்மியே சரணம்

வாக்குக்கும், அறிவிற்கும், ஞானத்திற்கும்?

சரஸ்வதி துதி

மொழிக்குத் துணை?

முருகா என்னும் நாமம்!

நெஞ்சத்தின் பயன்?

அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்

 

Navagraha picture posted by Lalgudi Veda

ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் ?

ஆதித்யன். சூரியன்

Picture posted by Lalgudi Veda

மனத்திற்கு?

சந்திரன்

வணிக வெற்றிக்கு?

புதன்

ஆசிரியத் தலைமைக்கு?

குரு

ஆயுளுக்கு?

காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சனி

வீரத்திற்கு?

செவ்வாய்

பகை கெட?

ராகு

முக்திக்கு

கேது

பொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்?

பூமி

மூச்சிற்கு?

வாயு

நீடித்து வாழ?

அக்னி

எங்கும் பரந்த நிலை பெற?

ஆகாயம்

உயிர் வாழ?

நீர்

புற இருள் போக?

அக இருள், புற இருள் போக கண்

ஜீவனைத் தங்க வைக்க?

நாசி

உயிரை வளர்க்க?

உடம்பை வளர்த்தால் உயிர் வளரும்

செல்வத்துள் தலையாய செல்வம் பெற?

செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்

சுவை பட வாழ்வதற்கு?

நாக்கு

 

வெளிச்சம் தருவது?

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

நமசிவாய என்னும் நாமம்

அதைத் தருவது?

பன்னிரு திருமுறைகள்

நலம் தரும் ஒரு சொல்.

நாராயணா என்னும் சொல்.

அதைத் தருவது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

வாழ்க்கை தத்துவம் அறிய?

பகவத் கீதை

அரக்க சக்தியை வெற்றி பெற?

ஆதித்ய ஹ்ருதயம்

என்றும் மாறாதது?

வேதங்கள்

மாறுவது?

ஸ்மிருதிகள்

வலிமையுள்ளது?

காலம்

அனைத்தையும் அழிப்பது?

காலம்

அனைத்தையும் காப்பது?

காலம்

நினைக்க வேண்டிய ஒன்று?

எப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி!

இவை அனைத்தையும் தருவது எது?

ஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே!

Tags–இல்லாதது ,இல்லை

***

தங்கம் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5641)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –18-30
Post No. 5641

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 22 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. கண்டு மகிழ்க; தமிழ் வாழ்க

விடை கீழே உளது.

குறுக்கே

1.இது சரியாக இல்லாவிடில் வேலை கிடைக்காது

4.விலையுயர்ந்த பொருள்; பெண்களுகு உயிர்

7.தண்ணீர் இப்படி இருந்தால் தெளிய வேண்டும்

8.கட்டிடம் கட்டத் தேவை

10.கொடி பறக்கத் தேவை

11.சின்ன

  1. N0.9 ஒன்பதைப் பாருங்கள்

14.தவறு

15.சிவப்புக் குட்டி

16.பறவை

20.நுழை

21.நாயை விரட்ட உதவும்

22.வினவு

கீழே

2.சந்யாசிகள் வரவேற்பில் வழங்கப்படுவது

3.மீனாட்சியின் கண்

4.கால் காசுக்குப் பிரயோஜனம் இல்லை என்பர்

5.தோடி, பூபாளம், இந்தோளம்

6.கெடுதி

8.வெள்ளையுடன் பேசப்படுவது

9.பந்தைப்………… கட்டிப்…………………………….

10.தேங்காய் நாரின் மறு வடிவம்

13.இதற்கு மயங்காதோர் யார்?

