துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – Part 16 (Post.15,801)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,801

Date uploaded in London –   29 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 16 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

कर धन्‌ तीर श्या गौरव शरीर घरे लन सुनि चीर धीर वीर बल भौन हौ ।

शोभा अभिराम नव नीरज ललान ठग क्षाम खविधान इत कीन्हों कं गोन हौ ॥

सोस लट 1जट सुख चंद्‌ खि लट ‹ लंदि ‘ संद्‌ मंद हास सुलिलास् सुख दोन ही।

करत सनाय घनं नान के नाय यह पृर्छौ जोरि हाथ जगनाथ तुन कौन ही ॥

கையில் வில்லும் அம்பும் – சிவப்பு நிற உடல்

காதில் குண்டலம் – மஞ்சள் பட்டாடை அணிந்து

தைரியசாலி, வீரன், பலசாலி, அழகின் உருவமே!

—————

புதிய தாமரை மலர் போல் மென்மையான கண்கள்

அழகு மிகுந்த முகம் – எல்லோரையும் ஏமாற்றும் திருடன்!

இவ்வளவு அழகையும் இப்படி ஒரே இடத்தில்

யார் இணைத்து வைத்தார்?

—————–

வெள்ளையான புன்னகை – மெதுவான சிரிப்பு

சந்திரன் போல் குளுமையான முகம் – மயக்கும் பார்வை

இரண்டு கண்களும் இன்பம் தரும் குளிர்ச்சியான நிலவுகள்!

—————-

கையை வீசி நடந்து வருகிறாய்

நந்தகோபனின் மகனே! யசோதையின் செல்வமே!

கைகூப்பி வணங்கி நிற்கிறோம் –

ஜகன்னாதா! ஜகத் குருவே! **நீ யார்?**

(மேலும் அயோத்தியா காண்டத்தில் இராமன் வனவாசிகளிடமிருந்து விடை பெறும்போது அவர்கள் சொல்வதாக துளசிதாசர் ஒரு சுலோகம் சொல்லி உள்ளார்,)

परसत मृदुल चरन अरुनारे। सकुचति महि जिमि हृदय हमारे॥

जौं जगदीस इन्हहि बनु दीन्हा। कस न सुमनमय मारगु कीन्हा॥

(இவர்களுடைய மென்மையான பாதங்கள் பூமியில் பட்டவுடனே சிவந்து போவதைப் பார்த்து, பூமியே கூச்சமடைகிறது..அந்த இறைவன் இவர்களுக்கு வனவாசம் விதித்திருந்தால் , கூடவே பாதையையும் மலர்களால் ஏன் பரப்பி வைத்திருக்ககூடாது?)

(துளசிதாசர் இங்கு “स्वामी” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். காரணம் ஹனுமான் இராமனைப் பார்த்து உங்களைப் பார்த்தால் தேவர்களைப் பார்ப்பது போல உள்ளது. உங்கள் உடலில் அரச இலக்ஷ்ணங்கள் தெரிகின்றன. அதனால் சுவாமி என்று அழைப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாபிஜி என்ற உயையாசிரியர் ஒரு கருத்து சொல்கிறார். அதாவது ‘இந்தக் கோரமான வனத்தில் தாங்கள் சுற்றுவதைப் பார்க்கும்போது ஏதோ வனதேவதை போல தோன்றுகிறது என்று.

(துளசிதாசர் இங்கு மூன்று முறை छत्री रूप फिरहु बन बीरा: “कवन हेतु बिचरहु बन स्वामी ‘ और ‘सहत दुसह बन आतप बाता।’  வனம் என்ற வார்த்தையைப் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.. இப்படி வனத்தில் அலைவதைப் பார்த்த ஹனுமன் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல்,  அவர்களை மேலும் நடக்கவிடாமல் அவர்கள் இருவரையும் தனது தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடத்தை அடைந்தான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்)

