WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,680
Date uploaded in London – 1 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம் ஆய்வு – 13
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமான் சுக்ரீவன் உரையாடல்
இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார்.
इङ्गितानाम् प्रकारैः च रूपव्या भाषणेन च
लक्षयस्व तयोः भावम्
शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |
व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || ४-२-२७
“உனது சைகையை வைத்து அவர்கள் யான் என்று நான் புரிந்து கொள்வேன். வாலி இதுவரை பலரை என்னைக் கொல்ல அனுப்ப்பியுள்ளான். அவர்களை நான் கொன்றுவிட்டேன். அதனால் இவர்கள் இருவரையும் இங்கு அனுப்பியுள்ளான் என்ற சந்தகம் வருகிறது. வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பப்பட்டவர்களாக இருந்தால் இவர்களும் வஞ்சகர்களே. என்னைக் கொல்ல வந்திருப்பார் என சந்தேகிக்கிறேன்.நீ அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்து கொள். நீ பிராமண வேடத்தில் இருப்பதால் உன்னிடம் எதையும் மறைக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் வைத்திருக்கும் வில்லைப் பார்த்தால் அவர்கள் பெரிய வீரர்களாக இருப்பர் என நினைக்கிறேன். அவர்கள் வஞ்சக எண்ணம் கொண்ட வாலியால் அனுப்பபட்டவர்களாக இருந்தால் உடனே நான் இந்த மலையை விட்டு ஓடிவிடுகிறேன்”. என்றான்.
हनुमान ! देखना तो जाकर, जो पुरुष इधर को आते हैं ।
दोनों ही तपसी तेजस्वी, मुझे नरसिंह समान सुहाते हैं ।
मातंग शाप बस बालि भ्रात, यद्यपि न यहाँ आ सकता है ।
पर मैं जब तक दुनियाँ में हूँ, वह चैन नहीं पा सकता है ।
सम्भव है उसके गुप्त दूत, मेरा यों भेद लगाते हों।
छल से, बल से या कौशल से, वध करने मुझको आते हों ।
इसलिये प्रथम चतुराई से, सब पता ठिकाना लेना तुम ।
फिर हो मेरा सन्देह सही, तो मुझे इशारा देना तुम।
(Ramayana mahanatak by Ramesh Chandra ranadhir)
இங்கு துளசிதாசர் ஹனுமன் உடனே அந்தணர் வடிவம் கொண்டு இராமனிடம் சென்றான் என்று சொல்லிவிட்டார்.
बिप्र रूप धरि कपि तहँ गयऊ। माथ नाइ पूछत अस भयऊ॥
அந்தணர் வடிவம் கொண்டு ஹனுமன் இராமன் அருகில் நெருங்கினார். ஸ்ரீ இராமனின் தெய்வீக அழகைக் கண்டு பரவசம் ஆனார். இராமன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து வினவலுற்றார்.
இங்கு ஒரு கேள்வி . அந்தணர் வேடத்தில் இருக்கும் ஹனுமன் இப்படி க்ஷத்ரியர்கள் காலில் விழுந்து வாங்கலாமா? இங்கு ஹனுமன் இளம் பிராமண மாணவன் வேடத்தில் உள்ளான். இராம இலக்ஷ்மணர்கள் மரவுரி தரித்து துறவி உடையில் உள்ளனர். மேலும் அவர்கள் வயதில் பெரியவர்கள். அவர்களிடம் ஒரு தெய்வீகத் தன்மை தெரித்தது. அதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது ஹனுமனின் கடமை ஆகிற்று. இது தவிர இங்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று இராமனும் இலக்ஷ்மணனும் முன்பின் தெரியாத அன்னியர்கள். அவர்களிடம் முதன்முதலில் பேசும்போது அவர்களுக்கு தனது மீது நல்ள அபிப்ராயம் ஏற்படவேண்டும் என்று விரும்பினார், அது எப்படி சாத்தியம்? அவர்களை விழுந்து வணங்கி பவ்யமாக பேசுவதன் மூலம் ஹனுமனுடன் பேசுவது ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் அவர்கள் மனதில் வரவேண்டும்.. அப்படி இல்லை என்றால் அவர்கள் இருவரும் ஹனுமனிடம் பேசாது சென்று விடுவர். சுக்ரீவன் எந்த நோக்கத்திற்காக ஹனுமனை அனுப்பினானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.
