மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்! (Post No.15,872)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,872

Date uploaded in London – 15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

மாக்ஸ் ஹோடக் திட்டம்: மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்!

ச. நாகராஜன்

மாக்ஸ் ஹோடக் என்ற பெயரை இதுவரை அறியாதவர்கள் இனி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹோடக் உயிரியல் மருத்துவ பொறியாளர் (Biomedical Engineer). 2021ம் ஆண்டு ஏப்ரலில் இவர் ஸயின்ஸ் கார்பொரேஷன் என்ற தனது நிறுவனத்தைத் தொடங்கினார்.

எலான் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்

 MAX HODAK .

இவர் கண்டுபிடித்த பிரைமா அமைப்பு (PRIMA SYSTEM) பார்வை இழந்தோர்களுக்குப் பார்வையைத் தர உதவியது. இந்த அமைப்பில் ப்ரெய்ன் – கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் (BCI – Brain Computer Interface) என்னும் அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது,

இப்போது அடுத்தபடியாக ஒரு பெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியிருக்கிறார் ஹோடக். இந்தத் திட்டத்தின் படி மூளையில் ஒரு சென்ஸர் (உணர்கருவி) பொருத்தப்படும்.

இதற்காக ஹோடக், உலகின் ஆகப் பெரும் மூளை இயல் நிபுணரான டாக்டர் முரட் குனல் என்பவரைத் தனது நிறுவனத்தில் பணியாற்ற அழைத்துள்ளார்’

இந்தக் கம்பெனியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்த உலகம் 23 கோடி டாலர் மதிப்புள்ள இவரது நிறுவனத்தை இப்போது நூறு கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கி விட்டது!

கம்ப்யூட்டருக்கும் மனித மூளைக்கும் நல்ல ஒரு இணைப்பைத் தருவதே ஹோடக்கின் நோக்கம்.

முதுகெலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு எலக்ட்ரானிக் சென்ஸர்களைப் பொருத்தி, புரட்சி செய்தது நியூராலிங்க் நிறுவனம்.

இந்த அமைப்பை நன்கு ஆய்வு செய்த ஹோடக், “இந்த முறையில் மின்சக்தி மூலம் எலக்ட்ரோடுகள் பொருத்தப்படுகின்றன; அது தவறு” என்று உணர்ந்தார்.

ஆகவே இந்த சிகிச்சை நடைமுறையை விட்டு விட்டு மூளையில் உள்ள நியூரான்களிடம் நேரடியாக இணைப்பைச் செய்வது என்று தீர்மானித்தார்.

அதற்காகத் தான் இந்த சென்ஸர் கருவி மூளையில் பொருத்தப்படும் முறை உருவாகி இருக்கிறது.

முதல் படியாக உயிருள்ள மனிதர் ஒருவரின் மூளையில் – மண்டையோட்டில் மூளைக்கு மேல் பகுதியில் – சென்ஸர் பொருத்தப்பட இருக்கிறது.

இதன் மூலம் முதுகெலும்பு முறிந்தவர்களுக்கான சிகிச்சை துரிதப்படுத்தப்படும். அத்துடன் மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு உடனடி எச்சரிக்கையைக் கொடுத்து உரிய சிகிச்சையை துரிதமாக அளிக்க இந்த மூளையில் பதிக்கப்படும் சென்ஸர் உதவும்.

பார்கின்ஸன் வியாதிக்கும் இது ஒரு தீர்வைத் தரும் என்று பலரும் நம்புகின்றனர்.

2027ல் முதல் கட்ட சோதனைகள் முடிவடையும். பின்னர் பெரிய அளவில் மூளை மருத்துவத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.

மாக்ஸ் ஹோடக்கின் பெயர் உலகளாவிய விதத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.

**

Leave a comment

Leave a comment