
Written by London Swaminathan
Post No. 15,678
Date uploaded in London –30 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2026 மே மாத பண்டிகைகள் :-
மே 01 (வெள்ளி): சித்ரா பெளர்ணமி, புத்த பூர்ணிமா, உழைப்பாளர் தினம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
மே 04 (திங்கள்): அக்னி நட்சத்திரம் ஆரம்பம். 26- குருப் பெயர்ச்சி
மே 28 (வியாழன்): அக்னி நட்சத்திரம் நிறைவு, பக்ரீத்
மே 30 (சனி): வைகாசி விசாகம். அக்னி நட்சத்திர
முகூர்த்த நாட்கள் 14, 15, 18,25, 28
அமாவாசை -16; பெளர்ணமி -1, 30; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-13, 27.
**
அதாதோ பக்திம் வியாக்யாஸ்யாம் என்பது முதல் சூத்ரம்.
பக்தியைப் பற்றி இப்போது விவரிப்போம் என்பது இதன் பொருள்.
**
சாதஸ்மின் பரமப்ரேமரூபா என்கிறது அடுத்த சூத்ரம்.
இறைவனிடம் கொள்ளும் ‘பரம ப்ரேமை’ என்பது கணவன் – மனைவி அல்லது இதர குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் கொள்ளும் ப்ரேமையை விட மிக மிக உயர்ந்தது என்பது இதன் பொருள்.
**
அம்ருதஸ்வரூபாச என்பது அடுத்த சூத்ரம்.
இந்த பக்தியை அடைவதனால் என்ன பயன் ஏற்படுகிறது?
**
இந்த ரகசியத்தை மிக மிக அருமையாகச் சொல்கிறது அடுத்த சூத்ரம்.
அதை அடைந்தவன் சித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி
பக்தியில் சிறந்து விளங்குபவன் சித்தனாகிறான்.
அமரத்தன்மையை அடைகிறான்.
திருப்தியை அடைகிறான்.
**
இப்படி படிப்படியாக பக்தி சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முத்தாய்ப்பாக சூக்ஷ்ம விவரங்களை சூத்ரமாக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் இந்த நூல் தருகிறது.
**
பக்தியின் சிகரமாக அமைந்த ப்ருந்தாவன கோபியர்கள் 21ஆம் சூத்ரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.
**
பக்திக்கு நிரூபணம் பக்தியே தான் என்று நாரதர் அறுதியிட்டு உறுதி கூறுகிறார். (சூத்ரம் 30 மற்றும் 59)
**
நாரத பக்தி சூத்திரம்: சுவாமி சிவானந்தர் விளக்க உரை
नारदभक्तिसूत्राणि प्रथमोऽध्यायः परभक्तिस्वरूपम्
Taken from Sanskrit documents website; thanks
अथातो भक्तिं व्याख्यास्यामः । 1
**
सा त्वस्मिन् परप्रेमरूपा । 2
**
अमृतस्वरूपा च । 3
**
यल्लब्ध्वा पुमान् सिद्धो भवति अमृतो भवति तृप्तो भवति । 4
**
यत्प्राप्य न किञ्चिद् वाञ्छति न शोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति 5
**
यज्ज्ञात्वा मत्तो भवति स्तब्धो भवति आत्मारामो भवति । 6
**
सा न कामयमाना निरोधरूपत्वात् । 7
**
निरोधस्तु लोकवेदव्यापारन्यासः । 8
**
तस्मिन्ननन्यता तद्विरोधिषूदासीनता च । 9
**
अन्याश्रयाणां त्यागोनन्यता । 10
**
लोकवेदेषु तदनुकूलाचरणं तद्विरोधिषूदासीनता । 11
**
भवतु निश्चयदार्ढ्यादूर्ध्वं शास्त्ररक्षणम् । 12
**
अन्यथा पातित्यशङ्कया । 13
**
लोकोऽपि तावदेव भोजनादि व्यापारस्त्वाशरीरधारणावधि । 14
**
तल्लक्षणानि वाच्यन्ते नानामतभेदात् । 15
**
पूजादिष्वनुराग इति पाराशर्यः । 16
**
कथादिष्विति गर्गः । 17
**
आत्मरत्यविरोधेनेति शाण्डिल्यः । 18
**
नारदस्तु तदर्पिताखिलाचारता तद्विस्मरणे परमव्याकुलतेति । 19
