கங்கையின் பெருமை (Post  No.15,574)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,574

Date uploaded in London – 4 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்!

கங்கையின் பெருமை 

ச. நாகராஜன்

பாவம் போக்கும் கங்கா! 

கங்கா கங்கேதி யஸ்யா: ஸ்ருணுமபி படிதம் கேனசித் நாமமாத்ரம்

    தூரஸ்தஸ்யாபி பும்ஸோ தலயதி துரிதம் ப்ரௌட மிஸ்யாஹுரேகே: |

ஸா கங்கா கஸ்ய சேவ்யா ந பவதி புவனே சஜ்ஜன ஸ்யாதிபவ்யா

    ப்ரஹ்மாண்டம் ப்லாவயந்தி த்ரிபுரஹரஜடாமண்டலம் மண்டயந்தி ||

கங்கை என்ற பெயரை ஒருவன் கேட்டாலோ அல்லது படித்தாலோ, எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் அவை எவ்வளவு மாபாதகமாக இருந்தாலும், அவன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவை நசிந்து போகும் என்று சில அறிஞர்கள் சொல்கின்றனர். அப்படிப்பட்ட கங்கையை, நல்லவர்களுக்கு நலம் நல்கும் கங்கையை, திரிபுரத்தை எரித்த சிவனின் ஜடாமகுடத்திலிருந்து அலங்கரிப்பதும், பூமியில் பாய்ந்தோடுவதுமான அதை யார் தான் வழிபடாமல் இருப்பார்கள்?

ஒரு துளி சாராயம் ஒரு குடம் கங்காஜலத்தை பாதிக்கும்! 

கங்காதோயேன சம்பூர்ண: கும்ப ஏவ ப்ரத்ருஷ்யதே |

சுராயா பிந்துனா லிப்தோ மத்யகும்ப ப்ரஜாயதே ||

 கங்கா ஜலத்தால் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரம் இப்போது தெளிவாக காணப்படுகிறது. ஆனால் ஒரு துளி சுராபானம் (சாராயத்துளி) அதில் கலக்கப்பட்டால் அது சாராய பானையாகவே காணப்படும்.

போஜராஜனின் புகழ்!

 கங்கே தேவி த்ருஷா புனீஹி  யமுனே மாத: புனர் தர்ஷன்

   சம்ப்ரஸ்நோஸ்து பித: ப்ரயாக் பகவன்னயப்ரோக் மாம் த்யாஸ்யஸி |

தம் ஹாராசிலதாவதம்ஸவிபுலஸ்தூலாம்ஸவக்ஷோபுஜம்

   பும்பாவம் பவதாமவந்திநகரேநாதம் தித்ருக்ஷாமஹே || 

ஓ, கங்கா தேவியே! உனது தரிசனத்தால் என்னைத் தூய்மைப்படுத்து! ஓ, யமுனை அன்னையே! உன்னை இன்னொரு முறை தரிசிக்கும் வாய்ப்பை அளி; ஓ! ப்ரயாக் தந்தையே! எனக்கு வாழ்த்தை அளி; ஓ, கயாவில் உள்ள அத்தி மரமே (போதி மரமே)! என்னைச் சற்று நினை.  ஆண்மையுள்ள அவந்தியின் மன்னனான போஜராஜனை, மாலை, கத்தி, காதணிகள், அகன்ற தோள்கள் ஆகியவற்றுடன் காண விரும்புகிறோம்.

காளிதாஸனின் நினைவால் உருகிய போஜராஜன்

 கச்சதஸ் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வப்தோபி வா |

மா பூன்மன: கதாசின் மே த்வயா விரஹிதம் கதே ||

 நடக்கும் போதும், நிற்கும் போதும், விழித்திருக்கும் போதும், தூங்கும் போதும், ஓ, கவிஞரே உம்மை விட்டு என் மனம் அகலவே இல்லை.

 கவி காளிதாஸனைப் பிரிந்த போஜராஜன் அவன் நினைவால் உருகிப் பாடிய கவிதை இது!

 ஓ, இந்திரா! காதலியை காதலனிடமிருந்து உன்னால் பிரிக்க முடியாது!

கர்ஜ வா வர்ஷே வா சக்ர முஞ்ச வா சதஷோஷனிம் |

ந ஷக்யா ஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி || 

ஓ, இந்திரனே இடியை இடிக்கச் செய், மழையைப் பொழியச் செய், ஆயிரம் மின்னல் இடிகளை நீ இறக்கினாலும் தனது காதலனோடு சேரச் செல்லும் காதலியை உன்னால் நிறுத்த முடியாது!

**

Leave a comment

Leave a comment