பிரிட்டனில் பேய் வீடுகள் பட்டியல் வெளியீடு, லண்டன் பேய் தோல்வி (Post No.7192)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8  NOVEMBER 2019

Time  in London – 11-54 am

Post No. 7192

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1992ம் ஆண்டில் தினமணியில் இதாலிய கிறிஸ்தவப் பேய்களின் அட்டஹாசம் பற்றியும் பேய் ஓட்டுபவரே தன்னால் என்னவும் செய்ய முடியாது என்று சொன்னதையும் வெளியிட்டேன். இப்போதைய நிலவரம் இதாலியில் ரோம் நகருக்குள் இருக்கும் வாதிகன் சிட்டியில் வசிக்கும் போப்பாண்டவருக்குத்தான் தெரியும்! நிற்க.

இது ஒரு புறமிருக்க ஒவ்வொரு ஆண்டும் மேலை நாடுகளில் கொண்டாடப்படும் பேய்கள் தினமான அக்டோபர் 31ம் தேதி பேய் வீடுகள் பற்றிய புதிய தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிடும். இதை ஹாலோவின் தினம் என்றும் அழைப்பர்.

வழக்கமாக லண்டனில்  லூயிஷாம் பகுதியில் வசிக்கும் பேய்தான் ஜெயிக்கும் . ஆனால் இந்த ஆண்டு லண்டனிலிருந்து 3 மணி தூர ரயி பயண தொலைவில் உள்ள பர்மிங்ஹாம் நகர பேய் முதல்டம் பெற்றுவிட்டது!

அதிசய சக்திகளை ஆராயும் குழுவினர் பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஆஸ்டன் ஹால் என்னும் கட்டிடத்தை நாட்டின் அதிபயங்கரப் பேய் வீடு என்று அறிவித்துள்ளனர். காரணம் என்ன?

ஒரு வேலைக்காரனுடன் ஓடிவிட எண்ணிய பெண்ணை அவருடைய தந்தை 16 ஆண்டுகள் சிறை வைத்த வீடு இது. அவளுடைய பெயர் மேரி ஹாட்டி. அவள் சாம்பல் நிர பேயாக அங்கே உலவுகிறாள். அத்தோடு வேலைக்காரன் பச்சை நிற உடை அணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறான்.

இந்தப் பேய்வீடுகளை தேசிய பாரம்பர்ய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தில் சேர்த்திருப்பதால் தேசீய லாட்டரி நிதி உதவி வேறு கிடைத்து இருக்கிறது. பேய்ய்களுக்குக் கூட நிதி உதவி!!

தென் கிழக்கு லண்டனில் லூயிஷாமில் உள்ள மாளிகையும் பெக்கன்ஹாம் பூங்காவும் (Beckenham Place Park and Mansion in Lewisham, London) இரண்டாவது இடத்தைப் பிடித்த பேய் வீடுகள். அங்கு முக்காடு அணிந்த பேய் ஒன்று ஏரியின் மேல் காட்சி தருகிறது இது தவிர சிப்பாய் பேய்கள், பள்ளி மாணவ மானவி பேய்களும் காட்சி தருகின்றன.

மூன்றாவது இடம்

வட அயர்லாந்து எஸ்பி கோட்டையில் (Castle Espie Wetland Centre in Northern Ireland) உள்ள பெண் பேய், ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் பேய் ஆகும். உதவி செய்யுங்கள் என்று அலறுவாள். கையில் ஒரு லாந்தர் விலக்கு ஏந்தி வருவாள். ஆயினும் அருகில் போனால் மரத்துக்குப் பின்னர் மறைந்து ஓடி விடுவாளாம்.

லண்டனில் க்ராய்டன் பகுதியில் சர் வால்டர் ராலேயின் பேய், முதலாம் எலிஸபெத் மஹாராணியின் பேயுடன் குதிரை சவாரி செய்கிறது. ஆனால் எலிசபெத் மஹாராணிக்குத் தலை இல்லை ( (இப்போது ராணியாக உள்ளாவர் இரண்டாம் எலிசபெத்) பேய் மஹராணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். சர் வால்டர் ராலே மர்ன தண்டனையில் உயிர் இழந்தவர்.

