18 Sep 2014 – Ganges is
everywhere in Sri Lanka! கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014 This is
already …
Date: 9 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 14-31
Post No. 6052
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)
இதுகாறும் நீங்கள் படித்து வந்த இந்தத் தொடரில்
சொல்லப்பட்டவை கடுகளவே. சொல்லாதது மலையளவு. இருநூறு வருட சரித்திரத்தைக் கொண்ட அமெரிக்கா
வாழ் மக்கள் தங்களது பழமையை எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்பதைப் பார்த்தால்
வியந்து போவோம். நாம் அதி நவீன ஆடைகளை அணிந்து வலம் வந்த போது இடையை மர இலைகளால் மறைத்து
நீலச் சாயம் பூசிக் கொண்டு திரிந்தவர்கள் இப்போது நமது சரித்திரத்தை நாமே ஏளனம் செய்யும்
ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி அவர்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டனர்.
இதில் அவர்களின் மகத்தான வெற்றி என்னவெனில் அவர்கள் இந்த தேசத்தை விட்டுச் சென்று விட்டாலும்
கூட அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற ஒரு கூலிப் பட்டாளத்தை , ஐந்தாம் படையை இங்கு நிரந்தரமாக
இருக்கும்படி செய்து விட்டது தான்!
ஆக முதலில் நாம் போரிட வேண்டியது நமது ஐந்தாம் படையுடன்
தான். அடுத்து நம்மைச் சிறுமைப் படுத்தும் வெளிப் பகையுடன்! இதைப் படிக்கும் அன்பர்கள்,
தமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் ஆகிய அனைவரிடமும் இது
பற்றி விவாதித்து ஒரு விழிப்புணர்ச்சி ஊட்டும் படி சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்
அன்பன் ச.நாகராஜன்
3. நமது தேசத்தின் குழந்தைகளிடம் பொய் சொல்லப்படுகிறது. கள்ளம் கபடமற்ற இளம் மனங்களிடம்
வெறுப்பூட்டி, முன்னோர்கள், நமதுபண்பாடு மற்றும் தேசத்தைப் போற்றாமல் இகழ்வதற்கான பயிற்சி
தரப்படுகிறது. பரஸ்பரம் சந்தேகம் கொள்ளும்படி விதைகள் அவர்கள் மனதில் விதைக்கப்படுகின்றன.ஜாதி,
பூகோள எல்லைகள், மதம், பால் மற்றும் இதர சமூக பண்பாட்டு அடிப்படைகள் ஆகியவை ஒருவருக்கொருவர்
விரோதமான அடையாளங்களைக் கொண்டிருப்பது போலக் காட்டப்பட்டு (தவறாகப்) பயன்படுத்தப்படுகிறது.
நமது குழந்தைகளின் மனங்கள் போர்க்களமாக்கப்பட்டு அங்கு உள்ளேயிருந்து போரிடும் நமது எதிரிகள், எதிர்ப்பே இல்லாத ஒரு வெற்றியைப்
பெற்று, இந்த கொடுமையான ஒரு முன்னணி இருப்பதை அறியாமலேயே நம்மை அழிக்கின்றனர்.
இந்த போரானது
பொய்களின் வழியே செய்யப்படுகிறது. இந்தப் பொய்கள் மாணவர்களுக்குக் கட்டாயமாக உள்ள வரலாற்றுப்
பாடத் திட்டங்கள் வழியே செய்யப்படுகிறது. மிக உயரிய கல்வித் தரமும் நேர்மையும் கொண்டிருக்கப்பட
வேண்டிய என் சி ஈ ஆர் டி வரலாற்றுப் பாட புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குழந்தைகளால்
படிக்கப்பட்டு உள்ளேற்றிக் கொள்ளப்படுகின்றன.
ஆனால் இங்கோ ‘வரலாற்றில் நிபுணரானவர்’
(தான் நினைத்த) கொள்கைபரப்பும் ஒருவராக மிக அமைதியான முறையில் மாற்றப்பட்டிருக்கிறார்.
