Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-34; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,784)

Written by London Swaminathan

Post No. 15,784

Date uploaded in London –25 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 34

திருக்கோஷ்டியூர்

திருக்கோஷ்டியூர் ,சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 104-வது தலமாகும்.

சிறப்பம்சங்கள்:மூலவர்: சௌமியநாராயண பெருமாள். பெருமாள் நின்ற, நடந்த, கிடந்த, இருந்த என நான்கு நிலைகளிலும் காட்சி தரும் அபூர்வ தலம்.

ராமானுஜர் உபதேசம்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” ரகசியத்தை சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உபதேசம் செய்த தலம்.

மூலவர் பெயர் சௌமிய நாராயணன்;

தாயார் மகாலட்சுமி.

திருவிழாக்கள்:

வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி.

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புரூருவ சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அஷ்டாங்க விமானம் :

ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.

மகாமக கிணறு :

புரூருவ  சக்கரவர்த்திக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜருக்கு உபதேசம் :

திருக்கோஷ்டியூர் நம்பி   , ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.

தல வரலாறு:

இரணியகசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார்.

தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.

தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

கோபுர விமானத்தின் சிறப்பம்சம் :

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஓரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் உள்ளது.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் :பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

***

திருக்கோஷ்டியூர் பாசுரங்கள்

13.  

வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்*

கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்*

கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)

14.  

ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*

நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*

ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே

15.  

பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*

காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-

வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே

16.  

உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்*

நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும்

அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே

17.  

கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*

தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*

அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்

18.  

கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*

பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட*

வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே

19.  

வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்*

ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்*

மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே

20.  

பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்*

எத் திசையும்*  சயமரம் கோடித்து*

மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*

உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே

21.  

கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்*

எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்*

மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.

22.  

செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்*

மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப்

பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)  

73.  

கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்*

எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்*

சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல்

அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!

அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

360.  

நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்*

தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்-

பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)

361.  

குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்*

செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்*

பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.

362.  

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்-

திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்*

உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.

363.  

உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*

நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்*

பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!   

364.  

ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்*

தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை*

பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.  

365.  

பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்*

ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய*

பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.

366.  

குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து*

திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*

இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ! 

367.  

நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்-

தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்*

விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.

368.  

கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*

செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்*

எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே .

369.  

காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு*

தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று*

பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

370.  

சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்*

கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*

ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)

1550.  

தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்*

ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி*

ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.      

1838.  

எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-

தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*

பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*

செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,

1839.  

எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்–

செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*

மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-

தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே.

1840.  

வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-

ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*

தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.

1841.  

ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-

கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*

நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-

தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே.

1842.  

வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்

தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*

மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-

திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே. 

1843.  

காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-

ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*

நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,*

தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே.

1844.  

கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-

நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*

குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-

தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே. 

1845.  

பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து-

ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*

தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*

தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.

1846.  

கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*

மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,*

மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*

தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.   

1847.  

ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்-

சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*

நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-

நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)

1856.  

கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-

கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்*

நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே. 

2268.  

இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-

சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  – அன்று-

கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,*

திருக்கோட்டி எந்தை திறம்.   

2343.  

விண்ணகரம் வெஃகா*  விரிதிரைநீர் வேங்கடம்,*

மண்நகரம் மாமாட வேளுக்கை,* – மண்ணகத்த

தென்குடந்தை*  தேன்ஆர் திருவரங்கம் தென்கோட்டி,*

தன்குடங்கை நீர்ஏற்றான் தாழ்வு.

2415.  

குறிப்பு எனக்குக்*  கோட்டியூர் மேயானைஏத்த*

குறிப்பு எனக்கு நன்மை பயக்க*  வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை*  மெய்வினைநோய் எய்தாமல்*

தான்கடத்தும் தன்மையான் தாள்.

  —Subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-34; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்,Part 34, திருக்கோஷ்டியூர்

Leave a comment

Leave a comment