* मृदुल मनोहर सुंदर गाता। सहत दुसह बन आतप बाता ॥

की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥5॥

जग कारन तारन भव भंजन धरनी भार।

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥

ஹனுமன் இராமனிடம் “சுவாமி! தங்களுடைய சரீர அதிமிருதுவாகவும் இருக்கிறது. நீங்கள் சஞ்சல புத்தியுள்ள என் மனத்தை அபஹரிக்கும் ரூபசவுந்தர்யம் பெற்றிருக்கிறீர்கள். என்ன அழகு, என்ன லாவண்யம் சுவாமி! என் மனம் என்னிடம் நிலைபெறவில்லையே. நான் என்ன செய்வேன்.தங்களின் திருமேனி கண்டேன். பொன்மேனி கண்டேன். இன்றே கழல் கண்டேன்.எழுபிறப்பும் நானறுத்தேன். அடிவண்ணம் தாமரையன்றுலகம் தாயோன் என்கிறபடி உங்களுடிய மிருதுவான  திருமேனி, எவ்விதம் சகிக்க முடியாத வானத்தின் மாருதங்களையும், வெப்பமாயிருக்கும் சுடுகாற்றுக்களையும் சுமக்கின்றனவோ? சுவாமி! தாங்கள் தேவ புருஷர்கர்களா? அஸ்வினி குமாரர்களா? பிரும்மாவா, விஷ்ணுவா, சிவனா அல்லது  இந்த மூன்று  தெய்வங்களாகிய மும்மூர்த்திகளுக்கு மேற்பட்டவனுமாகிய பரப்ரம்மமா?(நிர்குணப் பொருளா?) அல்லது அகில உலகிற்கும் உரிமையாளரான பகவானா?(ஸகுணஸ்வரூபமா?) உலகங்களை சம்சாரக் கடலிலிருந்து மீட்டு  பூமியின் சுமையைக் குறைக்க மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளீர்களா? என்று கேட்டான்

(ஹனுமன் அவர்களிடம் தாங்கள் பிரம்ம, விஷ்ணு, சிவன் இவர்களில் தாங்கள் யார்? இருப்பதோ இருவர். ஆனால் அவர்களோ மூவர். ஆனாலும் ஹனுமனுக்கு இராமனின் கரிய நிறத்தையும் இலக்ஷ்மணனின் பொன்  நிறத்தையும் பார்த்ததும் ஒரு சந்தேகம். பிரம்மா மஞ்சள்/பழுப்பு நிறம், விஷ்ணு கரிய நிறம், சிவன் வெள்ளை/சிவப்பு நிறம். இருவரில் ஒருவர் விஷ்ணுவாக இருக்கலாம். அப்படியானால் மற்றொருவர்? ஆக இவர்கள் அந்த மூவராக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் இணை பிரியாது இருக்கும் இவர்கள் நர நாராயணர்களோ?

அடுத்து जग कारन तारन भव என்ற இரு பதங்களைப் போடுகிறார் துளசிதாசர். அதாவது உலகினுள் வருவதும் உலகிலிருந்து விடுதலை பெறுவதற்கும் காரணமானவரே என்கிறார்.

 बंध मोच्छ प्रद सर्बपर माया प्रेरक सीव॥ 

அதாவது கர்மவினையின்படி  பந்தத்தையும் முக்தியையும் தருபவன், அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் மாயையின் தூண்டுதலுமான கடவுள் என்கிறான் ஹனுமன்.

यतो वा इमानि भूतानि जायन्ते। येन जातानि जीवन्ति। यत् प्रयन्त्यभिसंविशन्ति। तद्विजिज्ञासस्व। तद् ब्रह्मेति॥

என்று தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி ‘எவரால் இந்த உலகம் சிருஷ்டிக்கபடுகிறதோ, எவரால் இந்த உலகம் பாதுகாக்கப்படுகிறதோ, எல்லாம் முடிந்தபின் எவருக்குள் எல்லோரும் சென்று ஐக்கியமாகிறார்களோ அந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்”

 “எவருடைய உத்திரவால் படைக்கப்பட்டு நாங்கள் வானரம், கரடி போன்ற ஜீவ ராசிகளானோமோ தாங்கள் அவரில்லையா (அந்த பிரம்மா இல்லையா?)” 