நமது வரலாற்றை எடுத்துக் கொண்டு இந்த கொள்கை பரப்புநர் வெட்கமற்ற முறையில் அதை த்வம்சம்
செய்கிறார். உண்மைகளுக்குப் பதிலாக, ஒரு நாவலை உருவாக்கும் சகல விதமான உத்திகளுடன்
தனது கொள்கையைப் பரப்பும் ஒன்றை இந்திய அரசால்
அங்கீகரிக்கப்பட்ட மிகவும் அதிகாரபூர்வமான வரலாறு என்று குழந்தைகளிடம் தருகிறார்.இந்த
என் சி ஈ ஆர் டி வரலாற்றுப் பாட புத்தகங்களின் பிரதானமான உத்தி பொய்யைச் சொல்வது தான்,
அதுவும் பெரிய பொய்களை! உண்மையின் அடிப்படையிலான வரலாற்று நிகழ்வுகளைக் கற்பிப்பதற்குப்
பதிலாக, இந்தக் கொள்கை பரப்புநர் நமது வரலாற்றை கேள்விச் செய்திகளாலும் புனையப்பட்ட சொல்லப்போனால் பொய்களாலும் சித்தரித்து உருவாக்க
முயல்கிறார்.
ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம்
வகுப்பு முடிய உள்ள பாடங்களில் உள்ள அனைத்து விஷயங்களையும் அலசிப் பார்ப்போமானால் வரலாறு
பற்றி இந்த புத்தகங்களில் கொடுக்கப்படும் கூற்றுக்கள்
ஒரு பக்கம் சார்ந்தவையாகவே உள்ளன; எவற்றில் என்று பார்த்தால் இந்தியாவின் புராதன பாரம்பரியம்,
மதம், பண்பாடு, சமூகத் தலைவர்கள், சாஸ்திர இதிஹாஸ நூல்கள், ஏன் அதன் மொழியிலும் கூடத்
தான்!
இந்தியாவின் கல்வி முறை முற்றிலுமாக
வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெரிய
விவரணம் கொண்ட வரலாறு அற ரீதியாகவும் உண்மையின் அடிப்படையிலும் பார்க்கப்போனால் பிழையானது.
இந்த தந்திரத்தை அமுல்படுத்த அதி நவீன கொள்கை பரப்பும் உத்திகள்
கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த திரித்துத் தரப்படும் சித்திரம்
ஒரு தற்செயல் விபத்தோ அல்லது தெரியாமல் செய்யப்பட்ட ஒன்றோ அல்ல. ஒவ்வொரு பொய்யும்,
ஒவ்வொரு திரித்தலும், ஒவ்வொரு ஊகமும், ஒவ்வொரு முடிவும் திட்டமிட்ட ஒரு குறிக்கோளுடனேயே
செய்யப்பட்டுள்ளது. இது தங்களது உளத்தில் ஒரு தவறான விவரணத்தை நமது மாணவர்களிடையே உட்கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இது நுட்பமாகவும் மிகவும் ஏமாற்று வேலை நிபுணர்களால் செய்யப்பட்டுள்ள போதிலும் மிகத்
தெளிவாக இருக்கிறது. இது இந்திய சமூகம், பண்பாடு மற்றும் மதத்தை பாகுபாடு, கொடுமை,
ஏகாதிபத்தியம், சமமில்லாத தன்மை, வெற்று நம்பிக்கையில் ஊறிய ஒன்றாகச் சித்தரிக்கிறது.
வரலாற்று ரீதியாக சமூகம் மற்றும் பண்பாடுகளால் எதிரெதிர் உள்ளவையாக இந்தியாவை பிளவுபட்ட
தேசமாகவும் ஒரு செயற்கையான பரப்பாகவும் இது காண்பிக்கிறது.
’ப்ரெய்ன் வாஷ்ட் ரிபப்ளிக்’ என்ற
புத்தகம் ஜனநாயக ஸ்தாபனங்கள் இந்தியர்களின் சிந்தனா போக்கை மாற்றிவிடும் மிகத் தவறான
முறையை வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. இந்த நூல் எப்படி இந்த கல்வித் திட்ட திரிப்பு
வேலை நமது பல்வேறு அமைப்புகளிடம் மொழிவாரியாக, பிரதேச வாரியாக, ஜாதி வாரியாக குழப்பங்களை
உருவாக்கும் விதைகளை விதைக்கிறது என்பதை வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது.
