விஜயபாரதம் முப்பெரும் விழா –சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா! (Post.15,709)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,709

Date uploaded in London – 8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விஜயபாரதம் முப்பெரும் விழா – எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு – சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா! 

ச. நாகராஜன் 

விஜயபாரதம் வார இதழ் சார்பாக 2026, ஏப்ரல் 26ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

 சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதி விருது ஜெயஶ்ரீ சாரநாதன், ஜனனி ரமேஷ் ஆகியோருக்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது ரேர் பதிப்பகத்தின் பதிப்பாளர் ரங்கநாதனுக்கும், சிறந்த எழுத்தாளருக்கான உ.வே.சா. வாழ்நாள் சாதனையாளர் விருது சோ.தர்மனுக்கும் வழங்கப்பட்டது. 

தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றினர். 

விழாவின் முக்கியப் பகுதியாக சப்தரிஷிகள் நூல் வெளியீடும் நடைபெற்றது.

சப்தரிஷிகள் நூல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சப்தரிஷிகளாகத் திகழ்ந்த ஏழு ரிஷிகளைப் பற்றிய ஏழு நூல்களாகும்.

ஏழு ரிஷிகள் :

1.தனித்துவ வழி கண்ட தலைவர் பரம பூஜனீய டாக்டர் கெசவ பலிராம் ஹெட்கேவார்

2. பன்முகம் கொண்ட பண்பாளர் பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்

3. தீர்வு கண்ட தீரர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே

4. பல்துறை கண்ட வித்தகர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி

5. சாமானிய சாதனையாளர் ஶ்ரீ சிவராம்ஜி

6. அசாத்திய சாதகர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி

7. வீரத்துறவி இராம. கோபாலன் 

சங்கத்தில் நீண்ட பல வருடங்களாக சேவை புரிந்து வரும் நாமக்கல்லைச் சேர்ந்த திரு ஹரிகரகோபாலன் இந்த ஏழு நூல்களைத் தொகுத்து ஒருங்கிணைப்பதில் பெரும் பணி ஆற்றியுள்ளார். 

ஏழு நூல்களுக்கும் தென்பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் திரு இரா.வன்னியராஜன் வாழ்த்துரை வழங்கியுள்ளார். 

ஏழு நூல்களும் கிடைக்குமிடம்:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

 அரும்பணி ஆற்றியுள்ள நாமக்கல் ஹரிஹரகோபாலன் அவர்களுக்கும் நூலை சிறப்புற வெளியிட்டுள்ள விஜயபாரதம் பிரசுரத்தாருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.

**

Leave a comment

Leave a comment