Written by London Swaminathan
Post No. 15,748
Date uploaded in London –17 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 26
திருக்காரகம்
திருக்காரகம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீயில் உலகளந்த பெருமாள் கோவில் ப்ராகாரத்திலேயே உள்ளது.
மூலவர் – கருணாகரப் பெருமாள் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் – பத்மாமணி நாச்சியார் (ராமாமணி நாச்சியார்) .
தீர்த்தம் – அக்ராய தீர்த்தம்.
விமானம் – வாமன விமானம், ரம்யவிமானம்.
ப்ரத்யக்ஷம் – கார்ஹமஹரிஷி.
மங்களாசாஸனம் –
திருமங்கையாழ்வார் – 2059 – 1 பாசுரம்.
108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்காரகம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் கருணாகரப் பெருமாள் ஆவார். திருமங்கையாழ்வார் இத்தலத்தை பாடியுள்ளார். காரகம், ஊரகம், நீரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்களையும் சேர்த்து ஒரே பாசுரமாக அவர் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்
***
பாசுரங்கள்
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
~ திருமங்கையாழ்வார்
தல வரலாறு
கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் “காரகம்’ எனப்பட்டது என்பர்.
ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
.திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம் ஆகிய இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் குறிப்பிடத்தக்கது.
—subham—
Tags- திருக்காராகம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-26; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்