கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)

Written by London Swaminathan

Post No. 15,636

Date uploaded in London –20 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 81

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 81

Last Part of Tiruppugaz Criticism

***

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய …

இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத

மோனமே கோயில் என மேவி … மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து

அசையவே க்ரியா பீடம் மிசை புகா … விளக்கம் தருவதற்காகவே,

கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி,

மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி … சிறந்த

மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி,

சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத … எவ்வகையான

அறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும்

அப்பாற்பட்டதான,

சகல மா க்ரிய அதீத சிவரூப … எவ்வகையான சிறந்த

கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான,

சகல சாதக அதீத சகல வாசன அதீத … எவ்விதமான

அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும்

மேம்பட்டதான

தனுவை நாடி மா பூசை புரிவேனோ … புருவ நடுவில் உள்ள

ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும்

பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

***

கடவுள் என்பவருக்கு உருவம் இருந்தால் அவருக்கு உயரம் அகலம் எல்லாம் இருக்க வேண்டுமல்லவா ? இந்தக் கேள்விக்கு உபநிஷதம் முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை எல்லா நூல்களிலும் பதில் உள்ளது.

அவர் அல்லது பிரம்மம் என்பது அளவுக்கு அப்பாற்பட்டது

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே — என்று அவ்வையார் விநாயகர் அகவலிலும்,

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாததுநெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது– என்று அருணகிரிநாதர் வேறு ஒரு திருப்புகழிலும்,  மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம்  என்று அபிராமி அந்தாதியிலும் இதே கருத்தினை விளம்பியுள்ளனர்.

பகவத் கீதையிலும் இரண்டு இடங்களில் ,

அப்ரமேயம் 11-17  அளவிடற்கரியது

அப்ரமேயஸ்ய 2-18  அளவிறந்ததாய், அளவற்றதாய்என்ற சொற்களைக் காண்கிறோம் ; அந்தக் காலத்திலேயே இந்தக் கேள்வியை எழுப்பி அதற்கு விடையும் கண்டுள்ளனர்.

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता: शरीरिण: |

अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत || 2-18||

antavanta ime dehā nityasyoktāḥ śharīriṇaḥ

anāśhino ’prameyasya tasmād yudhyasva bhārata

Only the material body is perishable; the embodied soul within is indestructible, immeasurable, and eternal. Therefore, fight, O descendent of Bharat. BG 2-18

என்றும் உளதாய், அழிவில்லாததாய் அளவைக் கடந்ததாய் உள்ளது ஆத்மா; இந்த உடல்களோ முடிவுடையவை , அர்ஜுனா ; ஆகையால் போர் புரிவாயாகுக

இதே கருத்து கடோபநிஷத் 2-18 த்திலும் உள்ளது .

பகவத் கீதை 11-வது அத்தியாயத்தின் (விஸ்வரூப சந்தர்சன யோகம்) 17-வது ஸ்லோகம், அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை வியந்து விவரிப்பதாகும். கிரீடம், கதை, சக்கரம் ஏந்தி, சூரியன் மற்றும் நெருப்பைப் போல அளவிட முடியாத பிரகாசத்துடன்பிரபஞ்சம் முழுவதும் ஜொலிக்கும் இறைவனின் வடிவை அர்ஜுனன் காண்கிறான்.

இரண்டு மூன்று திருப்புகழ்களில் உபநிஷத, பகவத் கீதைக்கு கருத்துக்களை அருணகிரிநாதர் சொல்வதால் அவர் உபநிஷத்துக்களை நன்கு படித்திருக்க வேண்டும்.

***

அப்ரமேயம்

அப்ரமேய–  விஷ்ணு ஸஹஸ்ரநாம எண்  46 .

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 46-வது நாமம் “அப்ரமேய:” (Aprameyaḥ) ஆகும்.

அப்ரமேய: என்றால் அளவிட முடியாதவர் என்று பொருள்.

பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவர்: அளவுகோல்களாலோ (பிரமாணங்களாலோ), புலன்களாலோ (கண், காது போன்றவை), அறிவாலோ அளக்க முடியாத பெருமைகளை உடையவர்.

தெய்வங்களுக்கும் அரியவர், இந்திரன் போன்ற தேவர்களாலும் முழுமையாக அறிய முடியாதவர்.

உயர்ந்த நிலை: அளக்க முடியாத, வரம்பற்ற ஞானம் மற்றும் வடிவத்தை உடையவர் (Immeasurable/Infinite).

***

மாணிக்க வாசகரின் சிவபுராணத்தில்

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்கா விளங்கு ஒளியாய்

எண்ணிறந்து எல்லை இலாதானே!

என்றும்

ஆக்கம்அளவுஇறுதிஇல்லாய்!  என்றும் வருகிறது. அவரும் இறைவன் அவைக்கருவிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் காட்டுகிறார்

****

ஆராய வேண்டிய விஷயங்கள்

திருப்புகழில் ஆராய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. அவர் கதிர் காமம் முதல் கயிலாயம் வரையும் சரஸ்வதி நதிக்கரை வயிரவி வனம் வரையும் உள்ள தலங்களை/ க்ஷேத்ரங்களைப் பாடியுள்ளார் ; எல்லாவற்றுக்கும் அவர் நேரில் சென்றாரா அல்லது நூல்களைக் கற்றும் அடியார்களை சந்தித்தும் அறிந்தாரா என்பது முதல் ஆராய்ச்சி.

அவர் பாடிய 200 தலங்களில் சில தலங்களை யூகித்து இதுவாக இருக்கலாம் என்கின்றனர் உரைகாரர்கள்; அவை சரிதானா என்று ஆராய வேண்டும்; கல்வெட்டுகளிலோ அல்லது வேறு நூல்களிலோ ஆதாரம் இல்லாத வரை அவை யூகங்களே. அவர் பயன்படுத்திய புதிய சொற்களை பட்டியலிட வேண்டும்

திருப்புக்கழுக்குச் சொல் அட்டவணை (WORD INDEX) தயாரிக்க வேண்டும்.

உலகிலேயே விபச்சாரிகளை அதிகமாக வருணித்தவர் அல்லது திட்டியவர் அருணகிரிதான் அந்த விஷயத்தையும் பட்டியலிட வேண்டும்

.—subham—

Tags- ஆராய வேண்டிய விஷயங்கள், part 81, last part, அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 81, கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன

Leave a comment

Leave a comment