16.கடலில் இருந்து வரும்; மழையைத் தரும்

17.காற்றினில் மிதந்து வரும் இனிமை

18.தாழ்ப்பாளின் நண்பன்

19.குடியைக் கெடுக்கும்

  1. கடவுள் கொடுத்த ஐந்து

21.தேள் கொடுக்கும்

 

 

விடை

1.தகுதி

2.கும்பம்

3.கயல்

4.தங்கம்

4.தம்பிடி

5.ராகம்

6.தீங்கு

7.கலங்கல்

8.கறுப்பு

8.கல்

9.பிடி

10.கயிறு

10.கம்பம்

11.குறு

12.பிடி

13.சங்கீதம்

15.செங்கன்று

14.பிழை

16.புள்

16.புயல்

17.கீதம்

18.கைப்பிடி

19.குடி

20.புலன்

20.புகு

21.கல்லடி

21.கடி

22.கேள்

TAGS–தங்கம், குறுக்கெழுத்துப் போட்டி

–subham–

தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்? (Post No.5640)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –16-26
Post No. 5640

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் நிகண்டுகளில் தாமரைக்கான பெயர்களைத் தருகையில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சேர்த்தே தருவர். ஏனெனில் சங்க காலம் முதல் இன்று வரை எல்லா அகராதிகளிலும் நிகண்டுகளிலும் ‘தமிழ்’ என்ற பெயர் இருந்தாலும் பாதி ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களே!!! அதை நினைவில் வைத்துக்கொண்டு கட்டத்தில் உள்ள 19 தாமரை மலரின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். மலர் என்று மட்டும் பார்த்தால், இந்துப் பெண்களின் பெயர்களில் அதிகம் இடம் பெறுவதும் தாமரை மலரின் பெயர்களே.

 

கீழ்கண்ட பெயர்கள் உள்ளன:-

தாமரை, மலர், வாரிஜம், அம்புஜம், ஜலஜம்

அம்போருகம், கமலம், அரவிந்தம், இண்டை,

புண்டரீகம், முளரி, பங்கஜம், சதபத்ரி, பதுமம்

சரோஜம், நளினம், அரும்பு, முண்டகம், ராஜீவ.

சரோஜா, நளினி, பத்மா, அம்புஜம், ஜலஜா, கமலா முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.

மலர் என்றால் தாமரை; இந்தியாவின் தேசீய மலரும் தாமரை.

Tags– தாமரை,  பெயர்கள்

தாமரை வாழ்க; தாமரை வெல்க

நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும் (Post No.5639)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –15-24
Post No. 5639

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ், ஸம்ஸ்க்ருதம், பாலி மொழிகளில் பகவான் க்ருஷ்ணர், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் ஒரே கருத்தை மொழிவது கண்டு இன்புறத்தக்கது. திருக்குறள் ,பகவத் கீதை, தம்மபதம், ஹிதோபதேசம், யோக வாசிஷ்டம் ஆகியவற்றில் ஒரே கருத்தைக் காண்பது மகிழ்ச்சி தரும்; அவற்றைப் படித்து ஞானம் பெறுவோம்.

காமம், வெகுளி, மயக்கமிவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய் (குறள் 360)

பொருள்

விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் (காமம், க்ரோதம்,லோபம்) இவை மூன்றும் ஒருவன் மனதில் கூட வராத நிலயில் மெய்யுணர்வு தோன்றும்; வினை கெடும்; பிறவிப் பிணி என்னும் நோய் அகலும்—

என்று மெய்யுணர்வு அதிகாரத்தில் வள்ளுவர் பகர்வார்.

இதை முன்னரே பகவத் கீதையில் கண்ணனும் செப்பினான்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனம் ஆத்மனஹ

காமஹ க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் (16-21)

பொருள்

ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் இந்த நரக வாயில் மூவகைத்து– காமம், கோபம், லோபம் என்பன; ஆகையால் இம்முன்றையும் தள்ள வேண்டும்.

