கல்யாண சுந்தர சிவாச்சார்யாவுக்கு லண்டனில் அஞ்சலி (Post No.15,640)

Written by London Swaminathan

Post No. 15,640

Date uploaded in London –21 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டனில் நீண்டகாலம் வாழ்ந்து அரிய பெரிய பணிகளைச் செய்து அன்பர்களின் உள்ளத்தில் நீங்காத இட்டம்பெற்றார் திருச்சி ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாச்சார்யா;  அவரை கல்யாண்ஜி என்ற பெயரில் ஆயிரக்கக்காணோர் அறிவார்கள் அவர் காரைக்காலில் ஏப்ரல் பத்தாம் தேதி சிவனடி சேர்ந்தார்  ; அவருடைய நினைவைப் போற்றி யும் அவருடைய  ஆன்மா ஸத்கதி அடையவும்  மித்ர சேவா அமைப்பின் சார்பில் லண்டனில் 19-4-2026  ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடந்தது; அப்போது பேசியோரும் பாடியோரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அஞ்சலிக் கூட்டத்துக்கு உலக இந்து மஹா சங்கத்தின் செயலாளர் லண்டன் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பாலாஜி, மீ.ராஜகோபாலன், சிவசங்கரன், டி வி லட்சுமிகாந்தன், நடராஜன் கணேசன், சந்திரசேகர், பிரசன்னா, பாலசுப்பிரமணியம், சூர்யநாராயண சர்மா, சுப்ரமணிய அய்யர், தியாகராஜன், டாக்டர் கணேசன்  ஆகியோர் பேசினார்கள்.   இறுதியில் ராஜ் அய்யர் நன்றி நவின்றார். இடையே சங்கர் பாடினார்; ஆரம்பத்தில் மித்ர சேவா  அமைப்பினைச் சேர்ந்த திருமதிகள் உமா ராஜகோபாலனும் மீனா ராஜும் பிரார்த்தனைப் பாடல்களை இசைத்தார்கள் .

கூட்டத்தில் பேசிய அனைவரும் கல்யாண்ஜி எப்படி குருவாகத்   , திகழ்ந்தார் என்று சொல்லி  அவருடைய தன்னலமாற்ற சேவையைப் புகழந்தனர் .

எஸ். சுவாமிந்தனின் தலைமை உரையில் , உலக இந்து மகா சங்கத்தை அவருடன் சேர்ந்து துவக்கி பல யாக யக்ஞங்களையும் பூஜைகளையும் சிந்தி மந்திர், ஹிந்து சென்டர் முதலிய இடங்களில் நடத்தியதையும் ஆண்டுதோறும் யஜுர் உபகர்மாவை கல்யாண்ஜி நடத்தியதையும் குறிப்பிட்டார் .

ஞான மயம் ZOOM ஒலிபரப்பு கல்யாண்ஜியால் உருவாக்கப்பட்டு வாரந்தோறும் நடத்தப்பட்டது ; அதில் புதிய புதிய பாடகர்களயும் பேச்சளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை கல்யாண்ஜி உற்சாகப்படுத்தியதன் மூலம் ஐந்தாண்டுகளில் ஆயிரக் கணக்காணோர் பயனடைந்தனர் என்றும் சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்

கல்யாண்ஜி நீண்ட காலம் நடத்திய வேத வகுப்பு மற்றும் வேதாகம அகாடமி மூலம் அவர் நடத்திய ஸ்லோக வகுப்பு  வடக்கத்திய, தென்னிந்திய , மலேசிய, மொரீஷியஸ் , இலங்கைத் தமிழர்களைக் கவரும் விதத்தில் அவர் நடத்திய பூஜைகள், டெக்நாலஜி விஷயத்தில் அவருக்கு இருந்த ஞானம் முதலியவற்றையும் பேசியோர் சுட்டிக்காட்டினார்கள்.  பாலாஜி சம்ஸ்க்ருத மொழியில் நீண்ட கவிதை மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; ராஜகோபால் எழுதிய கவிதை மித்ர சேவா வெப்சைட்டில் உள்ளது.

இந்த அஞ்சலிக் கூட்டத்தை மித்ர சேவா YOU TUBE யு ட்யூப் பதிவிலும் காணலாம்; கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வருகின்ற 25-4-2026 சனிக்கிழமை இந்தியாவிலிருந்து கல்யாண்ஜிக்கு ZOOM சூம் வழியாக அஞ்சலி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

—SUBHAM—

TAGS- கல்யாண சுந்தர சிவாச்சார்யா, கல்யாண்ஜி , லண்டனில் அஞ்சலி , மித்ர சேவா , ஞானமயம் ஒளிபரப்பு, உலக இந்து மஹா சங்கம் , வேதாகம அகாடமி , லண்டன் சுவாமிநாதன்

Leave a comment

Leave a comment