வரலாற்றின் பெயரால் என்னென்ன பொய்கள்
பரப்பப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள நமது தேச மக்கள் எல்லா உரிமையும் பெற்றவர்கள்.
– இந்த உண்மைகளை அனைவரின் முன்னாலும் கொண்டு வருவது இந்திய வரலாற்றில் உள்ள திரித்துக்
கூறப்பட்டுள்ள விஷயங்களை அழிப்பதற்கு உதவும் என நம்பப்படுகிறது. இந்த திரித்துக் கூறல்கள்
இன்னும் அதிக சேதத்தை தவிர்ப்பதற்கு உடனடியாக முடிவெடுக்கும் நிலைமையில் உள்ளோர் இதைத்
தடுத்து உரிய சரியான நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தருணம்.
நமது தேசத்தின் பிழையுள்ள ஒரு
வடிவத்தை வழங்க சுயநலம் கொண்ட தனி நபர்களும்
நிறுவனங்களும் இருக்கின்றன. இன்றைய வரலாற்று புத்தகங்களில் திரித்துக் கூறப்பட்டுள்ளவை நம் கண்களைக் கவரும் ஒன்றல்ல, ஆனால் நயவஞ்சகமானது.
****
மேலே கண்ட தமிழாக்கத்தின் ஆங்கில
மூலம் கீழே தரப்படுகிறது :
3. The children of
our country are being lied to. Millions of impressionable young minds are being
trained to hate, loathe and despise upon their ancestors, culture and country.
Seeds of mutual suspicion are being sown in their minds. Caste, geography, religion,
gender and all other social and cultural markers are being used to cast our
children into mutually antagonistic identities. Our children’s mind space is
the battleground where the enemy, from within, is staging an uncontested
victory, and destroying us without us even realising the existence of this
belligerent front.
This war is being fought through lies. These lies are being
presented as history through textbooks that are compulsory for students. The
NCERT history textbooks, read and internalised by millions of children every
year, are supposed to be the product of the highest academic quality and
honesty. But in this case, the ‘expert historian’ has been quietly replaced by
a propagandist. The propagandist unashamedly plays havoc with our history. Instead
of facts, he uses all the propaganda techniques in creating a fiction, which he
then passes on to our children as the ‘authoritative’ history sanctioned by the
Indian State. The principal technique used in these NCERT history textbooks is
to lie and lie big. Instead of teaching historical assertions based on facts,
this propagandist tries to create a picture of our past based on hearsay,
conjectures and obviously, outright lies.
The scrutiny of the entire content, from Class 6th
to Class 12lh, shows that the version of history being presented
in these books is tilted heavily against one side: of India’s ancient heritage,
religion, culture, social leaders, scriptures and even its language.
The education system of India has been thoroughly compromised. It
is being systematically used to create a historical grand narrative which is
ethically and factually incorrect. Sophisticated propaganda techniques are
employed to create this artifice.
The distorted portrayal is neither an accident nor an aberration. Every
lie, distortion, speculation, and conjecture that is employed in manufacturing
the Indian history has a well-designed objective. It builds a false
narrative for the gullible students to absorb and imbibe in their psyche. The
message, though subtle and executed by masters of deception, is yet very clear.
It depicts an Indian society, culture and religion drenched in misogyny,
discrimination, cruelty, imperialism, inequality and superstition. India is
shown as a disjointed and artificial entity consisting of historically
antagonistic social and cultural entities.
The book “Brainwashed Republic” exposes the blatant manner iin
which democratic institutions are being used to subvert the thought process of
Indians. It exposes how this academic subversion sows the seeds of social
unrest among various groups on the basis of linguistic, regional and caste
identities.
Our fellow citizens have every right to know what lies are being
peddled in the name of history. We hope that bringing these facts in public
domain will help in eradicating these distortions from Indian history. It is
high time that the decision makers take preventive and corrective measures to
avoid the damage that this subversion can lead to.
There are individuals and institutions that have a vested interest
in presenting a biased version of history to the students of our country. The
distortions in the present history books are not spectacular, but insidious.