இதை புத்தர் ‘தம்மபத’த்தில் இவ்வாறு புகல்வார்:

யஸ்சசேதம் சமுச்சின்னம் மூலகச்சம் சமூஹதம்

ச வந்ததோஷோ மேதாவி சாதுரூபோ தி உச்சதி (தம்மபதம் , 263)

பொருள்

யார் ஒருவனிடத்தில் பொறாமை, பேராசை,கெட்ட குணம் ஆகியன களையப்படுகிறதோ, வேருடன் அகற்றப்படுகிறதோ, அவனே மேதாவி/ அறிஞன்; அழகன்.

xxx

 

ஸம்ஸ்க்ருதப் பொன் மொழி

காமோலோபஸ்ததா க்ரோதோ டம்பஸ் சத்வார இத்யமீ

பொருள்

ஆசை, கோபம், பேராசை/கருமித்தனம், டாம்பீகம்/தற்பெருமை ஆகிய நான்கும் நரகத்தின் வாசல்கள்

ஹிதோபதேசம் மொழிவது என்னவென்றால்,

மரணத்தின்  வாசல்கள் 4

அனுசித கார்யாரம்பஹ ஸ்வஜன விரோதோ பலீயஸா ஸ்பர்தா

ப்ரமதாஜன விஸ்வாசோ ம்ருத்யோர் த்வாராணி சத்வாரி

பொருள்

பயனற்ற வேலை செய்தல்,சொந்தபந்தங்களைப் பகைத்தல், தன்னைவிட வலியவனுடன் மோதல், இளம்பெண்களிடம் நம்பிக்கை வைத்தல் ஆகிய நான்கும் மரணப் பாதையின் வாசல்கள்.

 

மோக்ஷத்துக்கான 4 வாசல்கள்

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ் சத்வாரஹ பரிகீர்த்திதாஹா

சாமோ விசாரஹ ஸந்தோஷஸ் சதுர்த்தஹ ஸத்ஸங்கமஹ

–யோக வாசிஷ்டம் 2-11-59

மோட்சத்தின் (வாசலில் நிற்கும்) காவல்காரர்கள் நால்வர்:

மனக் கட்டுப்பாடு, ஆத்ம விசரணை, திருப்தி (போதும் என்ற மனம்), சாதுக்களின் சஹவாசம் (தொண்டருடன் கூட்டு)

ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் கூறிவிட்டனர். பின்பற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

Tags– நரக வாசல், சொர்க்க வாசல்,மோக்ஷ வாசல்

–சுபம்–

Gateway to Hell and Gateway to Heaven (Post No.5638)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –14-27

Post No. 5638

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

There are beautiful slokas/couplets in Sanskrit language giving details about gateways to hell and heaven. We find it in Pali scriptures and Tamil scriptures as well. Bhagavad Gita, Dhammapada, the Buddhist Veda and Tamil Veda Tirukkural have got similar couplets.

Let us look at Sanskrit slokas first:-

Hitopadesa (sloka) says,

Doors to Death (Mrtyoh dvarani):-

1.Beginning of an unworthy act

2.Enmity with one’s own kin

3.Competition with a stronger person

4.Faith in young women

Anicita karyarambah svajana virodho baliyasa spardha

Pramadajanavisvaso mrtyoh dvarani catvari

–Hitopadesa 3-149

 

Gateway to Moksha/Liberartion

Yoga Vasistah says

1.Control of mind

2.Inquiry

3.Contentment

4.Association with saints

are the four gateways to Moksha.

mokshadvare dvarapalascatvah parikirtitah

samo vicharah santosascaturtah sadhusangamah

Gateways of Hell

kama krodha lobha dambha

kamo lobhastatha  krodho dhambascatvara ithyami

xxx

 

Bhagavad Gita (16-21) says,

The Triple Gate of Hell

trividham narakasyaedam

dvaram nasanam atmanah

kamah krodhas tatha lobhas

tasmad etat trayam tyajet

The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore, these three, one should abandon (BG 16-21)

Tiruvalluvar, author of Tamil Veda Tirukkural says,

Once the triple evils of lust, anger and delusion are eliminated

All sorrow will come to an end —(Kural 360)

Buddha in The Dhammapada says

He in whom these (envy, greed and wickedness) are destroyed, removed by the very root, he who is free from guilt, and is wise, is said to be handsome (263)

Lord, saints and poets repeated the same advise in different words.

Tags- Gateway, Hell, Heaven, Moksha, Greed, Lust, delusion, envy, anger.