இந்தப் பேய்களால் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்தில் எல்லோரும் வருகின்றனார். இரவு நேரத்தில் பேய்ப் பிரியர்களும் பேய் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர்.

இதோ முழுப்பட்டியல் (ஆங்கிலத்தில்)—

The Top Ten Haunted Historic Sites 2019

1. Aston Hall, Birmingham – home to Dick the houseboy who hanged himself after being accused of stealing

2. Beckenham Place Park and Mansion, Lewisham – home to a hooded ghost who floats on the lake

3. WWT Castle Espie Wetland Centre, Northern Ireland – home to a Victorian girl carrying her baby

4. Tamworth Castle, Staffordshire – home to the Black Lady, a 9th Century nun who returned to avenge herself

5. Beddington Park & The Grange (Carew Manor), Croydon – home to ghosts of Sir Walter Raleigh and Queen Elizabeth

6. Tower of London – residents include Thomas A. Beckett and Anne Boleyn

7. Ruthin Gaol, Wales – home to Josephine, a spirit who moves objects

8. Muncaster Castle, Cumbria – home to the ghost of Tom Fool, a notoriously cruel court jester

9. Llancaiach Fawr Manor, South Wales – home to Mattie, a former maid who burned to death in an accident

10. Swanbourne Area, Buckinghamshire – home to a ghost dressed in a long black cape and black hat

பேய்கள் வாழ்க                                                         சுற்றுலா வளர்க

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி81119 (Post No.7191)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8  NOVEMBER 2019

Time  in London – 10-54 am

Post No. 7191

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

ACROSS/ குறுக்கே

1. (7 எழுத்து)- தமிழில் மிகப்பழைய நூல்

4. –  (7) அருணகிரிநாதர் இயற்றியது; நெஞ்சக் கனக- என்று துவங்கும்

6. – (4) புத்தரின் மகனுடைய பெயர்

6. – (4)- ஒருவரின் வாழ்க்கையில் ஜோதிட ரீதியில் 18 ஆண்டு நடக்கும் இது.

8. (2) கணவர்/ வலமிருந்து இடம் செல்க.

9. –  (4)பெண்ணின் பெயர்; வசந்த காலத்தில் பிறந்த பெயர்.

9. -(3) வலிமை, ஆற்றல்/ வலமிருந்து இடம் செல்க.

10. -(2) காமம்/ வலமிருந்து இடம் செல்க.

13. -(3) உலகாளும்/ வலமிருந்து இடம் செல்க.

Xxxx

DOWN/ கீழே 

1. – (6 எழுத்து) கபிலருக்கும் முந்திய சங்கப் புலவர்

2. — (7) சிவாஜி கணேசன் நடித்த 1958ம் ஆண்டு திரைப்படம்; கழுவேற்றிய பின்னாரும் உயிர்பெற்ற காதலன்

3. – (3) முடியைக் கட்டி அலங்கரி (வினைச் சொல்)

5. – (3)எள் என்பதன் சம்ஸ்க்ருதச் சொல்// கீழிருந்து மேலே செல்க

5. – (5) பாலாஜி உறையும் இடம்

13. – (3) லட்டு செய்யத் தேவை

10. – (2) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் பிராணி -300 ஆண்டு வாழும்// கீழிருந்து மேலே செல்க

11 AND 7. – (4) ராமனின் புதல்வர்கள்/ கீழிருந்து மேலே செல்க.

12. – (4) சூடான பாயசம்; பால், ஏலக்காய், பருப்பு வகைகள் மிக்கது; வட இந்தியப் பெயர் உடைத்து/ கீழிருந்து மேலே செல்க.