(Courtesy : “Brainwashed
Republic”, by Neeraj Atri and Munieswer A Sagar– Abhishek Publications, New
Delhi.)
நன்றி:
ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்
குறிப்பு
: அருமையான கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவடைகிறது. என்ற போதிலும் இதன் முற்பகுதியை
நான் தரவில்லை. ஆகவே அதையும் கூடிய விரைவில் தர விழைகிறேன். தமிழாக்கம் – ச.நா.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
CAN YOU
IDENTIFY THE 18 HEROES AND HEROINES FROM THE MAHABHARATA?
Try the short names first. Even if you have identified ten names, great success!!
சில நாட்களுக்கு முன்னர் (இதை எழுதும் தேதி 20-1-2019) மின்னஞ்சலில்
ஒரு தகவல் வந்தது. அச்சன்கோவிலில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி வேலை பார்த்த சமயத்தில் நிகழ்ந்ததாகக்
கூறப்படும் அந்தச் சம்பவத்தில் ஐயப்பன் பிரிட்டிஷ்காரருக்கு தரிசனம் கொடுத்தாராம்!
எனக்கு வியப்பு மேலிட்டது.
ஏனெனில் ஸ்வாமிஜி கிருஷ்ணா ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஸ்வாமிஜி
கிருஷ்ணாஆஃப் ஆய்க்குடி என்று அறியப்படுபவர். எங்களது குரு. மஹாகணபதியுடன் பிரத்யக்ஷமாகப்
பேசக் கூடிய பெரும் தபஸ்வி. மகான்.சித்தர். அருளாளர்.
அவர் தான் அச்சன்கோவிலை ஸ்தாபித்தவர்.
ஆக பிரிட்டிஷ்காரர் எப்படி இங்கு வந்தார்?
காயத்ரி மந்திரத்தை ஒரு யுனிவர்ஸிடி புரபஸர் ஆராய்ந்து அதன்
அபார மஹிமையைக் கண்டதாக ஒரு செய்தி மின்னஞ்சலில் பரப்பப்பட (இன்னும் இது பரப்பட்டுக்
கொண்டே தான் இருக்கிறது) இதை கிழி கிழி என்று கிழித்து நாத்திகவாதிகள் தங்கள் வலைத்தளங்களில்
கட்டுரைகளை வெளியிட்டார்கள்; வெளியிட்டும் வருகிறார்கள். முதலில் மின்னஞ்சல் தகவலில் கூறப்படும் யுனிவர்ஸிடியே
கிடையாது. அடுத்து அவர்கள் குறிப்பிடும் புரபஸரின் பெயர் எங்கும் எந்த யுனிவர்ஸிடியிலும்
கிடையாது.
ஆக அதிக உற்சாகத்தினாலோ அல்லது தனக்குத் தானே வினை வைத்துக்
கொள்வது போலவோ செய்யப்படும் இப்படிப்பட்ட செயல்கள் நமக்குத் தீங்கு தான் பயக்குமே தவிர
நன்மை தராது.
இந்த நிலையில் அச்சன்கோவில் பிரிட்டிஷ் அதிகாரியைப் பற்றிச்
சற்று வியப்புடன் தான் படித்தேன். அது கூறப்படும் கதையின் பாணி, இன்னும் கூட என்னை
அதை உண்மை என நம்பச் சொல்கிறது!
சரி விஷயத்திற்கு வருவோம்.
இடம் தென்காசி.
தென்காசி கோவிலில் ஒரு கல்வெட்டு உண்டு. அது இது தான்:
யாராகிலும் இந்த தென்காசிமேவு திருவாலயத்து
வாராததொரு குற்றம் வந்தக்கால் அப்போது அங்கு வந்து
நேராகவே அதைத் திருத்திப் புரப்பார்களை
பாரோரறியப் பணிந்தேன் பராந்தக பாண்டியனே
கோவிலைக் கட்டிய மன்னன் பராந்தக பாண்டியன், “எதிர்காலத்தில்
எப்போதாவது ஒரு சமயம் இந்த ஆலயத்திற்கு தீங்கு வந்தது எனில், அப்போது அதை நேராக்கிச்
சரி செய்பவர்களுக்கு இப்போதே பராந்தக பாண்டியனான நான் பணிகிறேன்” என்கிறார்.