–Subham–

இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்? (Post No.5637)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 November 2018

Time uploaded in London – 7-26 AM (GMT)

Post No. 5637

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 9-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஆறாம்) கட்டுரை  

அறிவியல் துளிகள் ! அத்தியாயம் 400

ன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

ச.நாகராஜன்

டாக்டர் அகிரா ஹராகுச்சி (Dr Akira Harguhi) என்ற ஜப்பானியர் தான் இன்றைய உலகின் நினைவாற்றல் மன்னன். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் கூட தனது சாதனையை பொது இடத்தில் நிகழ்த்தி இவர் மனித குலத்தில் இன்று நினைவாற்றலில் முதலிடம் பெற்றுத் திகழ்கிறார்.

‘பை என்ற கணிதக் குறியீடு கணிதக் கலையின் அபூர்வமான விசித்திரம். (இந்தத் தொடரில் முன்பே இது பற்றி விளக்கப்பட்டுள்ளது)

 3.142 என்ற எண்ணால் ‘பை-யை சாதாரணமாகக் குறிப்பிட்டாலும் இது முடிவே இல்லாத தொடர் எண். 22ஐ ஏழால் வகுத்துப் பார்த்தால் வருகிறது இந்தத் தொடர் எண்.

இந்தத் தொடர் எண்ணில் ஒரு லட்சம் இலக்கங்களை எதையும் பார்க்காமல் தன் நினைவிலிருந்தே சொல்கிறார் டாக்டர் அகுரா.

2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி காலை 9 மணிக்குத் தனது நினைவாற்றல் திறனை உலகிற்குக் காட்டுவதற்காக பை தொடர் எண்ணைச் சொல்ல ஆரம்பித்த இவர் அன்று நள்ளிரவில் 83,431 இலக்கங்களைச் சொல்லி முடித்தார். ஒரு லட்சமாவது இலக்கத்தை இரவு 1.28க்கு அடைந்த அவர் (அதாவது அக்டோபர் நான்காம் தேதி அதிகாலை) குழுமியிருந்தோரை வியக்க வைத்தார்.

நிகழ்வு முழுவதும் படம் பிடிக்கப்பட்டது. டோக்கியோவில் கிஸாரஜு (Kisarazu) என்ற பொது அரங்கில் மக்கள் முன் நடைபெற்றது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அவர் ஐந்து நிமிடம் இடைவெளி ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அந்த இடைவெளியில் ஓனிகிரி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் புழுங்கலரிசியால் செய்யப்பட்ட அரிசி உருண்டைகளை தனது உடல் சக்திக்காகச் சாப்பிட்டார்.

இயற்கை உபாதை கழிக்க அவர் டாய்லெட்டுக்குச் சென்றாலும் கூட அதுவும் கூடப் படம் பிடிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நிகழ்வில் எந்த வித ஏமாற்று வேலையையும் அவர் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத் தான் இப்படிப்பட்ட கடுமையான விதிகள் அனுசரிக்கப்பட்டன.

டாக்டர் அகிரா தனது உலக ரிகார்டைத் தானே இந்த நிகழ்வில் முறியடித்துப் புதிய சாதனையைப் படைத்தார். 2005ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அவர் நடத்திய நிகழ்வில் அவர் 83431 இலக்கங்களை நினைவிலிருந்து சொன்னார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ஆம் தேதி ‘பை தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு பை தினத்தில் 1,11,701 இலக்கங்களைத் தன்னால் நினைவாற்றல் திறன் மூலமாகச் சொல்ல முடியும் என்றார்.

கின்னஸ் ரிகார்டின் விதி முறைகள் சற்றுக் கடுமையானவை. கின்னஸ் ரிகார்டில் இவர் இவ்வளவு எண்ணிக்கையில் இலக்கங்கள் சொன்னது பதிவு செய்யப்படவில்லை. என்றாலும் இன்று இவரே உலகின் மெமரி மன்னர்!

