Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,699)

Kambar Stamp.

Written by London Swaminathan

Post No. 15,699

Date uploaded in London –5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவழுந்தூர்/ தேரழுந்தூர் 

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

மூலவர்:தேவாதிராஜன் 

உற்சவர்:ஆமருவியப்பன் 

தாயார்:செங்கமலவல்லி 

தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி

மங்களாசாசனம்திருமங்கையாழ்வார்

விமானம்:கருட விமானம் 

கல்வெட்டுகள்:உண்டு

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

*** 

தலவரலாறு: 

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

 ***

மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் மார்க்கண்டேய முனிவரும் உள்ளனர்.

 பாசுரங்கள்

     வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி

          அடியேன் மனம் புகுந்தென்

     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்

          நின்றார் நின்ற ஊர் போலும்

     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி

          போனகாதல் பெடையோடும்

     அள்ளல் செறுவில் கயல் நாடும்

          அணியார் வயல் சூழ் அழுந்தூரே

                   (1591) பெரியதிருமொழி 7-5-4

     பிள்ளைக்கு இரைதேடித் தன் பெடையோடு செல்லும் பறவைகளின்

காலடிச் சத்தத்தைக் கேட்டு நீர்சூழ்ந்த கழனிகளில் சரேல்சரேலென்று மீன்கள்

பாயக்கூடிய அழகிய வயல்கள் சூழ்ந்த அழுந்தூரில், ஆலமரத்திலை மேல்

துயில் கொண்டு, தன் உள்ளத்தில் உறைகின்ற பிரான் நின்றவூர் இதுதான் போலும்— திருமங்கையாழ்வார் 

***

திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் – கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம். 

இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் கதை:     “கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றிருந்த போது, அப் பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்குஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ளவேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ளஉற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளன.

 ***

ஊர்ப்பெயர் காரணம்

     தனது தவ வலிமையால் விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தன்மை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால் கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர்

என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர்.

     1. மொத்தம் 11 சந்நிதிகள் உள்ள திருத்தலம்.

     2. கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும்.

இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன.

“கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர்         

கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத்    

தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா          ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

     என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப்

பெற்றுள்ளது. நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப் பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65,325,395 ஆம் பாடல்கள்

விளக்குகின்றன.

  மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும்.

இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார  என்பதும் ஒரு வரலாறு. இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.

  “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத்

திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கம்பன் பிறந்தவூர், திருவழுந்தூர், தேரழுந்தூர்,தேவாதிராஜன், ஆமருவியப்பன்

Leave a comment

Leave a comment