ஒலியின் ஆற்றல்! – 1 (Post No.7190)

Science Museum in Bangalore

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 8  NOVEMBER 2019

Time  in London – 7-28 am

Post No. 7190

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

musical pillars

–subham–

DIFFERENCES BETWEEN CHARAKA AND SUSRUTA (Post No.7189)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7  NOVEMBER 2019

Time  in London – 16-36

Post No. 7189

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

CHARAKA AND SUSRUTA were great Ayurvedic physicians who lived in India at least 2300 years ago. Hindus are very great editors and redactors and ‘up to date’ people. They kept on updating all their scriptures except the Vedas. No one dared to touch the Vedas. As a matter of fact they were not written until Muslims started destroying all Hindu institutions. Since Hindus updated everything in their hands, Marxists and White skinned half- baked scholars gave the latest date for al the books. For instance, if I add a   news item from London Times today, then they will dub the work as 7th November 2019. But Hindu scholars believe in the Kali Yuga calculation, Saka year calculation etc. I have given umpteen points to place Manu Smrti before Hammurabi.

Coming back to today’s topic Charaka and Susruta, scholars believe Charka Samhita is older than Susruta Samhita. These treatises passed through repeated recensions by later and more advanced workers.

According to the Chinese version of Tripitaka, a physician named Charaka was attached to the court of King Kanishka who reigned in the second century CE. But scholars point out that the appellation of Charaka occurs in Vedic literature as a patronymic name.

Differences

Charaka’s book is not as systematic as Susruta’s. He indulges in random and irrelevant discourses.

In the Charaka Samhita we find the author is fond of metaphysical disquisitions in preference to experiments and observations. The Susruta Samhita in this respect is far more scientific than the Charaka.

This shows that Charaka is more ancient, older than Susruta.

Again we find only Vedic gods and mantras in the Charaka treatise/ Samhita. He follows closely the authority of the Vedas. Between the Atharva Veda and that of the Charaka  there must have been several medical treatises , each reflecting the spirit and progress of the age.

Charaka himself records that he simply based his work on that of Agnivesha. At the time of Charaka  there existed at least six standard works by

Agnivesha,

Bhela,

Jatukarna,

Parasara,

Harita,

Ksharapani

Thus Charaka Samhita is not the first medical work. It represents rather a fairly developed state of the subject.

Replicas of Susruta’s Surgical Instruments (in London)

Medical conferences

There are chapters in the Charaka Samhita which suggests that it is a record of deliberations of a congress of medical experts. We already knew that Janaka organised big philosophical conferences where women scholars like Gargi attended. Emperor Asoka also organised very big Buddhist conferences. Hindus were the first to organise big conferences in the world.

Conference hints are in ‘Discourse on the Tastes’ in Charaka Samhita.

Charaka was a compiler like Vyasa of Mahabharata; we see lot of overlapping and repetitions and contradictions. Vyasa knew the danger of losing scriptures and Vedas . So he didn’t bother about repetitious but did compile the world’s largest literature. If one takes into account the puranas, Mahabharata and Vedas he compiled, one would understand the greatest work done by Vyasa.

In Charaka also we find overlap in their content. It appears to have gathered, sifted and brought into a definite form the information handed down from the preceding ages.

University Professor Agnivesha

Agnivesha, disciple of Atreya, was a university professor who lived 2600 years ago. During Buddha’s time he was teaching medicine at the University of Taxila (Thakshaseelam). It is written in the Buddhist Jataka story.

So we may safely conclude that Charaka belongs to the early Buddhist era or pre Buddhist period.  The information he provides regarding metals and metallic preparations, are of less advanced than those in the Arthasastra of Kautilya which was composed around 300 BCE.

Age of Susruta

Susruta’s terminology and technique in general do not differ much from those of the Charaka. Its style is dry, laconic and matter of the fact in contrast to the discursive and diffusive character of the Charaka Samhita.

Susruta aims at systematic classification; avoids unnecessary details. This indicates somewhat a later date of its composition. Modern recension is thoroughly redacted, recast and remodelled. Numerous passages agree verbatim with those found in the Charaka Samhita.

The Susruta is par excellence a treatise on surgery as the Charaka is on medicine proper.

In modern terms,

Charaka has M.D. qualification and Susruta has M.S qualification.