இப்படி நினைவாற்றல் திறனைக் கூட்ட வல்ல நிமோனிக் சிஸ்டத்தை அவரே அமைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு அவர் மனதில் பளிச்சிடும்.

அவ்வளவு தான், எண்களைக் கூறிக் கொண்டே போவார்.

ஒரு நாளைக்கு 15000 எண்களை நினைவிலிருந்து கூறிப் பயிற்சி செய்யும் டாக்டர் அகிரா, புத்த மத மந்திரத்தை உச்சரிப்பது போல பயபக்தியுடன் இதைச் சொல்லி வருவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு தினமும் ஒரு மணி நேரம் ஆகிறது.

ஒரு நாளைக்கு 25000 எண்களைச் சொல்லத் தான் முயல்வதாக அவர் தனது குறிக்கோள் பற்றிச் சொல்கிறார். இதற்கு மூன்று மணி நேரம் ஆகும்.

புத்த மதத்தின் ஜென் பிரிவின் படி உலகில் படைக்கப்பட்டு இருக்கும் மலைகள், ஆறுகள், உயிர் வாழ் இனங்கள் ஆகிய அனைத்துமே புத்தரை உள்ளடக்கியுள்ளன என்பதாகும்.

ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணிக்கவோ அல்லது அதன் பரப்பைக் கணிக்கவோ ‘பை இன்றியமையாதது.

உலகத்தைச் சுற்றி வரும் அனைத்திலும் கூட புத்தர் இருக்கிறார் என்பதும் அதில் ‘பை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும் அகிராவின் கொள்கை.

நினைவாற்றல் திறனை எப்படிக் கூட்டுவது என்பது பற்றி உலகெங்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வரும் அகிராவுக்கு கின்னஸ் இன்னும் அங்கீகாரம் தரவில்லை. அது பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. கின்னஸுக்கென ஒரு கொள்கையும் நடைமுறையும் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்வ்து என்கிறார் அவர்.

ஒவ்வொரு இலக்கத்திற்கும் அகிரா ஒரு ஒலியை நினைவு வைத்துக் கொள்கிறார். இந்த ஒலி மொழியினால் அவர் பல கதைகளை உருவாக்கி இருக்கிறார். கதையை நினைவு படுத்திக் கொண்டால் இலக்கங்கள் தானாக மடமடவென்று வந்து விழும். 

இப்படி 800 கதைகளை அவர் உருவாக்கி இருக்கிறார். கதைகளின் கதாநாயகர்கள் மிருகங்களும் தாவரங்களும் தான்!

‘பையின் முதல் நூறு இலக்கங்களுக்கு மட்டும் உள்ள கதையில் மனிதருக்கு இடமுண்டு!

பைக்கான அவரின் முதல் ஐம்பது இலக்கங்களுக்கான கதை இது தான்:

 “Well, I, that fragile being who left my hometown to find a peace of mind, is going to die in the dark corners; it’s easy to die, but I stay positive.”

அவரது மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் அவரது இந்த ஹாபியை வெகுவாக ரசிக்கின்றனர்.

 கின்னஸ் ரிகார்டின் படி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘பைக்கான மெமரி மன்னன் சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்பவர். 2005ஆம் ஆண்டு

 நவம்பர் 19ஆம் தேதி 24 மணி நான்கு நிமிடத்தில் 67890 இலக்கங்களை கின்னஸ் விதிமுறைகளுக்கிணங்க சரியாகச் சொல்லி கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றார்.

நினைவாற்றல் திறனை பயிற்சி மூலம் ஒருவர் கூட்டிக் கொள்ளலாம் என்பது அறிவியல் தரும் செய்தி.