என்ன அற்புதமான உயர்ந்த மனம் அந்த மன்னனுக்கு.
பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில்
கோவிலுக்கு ஒரு தீங்கு வந்தது.
கோபுரத்திலேயே விரிசல்.
திருப்பணி வேலை தொடங்கியது.ஸ்வாமிஜி கிருஷ்ணா ஆசி கூற திருப்பணி செவ்வனே நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகத்தன்று அவர் தென்காசிக்கு கோவில் கும்பாபிஷேகத்திற்கென வருகை புரிந்தார்.
எங்கள் குடும்பம் ஸ்வாமிஜியுடன் நெருக்கமான குடும்பம். நான்
அப்போது என் இளமைப்பருவத்தில் இருந்தேன்.
அங்கு காலையில் டிராவலர்ஸ் பங்களாவின் வெளி முற்றத்தில் நாற்காலிகளில்
அமர்ந்து ஒரு சின்ன பக்தி அரட்டை.
நடுவில் கம்பீரமாக கேரள அரசின் டிரான்ஸ்போர்ட் டைரக்டர் திரு
மாதவன் நாயர் அமரிந்திருந்தார். (இவரது பதவியின் பெயர் எனக்குச் சரியாகத் தெரியாது
என்றாலும் உயர் அதிகாரியாக அப்போது இருந்தார்- முக்கியமாக போக்குவரத்துத் திட்டங்களை
முடிவு செய்யும் உயர் பதவியில்!)
என்னைப் பார்த்து ஸ்வாமிஜியை எப்படித் தெரியும் என்றார். ஆஹா! இப்படிப்பட்ட கேள்விக்குத் தானே நான் காத்திருந்தேன்.
எங்கள் அனுபவங்களை விலாவாரியாக விவரித்தேன். பின்னர் அவரிடம்
ஒரு கேள்வி கேட்டேன் – “உங்களுக்கு எப்படி ஸ்வாமிஜியைத் தெரியும்?” என்று.
அவர் சாதாரணமாக பேசவே மாட்டாராம்.ரிஸர்வ்ட் டைப். உயர் அதிகாரிக்கே
உரித்தான கம்பீரம் ; ஒரு மிடுக்கு; ஒரு அதிகார தோரணை.
ஆனால் எனது கேள்விக்கு மிகவும் சந்தோஷத்துடன் பதில் கூறலானார்.
அச்சன்கோவில் என்பது மலையில் உள்ள ஐயப்ப ஸ்தலம். பரசுராமரால்
ஸ்தாபிக்கப்பட்ட சிலை கால வெள்ளத்தில் பூமிக்கு அடியில் புதையுண்டு போனது.
ஸ்வாமிஜி கிருஷ்ணாவின் கனவில் ஒரு நாள் அந்த சிலையை ஸ்தாபிதம்
செய்ய வேண்டுமென்ற ஆதேசம் வந்தது. அவர் கனவு தானே என்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால் மீண்டும் மீண்டும் அதே கனவு வரவே, இதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது என்பதை
உணர்ந்து, பல ஆட்களுடன் ஆள் உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களை வெட்டியவாறே காட்டில்
வழி செய்து கொண்டு கனவில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கு தோண்டச் சொன்னார்.
(பதினெட்டு அடி ஆழம் என நினைக்கிறேன்) பூமியில் புதையுண்டு கிடந்த ஐயப்பன் சிலை வெளியில்
எடுக்கப்பட்டு அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது.
வருடம் தோறும் புஷ்பாஞ்சலி ஸ்வாமிஜியால் மிக பிரம்மாண்டமான அளவில்
நடத்தப்பட்டு வந்தது; அவர் மறைவிற்குப் பிறகு இன்றும் அது மிக மிக பிரம்மாண்டமான அளவில்
நடத்தப்பட்டு வருகிறது.ஐயப்ப பக்தர்கள் செல்லும் ஒரு முக்கிய ஸ்தலமாக இன்று விளங்குகிறது.
ஆரம்பத்தில் அங்கு செல்ல சரியான பாதை இல்லை. மண் பாதை; கரடுமுரடான பாதை.
