

Written by London Swaminathan
Post No. 15,575
Date uploaded in London – 4 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரே பாட்டில் அவர் சொன்ன இலிகள் :
அழகிலி குலமிலி நலமிலி பதிமையிலி பவுஷதுமிலி இயல்பிலி யருளிலி பொருளிலி மதியிலி கதியிலி விதியிலி உணர்விலி- 65
***
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 65
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 65
***
விநாயகர் சாப்பிடும் உணவுப் பண்டங்கள் – சுகியன்

சுகியன் (Sugiyan) என்பது தென்னிந்தியாவின் பாரம்பரியமான, வெல்லம் மற்றும் தேங்காய் கலந்த பூரணத்தை அரிசி/உளுந்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் ஒரு இனிப்புப் பண்டமாகும். கடலைப்பருப்பு, பாசிப்பயிறு அல்லது பொட்டுக்கடலை கொண்டு பூரணம் செய்யப்பட்டு, மாலை நேர சிற்றுண்டியாகவும், திருவிழா காலங்களிலும் இது சிறப்பாக செய்யப்படுகிறது.
சுகியன் செய்முறை – முக்கிய குறிப்புகள்:
பூரணம்: வெல்லத்தை உருக்கி வடிகட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாக பூரணம் செய்யவும். இதில் பொட்டுக்கடலை பொடி அல்லது வெந்த பாசிப்பயிறு சேர்க்கலாம்.
வெளி மாவு: பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து அரைத்து (தோசை மாவு பதத்திற்கு), தேவையான அளவு உப்பு சேர்த்து தயார் செய்யவும்.
பொரித்தல்: பூரணத்தை உருண்டைகளாக பிடித்து, மாவில் தோய்த்து மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இது ‘சுசியம்’ அல்லது ‘சீயம்’ என்றும் பல இடங்களில் அழைக்கப்படுகிறது
***

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை …… யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற …… நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு …… பணியாமற்
கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை
க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு … கடலை, பயறு
இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை
இனிய அமுது போன்ற சுவையுடன்
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்
கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற … பழுத்துள்ள முதிர்ந்த
பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக,
அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்
அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற … அமுதாக தனது துதிக்கையில்
மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,
நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்
ஒரு முருக சண்முக என … பெரிய குடம் போன்ற வயிற்றினில்
அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று………………………….
***
அருணகிரி செய்த தவறு
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர்
உரை செய்த மொழி வகை … அமுதம் போன்ற சொற்களால்
(எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய
தவப்பெரியார்* உபதேசித்த மொழியின் படி
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத அசடன்
அறிவிலி இழி குலன் இவன் என … தகுதியான நடை முறையை
அனுஷ்டிக்கவும், முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவில்லாதவன்,
இழி குலத்தைச் சேர்ந்தவன் இவன் என்று
இனமும் மனிதருள் அனைவரும் உரை செய அடியன் இது
பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே … சுற்றத்தார்களும்,
பிற மனிதர்கள் யாவரும் இழிவாய்ப் பேச, அடியேன் அத்தகைய பேச்சில்
படுதல் முடியாது. இனிமேல் ஒப்பற்ற ஞானப் பொருளை நீ அருள் புரிவாயாக.
* அருணகிரியாரின் தவவலிமையை உணர்ந்த அருணாசலேசுரர் தவப் பெரியார் போலத் தோன்றி, அறுமுகக் கடவுளைத் தியானிக்கவும் என்று உபதேசம் செய்தார். இதைப் பொருட்படுத்தாத அருணகிரியார் சில காலம் வீணாக்கினார். ஊரார் வசவுக்கும் உள்ளானார். பின்னர் வருந்தினார்.
***
சப்த மாதரும் வணங்கும் முருகன்
அசல குல பதி தரும் ஒரு திரு மகள் … மலைகளுள் சிறந்த
இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி,
அமலை விமலைகள் எழுவரும் வழிபட … களங்கம் அற்றவள்,
தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க
அருளி அருணையில் உறை தரும் இறையவள் அபிராமி …
அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி,
அநகை அநுபவை அநுதயை அபிநவை … பாவம் அற்றவள்,
ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள்,
அதல முதல் எழு தலம் இவை முறை முறை … அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே …
முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே,
** சப்த மாதாக்கள்:
அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.
***
அருணகிரியின் சொற்புரட்டு
பகிர நினைவொரு தினையள விலுமிலி … மற்றவரோடு பகிர்ந்து
உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான்,
கருணை யிலி … இரக்கமே இல்லாதவன் யான்,
உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை
பணிமலை பலமலை பாடி … உனது திருத்தலங்களாகிய
திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை,
திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி
பரவு மிடறிலி … போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான்,
படிறுகொ டிடறுசொல் பழகி … வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த
பேச்சையே பேசப் பழகியவன் யான்,
அழகிலி குலமிலி நலமிலி … அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான்,
பதிமை யிலி பவுஷதுமிலி … பக்தி இல்லாதவன் யான்,
பெருந்தன்மை இல்லாதவன் யான்,
மகிமையிலி … எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான்,
குலாலன் திகிரி வருமொரு செலவினில் … குயவனுடைய சக்கரம்
சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள்
எழுபது செலவு வருமன பவுரிகொடு … எழுபது சுற்று வரும் மனச்
சுழற்சி கொண்டு
அலமரு திருகன் … அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி
உடையவன் யான்,
உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன் …
உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான்,
இயல்பிலி யருளிலி பொருளிலி … நல்ல தன்மை அற்றவன் யான்,
அருளற்றவன் யான், பொருளற்றவன் யான்,
திருடன் மதியிலி … திருட்டுப்புத்தி உள்ளவன் யான்,
அறிவில்லாதவன் யான்,
கதியிலி விதியிலி … நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும்
நன்றாக இல்லாதவன் யான்,
செயலில் உணர்விலி … நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான்,
சிவபத மடைவதும் ஒருநாளே … இத்தகைய யான் சிவபதம்
அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப்
பற்றிய விவரமான வர்ணனை வருகிறது)
—subham—
Tags- அருணகிரிநாதர் ‘இலி’-ச்சவாயன், சப்தமாதர், விநாயகர், உணவுப் பண்டங்கள் , சுகியன்,