**
अस्त्येवमेवम् । 20
**
यथा व्रजगोपिकानाम् । 21
**
तत्रापि न माहात्म्यज्ञानविस्मृत्यपवादः 22
**
तद्विहीनं जाराणामिव । 23
**
नास्त्येव तस्मिन् तत्सुखसुखित्वम् । 24
**
सा तु कर्मज्ञानयोगेभ्योऽप्यधिकतरा । 25
**
फलरूपत्त्वात् । 26
**
ईश्वरस्याप्यभिमानद्वेषित्वात् दैन्यप्रियत्वात् च । 27
**
तस्याः ज्ञानमेव साधनमित्येके । 28
**
अन्योन्याश्रयत्वमित्यन्ये । 29
**
स्वयं फलरूपतेति ब्रह्मकुमारः । 30
**
राजगृहभोजनादिषु तथैव दृष्टत्वात् । 31
**

மே 1 வெள்ளிக்கிழமை
நாரத பக்தி சூத்ரம் – அத்யாயம் 1 – பரபக்தி ஸ்வரூபம்
சூத்ரம் 1
அத அதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம:
அத (अथ) – இப்பொழுது
அத:-(अत: )- ஆகையால்
பக்திம்- (भक्तिं )- பக்தி என்பது என்ன என்று
வ்யாக்யாயாம:-(व्याख्यास्याम:)-விளக்குவோமாக1
**
மே 2 சனிக்கிழமை
உண்மையில் பக்தி என்பது மிக மேலான இறையன்பின் இயல்பே.2
சூத்ரம் 2
ஸா து அஸ்மின் பரமப்ரேம ரூபா
ஸா து- அந்த பக்தியோவேன்றால்
அஸ்மின்- இறைவனிடத்தில்
பரமப்ரேமரூபா- எல்லை அற்ற அன்பு என்பது.
***
மே 3 ஞாயிற்றுக் கிழமை
மேலும் அது அமிர்தத்தின் இயல்பையும் உடையது3
***
மே 4 திங்கட் கிழமை
அதை (இந்த மேலான பக்தியை) அடைந்த தும், மனிதன் பூரணம் அடைகிறான், அமரத்துவம் பெறுகிறான், பரம் திருப்தியடைகின்றான்.4
***
மே 5 செவ்வாய்க்கிழமை
யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே ந உத்ஸாஹீ பவதி
இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.5
***
மே 6 புதன்கிழமை
இறைவனை அறிவதால் மனிதன் பித்தனாகின்றான். அமைதி எய்தி, ஆத்மானந்தக் களிப்பில் முற்றிலுமாகத் திளைக்கின்றான்.6
***
மே 7 வியாழக்கிழமை
பக்திக்கு ஆசைப்படும் குணமில்லை, ஏனெனில் அது துறவின் இயல்பையுடையது.7
***

மே 8 வெள்ளிக்கிழமை
அதற்கு மாறாக ஆசைகளை அடக்குவதென்பது உலக விவகாரங்களையும், விதிக்கப்பட்ட செயல்களையும் ஆண்டவனிடமே விட்டுவிடுவதாகும்.8
***
மே 9 சனிக்கிழமை
நிரோதம் என்பது இறைவனிடத்து ஏகாக்ர பக்தியும், இறைவனுக்கு எதிரானவற்றில் எல்லாம் உதாசீனமும் என்பதாகும்.9
***
மே 10 ஞாயிற்றுக் கிழமை
ஐக்கியம் அல்லது ( கலப்பற்ற ) விசேஷ பக்தி என்பது எல்லாப் பிற ஆதாரங்களையும் விட்டு விடுவதாகும்.10
***
மே 11 திங்கட் கிழமை
உலக விவகாரங்களையும், வேதத்தில் விதித்துள்ள சம்ஸ்காரங்களையும் செய்வது, அவற்றுக்கு எதிரானவற்றைச் செய்யாமலிருப்பது.11
***
மே 12 செவ்வாய்க்கிழமை
ஆன்மீக நிலையில் நன்கு ஸ்திரப்பட்ட பிறகும் சாஸ்திர உண்மைகளை ஒருவன் காப்பாற்ற வேண்டும்.12
***
மே 13 புதன்கிழமை
அப்படி ( காப்பாற்ற ) இல்லையெனில், வீழ்ச்சியுறும் ஆபத்துண்டு.13
***
மே 14 வியாழக்கிழமை
சமூக பழக்க வழக்கங்களும் அவ்விதமே ( சாஸ்திர விதிகளில் சொல்லப்பட்டன் என்ற அளவுக்கு ) கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் உண்பதும், பருகுவதும் உடுப்பதும் இந்த உடல் இருக்கும் வரை தொடர வேண்டியது.14
***
மே 15 வெள்ளிக்கிழமை
பல்வேறு கோணங்களிலிருந்து பார்ப்பதால், பல்வேறு லக்ஷணங்களை பெற்றுள்ளது பக்தி.15
***
மே 16 சனிக்கிழமை
