QUIZ மாதப்  பத்து QUIZ (Post No.12,388)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,388

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.63

QUIZ மாதப்  பத்து QUIZ (Post No.12,388)

1.மாதங்களில் நான் மார்கழி என்று யார் சொன்னார் ?எங்கே சொன்னார் ?

xxxx

2.ஆடி மாதத்துக்கும் சாகுபடிக்கும் என்ன தொடர்பு?

xxxx

3.ஐப்பசியையும் கார்த்திகையையும் சேர்த்து தமிழர்கள் சொல்லுவது என்ன?

xxxxxxx

4.தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் மாதங்கள் அனைத்தும் என்ன மொழியில் உள்ளன ?

xxxxx.

5தமிழர்கள் என்று பெருமை பேசுவோருக்கு 12 மாதங்களும் தெரிவதில்லை என்று ஒரு  சர்வே காட்டுகிறது. உங்களுக்கு 12 மாதங்களின் பெயர்களும் தெரியுமா? சொல்லுங்கள்

xxxxx

6.ஏதோ ஒரு மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்புகின்றனர். அது என்ன மாதம்? ஏன் அப்படி நம்புகிறார்கள் ?

xxxxx

7.தமிழர்களும் பெரும்பாலான இந்தியர்களும் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் கூடி வானத்தில்  காட்சி தரும் அடிப்படை யில் பெயர் சூட்டினர் ;ஆனால் மலையாளிகளும் வேறு சிலரும் வேறு ஒரு முறையில் மாதத்துக்குப் பெயர் சூட்டுவர் . அது என்ன முறை?

xxxx

8.ஆங்கிலக் காலண்டரில் எந்தக் காலத்தில் (எப்போது) ஒரு தமிழ் மாதம் துவங்கும். ஆங்கில மாதங்களின் மடத்தியில் தமிழ் மாதம் துவங்குவதைக் காணலாம்?

xxxx

9.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் வெங்கட் ராமா கோவிந்தா என்ற கோஷத்தையும், சாமியே சரணமய்யப்பா என்ற கோஷத்தையும் எப்போது அதிகம் கேட்கலாம் ?

xxxx

10.தெலுங்குகன்னடம் பேசுவோரும் மாதத்தைத் துவக்கும் நாள் எது ? அதிக மாசம் என்றால் என்ன ?

Xxxx

விடைகள்

1.பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னார். பின்னர் சினிமாப் பாடலில் கண்ணதாசன் சொன்னார்

xxxxx

2.ஆடிப்பட்டம் தேடி விதை என்பது தமிழ்ப் பழமொழி.

xxxxx

3.ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலம். அப்போது வடகிழக்குப்

பருவமழை வருவதால் இந்தப் பழமொழி .

xxxxx

4.சம்ஸ்க்ருத மொழியில் உள்ளதை நாம் தமிழில் மொழிபெயர்க்காமல் அதை தமிழ்ப் படுத்தியுள்ளோம்

எடுத்துக்காட்டாக ஆஷாட என்பதை ஆடி என்போம்;. ச்ராவண என்பதை ஆவணி என்போம். இது பற்றி காஞ்சி சுவாமிகள் (1894-1994) ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

Xxxxxx

5.சித்திரை, வைகாசி, ஆனி , ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை,  மாசி, பங்குனி .

xxxxxx

6. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பயிர்கள் அறுவைடையாகி வந்திருப்பதால் சோற்றுக்கும் , நெல்லை விற்றுக்கிடைக்கும் பணத்துக்கும் பஞ்சமிராது . மேலும் மழை ஓய்ந்து வெய்யிலும் அதிகம் இல்லாத மாதம் ; பாரம்பரியமாக சுப மாதம் என்பதால் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்யாணங்களும் நடக்கும். இவை முக்கியக் காரணங்கள் உத்தராயண புண்ய காலம் துவங்கி விடும்

Xxxx

7சூரியன் எந்த ராசிக்குள் பிரவேசிக்கிறானோ அதை வைத்து மாதத்துக்குப் பெயர் சூட்டுவர்.சித்திரையை மேஷ மாதம் என்பர். இதே போல மீனம் சிம்மம் என்றெல்லாம்   மாதங்களை அழைப்பர் .

xxxxxx

8.இதை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது. பெரும்பாலும் ஜனவரி 14ல் தை மாதமும், ஏப்ரல் 14ல் சித்திரை மாதமும் துவங்குவதைக் காண்கிறோம்

xxxxx

9..புரட்டாசி மாதத்தில் நேர்த்திக் கடன் கழிக்க வேண்டிக்கொண்டவர்கள் வீடு வீடாகச் சென்று வெங்கட் ராமா கோவிந்தா கோஷம் எழுப்பி அரிசி அல்லது பணம் வசூலிப்பர். கார்த்திகை மாதம் முதல் நாள், ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு தை மாத மகர ஜோதி வரை, சாமியே சரணம் ஐயப்பா கோஷம் இடுவர்.

xxxxxxx

10.அவர்கள் அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதம் என்று கருதுவதால் அமாவாசை அன்று புதிய மாதம் துவங்கி விட்டது என்று கணக்கிடுகிறார்கள் இதனால் மாதப்பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்படும்.

இது தவிர அதிக மாசம் என்பதாலும் குழப்பம் வரும்

அதிக மாசம் என்றால் என்ன ?

இது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். அதை புருஷோத்தம மாதம் என்று சொல்லி சுப காரியங்களை விலக்குவார்கள்  சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடும் போது ஒரு ஆண்டுக்கு 365 நாள் வராது. குறையும்; இப்படித் துண்டு விழும் நாட்களை சேர்த்து 13 ஆவது சந்திர மாதமாக காலண்டரில் சேர்ப்பர் . இது அதிக மாச/ மாத எனப்படும்.

–subham—

Tags- மாதங்கள் , பெயர்கள், அதிக மாதம் , புருஷோத்தம மாதம், பழமொழி, தை பிறந்தால்

Leave a comment

Leave a comment