WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,883
Date uploaded in London – 18 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
கர்மபூமி பாரதமே சிறந்தது!
ச. நாகராஜன்
கர்மபூமி பாரதமே சிறந்தது!
அத்ராபி பாரதம் ச்ரேஷ்டம் ஜம்புத்வீபே மஹாமுனே |
யதோ ஹி கர்மபூரேஷா அதோன்யா போகபூமிய: ||
ஜம்புத்வீபத்தில் ச்ரேஷ்டமான (உயர்ந்த) இடம் பாரதம் தான்! ஏனெனில் இது கர்ம பூமி. மற்ற அனைத்தும் (பிரதேசங்களும்) போக பூமியாகும்.
பிராமணர்களை இகழாதே!
அத்யுன்னதபதம் ப்ராப்த: பூஜ்யான் நைவாதவமானயேத் |
நகுஷ: சக்ரதாம் ப்ராப்தஷ ச்யுதோகஸ்யாவமானநாத் ||
ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் கூட அவன் ஒருக்காலும் பூஜ்யர்களை (பிராமணர்களை) இகழக் கூடாது. இந்திர பதவியை அடைந்த நகுஷன் அகஸ்தியரை அவமானப்படுத்தியதால் தன் உயர்ந்த பதவியிலிருந்து விழுந்தான்.
முள் தரும் வேதனை போல ஆசை பிறப்பைத் தரும்!
அணுமாத்ரம் யயா ஷல்யம் சரீரே துக்கதாயகம் |
ததாதீசு சம்யுக்தம் மன: சம்சாரதாயகம் ||
முள்ளானது மிகச் சிறியதாக இருந்தாலும் கூட உடலுக்கு எப்படி பெரிய வேதனையைத் தருகிறதோ, அதே போல, உலக விஷயங்களில் ஆசைப்பட்ட மனதுடன் இருப்பவன் மறுஜென்மத்தை அடைவான். (அதனால் துன்பங்களைப் பெறுவான்)
எட்டுவகை சித்திகள் (அஷ்டமாசித்தி)!
அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |
ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||
அஷ்டமாசித்தி எனப்படும் எண்வகை சித்திகளாவன:
1) அணிமா – அணு போல உடலை சிறியதாக ஆக்குதல்
2) மஹிமா – உடலை மலை போலப் பெரியதாக ஆக்குதல்
3) லகிமா – காற்றைப் போல லேசாக ஆக்குதல்
4) கரிமா – அசைக்கமுடியாமல் பாரமாக இருத்தல்
5) பிராப்தி – மனதால் நினைத்ததை அடைதல்
6) பிரகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்
7) ஈசத்துவம் – பிரம்மா உள்ளிட்ட அனைவருக்கும் ஆணையிடுதல்
8) வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்தல்
சிறிய கௌரவமும் பெரியோருக்கு பெரிதாகி விடும்!
அத்யுதாத்தகணேஷ்வேஷா க்ருதபுண்யை: ப்ரரோபிதா |
சதஷாகிமதத்யேவ யாவன்மாத்ராபி சத்க்ரியா ||
மிக உயர்ந்த குணங்களை உடையோருக்குச் சிறிய கௌரவத்தை அளித்தாலும் கூட அது அவர்கள் ஏற்கனவே செய்த நல்ல செயல்களால் நூறு கிளைகளை உடைய மரம் போல வளரும்.
**