பராசர மகரிஷியின் புதல்வரான வியாசர் இறைவனுக்கு பூஜை முதலான செய்வதில் ஆர்வமும், பற்றுமே பக்தி என்று கருதுகிறார்.16
***
மே 17 ஞாயிற்றுக் கிழமை
இறைவனது மகிமை, பெருமை, லீலைகள் பற்றிப் பேசுவதே பக்தி என்பது கர்க முனிவரது கருத்து.17
***
மே 18 திங்கட் கிழமை
ஆன்மாவில் இன்புறுவதற்குத் தடையாக இல்லாமை என்று சாண்டில்யர் கருதுகிறார்.18
***
மே 19 செவ்வாய்க்கிழமை
ஆனால் நாரதரின் கருத்துப்படி பக்தியின் இன்றிய்மையாத இயல்பு இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து, தன் நியம நிஷ்டைகள் உட்பட அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதும், இறைவனை மறக்க நேர்ந்தால் தீவிர வேதனைப்படுவதுமே ஆகும்.19
***
மே 20 புதன்கிழமை
இதற்கு பல சான்றுகள் உள்ளன.20
***
மே 21 வியாழக்கிழமை
உதாரணமாக வ்ரஜ அல்லது பிருந்தாவனத்து கோபியர்கள் போல பக்தி செலுத்த வேண்டும்.21
***
மே 22 வெள்ளிக்கிழமை
அங்கும் கூட (கோபியரது அன்பிலும்) இறைவனது பெருமையும், மகிமையும் பற்றிய மறதி இல்லை.22
***
மே 23 சனிக்கிழமை
அது ( இறைவனது மகிமை பற்றிய உணர்வு ) இல்லாத அன்பு, ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் கொள்ளும் காமமே ஆகும்.
இறைவனது பெருமை பற்றிய உணர்வு உள்ளத்தில் இல்லையென்றால், அந்த அன்பு வெறும் ஆண்-பெண் இடையே தோன்றும் காமம்தான்.
கோபியரின் அன்பு சுத்தப் பிரேமை, மாசற்ற அன்பு, ஏனெனில் அவர்களுக்கு கிருஷ்ணரின் தெய்வநிலை நன்கு தெரிந்தே, அதில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் தம்மை மறந்த தெய்வக் களிப்பில் இருந்தனர். அவர்களது புலன்களும், மனங்களும் செயலற்றுப் போயின. வெளியுலகைப் பற்றிய பிரக்ஞையே அவர்களுக்கு இல்லை. இதுவே தூய அன்பு.23
***
மே 24 ஞாயிற்றுக் கிழமை
இந்தக் காமவயமான அன்பில், அடுத்தவரது இன்பம் முக்கியமாகக் கருதப்படுவதில்லை.24
***

மே 25 திங்கட் கிழமை
அது பராபக்தி செயல், ஞானம், யோகம் இவற்றினின்று மேம்பட்டது 25
***
மே 26 செவ்வாய்க்கிழமை
இவை அத்தனையின் பயனுடைய இயல்பு அல்லது உருவத்தை உடையதால்.26
***
மே 27 புதன்கிழமை
பக்தியானது மற்றதை காட்டிலும் சிறந்த து. ஏனெனில், இறைவன் அகந்தையை வெறுக்கின்றான், அடக்கத்தை நேசிக்கின்றான்.27
***
மே 28 வியாழக்கிழமை
சிலர் கருத்துப்படி (அன்புக்குரிய பொருளைப் பற்றிய ) அறிவே, அறிவு மட்டுமே பக்தியை அடையும் சாதனம்.28
***
மே 29 வெள்ளிக்கிழமை
ஞானமும் பக்தியும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பது மற்றொரு சாரார் கருத்து.29
***
மே 30 சனிக்கிழமை
பக்தி அதனுடைய பலனுமாக இருக்கிறது. என்று கருதுகிறார் பிரம்மகுமாரனான நாரதர்.30
***
மே 31 ஞாயிற்றுக் கிழமை
ஏனெனில் அரசன், வீடு, உணவு என்பனவற்றிலும் அப்படித்தான் காணப்படுகின்றது31
***
प्रथमोऽध्यायः – परभक्तिस्वरूपम् । सूत्र १-२४
द्वितीयोऽध्यायः – परभक्तिमहत्त्वम् । सूत्र २५-३३
तृतीयोऽध्यायः – भक्तिसाधनानि । सूत्र ३४-५०
चतुर्थोऽध्यायः – प्रेमनिर्वचनम् । सूत्र ५१-६६
पञ्चमोऽध्यायः – मुख्यभक्तिमहिमा । सूत्र ६७-८४
To be continued in the June 2026 calendar……………………………………
Tags- நாரதர், பக்தி சூத்திரம், நாரத பக்தி சூத்திர, பொன்மொழிகள்,-2026 மே மாத காலெண்டர்