Written by London Swaminathan
Post No. 15,788
Date uploaded in London –26 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 35
வரகுணமங்கை ( நத்தம் )
வரகுணமங்கை (தற்போது நத்தம் என்று அழைக்கப்படும் ஊர்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் 92-வது தலமாகவும், நவ திருப்பதி வரிசையில் 2-வது (சந்திரனுக்குரிய) தலமாகவும் போற்றப்படுகிறது
மூலவர்: விஜயாசனப் பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த
ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன.
இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
தல வரலாறு: ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமாளுக்கு குடை பிடித்த ஆதிசேடன், இங்கு அமர்ந்த நிலையில் உள்ள பெருமாளுக்குக் குடை பிடித்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். சந்திரனின் சாபம் தீர்த்த தலமாக இது நம்பப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ (1 மைல்) தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது
***
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே* என்னைஆள்வாய் எனக்குஅருளி*
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே
ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். “சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்” என்று கூறினார்.
வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன.. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
வரகுணமங்கை என்று தாயார் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்பட்டாலும், நத்தம் என்று சொன்னால் மட்டுமே பலருக்குப் புரியும்.
அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கும் பெருமாள் இங்கு காட்சி அளித்துள்ளார்.
இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.
இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருவிழா:
சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
முகவரி:
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்
நத்தம் (வரகுணமங்கை) – 628 601
*****
Taken from another website
தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
ஸ்ரீ ராமாவதாரம் – சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் – புதன்
ஸ்ரீ வாமனவதாரம் – குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் – சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் – சனி
ஸ்ரீ மச்சாவதாரம் – கேது
ஸ்ரீ வராகவதாரம் – ராகு
ஸ்ரீ பலராமவதாரம் – குளிகன்
என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.
நவ திருப்பதிகள்- வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்
அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்
தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் – சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்
To be continued……………………
Tags- நவ திருப்பதிகள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-35, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 35, வரகுணமங்கை,தசாவதாரமும் நவகிரகங்களும் வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்