Susruta was disciple of Dhanvantri according to Buddhist Jataka and he was a teacher in the University of Kasi during Buddha’s time. He was a younger contemporary of Atreya so there cannot be a great interval between Charaka and Susruta.

They are repositories of accumulated knowledge of earlier periods dating back to the Vedic age.

–SUBHAM–

Swami’s Cross Word 71119(Post No.7188)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7  NOVEMBER 2019

Time  in London – 13-55

Post No. 7188

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Common Sanskrit words used throughout India are in the square

1. – (8 letters) DEEP AND SOLEMN, PROFOUND IN SANSKRIT

6. – (8)FEMININE NAME, INCOMPARABLE, PEERLESS

7a. –  (4)COMPOSER OF GATHA SAPTA SATI; SATHAVAHANA KING

8. –  (6)HEART

9.-  (5) FOREST (Not Aranya)

10. – (4) LOUD SOUND

11. – (4) DESIRE (Dharma, Artha,……..)

XXX

1. – (8) MODERN NAME KANDAHAR

2. – (8) BLESSING

3. – (6)BIG ( ……….Aranyaka Upanishad)

7. – (5) MILK, WATER, SWEET LIQUID

4. – (8) MAN WHO SECRETLY EARNED ARCHERY FROM DRONA

5. – (8) ISLANDS BEYOND INDIA in SANSKRIT LITERATURE

SUBHAM

கணவனை எரித்த காரிகை (Post No.7187)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7  NOVEMBER 2019

Time  in London – 9-45 am

Post No. 7187

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

~கொழுநனனைக் கொளுத்தினால் பொய்யெனப் பொய்யும் மழை~

கணவனைத் தொழுதால் போதும்; தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்றான் சநாதனி ஹிந்து, ஹிந்து தீவிரவாதி, பழைய பத்தாம் பசலி திருவள்ளுவன்.

இப்போது ~டேய், வாடா, போடா~ என்று காதலனைக் கூப்பிடும் பெண்கள் வள்ளுவனைப் பார்த்துச் சிரிக்கின்றனர்;பரிகசிக்கின்றனர்.

~கணவனையா? தொழ வேண்டுமா? மசூதீல வேணும்னா தொழுகை நடக்கும். எங்க வீட்ல அவர்தான் என்னைத் தொழுவார்; காரணம் என்ன வென்றால். திருவள்ளுவன் குறளை இலக்கணப்படியே இரண்டு விதங்களிலும் அர்த்தம் சொல்லலாம்~– என்பாள் படிதாண்டாப் பத்தினிகள்!!

தெய்வம் தொழாள்;

கணவன் தொழுது எழுந்திருப்பாள்  – என்று!`

இப்போது கூட பல வீடுகளில் பார்க்கிறோம்.

அம்மா தாயே; பிள்ளைங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகனும்; எனக்கு காப்பி கூட வேனாம். அதுகளுக்கு உடுப்பைப் போட்டு மத்தியானச் சாப்பாட்டைக் கட்டிக்கொடு; உன்னை யாரு ராத்ரி ஒரு மணி வரைக்கும் டெலிவிஷன் பாக்கச் சொன்னான்  – என்று கணவன்மார்கள் கதறுவதை!!

பிரிட்டனில் 1992-லேயே கொலைகாரிக்கு மாலை போட்டார்கள். இதோ நான் எழுதிய 15-11-1992 அலுவாலியா கட்டுரை.

அலுவாலியா கட்டுரையைப் படிச்சிட்டு அழுவலியா?

தெய்வம் தொழாள் கொழுநனனைக் கொளுத்துவாள்

பொய் எனப் பொய்க்கும் மழை (கலியுகத்தில்)–

சுவாமிநாதன் எழுதிய அருட்குறள்.

இதோ வள்ளூவன் எழுதிய உண்மைக் குறள்:–

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

எனது கட்டுரைக்குப்பின்னர் வந்த செய்திகள்………………….

கிரன் ஜித் அலுவாலியா வழக்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கிரன் ஜித் தனது வாழ்க்கையை சர்க்கிள் ஆFப் லைட் என்ற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதினார்.