துளசிதாசர் “अखिल थुवन पति”  என்ற  பதப் பிரயோகம் தருகிறார்.  இதைச் சொல்லவேண்டிய காரணம் இந்த உலகமே இராவணனால் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவிப்பதற்காக ..உடனே மனித அவதாரம் எடுத்துள்ளீர்\களோ என்பதைக் குறிப்பிட “मनुज अवतार”   என்று குறிப்பிடுகிறார். அதன் காரணம் இராவணனின் மரணம் மனிதனின் கையில் ‘राबन मरन मनुज कर जाँचा।’ என்று பால காண்டத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இராவணனின் கொடுமைகளைப் பற்றிச் சொல்லும்போது

बरनि न जाइ अनीति घोर निसाचर जो करहिं।

हिंसा पर अति प्रीति तिन्ह के पापहि कवनि मिति॥183॥ 

அரக்கர்களின் கொடுமைகளை வார்த்தையால்  வர்ணிக்க முடியாது என்று எவனொருவன்  அஹிமசையின் பால் நாட்டம் கொள்கிறானோ அவனுடையை பாவங்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார். ஆத்யாத்ம இராமாயணத்தில்

भूमिर्भारेण मग्ना दशवदनमुखाशेषरक्षोगणानां

धृत्वा गोरूपमादौ दिविजमुनिजनैः साकमब्जासनस्य ।

गत्वा लोकं रुदन्ती व्यसनमुपगतं ब्रह्मणे प्राह सर्वं

ब्रह्मा ध्यात्वा मुहूर्तं सकलमपि हृदावेदशेषात्मकत्वात् ॥ ६॥ 

சிவன் பார்வதிக்கு இராமனின் வரலாற்றை சொல்லும்போது, முதலில் இராம அவதாரம் எடுத்த கதையைச் சொல்லுகிறார்.  அதில் இராவணன் மற்றும் அரக்கர்களின் கொடுமையையும் அவர்களின் பாரத்தையும் தாங்க முடியாமல் பூமா தேவி ஒரு பசுவின் உருவில் தேவர்களையும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பிரம லோகம் சென்று பிரம்மாவிடம் அழுது கொண்டே இராவணனைப் பற்றி முறையிட்டு தங்களைக் காக்குமாறு வேண்டுகிறாள். அதைக் கேட்ட ஒரு நொடியில் பிரம்மா என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். உடனே அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்.

भगवन् रावणो नाम पौलस्त्यतनयो महान् ।

राक्षसानामधिपतिर्मद्दत्तवरदर्पितः ॥ २३॥

त्रिलोकीं लोकपालान्श्च बाधते विश्वबाधकः ।

मानुषेण मृतिस्तस्य मया कल्याण कल्पिता ॥ २४॥

अतस्त्वं मानुषो भूत्वा जहि देवरिपुं प्रभो ॥ २५

“முனிவர் புலஸ்தியரின் பேரன் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் ஒன்று என்னிடம் வாங்கி அதன் காரணமாக மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள் முனிவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனுக்கு ஒரு மனிதன் மூலம் மரணம் கிடைக்கவேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன்.தாங்கள் மனித அவதாரம் எடுத்து அவனை வதைத்து எல்லா உலகங்களையும் காத்தருள வேண்டுகிறேன்”  என்று மகாவிஷ்ணுவிடம். வேண்டிக்கொண்டார். “அந்த மனித அவதாரம் தாங்கள்தானா? என்று ஹனுமன் வினவினான்.

ஆத்யாத்ம இராமாயணத்திலும் ஹனுமன் இராமனிடம் இதே கேள்வியைக் கேட்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।

भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १

“இந்தப் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும் பக்தர்களைக்  காக்கவும் தாங்கள் மாயையினால் மனித அவதாரம் எடுத்துள்ளீர்களா?” என்று ஹனுமன் கேட்கிறான்.