நேரமும் மனமும் திறனும் இருந்தால் இந்த ரிகார்டையும் ஒருவர் வெல்வார்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஆர்தர் இவான்ஸ் (Sir Arthur Evans – பிறப்பு 8-7-1851 மறைவு 11-7-1941) பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெரிய புதைபொருள் ஆராய்ச்சியாளர். க்ரீட் தீவில் இருந்த க்னாஸாஸ் (Palace of Knossos in the island of Crete) என்ற அரண்மனையை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்து அவர் பெரும்புகழ் பெற்றார். தனது தொண்ணூறாவது பிறந்த நாளன்று அதை நண்பர்களுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்திருந்த விருந்தினர்களுள் ஒருவர் ஜெர்மானியர்கள் க்னாஸாஸ் அரண்மனையை அழித்து விட்டதாகக் கூறினார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய இவான்ஸ் மனச்சோர்வுக்கு ஆளாகி மூன்றே மூன்று நாட்கள் தான் உயிர் வாழ்ந்தார். ஆனால் உண்மை என்னவெனில் அந்த விருந்தாளிக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி. க்னாஸாஸ் அரண்மனை உண்மையில் அழிக்கப்படவே இல்லை. ஜெர்மானியர்கள் அந்த புராதனமான அரண்மனை அழிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அரண்மனை பத்திரமாக பாதுகாக்கப்பட்டது. தவறான செய்தியால் மனம் வருந்தி ஒரு அறிஞரின் உயிர் போனது தான் மிச்சம்!

 

TAGS- சர் ஆர்தர் இவான்ஸ்,நினைவாற்றல், மெமரி மன்னன்

***

இந்து மத இடி தாங்கி அர்ஜுனன்! (Post No.5636)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London –15-59

Post No. 5636

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் அர்ஜுனனின் குறைந்தது 16 பெயர்கள் உள்ளன. கண்டு பிடித்து இடி , மின்னல் பயம் அகற்றுங்கள். விடை கீழே உளது.

அர்ஜுனனின் பத்து பெயர்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லப்படும். இடி இடிக்கும்போது குழந்தைகளைத் தாய்மார்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லச் செய்வர். அர்ஜுனன், இந்திரனின் மகன்; அதாவது இந்திரனின் அம்சத்தை உடையவன். இந்திரன்   இடி,மின்னலுக்கு அதிபதி. ஆகையால் இடி மின்னலால் பயம் ஏற்பட்கூடாதென்பதற்காக அர்ஜுனனின் பத்து பெயர்களையும் சொல்ல வேண்டும். அப்படி பத்து பேரும் நினைவு இல்லாவிடில் அர்ஜுனப் பத்து என்று சொன்னாலே போதும்.

கட்டிடங்கள், இடியினால் பாதிக்கப்படாமல் இருக்க, இடி தாங்கி அவசியம்.

இளம் சிறார்கள் இடி,மின்னலைக் கண்டு அஞ்சாமலிருக்க அர்ஜுனப்பத்து அவசியம்.

நூறு சதவிகித நம்பிக்கை உடையவர்களுக்கு இடி மின்னலில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

அர்ஜுனனின் பத்துப் பெயர்கள்

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

xxx

விடை

சவ்யசாசி

அர்ஜுன

பீபத்சு

தனஞ்சய

பல்குண

ஸ்வேதவாஹன

பார்த்த

கிரீடி

கிருஷ்ண

விஜய

பாரத

பரந்தப

குருநந்தன

குடாகேச (ன்)

கபித்வஜ

அனகன்

பாண்டவ

xxxx

 

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன், வெள்ளை நிறம் கொண்டவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்; பாண்டவர்களில் தலை சிறந்த வீரன்; வில்லுக்கு விஜயன்.
தனஞ்ஜயன் =  யுதிஷ்டிரரின் ராஜசூய யக்ஞத்தின் போது உத்தரகுரு வரை சென்று செல்வத்தைக் கொணர்ந்தவன் , அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் =அர்ஜுனன் கொடியில் அனுமன் இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது,  குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்; ப்ருதா என்பது குந்தியின் மற்றொரு பெயர்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி =  இந்திரனால் கிரீடம் சூட்டப்பட்டவன்;  கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = எல்லோரும் வலதுகையால் அம்புவிடுவர். அர்ஜுனன், இடது கையாலும் எய்ய வல்லவன். இடது கையால் அம்பு எய்பவன்.