அதற்குச் சரியான படி சாலை அமைக்க வேண்டுமென ஸ்வாமிஜி விரும்பியபோது
அந்தக் கோரிக்கை மாதவன் நாயரின் கைக்கு வந்தது.
அவரோ கடுமையான ஆள். இந்த கடவுள்,ஸ்தலம் இதிலெல்லாம் அவ்வளவாக
நம்பிக்கை இல்லாதவர். ஸ்வாமிஜி என்றால் அவ்வளவு தான் – அந்தச் சொல்லே கட்டோடு பிடிக்காது.
என்றாலும் கோரிக்கையை இன்ஸ்பெக்ஷன் செய்து முடிவு செய்து நிர்ணயிக்க
வேண்டிய பொறுப்பில் இருந்ததால் அந்தப் பாதையில் ஒரு முறை வர ஒப்புக் கொண்டார்.
அவர் ஸ்வாமிஜியுடன் ஒரு ஜீப்பில் செல்லும் போது கிண்டலாக ஸ்வாமிஜியிடம்,
“இதுவோ காடு; இங்கு எதற்கு ஒரு பாதை? நீங்கள் தான் அற்புதங்கள் செய்பவர் ஆயிற்றே. ஒரு
புலியைக் கொண்டு வாருங்களேன், இங்கு! இதன் முக்கியத்துவத்தை நான் நம்புகிறேன்” என்றார்.
இதைக் கூறிமுடித்தவுடன் அடுத்த வளைவில் கரடுமுரடான மண்சாலையை
முழுதுமாக மறித்து ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது.
பயந்து போன மாதவன் நாயர் அலறியவாறே ஸ்வாமிஜியிடம் புலியைப் பார்த்து
விட்டேன், அதைப் போகச் சொல்லுங்கள் என்றார்.
புலியும் போனது.
கொஞ்ச தூரம் சென்றவுடன் மாதவன் நாயர், “ இது ஏதோ தற்செயலாக
-அகஸ்மாத்தாக நடந்த ஒரு சம்பவம். காட்டில் புலிகள் இருப்பது சகஜம் தானே!
இன்னொரு முறை புலி வருமா என்ன?” என்று ஸ்வாமிஜியிடம் கூற அடுத்த
வளைவில் சாலையை மறித்து ஒரு புதிய புலி நின்றது.
அந்தக் கணத்தில் அவர் மனம் மாறினார்.
“நான் அன்றிலிருந்து இன்று வரை ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தன்”
என்று முடித்தார் மாதவன் நாயர்.
(அச்சன்கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் பின்னால் ஒரு சமயம் எங்கள் குடும்பத்தினருக்குக் கிடைத்தது.
புஷ்பாஞ்சலியில் பங்கு கொண்டோம். அடடா, என்ன அற்புதமான ஸ்தலம்.
போகும் தார் பாதையோ வெகு ஜோர்.
மாதவன் நாயரை நினைத்துக் கொண்டேன் அப்போது.)
தென்காசி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பராந்தக பாண்டியனின் ஆசை வெகு காலம் கழித்து நிறைவெற்றப்பட்ட
ஒரு பெரும் திருவிழாவில் பங்கு கொண்டது முதல் மகிழ்ச்சி.
அதில் ஸ்வாமிஜியின் மஹிமையைத் தெரிந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆக இது தான் உண்மை என
நான் நினைத்துக் கொண்டிருக்க, மின்னஞ்சல் தகவல் வந்த போது நான் வியப்படைந்தது சரி தானே!
ஸ்வாமிஜியின் மஹிமை சொல்லில் அடங்காதது. ஏராளமான அற்புதங்களை
நேருக்கு நேர் நாளுக்கு நாள் அனுபவித்து வந்ததால் அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில்
எப்போதும் ஸ்வாமிஜி பற்றிய பேச்சாகவே தான் இருக்கும்!
அது ஒரு அற்புதமான பொற்காலம்! மீண்டும் வருமா?
(போலித் தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பக் கூடாது; அப்படி ஒரு
தகவலை அனுப்பினால் ஸோர்ஸ் – ஆதாரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும். இது எனது வேண்டுகோள்!)