மேலும்  ஹனுமன் இராமனிடம் தாங்கள் ஒரே உருவில் இரு அவதாரங்களா? என கேள்வி கேட்கிறார். அதவாது தாங்கள் சிவா விஷ்ணுவா? பிரம்மா விஷ்ணுவா அல்லது நர நாராயணர்களா?  அல்லது அகில உலகைக் காக்க வந்த இரட்சகன் இரு உருவில் வந்துள்ளீர்களா? என்று கேட்கிறார். ஆக முதலில் மூன்று தேவர்களா? என்று கேட்டுவிட்டு பிறகு நர நாராயணர்களா என்ற இருவரா? என்று கேட்டுவிட்டு இறுதியில் அகில உலகைக் காக்க வந்த இரட்சகனா என்று ஒருமையில் கேட்கிறார். முதலில் ஸ்தூலம் என்று அனுமானித்துவிட்டு பிறகு சூக்ஷமம் என்று அனுமானிக்கிறார். இறை வடிவத்தை அறிந்து/புரிந்து கொள்ள இதுவே சரியான முறை.. பாகவதத்தில் கூறி உள்ளபடி 

श्रुत्वा स्थूलं तथा सूक्ष्मं रूपं भगवतो यति: ।

स्थूले निर्जितमात्मानं शनै: सूक्ष्मं धिया नयेदिति ॥ ३९ ॥

முக்தியில் ஆர்வமுள்ளவன், முக்தியின் பாதையை ஏற்பவன், நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பாதையில் ஈர்க்கப்படாதவன், யதி அல்லது பக்தன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகு மனிதன், பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபமான விராட் ரூபத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம் முதலில் தனது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், பின்னர் இவ்விரு வடிவங்களையும் கேட்ட பிறகு படிப்படியாக மகாவிஷ்ணுவின் ஆன்மீக ரூபமான கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒருவனின் மனம் ஸமாதியில் நிலைத்திருக்கிறது. பக்தித் தொண்டின் மூலம், பக்தர்களின் இலக்கான பகவானின் ஆன்மீக வடிவத்தை ஒருவன் உணர முடியும். இதனால் அவரது வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறுகிறது.

அதாவது महत्-सेवां द्वारम् आहुर् विमुक्ते: என்று கூறப்படுகிறது: முக்தியின் பாதையில் முன்னேற ஒருவன் விரும்பினால், அவன் மகாத்மாக்களுடன், அல்லது முக்தியடைந்த பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், மோக்ஷத்தை நாடுபவர்களுக்கு, பெரியவர்களின் சேவை என்பது ஒரு வாயிலாகும்” என்று கூறுகிறார்கள்.

பேரருள் பெற்ற பெருமக்கள் சேவை 

பேரொளி வீதி விடுதலைக் கோவில்! 

தீர்வினை தீரும் திருநெறி யாதும் 

தெய்வம் எனக் காண் — சத்புருஷன் பாதம்

 ஏனென்றால் அத்தகைய சங்கத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பரம புருஷ பகவானின் பெயர், உருவம், குணங்கள் மற்றும் சாதனங்களைப் பற்றி கேட்பதற்கும், விவரிப்பதற்கும், நாமஜபம் செய்வதற்கும் முழு வாய்ப்பு உள்ளது. பந்தத்தின் பாதையில், ஒருவர் நித்தியமாக பிறப்பு மற்றும் இறப்பின் மறுபடியும் அனுபவிக்கிறார். இத்தகு பந்தத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்து, பக்தர்களிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்காக அதை விளக்க வேண்டும். 

ஆனால் ஹனுமன் கேட்ட எந்த கேள்விகளுக்கும் இராமன் விடை சொல்லவில்லை. காரணம் ஹனுமான் சொன்ன பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் யாரையும் விட தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சிவபெருமான் இராமாயணக் கதையைப் பார்வதியிடம் சொல்லுகின்றார். இராமனின் பிறப்பைப் பற்றி சொல்லும் சமயம்

हृदयँ बिचारत जात हर केहि बिधि दरसनु होइ।

गुप्त रूप अवतरेउ प्रभु गएँ जान सबु कोइ॥

“மனதிற்குள் எனக்கு குழந்தை இராமனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது. இராமனே யாருக்கும் தெரியாமல்  மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்றால் எல்லோருக்கும் அவதார ரகசியம் தெரிந்து போகுமே. அதனால் நான் செல்லவில்ல” .இதனால் தான்  இராமன் தனது அவதார ரகசியத்தை வெளியே ஹனுமனிடம் சொல்ல விரும்பாமல் தன்னை ஒரு மனிதனாகவே காட்டிக் கொண்டான்.

**

Leave a comment

Leave a comment