Written by London Swaminathan
Post No. 15,749
Date uploaded in London –17 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Surprise in Tamil Temple sculptures by Artist Silpi from Thirubhuvanam temple near Kumbakonam.
Did the elephant kill the woman and her child?
Surprise! Surprise.
Period: Kulthunga Choza III
***
This is part 3
ஒரு யானை ஒருவனைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டது ; இன்னொரு பெண்மணியைத் துரத்தி வருகிறது; அந்தப் பெண் பிழைத்தாளா ? அந்தக் குழந்தை பிழைத்ததா? இப்படி ஒரு திகில் கட்சியை திருபுவனம் கோயிலில் மூன்றாம் குலோத்துங்க கால சிற்பிகள் படைத்துள்ளனர் ; அவனது போர் வெற்றிக்குப் பின்னர் நகரத்தில் புகுந்த யானைகள் செய்த அட்டகாசம் இவை என்று ஓவியர் சில்பி எழுதுகிறார் ; இந்த சிற்பங்களை அவர் தனது தத்ரூப ஓவியங்களால் ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரசுரித்தார்; அவைகளை விகடன் பிரசுரம் தென்னாட்டுச் செல்வங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது .
அண்மையில் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி ஒரு சோகக் காட்சியை , உண்மைச் சம்பவத்தை, நமக்கு காட்டியது ; ஒரு பெண்மணியை காட்டு யானை ‘சட்னி’யாக்கிவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்த குழந்தையைத் தாக்காமல் சென்றுவிட்டது ; யானைக்கும் கூடப் பாசம் உண்டு!
யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும் என்னும் பழமொழி நாலடியார் செய்யுளில் வருகிறது ; இது போன்ற சம்பவமும் கேரளத்தில் ஒரு கோவிலில் நடந்தது .
நாலடியார் (பாடல் எண்: 213).
:”யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;–யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.”
யானை, தன்னை வளர்த்துப் பழக்கிய பாகன் என்பதை அறிந்திருந்தும், சில சமயங்களில் அவனையே கொன்றுவிடும் குணம் கொண்டது. அதுபோல, பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் நட்பு ஆபத்தானது, அவர்களை விட்டு விலகுவதே நல்லது. நாய்க்குத் தன் மீது எறியப்பட்ட வேல் பட்டு உடம்பில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அந்தத் துன்பத்தை மறந்து, தன்னை வளர்த்தவரைப் பார்த்தவுடன் வாலை ஆட்டிக்கொண்டு அவர் காலடியில் பணிந்து கிடக்கும்.
பல காலம் பழகியவரையே கொல்லும் யானை போன்றவர்களின் நட்பைக் கைவிட்டு, தமக்குத் தீங்கு செய்தவரையும் பொறுத்து அன்பு காட்டும் நாய் போன்றவர்களின் நட்பைத் தேடிப் பெற வேண்டும்
எவ்வளவு சிறு மனிதர்களாக இருந்தாலும், அன்பு காட்டி, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களின் நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்;.மனிதர்களின் புறத் தோற்றத்தையோ, அந்தஸ்தையோ பார்த்து நட்பு கொள்ளாமல், அவர்களின் உண்மையான அன்பையும் நன்றியுணர்வையும் அடிப்படையாகக் கொண்டு நட்பு கொள்ள வேண்டும் யானையும் நாயும் நமக்கு கற்றுத் தரும் பாடம் இது!
—subham—
Tags- அதிசய சிற்பங்கள், Part 3, அதிபயங்கர சர்ப்ரைஸ் , யானை தாக்குதல், ஓவியர் சில்பி ,யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்