WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,859
Date uploaded in London – 12 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.
ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.
அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.
அக்னிஷ்டோமஸ்வமேதஸ்ச யக்ஞோ பஹுசுவர்ணக: | ராஜசூயஸ்ததா யக்ஞோ கோமேதோ வைஷ்ணவஸ்ததா||
மாஹேஸ்வர ப்ரவ்ருத்தே து யக்ஞே பும்பி: சுதுர்லபே |
வராம்ஸ்தே லப்தவாபுத்ர: சாக்ஷாத் பசுபதேரிஹ ||
உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 8&9
அக்னிஷ்டோம: – அக்னிஷ்டோமம் என்ற யக்ஞ – யாகமும் அஸ்வமேத: – அஸ்வமேதம் என்ற யாகமும் பஹுசுவர்ணக: – பஹுசுவர்ணம் யக்ஞ ச – என்ற யாகமும் ராஜசூய: – ராஜசூயம் என்ற யாகமும் ததா – அவ்வண்ணமே கோமேத: – கோமேதம் என்ற வைஷ்ணவ: – வைஷ்ணவம் என்ற யாகமும் ததா – அவ்விதமே பும்பி: – மனிதர்களால் சுதுர்லப: – செய்து முடிக்க கஷ்டமாயுள்ள மாஹேஸ்வர யக்ஞே – மாஹேஸ்வரம் என்ற யாகமும் ப்ரவ்ருத்தே – குறையின்றி நடைபெறுகையில் தே – உனது புத்ர – புதல்வன் இஹ து – இவ்வுலகில் பசுபதே: – பரமசிவனுடைய சாக்ஷாத் – பிரத்யக்ஷத்தில் வரான் – வரங்களை லப்தவான் – வரங்களைப் பெற்றான்
காமகம் ஸ்யந்தனம் திவ்யம்ந்தாரிக்ஷசரம் த்ருவம் | மாயாம் ச தாமஸீம் நாம யயா சம்பத்யதே தம: ||
ஏதயா கில சங்க்ராமே மாயயா ராக்ஷஸேச்வர | ப்ரயுக்தயா கதி: ஷக்யா ந ஹி ஞாதும் சுராசுரை: || |
அக்ஷயாவிஷுதீ பாணைச்சாபம் சாபி சுதுர்ஜயம் | அஸ்த்ரம் ச பலவத்சௌம்ய சத்ருவித்வம்ஸனம் ரணே ||
ஏதான்ஸர்வான்வரான்லப்த்வா புத்ரஸ்தேயம் தசானன |
அத்ய யக்ஞசமாப்தௌ ச த்வாம் தித் ருக்ஷு: ஸ்திதோஹ்யஹம்
உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 10,11,12,13
தசானன – தசானன ராக்ஷஸேச்வர – ராக்ஷஸ மன்னா சௌம்ய – அன்பனே தே – உனது அயம் – இந்த புத்ர – புதல்வன் ஏதான் – பின்கண்ட வரான் – வரங்கள் ஸர்வான் – எல்லாவற்றையும் அத்ய – இப்போது லப்த்வா – பெற்றான் திவ்யம் – தேவநிர்மிதமானதும் காமகம் – இஷ்டப்படியெல்லாம் செல்ல வல்லதும் அந்தரிக்ஷசரம் – ஆகாயமார்க்கத்தில் செல்ல வல்லதும் த்ருவம் – என்றும் அழியாததுமான ஸ்யந்தனம் – ஒரு தேரையும் யயா – எந்த ஒன்றால் தம: – பிரத்யக்ஷத்திலும் கண்களால் சம்பத்யதே – உண்டாகிறதோ சங்க்ராமே – போரில் ப்ரயுக்தயா – பிரயோகிக்கப்பட்ட ஏதயா – இந்த மாயயா – மாயையால் சுராசுரைபி: – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட யதி: – இருக்குமிடம் ஞாதும் – கண்டுகொள்ள கில ஹி – எப்படியும் ந ஷக்யா – முடியாதோ அந்த தாமஸீம் – தாமஸி நாம – என்கிற மாயாம் ச – மாயையையும் அக்ஷயௌ – அக்ஷயமான இஷுதீ ச – அம்பராத்துணிகள் இரண்டையும் பாணை: – பாணங்களால் சுதுர்ஜயம் – வெல்வதற்கரிய சாபம் ச – தனுசையும் ரணே – போரில் சத்ரு வித்வத்வம்ஸனம் – எதிரிகளை ஹதம் செய்யும் பலவத – எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகிய அஸ்த்ரம் ச – ஒரு அஸ்திரத்தையும் பெற்றான் யக்ஞ சமாப்தௌ – யாக முடிவில் த்வாம் – உன்னை தித்ருக்ஷு: – காண அஹம் ஹி – நானும் ஸ்தித: – இருந்தேன்
இப்படியாக சுக்ராசாரியார் ராவணனிடம் அவன் புத்திரனாகிய மேகநாதன் பரமசிவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கூறினார்.
யாகங்களை இயற்றி பெறப்பட்ட இந்த வரங்களை வால்மீகி விவரமாக இப்படி எடுத்துரைக்கிறார்.
**