இதையும் படியுங்கள்………………………..

தெய்வம் தொழாஅள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › தெய்வம்-த…

  1.  

Translate this page

3 Jun 2017 – Written by S NAGARAJAN. Date: 3 June 2017. Time uploaded in London:- 6-29 am. Post No.3966. Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.

மும்மாரி | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › மும்மாரி

  1.  
  2.  

Translate this page

22 Dec 2012 – வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= …

subham

புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்! (Post No.7186)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 7  NOVEMBER 2019

Time  in London – 8-25 am

Post No. 7186

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கொங்கு மண்டல சதகம்

புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!

ச.நாகராஜன்

குறும்பு நாடு என்பது கொங்குமண்டலத்தில் ஒரு பகுதி. அங்குள்ள ஒரு படைத்தலைவன் பெயர் உலகுடையான். தமிழின் பால் மிக்க பற்று கொண்டவன். புலவர்களைப் பெரிதும் ஆதரித்தவன்.

புலவர் ஒருவர் அவனை அணுகி அருமையான அகத்துறைக் கோவை ஒன்றைப் பாடினார்.

அந்த இனிமையான செய்யுள்களைக் கேட்ட உலகுடையான் பெரு மகிழ்ச்சி அடைந்தான்.

அந்தப் புலவரைப் பல்லக்கில் ஏற்றி அதைச் சுமந்ததோடு அவருக்குப் பரிசும்  பொருளும் கொடுத்ததோடு வயலும் கொடுத்தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் புலவர் பெயரும் தெரியவில்லை; அவர் பாடிய அகத்துறைக் கோவையும் கிடைக்கவில்லை.

கொங்குமண்டல சதகத்தின் 82வது பாடலால் இந்த வரலாறு நமக்குக் கிடைக்கிறது.

பாடல் :-

சொல்லிக் கனைய வகத்துறை க் கோவை சொன புலவன்

பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த

வெல்லப் படைத்தலை விர னுலகுடை வீரனமர்

மல்லர்க் கினிய குறுப்பணை நீள் கொங்கு மண்டலமே

பொருள் :- இனிமையான அகத்துறைக் கோவை பாடிய புலவனுடைய பல்லக்கைச் சுமந்து வயல் நிலமும் பொன்னும் பரிசாகக் கொடுத்தவனான படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்பு நாடு சூழ்ந்தது கொங்கு மண்டலமே.

இந்த உலகுடையான் பற்றிய சாசனம் ஒன்று விஜய நகரம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் புறச் சுவரில் இருக்கிறது.

சிதிலமடைந்த சாசனத்தின் சில பகுதிகள் :-

சாசனம் நம்பர் : 565-1905 – ஸ்வஸ்தி   ஸ்ரீ பாண்டிய தேவற்கு  திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற … கசு-வது தை மாதம் குறும்பு நாட்டு விஜயமங்கலத்து வெள்ளாழர் படைத்தலைவர்களில் நம் உலகுடையானேன் விஜயமங்கலம் ஆன அவத்தூரில் நாயனார்  வி..சு..ம சோழீஸ்வரமுடையாற்கு வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின பணம் …ங்கைக் கொண்டோமிக் கோவில் காணியுடைய சில …….

(சில எழுத்துக்கள் மட்டுமே தெரிகின்றன)

***

subham

லண்டனில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ல் தீபாவளி (Post No.7185)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 6 NOVEMBER 2019

Time  in London – 17-29

Post No. 7185

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

உலகெங்கிலும், குறிப்பாக வட கோளார்த்தத்தில் (Northern Hemisphere) , பனிக்காலத்தின் போது சொக்கப்பனை (Bonfire)  கொளுத்துவது வழக்கம். நம்முடைய தீபாவளி, கார்த்திகையை ஒட்டி இது வரும். இதற்கு இரண்டு காரணங்கள்:

மக்கள் குளிர் காய ஒரு வாய்ப்பு; பழைய பொருட்களை அகற்றவும் ஒரு வாய்ப்பு

இரண்டாவதாக பயிர்களை அழிக்கும் பூச்சிகள் தாமாகவே வந்து தீயில் விழுந்து தம்மை அழித்துக் கொள்ளூம். இதனால் பயிர் வளம் பெருகும்.

கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னரே உள்ள வழக்கங்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் பழைய வழக்கங்களுடன் புதுக்கதைகளை இணைத்து பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் ஈஸ்டர், கை பாக்ஸ் டே (Easter, Guy Fawke’s Day) முதலியவற்றைக் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் (Christmas Tree, Santa Claus)  என்பனவும் கிறிஸ்தவ மதத்துக்குத் தொடர்பில்லாதவை. இது பற்றி முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன். 1992 நவம்பர் 15 தினமணியில் நான் எழுதிய கட்டுரை – “இங்கிலீஷ் தீபாவளி”. படித்துப் பாருங்கள். நேற்று நவம்பர் 5ம் தேதியும் பிரிட்டனில், குறிப்பாக லண்டனில்,  பட்டாஸ் சப்தம் காதைப் பிளந்தது

நாம் ராம்லீலா, தசராவில், அசுரர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது போல அவர்களும் தீயோரின் உருவ பொம்மைகளை எரிப்பர்.

London Swaminathan articles in Dinamani dated 15th November 1992.

பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184)

mica

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com
Date: 6 NOVEMBER 2019

Time  in London – 16-17

Post No. 7184

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

mercury in thermometer

தாயுமானவர் பாடல் இதோ:–

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்;

வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

நேற்று முன் தினம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட ரசாயன நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன்.

Old articles n my blog———

வேதம் முதல் தாயுமானவர் வரை …



https://tamilandvedas.com › 2018/05/29 › வேதம்-…

  1.  

29 May 2018 – வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத … தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் …

SUPERNATURAL POWERS OF SAINTS- FROM RIG VEDA …



https://tamilandvedas.com › 2018/05/29 › supernatural-…

  1.  

Translate this page

29 May 2018 – SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO THAYUMANAVAR (Post No.5057). Written by London Swaminathan. Date: 29 …

in the Rig Veda | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › in-the-rig-veda

  1.  

SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO … Though lot of saints in later ages have sung about the mystic powers of saints and seers in …

You’ve visited this page 2 times. Last visit: 13/01/18

Aladdin’s Magic Lamp and Tamil Saints | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/03/09 › aladdins-magi…

  1.  
  2.  

9 Mar 2012 – In the Forest of Naimisaranya , saints used to gather and listen to stories. … They are supposed to have supernatural powers. In Tamil literature …

Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a …



https://tamilandvedas.com › 2016/11/12 › rare-pictures-…

  1.  

12 Nov 2016 – Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a German book … SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO …

Miracles do Happen ! | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/09/01 › miracles-do-h…

  1.  

1 Sep 2012 – This gives an idea of the miracles done by Hindu saints, particularly … is one who attained Siddhi i.e. special psychic and supernatural powers, …

WHERE WERE THE HINDU SEERS AND SAINTS BORN …



https://tamilandvedas.com › 2018/04/27 › where-were-the-hindu-seers-and…

  1.  

27 Apr 2018 – Nayanmars- Most of the 63 Nayanmars, the Tamil Saivite saints were born in … FIVE WAYS OF GETTING SUPERNATURAL POWERS (Post …

—subham–

மூளைக்கு வல்லாரை- அருமையான மூலிகைப் பாட்டு (Post No.7183)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 6 NOVEMBER 2019

Time  in London – 8-23 am

Post No. 7183

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் : 9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது:

மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

ச.நாகராஜன்

ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும் பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை அறிகிறோம்.

இந்த வகையில் அன்பர்  மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல் மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!

இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.

நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர் பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது தருகிறது.

பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.

செய்வோம்; மனதால் உயர்வோம்; ஆரோக்கியத்தால் உயர்வோம்!

***