

Written by London Swaminathan
Post No. 15,837
Date uploaded in London –6 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் — விரும்பிப்
பெறுநசையாற் பின்நிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை –நாலடியார் 381
பொருள்:
அரிதாகப் பெறக்கூடிய கற்புடைமையில் இந்திராணி போன்றவள் என்று உலகத்தில் பெரும் புகழோடு விளங்கும் பெண்ணாகவே இருந்தாலும், அவளைத் தவறான நோக்கத்தோடு விரும்பிப் பின் தொடரும் ஆடவர் இல்லாத தூய்மையான வாழ்க்கை, வாழவேண்டும்; அவர்தான் நல்ல நெற்றியை உடைய பெண் அல்லது மனைவி ஆவார் –நாலடியார் பாடல் 381
அதாவது தேவலோக கற்புக்கரசியான இந்திராணி போல வாழ்ந்திருக்கலாம் ; ஆயினும் நடை, உடை, பாவனைகளில் அடக்கம் வேண்டும் ; எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், விரும்ப வேண்டும் என்ற முறையில் நடை உடை பாவனை இருக்கக்கூடாது ; இதற்கு எடுத்துக் காட்டாக அக்கால பெண் பாடகிகளையும் இக்காலப் பெண் பாடகிகளையும் கூறலாம்; அக்காலத்தில் புடவையைப் போர்த்திக்கொண்டு வருவார்கள், அமர்வார்கள், செல்வார்கள்; இக்காலத்திலோ ஆடையின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் 50 % காணோம் ! அப்படியே வீடியோவும் எடுத்து விற்பனையும் செய்கிறார்கள்!

நஹுஷன் கதையே காரணம் !
நாலடியார் பாடலுக்கு காரணம் நஹுஷன் செய்த சேட்டைதான் ; அவர் இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .
முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் அல்லது பேய் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும். ராமன் கூட பிராமணன் ஆகிய அசுரன் ராவணனைக் கொன்றதால் ராமேஸ்வரம் முதலிய இடங்களில் பரிகாரம் செய்ததாகத் தலபுராணம் பகரும். இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT VACANT விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; டெம்பொரரி/ தற்காலிக பிரதமைச்சர் TEMORARY PRIME MINISTER பதவிக்குப் பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா ஆகியவர்களின் நடனத்தை தினமும் காணவே அவருக்கு மூட் MOOD வந்தது ; இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ஜாலியாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது.
அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!
நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசமபாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா டெம்பொரரி பிரதம அமைச்சரே! ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான்: உடனே அதைச் செய்யுங்கள் என்று.
ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; AFRICAN PIGMY ஆப்பிரிக்க பிக்மி! பல்லக்கு ரெடி. நஹுஷனும் உலகிலும் அத்தனை AFTER SHAVE LOTIONS ஆப்டர் ஷேவ் லோஷன்களையும் பூசிக்கொண்டு பல்லக்கில் ஏறினான் ; அது ROLLSROYCE ரோல்ஸ்ராய் கார் இல்லையே! மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும் அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையயல் கார் கொஞ்சம wobbling /வாப்ளிங் ஆட்டம் ஆகிறது அதற்காகத்தான் மெதுவாகச் செல்கிறோம்” .


உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான பிக்மி அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப்ப பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.– குறள் 29
குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார்
சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்– பாம்பு
ஆங்கிலத்தில் பாம்புக்குள்ள சர்பண்ட் SERPENT, SNAKE ஸ்நேக் என்பதெல்லாம் சம்ஸ்க்ருத மொழியிலிருந்து சென்றவை ; அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான்.
இந்தக் கதையை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அயிராணி/ இந்திராணி பற்றி சமண முனிவர் எழுதினார் போலும்; இந்திராணி தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப் பயன்படுத்தினாள்.

–subham—
Tags- கற்புக்கரசி, இந்திராணி, நஹுஷன் கதை, பெண்களுக்கு புத்திமதி, அயிராணி , நாலடியார் பாடல் சர்ப்ப சர்ப்ப, அகஸ்தியர் சாபம்