மற்றொன்று ஹனுமன் தனது வானர சரீரத்தை ஆடைகளுக்குள் மறைத்து இளம் பிராம்மண வேடத்தில் வந்துள்ளான். அதனால் ஹனுமன் அவர்களின் கண்களை நேராகப் பார்க்கவிரும்பால் அவர்களின் பாதங்களைப் பணிந்து வணங்கிக் கொண்டிருந்தான். ஒருக்கால் அவர்கள் தனது வேடத்தைக் கண்டுபிடித்துவிட்டால் தன்னைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற பயத்தில் அவ்வாறு செய்தான் என்று சொள்ளப்படுகிராது.
அடுத்த அடியிலேயே ஹனுமன் அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்
की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥
की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1
जग कारन तारन भव भंजन धरनी भार।
की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार
(இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது . ஹனுமன் அவர்களை பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் ரூபத்தில் கண்டுகளித்ததால் அவர்களை காலில் விழுந்து வணங்கினான்
ஆத்யாத்ம இராமாயணத்தில் இந்தப் பகுதி எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது?
युवां त्रैलोक्यकर्ताराविति भाति मनो मम ।
युवां प्रधानपुरुषौ जगद्धेतू जगन्मयौ ॥ १३॥
मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।
भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १४॥
अवतीर्णाविह परौ चरन्तौ क्षत्रियाकृती ।
जगत्स्थितिलयौ सर्गं लीलया कर्तुमुद्यतौ ॥ १५॥
स्वतन्त्रौ प्रेरकौ सर्वहृदयस्थाविहेश्वरौ ।
नरनारायणौ लोके चरन्ताविति मे मतिः ॥ १६॥
“ஓ புருஷ ஸ்ரேஷ்டர்களே!! நீங்கள் விரர்களென்று நிதானிக்கக்கூடியவர்கள், சூரியனைப்போல் பிரகாசத்தால் திசைகள் எட்டும் பிசகாசிக்கச் செய்பவர்கள், நீங்கள் மூவுலகங்களையும் சிருஷ்டிப்பவர்சகளென்று நான் நினைக்கிறேன், நீங்கள் முக்கியபுருஷர்கள், உலகுக்குக் காரணமாகியவர்கள். மாயையால் மானிட வடிவம் எடுத்து. விளையாட்டாகச் சஞ்சாரம் செய்பவர்கள் போன்றவர்களாகிறீர்கள். பூபாரத்தை யொழிப்பதற்கும், பக்தர்களைக் காப்பதற்கும் ௮வதாரம் செய்த பசம புருஷர்கள் போலக் காணப்படுகிறிர்கள், நீங்கள் க்ஷத்திரிய வடிவமூடையவர்கள், உலகத்தின் ஸிருவ்டி , ஸ்திதி, சம்ஹாரம் இவைகளை லீலையால் செய்ய எத்தனமுடையவர்கள், ஸ்வதந்திரர்கள் எல்லோசையும் பிரேணை செய்பவர்கள், எல்லோருடைய இருதயத்திலிருக்கும் ஈஸ்வரனைப் போன்றவர்கள், உலகத்தில் சஞ்சரிக்கும் நர நாராயணர்களென்றே நான் உங்களை ஊகிக்கிறேன்., நீங்கள் யார் என்று எனக்கருளவேண்டும்’” என்று கூறினான்
அது சரி எல்லோரும் இராமனும் இலக்ஷ்மணனும் நர நாராயணர்களா என்று கேட்கின்றனரே? அந்த நர நாராயணர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன?
***