ராமாயணத்தில் வரங்கள் (58) யமன் காக்கைக்கு வரம் அளித்தது! (Post.15,844)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,844

Date uploaded in London – 8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (58) யமன் காக்கைக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் காக்கைக்கு யமன் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

சென்ற அத்தியாயத்தில் மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் பார்த்தோம்..

இந்திரன் மயிலாக ஆனான். தர்மராஜர் காக்கையாக ஆனார். குபேரன் ஓணானாகவும் வருணன் ஹம்ஸமாகவும் ஆனார்கள்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் இந்திரன் மயிலுக்கு வண்ணத் தோகைகள் ஏற்படும்படி வரம் அளித்தான்.

தர்மராஜர் எதிரில் மூங்கிலில் இருந்த ஒரு காக்கையைப் பார்த்து இப்படிக் கூறலானார்:

தர்மராஜோப்ரவீத் ராம ப்ராக்வம்ஷே வாயஸம் ஸ்திதம்|          பக்ஷின்ஸ்தவாஸ்மி சுப்ரீத: ப்ரீதஸ்ய வசனம் ஸ்ருணு ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 26

ராம – ஶ்ரீ ராம (அகஸ்தியர் ராமருக்கு இந்த  வரலாறைக் கூறுகிறார்) தர்மராஜ – தருமராஜர்                                                   ப்ராக்வம்ஷே – எதிரில் ஒரு மூங்கிலில்                                 ஸ்திதம் – தங்கி இருந்த                                                 வாயஸம் – காக்கையைப் பார்த்து                                               அப்ரவீத் – இப்படிச் சொல்லியருளினார்                                பக்ஷின் – பறவையே                                                             தவ – உன் மீது                                                                        சுப்ரீத: – மிகத் திருப்தி கொண்டவனாக                                                      அஸ்மி – இருக்கிறேன்                                                ப்ரீதஸ்ய – ப்ரீதி கொண்டிருக்கிற என்னுடைய                                வசனம் – ஆசீர்வாதத்தைக்                                             ஸ்ருணு – கேள்

யதான்யைர்விவிதை ரோகை: பீட்யந்தே ப்ராணினோ மயா |
தே ந தே ப்ரபவிஷ்யந்தி மயி ப்ரீதே ந சம்ஷய: ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 27

யதா – என்னவெனில்                                              ப்ராணின: – ஜீவன்கள் எல்லாமும்                                      மயா – என்னால்                                                           அன்யை: – வெவ்வேறான                                                   விவிதை: – சித்திர விசித்திரங்களான                                      ரோகை: – வியாதிகளால்                                               பீட்யந்தே – பீடிக்கப்படுகின்றன                                              மயி – நான்                                                                        ப்ரீதே – ப்ரீதி கொண்டிருக்கும் காரணத்தினால்                             தே – அவைகள்                                                         தே – உனக்கு                                                            ந ப்ரபவிஷ்யந்தி – உண்டாகாது                                           ந சம்ஷய: – இதில் சந்தேகமில்லை

ம்ருத்யுதஸ்தே பயம் நாஸ்தி வரான்மம விஹங்கம |              யாவத்வாம் ந வதிஷ்யந்தி நராஸ்தாவத்பவிஷ்யந்தி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 28

விஹங்கம – பறவையே                                                 மம – எனது                                                                வராத் – வரத்தினால்                                                     தே – உனக்கு                                                                       ம்ருத்யுத: – யமனிடமிருந்து                                             பயம் – பயம்                                                                 ந அஸ்தி – இல்லை                                                          யாவத் – எவ்வளவு காலம்                                              நரா: – மனிதர்கள்                                                             த்வாம் – உன்னை                                                        ந வதிஷ்யந்தி – கொல்லாமல் இருக்கிறார்களோ                         தாவத் – அவ்வளவு காலம்                                      பவிஷ்யந்தி – உயிருடன் வாழ்வாய்

ஏதே மத்திஷயஸ்தா வை மானவா: க்ஷுப்தயார்திதா: |                   த்வயி பூக்தே து த்ருப்தாஸ்தே பவிஷ்யந்தி சபாந்தவா: ||

உத்தர காண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 29

ஏதே – இந்த                                                         மத்திஷயஸ்தா – என்னோடுவாசிகளான மானிடர்கள்                  க்ஷுப்தயார்திதா: து – பசியினால் துன்பமுற்று தவிக்கும் போது             த்வயி – நீ                                                            புக்தே வை – புசிப்பாயானால்                                            தே – அவர்கள்                                                   சபாந்தவா: – பந்துக்களுடன் கூடியவர்களாய்                       பவிஷ்யந்தி – ஆவார்கள்

இப்படியாக மகிழ்ச்சி அடைந்த யமன் காகத்திற்கு வரத்தை அருளினான். இது கேட்காமல் தரப்பட்ட வரமாகும்

**

Leave a comment

Leave a comment