Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்கள் (Post.15,711)

திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

Written by London Swaminathan

Post No. 15,711

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

திருநாங்கூர் விஷ்ணு தலங்கள் (Thirunangur Divya Desams) தமிழ்நாட்டில், சீர்காழிக்கு அருகில் உள்ளன .

முக்கிய தகவல்கள்:

11 திருத்தலங்கள்: இந்த 11 தலங்களும் சிவபெருமானின் கோபத்தைத் தணிக்க, திருமால் 11 வடிவங்களில் காட்சி தந்தவை ஆகும்.   இத்தலங்கள் அனைத்தும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமை உடையவை. 

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள் பட்டியல்:

  1. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) – நாராயணப் பெருமாள்
  2. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) – வைகுந்த நாதர்
  3. திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்) – குடமாடு கூத்தன்
  4. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) – பள்ளிகொண்ட ரங்கநாதர்
  5. திருமணிக்கூடம் (திருநாங்கூர்) – வரதராஜப் பெருமாள்
  6. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) – ஸ்ரீநிவாசப் பெருமாள்
  7. திருப்பார்த்தன் பள்ளி – தாமரையாள் கேள்வன்
  8. திருவாலி – லட்சுமி நரசிம்மர்
  9. திருநகரி – கல்யாண ரங்கநாதர்
  10. திருச்செம்பொன்செய் (திருநாங்கூர்) – பேரருளாளன்
  11. திருத்தெளிச்சேரி (திருநாங்கூர்) – மாதவப் பெருமாள் 

 

திருமங்கையாழ்வார் விழா:

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் (தை மாதத் திருவோணம்), திருநாங்கூரில் உள்ள 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கையாழ்வாருக்குக் காட்சியளிக்கும் பிரம்மாண்டமான கருட சேவை விழா நடைபெறும்.

இந்தத் தலங்கள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை.

 1 

திருநாங்கூர் திருமணிமாடக்கோயில் , 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 

திருநாங்கூரில் அமைந்துள்ள இத்தலம், இமயமலையிலுள்ள பத்ரிநாத் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளைப் போலவே அமைந்துள்ளது  பத்ரிநாத் சென்று வர இயலாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், பத்ரிநாத் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை

 திருமணிமாடக்கோயில்

இறைவன்: பத்ரிநாராயணர் (சாச்வததீபநாராயணர் – கிழக்கு நோக்கிய திருக்கோலம்).

இறைவி: புண்டரீகவல்லி தாயார்.

தீர்த்தம்: ருத்ர புஷ்கரிணி, சங்கு புஷ்கரிணி

திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழாவில் இத்தலப் பெருமாள் எழுந்தருளுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், திருநாங்கூரில் அமைந்துள்ளது.

 திருமாலின் மாடக்கோயில் மீது ருத்ரன் அமர்ந்து தவமிருந்த இடமாதலால் ‘திருமணிமாடக்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.. 

***

2

திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) 

108 வைணவ திவ்ய தேசங்களில் 33-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில், திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றாகும்.

 மூலவர் வைகுண்ட நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான்.

வைகுந்த நாதன், அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி, சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். 

தாயார்: வைகுந்த வல்லி.

திருக்கோலம்: உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

விமானம்: அனந்த ஸத்ய வர்த்தக விமானம்.

தீர்த்தம்: லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா.

***

3 

திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தன் கோவில்

108 திவ்ய தேசங்களில், திருஅரிமேய விண்ணகரம் என்று அழைக்கப்படும் குடமாடு கூத்தன் கோவில் 29-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய பெருமாள் என்பதால் குடமாடு கூத்தன் என்று அழைக்கப்படுகிறார்.


மூலவர்: குடமாடு கூத்தன்

உற்சவர்: சதுர்புஜ கோபாலர்

தாயார்: அமிர்தவல்லி

தல விருட்சம்: பலாச மரம்

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கோடி தீர்த்தம்

கோலம் : கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

குடத்துடன் குழந்தை வடிவில் அமர்ந்திருக்கும் மூலவர்.

ஹரி (பெருமாள்) கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் இத்தலத்திற்கு அரிமேய விண்ணகரம் பெயர். சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் இத்தலத்தில் கோவில் கொண்டதாக ஒரு புராணம் சொல்கிறது. உதங்க முனிவர், திருமாலை காண வேண்டு தவம் செய்ததாகவும், அவரின் தவத்தை ஏற்று இந்த தலத்தில் திருமால் கோவில் கொண்டுள்ளதாகவும் மற்றொரு தல புராணமும் கூறுகின்றன.

கோவில் அமைப்பு :

மூன்று நிலை கோபுரங்களைக் கொண்ட இக்கோவில் வயல்கள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சம் அழகுடன் காணப்படுகிறது. கோவிலின் வடக்கு புறத்தில் குளம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கையில் குடத்துடன் அமர்ந்த நிலையில் கிருஷ்ணராக காட்சி தருகிறார் பெருமாள். இதனால் திருமங்கையாழ்வார் இவரை குடமாடுகூத்தன் என்ற பெயரால் குறிப்பிட்டார்.

உற்சவர்- பஞ்சலோகத்தால் ஆன நான்கு திருக்கரங்களுடன் உள்ள கோபாலன்.

***

4

திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

108 வைணவ திவ்ய தேசங்களில் 36-வது திவ்ய தேசமாகும்.செங்கண்மால் ரங்கநாதர் சயனத் திருக்கோலத்தில் காட்சிதருகிறார்

மூலவர்: செங்கண்மால் ரங்கநாதர் (சயனத் திருக்கோலம் – தெற்கு நோக்கி).

தாயார்: ரங்கநாயகி.

விமானம்: ககன விமானம்.

இது 108 வைணவத் திருத்தலங்களில் “அம்பலம்” (கோவில்) என்று அழைக்கப்படும் ஒரே தலமாகும்.

திருவிழா: தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் திருநாங்கூர் கருட சேவை மிக முக்கிய திருவிழாவாகும்.

To be continued………………………

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்கள், திருத்தெற்றியம்பலம், திருஅரிமேய விண்ணகரம், திருவைகுந்த விண்ணகரம், திருநாங்கூர், திருமணிமாடக்கோயில்

Leave a comment

Leave a comment