 

TAGS–தனஞ்ஜயன், அர்ஜுனன், பத்துப் பெயர்கள்

–சுபம்-

HINDU LIGHTNING CONDUCTOR-ARJUNA! (Post No.5635)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London – 7-08 am

Post No. 5635

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

1

D

H A 2 N A N J Y A S 3
K 4 I R I T I P A
U J 5 I S H N U A V
R N U G 6 L A F 7 S T Y
U N U T A 14 T N A
N P 8 A D A A N A A S
A A A Y R A H R A
N R K A A K B A C
D T E J H A I P 9 H
A H S I B 10 N B 11 I
N A H A V 12 A T E V S 13

FIND THE NAMES OF ARJUNA IN THE WORD SEARCH OR CROSSWORD

THIS CAN BE PALYED AS WORDSEARCH OR CROSSWORD.

LEVEL ONE – WORD SEARCH

LEVEL TWO- CROSSWORD

IF YOU ARE RAMILIAR WITH ARJUNA’S NAMES GO TO CROSSWORD.

I HAVE GIVEN THE FIRST LETTER OF EACH NAME

ARJUNA WORD SEARCH

1

D

H A 2 N A N J Y A S 3
K 4 I R I T I P A
U J 5 I S H N U A V
R N U G 6 L A F 7 S T Y
U N U T A 14 T N A
N P 8 A D A A N A A S
A A A Y R A H R A
N R K A A K B A C
D T E J H A I P 9 H
A H S I B 10 N B 11 I
N A H A V 12 A T E V S 13

ARJUNA  CROSS WORD

1

D

A 2 S 3
K 4
J 5
G 6 F 7
A 14
P 8
P 9
I B 10 B 11
V 12 S 13

ACROSS

1.DHANANJAYA; 4.KIRITI ; 5.JISHNU; 7.FALGUNA; 13. SVETAVAHANA

DOWN

2.ARJUNA, 3.SAVYASACHI, 4.KURUNANDAN, 6.GUDAKESA, 14.ANAKAN

  1. PARTHA, 9.PARANTAPA, 10. BHARATA, 11.BIBHATSU, 12.VIJAYA

HINDU LIGHTNING CONDUCTOR!

MEANING OF ARJUNA’S NAMES

Children in India are taught to recited Arjuna’s TEN NAMES when there are thunderstorms. Since God Indra was the deity of Thunder and lightning, and Arjuna was the son of Indra, people recite to get rid of the fear about thunder and lightning.

Buildings have lightning conductors to safeguard it from the thunder strikes. In the same way children have TEN NAMES of ARJUNA to protect them from the fear of Thunder. This boosts children’s confidence.

The names are called Arjuna Ten.

The Ten Names included in the ‘Arjuna Ten’ are

1.Arjuna =Pure , white

2.Bibhatsu- one who makes his enemies scared or hated
3.Dhananjaya = Winner of wealth; went upto Uttarakuru and brought home huge treasure

4.Flaguna- one who was born under the Panguni Uttara star

5.Gudakesa = who has conquered sleep

6.Krishna- one who gets rid of nescience, ignorance
7.Kritee = crowned by Indra
8.Savyachacin = He can use even his Left hand to fire arrows
9.Svetavahana – one who has a chariot with white horses

10.Vijayan- ever victorious (ALSO JISHNU)

In Bhagavad Gita and other scriptures the following names are used. In the Gita 13 different names are used for Arjuna.

Arjuna =Pure , white
Bharata = Descendent of Bharata
Dhanamjaya = Winner of wealth;went upto Uttarakuru and brought home huge treasure
Gudakesa = who has conquered sleep
Kapi dwaja = Having Flag of Monkey ; Hanuman is in the flag of Arjun
Partha = Son of Prtha; (Prtha is another name of Kunti)
Paramtapa = Oppressor of the enemies
Pandava = Pandu’s son
Savyachacin = He can use even his Left hand to fire arrows
Anakan =sinless
Kauntheyan = Son of Kunti
Kritee = crowned by Indra
Kurunandana = Born in Kuru clan

–subham–