ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது! (Post.15,629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,629

Date uploaded in London – 18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கத்தில் பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்த நிகழ்வையும் காணலாம்.

புரமாகாஷகம் ப்ராதாத்வார்வத்யா: ப்ரியகாம்யயா |                   உமயாபி வரோ தத்தோ ராக்ஷஸானாம் ந்ருபாத்மஜ ||

சத்யோபலப்திர்கர்மஸ்ய ப்ரஸூதி சத்ய ஏவ ச |                       சத்ய ஏவ வய:ப்ராப்திர்மாதுரேவ வய: சமம்

 உத்தர காண்டம் நான்காம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 31&32

பார்வத்யா – ஶ்ரீ பார்வதி தேவியாருக்கு                             ப்ரியகாம்யயா – பிரியமானதைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தால்                                                       ஆகாஷகம் – ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல                          புரம் – நகரம் ஒன்றை (சிவபிரான்)                                             ப்ராதாத் – தந்தருளினார்                                               ந்ருபாத்மஜ – சக்கரவர்த்தித் திருமகனாரே                                 உமயா அபி – உமாதேவியாராலும்                              ராக்ஷஸானாம் – அர்க்கர்களுக்கு                                          கர்பஸ்ய – கருவின்                                                     சத்யோபலப்தி – உடனே தரித்தலும்                                         சத்ய – உடனே                                                       ப்ரஸூதி: ச – பிரசவித்தலும்                                                     சத்ய ஏவ – அதே சமயத்தில்                                           மாது: – தாயின்                                                        சமம் வய: – சமமான வயதையும்                                      வய: ப்ராப்தி ஏவ – அதே வயதைப் பொறுத்தும்                          வர: – ஆக்கினையாக தத்த: – விதித்து அருளப்பட்டது

ராக்ஷஸிக்கு பார்வதி தேவி வரம் அளித்த விஷயம் இங்கு தரப்பட்டாலும். எதற்காக வரம் அருளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

**

Leave a comment

Leave a comment